மின்சாரம் வீடுவரை வந்த வரலாறு Lion Raja Ganesan

 


கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மின்தடை மற்றும் மின்விநியோகக் கோளாறுகள் பற்றிய செய்திகள் அதிகமாக வருகின்றன. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று கோடை காலத்தில் மின்சாரத் தேவை திடீரென அதிகரிப்பதாகும்.

குறிப்பாக மாலை 7 மணிக்குப் பிறகு வீடுகளில் ஏசி, ஏர் கூலர், மின்விசிறி, தண்ணீர் மோட்டார் மற்றும் பிற மின்சாதனங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மின்சாரப் பயன்பாடு அப்பகுதியின் திட்டமிடப்பட்ட அளவை விட அதிகரிக்கும்போது, அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் பகிர்மான அமைப்புகள் மீது கூடுதல் சுமை ஏற்படுகிறது.

2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த அதிக சுமையின் விளைவுகளை பொதுமக்களே நேரடியாகக் காண முடிந்தது. டிரான்ஸ்பார்மரில் பொருத்தப்பட்டிருந்த உயர் அழுத்த பியூஸ் (HT Fuse) பழுத்து எரிந்து மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் வந்து கையால் லிவர் இயக்கி இணைப்பை மாற்றி மின்விநியோகத்தை மீட்டெடுப்பார்கள்.

ஆனால் இன்று நிலைமை வேறுபட்டுள்ளது. நவீன மின் பகிர்மான அமைப்புகளில் தானியங்கி பாதுகாப்பு சாதனங்கள் (Automatic Protection Systems) பயன்படுத்தப்படுகின்றன. மின் சுமை நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறினால், அவை தானாகவே டிரிப் ஆகி மின் இணைப்பைத் துண்டித்து டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் உபகரணங்களைப் பாதுகாக்கின்றன. பல இடங்களில் மனித தலையீடு இல்லாமலேயே இவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வசதியும் உள்ளது.

அதேபோல், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயப் பயன்பாட்டில் உள்ள மூன்று முனை (Three Phase) மின்சார அமைப்புகளில் முன்பு ரெட், எல்லோ, ப்ளூ என்ற பேஸ் வரிசை மாறினால் மோட்டார்கள் எதிர்திசையில் (Anti-clockwise) சுற்றும் பிரச்சனை ஏற்படும். ஆனால் தற்போது பயன்படுத்தப்படும் நவீன எலக்ட்ரிக்கல் பேனல்கள், உள்ளே வரும் பேஸ் வரிசையை கண்காணித்து தேவையான மாற்றத்தை தானாகச் செய்து, மோட்டாருக்கு எப்போதும் சரியான வரிசையிலேயே மின்சாரத்தை வழங்குகின்றன. இதனால் பழைய காலத்தில் இருந்த பல தொழில்நுட்ப சிக்கல்கள் இன்று பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளன.

எனவே கோடை காலத்தில் சில பகுதிகளில் ஏற்படும் மின்தடைகளுக்கு முக்கிய காரணம் மின்சார உற்பத்திக் குறைபாடு மட்டுமல்ல; திடீரென அதிகரிக்கும் உள்ளூர் மின்சாரச் சுமை, டிரான்ஸ்பார்மர் திறன் வரம்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுவதும் முக்கிய காரணங்களாகும்.

தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு தேவையான மின்சாரம் 100% என்றால் காற்றாலை மூலம் பெறப்படுவது 

15 சதவீதத்திலிருந்து அதிகமாக காற்று வீசும் போது 30 சதவீத தேவையை காற்றாலை மின் சக்தி பூர்த்தி செய்கிறது இந்தியாவில் தமிழ்நாடு இதில் முன்னோடி மாநிலம்

How much electricity is needed for Tamil Nadu in one day?

1) 2004–2005

Electricity needed per day — (4787 crores ÷ 365) = 13.11 crore units

2) 2005 — 2006

Electricity needed per day — (5419 Crores ÷ 365) = 14.84 crore units

3) 2006 — 2007

Electricity needed per day — (6150 Crores ÷ 365) = 16.84 crore units

4) 2007 — 2008

Electricity needed per day — (6578 crores ÷ 366) = 17.97 crore units

5) 2008 — 2009

Electricity needed per day — (6967 Crores ÷ 365) = 19.08 crore units

6) 2009 — 2010

Electricity needed per day — (7629 crores ÷ 365) = 20.90 crore units

7) 2010 — 2011

Electricity needed per day — (8031 Crores ÷ 365) = 22.00 crore units

8) 2011 — 2012

Electricity needed per day — (8569 crores ÷ 366) = 23.41 crore units

9) 2012 — 2013

Electricity needed per day — (9230 Crores ÷ 365) = 25.28 crore units

10) 2013 — 2014

Electricity needed per day — (9351 crores ÷ 365) = 25.61 crore units

11) 2014 — 2015

Electricity needed per day — (9576 crores ÷ 365) = 26.23 crore units

12) 2015 — 2016

Electricity needed per day — (9728 crores ÷ 366) = 26.57 crore units

13) 2016 — 2017

Electricity needed per day — (10,451 crores ÷ 365) = 28.63 crore units

14) 2017 — 2018

Electricity needed per day — (10,601 crores ÷ 365) = 29.04 crore units

15) 2018 — 2019

Electricity needed per day — (10,938 crores ÷ 365) = 29.96 crore units

16) 2019 — 2020

Electricity needed per day — (10,882 crores ÷ 366) = 29.73 crore units

17) 2020 — 2021

Electricity needed per day — (10,119 crores ÷ 365) = 27.72 crore units

மார்ச் 2026 நிலவரப்படி, தமிழ்நாட்டின் தினசரி மின் விநியோகம் பெரும்பாலும் 400 மில்லியன் யூனிட்டுகளை (MU) தாண்டுகிறது;         400 x1000000 கோடையின் தொடக்க காலத்தில், தினசரி உச்சபட்ச மின் நுகர்வு 416 MU-ஐயும் கடந்துள்ளது. மார்ச் 2026-இல், கடும் வெப்பம் மற்றும் குளிரூட்டிகளின் (AC) பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, மாநிலத்தின் உச்சபட்ச மின் தேவை 20,000 MW -ஐத் தாண்டிப் பதிவாகியுள்ளது.



