சமூகவியல், சாதிய கட்டமைப்பு , Lion Raja Ganesan


 இன்றைக்கு சனாதன ஒன்றிய பா.. அரசு மூலம்

இப்போது 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஸனாதனத் திட்டத்தை அறிவித்து, 'அவர்களுக்கான குலத் தொழிலை ஊக்குவிப்போம்' என அறிவித்திருக்கிறது.

மீண்டும் அனைவருக்குமான கல்வியை மறுத்து, முன்னேற விடாமல் தடுப்பதற்கு , இந்த மாதிரியான சனாதன திட்டத்தை அறிவித்திருக்கிறது சனாதன ஒன்றிய பா.. அரசு "சனாதனத்தை ஒழிப்போம்!" 



பீட்டர் எல். பெர்கர் என்பவர் மதம் பற்றி ஆழமாக ஆய்வு செய்த ஒரு பெரிய சமூகவியலாளர். அவர் சொல்வது என்னனா
மதம் என்பது கடவுள் கொடுத்த ஒன்று இல்லை; மனிதன் தானே உருவாக்கிக்கொண்ட ஒருஉலகை புரிந்து கொள்ளும் முறை”.

1. மதம் ஏன் உருவானது?

மனித வாழ்க்கை குழப்பமாக இருக்கிறது.
பிறப்பு, மரணம், துன்பம், சந்தோஷம்எல்லாமே புரியாத விஷயங்கள்.

இந்த குழப்பத்துக்கு ஒரு ஒழுங்கு (order) கொடுக்க மனிதன் மதத்தை உருவாக்கினான்.
மதம் உலகை ஒருபுனித குடை” (Sacred Canopy) மாதிரி மூடி,
இதுதான் வாழ்க்கை”, “இதுதான் உண்மை”, “இப்படி தான் வாழ வேண்டும்என்று அர்த்தம் கொடுக்கிறது.

2. சமூகம் எப்படி உருவாகிறது?

பெர்கர் சொல்வது:

முதலில் மனிதன் சில நம்பிக்கைகள் உருவாக்குகிறான் (புறவயமாக்கல்)

அது சமூகம் முழுக்க ஏற்றுக்கொள்ளப்படுகிறது (புறநிலைப்படுத்துதல்)

பிறகு அந்த நம்பிக்கையை ஒவ்வொருவரும் உள்ளே எடுத்துக்கொள்கிறார்கள் (அகவயமாக்கல்)

இந்த முழு செயலிலும் மதம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
அது சமூக ஒழுங்குக்குதெய்வீக முத்திரைபோடுகிறது.

3. நவீன உலகில் மதம் எப்படி மாறியது?

முன்னாடி ஒரு ஊரில் ஒரு மதம் தான். எல்லாரும் அதையே பின்பற்றுவார்கள்.
ஆனா இப்போ உலகம் மாறிவிட்டது.

பல மதங்கள், பல கருத்துகள், பல நம்பிக்கைகள்.

இப்போ மக்கள்:

என் அப்பா பின்பற்றின மதம்என்பதற்குப் பதிலாக
எனக்கு பிடித்த மதம்என்று தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இதனால் மதங்கள்சந்தை போட்டிமாதிரி மாறிவிட்டது.

4. பெர்கரின் கருத்து மாறியது

1960களில் அவர் நினைத்தார்:

நவீன உலகில் மதம் மெதுவாக குறைந்து போய்விடும்.

ஆனா 1990க்கு பிறகு அவர் சொன்னார்:

நான் தவறாக நினைத்தேன். உலகம் இன்னும் மதத்தில் தான் இருக்கிறது.”

மேற்கு நாடுகள் கொஞ்சம் மதச்சார்பற்றதாக இருந்தாலும்,
மீதமுள்ள உலகம் இன்னும் தீவிரமாக மதத்தை பின்பற்றுகிறது.

இதையே அவர்மதச்சார்பின்மை நீக்கம்” (Desecularization) என்று சொன்னார்.

5. மதம்அடையாளம்

உலகம் முழுக்க மனிதர்களை மத அடையாளத்தின் மூலம் தான் அடையாளப்படுத்துகிறார்கள்:

இந்தியாஇந்து, முஸ்லீம், கிறித்தவர், பௌத்தர், சிக்கள்.

மற்ற நாடுகளிலும் அதே நிலை.

மதம் என்பது:

ஒரு கருத்தியல் அமைப்பு

ஒரு அடையாள அமைப்பு

இரண்டும் சேர்ந்து மனிதனை வழிநடத்துகிறது, சில நேரங்களில் ஆட்டிப்படைக்கவும் செய்கிறது.

6. அரசு & மதம்

பெரிய அளவில் மனிதனை கட்டுப்படுத்தும் இரண்டு அமைப்புகள்:

அரசுஅரசியல் தளத்தில்
மதம்பண்பாட்டு தளத்தில்

அரசு உருவாகும் முன்பே மதம் மனிதனை நெறிப்படுத்திக் கொண்டிருந்தது.

மதம் இல்லாமல் இருந்திருந்தால்,
இன்றைய மாதிரி ஒழுங்கான சமூகம் உருவாகி இருக்குமா? என்பது கேள்வி.

7. மதம் தேவையா?

இந்த கேள்விக்கு நேரடி பதில் இல்லை.

ஆனா ஒரு உதாரணம்:

ஒருவனுக்கு பேய் பிடித்திருக்கிறதுஎன்று அவன் நம்பினால்,
பேய் ஓட்டுபவன்கூட உருவாகிவிடுகிறான்
.

அதாவது, நம்பிக்கை இருக்கிற இடத்தில் அதற்கான அமைப்பும் உருவாகும்.

8. இந்தியாவின் தனித்தன்மை

இந்தியாவை சுற்றி இருக்கும் பல நாடுகள் ஒரு மதத்தை சார்ந்த நாடுகள்.
ஆனா இந்தியா மட்டும் மதச்சார்பற்ற நாடு.

இதற்கு காரணம்:

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டம்.

அதனால் தான் இந்தியாவில் எல்லா மதத்தினரும் சமமாக வாழும் உரிமை பெற்றுள்ளனர்.

சுருக்கமாக சொன்னால்:

மதம் என்பது கடவுள் கொடுத்தது இல்லை.
மனிதன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க உருவாக்கிய ஒரு பெரிய அமைப்பு.

அது மனிதனை வழிநடத்துகிறது.
சமூகத்தை ஒழுங்குபடுத்துகிறது.
அதே நேரத்தில் மனிதனை கட்டுப்படுத்தவும் செய்கிறது.

https://openwa.pressbooks.pub/tccsoc101/chapter/__unknown__/

 



ஒரு நாளில் மும்பையில் மட்டும் பல லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்கிறார்கள் யாரையும் யாருக்கும் தெரியாது சமூகம் என்பது சேர்ந்து வாழும் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டுமே அறிமுகமானவர்கள்

முதன்முதல் ஆங்கிலேயரின் ரயில் வண்டி விட்டபோது

கரகரவென சக்கரம் சுழல கரும்புகையோடு வருகிற ரயிலே

கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே

ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே  

மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.

எங்க ஊர் என் எஸ் கிருஷ்ணன் பாடினார் ,

காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த போது ஆங்கிலேயரை எதிர்த்து அகிம்சை வழியில் தென் ஆப்பிரிக்காவில் சில வெற்றிகளை பெற்றிருந்ததால் இந்திய காங்கிரசுக்கு தலைமை ஏற்க எல்லோரும் சேர்ந்து அவரை வற்புறுத்தினார்கள்,

காந்தி உடனே அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக இரண்டு ஆண்டுகள் மரப்பலகைகள் மட்டுமே இருந்த ரயிலில் பயணம் செய்தார்,

நுட்பமாக ஒன்றை கவனித்தார் மூன்று ரயில் நிறுத்தங்கள் வரை தான் சமூகம் அதாவது ஜாதி இறுக்கமாக இருக்கிறது அதற்குப் பிறகு யாருக்கும் யாரையும் தெரிவதில்லை குறிப்பாக ஒரு ரயில் நிலையத்தில் ஏறுபவர் எல்லாம் ஒரே மாதிரி இருப்பார்கள் கூடை நிறம் உணவு எந்த ஊர் யாருடைய மகன் என்று கேட்டு அவருடைய ஜாதிகளை கண்டுபிடிக்க முடியும் மூன்று ரயில் நிறுத்தங்களை தாண்டி விட்டாள் யாரையும் எந்த ஜாதிக்காரன் என்று கண்டுபிடிக்க முடியாது,

அதில் நுட்பமாக காந்தி ஜாதி என்பது அவனவன் மூளைக்குள்ளே புகுத்தப்பட்டிருக்கிறது அதிலிருந்து வெளியேற்ற வேண்டியது நம்முடைய கடமை என்றார் இதுதான் அம்பேத்கருக்கும் காமராசருக்கும் பிணக்கு வந்தது இதில் நான் காந்தி பக்கம் நிற்கிறேன் அவர் குறித்து நம்ம தோழர்களுக்கும் சரியான புரிதல் இல்லை காந்தி அம்பேத்கரை விட சமூகத்தை அறிந்தவர் உடனே எதையும் மாற்ற முடியாது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்


திருநெல்வேலி மாவட்டத்துல "புதிரை வண்ணான்"னு ஒரு சாதி இருக்குறாங்க.சாதி இந்துக்களோட துணிகள வெளுக்குறதுதான் இவங்களோட தொழில்.இந்த வேலைக்கு இவங்களுக்கு கூலியெல்லாம் கிடையாது.தொவச்ச துணிய கரிப் பெட்டியில இஸ்திரி போட்டு டோர்டெலிவரி பண்றப்ப
அரிசியோ,பருப்போ இல்ல, பழைய சாதமோ குடுப்பாய்ங்க அத வெச்சி வயித்த கழுவிக்கனும்.வண்ணான்கள் பொட்டு கறையில்லாம வெளுத்த சொக்காவ மாட்டிட்டு பண்ணையாரு வெளிய திரியிற அதே நேரம் வெள்ளாவி பானையில வெந்த வண்ணான் பகல்ல வூட்ட விட்டு வெளிய வரக்கூடாது!.ஏன்னா;புதிரை வண்ணான் சாதியினர் "பகலில் நடமாட தடை".கடைக்கு போகனும்,கக்கூஸ் போகனும்,காய்ச்ச மாத்திர வாங்கனும்னு எதா இருந்தாலும் மேற்க மறைஞ்ச சூரியன் கிழக்க உதிக்கிறதுக்குள்ள முடிச்சிக்கனும்.இந்த நேரத்துல துணிகளையும் தொவச்சி அடுத்த நாளைக்கு தயாரா வைக்கனும்!.



கர்நாடகா நிலமை!.கர்நாடகாவுல "அன்டீ பொடா"னு ஒரு சாதி.கூடைகள் பின்றதுதான் இவங்களோட தொழில்.இவங்க அங்கிட்டும்,இங்கிட்டும் நடக்குறப்ப ரோட்டுல எச்சி துப்பி அந்த எச்சிய ஒசந்த சாதிக்காரன் மிதிச்சி தீட்டாகாம இருக்க இன்னா பண்ணனும்னா; "அன்டீ பொடா" சாதியை சார்ந்தவர்கள் கழுத்துல கலையத்த கட்டிக்கனும்.


மகாராஷ்ட்ராவுல இன்னும் ஒரு படி மேல போயி,1783ல அப்போதைய மராத்தா அரசாங்கம் ஒரு சட்டமே போட்டுச்சி இன்னானா; "ஹலால் கோர்" ங்குற சாதிகாரங்க காத்தால 9 மணிக்கு மேல வூட்ட விட்டு வெளிய வரக்கூடாது ஏன்னா;இவுங்க விடுற மூச்சு காத்தால காத்து தீட்டாயிருமாம்.அம்புட்டு ஏன் தீண்டதகாவங்களோட "நிழல்" பட்டா சாதி இந்துகளுக்கு தீட்டாயிரும்னும்,தாழ்ந்த சாதிகாரங்க நடக்குறப்ப எழும்புற தூசி பட்டு ஒசந்த சாதிகாரனுக்கு தீட்டாயிரும் அதனால இடுப்புல தொடப்பத்த கட்டிட்டு நடக்கனும்னும் இவனுங்க போட்ட தீண்டாமை,அண்டாமை,

காணாமை,பேசாமை லிஸ்ட்டு கணக்கே இல்லாம நீளுது!

மேலாடை அணிய தடை,சாணிப்பால்,
சவுக்கடி,கரும்புள்ளி செம்புள்ளி,ரெட்டை டம்ளர் முறைனு ஒடுக்கப்பட்ட மக்கள் மேல இம்புட்டு கொடுமையான வன்முறைய நடத்தியிருக்கானுங்களே இதையெல்லாம் எதிர்த்து மக்கள் போராடலையா.



உழைக்கும் மக்களுக்கு ஆயுதங்கள் செய்து கொடுத்தவர்களை மிகவும் கீழ் ஜாதியாகவும், அதே நேரத்தில் மன்னர்களுக்கு போர் கருவிகள் செய்து கொடுத்தவர்களை குறிப்பாக (கொல்லர் இரும்புக்கு கருவிகள்தச்சர் மரக்கருவிகள் இவர்களுக்கு எல்லாம் பூணூல் போட்டு அழகு பார்த்த மன்னர்கள் )

போராட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் "இதெல்லாம் மாத்தவே முடியாது எல்லாம் விதி!"ங்குற மைண்ட் செட்டு மக்களுக்குள்ள ஆழமா ஊறிப் போயிருந்தது!.பத்தாததுக்கு இந்து மதம் இந்த ஒடுக்குமுறைகள கடவுள் பேரால புனித முலாம் பூசி நியாயப்படுத்தவும் செஞ்சிது!."ஒரு அடிமையிடம் சென்று நீ அடிமை எனச் சொல்.அவன் தன் அடிமைத்தனத்துக்கு எதிராக அவன் போராடுவான்"னு அம்பேத்கர் சொல்றாப்புல. ஏன் நான் போயி அவனுக்கு சொல்லனும் அது அவனுக்கே தெரியாதா..!?.சத்தியமா தெரியாது ஏன்னா கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்க முன்னாடியே தோன்றுன மூத்த குடிக்கே "சுய மரியாதை" னா இன்னானு கத்து குடுக்க ஒருத்தர் தேவைபட்டாருங்குறதுதான் யதார்த்தம்!.



ஒட்டுமொத்த இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் 

அவர்கள் மூன்று சதவீதம் இன்றைக்கு இந்தியாவிற்கும் பார்ப்பன சதவீதம் போன்றது தான் ஆனால் அவர்கள் ஒரு முடிவு செய்தார்கள் 

வெள்ளைக்காரன் இந்தியாவில்  வாழ்ந்த காலங்களில் அவர்களுக்கான உடைகளை துவைத்து அழகாக கொடுப்பதற்காக 

மும்பையில் சென்னையில் ,சில பகுதிகளில் துணி துவைக்கும் ஜாதியினரை அவர்கள் பணம் பொருள் கொடுத்து மன்னர்களுக்கு செய்து கொண்டிருந்த சேவைகளை இந்த வெள்ளைக்கார அதிகாரிகள் அவர்களுக்காக செய்து கொள்ள வைத்தார்கள் அப்படித்தான் மும்பையில் இருக்கிற டோபிகாட் சென்னையில் இருக்கிற வண்ணாரப்பேட்டை பெங்களூரிலும் இருக்கிறது இதுதான் உண்மை,



இந்தியாவில் ஜாதி கட்டமைப்பை சனாதன இந்து மதம் இறுகு பிடித்துக் கொண்டது எப்படி என்றால் மன்னர் காலத்தில் மன்னர்களை பயன்படுத்தி இதை எல்லாம் செய்தார்கள்,

அதன் பிறகு ஆங்கிலேயர் காலத்தில் வியாபாரத்தில் ஒத்தமாட்டு வாணிபம் இரட்டை மாட்டு வாணிபம் கதை தெரியும் எவ்வளவு நுட்பமாக உப்பு வியாபாரம் செய்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட லைசன்ஸ் அந்தத் தேடல்கள் இன்னும் முடிந்த பாடு இல்லை,

சீமெண்ணெய் கெரோசின் என்று சொல்லக்கூடிய மண் என்னை வியாபாரத்தில் இதே போன்ற நுட்பமான வாகனங்களை குறித்து தான் லைசென்ஸ் கொடுத்திருக்கிறார்கள் ஆங்கிலேயர்,

இதிலிருந்து என்ன தெரிகிறது டிவிசன் ஆப் லேபர் அதுவே நுட்பமான ஜாதியாக மாறியது ஒரு முறை என் எஸ் கிருஷ்ணன் கலந்து கொண்ட நிச்சயதார்த்தத்தில் அவர்களுக்கும் எங்களுக்கும் ஜாதி வேற்றுமை இருக்கிறது என்று கோபித்துக் கொண்டார்களாம் மாப்பிள்ளை வீட்டார்,

என்னவென்றால் அவர்கள் ஒத்த மாட்டு வாணிபம் நாங்க ரெட்ட மாடு என்று சொன்னார்களாம் அப்போது என் எஸ் கிருஷ்ணன் அவரை இன்னொரு மாடு வாங்கி ரெண்டு மாட்டு வண்டியில வியாபாரம் செய்ய சொல்லுங்க என்ன பிரச்சனை என்று கேட்டார், என்று ஒரு உண்மையோ புனைவோ நல்லா இருக்குல்ல 

பிறப்பு, திருமணம்,  இறப்பு இங்கு தான் ஜாதி நுட்பமாக வழிநடத்தப்படுகிறது அதிலும் இறப்பு வீடுகளில் பார்ப்பன ஐயர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை வண்ணார் நாவிதர் போன்றவர்கள் மூலம் செய்ய வைப்பார்கள் கடைசியாக என் தாயார் இறந்து போன ஈமச்சடங்குக்கு நான்தான் மூத்த மகன் மொட்டை அடித்து கொல்லி வைக்க வேண்டும் இது எல்லாம் செய்யச் சொல்லி என்னை கட்டாயப்படுத்தியது எங்க ஊர் நாவிதர்,

நான் மறுத்துவிட்டேன் அதன்பிறகு என் தம்பி அந்த சனங்குகளை செய்தான்



இந்து மதத்தை ஒழித்தால்சாதிஒழிந்து விடும் என்று சொல்வது சற்றே வேடிக்கையாகத் தோன்றுகிறது.

