பாரதி ஒரு பார்வை Lion Raja Ganesan
பாரதி வாழ்ந்த காலத்தில் முன்னுக்குப் பின் முரணாக எழுதி இருக்கிறான்,
இப்படி எழுதுவது ஒன்றும் தவறில்லை இது அனைவருக்கும் பொருந்தும்
ஒரு வழக்கில் மூன்று நீதிமன்றங்களில் மூன்று விதமான தீர்ப்புகளை பெறுவதில்லையா,
ஓஷோ இப்படி ஒரு கேள்வியை எதிர் கொண்டார் அதற்கு அவர் சொன்ன பதில் நான் வாழ்கிறேன் என்பதற்கு இதுதான் சாட்சி,
பாரதி முதலில் தூக்கி எறிந்தது பார்ப்பன அடையாளங்கள் முடி வெட்டிக் கொண்டார், மீசை வளர்த்தார் ஆங்கிலேயன் போல நல்ல கோர்ட் போட்டுக் கொண்டார் ,
காந்தியிடம் கேட்டார்கள் நீங்கள் முன்பு பேசியதை இப்போது மறுத்து பேசுகிறீர்கள் என்று ,நான் அன்று பேசியதும் உண்மை இப்போது பேசுவது உண்மை எப்பவும் என்ன பேசினேன் என்று நான் யோசிப்பது இல்லை நான் பேசுவது காலத்தின் தேவை, என்று பதிலளித்தார் மூன்று ஆண்டுகள் உண்மை என்பது என்ன வென்று ஆராய்ச்சி செய்தவர் காந்தி,
தன் வீட்டில் இருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவில் மட்டுமே உலகம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிராமத்து மனிதன்,
பெரும் கூட்டத்தை பார்த்து எதற்காக இவ்வளவு பேர் என் வழியில் குறுக்கே நிற்கிறீர்கள் என்று கேட்டார் அவர்கள் அந்த வழியில் நாட்டின் ஜனாதிபதி வருகிறார் அதற்காகத்தான் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் உடன் அந்த விவசாயி கேட்டார் அவர் என்ன பெரிய கலெக்டரா , அந்த விவசாயிக்கு தெரிந்த அதிகபட்ச பெரிய மனிதன் கலெக்டர் இப்படித்தான் சில பேர் பாரதியைப் பற்றி அவன் அறிந்தவரை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறான், பாரதி உலகளாவிய கவிஞன் ஆயிரம் ஆண்டு தடங்கலுக்கு பிறகு தமிழில் பீறிட்டு எழுந்த ஒரு கவிஞன் பார்ப்பன எதிர்ப்பு அவன் பேசி அளவுக்கு வேறு எவனும் பேசவில்லை
அவன் வாழ்ந்த காலத்தில் ஒரு தேவதாசி பெண்ணை காதலித்தான் அவளுக்காக பாடியதுதான் குயில்பாட்டு, சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் ஏழு மொழிகள் தெரிந்த ஒரு பார்ப்பனன் ஒரு மொழிபெயர்ப்பாளராக துபாஷி நல்ல ஊதியத்தில் வாழ்ந்து செத்து இருக்கலாம்,
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று தெருத்தெருவாக அலைந்திருக்க வேண்டியதில்லை ,
வள்ளுவனும் பிரண்டு பேசுகிறான்
இது இருவேறு நோய்க்கான மருந்து
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்,
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், செயலுக்கு இடையூறாக வரும் ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
வாழும் கவிஞர் வைரமுத்து இது அவனவனுக்கான மாத்திரைகள் உனக்கு வேண்டியதை நீ சாப்பிட்டு அம்புட்டுதேன்
அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்,
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க!!
அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க!!
ஆட்டுப்பால் குடிச்சா அறிவு அழிஞ்சு போகுமுன்னு
எரும பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காரன் பசு ஓட்டி வாராண்டீ .
தாய்மாமன் வெள்ளி சங்கு செஞ்ஜா வெளக்கி வைக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
யாமரிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதானது எங்கும் காணோம் என்கிறான் எட்டு மொழியை கற்றவன்
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா
வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர் நல்ல தமிழர்கள் இங்கு ஒழுக்கத்தை வலியுறுத்துகிறான்
சுதேசமித்திரனில் தான் நினைத்ததை எழுத முடியவில்லை என்ற கோபத்தில் உருவாக்கிய மாதப் பத்திரிகை தான்
சக்கரவர்த்தினி,
https://www.youtube.com/watch?v=Jx0eahhFQBo&t=1972s
குழந்தை திருமணத்தை தடை செய்வோம், விரும்பினால் கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவோம், சதி வழக்கத்திற்கு எதிராக ஒரு கதை எழுதி இருக்கிறான்
அது ராஜபுத்திர பெண் சதி நிறைவேற்றும் தருவாயில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் வந்து தடுத்து அந்தப் பெண் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்து கொள்வதாக எழுதிய கதையின் பெயர் துளசிபாய்
எனக்கு எல்லாவற்றிலும் சம உரிமை இருந்தால் மட்டுமே உன்னோடு இரவை பகிர்ந்து கொள்வேன், சமைக்க மட்டும் நான் எந்திரம் இல்லை, என் விருப்பம் போல நடக்க உரிமை வேண்டும்,
கலப்புத் திருமணத்துக்கு ஆதரவாக அன்று எழுதி இருக்கிறான் திருமணம் செய்து கொள்ளாமல் வாழவும் பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று அன்று ஒரு மாதப் பத்திரிகையை நடத்தி எழுதியிருக்கிறான்,
கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.
எத்தித் திருடும் காக்கை எவ்வளவு நுட்பமாக பாரதி இந்த வரிகளை எழுதி இருக்கிறான்
பாப்பா பாட்டு பெண்குழந்தைகளை படிக்க வையுங்கள் என்பதான பாடல் தான்
பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே- வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே
நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு - ஐயோ
நாளெல்லாம் சுற்றுதலே உழைப்பு
பாயும் கடிநாய்ப் போலிசுக் - காரப்
பார்ப்பனுக் குண்டிதிலே - பிழைப்பு
பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் - துரை
இம்மென்றால் நாய்போல உழைப்பான்.
முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் சொல்வார்
மூன்றுமழை பெய்யுமடா மாதம்
இந்நாளில் பொய்மைப் பார்ப்பார் - இவர்
ஏதும் செய்தும் காசுபெறப் பார்ப்பார்
“சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,
சாத்திரம் சொல்லிடு மாயின்
அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”.
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்-நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்
வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று;திங்களும் நன்று.வானத்துச் சுடர்களெல்லாம்
மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது,மலை இனிது காடுநன்று. ஆறுகள் இனியன.
உலோகமும்,மரமும், செடியும், கொடியும்,மலரும்,காயும்,கனியும் இனியன.
பறவைகள் இனிய. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம் இனியவை,நீர் வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.ஆண் நன்று. பெண் இனிது.குழந்தை இன்பம். இளமை இனிது.முதுமை நன்று.
உயிர் நன்று.சாதல் இனிது.
நாட்டையெல்லாந் தொலைத்தாய்; -- அண்ணே,
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமையடிமை -- செய்தாய்,
மேலும் பொறுத்திருந்தோம்.
துருபதன் மகளைத் -- திட்டத்
துய்ந னுடற்பிறப்பை, --
இருபகடை யென்றாய், -- ஐயோ!
இவர்க் கடிமையென்றாய்!
‘இதுபொறுப்ப தில்லை, -- தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் -- அண்ணன்
கையை எரித்திடுவோம்.’
பாஞ்சாலி சபதத்தில் தர்மன் மீது சாடும் வரிகள் அண்ணியை வைத்து சூதாடிய அவன் கைகளை எரிப்போம் என்று எழுதி இருக்கிறான்
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
காதலுக்கு இந்த வரிகள் போதும்
மனிதர் உணர்வை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனி உண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனி உண்டோ?புலனில் வாழ்க்கை இனி உண்டோ? நம்மில்லந்த
வாழ்க்கை இனி உண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெரு நாடு;
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றி தரு நாடு - இது கணக்கின்றி தரு நாடு - நித்த நித்தம்
கணக்கின்றி தரு நாடு -
இனி ஒரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்;
தனி ஒருவனுக்குணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் -
நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடி என்றால் அது பெரிதாமோ?
ஐந்து தலை பாம்பென்பான் - அப்பன்
ஆறு தலை என்று மகன் சொல்லி விட்டால்,
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடு நாள் இருவரும் பகைத்திருப்பார்.
எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கு வலிமையிலார்;
கண்ணிலா குழந் தைகள் போல் - பிறர்
காட்டிய வழியில் சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்.
தனி ஒருவனுக்குணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
மகாகவி தொழிலாளியின் பெருமையையும் தொழிற் பெருமையையும் கரங்கூப்பி வணங்கிய வணக்கம் தான்.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்“ என்ற வரி.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்பது மகாகவி பாரதியார் முழக்கமிட்ட புரட்சிகரமான வரிகள்; இது, உலகில் ஒரு மனிதனுக்குக்கூட பசி இருக்கக்கூடாது, பசியோடு இருப்பவர்களைக் கண்டு உலகம் அழிந்து போனாலும் பரவாயில்லை என்ற ஆழ்ந்த மனிதநேயத்தையும், சமூக நீதியையும் வலியுறுத்துகிறது, உணவின்மையால் ஏற்படும் கொடுமையைக் கண்டு கொந்தளித்து அவர் எழுதியது.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை."
கிடைத்ததைப் பிற உயிர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பதே அறநூல்கள் கூறும் அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறமாகும்
"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு."
உலக நடையறிந்து நன்மையை விரும்பும் பேரறிவாளனிடம் உள்ள செல்வம், ஊர் மக்கள் அனைவருக்கும் பயன்படும் பொதுக்குளம் (ஊருணி) நீர் நிறைந்தது போன்றதாகும்
இந்திய நாட்டு - மக்களுக்குப் பொதுவுடைமைத் தத்துவத்தை அறிமுகப்படுத்துகின்றான். இந்திய சமுதாயத்தை ஒரே பொது வுடைமைச் சங்கமாக அமைக்கின்றான். பாரத சமுதாயம், பொதுவுடைமைச் சமுதாயமாக உருமாற்றம் பெறுதலை,
"முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை;
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை”
என்றும் பாராட்டுகின்றான்.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை - செய்வோம்" என்று பாரதி முழங்குகின்றான்; அதே போழ்து உழைக்காமல் மற்றவர் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து வாழும் எத்தரை நிந்தனையும் செய்யக் கற்றுக் கொடுக்கின்றான். "வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்!” இந்த மனப்போக்குத்தான் கிருதயுகத்தின் வாயில்.
மானுட சாதியில் பிறந்த ஒவ்வொருவனும் உழைத்து, அவனவனுடைய உழைப்பிற்குரிய பங்கை அவனவன் எடுத்திக் கொண்டு வாழ அனுமதித்தால் எங்கேயும் சொத்து சேராது; குவியாது. ஆனால், வல்லாண்மையுடையோர் மற்றவர் உழைப்பிற்குரிய பங்கைத் தர்ாமல் திருடிச் சேர்த்துக் கொள்கின்றனர்
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான்
அதற்கடுத்த ராமனுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய் கூறேன் யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே
நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்!-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளீரோ?
மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள்!-எத னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென் றோதி யறியீரோ? சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளீரோ?-பல பித்த மதங்களி லேதடு மாறிப் பெருமை யழிவீரோ?
உயிர் நன்று.சாதல் இனிது. என்று பாடியவன் எமனை குறித்து இப்படியும் எழுதி உள்ளான்
குடுகுடு;
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு
தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான்,போவான்,ஐயோவென்று போவான்!