மின்சாரம் பற்றி சில உண்மைகள் மற்றும் அரசியல் பின்னணி:

🔹 மின்சாரம் முதலில் DC (Direct Current) ஆக கண்டுபிடிக்கப்பட்டது – தாமஸ் எடிசன்.
பின்னர் AC (Alternating Current) – நிக்கோலா டெஸ்லா உருவாக்கியது. இப்போது நாம் பயன்படுத்துவது AC.

🔹 மின்சாரம் உருவாக, ஒரு சக்கரம் (turbine) சுழல வேண்டும். அது நீர், நீராவி, காற்று போன்ற சக்திகளால் சுழற்றப்படுகிறது.

🔹 1 யூனிட் மின்சாரம் = 1 கிலோவாட் சக்தி 1 மணி நேரம் பயன்படுத்துவது.
(உதாரணம்: 1000W பல்ப் 1 மணி நேரம் எரிந்தால் 1 யூனிட்)

🔹 ஆரம்பத்தில் நீர்மின் உற்பத்தி (Hydro power) பயன்படுத்தப்பட்டது.
பிறகு நிலக்கரி மூலம் (Thermal power), பின்னர் அணுமின் நிலையம் (Nuclear power) வந்தது.

🔹 அணுமின் உற்பத்தி செலவு அதிகம், அபாயமும் அதிகம்.
செர்னோபில் விபத்து இதற்கு உதாரணம்.

🔹 தமிழகத்தில் காற்றாலை (Wind power) உற்பத்தி 30 ஆண்டுகளாக முன்னிலையில் உள்ளது.
இது குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய உதவும்.

🔹 அரசியல் பார்வை:
தமிழ்நாட்டில் நீர்மின் உற்பத்தி குறைவாக இருப்பதை முன்கூட்டியே அறிந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சிலர் திட்டங்களை கொண்டு வந்தார்கள், சிலர் அதை செயல்படுத்தினார்கள் என்பதே உண்மை.

🔹 2000க்கு பிறகு மின்சாரம் துறையில் தனியார்மயமாக்கல் அதிகரித்தது.
இதனால் நிலக்கரி இறக்குமதி, அதிக விலை, தனியார் நிறுவனங்களுக்கு ஆதாயம் ஆகியவை ஏற்பட்டன.


மின்சாரம் என்பது தொழில்நுட்பம் + அரசியல் முடிவுகள் சேர்ந்து இயங்கும் துறை.
நாம் உண்மைகளை அறிந்து பேசுவது முக்கியம்.

மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத காலத்தில், நிலக்கரியை பயன்படுத்தி பெரிய உலைகளில் நீரை கொதிக்க வைத்து, அதனால் உருவாகும் நீராவியை கொண்டு இயங்கும் நீராவி எஞ்சின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதே தொழில்நுட்பம் ரயில்களில் சக்கரங்களைச் சுழலச் செய்யவும் பயன்பட்டது.

அதற்குப் பின்னர், அதுவும் போதாமை ஏற்பட்டதால் அணு மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு மிகுந்த செலவும், அதனுடன் தொடர்புடைய பல பக்க விளைவுகளும் உள்ளன. இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் அது தவிர்க்க முடியாத ஒன்றாகக் கருதப்பட்டது.

உதாரணமாக, செர்னோபில் அணு விபத்து ஏற்பட்ட பகுதி இன்று ரஷ்யா–உக்ரைன் போராட்டம் நடைபெறும் பகுதியில் உள்ளது. அந்த அணு விபத்துக்குப் பிறகு சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவில் மனிதர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதி இன்னும் முழுமையாக மீளவில்லை.

https://www.power-technology.com/features/nuclear-power-plants-in-india/

அதன் பின்னர் உலகளவில் அணு மின் நிலையங்களுக்கு எதிரான சந்தேகங்கள் அதிகரித்தன. தமிழகத்தில் அணு உலை அமைக்கப்பட்டதற்குக் காரணம் அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு என சிலர் விமர்சிக்கின்றனர்.

இந்தியாவில் காற்றாலை மின்சாரம் உற்பத்தியில் தமிழ்நாடு முக்கியமான முன்னோடி மாநிலமாக உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் தமிழ்நாட்டுக்கு உள்ளது. ஒரு காற்றாலை இயந்திரம் தினமும் ஆயிரக்கணக்கான கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது குறைந்த செலவில் கிடைக்கும் மின்சாரம். இதே அளவு மின்சாரத்தை அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்ய மூன்று மடங்கு செலவு ஆகும்.

2000 ஆம் ஆண்டு வரை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் பெரும்பாலும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் தனியார்மயம் செய்யப்பட்டதால், இந்தியாவில் கிடைக்கும் நிலக்கரியைப் பயன்படுத்தாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அதிக விலையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலை உருவானது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

மேலும், விமான சேவைகள் போன்ற பல துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டன. அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று கூறி அவை தனியாருக்கு வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

இதற்கிடையில், அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூகத்தில் பேசப்பட்டு வருகின்றன.

இப்போது மீண்டும் மின்சார விஷயத்துக்கு வருவோம்.

நாம் தெருவில் நடக்கும்போது மின்சாரத்தை கொண்டு செல்லும் உயரமான மின்சார டவர்கள் மற்றும் கம்பிகளை பார்த்திருக்கிறோம்.

ஆனால் அவற்றை நன்றாக கவனித்துப் பார்த்திருக்கிறோமா?

பல்வேறு உயரங்களில் மின்சார டவர்கள் இருப்பதையும், அதில் மின்கம்பிகள் எப்படி இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் கவனித்திருக்கிறீர்களா?

அதில் தொங்கும் இன்சுலேட்டர் அடுக்குகள் எத்தனை இருக்கின்றன என்று எண்ணிப் பார்த்ததுண்டா? பெரிய டவர்களில் ஏன் இவ்வளவு இன்சுலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று யோசித்ததுண்டா?

இந்தியாவில் Transmission voltage is 110KV,220KV, 400KV, 765KV and +/-500KV HVDC. (High-Voltage Direct Current)  என்றால் என்னஅதன் பயன் என்ன?)

இந்தியாவில் உள்ள டிஸ்ட்டிரிபூஷன் வோல்டேஜ் 33KV, 11KV, 400V, 230V(1ph).

இன்சுலேட்டர்களின் எண்ணிக்கை வோல்ட்டேஜுக்கு ஏற்றாப்போல்   இருக்கும். 400KV க்கு 22 இன்சுலேட்டர்கள் இருக்கும்.