உதாரணமாக, வட கர்நாடகத்தில் 12ஆம் நூற்றாண்டில் உருவான பசவண்ணர் இயக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்து மதத்தின் ஏற்றத் தாழ்வுகளைப் பொறுக்க முடியாமல், “எல்லாவற்றையும் விட்டு விடுங்கள்; வீரசைவர்களாக மாறுங்கள்; நமக்குள் வேறுபாடு எதுவும் இல்லை; அனைவரும் கழுத்தில் லிங்கம் கட்டிக் கொள்ளுங்கள்என்று பசவண்ணர் அழைப்பு விடுத்தார். மக்கள் திரண்டு லிங்கம் கட்டிக் கொண்டனர்.

ஆனால், சாதியை ஒழிக்கத் தொடங்கிய அந்த இயக்கமே பின்னர்லிங்காயத்துகள்என்ற தனி சமூகமாக மாறியது. இன்று கர்நாடக அரசியலில் அவர்கள் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்துகின்றனர். யார் ஆட்சிக்கு வர வேண்டும், வரக் கூடாது என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு அவர்கள் ஒரு சமூக வலிமையாக உள்ளனர். இதற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு எடுத்துக்காட்டு.

இந்து மதத்தின் அமைப்பை எதிர்த்து எழுந்த வீரசைவர்கள், பின்னர் மீண்டும் இந்து சமூகத்தின் ஓர் அங்கமாகவே கருதப்பட்டனர் என்பதே வரலாறு கூறும் உண்மை.

அதேபோல், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கபீர் தாஸ். அவரது பெற்றோர் இஸ்லாமியர்கள்; அவர் வளர்ந்த சூழல் இந்து மரபுகளால் சூழப்பட்டிருந்தது. இரு மதங்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து, ஏற்றத் தாழ்வில்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று பாடுபட்டார். அவர் ஒரு சிறந்த கவிஞர். அவரது பாடல்களை கேட்க மக்கள் கூட்டம் திரண்டது.

ஆனால், அவரது கொள்கைகளை ஏற்றவர்கள் பின்னர்கபீர் பந்திகள்என்ற தனி சமூகமாக மாறினர்.

17ஆம் நூற்றாண்டில்சத்தியமே கடவுள்என்ற கருத்துடன் இயங்கிய ஜகஜீவன் தாஸ் இயக்கத்தைப் பின்பற்றியவர்கள்சத்நாமிஎன்ற சமூகமாக உருவானார்கள். 19ஆம் நூற்றாண்டில் ரயிதாஸ் இயக்கத்தை ஏற்றவர்கள்சாமர்என்ற சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டனர்.

இதேபோல், முத்துக்குட்டி என அழைக்கப்பட்ட அய்யா வைகுண்டநாதரின்அய்யாவழி இன்று தனி மதமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

இதையெல்லாம் சொல்லுவதன் காரணம் என்ன?

மதம் மாறினால் சாதி ஒழியும்அல்லதுசாதியை ஒழிக்க மதம் மாற்றுங்கள்என்று சொல்லப்படும்போது, நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள சாதிகளை ஒழிக்க வழி தெரியாமல் தவிக்கும் நிலையில், புதிய பெயர்களில் புதிய சமூகப் பிரிவுகள் உருவாக வேண்டாம் என்பதற்காகவே இந்த நினைவூட்டல்.

இந்துத்துவத்தின் பலம் என்ன என்று தெரியாமல் கம்பு சுத்தினால், அது திருப்பி அடிக்கும் போது நம்மால் தப்பிக்க முடியாது. உள்ளிருந்து எதிர்த்தாலும் சரி, வெளியே இருந்து எதிர்த்தாலும் சரிசாதி என்ற அடையாளம் அசால்ட்டாக நம்ம மேல பூசப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இந்தியா என்ற பரந்த நிலப்பரப்பை அரபிகள், துருக்கியர்கள், மொகலாயர்கள் என பலர் படையெடுத்து ஜெயித்தார்கள். ஆனால் அவர்கள் ஜெயிக்க முடியாத ஒன்று இன்னும் இருக்கிறதுஅதுசாதி”.

பொதுவாக கம்யூனிஸ்டுகளுக்கு சாதி பற்றி ஒன்றும் தெரியாது என்று சொல்வார்கள். அது உண்மை இருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்குமார்க்சியம்தெரியும். சாதியின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் நிலவும் உற்பத்தி முறையுடன் அதன் தொடர்பு என்ன என்பதை அலசி ஆராய முடியும்.

‘Butterfly Effect’ என்ற கருத்து இருக்கிறது. மிகச் சிறிய ஒரு மாற்றம் கூட பெரிய விளைவுகளை உண்டாக்கும் என்று அது சொல்கிறது. ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்தாலும் அது தூரத்தில் புயலை உருவாக்கக் கூடும்.

அப்படியிருக்க, பல்லாயிரம் ஆண்டுகள் சாதி இல்லாமல் வாழ்ந்த மனிதனுக்கு திடீரென்று சாதியை உருவாக்க வேண்டிய தேவை என்ன வந்தது? எந்த தேவையும் இல்லாமல் சாதி உருவாக முடியுமா?

ஒரு உதாரணமாக பார்க்கலாம். ஆளும் வர்க்கம்நீட்தேர்வு மூலம் என்ன சாதிக்க முயற்சிக்கிறது? இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வந்து, மாநிலங்களின் கல்வி முறையை தகர்த்து, “ஒரே நாடுஒரே கல்வி முறைஎன்ற அமைப்புக்குள் மக்களை கொண்டு வர முயற்சி.

அதேபோல், சட்டமன்றமும் நாடாளுமன்றமும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதன் நோக்கம் என்ன? தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை அதிகரித்து, “ஒரே நாடுஒரே கட்சிஎன்ற பாசிச அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி.

ஆளும் வர்க்கம் தன் நோக்கங்களை நிறைவேற்ற திட்டமிட்டு செயல்படுவது போலத்தான், சாதி உருவாக்கத்திற்கும் ஒரு திட்டமிட்ட சமூக அடிப்படை இருந்திருக்க வேண்டும்.

கேள்வி மேல கேள்வி கேட்கிறானேஎன்று நினைக்க வேண்டாம். பதில் சொல்வது எளிது. ஆனால் சிந்திக்க வைக்கும் கேள்வி கேட்பது கஷ்டம்.

எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் இருக்க வேண்டும். “ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்என்று சொல்லி போய்விடலாம். ஆனால்அந்த ஆதியில் எப்போது?” என்ற கேள்வி நம்மை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கும்.

அண்ணல் அம்பேத்கர், “இந்தியாவில் சாதிகளும் அவற்றின் செயல்பாடும், தோற்றமும் வளர்ச்சியும்என்ற நூலில், “அகமண முறைதான் சாதி தோன்றுவதற்கான அடிப்படைஎன்று சொல்கிறார்.

அகமண முறை என்றால் என்ன?

ஒரு காலத்தில் மனிதன் வேட்டையாடி வாழ்ந்தான். பின்னர் மெதுவாக ஆற்றங்கரைகளில் குடியேறி விவசாயம் செய்ய ஆரம்பித்தான். அந்த விவசாயம் அவனுக்கு தேவைக்கு அதிகமான உற்பத்தி — ‘உபரி’ — கொடுத்தது.

இந்த உபரி, அடிமைத் தேவையை உருவாக்கியது. சமூகத்தில் ஆண்டைகள் மற்றும் அடிமைகள் என்ற இரு வர்க்கங்கள் தோன்றின. அடிமைகள் ஆண்டை பெண்களுடன் கலப்பதால் சொத்து உரிமை மாறிவிடும் என்ற பயத்தில், தாய் வழி சமூக அமைப்பு சிதைந்து, தந்தை வழி தனிச் சொத்துடமை உருவானது. இதன் மூலம் குடும்ப அமைப்பும் உருவானது.

இன்னொரு பக்கம், இரும்பு, செம்பு போன்ற உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் உற்பத்திக்கான கருவிகள் செய்யும் பட்டறைத் தொழில் வளர்ந்தது. தானியங்களை சேமிக்க கிடங்குகள் கட்டப்பட்டன. இவ்வாறு சமூகத்தில் வேலைப் பிரிவினைகள் உருவாகத் தொடங்கின.

பானை செய்தவன் குயவன், கால்நடைகள் வளர்த்தவன் கோனான், பனை ஏறி பால் எடுத்தவன் நாடான், விவசாயம் செய்தவன் வேளாளன், கட்டடம் கட்டியவன் கொத்தனார்இவை எல்லாம் புரிதலுக்காக கூறப்படும் உதாரணங்கள்.

அடுத்த கட்டமாக, திருமணங்கள் எப்படி நடந்தன என்றால்ஒரே தொழில் செய்பவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு நெசவாளி, இன்னொரு நெசவாளியின் குடும்பத்திலேயே பெண் எடுத்துக் கொண்டான்.

தொழில் சார்ந்து நடந்த இந்த திருமண முறையைத்தான்அகமண முறைஎன்று சொல்கிறோம்.

ஆனால், அகமண முறை மட்டும் இருந்தால் சாதி உருவாகாது.


இந்தியாவை விட கடுமையாக அகமண முறையைப் பின்பற்றிய நாடு இங்கிலாந்து. அதை மீறி திருமணம் செய்தால் கடுமையான தண்டனைகள் இருந்தன. ஆனால் அங்கே சாதி உருவாகவில்லை. இந்தியாவில் மட்டும் உருவானது.

அப்படியானால், அகமண முறையைத் தாண்டி இன்னும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

அது என்ன

ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய தொழிலை முன்பே நிர்ணயித்து வைத்திருப்பதாலேயே, சாதி அமைப்பில் ஒவ்வொரு தனிநபருக்கும் தொழில் தொடர்பான சுய நிர்ணயச் சுதந்திரம் இல்லை. சாதியோடு தொழில் இணைக்கப்பட்டிருப்பதால்தான் சமூக முன்னேற்றத்திற்கு சாதி ஒரு பெரிய தடையாக இருந்து வருகிறது.

உதாரணமாக, ஒரு கொல்லன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவனுடைய தொழில் என்ன? இரும்பை உருக்கி விவசாயத்துக்கு தேவையான கருவிகளை தயாரிப்பது. அதேபோல், ஒரு இடையனின் வேலை என்ன? ஆடு, மாடு வளர்த்து பால் கறப்பது. ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை, ஒரு கொல்லன் இனி தன்னால் அந்த பட்டறைத் தொழிலைச் செய்ய முடியாது என்று முடிவு செய்தால், அதை விட்டுவிட்டு சில மாடுகளை வாங்கி பால் கறந்து வாழ முடியும். ஆனால் இந்திய உற்பத்தி முறையைப் பொறுத்தவரை, கொல்லனுக்கு தொழிலைத் தேர்ந்தெடுக்கும் உரிமையே மறுக்கப்பட்டது. அவன் விரும்பிய நேரத்தில் அந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாற முடியாது.

இது மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டிய விஷயம். ஏனெனில், ஒரு தனிநபர் தன்னுடைய விருப்பத்திற்கேற்ற தொழிலையோ, தன்னுடைய திறமைக்கேற்ற தொழிலையோ, அல்லது தன் குடும்பத் தேவைக்கேற்ற தொழிலையோ செய்யக்கூடிய உரிமை இங்கு மறுக்கப்பட்டுள்ளது. எனக்கு சாதாரண கல்லைச் சிற்பமாக மாற்றும் திறமை இருந்தாலும், என் சாதி என்னை இரும்பு அடிக்கச் சொல்லுகிறது. நான் ஒரு பெரிய பாடகராக வேண்டும் என்று விரும்பினாலும், இந்த சமூகம் என்னை வேறு ஒரு பாரம்பரிய வேலையோடு கட்டிப்போடுகிறது. என் குடும்பத்திற்காக எந்த உழைப்பையும் செய்யத் தயாராக இருந்தாலும், “இதுதான் உன் வேலைஎன்று சாதி கட்டாயப்படுத்துகிறது.

அதாவது, சுதந்திரமாக ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்க முடியாத இடத்தில்தான் சாதி தொடங்குகிறது. கஷ்டமோ நஷ்டமோ இருந்தாலும், “உன் வாழ்க்கை முழுவதும் இதே வேலையில்தான் இருக்க வேண்டும்என்று கட்டாயப்படுத்தும் அமைப்பே சாதி.

அம்பேத்கர் கூறும்சுய நிர்ணயச் சுதந்திரம்என்பது தொழில் தேர்வில் மட்டும் மறுக்கப்படவில்லை. விருப்பப்பட்ட ஒரு ஆண், பெண் இருவரும் சாதி என்ற வேலைப் பிரிவினையைத் தாண்டி திருமணம் செய்யும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. அகமண முறையைத் தாண்டி உறவு அமைப்பதற்கான உரிமை கூட சமூகத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது. இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல; சமூகத்தின் ஒவ்வொரு தனிநபருக்கும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடாகவே உள்ளது.




ஒரு உயர்சாதி குடும்பத்தைச் சேர்ந்த பெண், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞனுடன் திருமணம் செய்து கொண்டால், அந்த குடும்பம்மரியாதைஇழந்ததாகக் கருதப்படும் நிலை இன்னும் காணப்படுகிறது. அதாவது, தன் மகளை விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்கிற சுதந்திரம் கூட சில சமயங்களில் அந்தத் தந்தைக்கும் இல்லை.

சிறு வயதிலேயே பள்ளிகளில் ஜாதி சான்றிதழ் கேட்பதைப் பார்த்து பலர் கோபப்படுகிறார்கள். ஆனால், இன்னும் பிறக்காத தலைமுறையினருக்குக் கூடநீங்கள் இந்தச் சாதியினர்தான்என்று முன்கூட்டியே சமூகமே நிர்ணயித்து விடுகிறது.

இந்தியாவில் நிலவி வரும் சாதி அமைப்பைப் பற்றி கார்ல் மார்க்ஸ் கூறிய கருத்து ஒன்று உண்டு:
ரயில்வே போன்ற நவீன தொழில்களின் வளர்ச்சி, பரம்பரை வேலைப் பங்கீட்டையும், அதன்மேல் அமைந்துள்ள இந்தியச் சாதி அமைப்பையும்இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் பலத்திற்கும் தடையாக இருக்கும் அந்த அமைப்புகளையும்சீர்குலைத்து விடும்.”

அதாவது, ரயில்வே போன்ற நவீன தொழில்துறை வளர்ச்சி என்ன செய்கிறது என்றால், பரம்பரை பரம்பரையாக ஒரே வேலையைச் செய்தவர்களை வேறு தொழில்களுக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது. தொழிற்சாலைகளில் பல்வேறு வேலைகளைச் செய்யும் சூழலை உருவாக்குகிறது.