படிச்சவன் எளிவனை ஏமாற்றினால் நாசமா போவான் என்று குடுகுடுப்பை காரநாய் பாடுகிறான்
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-
பகவத்கீதைக்கு உரை எழுதி இருக்கிறான் ஆனால் அந்த முன்னுரை திருக்குறளுக்கு நெடுஞ்செழியன் எழுதிய முன்னுரை போல முற்போக்கான எதற்கும் வக்காலத்து வாங்காத தெளிந்த நீரோடையாய் இருக்கிறது யாராவது ஆர்வம் இருந்தால் அதை வாசிக்கலாம் அதில் தமிழ் வார்த்தைகள் குறைவாக இருக்கிறது வடமொழி கலப்பு அதிகம் மற்றபடி குறை ஒன்றும் இல்லை
ஊருக்குள் மனைவிமீது கை போட்டு நடப்பது அன்றைக்கு புதுமை அதைச் செய்தவன் பாரதி
பாரதிதாசனிடம் என் மகள் வேறு மதம் ஜாதி இல் திருமணம் செய்து சிரமத்தோடு வாழ்ந்தாலும் நான் பார்த்து மகிழ்வேன் என்று சொல்லியிருக்கிறான் பாரதிதாசன் பதிவில் இருக்கிறது ஒரு இஸ்லாமியரின் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இந்த கடையில் தீ நன்றாக இருக்கிறது எல்லோரும் வந்து குடியுங்கள் என்று பிரசங்கம் செய்ததெல்லாம் அன்றைய காலகட்டத்தை மனதில் ஏற்றி அந்த கஞ்சா பிரியர் பாரதியை விமர்சிப்பவர்கள் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் பாரதியை தேடும்போது நமக்கும் ஒரு போதை வருகிறது அப்படி ஒரு மனிதன் அவன்
1905-ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்:
பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும்
"உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக”
ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்:
“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்,
விதவை மறுமணம் குறித்து பாரதியின் முற்போக்குச் சிந்தனை
1910ஆம் ஆண்டில் மகாகவி பாரதி "சந்திரிகையின் கதை" என்ற நாவலை எழுதியார். அந்த நாவலின் மையக் கருத்து விதவை மறுமணம் ஆகும்.
அந்த நாவலின் கதைக்களம் குற்றாலத்திற்கு அருகிலுள்ள வேளாங்குடி என்ற கிராமத்தை மையமாகக் கொண்டது. அந்தக் கிராமத்தில் ஒரு பெரும் பூகம்பம் ஏற்படுகிறது. ஊரின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்க, அக்ரஹாரம் மட்டும் முற்றிலும் அழிந்துவிடுகிறது என்று பாரதி கற்பனை செய்கிறார். அதில் வாழ்ந்த பெரும்பாலான பார்ப்பனர்கள் உயிரிழக்கிறார்கள். ஆனால், இரண்டு விதவைகள் மட்டும் உயிர் பிழைக்கிறார்கள்.
அந்த இரு விதவைகளில் ஒருவருக்கு மறுமணம் நடத்தப்படுகிறது. இதன் மூலம், விதவை மறுமணம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற தனது முற்போக்குக் கருத்தை பாரதி வலியுறுத்துகிறார்.
அந்தக் காலத்தில் பாரதி பணியாற்றிய சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியரான சி. சுப்பிரமணிய ஐயர், 12 வயதிலேயே விதவையான தனது மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். அந்த முடிவை எடுக்க அவருக்கு பாரதி முக்கியமான ஊக்கமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.
மகாகவி பாரதியார்
“காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்.”
பகவத்கீதைக்கு உரை எழுதியிருக்கிறார். ஆனால், அந்த முன்னுரை திருக்குறளுக்கு நெடுஞ்செழியன் எழுதிய முன்னுரை போல, முற்போக்கான எதற்கும் வக்காலத்து வாங்காத தெளிந்த நடையாய் இருக்கிறது. யாராவது ஆர்வம் இருந்தால் அதை வாசிக்கலாம். அதில் தமிழ் வார்த்தைகள் குறைவாக இருக்கின்றன; வடமொழிக் கலப்பு அதிகம். மற்றபடி குறை ஒன்றும் இல்லை.
ஊருக்குள் மனைவியின் மீது கை போட்டு நடப்பது அன்றைக்கு ஒரு புதுமை. அதைச் செய்தவன் பாரதி.
பாரதிதாசனிடம், “என் மகள் வேறு மதம், ஜாதியில் திருமணம் செய்து சிரமத்தோடு வாழ்ந்தாலும், நான் பார்த்து மகிழ்வேன்” என்று சொல்லியிருக்கிறார்
பாரதி என்று பதிவுகள் கூறுகின்றன.
ஒரு இஸ்லாமியரின் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு, “இந்தக் கடையில் டீ நன்றாக இருக்கிறது; எல்லோரும் வந்து குடியுங்கள்” என்று பிரசங்கம் செய்ததெல்லாம் அன்றைய காலகட்டத்தை மனதில் ஏற்றி நினைத்துப் பார்க்க வேண்டியவை.
அந்தக் கஞ்சாப் பிரியர் பாரதியை விமர்சிப்பவர்கள் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். பாரதியைத் தேடும்போது நமக்கும் ஒரு போதை வருகிறது. அப்படி ஒரு மனிதன் அவன்!
1905-ஆம் ஆண்டில், தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில்
சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்:
“சுயாதீனத்தின் பொருட்டும், கொடுங்கோன்மை நாசத்தின்
பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்துவரும்
உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக!”
பாரதியார் நடத்திய ‘இந்தியா’ பத்திரிகையின் 1907-ஆம் ஆண்டு சித்திரை முதல் நாள் அட்டைப்படச் சித்திரம் இதுதான். எல்லா மதத்தினரும் தமிழ்த்தாயை வணங்குவதாக அதில் அமைந்துள்ளது.
ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்:
“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்
கடைக்கண் வைத்தாளங்கே;
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி,
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!”
“புராணங்கள்”
உண்மையின் பேர் தெய்வம் என்போம் — அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதம் என்போம் — பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
கடலினைத் தாவும் குரங்கும் — வெங்
கனலில் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்ததனாலே — தெற்கில்
வந்து சமன் செய்யும் குட்டை முனியும்,
நதியினுள்ளே முழுகிப்போய் — அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த — திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் — ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் — அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்.