ஐசொலேட்டர் என்பது மின்சாரம் இல்லாத போது சப்ளையை   கொடுப்பதற்கும் நிறுத்துவதற்கும் உள்ளதுபிரேக்கர் மின்சாரம்   இருக்கும் போது சப்ளையை கொடுப்பதற்கும் நிறுத்துவதற்கும்    உள்ளதுபியூஸ் என்பவை ஷார்ட் சர்க்கியூட் ஆகும் போது மெல்ட்   ஆகி சப்ளையை வெட்டுபவை.


மின்கடத்திகள் பெரும்பாலும் ACSR (Aluminum Conductor Steel Reinforced) எனப்படும், இரும்பு கம்பியால் பலப்படுத்தப்பட்ட அலுமினிய கம்பிகளாகும். இவற்றில் சுமார் 2000A வரை மின்சாரம் கடத்த முடியும்.

மின்நிலையங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் 10,000A முதல் 15,000A வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அந்த அளவு மின்சாரத்தை நேரடியாக மின் கம்பிகளில் அனுப்ப முடியாது.

நாம் அடிக்கடி “தரமான மின்சாரம்” பற்றி கேள்விப்படுகிறோம். அது என்ன?
தரமான மின்சாரம் என்பது 415V (மூன்று கட்டம்), 230V (ஒற்றைக் கட்டம்), மற்றும் 50Hz அதிர்வெண் ஆகிய அளவுகளில், தடையின்றி வழங்கப்படும் மின்சாரமாகும்.

இந்த தரத்தை பராமரிப்பது மிகவும் சிக்கலான வேலை. இதை ஒரே இடத்தில் இருப்பவர்கள் மட்டும் செய்ய முடியாது. இந்தியா முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிலையங்களும், விநியோக மையங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். சிறிய தவறும் ஏற்பட்டால் “கேஸ்கேட்” முறையில் முழு மின்கட்டமைப்பும் (grid) பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தென்னிந்திய மாநிலங்களில் இந்த ஒருங்கிணைப்பை SRLDC (Southern Region Load Despatch Centre) மேற்கொள்கிறது. இது மின் உற்பத்தியாளர்களையும் (Generators), மின் விநியோக நிறுவனங்களையும் (Consumers/Discoms) இணைத்து ஒழுங்குபடுத்துகிறது.

ABT (Availability Based Tariff) முறையின் கீழ், ஒரு நாள் 96 பிளாக்குகளாக (ஒவ்வொரு 15 நிமிடமும்) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிளாக்கிற்கும் உற்பத்தி மற்றும் தேவையை சரியாக பொருந்தச் செய்வது இவர்களின் முக்கிய பணி. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.

தேவை அதிகமானபோது மின் உற்பத்தியை உயர்த்தவும், தேவை குறைந்தபோது குறைக்கவும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது உடனடியாக செய்யக்கூடிய வேலை அல்ல.

“Ramp Up” மற்றும் “Ramp Down” என்பவை மின் உற்பத்தியை மெதுவாக உயர்த்துதல் மற்றும் குறைத்தல் என்பதைக் குறிக்கும். பொதுவாக ஒரு நிமிடத்திற்கு சுமார் 1% மட்டுமே மாற்றம் செய்ய முடியும். உதாரணமாக, 210MW உற்பத்தி செய்கிற யூனிட்டை உடனடியாக 170MW ஆக குறைக்க முடியாது; அதேபோல் உடனடியாக அதிகரிக்கவும் முடியாது.

இதற்குக் காரணம், கரியை அரைத்து, பாய்லரில் எரித்து, நீராவி உருவாக்கி, டர்பைனைச் சுற்றச் செய்து, ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் முழு செயல்முறை நேரம் எடுத்துக்கொள்வதே.

மின் உற்பத்தி மற்றும் தேவையை சரியாக பொருந்தச் செய்யாவிட்டால், மின்சாரத்தின் அதிர்வெண் (Frequency) 50Hz இலிருந்து மாறும். ABT அறிமுகமான பிறகு இது 49.97Hz முதல் 50.03Hz வரை கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது.

Frequency 50Hz ஐ விட அதிகமானால், திட்டத்தை மீறி உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு பணம் வழங்கப்படாது; மேலும்அபராதமும் விதிக்கப்படும்.

Frequency அதிகமாகவோ குறைவாகவோ சென்றால், இயந்திரங்களை பாதுகாக்க சில யூனிட்கள் அல்லது ஃபீடர்கள் தானாகவே (automatic) நிறுத்தப்படுகின்றன (Trip). அவ்வாறான சூழலில் “Islanding Operation” மூலம், முக்கிய பகுதிகள் மட்டும் கிரிட் இருந்து தனியாக இணைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்படும்.

மின்சாரம் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல; அது ஒரு நொடிக்கொரு கணக்கில் இயங்கும் மிகப்பெரிய ஒத்துழைப்பு அமைப்பு!


சூப்பர் மார்க்கெட்டுகள், பொழுதுபோக்கு நிலையங்கள், ரயில் போக்குவரத்து, கட்டுமானப் பணிகள் போன்றவை அனைத்தும் மூடப்பட்டன.
அதனால் அவை பயன்படுத்தும் மின்சாரம் திடீரெனக் குறைந்துவிட்டது.

ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் மட்டும் குறையவில்லை. வீடுகள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணமும் மிகவும் குறைவாக உள்ளது.

HT (High Tension) பயனாளர்களிடமிருந்து பெறப்படும் மின்சாரக் கட்டணத்தைக் கொண்டுதான் மின்சார விநியோக நிறுவனங்கள் ஓரளவு நஷ்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்தன. அதனால் நெய்வேலி போன்ற மின் உற்பத்தி நிலையங்களுக்கும், கோல் இந்தியாவிற்கும் நிலக்கரிக்கான பணத்தை வழங்க முடிந்தது. இனி அதற்கும் இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மின்விநியோகம் தடைப்படாமல் இருக்க, இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆட்சியாளர்கள் அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சாதாரண நிலக்கரிக்கும் பழுப்பு நிலக்கரிக்கும் (Lignite) உள்ள வேறுபாடுகள் என்ன? எதில் செயல்திறன் (Efficiency) அதிகம்? செயல்திறன் குறைவாக இருந்தால் தமிழ்நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்ய நிலக்கரியைப் பயன்படுத்தாமல் பழுப்பு நிலக்கரியை ஏன் பயன்படுத்த வேண்டும்?