ரெயில் ஓட்டுவது ஒரு தொழில்; ஆனால்ஓட்டுனர்என்று தனி சாதி எதுவும் இல்லை. ரயில் ஓட்டும் ஒருவரின் பிறப்புச் சாதி வேறாக இருக்கலாம்; ஆனால் தொழில்துறை வளர்ச்சி அவரை பரம்பரை தொழிலிலிருந்து பிரித்து, புதிய தொழிலில் ஈடுபடுத்துகிறது.

ஆகவே,
தனிநபர் உரிமைகளை பரம்பரைப் பரம்பரையாக மறுக்கும் பரம்பரை வேலைப் பங்கீட்டின் சமூக-பொருளாதார கட்டமைப்பே சாதி என்று சொல்லலாம்.

இந்த ஒலகத்துல எங்கெங்க உயிர் வாழ்றதுக்கு தேவையான சூழல் இருக்குதோ, அங்க உயிரினங்கள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. அதே மாதிரி, சாதி உருவாக வேண்டிய சூழல் இருந்த இடத்துல சாதி உருவாவதும் தவிர்க்க முடியாததுதான்.

அப்படின்னா,
இந்தியாவுல மட்டும் ஏன் சாதி?**ன்னு கேட்டா
ஏன்னா, இந்திய துணைக்கண்டத்துல சாதி உருவாக வேண்டிய எல்லா காரணிகளும் இருந்தது.
மற்ற நாடுகள்ல அந்த அளவுக்கு அந்த சூழல் இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.

சிலர் சொல்றாங்க
ஆரியர்கள் வந்ததால தான் சாதி வந்துச்சி. மனு மனுதர்மம் எழுதினதால தான் எல்லாம் ஆரம்பிச்சதுனு.
கேக்க நல்லாத்தான் இருக்கும். ஆனா அது முழுசா உண்மை இல்ல.

அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்றார்னா
மனுவுக்கு முன்னாடியே சாதி இருந்துச்சி.
மனு புதுசா சாதி உருவாக்கல.
இருந்ததை ஒழுங்குபடுத்தி, சட்டமா மாற்றினான். அவ்வளவுதான்.

ஒரு முக்கியமான விஷயம் என்னனா
இவ்வளவு பெரிய சமூக அமைப்பை, ஒரே கூட்டமோ, ஒரே நபரோ, ஒரே சட்டமோ ஒரே நாள்ல உருவாக்க முடியாது.
ஒரு நைட்டுல 500–1000 ரூபாய் நோட்டுகளை செல்லாக்காசாக்கின மாதிரி,
ஒரே நைட்டுல சாதியை உருவாக்க முடியாது.

அப்படின்னா சாதி எங்கிருந்து வந்தது?

 வேலைப் பிரிவிலிருந்து வந்தது.
யார் என்ன வேலை செய்றாங்கன்னு பிரிச்சாங்க.
அந்த வேலை மரபா மாறிச்சி.
மரபு அடையாளமாச்சி.
அடையாளம் உயர்வுதாழ்வா மாறிச்சி.
அதுக்கப்புறம் அதையேசாதின்னு உறையவச்சாங்க.

 அதிகாரம் + மதம் + பொருளாதாரம்
இந்த மூனும் சேர்ந்தப்போ,
வேலைப் பிரிவுநிரந்தர சாதியா மாறிச்சு.

 அது இந்தியாவுல ஆழமா வேரூன்ற காரணம்
இங்க கிராம அமைப்பு,
மதச்சிந்தனை,
பிறப்பு அடிப்படையிலான அடையாளம்
இவையெல்லாம் சேர்ந்து சாதியை பாதுகாத்தது.

அதனால்,
சாதி = ஆரியர்கள் கொடுத்த பரிசு கிடையாது 
சாதி = மனு ஒருத்தன் கண்டுபிடிச்சது கிடையாது 

சாதி = இந்த சமூகத்தின் உள்ளேயே உருவான ஒரு சமூக நோய்.
சிலர் அதுக்கு உரம் போட்டாங்க.
சிலர் அதைக் காவல் காத்தாங்க.
சிலர் அதுல லாபம் அடைஞ்சாங்க.

அவ்வளவுதான்.


உற்பத்தி முறைஎன்றால் என்ன?

மிக எளிமையாகச் சொன்னால், ஒரு பொருளை உற்பத்தி செய்யும் முறையேஉற்பத்தி முறை ஆகும்.

உதாரணமாக, விவசாயத்தில் மாஸ்டர் டிகிரி முடித்து தங்கப் பதக்கம் பெற்ற ஒருவரை சஹாரா பாலைவனத்தில் கொண்டு சென்று,
ஆறு மாதமோ, ஒரு வருடமோ எடுத்துக் கொள்ளுங்கள்; அவசரம் இல்லை. பொறுமையாக இருந்து பத்து மூட்டைகள் அரிசி உற்பத்தி செய்து கொடுங்கள்என்று சொன்னால், அவரால் அது சாத்தியமா?

மந்திரத்தால் மாம்பழம் தோன்றச் செய்யலாம்; ஆனால் வறண்ட பாலைவனத்தில் அரிசி விளையச் செய்ய முடியாது.

அதனால், ‘அரிசிஎன்ற ஒரு பொருளை உற்பத்தி செய்ய முதலில் நிலம் வேண்டும்.
அதை உழ கலப்பை வேண்டும்.
அந்த கலப்பையை இழுக்க மாடு வேண்டும்.
விதைக்க நெல்லு வேண்டும்.
வளர தண்ணீர் வேண்டும்.
உரமிட்டு வளர்க்க வேண்டும்.
அறுவடை செய்ய ஆட்கள் வேண்டும்.
அதன்பின் நெல்லை உரலில் போட்டு உலக்கையால் குத்தி, முறத்தால் சுத்தம் செய்த பின்னரே, அடுப்பில் கொதித்துஅரிசிஆகிறது.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

அரிசி உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப அறிவு மட்டும் போதாது.
அதை செயல்படுத்த தேவையான உற்பத்தி கருவிகள் அவசியம்.

உற்பத்தி கருவிகள் மற்றும் உற்பத்தி உறவுகள்

கலப்பை என்பது விவசாய உற்பத்திக்குத் தேவையான கருவி. அதை யார் தயாரிக்கிறார்கள்? கொல்லன்.

இதன் மூலம், விவசாயியும் கொல்லனும் இடையே ஒரு உறவு உருவாகிறது. இதுவே உற்பத்தி உறவு என்று அழைக்கப்படுகிறது.

இது கொல்லனோடு மட்டும் முடிவதில்லை. சமூகத்தின் பல அடுக்குகளிலும் இத்தகைய உறவுகள் சங்கிலி போல பின்னிப் பிணைந்திருக்கின்றன. அந்த சங்கிலியிலிருந்து தனியாக விலகி ஒருவரால் உற்பத்தியை நடத்த முடியாது.

இந்திய உற்பத்தி முறையின் சிக்கல்

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் உற்பத்தி முறை மிகவும் சிக்கலானதாக உள்ளது.

ஒரு வலிமையான எதிரியை எதிர்க்க வலிமையான ஆயுதங்கள் தேவை. ஆனால் இங்கே நடந்தது என்ன? நூற்றாண்டுகளாக அதே பழைய கருவிகளைப் பயன்படுத்தியே உழுதல் நடந்தது.

உற்பத்தியின் தேவை அதிகரித்த போதிலும், உற்பத்தி கருவிகள் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்தன. இந்த நிலப்பிரபுத்துவ சூழலே இந்திய உற்பத்தி முறையின் ஒரு முக்கிய யதார்த்தம்.

புராதன பொதுவுடமை சமுதாயத்தைத் தவிர, பிற சமூக அமைப்புகளில் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் பெரும்பாலும் சுரண்டலாகவே இருந்தது. உற்பத்தி இடையூறு இல்லாமல் தொடர வேண்டியது அவர்களின் தேவையாக இருந்தது

தொழில் பிரிவினை மற்றும் கட்டாயம்

விவசாயம் செய்யும் ஒருவர் விவசாயத்திலேயே இருக்க வேண்டும்.
இரும்பு அடிப்பவர் அதையே தொடர வேண்டும்.
துணி வெளுப்பவர் அதையே செய்ய வேண்டும்.

எனக்கு இது வேண்டாம்; நான் வேறு வேலைக்கு போகிறேன்என்று ஒருவர் விலகினால், உற்பத்தி சங்கிலியில் பாதிப்பு ஏற்படும்.

அந்த பாதிப்பைத் தடுக்க, “இதுவே உன் கடமைஎன்று ஒருவரை ஒரு வேலையில் கட்டுப்படுத்தும் ஒரு சமூக ஒழுங்கு தேவைப்பட்டது.

அதற்கான தத்துவ அடித்தளம்

அந்த ஒழுங்கை நிலைநிறுத்த, ஒரு தத்துவ அடிப்படை உருவாக்கப்பட்டது.

அதையே சிலர்
இந்து தத்துவம்இந்துத்துவம்
என்று விளக்குகிறார்கள்.

நீங்கள் ஒரு நாட்டின் ராஜா என்று நினைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாள் அரண்மனைக்குள் ஒருவர் வந்து, “நான் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன், நீ அவன் மார்பிலிருந்து பிறந்தவன். ஆகவே நீ என்னைக் கேட்க வேண்டும்என்று சொன்னால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு கருத்து சமூகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஏன் ஒரு பெரிய ராஜ்யத்தை ஆளும் அரசன் கூட இப்படிப்பட்ட வர்ணாசிரம எண்ணத்தை ஏற்றுக்கொண்டான்? காரணம் வேறு எதுவும் இல்லைஅக்காலத்தில் இருந்த உற்பத்தி முறையையும், தொழில் அடிப்படையிலான சமூக அமைப்பையும் பாதுகாக்க வேண்டிய தேவை.

தொழிலின் அடிப்படையில் மனிதர்களை பிரித்து, பிறப்பின் அடிப்படையில் உயர்வுதாழ்வு கொடுத்த வாழ்க்கை முறையே பின்னர்ஜாதிஆக வலுவடைந்தது. இதற்கு மதத்தின் புனித தன்மையை ஒட்டிக் கொடுத்ததே வர்ணாசிரமத்தின் வெற்றி.

இங்கு ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது:

     இந்து மதம் என்பது வழிபாட்டு முறை.

      இந்துத்துவம் என்பது வாழ்க்கை முறை, அதில் தொழில் மற்றும் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்கு நிலை நிர்ணயிக்கப்படுகிறது.

யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம், விரதம் இருக்கலாம், வழிபாடு செய்யலாம்அதை யாரும் தடுக்க மாட்டார்கள். ஆனால்உனக்கு கொடுக்கப்பட்ட தொழிலை விட்டுவிட்டு வேறு வேலை செய்யக் கூடாதுஎன்று சொல்லப்படும் இடத்தில்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

இந்த சமூக ஒழுங்குக்குகடவுள் சொன்னார்என்ற புனித அடையாளம் கொடுக்கப்பட்டது. அதனால் அது மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது.

சிலர்இந்து மதத்தை ஒழித்தால் ஜாதி ஒழியும்என்று சொல்கிறார்கள். ஆனால் மதம் மாறினாலும், ஜாதி பெயர்கள் மட்டும் மாறுகிறது; சமூக பழக்கங்கள் மாறவில்லை. இதனால் ஜாதி முறையே அழியவில்லை.

இது ஒரு உடல் நோயைப் போல. தலைவலி, வயிற்றுவலி, நெஞ்செரிச்சல் என்று பல அறிகுறிகள் இருக்கும். ஆனால் அவற்றுக்கு தனித்தனியாக மருந்து கொடுத்தால் பயன் இல்லை. உண்மையான காரணம் மலச்சிக்கல் என்றால், அதற்கான மருந்து கொடுத்தால்தான் பிரச்சனை தீரும்.

அதேபோல், தீண்டாமை, ஜாதி, ஏற்றத்தாழ்வு ஆகியவை தனித்தனியான பிரச்சனைகள் அல்ல. அவை அக்கால உற்பத்தி முறையோடு இணைந்தவை. அந்த அடிப்படை சமூக-பொருளாதார அமைப்பே மாற வேண்டும் என்றுதான் கருத்து.

சுருக்கமாகச் சொன்னால்:
ஜாதி என்பது மத பிரச்சனை மட்டும் அல்ல; அது சமூக-பொருளாதார அமைப்போடு இணைந்த ஒன்று. அந்த அமைப்பு மாறினால்தான் ஜாதியும் மாறும்.

சாதி உருவானதற்கு காரணம் மதமா? அல்லது உற்பத்தி முறையா? — என்ற கேள்வியுடன் இந்த பதிவு தொடங்குகிறது.

பலர் கூறுவது: “சாதியும் தீண்டாமையும் இந்தியாவில் மட்டுமே உள்ளது. அதற்கு காரணம் இந்து மதம். ஆகவே இந்து மதம் இல்லாமல் போனால் சாதியும் இல்லாமல் போய்விடும்என்பதாகும்.

ஆனால், சாதி என்பது மதத்தில் மட்டும் இல்லாமல், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்போடு இணைந்த வாழ்வியல் முறையாக உள்ளது. அந்த சமூக அமைப்பு மாறாமல் சாதியை ஒழிக்க முடியாது.

சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் மனிதரைப் பிரிப்பது. ஒருவன் எங்கு பிறக்கிறானோ அதன்படி அவன் யார் என்று தீர்மானிக்கப்படுகிறது. அதோடு குலத்தொழில், திருமண முறைகள் ஆகியவை இணைந்த கட்டமைப்பே சாதி.

ஆங்கிலத்தில் “Caste” என்ற சொல் உள்ளது. அது போர்ச்சுகீசிய மற்றும் ஸ்பானிய மொழியின் “casta” என்ற சொல்லில் இருந்து வந்தது. அதற்கான பொருள்: “பிறப்பின் அடிப்படையிலான பிரிவு”.

அதனால், சாதி என்பது இந்தியாவில் மட்டுமா இருந்தது? இந்து மதம் மட்டும்தானா இதை உருவாக்கியது? என்பது கேள்வியாகிறது.

ஐரோப்பிய நாடுகள் போன்ற பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஆசிய நாடான ஜப்பானில், நிலப்பிரபுத்துவம் முறியடிக்கப்பட்டபின், அங்கிருந்த பிறப்பின் அடிப்படையிலான பிரிவுகள் குறைந்தன.

ஜப்பானில், “Burakumin” என்று அழைக்கப்பட்ட ஒரு சமூகத்தினர் இருந்தனர். இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட தீண்டாமை போலவே, அவர்களும் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ வைத்தப்பட்டனர். செருப்பு வேலை, தோல் வேலை, கழிவுநீர் சுத்தம் போன்ற தொழில்களே அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, ஜப்பான் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் பின் வந்த அரசியல் மாற்றங்கள், சமூக சீர்திருத்தங்கள் மூலம், “நான் இந்த இனம், அந்த இனம்என்ற எண்ணங்களை விடுத்து, “நாம் ஜப்பானியர்என்ற எண்ணத்தை வளர்த்தனர்.

அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட்டது. பழைய சாதி அடையாளங்கள் நீக்கப்பட்டன. திறமையை அடிப்படையாகக் கொண்டு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. உற்பத்தி, தொழில், தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

சாதி பற்றிப் பேசுவதும், பாகுபாடு காட்டுவதும் கடுமையான குற்றமாக மாற்றப்பட்டது. கலப்பு திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டன.

இதன் விளைவாக, சில தசாப்தங்களில் ஜப்பான் சமூக முன்னேற்றத்தில் உலகில் முன்னணியில் நின்றது. “Burakumin” என்ற வெறுப்பு மறக்கப்பட்ட வரலாறாக மாறியது.

இதிலிருந்து தெரிகிறது: சாதி என்பது மதத்தைத் தாண்டியும், சமூக-பொருளாதார அமைப்புகளோடும் தொடர்புடைய ஒன்று. அந்த அமைப்புகள் மாறும்போது தான் சாதி போன்ற பிரிவுகள் குறையும்.

######

இட ஒதுக்கீடு உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமமாக வாழ்வதற்காக கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் அதில் சில

Affirmative action in the United States 

Equality Act 2010: guidance - GOV.UK      

Employment equity (Canada) 

 china Affirmative - Minority Nationality Act 

GENDER EQUALITY IN NORWAY 

South African Employment Equity Act 55 of 199

******

நிலம் மனிதனைப் பிரிக்கவில்லை; மனிதன் தான் மனிதனைப் பிரித்தான்

பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய
திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே” — தொல்காப்பியம்

தொல்காப்பியர் காதல் தலைவர்களைச் சுட்டும்போது,
அவர்களின் குலத்தையும், தொழிலையும் தான் சொல்கிறார்;
அவர்களின் சாதியைக் அல்ல.

