மின்சாரம் வீடுவரை வந்த வரலாறு Lion Raja Ganesan
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மின்தடை மற்றும் மின்விநியோகக் கோளாறுகள் பற்றிய செய்திகள் அதிகமாக வருகின்றன. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று கோடை காலத்தில் மின்சாரத் தேவை திடீரென அதிகரிப்பதாகும். குறிப்பாக மாலை 7 மணிக்குப் பிறகு வீடுகளில் ஏசி, ஏர் கூலர், மின்விசிறி, தண்ணீர் மோட்டார் மற்றும் பிற மின்சாதனங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மின்சாரப் பயன்பாடு அப்பகுதியின் திட்டமிடப்பட்ட அளவை விட அதிகரிக்கும்போது, அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் பகிர்மான அமைப்புகள் மீது கூடுதல் சுமை ஏற்படுகிறது. 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த அதிக சுமையின் விளைவுகளை பொதுமக்களே நேரடியாகக் காண முடிந்தது. டிரான்ஸ்பார்மரில் பொருத்தப்பட்டிருந்த உயர் அழுத்த பியூஸ் (HT Fuse) பழுத்து எரிந்து மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் வந்து கையால் லிவர் இயக்கி இணைப்பை மாற்றி மின்விநியோகத்தை மீட்டெடுப்பார்கள். ஆனால் இன்று நிலைமை வேறுபட்டுள்ளது. நவீன மின் பகிர்மான அமைப்புகளில் தானியங்கி பாதுகாப்பு சாதனங்கள் (Automatic Protection Systems) பயன்படுத்...