வட இந்தியாவில் நிலத்தடியில் அதிகமாக கிடைக்கும் நிலக்கரியின் GCV (Gross Calorific Value) சுமார் 5,600 Kcal/Kg ஆகும்.

நெய்வேலியில் அதிகமாக கிடைக்கும் பழுப்பு நிலக்கரியின் GCV சுமார் 2,800 Kcal/Kg ஆகும்.

இந்தியாவில் இந்த இரு வகை எரிபொருள்களும் மிகுந்த அளவில் நிலத்தடியில் உள்ளன.

நிலக்கரி அடிப்படையிலான பாய்லர்களின் செயல்திறன், பழுப்பு நிலக்கரி பாய்லர்களைவிட சற்றே அதிகமாக இருக்கும். மேலும், Auxiliary Power Consumption (உள் பயன்பாட்டு மின்சாரம்) நிலக்கரி மின் நிலையங்களில், பழுப்பு நிலக்கரி மின் நிலையங்களை விட குறைவாக இருக்கும்.

210 MW மின்சாரம் உற்பத்தி செய்ய:

  • பழுப்பு நிலக்கரி (Lignite) சுமார் 200 டன் / மணி தேவைப்படும்.
  • நிலக்கரி (Coal) சுமார் 140 டன் / மணி தேவைப்படும்.

பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தும் பாய்லர்களின் அளவு பெரியதாக இருக்கும். அதனால் அதன் கட்டுமானச் செலவு சுமார் 30% அதிகமாகும்.வட இந்தியாவிலிருந்து நிலக்கரி கப்பல் மற்றும் ரயில் மூலம் மேட்டூர் மின் நிலையத்திற்கும், கப்பல் மூலம் எண்ணூர், வட சென்னை, தூத்துக்குடி மின் நிலையங்களுக்கும் கொண்டு வரப்படுகிறது.

மழைக்காலங்களில் நிலக்கரியை கொண்டு வருவது சிரமமாக இருக்கும். அதை கொண்டு வர அதிக நாட்கள் ஆகும். அதனால் முன்கூட்டியே அதிக அளவில் கையிருப்பாக வைத்திருக்க வேண்டும்.

நிலக்கரி பாய்லர்களில் பழுப்பு நிலக்கரியை பயன்படுத்த முடியாது.

வட இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதும் சிரமமாகும். மேலும், Transmission Loss (மின்சார இழப்பு) அதிகமாக இருக்கும்.

எனவே Pithead Power Plant (எரிபொருள் கிடைக்கும் இடத்திற்கு அருகில் அமைக்கப்படும் மின் நிலையம்) அமைப்பதே சிறந்ததாக கருதப்படுகிறது.

எனினும், இரண்டு முறைகளிலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் உற்பத்தி செலவை (Cost of Production) கணக்கிட்டு, குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறைக்கு தான் அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் நெய்வேலியில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி அதற்கருகில் அனல் மின் நிலையம் அமைப்பது மிகவும் பொருளாதார ரீதியாகச் சிறந்ததாகும்.

மேலும், நெய்வேலியில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதும் சிரமமாகும். அதுவும் ஒரு முக்கியமான காரணமாகும்.

நெய்வேலி நிறுவனம் தொடங்கப்பட்ட போது, அங்கு நிலத்தடியில் சுமார் 150 அடி ஆழத்தில், சுமார் 30 அடி தடிமனுடன் பழுப்பு நிலக்கரி இருப்பது உறுதியாக கண்டறியப்பட்டது.

அந்த நிலக்கரி ஒரு நீர்ப்படுகையில் மூழ்கியிருப்பதும் கண்டறியப்பட்டது. அந்த நீரை பம்ப் செய்து வெளியேற்றினால் மட்டுமே நிலக்கரியை தோண்டி எடுக்க முடியும் என்பது தெரிந்தது. மேலும், அந்த நீரை மின் நிலையங்களை இயக்குவதற்குப் பயன்படுத்த முடியும் என்பதும் அறியப்பட்டது.

அத்துடன், Clay (பீங்கான் மண்) எனப்படும் மண்ணும் அங்கு கிடைத்தது. அதை சுத்திகரித்து Insulator மற்றும் Ceramic பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு வழங்கலாம் என்பதும் கண்டறியப்பட்டது.

நெய்வேலியில் திறந்தவெளி சுரங்கம், (Open cast mines) அனல் மின் நிலையம் (Thermal power station) யூரியா தொழிற்சாலை (Urea factory), பிராசஸ் ஸ்டீம் பிளேண்ட் (Process Steam plant), கரிக்கட்டி தொழிற்சாலை (Briquetting and Carbonization Plant) கிளே வாஷிங் பிளேண்ட் (Clay washing plant) போன்ற உற்பத்திப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் சர்வீஸ் பிரிவுகளாக சென்ட்ரல் ஒர்க் ஷாப்எரக்க்ஷன் யார்டு,   ஆட்டோ யார்டுஐசி ஷாப்பெல்ட் ரீகண்டிஷனிங் பிளேண்ட்,   கிராளர் யார்டுசென்ட்ரல் எலக்ட்ரிக்கல் ரிப்பேர் ஷாப்பயிற்சி    வளாகங்கள் போன்றவையும் தொடங்கப்பட்டன.

சென்டிரல் எலக்ரிசிட்டி அத்தாரிட்டி (CEA) ஒரு அனல் மின் நிலைய   பயிற்சி நிலையத்தை (NPTI) நெய்வேலியில் அமைத்துள்ளது.

பிற்காலத்தில் யுரியா பிளேண்ட்பி&சி பிளேண்ட்கிளே வாஷிங்   பிளேண்ட்பிராசஸ் ஸ்டீம் பிளேண்ட் போன்றவை மூடப்பட்டன.

யூரியா பிளேண்டில் தான் ஒரு காலத்தில் புகழ் பெற்ற "நெய்வேலி   யூரியாஉற்பத்தி செய்யப்பட்டதுமுதலில் பழுப்பு நிலக்கரியில்   இருந்தும் பின்னர் எண்ணெயிலிருந்தும் யூரியா தயாரிக்கப்பட்டது.