இளம்பூரணர் சொல்கிறார்:

குலப்பெயரும் தொழில்பெயரும் திணைநிலைப் பெயர்

அதாவது
மனிதனை அடையாளப்படுத்தியது அவன் வாழும் நிலம்
அவன் செய்கிற உழைப்பு.

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்
இவர்கள் ஒரு நிலத்திற்கே உரியவர்கள் அல்ல;
எல்லா நிலங்களிலும் வாழ்ந்தவர்கள்.

அப்படியிருக்க,
நிலம் சார்ந்த சமூகத்தை,
பிறப்பு சார்ந்த சமூகமாக மாற்றியது யார்?

பாகூர் கல்வெட்டு பேசுகிறது.

ஒரு சதுர்வேதி மங்கலம்.
ஒரு பொது குளம்.
அதை தூர்வார அனைவரும் வர வேண்டும்.
ஆனா — “தீண்டாச்சேரிமக்கள் வரக்கூடாது.

ஏன்?
அவர்கள் வந்தால் குளம் தீட்டாகிவிடுமாம்.

குளம் தீட்டாகுமா?
அல்லது மனித மனம்தானா

கோவில் நிலம், தான நிலம், பிரம்மதேயம்

நிலம் உழுவோரின் கையிலிருந்து,
வேதம் ஓதுவோரின் கைக்கு சென்றபோது,
சாதி வேர் பிடித்தது.


மூன்று வேளை சோற்றுக்காக

மனிதர்கள் வாங்கப்பட்டார்கள்.
அது வரலாறு.
அது கல்வெட்டு.
அது கற்பனை அல்ல.

சங்கப் பெண் பாடுகிறாள்:

எங்களிடம் பனை நொங்கும், கள்ளும் இருக்கையில்
உங்களிடம் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?”

அவளுக்கு பசி இல்லை.
அவளுக்கு தாழ்வு இல்லை.
அவளுக்கு சாதி இல்லை.

அவள் நிலத்தோடு இருந்தாள்.
நிலம் அவளை மனிதியாக வைத்திருந்தது.

நீலகேசி உரை கேட்கிறது:

புனிதம்என்று சொல்லப்படும் நூல்களையே
பித்தலாட்டம்என்று கேள்வி கேட்கிறது.

ஏன்?

ஏனெனில்
மனிதனைப் பிரிக்கும் எந்த சிந்தனையும்
அது சமயமாக இருந்தாலும்
அது அறமாக இருக்க முடியாது.

சங்க காலம் மனிதனை
நிலம் மூலம் பார்த்தது.
பிற்காலம் மனிதனை
பிறப்பு மூலம் பார்த்தது.

இதுதான் மாற்றம்.
இதுதான் சாதியின் வரலாறு.

நிலம் ஒருபோதும் சொல்லவில்லை:
நீ மேல்சாதி, நீ கீழ்சாதிஎன்று.

நிலம் சொன்னது:
உழைத்தால் உனக்கு உணவு”.

ஆனால் மனிதன் சொன்னான்:
பிறந்ததால் உனக்கு தாழ்வு”.

சாதி மதத்திலிருந்து பிறக்கவில்லை.
சாதி நிலத்தை பறித்த இடத்திலிருந்து பிறந்தது.

சாதி வேதத்திலிருந்து வரவில்லை.
சாதி உழைப்பை பறித்த இடத்திலிருந்து வந்தது.

தொல்காப்பியம் மனிதனை தொழிலால் பார்த்தது.
கல்வெட்டுகள் மனிதனை தீண்டாமையால் பார்த்தன.

இலக்கியம் மனிதனை உயர்த்தியது.
சமூகம் மனிதனை தாழ்த்தியது.

அதனால் தான் இந்த இலக்கியங்கள் இன்று நமக்கு சொல்லுவது:

மனிதனை மனிதனாகப் பார்.
அவன் பிறந்த இடமாக அல்ல.
அவன் உழைக்கும் இடமாகப் பார்.

சங்க இலக்கியம் சாதியை ஒப்புக்கொள்ளவில்லை.
நாம் ஏன் ஒப்புக்கொள்கிறோம்?


தமிழகத்தின் வரலாற்றில் தலித்துகள் தங்கள் குரலை ஓங்கி ஒலித்த காலம் 1990க்குப் பிறகுதான் என்று நாம் பொதுவாக நினைத்தாலும், அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அந்தக் குரல் எழுந்திருந்தது என்பதைப் பழைய தமிழ் இலக்கியங்கள் நினைவூட்டுகின்றன. 14ஆம் நூற்றாண்டிலேயே ஒரு தலித் பெண் கவிஞர் சாதியையும் சனாதன ஒழுங்குகளையும் கடிந்து பாடியதாகக் கூறப்படும் பாய்ச்சலூர்ப் பதிகம் அதற்கு முக்கியச் சான்றாக நிற்கிறது.



ஒரு பனை இரண்டு பாளை

ஒன்று நுங்கு ஒன்று கள்ளு
அறிவினில் அறிந்தவற்கு
அதுவுங்கள்ளே இதுவுங்கள்ளே
ஒரு குலை உயர்ந்ததேனோ
ஒரு குலை தாழ்ந்ததேனோ
பறையனைப் பழிப்பதேனோ
பாய்ச்சலூர் கிராமத்தாரே

என்ற வரிகள், இயற்கையில் வேறுபாடுகள் இருந்தாலும் மனிதரில் உயர்வுதாழ்வு என்ற பாகுபாடு மனிதனால் உருவாக்கப்பட்டதுதான் என்பதை வலியுறுத்துகின்றன. ஒரே மரத்தில் பல வடிவங்கள் தோன்றுவது போல, மனித சமூகம் பல்வகைமையைக் கொண்டதாய் இருக்கலாம்; ஆனால் அதனை உயர்வுதாழ்வு எனப் பிரிப்பது அநியாயம் என இந்தப் பாடல் நெருப்பாய் பேசுகிறது.

சித்தர்கள் தோன்றிய காலத்திலும், பொருத்தமற்ற கோவில் வழிபாடு, மூடநம்பிக்கை, சாதிப்பிரிவுகள் ஆகியவற்றை அவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். அவர்களின் பாடல்கள் ஆன்மீகத்தின் பெயரில் மனிதரை மனிதனிடமிருந்து பிரிக்கும் அமைப்புகளை நக்கலுடனும் நையாண்டியுடனும் சிதைத்தன. உண்மையான ஆன்மீகம் மனித சமத்துவத்தில்தான் இருக்கிறது என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பல மத, சிந்தனைச் சவால்கள் எழுந்தன. இசுலாமியத் தமிழ் இலக்கியமாகக் கருதப்படும் பல்சந்தமாலை போன்ற நூல்கள், வேறு மதச் சிந்தனைகளும் இந்நாட்டில் இயங்கியதைச் சுட்டிக்காட்டுகின்றன. பல்வேறு மதங்களும் பண்பாடுகளும் சந்தித்த இந்தச் சூழலில், ஒரே உண்மை தெளிவாகிறதுமனிதரை பிரிப்பதல்ல, இணைப்பதே இலக்கியத்தின் நோக்கம்.

பின்னர் இந்துத்துவ மீட்புவாதத்தின் ஒரு பகுதியாக பகவத் கீதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பரமார்த்த தரிசனம் எனப் பெயரிடப்பட்டது. இத்தகைய நூல்கள் தத்துவத்தைப் பரப்பினாலும், சமூகத்தில் சாதிவருண அடிப்படையிலான உயர்வுதாழ்வு நிலை தொடர்ந்தே இருந்தது. “வலங்கைஇடங்கைபோன்ற பிரிவுகள் உருவாகி, பாடல்களுக்குக் கூட சாதி அடிப்படையில் இலக்கணம் வகுக்கப்பட்டது.

இதனால் ஒரு கடுமையான உண்மை வெளிப்படுகிறது: மனிதர்களை வருணம், சாதி என்று பிரிக்கும் எண்ணம் சமூகத்தில் மட்டுமல்ல, இலக்கியத்திற்குள்ளும் ஊடுருவி பிளவை ஏற்படுத்தியது. ஆனால் அதே இலக்கியத்தின் மற்றொரு ஓட்டம்சித்தர் பாடல்கள், தலித் குரல்கள், சமத்துவத்தை வலியுறுத்தும் கவிதைகள்இந்தப் பிளவுகளுக்கு எதிராக எழுந்தன.

அதனால், தமிழிலக்கிய வரலாறு நமக்குக் கற்பிப்பது ஒன்று தான்:
மனிதனை உயர்வுதாழ்வு எனப் பிரிக்கும் எந்தச் சிந்தனையும் நிலையற்றது; சமத்துவத்தை வலியுறுத்தும் குரல்கள்தான் காலத்தைக் கடந்தும் ஒலித்து நிற்கின்றன.

&&&&&&

சாதி இன்று இந்தியா முழுவதும் சமூகத்தின் இறுகிப் போன கூறாக உள்ளது. தமிழ் சமூகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால், இந்தச் சாதிச் சமூகம் காலம் காலமாக இப்படியே இருந்ததில்லை. இதன் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்தால், இது காலத்தோறும் மாற்றம் அடைந்து வந்துள்ளது என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இடைக்காலச் சோழர் ஆட்சி (கி.பி. 10–13 ஆம் நூற்றாண்டுகள்) காலத்தில்தான் சாதி ஒரு சமூக நிறுவனமாக ஓரளவு முழுமை பெற்றது என்பதை கல்வெட்டுச் செய்திகள் சான்றாக காட்டுகின்றன.

சோழர் காலக் கல்வெட்டுகளில் அரசக் குடும்பத்தினர், அரசு அலுவலர்கள், வட்டாரத் தலைவர்கள், ஊர்மன்ற உறுப்பினர்கள், வேளாண் குடிகள், கைவினைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினர் பல சூழ்நிலைகளில் காணப்படுகின்றனர். இவர்கள் ஒருபுறம் கொடையாளிகளாகவும் மறுபுறம் கொடை பெறுபவர்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். சபையார், ஊரார், நகரத்தார் போன்ற குழுக்களாகவும் இவர்களைப் பார்க்க முடிகிறது. இந்தக் குழு அடையாளங்களைத் தாண்டி, அவர்களின் தனிப்பட்ட பெயர்களைப் பார்த்தால்கூட, அவர்கள் சார்ந்த சமூக நிலைமைகளை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

கொடையாளிகளாகக் காணப்படும் நிலையில் பிராமணர், வேளாளர், வணிகர் ஆகியோர் பரவலாகத் தோன்றுகின்றனர். இவற்றில் முதன்மை இடத்தைப் பெற்றிருந்த இரண்டு முக்கிய இனங்கள் பிராமணரும் வேளாளரும் ஆவர். இதை பல்வேறு கல்வெட்டு சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக நிலவரி வசூல் போன்ற சூழ்நிலைகளில் இவர்கள் தனியே சுட்டிக் காட்டப்படுகின்றனர். 11ஆம் நூற்றாண்டு வரையிலான செப்பேடுகளில் நிலக்கொடை அரசாணைகள் பெறுபவர்களில் முதன்மையாகத் தோன்றுபவர்கள்பிரம்மதேயக் கிழவர்கள்’ (பிராமண நிலக்கிழார்கள்) மற்றும்நாட்டார்’ (வேளாண் நிலக்கிழார்கள்) ஆவர். இவர்கள் முறையேபிரம்மராயன்’, ‘மூவேந்த வேளாண்போன்ற பட்டங்களைப் பெற்று சோழ அரசு அலுவலகங்களில் முக்கியப் பதவிகளை வகித்தனர்.

வைதீகச் சடங்குகளை நடத்துபவர்கள் என்ற முறையிலும், கோயில் பூஜைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்ற முறையிலும் பிராமணர்கள் முன்னுரிமை பெற்றிருந்தனர். இந்தச் சடங்கு சார்ந்த உயர்வு, அவர்களின் நிலவுடைமையால் மேலும் வலுப்பெற்றது. குறிப்பாக பிரம்மதேய ஊர்களில், பிராமணருக்கு அடுத்தபடியாகவே பிற சமூகத்தினர் மதிப்பிடப்பட்டனர்.

பரம்பரையாக நிலவுடைமையாளர்களாக இருந்த வேளாளர்கள் அடுத்த நிலையை வகித்தனர். இவர்களின் ஊர்கள்வெள்ளான்வகைஅல்லதுவேளாண் ஊர்கள்என அழைக்கப்பட்டன; அவற்றின்

மன்றங்கள்ஊரார்எனப்பட்டன. வணிகர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தொழிலால் செல்வவளம் பெற்றவர்களாகவும் நிலவுடைமையாளர்களாகவும் இருந்தனர். வணிகர் வாழ்ந்த இடங்கள்நகரம்எனவும், அவற்றின் மன்றங்கள்நகரத்தார்எனவும் அழைக்கப்பட்டன.

சோழர் கால சமூக மாற்றங்களைப் புரிந்து கொள்ள, அக்கால அரசியல் மாற்றங்களையும் இணைத்து ஆராய வேண்டியது அவசியம். ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தொடங்கிய சோழராட்சி முதலில் தஞ்சாவூர் பகுதிக்குள் மட்டுமே நிலை கொண்டிருந்தது. பின்னர் ஒரு நூற்றாண்டுக்குள் வட தமிழ்நாட்டின் பெரும்பகுதியையும் தன் ஆட்சிக்குள் கொண்டுவர சோழ அரசு முயற்சி செய்தது. முதல் இராசராச சோழன் காலம் தொடங்கி, இந்த விரிவாக்கம் தமிழ்நாட்டைத் தாண்டியும் பரவியது. பதினோராம் நூற்றாண்டு முழுவதும் சாளுக்கியர், பாண்டியர், சேரர், கீழைக் கங்கர், இலங்கை அரசர் போன்ற பலருடன் தொடர்ச்சியான போர்கள் நடந்தன.

இந்தப் போர்கள் சமூகத்தில் நேரடியும் மறைமுகமுமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக நிலத்தில் இருந்த சமூகவுடைமை மெல்ல மெல்ல குறைந்து, தனியுடைமை வலுப்பெறுவதற்கு இப்போர் நடவடிக்கைகள் காரணமாக அமைந்தன. இதன் இணை விளைவாக மக்கள் இடப்பெயர்ச்சியும் அதிகரித்தது. ஒன்பதாம் நூற்றாண்டு வரை குறைந்த அளவில் நடந்த மக்கள் பெயர்ச்சி, 10–11ஆம் நூற்றாண்டுகளில் பெருமளவில் நடைபெற்றது. தமிழ் வீரர்கள், வணிகர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர்; வெளியிடங்களிலிருந்தும் பலர் தமிழ்நாட்டுக்குள் வந்தனர். தமிழ்நாட்டின் உள் பகுதிகளுக்குள்ளேயே மக்கள் இடம்பெயர்ச்சி பரவலாக இருந்தது.

சோழ அரசின் அலுவலர்கள் நாடு முழுவதும் சென்று வந்தனர். அதுவரை அரசியலின் தாக்கத்திலிருந்து ஒதுங்கி இருந்த பல இனத்தவரும், சோழ அரசின் செயல்பாடுகளால் அரசியல் மயப்படுத்தப்பட்டனர். சோழரின் பெரும் படையில் இணைந்த பலர், முதல்முறையாக அரசியல் அமைப்புக்கும் சமவெளிப் பண்பாட்டுக்கும் அறிமுகமானார்கள்.

1,படைநிலம்சமூக உயர்வு

சோழர் படையில் பல இன மக்கள் இருந்தனர். குறிப்பாக:

பள்ளி மக்கள்வில்ல்வீரர் (வில்லிகள்) படையில் இருந்தனர்.

சுருதிமான்படை வீரர்களாக இருந்து பின்னர் நிலக்கிழார்களானார்கள்.

நத்தமான்முதலில் கால்நடை வளர்ப்பில் இருந்தவர்கள்; பின்னர் நிலஉடையர்களானார்கள்.

போரில் சேவை செய்த இவர்கள், அரசரிடமிருந்து நிலங்கள் (படைப்பற்று ஊர்கள்) பெற்றனர். அந்த நிலங்களின் வருவாயை அனுபவிக்கும் உரிமை இவர்களுக்கு கிடைத்தது. காலப்போக்கில், இந்த நிலங்களையே தங்கள் சொத்தாக மாற்றிக் கொண்டார்கள்.

இதனால்:

போர்வீரர் இனங்கள்நில உரிமையாளர்கள்சமூகத்தில் உயர்ந்த நிலை

2) “நாட்டார்என்ற பெயர் ஏன்?