கவிதை மிக நல்லதேனும் — அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி — நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.
இது புராணக் கதைகளில் வரும் கற்பனைகளைக் கேள்விக்குட்படுத்தி,
உண்மைக்கும், அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. கடவுளைப் புராணங்களின்படி அல்லாமல், உண்மையான வாழ்வின் நெறியில் கண்டறிய வேண்டும் என்றும் கூறுகிறது.
புராணங்கள் நல்ல கவிதைகளையும் வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளையும் கொண்டிருந்தாலும், அவை கதைகளே என்றும் வலியுறுத்துகிறது.
கடலைக் கடக்கும் அனுமன் (குரங்கு), நெருப்பில் பிறந்த சீதை (செவ்விதழ்ப் பெண்), வடமலை தாழ்ந்ததால் தெற்கில் சமன் செய்யும் அகத்தியர் (குட்டை முனி), நாக உலகிற்குச் சென்று பாம்பின் மகளை மணந்த வீமன் போன்ற கதைகள் கற்பனையே என்பதைப் பாரதி சுட்டிக்காட்டுகிறார்.
“ஸ்மிருதிகள்”
பின்னும் ஸ்மிருதிகள் செய்தார் — அவை
பேணும் மனிதர் உலகினில் இல்லை;
மன்னும் இயல்பின் வல்ல — இவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும்.
காலத்திற்கேற்ற வகைகள் — அவ்வகை
காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும்;
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் — எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை.
சூத்திரனுக்கொரு நீதி — தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடுமாயின் — அது
சாத்திரம் அன்று; சதியென்று கண்டோம்.
“மேல்குலத்தார் எவர்?”
வையகம் காப்பவரேனும் — சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்,
பொய்யகலத் தொழில் செய்தே — பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.
மேலோர் (உயர்ந்தோர்) என்பவர் சாதி அல்லது தொழிலைக் கொண்டு தீர்மானிக்கப்படுபவர்கள் அல்ல. மாறாக, நேர்மையாக, பிறருக்குத் தீங்கின்றி உழைத்து வாழ்பவர்களே உண்மையான மேலோர். அவர்கள் யாராக இருந்தாலும் — நாட்டைக் காப்பவரோ அல்லது பழக்கடை வைப்பவரோ — மேலோரே என்று பாரதியார் கூறுகிறார்.
“தவமும் யோகமும்”
உற்றவர், நாட்டவர், ஊரார் — இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் — இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.
பக்கத்திலிருப்பவர் துன்பம் — தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி;
ஒக்கத் திருந்தி உலகோர் — நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.
உற்றார், நாட்டவர், ஊரார் ஆகியோருக்கு உண்மையைப் பேசி, நல்லன செய்து, அவர்களின் துன்பத்தைப் போக்கி, பிறர் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளாமல், எல்லோரும் நலமுடன் வாழ உழைப்பவனே உண்மையான யோகி மற்றும் தவம் செய்பவன் என்று பாரதியார் விளக்குகிறார்.
“யோகம், யாகம், ஞானம்”
ஊருக்குழைத்திடல் யோகம் — நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்;
போருக்கு நின்றிடும் போதும் — உளம்
பொங்கல் இலாத அமைதி மெய்ஞானம்.
இதன் பொருள், சமூக நலனுக்காக உழைப்பது யோகம் (ஆன்மிகப் பாதை); பிறர் நலனுக்காகக் கஷ்டப்படுவது யாகம் (தியாகம்); போர்க்களத்தில் கூட மனம் கலங்காமல் அமைதியாக இருப்பது மெய்ஞானம் (உண்மை ஞானம்) என்பதாகும்.
இது பாரதியார் கண்ட சுயநலமற்ற சேவை, தியாகம் மற்றும் மெய்ஞானத்தின் விளக்கமாகும்.
“பரம் பொருள்”
மகாகவி பாரதியார் தனது கவிதைகளிலும் சிந்தனைகளிலும் உண்மை, சமத்துவம், மனிதநேயம், சமூக நலம், பெண்விடுதலை மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர்.
அன்றைய சமூகச் சூழ்நிலையில் அவர் வெளிப்படுத்திய பல கருத்துகள் புரட்சிகரமானவை. சாதி, மதம், பாலின வேறுபாடு மற்றும் பழமைவாதக் கட்டுப்பாடுகளைத் தாண்டி மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும் என்ற சிந்தனையை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
பாரதியை விமர்சிக்கலாம்; அவரது வாழ்க்கையையும் கருத்துகளையும் கேள்விக்குட்படுத்தலாம். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தையும் அந்தக்காலத்தின் சமூகச் சூழலையும் மனதில் கொண்டு அவரது சிந்தனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாரதியைத் தேடும்போது நமக்கும் ஒரு போதை வருகிறது — அப்படி ஒரு மனிதன் அவன்!
“பரம் பொருள்”
எல்லையில்லாத உலகில் — இருந்த
எல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்;
எல்லையில்லாதனவாகும் — இவை
யாவையுமாய் இவற்றுள்ளுயிராகி,
எல்லையில்லாப் பொருள் ஒன்று — தான்
இயல்பறிவாகி இருப்பதுண்டென்றே
சொல்லுவர் உண்மை தெளிந்தார் — இதைத்
தூவெளியென்று தொழுபவர் பெரியோர்.
நீயும் அதனுடைய தோற்றம் — இந்த
நீல நிறம் கொண்ட வானமும் ஆங்கே;
ஓயுதல் இன்றிச் சுழலும் — ஒளி
ஓங்குபல் கோடிக் கதிர்களும் அஃதே.
சக்திகள் யாவும் அதுவே — பல்
சலனம், இறத்தல், பிறத்தலும் அஃதே;
நித்தியமாம் இவ்வுலகில் — கடல்
நீரில் சிறுதுளி போலும் இப் பூமி.