B&C Plant ல் இருந்து "Leco" என்ற கரிக்கட்டி தயாரிக்கப்பட்டதுஅது வீட்டு   சமையல் அடுப்புக்கும் வறுகடலை போன்ற சிறு   தொழிற்சாலைகளுக்கும் பயன் பட்டது.

இந்த இரண்டு கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் தேவையான   நீராவியை பிராசஸ் ஸ்டீம் பிளேண்ட் தயாரித்ததுஅந்த ஸ்டீமில்   இருந்து சிறிய அனல் மின் நிலையமும் (3X6MW என்று நினைக்கிறேன்இயங்கியது.

சுரங்கத்தின் கடிய மண்ணை (Hard soil) அகற்ற கன்வன்ஷனல் சுரங்க மிஷின்கள் சரியாக செயல்பட   வில்லைஎனவே ஸ்பெஷலைஸ்டு சுரங்க மிஷின்கள் (BWE)   பயன்படுத்தப் பட்டனஅதன் பின் நிலக்கரி எடுப்பது அதிகரித்தது.

நெய்வேலி நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்காக ஒரு புதிய   குடியிருப்பு கட்டப்பட்டதுஅதில் கடைகள்பள்ளிகள், (ஜவஹர்கல்லூரிமருத்துவமனைஉணவகங்கள், (அமராவதிதிரையரங்கம்திருமண மண்டபங்கள், விளையாட்டு   அரங்கம்பூங்காக்கள்நகர பேருந்து போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன.

அனல் மின் நிலையங்களிலும் சப் ஸ்டேஷன்களிலும் பெரிய பெரிய   ட்ரான்ஸ்பார்மர்கள் (Transformers) இருப்பதை கவனித்திருக்கலாம்.   அவை எதற்கு உள்ளன என்று தெரியுமா?

அனல் மின் நிலையங்களில் சுமார் 15.75KV மின்சாரத்தை ஜெனரேட்டர்கள் உற்பத்தி செய்தாலும் அதை ட்ரான்ஸ்மிஷன் லாஸை (transmission loss) குறைக்க 220KV அல்லது 400KV ஆக ஸ்டெப் அப் (step up) செய்து மின்சார கம்பிகளில் பல்வேறு ஊர்களில் உள்ள சப்   ஸ்டேஷன் (substation) எனப்படும் மின்மாற்றி நிலையங்களுக்கு   அனுப்புகிறார்கள்.

அங்கு அந்த மின்சாரம் 33KV மற்றும் 11KV ஆக ஸ்டெப் டவுன் செய்து   ஒவ்வோரு ஊரிலும் உள்ள துணை மின் நிலையங்களுக்கு (11/0.4KV transformer) அனுப்புகிறார்கள்அங்கிருந்து வீடுகளுக்கும்,   விவசாயத்துக்கும்தெரு விளக்குகளுக்கும் (415V) மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது



 மின்சாரம் – இன்சுலேட்டர் மற்றும் ட்ரான்ஸ்பார்மர் 

ட்ரான்ஸ்பார்மரில் Primary winding மற்றும் Secondary winding இருக்கும். மின்சாரம் இருக்கிறது—தொட்டால் ஷாக் அடிக்கும் என்று எல்லோரும் சொல்வார்கள். அப்படியிருக்க, அந்த மின்சாரத்தை எப்படி பாதுகாப்பாக எல்லா ஊர்களுக்கும் அனுப்ப முடிகிறது?

அதற்கான பதில் — Insulators (இன்சுலேட்டர்கள்).

மின்சாரத்தை கம்பங்கள் (lines) மற்றும் டவர்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்ப, மின்சாரம் வெளியே கசியாமல் தடுக்க பயன்படும் பொருட்கள்தான் இன்சுலேட்டர்கள்.

நாம் குளிரில் கம்பளி போர்த்துவது, ஸ்வெட்டர் அல்லது தெர்மல் வேர் அணிவது போல, அவை உடல் வெப்பத்தை வெளியேறாமல் தடுக்கின்றன. அதுபோல, மின்சார இன்சுலேட்டர்கள் மின்சார ஓட்டத்தை தடுக்கின்றன.

ஸ்விட்ச் யார்டு (Switchyard)

சாலையில் செல்லும் போது “Switchyard” அல்லது மின்சார பங்கீட்டு நிலையத்தை பார்த்திருப்போம். அங்கு பல வடிவங்களில் இருக்கும் பொருட்கள்—all are electrical insulators.

மின்சார அமைப்பில் உள்ள பல கருவிகளில் இன்சுலேட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன:

  • CVT (Capacitive Voltage Transformer)
  • CT (Current Transformer)
  • Circuit Breaker
  • Lightning Arrestor
  • Isolator
  • Wave Trap
  • Bushing Insulator

இவை அனைத்திலும் மின்சாரத்தை கட்டுப்படுத்தவும் பாதுகாக்கவும் இன்சுலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நாம் வீட்டில் பயன்படுத்தும் வயர்களின் மேல் இருக்கும் plastic cover, switch-ன் button மற்றும் outer cover கூட இன்சுலேட்டர்கள்தான்.

🔥 Heat Insulator vs Electrical Insulator

குக்கரில் இருக்கும் கைப்பிடி (handle) heat insulator ஆகும். அது வெப்பத்தை கடத்தாமல் தடுக்கிறது. அதைப் போலவே, electrical insulator மின்சாரத்தை கடத்தாமல் தடுக்கிறது.

🏭 Insulator Manufacturing

சென்னையில் உள்ள WS Industries போன்ற தொழிற்சாலைகள் பல வகையான மின்சார இன்சுலேட்டர்களை உற்பத்தி செய்கின்றன. 

⚡ ட்ரான்ஸ்பார்மர் என்றால் என்ன?

மின்சாரத்திற்கு மூன்று முக்கியமான அளவுகள் (parameters) உள்ளன:

  • Voltage (வோல்டேஜ்)
  • Current (கரண்ட்)
  • Frequency (ப்ரீக்வென்சி)

இந்த மூன்றும் சேர்ந்ததே மின்சாரம்.

இந்தியாவில் பொதுவாக:

  • 50 Hz frequency
  • 415V (3-phase)
  • 220V (single-phase)

பயன்படுத்தப்படுகிறது.