இந்த புதிய நிலஉடையர்கள் தங்களை:        

ஐஞ்சு நாட்டார்

பள்ளி நாட்டார் 

 திருவாய்ப்பாடி நாட்டார்       

பன்னாட்டார்

என்று அழைக்கத் தொடங்கினர்.

நாட்டார் என்ற பின்னொட்டு,

நாங்களும் வேளாண் நாட்டார் போல நிலஉடையவர்கள்
என்பதை நிரூபிக்க முயற்சி.

ஒரு கல்வெட்டில் அகம்படி வேளான், பள்ளி வேளாண் என்று வருகிறது.
அதாவது,

பள்ளி மற்றும் அகம்படியார் மக்கள் தங்களைவேளாளர்தரத்திற்கு இணையாக காட்ட முயன்றனர்.

3) பழைய காணியாளர் vs புதிய காணியாளர்

படை வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களால்:

·        முன்பிருந்த பழங்காணியாளர்கள் (பழைய நில உரிமையாளர்கள்) தங்கள் உரிமையை இழந்தனர்.

·        புதிய நிலஉடையர்களும், பழையவர்களும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

1174ஆம் ஆண்டு கல்வெட்டில் கூட,

ஊர்கள் படைப்பற்றாய் ஆனதால், பழைய காணியாளர்கள் பயிரிட முனையவில்லை
என்று வருகிறது.

4) இடங்கைவலங்கை பிரிவு

இந்த நில உரிமை மோதல்களின் சமூக வெளிப்பாடே:

இடங்கை மற்றும் வலங்கை என்ற இரட்டை சமூகப் பிரிவு.

முதலில் இது படைத்துறை பிரிவு போல இருந்தது.
பின்னர் அது சாதி கூட்டமைப்பு போல மாறியது.

1120இல் இலங்கையில் கிடைத்த கல்வெட்டில் கூட:

·        வலங்கை

·        இடங்கை

·        வேலையாளர் படை

·        வடுகர், மலையாளர்

என்று பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

13ஆம் நூற்றாண்டில் தான்இடங்கை சாதிகள்என்ற குறிப்புகள் தெளிவாக வருகிறது.

5) கைக்கோளர், நியாயத்தார்தொழில் மாற்றம்

சோழர் படையில் இருந்த:

·        கைக்கோளர்

·        நியாயத்தார்

பின்னர் 14–15ஆம் நூற்றாண்டுகளில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் என தெரிகிறது.

அதாவது:

முன்பு படைபின்னர் தொழில்நில உரிமைசாதி அடையாளம்

6) கூட்டமைப்புகள்: சமயம், நாட்டார், விஷயத்தார்

புதிய நிலஉடைய இனங்கள் தங்கள் சமூக நிலையை உறுதிப்படுத்த:

·        பெரிய நாட்டார்

·        பதினெண் விஷயத்தார்

·        சமயம்

போன்ற கூட்டமைப்புகளை உருவாக்கினர்.

இவை:

·        தொழில் சார்ந்த கூட்டம்

·        உறவின்முறை கூட்டம்

·        சமூக அதிகார அமைப்பு

ஆக இயங்கின.

7) சாதி உணர்வு வெளிப்படத் தொடங்கியது

முன்பு மறைமுகமாக இருந்த சாதி உணர்வு,
இந்த காலத்தில் வெளிப்படையாக பேசப்படத் தொடங்கியது.

கல்வெட்டுகளில்:

·        சாதி தீர்மானம்

·        சாதியை மீறினால் தண்டனை

·        சாதி பெருமை

போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

8) முக்கிய முடிவு

10ஆம் நூற்றாண்டு வரை நிலவிய எளிய சமூக அமைப்பு,
12–13ஆம் நூற்றாண்டில் மிகவும் சிக்கலானதாக மாறியது.

அந்த மாற்றங்களின் விளைவாக:

படை சேவை + நில உரிமை + தொழில் மாற்றம் + சமூக கூட்டமைப்பு
= உறுதியான சாதி அமைப்பு

அதனால் தான்,
பின்னர் நூற்றாண்டுகளில் பல்கிப் பெருகிய சாதி சமூகம் உருவாக
அடித்தளம் சோழர் காலத்திலேயே அமைந்தது.


பெண்கள் தங்களின் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்.

அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் மன்னர் ஆட்சியில் தோள் சேலை அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்:

1) குயவர் (மண்பாண்டம் தொழில் சாதியினர்)

2) நாடார் (மரம் ஏறும் தொழில் சாதியினர்)

3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் (தேவர்)

4) துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை) சாதியினர்.

5) இடையர் (கோனார்).

6) நாவிதர் (முடி திருத்தம்) சாதியினர்.

7) வண்ணார் ( சலவை தொழில்) சாதியினர்.

8) சக்கிலியர் (துப்புரவு தொழில்) சாதியினர்.

9) பறையர் (பறையடிக்கும் தொழில்) சாதியினர்.

10) நசுரானியர் (சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்.

11) குறவர் (கூடை முடைதல்) சாதியினர்.

12) வாணியர் (வாணிய செட்டியார்) சாதியினர்.

13) ஈழவர், தீயர் (இல்லத்து பிள்ளைமார்) மற்றும் அந்த சாதியோடு தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்.

14) பாணர் (ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர்.

15) புலையர் (பறையருள் ஓர் உட்சாதி- வேட்டைத் தொழில்) சாதியினர்.

16) கம்மாளர் (ஆசாரி - இன்றைய காலத்தில் 'விஷ்வகர்மா' என்ற பெயரால் ஏமாற்றப்படும்) கைவினை தொழில் சாதியினர்.

17) கைக்கோளர் (முதலியார்) சாதியினர்.

18) பரவர் (முத்தரையர்) சாதியினர்.

மேலே குறிப்பிட்டுள்ள சாதியினர்கள் சனாதனம் தலைவிரித்தாடும் போது,

எந்த சனாதனிகள் இவர்களுக்குக் குலத் தொழிலைச் செய்ய நிர்பந்தித்தார்களோ, அதே சனாதனிகள்தான், அன்றைக்கு நிர்ப்பந்தித்த தொழிலைதான், இன்றைக்கு சனாதன ஒன்றிய பா.. அரசு மூலம்

இப்போது 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஸனாதனத் திட்டத்தை அறிவித்து, 'அவர்களுக்கான குலத் தொழிலை ஊக்குவிப்போம்' என அறிவித்திருக்கிறது.

மீண்டும் அனைவருக்குமான கல்வியை மறுத்து, முன்னேற விடாமல் தடுப்பதற்கு , இந்த மாதிரியான சனாதன திட்டத்தை அறிவித்திருக்கிறது சனாதன ஒன்றிய பா.. அரசு.

&&&&&&

சாதி அமைப்பைப் பற்றி கல்வெட்டுகளில் கிடைக்கும் தகவல்கள் இருந்தாலும், அந்தக் கால சமூகத்தின் முழுப் படம் அதில் கிடைக்காது. ஏனெனில் கல்வெட்டுகள் பெரும்பாலும் செல்வமும் அதிகாரமும் இருந்த கொடையாளிகள் எழுதியவை. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பறையர், புலையர் போன்றவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே குறிப்புகள் கிடைக்கின்றன. இருந்தாலும் கிடைக்கும் தகவல்களை வைத்து அவர்களின் நிலை மிகவும் தாழ்ந்ததாக இருந்தது என்பதை அறிய முடிகிறது.

அந்த காலத்தில் சிலர்தீண்டத்தகாதவர்கள்என்று கருதப்பட்டனர். அவர்கள் பல இடங்களில் நிலத்தாரின் சொத்துக்களைப் போலவே நடத்தப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த பகுதிகள்புலைச்சேரிஅல்லதுசேரிஎன்று அழைக்கப்பட்டன. சில நேரங்களில் அந்த குடியிருப்புகளையும் நிலத்தாரே விற்றதாக கல்வெட்டுகள் சொல்கின்றன.

முதலாம் ராஜராஜன் கால கல்வெட்டுகளில்தீண்டாச்சேரிஎன்ற சொல் வருகிறது. “சேரிஎன்றால் குடியிருப்பு பகுதி; “தீண்டாஎன்றால் தொடக்கூடாதவர். அதாவதுதீண்டாச்சேரிஎன்பது தீண்டத்தகாதவர்களின் குடியிருப்பு. இதுபோன்ற நேரடி குறிப்புகள் தமிழ் கல்வெட்டுகளில் மிகவும் அரிதாகவே உள்ளன.

அதே கல்வெட்டுகளில்பறைச்சேரிஎன்றும் குறிப்பிடப்படுகிறது. இது பறையர் வாழ்ந்த பகுதி என்று புரிகிறது. 40 கிராமங்களில் 33 கிராமங்கள் பற்றிய விவரம் தெரிகிறது; அதில் 20 கிராமங்களில் பறைச்சேரி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்தீண்டாச்சேரிகுறிப்பு மிகக் குறைவாக மட்டுமே வருகிறது. இதனால் அது எல்லா இடங்களிலும் இருந்ததில்லை என்று தோன்றுகிறது.

தீண்டாச்சேரிமற்றும்பறைச்சேரிஒரே பொருளா அல்லது வேறுபட்டதா என்பது தெளிவாக இல்லை. சில இடங்களில் இரண்டும் தனித்தனியாக குறிப்பிடப்பட்டதால், அவை முழுமையாக ஒன்றல்ல என்பதும் தெரிய வருகிறது.

13ஆம் நூற்றாண்டு வடஆற்காடு பகுதியில் கிடைத்த ஒரு கல்வெட்டு பல சமூகங்களை வரிசைப்படுத்தி குறிப்பிடுகிறது. அதில் பறையர்

கீழ்நிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழே சக்கிலியர், இறுதியில் இருளர் என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் அந்த காலத்தில் பறையர் சமூக நிலை மிகவும் தாழ்ந்ததாக இருந்தது என்று புரிகிறது.

14ஆம் நூற்றாண்டு திருப்பாலத்துறை கல்வெட்டில், புலையர் போன்றோர் அடிமைகளாக வாங்கி விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த புலையர்களின் பெயர்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் சொத்துப் பொருளைப் போல பரிமாறப்பட்டனர் என்பதற்கு ஆதாரம் கிடைக்கிறது. அதே நேரத்தில் சில இடங்களில் உயர்சாதியான வெள்ளாளர்களும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அடிமைகளாக மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1229 ஆம் ஆண்டு குடுமியான் மலை கல்வெட்டு பல சாதிகளைச் சொல்கிறது. அதில் பிராமணர், செட்டி போன்றோர் மேல்நிலையிலும், பறையர், பள்ளர் போன்றோர் மிகவும் கீழ்நிலையிலும் வைக்கப்பட்டுள்ளனர். “அந்தணன் தலையாக, பள்ளன் கடையாகஎன்ற வகையில் சமூக வரிசை இருந்ததை இது காட்டுகிறது.

முடிவாக, சோழர் காலத்தில் சமூகத்தில் தெளிவான சாதி படிநிலை இருந்தது. சிலர் நிலம் மற்றும் அதிகாரம் பெற்றவர்களாக இருந்தார்கள்; பறையர், புலையர் போன்ற பலர் மிகவும் கீழ்நிலையிலும், சில நேரங்களில் அடிமை நிலைமையிலும் வாழ்ந்தனர் என்பதை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

 ^^^^^^^


1981 மீனாட்சிபுரம் மதமாற்றம்

மீனாட்சிபுரம் கிராம மக்கள் முழுமையாக இஸ்லாம் மதத்திற்கு மாறிய சம்பவம், அந்நாளில் இந்திய அளவில் பெரும் பேசுபொருளாக மாறியது. அந்தச் சூழ்நிலைக்கு விதை போட்டவர் எம்.ஜி.ஆர் என்பதையும் சிலர் குறிப்பிட்டனர். “இஸ்லாமியர்களுக்கென்று ஒரு இயக்கம், கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு இயக்கம் இருப்பதுபோல், இந்துக்களுக்கென்றும் ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்என்று அவர் உரையாற்றியதோடு, அதனைத் தொடங்கிய நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதாகச் சொல்லப்பட்டது.

1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று, திருநெல்வேலி மாவட்டம் (இப்போது தென்காசி பகுதி) உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. அந்த நாளில் சுமார் 180 குடும்பங்களைச் சேர்ந்த தலித் மக்கள் ஒரே நேரத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். இந்த நிகழ்வு தமிழகத்திலேயே அல்ல, இந்திய அளவிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

அந்தக் காலத்தில் பல அரசியல் தலைவர்களும், மத அமைப்புகளின் பிரதிநிதிகளும் அந்த கிராமத்துக்கு சென்று நிலையைப் பார்த்தார்கள். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், மத்திய அமைச்சர் யோகேந்திர மக்வானா, தமிழக காங்கிரஸ் தலைவர் எல். இளையபெருமாள் போன்றோர் நேரில் சென்றதாக குறிப்பிடப்படுகிறது. அப்போது தமிழக முதல்வராக எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) இருந்தார்.

இந்த மதமாற்றத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கருத்துகள் வந்தன.

·        சிலர், குறிப்பாக ஆரிய சமாஜ் போன்ற அமைப்புகள், சாதி ஒடுக்குமுறையே முக்கிய காரணம் என்று கூறின.

·        மத்திய அரசு சார்பில் வந்த யோகேந்திர மக்வானாவும் அங்கே சாதி அடக்குமுறைகள் இருந்ததால் மக்கள் மதம் மாறியதாக தெரிவித்தார்.

·        ஆனால் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், வெளிநாட்டு பணம் மற்றும் வெளிப்புற தாக்கம் காரணமாக இந்த மாற்றம் நடந்ததாக கூறினார்.

பின்னர் இந்த விஷயம் தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக நாவலர் நெடுஞ்செழியன் பேசும்போது, வெளிநாட்டு பணம் காரணம் இல்லை; அங்கே இருந்த சில சாதி தொடர்பான பிரச்சினைகள்தான் காரணம் என்று விளக்கம் அளித்தார்.


மதம் மாறிய மக்களின் நிலை குறித்து பின்னர் பேசப்பட்டபோது, அவர்கள் சமூக மரியாதை மற்றும் வாழ்வாதாரத்தில் சில முன்னேற்றங்களை பெற்றதாக கூறப்பட்டது. முன்பு பொதுவிடங்களில் தொழில் செய்ய முடியாத நிலையில் இருந்தவர்கள், பின்னர் கடைகள் மற்றும் வணிகங்களை நடத்தும் வாய்ப்பைப் பெற்றதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர்.

மீனாட்சிபுரம் மதமாற்றம் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. ஒரே கிராமத்தில் பல குடும்பங்கள் ஒரே நாளில் மதம் மாறியது சமூக, அரசியல், பண்பாட்டு தளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் மதமாற்றம் முன்பும் நடந்திருந்தாலும், இவ்வாறு ஒரே இடத்தில் பெருமளவு மக்கள் ஒரே நேரத்தில் மாறியது முக்கிய வரலாற்றுச் சம்பவமாகக் கருதப்படுகிறது.

தேநீர்க் கடையைக்கூட பொது இடத்தில் வைக்க முடியாத நிலையில் வாழ்ந்தவர்களால் இன்று வணிக வளாகங்களை நடத்த முடிகிறது. அங்கே உமர் ஷெரிப் (பகுதி 2இல் இவரது நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது, பக்.63) என்ற மதம் மாறிய ஒருவர், பொது இடத்தில் மிகப்பெரிய வணிக வளாகம் வைத்துள்ளார்.

நீண்டகாலமாக இஸ்லாமியர்களாக இருந்தவர்களுடன் இன்று பெண் கொடுக்கவும், பெண் எடுக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது அங்கே பள்ளிவாசலும் உள்ளது.

இதற்கு முன்பு, குறிப்பாக மதுரை மாவட்டம் கூரையூர் என்ற கிராமத்தில், 1980ஆம் ஆண்டு 200 தலித்துகள் இஸ்லாமுக்கு மாறினர். அதன் பின்னர் தென்காசி வட்டாரத்தைச் சுற்றி பரவலாக மதமாற்றம் நடந்தது. சாதி பிரச்சினைகள் மற்றும் அரசின் நெருக்கடிகள் காரணமாக, ஒரு கிராமத்தில் வசித்த ஒட்டுமொத்த தலித் மக்கள் கலந்தாலோசித்து, அதில் 180 குடும்பங்கள் ஒரே நேரத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகும்.

மதமாற்றம் என்பது அவ்வப்போது நிகழும் ஒன்றே. அது இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறுகிறது. ஆனால், ஒரே நேரத்தில் கணிசமான மக்கள், ஒரு கலாச்சார வாழ்க்கை முறையிலிருந்து திடீரென மற்றொரு வாழ்க்கை முறைக்கு மாறுவது சாதாரணமான ஒன்று அல்ல.