இன்பமும் ஓர்கணத் தோற்றம் — இங்கு
இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்;
துன்பமும் ஓர்கணத் தோற்றம் — இங்கு
தோல்வி, முதுமை ஒருகணத் தோற்றம்.
எல்லையில்லாத இந்த உலகத்தில் ஒவ்வொரு அசைவும் திட்டமிட்டு நடைபெறுகிறது. உழைக்கும் மக்களால்தான் இந்த உலகம் வாழ்விக்கப்படுகிறது
என்ற கருத்தை பாரதி வலியுறுத்துகிறார்.
நிரந்தரப் பொருளாதாரம் குறித்த சிந்தனையை உலகில் முதலில் விதைத்தவன் என்ற பெருமை பாரதிக்கு உண்டு.
பிராமண அடையாளங்களைத் துறந்தார். குடுமி, பூணூல் ஏதுமின்றி அவர் மாறினார். ஆனால், அவரது மாமனார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னொரு நாளில் அவரது தமிழ் பக்திப் பாடல்களின் அருமையை அறிந்து அவரை ஏற்றுக்கொண்டார்.
“போட்டு நீயும் பார்ப்பனன் தான்” என்று தெருவில் அழைத்துப் போனதெல்லாம் அன்றைய காலகட்டத்தில் ஒரு புரட்சி அல்லவா!
மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்;
மூலைக் கடலினை அவ்வான வளையம்
முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி
நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே,
சாலப் பலபல நற் பகற்கனவில்
தன்னை மறந்த லயத்தன்னில் இருந்தேன்.
Meaning:
On a glorious dusk,
sitting on a sand mound, I was gazing at the sky and the sea. I witnessed the
arc of the sky embracing and kissing the sea at the horizon. I contemplated the
vast blue expanse and forgot the passing of time. I was immersed in several
pleasant reveries and lost all consciousness of my presence there.
ஆங்கப் பொழுதிலென் பின்புறத்திலே
ஆள் வந்து நின்று எனது கண் மறைக்கவே,
பாங்கினிற் கையிரண்டும் தீண்டியறிந்தேன்;
பட்டுடை வீசு கமழ் தன்னிலறிந்தேன்;
ஓங்கிவரும் உவகையூற்றில் அருந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டிலறிந்தேன்.
“வாங்கி விடடி கையை, ஏடி கண்ணம்மா!
சிரித்த ஒலியிலவள் கைவிலக்கியே,
திரும்பித் தழுவி, “என்ன செய்தி சொல்” என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன? பேசுதி!” என்றாள்.
நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன்;
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே,
பெற்றது உன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;
சிரித்த ஒலியினில் உன் கைவிலக்கியே,
திரும்பித் தழுவியதில் நின்முகம் கண்டேன்.”
மகாகவி பாரதியின் சிந்தனை
மகாகவி பாரதியார் கவிஞர் மட்டுமல்ல; இயற்கை, காதல், மனிதநேயம், சமத்துவம், அறிவியல் சிந்தனை மற்றும் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆழமான பார்வையைக் கொண்ட சிந்தனையாளரும் ஆவார்.
“பரம் பொருள்” என்ற கருத்தின் மூலம், எல்லையற்ற பிரபஞ்சத்தையும் அதனுள் இயங்கும் உயிர்களையும் சக்திகளையும் ஒரு பேருண்மையின் வெளிப்பாடாக அவர் காண்கிறார்.
அதேபோல், கண்ணம்மா கவிதைகளில், காதலை வெறும் மனித உறவாக மட்டுமல்லாமல், இயற்கையின் ஒவ்வொரு வடிவத்திலும் காதலியின் முகத்தைக் காணும் ஒரு பேருணர்வாகப் பாரதி வெளிப்படுத்துகிறார்.
கடல், வானம், நுரை, குமிழி, மேகம் என உலகின் அனைத்திலும் காதலியின் முகத்தைக் காணும் அந்தக் கற்பனை, பாரதியின் கவிதை உலகின் அழகையும் அவரது காதல் உணர்வின் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது.
மகாகவி பாரதியார் குறித்து சில செய்திகள்
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் வந்துவிட்ட காலத்திலேயே நான் எழுதியதை எத்தனையோ பேர் எழுதுகிறார்கள். அந்தக் காலத்தில் யாரும் உரிமை கொண்டாட முடியாது.
ஒரு பவுன் தங்கம் 27 ரூபாய்க்கு விற்ற காலத்தில், தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரத் தமிழ் மக்கள் பாரதியாருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பினார்கள். அது அவருக்கு ஒரு வாரத்திற்குக்கூட
போதவில்லை. அப்படி ஒரு செலவாளி!
வள்ளுவர் வகுப்பைச் சேர்ந்த கனகலிங்கம் என்பவரை நடுவீட்டில் வைத்து மந்திரம் ஓதி பூணூல் போட்டுவிட்டார் பாரதி. அதன் விளைவாக, தன் இளைய மகள் காய்ச்சலில் இருப்பதாக எழுதியிருக்கிறார்.
பாரதி இறந்த பின்பு, செல்லம்மா அவரது பாடல்களை சூரஜ்மால் லல்லுபாய் என்பவருக்கு ரூபாய் 450-க்கு விற்றார். அவரிடமிருந்து ‘நாம் இருவர்’ படத்திற்காக ஒன்பதாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து மெய்யப்ப செட்டியார் உரிமை வாங்கினார்.
https://porulputhithu.com/2022/07/03/bharathiswasarithai-1/
இந்தச் செட்டியார்தான் அவ்வை சண்முகம் தயாரித்த ‘பிரகலாதன்’ படத்தில் “தூண்டில் புழுவினைப் போல்” என்று தொடங்கும் பாடலை வைத்தார். அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கக் கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நாராயண துரைக்கண்ணு தலைமையில் பாரதி விடுதலைக் கழகம் என்ற அமைப்பினர் பெரும் போராட்டம் நடத்திய பிறகு, மெய்யப்ப செட்டியார் 1949-இல் இதை விட்டுக்கொடுத்தார்.