மின்சார பயன்பாட்டை அளவிட:

  • Voltage → Voltmeter
  • Current → Ammeter
  • Energy → Energy Meter 

🔄 Transformer Working

Transformer என்பது voltage-ஐ மாற்றும் கருவி.

அதன் விதி:

Primary turns / Secondary turns = Primary voltage / Secondary voltage

மேலும்,

Primary power ≈ Secondary power
(Vp × Ip ≈ Vs × Is)

சிறிய வித்தியாசங்கள் losses காரணமாக இருக்கும். பெரிய வித்தியாசம் வந்தால் அது fault எனக் கருதப்படும்.

அப்போது Differential Protection செயல்படும்.

🌡️ Cooling System

ட்ரான்ஸ்பார்மரில் உள்ள winding கள் வெப்பம் உருவாக்கும். அதை குளிர்விக்க:

  • Oil (Transformer oil) பயன்படுத்தப்படுகிறது
  • Oil fins (cooling radiators) மூலம் குளிர்கிறது

பெரிய ட்ரான்ஸ்பார்மர்களில்:

  • OFAF (Oil Forced Air Forced) system
  • Cooling fans
  • Oil pumps

பயன்படுத்தப்படும்.

⚠️ Protection – Buchholz Relay

Transformer உள்ளே:

  • Spark அல்லது Short Circuit ஏற்பட்டால்
  • Gas உருவாகும்

அந்த gas அதிகரித்தால்:

  • Buchholz Relay முதலில் alarm கொடுக்கும்
  • கவனிக்காவிட்டால் transformer trip ஆகும் (supply cut) 

பெரிய தீ விபத்து என்றால் அந்த ரிலே வழியாக எண்ணெய் வெளியில் வந்துவிடும்அப்போது ட்ரான்ஸ்பார்மரின் கீழ், "ஆயில் கலெக்க்ஷன் பிட்என்ற பள்ளத்தில் எண்ணெய் கலெக்ட் ஆகும்மல்சிபயரின் குவார்ட்ஸ் பல்பு உடைந்து அதனால் (Multifare) டிலூட்ஜ்  (deluge) வால்வு திறந்து அதிக அழுத்த தண்ணீர் ட்ரான்ஸ்பார்மர்   முழுவதும் ஸ்பிரே (sprinkler) ஆகும்

சில ட்ரான்ஸ்பார்மர்களில் OLTC எனப்படும் வோல்ட்டேஜை அட்ஜஸ்ட் செய்யும் கருவியும் இருக்கும்.

Power Transformer & Distribution Transformer are for supplying power while Potential Transformer, Current Transformer are used for measurement and protection purpose.

There two types of transformers. They are Oil type and dry type. Oil type transformers are located outside the building while dry type transformers are installed inside the building or inside the panels.

Differential protection is the main protection provided for the power transformers. Oil circulation and oil testing is to be done regularly to increase the BDV value and to check the quality of the oil.

The (BDV) breakdown voltage of the transformer oil is the maximum voltage at which the oil act as a purely insulator. If the voltage is increased above the BDV of the oil, the current flows through the oil and oil no more behaves as an insulator. As per IEC, the BDV of transformer oil is 30 KV/mm

தெரு முனையிலோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பிலோ உள்ள ட்ரான்ஸ்பார்மர், கேபில்கள், ஐசொலேட்டர்கள், பியூஸ்கள், எர்த் பிட் (Earth pit)போன்றவற்றை கவனித்திருக்கிறீர்களா? 


WS Insulators, Cable Corporation of India, ABB breaker, ABB Motors, Siemens Motors, S&S Isolators, TELK  Transformer, Ansaldo Generator, Ansaldo HT motor போன்ற தொழிற்சாலைகளுக்கு போய் உற்பத்தி செய்வதை பார்த்துள்ளேன். Test ம் செய்வதை பார்த்துள்ளேன்.

நெய்வேலியின் கதை – 2

நெய்வேலி நிறுவனத்தை ஆரம்பித்த காலத்தில், பூமியின் அடியில் சுமார் 150 அடி ஆழத்தில், சுமார் 30 அடி தடிமனில் பழுப்பு நிலக்கரி (Lignite) இருப்பது உறுதியாக கண்டறியப்பட்டது.

B & C Plant-இல் இருந்து “Leco” என்ற கரிக்கட்டி தயாரிக்கப்பட்டது. இது வீட்டு சமையல் அடுப்புகளுக்கும், வறுகடலை போன்ற சிறு தொழிற்சாலைகளுக்கும் மிகவும் பயன்பட்டது.

இந்த இரண்டு கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் தேவையான நீராவியை (Steam) “Process Steam Plant” தயாரித்தது. அந்த நீராவியை பயன்படுத்தி ஒரு சிறிய அனல் மின் நிலையமும் இயங்கியது. அது சுமார் 3 × 6 MW திறன் கொண்டதாக இருந்தது.

சுரங்கத்தில் இருந்த கடினமான மண்ணை (Hard Soil) அகற்ற வழக்கமான சுரங்க இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. அதனால் BWE (Bucket Wheel Excavator) என்ற சிறப்பு சுரங்க இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகு நிலக்கரி உற்பத்தி அதிகரித்தது.

நெய்வேலி நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்காக ஒரு புதிய குடியிருப்பு நகரம் உருவாக்கப்பட்டது. அந்த நகரத்தில்:

  • கடைகள்
  • பள்ளிகள்
  • ஜவஹர் கல்லூரி
  • மருத்துவமனை
  • உணவகங்கள்
  • அமராவதி திரையரங்கம்
  • திருமண மண்டபங்கள்
  • விளையாட்டு அரங்கம்
  • பூங்காக்கள்
  • நகர பேருந்து வசதி

போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டன.

ட்ரான்ஸ்பார்மர் ஏன் தேவையாம்?

அனல் மின் நிலையங்களிலும் சப்-ஸ்டேஷன்களிலும் பெரிய பெரிய ட்ரான்ஸ்பார்மர்கள் (Transformers) இருப்பதை நாம் கவனித்திருக்கலாம். அவை எதற்காக பயன்படுத்தப்படுகின்றன?