அந்த வகையில், சமூக, பண்பாட்டு, அரசியல் ஆகிய எல்லா தளங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றம் கருதப்படுகிறது.

இந்த பிரச்சினையைப் பற்றி முதலில் பேசியவர் எம்.ஜி.ஆர். வெளிநாட்டிலிருந்து வந்த பணமே இந்த மதமாற்றத்திற்கு காரணம் என்று அவர் கூறினார். ஆனால், அதுகுறித்து சட்டசபையில் விவாதம் நடந்தபோது அவர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக துணைத் தலைவர் நெடுஞ்செழியன் பதிலளித்தார்.

இந்த கேள்வியை எழுப்பியது அன்பழகன். திமுக மற்றும் அதன் கொள்கைகளில் ஆழமாக இருந்த நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர் கூறிய கருத்தை மறுத்து பேசினார். வெளிநாட்டு பணம் காரணமல்ல, போலீசாரின் அத்துமீறலே இதற்குக் காரணம் என்று அவர் விளக்கமளித்தார்.


உலகம் முழுவதும் நடந்த பெரிய யுத்தங்கள், சண்டைகள், உலகப்போர்கள் ஆகியவற்றின் பின்னணியில் பெரும்பாலும் முதலாளித்துவம் மற்றும் வியாபார போட்டி இருந்தது என்று  கூறுகிறார்கள். அமெரிக்கா, வியாபார மற்றும் அரசியல் போட்டியில் இருந்த ஜப்பான்மீது அணுகுண்டு வீசியது , இந்தியாவில் தன்னுக்கு போட்டியாக இருந்த திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் பணம் கொடுத்து உள்ளூர்வாசிகளைப் பயன்படுத்தி வீழ்த்தினர் என்றும் வரலாறு சொல்லுகிறது.

இன்றைய காலத்தில் எல்லாமே இணையவழியாக மாறிவிட்டது. ஒரு YouTube வீடியோ பார்த்தால், சில நேரங்களில் வீடியோ தாமதமாக சுழன்று கொண்டிருக்கும். ஆனால் விளம்பரம் வரும் போது அது தடையின்றி ஓடுகிறது. இதிலும் ஒரு நுட்பமான முதலாளித்துவ அரசியல் செயல்படுகிறது என்பதை உணரலாம்.

இந்த முதலாளித்துவ அமைப்பே சமூகத்தில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியது; அதில் ஒன்று ஜாதி அமைப்பாகும் என சிலர் கருதுகிறார்கள்.

உலகின் பல மதங்களும், மனிதர்களை ஒழுக்க நெறிக்குள் கொண்டு வரவும், சமூக ஒழுங்கை நிலைநிறுத்தவும் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்டன. பயம், நம்பிக்கை, கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். ஆனால் காலப்போக்கில் இந்த மத அமைப்புகள் பெரிய அதிகார கட்டமைப்புகளாக மாறின. சில சமயங்களில், மதத் தலைவர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கூட மதிக்காத நிலை உருவானது.

இதுபோன்ற நிலையை சவால் செய்தவர்களில் ஒருவர் பெரியார். அவர் சிலைகளை மட்டும் அல்ல, அந்த சிலைகளைக் கண்டு நம்பும் மனநிலையையும் சவால் செய்து, அதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். பெரியாரின் சிந்தனைகள் பிறகு உலகளாவிய அளவில் பரவின 

சுமார் மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வெவ்வேறு சூழ்நிலைகளில், உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறையைச் சுற்றி பல மதங்கள் உருவாகின. ஒவ்வொரு மதத்துக்கும் தனித்துவமான வரலாறு உள்ளது. கிறிஸ்தவம், யூதம், இஸ்லாம், இந்துமதம் போன்றவை அந்தந்த சமூகத் தேவைகளின் அடிப்படையில் வளர்ந்தன.

ஒரு காலத்தில் மதம் ஒரு தேவையாக இருந்திருக்கலாம். சமூக ஒழுங்கை காப்பதற்கும், மனிதர்களை ஒழுங்குபடுத்துவதற்கும் அது உதவியிருக்கலாம். ஆனால் காலம் மாறிய பிறகும், அதே கட்டமைப்புகள் தொடர்ந்ததால் பல சிக்கல்கள் உருவாகின.

உதாரணமாக, சில மதத் தலைவர்கள் எளிமையை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் சில பாரம்பரிய மத அமைப்புகள் இன்னும் சமூக சமத்துவத்தை முழுமையாக ஏற்காத நிலை உள்ளது என்று விமர்சனங்கள் உள்ளன.

அம்பேத்கர் புத்தமதத்தைத் தேர்வு செய்தார். பெரியார் வேறு வழியை எடுத்தார். இருவரின் நோக்கமும் சமூக சமத்துவம் தான். அவர்களின் அணுகுமுறைகள் வேறுபட்டாலும், சமூக நீதி பற்றிய சிந்தனைகளை அவர்கள் எழுப்பினர்.

இன்றைய சூழ்நிலையில், நாம் மதம், ஜாதி, சமூக கட்டமைப்பு ஆகியவற்றை வரலாற்றுப் பார்வையுடன் ஆராய்ந்து, மனித சமத்துவத்தை முன்னிறுத்துவது முக்கியமாகிறது.



 


 உழைப்பு, உற்பத்தி முதலாளித்துவத்தால் சுரண்டப்படும்

டிவிஷன் ஆஃப் லேபர் ஜாதியாக மாறிய வரலாற்றை சிவசுப்பிரமணியம் மக்கள் மொழியில் வரலாற்றை ஆராய்கிறார் அதில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன்.


தமிழ்நாட்டில் பழமையான நூற்பாலைகளில் ஒன்றான கோரல் மில் (தற்போது மதுரை கோட்ஸ்) குறித்த நாட்டார் பாடல்களைச் குறிப்பிடலாம். 1888ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வாலையின் ஆவணங்களிலும், அரசின் பதிவுகளிலும் ஹார்வி, பிராங் ஹார்வி என்ற வெள்ளையர்களால் பதிவு செய்யப்படாத செய்திகளை, இங்கு பணியாற்றிய தொழிலாளர்களிடையே பரவியிருந்த நாட்டார் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

எந்திரங்கள் நூல் நூற்கும் போது, நூலில் பஞ்சு திரளாக அண்டி விழுதல் என்று கூறுவர். எந்திரத்துடன் எந்திரமாக மணிக்கணக்கில் நின்றிருக்கும் தொழிலாளி, ஒரு வினாடி கூட கண்ணைத் திருப்பினால், அண்டி விழுவதைத் தடுக்க முடியாமல் போய்விடும். சூசைமுத்து என்ற மேற்பார்வையாளர் இதற்காகத் தெங்கமலம் என்ற பெண் தொழிலாளியை அடிப்பதையும், அடி பொறுக்க முடியாமல் அவள் எதிரிலிருந்த கடற்கரைக்குத் தப்பிச் செல்வதையும் ஒரு நாட்டார் பாடல் இவ்வாறு சித்தரிக்கிறது:

அண்டி விழுகுதுன்னு அடிக்கிறானே சூசைமுத்து
அடி பொறுக்க முடியாமலே ஓடுறாளே தெங்கமலம்

கடற்கரைக்கு துரை (வெள்ளையன்) வருவதை எச்சரித்துத் தொழிலாளர்கள் பாடிய மற்றொரு பாடல்:

தொங்கலில் வாரான் தொரை, தள்ளிப்போ மூணு அடி
கிட்டப் போனா எட்டி உதைப்பான் மூணு நாளு 

வெள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மலைத் தோட்டங்களில் பணி செய்யக் கடல் கடந்து சென்ற தமிழ்ப் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்முறைகள் குறித்து ஆங்கில ஆட்சியின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பெரிதாக பதிவு இல்லை. ஆனால், நாட்டார் பாடல்கள் மற்றும் வாய்மொழி வழக்காறுகள் இந்த மறைக்கப்பட்ட அனுபவங்களை நினைவில் வைத்திருக்கின்றன. அவை அதிகார வரலாற்றில் காணாமல் போன மனித வலிகளுக்குச் சாட்சி நிற்கின்றன.

உதாரணமாக, பர்மா (இன்றைய மியான்மர்) நாட்டிற்கு தோட்டத் தொழிலாளியாகச் சென்று திரும்பிய ஒரு பெண் பாடிய நாட்டார் பாடலில் இடம்பெறும் வரிகள் இதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது:

ராத்திரி வேலைக்கு ராச்சம் பலம் வேறே,
ராசா என் டங்கன் துரை சேத்துக் கொடுத்தாலும் சேட்டை பண்ணுவாரே,
சின்னப் பெண்ணைக் கண்டுட்டால்

காலுச்சட்டை போட்டுக், கையை உள்ளே விட்டுக்,
கண்ணை நல்லாச் சிமிட்டிக், கங்காணிமாரைத்தான் கைக்குள்ளே போட்டுக்,
காசுகளை இறைச்சு

காடுண்ணும் இல்லை, மேடுண்ணும் இல்லை,
வீடுண்ணும் இல்லையம்மா; கண்ட இடமெல்லாம்
கண்ட கண்ட பொண்ணைக் கையைப் பிடிச்சிழுப்பார்

இவ்வகை வாய்மொழிப் பதிவுகள், அதிகாரப்பூர்வ வரலாற்றில் இடம் பெறாத சமூக உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உதவுகின்றன. அதேவேளை, எல்லா வாய்மொழிக் கூறுகளும் வரலாற்றுச் சான்றாக அப்படியே ஏற்கப்பட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். போலி ஆவணங்கள் இருப்பது போலவே, காலப்போக்கில் மாற்றமடைந்த அல்லது உருவாக்கப்பட்ட வாய்மொழி கதைகளும் இருக்கக்கூடும். எனவே, இத்தகைய தகவல்களை ஆய்வு செய்யும்போது, தகவலாளரின் சார்பு நிலை, காலச்சூழல், மற்றும் பிற ஆதாரங்களுடன் ஒப்பீடு செய்வது போன்ற முறைகள் அவசியமாகின்றன.



தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் கிறிஸ்தவ மத மாற்றத்தின் பின்னணி

வரலாற்றாசிரியர் சிவசுப்பிரமணியன் குறிப்பிடுவது என்னவென்றால், எண் எழுதப்பட்ட மரங்கள் பாதுகாக்கப்படுவது போல, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம் பெண்களின் கண்ணியமும் உடல் பாதுகாப்பும் பல இடங்களில் சிறப்பாகக் காக்கப்பட்டது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில், கிறிஸ்தவ பெண்களுக்கு உள்ளூர் ஜமீன்தார்களாலும் மேல்சாதி நிலத்தரசர்களாலும் தீங்கு விளைவிக்கப்பட்டால், ஆங்கிலேய அரசு அதற்கு தண்டனை வழங்க அதிக முனைப்புடன் செயல்பட்டது.

சாதி அடிப்படையிலான சமூகத்தில், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் அன்றாட அவமதிப்பு, கட்டாய வேலை, மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றிற்கு உள்ளாகி, நீதி கிடைக்க வாய்ப்பில்லாமல் இருந்த சூழலில், இந்த சட்ட பாதுகாப்பு மிகப் பெரிய அர்த்தம் கொண்டதாக இருந்தது. பல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது மத நம்பிக்கைக்காக மட்டுமல்ல; அது உயிர் பாதுகாப்பு, கண்ணியம், மற்றும் தங்கள் புகார் கேட்கப்படும் ஒரு அமைப்பை நாடும் முயற்சியாக இருந்தது.

சிவசுப்பிரமணியனின் ஆய்வு இந்த சட்டப் பொறுப்புணர்வு மற்றும் பாதுகாப்பு தான் பல தாழ்த்தப்பட்ட தமிழ்ச் சமூகங்களை கிறிஸ்தவ மதத்தைத் தழுவ தூண்டிய முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தது என்று விளக்குகிறது.


மதுரா காவல் நிலைய பாலியல் பலாத்கார வழக்கு (Mathura Custodial Rape Case) ஆகும். இந்த வழக்கின் தீர்ப்பு தான் பின்னர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கான சட்ட மாற்றங்களுக்கு நேரடி காரணமாக அமைந்தது.

Mathura Custodial Rape Case (1972) சம்பவத்தின் சுருக்கம் 

மராட்டிய மாநிலத்தில் 16 வயது ஆதிவாசி பெண் மதுரா காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டபோது, காவலர்கள் கன்பட் மற்றும் துக்காராம் ஆகியோரால் பாலியல் பலவந்தத்திற்கு ஆளானார்.

மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு

மதுரா முன்பு காதலனுடன் உடலுறவு கொண்டிருந்ததால், அவள் பாலியல் பலவந்தத்திற்கு ஆளாகியிருக்க முடியாது என்று கூறி, இரு காவலர்களும் விடுவிக்கப்பட்டனர்

உயர்நீதிமன்ற தீர்ப்பு

உயர்நீதிமன்றம்,

அச்சுறுத்தல், பயம், அதிகாரம் ஆகியவற்றால் ஒரு பெண் எதிர்ப்பு காட்டாமல் இருப்பதைஇசைவு’ (consent) என்று கருத முடியாது
என்று குறிப்பிட்டு, கன்பட்டை குற்றவாளி என நிரூபித்து 5 ஆண்டு தண்டனை வழங்கியது.

Tukaram v. State of Maharashtraஉச்சநீதிமன்ற தீர்ப்பு (1979)

உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மாற்றி, கன்பட்டை விடுவித்தது. காரணங்கள்:

·        மதுரா உதவி கேட்டு கூச்சலிடவில்லை

·        உடலில் கடுமையான காயங்கள் இல்லை

·        இசைவுத் தன்மைஇருந்ததாக நீதிமன்றம் கருதியது

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெண்கள் இயக்கங்களின் எதிர்ப்பை கிளப்பியது.

சட்ட மாற்றங்களுக்கு காரணம்

இந்த வழக்கிற்கு எதிராக நாட்டில் எழுந்த பெண்கள் போராட்டம் காரணமாக, 1983-ல் இந்திய குற்றவியல் சட்டங்களில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன:

·        காவல் நிலைய பாலியல் பலாத்காரம் (custodial rape) தனி குற்றமாக அறிவிக்கப்பட்டது

·        ‘Consent’ என்ற சொல்லின் சட்ட விளக்கம் மாற்றப்பட்டது

·        பாதிக்கப்பட்ட பெண்ணின் குணநலன்கள் குறித்து கேள்வி எழுப்புதல் கட்டுப்படுத்தப்பட்டது

·        சாட்சியச் சுமை (burden of proof) சில சூழல்களில் குற்றவாளியிடம் மாற்றப்பட்டது

ஒரு பெண் முன்பு உடலுறவு கொண்டிருந்தாலோ, அல்லது எதிர்ப்பு குரல் எழுப்பவில்லை என்பதாலோ, அவள் பாலியல் பலவந்தத்திற்கு உட்படவில்லை என்று கருத முடியாது. குறிப்பாக அதிகாரத்தின்

கட்டுப்பாட்டில் (custody) உள்ள நிலையில், பயம் மற்றும் அச்சம் காரணமாக அமைதியாக இருப்பதுஇசைவுஆகாது. சட்டம் பெண்களின் மௌனத்தை இசைவாகப் பொருள் கொள்ளக் கூடாது.”

இந்த வழக்கின் வரலாற்றுப் முக்கியத்துவம்

இந்த வழக்கு தான் இந்தியாவில்custodial rape”, “consent”, “burden of proofபோன்ற சட்ட கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய வைத்த முக்கிய திருப்புமுனையாகும்.


சீனப் பெருஞ்சுவர்மென்ங்ஜியா நாட்டார் கதை

சீன மொழியின் நாட்டார் நினைவுகளில் உயிருடன் துடிக்கும் ஒரு கதை உள்ளது. அது மென்ங்ஜியா என்ற பெண்ணின் கண்ணீரால் எழுதப்பட்ட வரலாறு. பேரரசனின் அரண்மனை வாசலில் நின்று, தன் உடைந்த இதயத்தை கைகளில் ஏந்தியபடி, அவள் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறாள். “என் கணவனுக்கு முறையான சவஅடக்கம் வேண்டும்; அவன் பெயர் மறக்கப்படக் கூடாது. மேலும், பெருஞ்சுவர் கட்டும் பணியில் உயிரிழந்த ஆயிரமாயிரம் தொழிலாளர்களுக்காக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட வேண்டும்என்று.