அப்போது பாரதியின் வாரிசுகளுக்கு ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்பட்டது. கடையத்தில் வாழ்ந்த பாரதியை அக்கிரகாரத்திலிருந்து ஒதுக்கி வைத்தார்கள். அதனால் அவர் தனியாக வீடு எடுத்து தங்கினார்.
பாரதியின் படைப்புகளை 1921-இல் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பெற்றுக்கொள்ள கானாடுகாத்தான் வை. சண்முகம் செட்டியார் முயன்றார். அவர்கள் புத்தகம் போட முயன்று, வியாபாரமாகாமல் கையைச் சுட்டுக்கொண்டார்கள்.
பாரதியை பாண்டிச்சேரிக்கு
அனுப்பி வைத்தது வக்கீல் துரைசாமி ஐயர்.
ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெருவில் பாரதி குடியிருந்த வீடு ஒரு செட்டியாருடையது. அவருக்குப் பாரதி வைத்த பெயர் “விளக்கெண்ணெய் செட்டியார்”. ஏனென்றால், அவர் கொஞ்சம் வளவளவென்று பேசுவார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி செட்டியார் மடியில் பணத்தோடுதான் பாரதியைப் பார்க்க வருவார் என்று அவரது மனைவி எழுதியிருக்கிறார்.
குறிப்பறிந்து பணம் கொடுக்கும் அவரை “வெல்லச்சு செட்டியார்” என்று பெயர் வைத்தார் பாரதி.
பாரதியாரின் பாடல்
“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு — நாம்
எல்லோரும் சமம் என்பதுறுதியாச்சு.”
“பறையருக்கும் இங்கு தீயர்,
புலையருக்கும் விடுதலை;
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை!
திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே!”
‘சந்திரிகையின் கதை’ மற்றும் சாதி பற்றிய விவாதம்
ஆங்கிலம் படித்த ராமச்சந்திரய்யர் என்பவர் வெளிநாடு சென்று மேரி குட்ரிச் என்ற வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வருகிறார். இங்கு வந்தவுடன் அந்த வெள்ளைக்காரப் பெண் நம்ம ஊர் பார்ப்பனப் பெண்களைப் போலவே ‘மடிசார்’ புடவை கட்டிக்கொள்கிறாள்.
தன் பெயரையும் சீதாதேவி என்று மாற்றிக்கொள்கிறாள். நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு அசல் பார்ப்பனப் பெண் போலவே மாறிவிடுகிறாள்.
அவன் கடல் கடந்து வந்ததினாலும், வேறு இனத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாலும், அவனை மீண்டும் பிராமணர் சாதியில் சேர்க்க அவ்வூர் பார்ப்பனர்கள் மறுக்கிறார்கள்.
அப்போது மாஷாபூப் தீஷிதர் என்பவர்:
“பிராம்ஹணா மம தேவதா! (பிராமணர் எனக்குத் தெய்வம்)”
என்று ஸ்ரீமன் நாராயணனே சொல்லுகிறார். அப்படியிருக்கையில் யாரும் பிராமணப் பதவியிலிருந்து நழுவக் கூடாது; நழுவினாலும் மறுபடியும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.
இக்கதையின் முடிவில், ரூ.50,000 செலவு
செய்து (பிராயச்சித்தம்) சாதி கெட்ட பார்ப்பனரான ராமச்சந்திர தீட்சிதரை மீண்டும் பார்ப்பன சாதியில் சேர்த்துக்கொள்வதாகக் கதை முடிகிறது.
பாரதியார் தன்னுடைய கடைசிக் காலத்தில் எழுதிய கதை ‘சந்திரிகையின் கதை’. இக்கதை முழுவதையும் எழுதி முடிக்கும் முன்பே அவர் இறந்துவிட்டார்.
இக்கதையில் சுப்புசாமி கோனாருடைய மகள் மீனாட்சியின் மீது கோபால் அய்யங்காருக்குக்
காதல் ஏற்படுகிறது. அந்த அய்யங்கார் இடையர் வீட்டிற்கு வந்து பெண் கேட்கிறார்.
அதற்கு அந்தக் கோனார்:
“நான் சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். சூத்திரச் சாதியைச் சேர்ந்தவன் நான். என்னுடைய பெண்ணைப் பிராமணருக்குக் கலியாணம் செய்து கொடுப்பதனால் எனக்குப் பாவம் வந்து சேரும். எனவே, எனக்கு இதில் சம்மதம் இல்லை”
என்கிறார்.
இதைக் கேட்ட கோபால் அய்யங்கார்:
“நிஜமான பிராமணன் பிராமண குலத்தில் மாத்திரமின்றி மற்ற நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாமென்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த விஷயத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், என்னிடத்தில் தமிழில் மனு ஸ்மிருதி இருக்கிறது. உங்களிடம் அந்த நூலைக் காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்துப் பாருங்கள்” என்கிறார்.
இக்கதையின் மூலம், பார்ப்பனர்கள் எந்தச் சாதியில் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்பதைப் பாரதி மனுநீதியை ஆதாரம் காட்டி முடிக்கிறார்.
ஆனால், பார்ப்பனப் பெண்களைப் பிற சாதியில் திருமணம் செய்விக்கப் பாரதி எதிர்ப்பாகவே இருந்துள்ளார் என்பதைப் பின்வரும் சான்றின் மூலம் அறியலாம்.
பாரதி கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள், பாரதியும் நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று நாராயணப் பிள்ளை:
“பாரதி, நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என்ன?”
என்று கேட்டார்.
பாரதி சற்று உஷ்ணமாகவே:
“கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறையர் அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வையுங்கள். அதன்பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்”
என்றார்.
பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப் பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச் சேர்ந்தார். அப்போது காலை 11 மணி இருக்கும்.
நாராயணப் பிள்ளை செல்வந்தரானதால், அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்க ஊரார் பயப்படுவார்கள்.
மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தன் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.
வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார்.
பாரதி திண்ணையிலிருந்து
குதித்து அர்ச்சகரிடம்:
“உன் போன்ற மானங்கெட்டவர்களின் செய்கையால்தானே நாராயணப் பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று!”