அனல் மின் நிலையங்களில் ஜெனரேட்டர்கள் சுமார் 15.75 KV மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. ஆனால் மின்சாரத்தை தொலைதூர ஊர்களுக்கு அனுப்பும்போது transmission loss குறைய வேண்டும். அதற்காக அந்த மின்சாரம் 220 KV அல்லது 400 KV ஆக Step-Up செய்து மின் கம்பிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

இந்த மின்சாரம் பல ஊர்களில் உள்ள Substation எனப்படும் மின்மாற்றி நிலையங்களுக்கு செல்கிறது. அங்கு அந்த மின்சாரம்:

  • 33 KV
  • 11 KV

ஆக Step-Down செய்யப்படுகிறது.

பின்னர் அது ஒவ்வொரு ஊரிலும் உள்ள 11/0.4 KV Transformer மூலம்:

  • வீடுகள்
  • விவசாயம்
  • தெரு விளக்குகள்

போன்றவற்றுக்கு 415 Volt / 220 Volt மின்சாரமாக வழங்கப்படுகிறது.


கரண்ட் ஷாக் அடிக்காமல் எப்படி அனுப்புகிறார்கள்?

“கரண்டு இருக்கு, தொட்டுடாதே, ஷாக் அடிக்கும்!” என்று அனைவரும் சொல்வார்கள். அப்படியிருக்க, அந்த மின்சாரத்தை எப்படி எல்லா ஊர்களுக்கும் பாதுகாப்பாக அனுப்ப முடிகிறது?

அதற்கு பயன்படும் பொருள் தான் இன்சுலேட்டர்கள் (Insulators).

நாம் குளிர்காலத்தில்:

  • கம்பளி போர்த்துகிறோம்
  • ஸ்வெட்டர் அணிகிறோம்
  • வட இந்தியாவில் தெர்மல் வேர் அணிகிறார்கள்

இவை எல்லாம் உஷ்ணத்தை தடுக்கும் பொருட்கள்.

அதேபோல் மின்சாரத்தை கடத்தாமல் தடுக்க பயன்படும் பொருளே மின்சார இன்சுலேட்டர்.

ஸ்விட்ச் யார்டு

சாலையில் செல்லும்போது Switch Yard எனப்படும் மின்சார பங்கீட்டு நிலையங்களை பார்த்திருப்போம். அவற்றை கவனமாக பார்த்தால் பலவிதமான மின்சார உபகரணங்கள் இருப்பதை காணலாம்.

சென்னையில் உள்ள WS Industries என்ற தொழிற்சாலையில் பல்வேறு வகையான மின்சார இன்சுலேட்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

ட்ரான்ஸ்பார்மர் என்றால் என்ன?

மின்சாரத்திற்கு மூன்று முக்கிய பண்புகள் உள்ளன:

  • Voltage (வோல்ட்டேஜ்)
  • Current (கரண்ட்)
  • Frequency (ப்ரீகுவென்சி)

இந்த மூன்றும் சேர்ந்ததே மின்சாரம்.

நமது நாட்டில் பொதுவாக:

  • 50 Hz Frequency
  • 415 Volt (3 Phase)
  • 220 Volt (Single Phase)

மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

மின்சார பயன்பாட்டை அளவிட:

  • Voltmeter – வோல்ட்டேஜ் அளக்கும்
  • Ammeter – கரண்ட் அளக்கும்
  • Energy Meter – பயன்படுத்திய மின்சாரத்தை அளக்கும் 

ட்ரான்ஸ்பார்மரின் செயல்

ட்ரான்ஸ்பார்மரின் முக்கிய பணி மின்சாரத்தின் வோல்ட்டேஜை மாற்றுவது ஆகும்.

அதன் விதி:

Primary Winding Turns : Secondary Winding Turns
= Primary Voltage : Secondary Voltage

மேலும்,

Primary Voltage × Primary Current
= Secondary Voltage × Secondary Current

இந்த சமன்பாட்டில் வேறுபாடு ஏற்பட்டால் அது Fault என கருதப்படும். அப்போது Differential Protection செயல்பட்டு ட்ரான்ஸ்பார்மரை பாதுகாக்கும்.

ட்ரான்ஸ்பார்மர் குளிர்ச்சி அமைப்பு

ட்ரான்ஸ்பார்மர் வைண்டிங்கில் உஷ்ணம் அதிகமாகும். அதனை குளிர்விக்க Transformer Oil பயன்படுத்தப்படுகிறது.

அந்த எண்ணெய் Fins / Cooling Coils வழியாகச் சுழன்று குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பெரிய ட்ரான்ஸ்பார்மர்களில்:

  • Cooling Fans
  • Oil Pumps

போன்ற அமைப்புகள் இருக்கும். இதை OFAF Cooling System என்று அழைக்கின்றனர்.

வைண்டிங்கில் Short Circuit அல்லது Spark ஏற்பட்டால் Gas உருவாகும். அதனை கண்டறிந்து ட்ரான்ஸ்பார்மரை பாதுகாக்கும் பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன.

இன்சுலேட்டர்களின் பயன்பாடு

மின்சார அமைப்புகளில் பல இடங்களில் இன்சுலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக:

  • CVT
  • CT
  • Circuit Breaker
  • Lightning Arrestor
  • Isolator
  • Wave Trap
  • Bushing Insulator

போன்ற அனைத்து மின்சார உபகரணங்களிலும் இன்சுலேட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வீட்டில் உள்ள மின்கம்பியை சுற்றியிருக்கும் பிளாஸ்டிக் கவர், லைட் ஸ்விட்சின் பட்டன் மற்றும் கவர் ஆகியவையும் மின்சார இன்சுலேட்டர்களே.

ஒரு எளிய உதாரணம்

குக்கரில் இருக்கும் கைப்பிடி பொதுவாக கடினமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்கும். அது வெப்பத்தை கடத்தாமல் தடுக்கிறது. அதனால் நாம் அதை பிடித்தாலும் கை சுடாது.

அதேபோல் மின்சார இன்சுலேட்டர்கள் மின்சாரத்தை கடத்தாமல் தடுக்கின்றன.

இவ்வாறு மின்சாரத்தையும் வெப்பத்தையும் தடுக்க பயன்படும் பொருட்கள் அனைத்தும் இன்சுலேட்டர்கள் ஆகும்.

சிந்திக்க வேண்டிய சமூக நோக்கு

இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி நடந்தாலும், அதற்கான தெளிவான சமூக சித்தாந்தம் அரசியலில் குறைவாகவே உள்ளது.

மகாத்மா காந்தியின் சிந்தனை:

“வளரும் விஞ்ஞானத்தை இயற்கையை பாதிக்காமல் பயன்படுத்த வேண்டும்.”