அந்த வேண்டுகோள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட துயரமல்ல; அது மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மனித உயிர்களின் ஒட்டுமொத்த அழுகுரல். இறுதிச் சடங்குகள் முடிந்த பின், தன் வாழ்க்கையில் இனி எதுவும் எஞ்சவில்லை என்ற உண்மையை உணர்ந்த மென்ங்ஜியா, கடலின் நீல விரிப்பில் தன்னை ஒப்படைத்தாள் என்று ஒரு கதை சொல்கிறது. வேறு சில வடிவங்களில், தன் கணவனின் உடலையோ, அவன் எலும்புகளையோ கண்ட அதே நொடியில், அவள் கடலுக்குள் குதித்தாள் என்றும் கூறப்படுகிறது. எந்த வடிவமாக இருந்தாலும், அந்த முடிவு ஒரே உண்மையைச் சொல்கிறதுகாதல் தாங்க முடியாத வலியாக மாறிய தருணம்.

இந்த நிகழ்வு, பெருஞ்சுவரின் கிழக்கு முனையிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு நிற்கும் ஒரு பாறை, மென்ங்ஜியா அமர்ந்து கடலை நோக்கி அழுத பாறை என்று மக்கள் நம்புகின்றனர். “தன் கணவனை எதிர்பார்த்த பெண்ணின் பாறைஎன்ற அர்த்தத்தில் அதுவாங்ஃபுசிஎன அழைக்கப்படுகிறது. காலம் கடந்து போனாலும், அந்தப் பாறையில் அவள் பார்வை இன்னும் உறைந்திருக்கிறதென மக்கள் சொல்லிக்கொள்கிறார்கள். அவளின் நினைவாக அங்கு ஒரு கோவிலும் எழுப்பப்பட்டுள்ளது. கடலருகே காணப்படும் இன்னொரு பாறை புதைகுழி மேடு போல தோன்றுவதால், அதுவே அவள் கணவன் வான்ஷிலாங்கின் கல்லறை என்று நம்பப்படுகிறது.

இந்தக் கதை சீன மக்களின் வாய்மொழியில் நாட்டார் பாடல்களாகப் பிறந்தது; நாட்டார் நிகழ்த்துக் கலைகளில் உயிர் பெற்றது; பின்னர் நாட்டிய நாடகமாக வடிவெடுத்தது. இன்று கூட, அந்த நாடகம் மேடையில் நிகழ்த்தப்படும்போது, பார்வையாளர்களின் கண்களில் ஈரம் உறைகிறது.

ஒரு சீன நாட்டார் பாடல், பெருஞ்சுவரை நோக்கிச் செல்லும் மென்ங்ஜியாவின் குரலாக ஒலிக்கிறது. அந்தக் குரல், சுவரின் பின்னால் மறைந்திருக்கும் கொடூரத்தை உலகத்துக்குச் சொல்கிறது:

பூக்கள் பூக்கும், பறவைகள் பாடும் வசந்த காலம் நண்பர்களையும் உறவுகளையும் அணைத்துக்கொள்ள அழைக்கிறது. எல்லாப் பெண்களும் தங்கள் கணவர்களுடனும் குழந்தைகளுடனும் வாழ்கிறார்கள்; ஆனால்அந்தோ, நான் மட்டும்!

என் கணவரின் எலும்புகள் புதைக்கப்பட்ட இந்தச் சுவரை நோக்கி நான் செல்கிறேன். பெருஞ்சுவரே! பெருஞ்சுவரே! பகைவர்களிடமிருந்து எங்களை காப்பாற்ற முடிந்தால், எங்கள் உயிர்களையும் ஏன் காப்பாற்ற முடியவில்லை?”

உலக அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் சீனப் பெருஞ்சுவர், சீன மக்களுக்கு அளித்த பெருமையைவிட அதிகமான துயரத்தையும் கண்ணீரையும் தன் அடித்தளத்தில் சுமந்து நிற்கிறது. அதை கட்டி முடித்த காலத்தில், எண்ணற்ற தொழிலாளர்களின் உயிர்கள் மண்ணோடு கலந்தன; அவர்களுக்கு முறையான சவஅடக்கம் கூட மறுக்கப்பட்டது. அந்த அவலத்தின் எதிரொலியே மென்ங்ஜியாவின் கதை.

கொடூரமாக கட்டப்பட்ட இந்தச் சுவர் இடிந்து விழ வேண்டும்; மரியாதையின்றி உயிரிழந்த மனிதர்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும்என்ற சீனப் பொதுமக்களின் ஆழ்மன விருப்பம் இந்தக் கதையில் வெளிப்படுகிறது. அதே நேரத்தில், அந்தப் பேரரசனை மக்கள் சாடுகிறார்கள்; அவனை முட்டாளாக்கி மகிழ்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, சீனப் பெருஞ்சுவரின் பின்னால் மறைந்து கிடக்கும் மனிதாபிமானமற்ற கொடூரத்தை, மென்ங்ஜியாவின் கண்ணீர் இந்தக் கதையின் வழியாக உலகத்திற்கு வெளிச்சம் போடுகிறது.

 


 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பின் தங்கிய சாதியைச் சேர்ந்தவர்கள் ஆதிக்க சக்திகளுக்கும் அவர்கள் உருவாக்கிய சமூக மரபுகளுக்கும் எதிராகச் செயல்பட்டுள்ளார்கள். இதன் விளைவாக அவர்களின் ஆத்திரத்திற்கு ஆளாகிக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் இவர்களில் பெரும்பாலோர் தெய்வமாக

இடம்பெற்றுள்ள பண்பாட்டு மேலாண்மை குறித்த ஆய்வை. சாதிய உறவுகளையும் மோதல்களையும் மையமாக கொண்டே நிகழ்த்த வேண்டியுள்ளது. பொருளாதாரப் போராட்டங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி நிகழ்த்தும் ஆய்வுகள் முழுமையான சமூகச் சித்திரத்தை நமக்கு வழங்குவதில்லை. அதே நேரத்தில் பண்பாட்டு நிர்ணயவாதத்திற்கு (Cultural determinism) ஆளாகி, பொருளாதார முரண்பாடுகளையும் வர்க்கப் போராட்டங்களையும் புறந்தள்ளி விட்டு மேற்கொள்ளும் ஆய்வுகளும் முழுமையான பயனைத் தரா என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்

மேலாண்மையும் சாதியமும் இணைந்து காணப்படும் நம் சமூகத்தில் பண்பாட்டு மேலாண்மை பின்வரும் மூன்று வழி முறைகளில் நிலைநாட்டப்பட்டுள்ளது

* பண்பாட்டு அடையாளங்களை மறுத்தல் 

* இழிவான பண்பாட்டு அடையாளங்களை வழங்குதல் 

* வழக்கிலிருக்கும் பண்பாட்டு அடையாளங்களை இழிவு படுத்தல் அல்லது மாற்றி அமைத்தல்.

பண்பாட்டு அடையாள மறுப்பு

பண்பாட்டு அடையாள மறுப்பானது நம் சமூகத்தில், கல்வி -பெயரிடல் - உணவு - ஆடை - குடியிருப்பு ஒப்பனை - புழங்கு பொருட்கள் - வாகனங்களைப் பயன்படுத்துதல் எனப் பல்வேறு நிலைகளில் வெளிப்பட்டது. இந்தியச் சமூகத்தில் நிலவிய பண் பாட்டு அடையாள மறுப்புத் தொடர்பான சில செய்திகளை இனிக் காண்போம்

'பெயரில் என்ன இருக்கிறது' என்பார் ஷேக்ஸ்பியர். ஆனால் மனிதனின் பெயரிலும் பண்பாடு இருக்கிறது. பிரபஞ்சன் (1990: 233) எழுதிய 'மானுடம் வெல்லும்' என்ற நாவலில் அம்பலக்காரரின் காரியக்காரர் நாராயணப் பட்டனிடம் தனக்கு மகன் பிறந்த செய்தியைப் பண்ணையாள் தெரிவிக்கிறான். கொடுக்காப் புளி மரத்தடியில் அமர்ந்திருந்த நாராயணப்பட்டன், "சின்னப் பறையன்" பிறந்திருக்கிறானா? கொடுக்காப்புளின்னு பெயர் வையடா" என்று சொல்ல, அதன்படியே கொடுக்காப்புளி என்று பெயரிடப்படுகிறது. தன் மகனுக்குத் தன் தந்தையின் நினைவாகச் சுப்பன் என்ற பெயரை இடவேண்டுமென்ற அவனது விருப்பம் நிறைவேறவில்லை. இது நாவலாசிரியரின் மட்டுமீறிய கற்பனையல்ல. பழைய தமிழ்ச் சமூகத்தின் நிலையே இங்கு வெளிப்பட்டுள்ளது பெயரிடுதல் தொடர்பாக மனுதர்ம சாஸ்திரம் பின்வரும் விதிமுறை களை வகுத்துள்ளது

நாமகரணத்தினால் பிராமணனுக்கு மங்களமும் ஷத்திரி யனுக்கு பலமும், வைஸ்யனுக்கு தனமும், ஏனையோருக்கு அவர் தம் பணியையும் குறித்தும் பெயர்களை இட வேண்டும்

பிராமணனுடைய பெயர் மேன்மையைக் குறிக்கும் சர்மன், ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் வர்மன், வைசியனுக்கு வளத்தைக் குறிக்கும் பூபதி, நாலாமவனுக்குப் பணிவிடை யைக் குறிக்கும் தாசன் என்றிவ்வாறு அவரவர் பெயர்களுடன் பட்டங்கள் வழங்கிவர வேண்டியது (தாசன் -அடிமை

இவ்விதிமுறை கறாராகக் கடைபிடிக்கப்பட்டதற்குப் பல சான்றுகளைக் குறிப்பிடலாம். சுப்பிரமணியன் என்ற பெயரினைச் சுப்பன் என்றுதான் ஒடுக்கப்பட்ட மக்கள் இட வேண்டும். மாடசாம் கந்தசாமி என்று முடியும் பெயர்களை ஆண்களும், மாடத்தி அம்மாள், மாரி அம்மாள் என்று முடியும் பெயர்களைப் பென் களும் இடக்கூடாது. இதனடிப்படையில்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் மாடன், சுந்தன், கருப்பன், மாடத்தி, மாங் என்று சுருக்கமாகப் பெயர் இடப்பட்டிருந்தனர்.

மக்கள் பெயரிடும் முறையில் நீண்ட காலமாகக் கொங்குப் பகுதியில் நிலவி வந்த தடை, விலக்குகளை (Taboo) அன்பிற்குரிய மாணவர் சுமுத்துக்குமரவேல் குறிப்பிட்டார். இதன் எச்சங்களை இன்றும் ஓரளவு காண முடியும் என்று கூறிய அவர், சான்றாகச் சில பெயர்களைக் கூறினார். அவற்றைப் பின்வருமாறு பட்டிய லிட்டுள்ளேன்

ஆதிக்க சாதியினரின் பெயர்  

அதற்கு இணையாக ஒடுக்கப்பட்ட சாதியினர் இடவேண்டிய பெயர் 

1. ஆறுமுகசாமி 

ஆராண் 

2 கருப்பசாமி 

கருப்பன் 

3. குப்புசாமி 

குப்பன் 

4. சின்னச்சாமி 

சின்னான் 

5. நாச்சம்மாள் 

நாச்சாள் 

6. பழனாத்தாள் 

பழனாள் 

7. பழனிச்சாமி 

பழனி 

8. மாரப்பன் 

மாரன் 

9. வீரசாமி 

வீரன் 

10.வேலுசாமி 

வேலான்

இச்சமூக நடப்பியலின் தாக்கத்தினால்தான் சமூகத்தின் கடைகோடி மனிதர்களைக் குறிப்பிட "குப்பனும், சப்பனும்" என்று சொல்லாட்சி இன்றும் வழக்கில் உள்ளது.


மக்கட் பெயரிடுதலின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் பண்பாட்டு இழிவில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவை விடுவிப்பதில் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் தம் பங்களிப்பைச் செய்துள்ளன

பெயர் என்ற பண்பாட்டு அடையாளம் மட்டுமின்றி, மலர்கள், கோலமிடுதல், ஆடை ஆணிதல், மணப் பொருட்களைப் பூசுதல், வாகனங்களைப் பயன்படுத்துதல் போன்ற பண்பாட்டு அடையாளங் களும்கூட இன்றைய அட்டவணைச் சாதியினரின் முன்னோர் களுக்கு மறுக்கப்பட்டிருந்தன

குடுமி வைத்தலும் பேரிகை கொட்டலும் சோழர் காலத்தில் உயர் குடியினரின் பண்பாட்டு அடையாளமாகக் கருதப்பட்டன. இவ்வடையாளங்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பதை "உவச்சரும் சாலிகளும் பணவரும் குடுமி வைக்கக் கடவர்கள் அல்லாதாராகவும் இவர்கள் நன்மைத் தீமைக்கு பேரிகை கொட்டக் கடவதல்லாதாகவும்" என்று முன்னர் குறிப்பிட்ட ஆச்சாள்புரம் கல்வெட்டு குறிப்பிடுகிறது

மூன்றாம் இராஜராஜனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு மேளமும், பறையும் பயன்படுத்தக் கூடாது, ஒரே தண்ணீர்த் துறையில் நீராடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை ஒரு சாதி யினருக்கு விதித்துள்ளது. இக்கல்வெட்டு சேதமடைந்துள்ளதால்

இத்தடை எச்சாதியினருக்கு விதிக்கப்பட்டது என்பது தெரிய வில்லை

* பெண்கள் கூந்தலில் மலர் சூடிக்கொள்ளக் கூடாது தாலியில் மட்டும் சூடிக் கொள்ளலாம். 

* வீட்டு வாயிலில் தாமரை மலர், தேர் போன்ற வடி விலமைந்த புள்ளிக் கோலங்களைப் போடக் கூடாது. கம்பிக் கோலம் மட்டும் போட்டுக் கொள்ளலாம். 

* பின் கொசுவம் வைத்துச் சேலை கட்டும் போது கொசுவம் தொங்க வேண்டும். 

சந்தனத்தை மார்பிலோ முழங்கையிலோ பூசக்கூடாது. தொண்டைப் பகுதியில் மட்டுமே பூச வேண்டும்.

பல்லக்கு, குதிரை போன்றவற்றைப் பயணம் செய்யப் பயன்படுத்தக்கூடாது. 

பொது நீர்நிலைகளைப் பயன்படுத்தக்கூடாது. 

என்ற கட்டுப்பாடுகள், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் மீது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடைமுறையில் இருந்தன

ஆங்கில அரசில் பணிபுரிந்த ஆதிதிராவிடர்கள்கூட இத்தகைய ஒடுக்குமுறையிலிருந்து விடுபட முடியவில்லை. அருப்புக் கோட்டை காவலர் குடியிருப்பின் கிணற்றிலிருந்து நீரெடுக்க ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த தலைமைக் காவலரை அனுமதிக்கவில்லை. இராவ்சாகிப் முனிசாமிப் பிள்ளை என்பவர் இல் தமிழக சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் இச் செய்தியைக் குறிப் பிட்டுள்ளார் (இராசதுரை

ஜெய்ப்பூர் மன்னராட்சிப் பகுதியைச் சேர்ந்த சக்வாரா என்ற கிராமத்தில் 1936 ஏப்ரல் முதல் தேதியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியை அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். தீர்த்த யாத்திரை சென்று வந்த தீண்டாதார் ஒருவர் தமது சாதியினருக்கு விருந்து வைத்தார். இவ்விருந்து நடந்து கொண்டிருந்தபோது நூற்றுக்கணக்கான இந்துக்கள் தடிகளுடன் நுழைந்து உணவைக் கொட்டிக் கவிழ்த் தனர். விருந்து உண்டவர்களைத் தடிகளால் நையப் புடைத்தனர். இதற்கான காரணம் என்ன தெரியுமா? விருந்தில் நெய் பறிமாறப் பட்டதுதான். இதுகுறித்து அம்பேத்கர்

நெய் பணக்காரர் பயன்படுத்துவதற்குரிய ஆடம்பரப் பொருள் என்றால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் நெய் உண்ணுதல் சமூக அந்தஸ்தை உயர்த்திக்காட்டக்கூடியது என்பதனை யாராவது நினைத்தற் கூடுமோ? ஆனால் சக்வாரா இந்துக்கள் அப்படித்தான் நினைத்தனர். அதாவது. தீண்டாதார் அவர்களின் உணவில் நெய்விட்டுக் கொண்டதன் மூலம் தங்களை அவமதித்துவிட்டதாக நினைத்தனர். நெய் என்பது இந்துக்களின் கெளரவத்தோடு தொடர்புடையது. தீண்டாதார் நெய் வாங்கும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக இருந்த போதிலும் அதை அவர்கள் பயன்படுத்தக்கூடாது. நெய் அவர்களுக்கு உரியது அன்று. இதை உணராமல் தீண்டாதார் இறுமாப்புடன் நடந்து கொண்டதற்காகவே இவ்வாறு தண்டித்தனர்

என்று கூறியுள்ளார். பழைய இராமநாதபுர மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு எதிராக அப்பகுதியின் ஆதிக்க சாதியாகத் திகழும் நாட்டார் சாதியினர் பின்வரும் எட்டுத் தடைகளை 1930 ஆம் ஆண்டு விதித்துள்ளனர்

* பொன் மற்றும் வெள்ளியிலான அணிகலன்களை ஆதி திராவிடர் அணியக்கூடாது. 