என்று சொல்லி, அவரது கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டார்.
அர்ச்சகர் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார்.
நாராயணப் பிள்ளைக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி, பாரதியின் மைத்துனர் அப்பாத்துரையை வரச் சொன்னார்.
பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம்,
அன்று இரவுக்குள் பாரதியை கடையத்தை விட்டு வெளியேற்றாவிட்டால்,
ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக்கட்டிவிடப் போவதாகப் பிள்ளை எச்சரித்தார்.
பாரதி வீட்டில் ஒரே குழப்பம் ஏற்பட்டது.
முடிவில், பாரதியையும் அவரது குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள்.
விடியற்காலை நான்கு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக்கூடக் காத்திருக்காமல், பிற்பகல் 2.30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள்.
பாரதி புறப்பட்டு வரும் செய்தி சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ. ரங்கசாமி அய்யங்காருக்கும், நண்பர் வக்கீல் எஸ். துரைசாமி ஐயருக்கும் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.
இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது எனப் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள ரா. அ. பத்மநாபன் கூறியுள்ளார்.
பாரதி சென்னைக்கு வந்தது கூட ஒரு விபத்துதான். அரசியல் நடத்த அவர் சென்னைக்கு வரவில்லை.
பார்ப்பனப் பெண்ணை கீழ்ச்சாதிக்காரன் திருமணம் செய்துகொள்ளக் கூடாது; பார்ப்பன ஆண் எந்தச் சாதிப் பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதுதான் அவரது கருத்தாக உள்ளது.
‘ஞானரதம்’ மற்றும் நால்வருணம்
பாரதியார் ‘ஞானரதம்’ என்ற கதையில் நால்வருணத்தை வலியுறுத்தியுள்ளார்.
“ஜனங்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கெல்லாம் அறிவின்மையே காரணமாதலாலும், அந்த அறிவின்மை ஏற்படாமல் பாதுகாப்பதே பிராமணன் கடமையாதலாலும், பிராமணர்களே பொறுப்பாளிகளாவார்கள்.
ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் சூத்திர தர்ம போதனையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண்மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும்.
ஷத்திரிய தர்மத்திற்கும் பிராமண தர்மங்களுக்கும் ஊனம் நேரிடுமாயின், ஜன சமூகம் முழுவதுமே ஷீணமடைந்து போய்விடும்” என்கிறார்.
இந்த உலகத்தில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர, 1917-இல் பாரதி கூறும் வழி என்னவென்றால், மீண்டும் நால்வருணம் தோன்ற வேண்டும் என்பதே:
“கலியுகம் ஐயாயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு புதுயுகம் பிறக்கும். அதுதான் கலியுகத்துக்குள்ளே கிருதாயுகம். அப்போது இந்த உலகமே மாறும். அநியாயங்களெல்லாம் நொறுங்கித் தவிடுபொடியாகிவிடும்.
நாலு குலம் மறுபடியும் ஏற்படும். அந்த நாலு குலத்தாரும் வெவ்வேறு தொழில் செய்து பிழைத்தாலும், ஒருவருக்கொருவர் அநியாயம் செய்ய மாட்டார்கள். அன்பே தெய்வமென்று தெரிந்துகொள்வார்கள்.
அன்பிருந்தால் குழந்தையும் தாயும் ஸமானம்; ஏழையும் செல்வனும் ஸமானம். அப்போது மாதம் மூன்று மழை நேரே பெய்யும்; பஞ்சம் என்ற வார்த்தையே இராது.
தெற்குத் தேசத்தில் பிராமண குலத்தில் கபில முனிவரும் அகப்பேய்ச் சித்தரும் திரும்பி அவதாரம் செய்வார்கள். அவர்கள் ஊரூராகப் போய் ஜனங்களுக்குத் தர்மத்தைச் சொல்லி, ஜாதி வழக்கை எல்லாம் தீர்த்து வைப்பார்கள். அப்போது தர்மம் நிலைபெறும்.”
மகாகவி பாரதியார் குறித்து சில செய்திகள்
1919 ஜூன் மாதம் பாரதி கடையத்தில் இருந்தபோது, அவரது மகள் தங்கம்மாவிற்குத்
திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்தினம் வரை பாரதிக்கு இச்செய்தி தெரியாது.
மறுநாள் காலை திருமணம் நடக்க வேண்டும். பாரதியின் மைத்துனர் அப்பாத்துரைக்கு தூக்கமே வரவில்லை. விடியற்காலை 4 மணிக்குத் தங்கை செல்லம்மாளை அழைத்துக்கொண்டு பாரதியிடம் சென்று:
“இன்று உன் மகள் திருமணம். நீ வந்து தாரை வார்த்து உன் பெண்ணைக் கன்னிகாதானம் தர வேண்டும்”
என்றார்.
பாரதியும் மகிழ்ச்சியுடன் சரி என்றார்.
அங்கேயே அவசர அவசரமாக வெந்நீர் தயாராயிற்று. பாரதி ஸ்நானம் செய்து, அழகாகப் புத்தாடை அணிந்து, கிரமமான முறையில் மணப்பந்தலுக்கு வந்தார்.
வழக்கமான தலைப்பாகை, கோட்டு இன்றி, நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்து, பளிச்சென்ற பூணூலுடன் பஞ்சகச்சக் கோலத்தில் அவரைக் கண்டோர் வியந்து மகிழ்ந்தனர்.
அதைவிட ஆச்சரியம் தந்தது, அவர் ஸம்ஸ்கிருத மந்திரங்களை அழுத்தம் திருத்தமாக, அர்த்தபுஷ்டியுடன் உச்சரித்துப் பக்திச் சிரத்தையுடன் கிரியைகளை நடத்தியதாகும்.
எல்லோருக்கும் பூணூல் அணிவிக்க வேண்டும்
கடைசிக் காலத்தில் எல்லோருக்கும் பூணூல் அணிவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அவர் கூறுவதைப் பாருங்கள்:
“ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியபடி, எல்லோரையும் ஒரேயடியாக பிராமணர்களாக்கிவிட முடியுமென்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்கள் இருக்கச் செய்துவிட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்ராயம்.
எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, அவன் மாம்ஸ பஷணத்தை நிறுத்தும்படிச் செய்து, அவனுக்கு ஒரு பூணூல் போட்டுக் காயத்ரி மந்திரம் கற்பித்துக் கொடுத்துவிட வேண்டும்.”
“அல்லா, அல்லா, அல்லா”
“பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்
எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளி வானிலே!
நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி!
(அல்லா, அல்லா, அல்லா)”
இது பாரதியாரின் “அல்லா, அல்லா, அல்லா” என்ற தெய்வப் பாடலின் ஒரு பகுதி.
இந்தப் பாடலில், பல்லாயிரம் கோடி பிரபஞ்சங்களையும் எல்லையற்ற வெளியையும் கட்டுப்படுத்தும்
நாயகனாக, சொல்லாலும் மனத்தாலும் அறிய முடியாத பரம்பொருளை — அல்லாவை — அவர் போற்றுகிறார்.
இது இறைவனின் அளப்பரிய சக்தியையும் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் குறிக்கிறது.
“சாதி ஒழித்தல் ஒன்று — நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று;
பாதியை நாடு மறந்தால் — மறு
பாதி துலங்குவதில்லை.”
— புரட்சிக் கவிஞர் பாவேந்தர்
மகாகவி பாரதி பற்றி கவிஞர் கண்ணதாசன் எழுதியது
“பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும்.
என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு.
பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்.”
இப்படி மனம் திறந்து பாரதியைப் பாராட்டியவர் கண்ணதாசன்.
இதோ, இன்னும் கூட பாரதி பற்றி கண்ணதாசன் கூறியது:
“இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் ரசிக்கிறார்கள்; பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும்போதும், காதால் கேட்கும்போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன்.
அந்த வாய்ப்பே இல்லாமற் போனவன் பாரதி. தன் கவிதையை யார் ரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான்.
‘காலம் எப்படி வரவேற்கும்? யார் எப்படி ரசிப்பார்கள்?’ என்பது தெரியாமலேயே தனக்குத் தோன்றியதை எல்லாம் பாடினான். அதனால் எந்தக் கவிதையைப் பாடினாலும் தேன் வந்து காதுகளில் பாய்கிறது.
பாரதி ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல; அவன் சர்வ சமரசவாதி.
அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது.
துர்பாக்கியம் பிடித்த தமிழகமே!
பாரதியைக் கொண்டாடு!
தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்; பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக்கொள்ள அருகதை இல்லை.”
பாரதியை ஆதரித்தும் எழும் ஒரு விமர்சனக் கருத்து
பாரதியை ஆதரித்துத்தான் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன். ஆனாலும், அவன் உள்ளுக்குள் அந்த “பாப்பா” என்ற அரிப்போடுதான் வாழ்ந்திருக்கான்.
ஏன்னா, வங்க மூலையில் எழுதிய பக்கிம் சந்திர சட்டோபாத்யாயர் அவர்கள் ஒரு நாடகத்துக்குள் வைத்திருந்த ஒரு விஷயத்தை எளிமைப்படுத்தி இருந்தால் பரவாயில்லை; எவ்வளவு அழகுபடுத்தி இருக்கான் பாருங்க பாரதி!
ஒரிஜினல் பாடலை மொழிபெயர்த்துப் பார்த்துட்டேன்; அப்படி ஒன்றும் இல்லை. நம்ம “நீராரும் கடலுடுத்த...” பாடலுக்கு ஒரு பதில் கூட இல்லை.
ஆனாலும், பாரதி இந்தப் பாடலை ரொம்ப அழகுபடுத்தி இருக்கான்.
கவிதைக்காக கண்ணதாசனை ஏற்றுக்கிட்ட மாதிரி, இவனையும் ஏற்றுக்குவோம்.
என்னமோ போங்கடா!
பாரதி மொழிபெயர்த்த “வந்தே மாதரம்”
Subramania Bharati அவர்கள் மொழிபெயர்த்த “வந்தே மாதரம்” பாடலின் புகழ்பெற்ற தமிழ் வடிவம்:
இனிய நீர்ப் பெருக்கினை!
இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற்றுச் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்!
வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரம்பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம் வரம்பல நல்குவை!
வந்தே மாதரம்!
விதவை மறுமணம் குறித்து பாரதியின் முற்போக்குச் சிந்தனை
1910ஆம் ஆண்டில் மகாகவி பாரதி "சந்திரிகையின் கதை" என்ற நாவலை எழுதியார். அந்த நாவலின் மையக் கருத்து விதவை மறுமணம் ஆகும்.
அந்த நாவலின் கதைக்களம் குற்றாலத்திற்கு அருகிலுள்ள வேளாங்குடி என்ற கிராமத்தை மையமாகக் கொண்டது. அந்தக் கிராமத்தில் ஒரு பெரும் பூகம்பம் ஏற்படுகிறது. ஊரின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்க, அக்ரஹாரம் மட்டும் முற்றிலும் அழிந்துவிடுகிறது என்று பாரதி கற்பனை செய்கிறார். அதில் வாழ்ந்த பெரும்பாலான பார்ப்பனர்கள் உயிரிழக்கிறார்கள். ஆனால், இரண்டு விதவைகள் மட்டும் உயிர் பிழைக்கிறார்கள்.
அந்த இரு விதவைகளில் ஒருவருக்கு மறுமணம் நடத்தப்படுகிறது. இதன் மூலம், விதவை மறுமணம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற தனது முற்போக்குக் கருத்தை பாரதி வலியுறுத்துகிறார்.
அந்தக் காலத்தில் பாரதி பணியாற்றிய சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியரான சி. சுப்பிரமணிய ஐயர், 12 வயதிலேயே விதவையான தனது மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். அந்த முடிவை எடுக்க அவருக்கு பாரதி முக்கியமான ஊக்கமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.







.jpg)

Comments
Post a Comment