அவர் முன்வைத்த முக்கிய கருத்து:

ஒரு இயந்திரம் 100 பேரின் வேலையை செய்தால், அந்த 100 பேரும் வேலை இழக்கக் கூடாது; அவர்கள் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக மாற்றப்பட வேண்டும்.

இது ஒரு ஆழமான, சமத்துவ சிந்தனை.  

நிலக்கரி பாய்லரில் பழுப்பு நிலக்கரியை பயன்படுத்த முடியாது 

மின்சாரமாக உற்பத்தி செய்து வடவிந்தியாவிலிருந்து கொண்டு   வருவது சிரமம். Transmission Loss ம் அதிகம் 

எனவே பிட்ஹெட் பவர் பிளேண்ட் (Pithead power plant)  தான் விரும்பத் தக்கது 

எனினும் இரண்டு வகைகளிலும் உற்பத்தி செய்யப்படும்   மின்சாரத்தின் விலையை (Cost of production) பார்த்து எது விலை குறைவோ அதற்கு தான் அனுமதி   தருகிறார்கள் 

அதன்படி பார்க்கும் போது தமிழ் நாட்டில் நெய்வேலியில் (Lignite  filled) கிடைக்கும் பழுப்பு நிலக்கரியை கொண்டு அதன் அருகில்   அனல் மின் நிலையம் அமைப்பது மிகவும் எக்கனாமிக்கானது 

நிலக்கரி ஒரு தண்ணீர் படுகையில் மூழ்கியிருப்பது தெரிந்ததுஅந்த தண்ணீரை பம்ப் செய்தால் தான் நிலக்கரியை தோண்டி எடுக்க   முடியும் என்பது தெரிந்ததுஅந்த தண்ணீரை மின் நிலையத்தை   இயக்குவதற்கு போதுமானது என்பது தெரிந்தது 

அத்துடன் Clay எனப்படும் பீங்கான் மண்ணும் கிடைத்ததுஅதையும்  எடுத்து சுத்தம் செய்து Insulator மற்றும் ceramic பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளுக்கு கொடுக்கலாம் என்பதும் தெரிந்தது 

நெய்வேலியில் திறந்தவெளி சுரங்கம், (Open cast mines) அனல் மின் நிலையம் (Thermal power station) யூரியா தொழிற்சாலை (Urea factory), பிராசஸ் ஸ்டீம் பிளேண்ட் (Process Steam plant), கரிக்கட்டி தொழிற்சாலை (Brequitting and Corbonisation Plant) கிளே வாஷிங் பிளேண்ட் (Clay washing plant) போன்ற உற்பத்திப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன 

அதன் சர்வீஸ் பிரிவுகளாக சென்ட்ரல் ஒர்க் ஷாப்எரக்க்ஷன் யார்டு,  ஆட்டோ யார்டுஐசி ஷாப்பெல்ட் ரீகண்டிஷனிங் பிளேண்ட்கிராளர் யார்டுசென்ட்ரல் எலக்ட்ரிக்கல் ரிப்பேர் ஷாப்பயிற்சி வளாகங்கள் போன்றவையும் தொடங்கப்பட்டன 

சென்டிரல் எலக்ரிசிட்டி அத்தாரிட்டி (CEA) ஒரு அனல் மின் நிலைய   பயிற்சி நிலையத்தை (NPTI) நெய்வேலியில் அமைத்துள்ளது 

பிற்காலத்தில் யுரியா பிளேண்ட்பி&சி பிளேண்ட்கிளே வாஷிங்   பிளேண்ட்பிராசஸ் ஸ்டீம் பிளேண்ட் போன்றவை மூடப்பட்டன 

யூரியா பிளேண்டில் தான் ஒரு காலத்தில் புகழ் பெற்ற "நெய்வேலி   யூரியாஉற்பத்தி செய்யப்பட்டதுமுதலில் பழுப்பு நிலக்கரியில்   இருந்தும் பின்னர் எண்ணெயிலிருந்தும் யூரியா தயாரிக்கப்பட்டது 

நெய்வேலி பழுப்பு நிலக்கரியை வேறு இடத்துக்கும் கொண்டு செல்லவும் முடியாதுஅது ஒரு சிக்கல் ஆகும்  




அணு மின்சாரம் – ஒரு பார்வை

இந்தியாவில்:

  • சுமார் 2% மட்டுமே அணு மின்சார உற்பத்தி

ஆனால்:

  • அணு உலைகள் பெரும்பாலும் செழிப்பான நீர் வளப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன
  • இது:
    • நில வளம்
    • நீர் வளம்
    • நுண்ணுயிர்கள்
      இவற்றை பாதிக்கும் அபாயம் கொண்டது

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் சோலார் எனர்ஜியை அதிகம் பயன்படுத்துகிறது காற்றாலை சக்தியும்  சோலார் சக்தியும் 60 சதவீதம் அளவுக்கு ஏற்றி விட்டால் மின்சாரத் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் வராது

நுகர்வோர் ஒரு காலத்தில் மின்சாரம் இல்லாத கிராமங்கள் இருந்தது இன்று கணினி வந்துவிட்டது பயன்பாடு அதிகம் ஆனால் இங்கே உற்பத்தியான செலவுக்கு இணையான தொகையை குடிமக்களிடம் வசூலிக்க முடியாது அதற்காகத்தான் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கப்படுகிறது அதிகம் பயன்படுத்தப்படும் மால்கள் ஒர்க் ஷாப் தியேட்டர் போன்றவைக்கு அதிகமாக வசூலித்து அதை இதில் சரி செய்வார்கள்




நுகர்வோர் ஒரு காலத்தில் மின்சாரம் இல்லாத கிராமங்கள் இருந்தது இன்று கணினி வந்துவிட்டது பயன்பாடு அதிகம் ஆனால் இங்கே உற்பத்தியான செலவுக்கு இணையான தொகையை குடிமக்களிடம் வசூலிக்க முடியாது அதற்காகத்தான் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கப்படுகிறது அதிகம் பயன்படுத்தப்படும் மால்கள் ஒர்க் ஷாப் தியேட்டர் போன்றவைக்கு அதிகமாக வசூலித்து அதை இதில் சரி செய்வார்கள்




Lion Raja Ganesan 







Comments

Popular posts from this blog

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

தேர்தல் வரலாறு

Language, Communication, and the Story of Migration