* ஆடவர்கள் இடுப்புக்கு மேலும் முழங்காலுக்குக் கீழும் ஆடை அணியக்கூடாது. 

* கோட், சட்டை, பனியன் ஆகியவற்றை அணியக் கூடாது. தங்கள் தலை மயிரைக் கத்திரிக்கக்கூடாது. 

* வீடுகளில் மட்பாண்டங்களைத் தவிர ஏனைய பாத்திரங் களைப் பயன்படுத்தக்கூடாது. 

* துணி, ரவிக்கை, தாவணி ஆகியவற்றைப் பயன்படுத்தி பெண்கள் தம் மார்பை மறைக்கக்கூடாது. 

* மலர்கள், சந்தனம் ஆகியவற்றைப் பெண்கள் பயன் படுத்தக்கூடாது. 

* வெயில், மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆடவர்கள் குடைபிடிக்கக்கூடாது. காலில் செருப்பு அணியக்கூடாது. 

மேற்கூறிய எட்டுக் கட்டுப்பாடுகளும் பண்பாட்டு அடையாள மறுப்பை வெளிப்படுத்தி நிற்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இக்கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாததால் ஆதி திராவிடர்களின் குடிசைகளுக்கு நெருப்பு வைத்ததுடன் அவர்களின்

செம்பு அல்லது பித்தளைப் பாத்திரங்களைப் பயன் படுத்தாமல் மட்பாண்டங்களிலேயே பெண்கள் தண்ணீர் எடுக்க வேண்டும். தலையில் சும்மாடாக வைக்கோலைப் பயன்படுத்த வேண்டும். துணியைப் பயன்படுத்தக் கூடாது. 

* அவர்களது குழந்தைகள் படிக்கக்கூடாது. 

* மங்கல, அமங்கல நிகழ்ச்சிகளில் மேளம் போன்ற இசைக் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது. 

* திருமண நிகழ்ச்சிகளில் குதிரை மீது ஏறி ஊர்வலமாகத் செல்லக்கூடாது. வீட்டுக் கதவுகளையே பல்லக்காகப் பயன்படுத்த வேண்டும். வேறு வாகனங்களைப் பயன் படுத்தக்கூடாது. 

ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பொன்னையா என்பவர் இராமநாதபுரம் - திருநெல்வேலி ஆதிதிராவிட அமைப்பின் சார்பில் லார்டு இர்வின் என்ற ஆங்கில வைசிராய்க்கு அனுப்பிய மனு ஒன்றில் இக்கட்டுப்பாடுகளைப் பட்டியலிட்டுள்ளார். அம்மனுவில் மேற்கூறிய கட்டுப்பாடுகளை மட்டுமின்றி, ஆதி திராவிடப் பெண்கள் விதவைகளைப்போல வெள்ளைச் சேலை மட்டும்தான் உடுத்த வேண்டும், முகத்தில் மஞ்சள் பூசக்கூடாது என்ற இரு கட்டுப்பாடுகளையும் குறிப்பிட்டுள்ளார்

'கள்ளர், மறவர்க்கும் ஆதிதிராவிடர்களுக்கும் வெளிப் படையாக வித்தியாசம் தெரிய வேண்டும்' என்பதுதான் இக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்குக் காரணம் என்று பொன்னையா தம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்

இத்தகைய அடையாள மறுப்பென்பது தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது. தலைமாலை, கழுத்துமலை அணியும் உரிமை வணிகர்க்கு உண்டு என்பதை, 'கண்ணியுத தாரும் எண்ணினர் ஆண்டே' என்ற தொல்காப்பிய

எடுத்துரைக்கிறது. மன்னரிடம் பணிபுரியும் வேளாளர், கண்ணி (தலைமாலை) சூடும் உரிமையுடையவர் என்ற சிறப்பு விதியும் மற்றொரு நூற்பாவில் இடம் பெற்றுள்ளது.

வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும்  

தாரும் ஆரமுந் தேருமாவும் 

மன்பெறு மரபின் ஏனோர்க்குரிய  

என்ற தொல்காப்பிய நூற்பா (மரபியல்: 84) வில் - வேல் - வீரக் கழல் -கண்ணி தார் ஆரம் (பொன் அல்லது முத்தினாலான மாலை) -தேர் - குதிரை ஆகியன குறுநில மன்னர்களுக்கும் உரியது என்று உரைக்கிறது. குறுநில மன்னர் என்போர் வட்டார அளவில் ஆட்சி புரிபவர்கள். மேற்கூறிய அடையாளங்கள் இவர்களுக்கும் உரிய தென்று கூறும் இந்நூற்பாவை அடுத்துவரும் (மரபியல்: 85) 'அன்னராயினும் இழிந்தோர்க்கில்லை'

என்ற நூற்பாவிற்குநான்கு குலத்திலும் இழிந்த மாந்தர்க்கு அவை உளவாகக் கூறப்படா வென்றாவது' என்று இளம்பூரணரும், 'மன்னவர் போலுஞ் செல்வத் தாராகிய இழிகுலத்தோர் நாடாண்டாராயினும் அவர்க்கு இவை கூறலமையாது' என்று பேராசிரியரும் உரை எழுதியுள்ளனர். இவ்வாறு மாலை, அணிகலன் மற்றும் படைக்கலம் தாங்கும் உரிமை இன்ன சாதிகளுக்கு உரியது என்று வரையறுக்கப்பட்டுள்ளது (மேற்கூறிய தொல்காப்பிய நூற் பாக்கள் இடைச் செருகல்கள் என்று தமிழறிஞர் தமிழண்ணல் கருதுகிறார்).  

பல்லக்கு தமிழ்நாட்டின் தொன்மையான வாகனம். இதில் பயணம் செய்வதென்பது சமூக உயர் மதிப்பின் குறியீடாக இருந்தது

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

என்ற குறள் பல்லக்கில் (சிவிகை) அமர்ந்து செல்பவர்கள்               முற் பிறவியில் செய்த அறத்தின் பயனை நுகர்பவர்கள்,       அதைச் சுமந்து செல்பவர்கள் முற்பிறவியல் அறம் செய்யாதவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. இக்குறளின் அடிப்படையில் பல்லக்கில் அமர்

பவர்கள் அதை சுமப்பவர்கள் என்ற இரு சாராருக்குமிடையில் நிலவிய சமூக வேறுபாட்டை நாம் உய்த்துணர்கிறோம்

இராணி மங்கம்மாளின் அமைச்சரும் தளபதியுமான நரசப் பையர், கத்தோலிக்கக் குருக்கள் பயணம் செய்ய பல்லக்கு வழங்கி யுள்ள செய்தி 1708- ஆம் ஆண்டு சேசுசபை மடலில் இடம் பெற்றுள்ளது. இம்மடலை எழுதிய அந்தோணி டயஸ்  பழமொழிகளில் கணக்கன் 

கணக்கனைப் பகைச்சவன் காணி (நிலம்) இழந்தான் என்ற பழமொழி வழக்கிலிருந்த ஒன்றாகும்

"கணக்கன் கோணினா(ல்) காணி கோணும்" (கணக்கன் மனம் கோணினால் காணி (நிலம்) கோணிவிடும்) என்ற பழமொழியில் தன் விருப்பத்திற்கு ஏற்ப நில அளவையைக் கணக்கன் மாறுதல் செய்து விடுவான் என்ற அச்சம் இடம்பெற்றுள்ளது

நிலத்தை அளக்கும் சங்கிலி என்னும் நீட்டல் அளவைக் கருவியைச் சுண்டி இழுத்து நிலத்தின் அளவைக் கணக்கல் குறைத்துவிடுவான் என்பது மக்களின் நம்பிக்கை. ஆண்டான் கவிராயர் என்பவர் ஓட்டப் பிடாரம் ஊரில் பிறந்த "வசைகவி. இவரது நிலத்தை அளக்க வந்த கணக்கனுக்கு இவர் கையூட்டு கொடுக்கவில்லை. எனவே நிலத்தின் பரப்பைக் குறைத்து அளந்து, கையூட்டு கொடுத்த பக்கத்து நிலத்துக்காரன் நிலத்துடன் கவிராயரின் நிலத்தையும் சேர்த்து விட்டான்

கணக்கன் இறந்து போனால் அவன் மீது வெறுப்பும் பயமும் கொண்ட கிராமத்தினர் 'சனியன் ஒழிந்தான்' என்றிருந்து விடுவர். இதனால் எவ்விதச் சிறப்புமில்லாத வெறும் பிணமாகக் கணக்கன் பிணம் காட்சி அளிக்கும். ஆனால் கணக்கன் உயிரோடிருக்கும் போது அவன் தாய் இறந்து போனால் கிராம மக்கள் அனைவரும் அவன் வீட்டு முன்பு கூடி விடுவதுடன் பல்வேறு பொருட்களையும் பணத்தையும் அன்பளிப்பாக வழங்குவர். இதனால் அவனது தாயின் சவ அடக்கம் சிறப்புடன் நடப்பது மட்டுமின்றி ஆதாயம் தரும் விழாவாகவும் அமைந்துவிடும். என்ற பெயரில் கையூட்டாக வழங்கியதையும் தெரிவிக்கிறது.

கணக்கன் மீது கொண்ட சலிப்புணர்வினால்ஓர் ஊருக்கு ஒரு கர்ணம் போதும்'' என்று தெலுங்கில் பழமொழி வழங்க, தமிழில் கணக்கன் பணியை மேற்கொள்ளும் வெள்ளாளரை மனதில் கொண்டு

வேலிக்கொரு வெள்ளாடு ஊருக்கொரு வெள்ளாளன்

என்ற பழமொழி வழங்குகிறது. கணக்கன் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக

கணக்கு முக்கால் 

காலே அரைக்கால் 

கணக்கன் பொண்டாட்டி தாலி அறுக்க 

கணக்கன் பொண்டாட்டி தாலி அறுத்தால் 

கணக்கன் எங்கே சாப்பிடுவான் 

என்ற விடுகதை விளாத்திகுளம், தூத்துக்குடி மாவட்டத் திலுள்ள கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், வட்டங்களில் உள்ள கரிசல் நிலப் பகுதிகளில் இன்றும் வழங்குகிறது

விளையாட்டிலும் வித்தையிலும் 

யதார்த்தத்தில் செய்ய முடியாதவற்றைச் செய்வதற்கு விளை யாட்டு இடம் கொடுக்கும் என்று ஆலன் டண்டிஸ் என்ற நாட்டார் வழக்காற்றியலர் கூறுவார். இதற்குச் சான்றாகத் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பரவலாக விளையாடப்பட்ட "கால் தூக்கிக் கணக்குப் பிள்ளை என்ற விளையாட்டைக் குறிப்பிடலாம்

இரண்டு பேர் அடுத்தடுத்து நின்று கொண்டு தங்கள் கை களைக் கோத்துக் கொள்வர். மற்றொருவன் அவ்விருவருக்கும் பின்புறமாக நின்று தன் வலது முழங்காலை அவர்களது கோத்த இரண்டு பேர் அடுத்தடுத்து நின்று கொண்டு தங்கள் கை களைக் கோத்துக் கொள்வர். மற்றொருவன் அவ்விருவருக்கும் பின்புறமாக நின்று தன் வலது முழங்காலை அவர்களது கோத்த88

கைகளில் ஊன்றிக் கொண்டு தன் கைகளால் அவ்விருவரது தோளைப் பற்றிக் கொள்வான். வேறொருவன் அவனது இடது கால் தரையில் படாதவாறு தாங்கிக் கொள்வான். பின்னர் நால்வரும்

காலு தூக்குற கணக்குப் பிள்ளைக்கு மாசம் பத்து ரூபா

குண்டி தூக்குற கணக்குப் பிள்ளைக்குக்

கூடப் பத்து ரூபா என்று உரக்கப்பாடிக் கொண்டே செல்வர். 

சிறுவர்கள் அனைவரும் உரக்கப் பாடும் பாடல் பணத்துக்கான கணக்கன் எதையும் செய்வான் என்பதை உணர்த்தி நிற்கிறது. கணக்கனை வெளிப்படையாக விமர்சனம் செய்ய முடியாத நிலையில் இவ்விளையாட்டின் வாயிலாக மக்கள் தம் மன உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்

கரிசல் நிலக் கிராமங்களில் கழைக்கூத்தாடிகள் தங்கி வித்தை காட்டுவார்கள். ஏறத்தாழ 45 செ.மீ. நீளமுள்ள துணிப்பொம்மை ஒன்றை வைத்திருப்பார்கள். ஒரு வித்தை காட்டி முடித்துவிட்டு அடுத்த வித்தை காட்டப்போகும் முன் இடையில் "இவன்தான் கோவில்பட்டிக் கணக்கப்பிள்ளை என்று கூறி துணிப் பொம்மை யைத் தரையில் ஓங்கி அடித்து "கோவில்பட்டி கணக்கப்பிள்ளை வாயில மண்ணு" என்று சொல்லி அப்பொம்மையின் முகத்தில் மண்ணை அள்ளிப் போடுவார்கள். வித்தை காட்டத் தொடங் கியதிலிருந்து முடியும் வரை ஏறத்தாழ மூன்று அல்லது நான்கு முறை இந்நிகழ்ச்சி நிகழும். மக்கள் கைதட்டி சிரித்து இதை வரவேற்பார்கள். எந்த ஊரில் நிகழ்ச்சி நடந்தாலும் "கோவில்பட்டி கணக்கப்பிள்ளை என்றே துணிப்பொம்மையைக் குறிப்பிடுவர்.


வரலாற்று ஆசிரியர ருமீலா தாப்பர் தெளிவாக ஒரு கருத்தை சொல்கிறார் ஜெயின் மதம் எப்படி வியாபார மதமாக மாறியது அதற்கு அவர் சொல்லும் காரணம்,

ஆறாம் நூற்றாண்டில் விவசாயம் செய்யும் போது பல சின்ன உயிர்களை கொள்ள வேண்டி இருக்கும் அதனால் அவர்கள் வியாபார சமூகமாக மாறினார்கள் என்கிறார் இது நம்பும்படியாக இருக்கிறது தமிழில் உள்ள ஒரே ஒரு இலக்கியம் சிலப்பதிகாரம் இங்கே பெரு வணிகர்கள் வாரிசுகள் தான் கண்ணகி மற்றும் கோவலன் 

ஆனால் விவசாயம் செய்யும் போது சிறிய பூச்சி போன்றவற்றை கொள்ள வேண்டி இருக்கும் என்று வியாபாரம் செய்ய வந்தவர்கள் வட்டிக்கு கொடுக்கலாம் என்பதை ஆதரித்தது எப்படி? அதுதான் காலம் ஆக ஆக எல்லாமும் நீர்த்துப்போகும் அரசியலும் மதங்களும் அப்படித்தான் 


🚍  போக்குவரத்து காதல் கதை

கிராமத்தின் எல்லையில் மாலை சூரியன் மறையும் நேரம்.
புதிய பேருந்து பாதை ஒன்று அந்த கிராமத்தை நகரத்துடன் இணைத்தது.
அந்த ஒரு பேருந்துபல தலைமுறைகளின் விதியையே மாற்றப் போகிறது.

அந்த கிராமத்தில் வாழ்ந்தவன் Ganesan.
பள்ளிக்குப் பிறகு வாழ்க்கை அதே வயலில் முடிந்துவிடும் என்று நினைத்தவன்.
ஆனால் புதிய அரசு பேருந்து சேவை அவனுக்கு நகரக் கல்லூரி வாசலைத் திறந்தது.

அதே பேருந்தில் தினமும் பயணம் செய்தாள் jeyarani 
நகரில் வளர்ந்தாலும், வேர்கள் கிராமத்தில் இருந்த ஒரு பெண்.
அவள் நகரத்திலிருந்து கிராம பள்ளியில் ஆசிரியையாக நியமிக்கப்பட்டிருந்தாள்

அந்த பேருந்து வெறும் வாகனம் அல்ல.
அது இரண்டு உலகங்களை இணைக்கும் பாலம்.

🚆 ரயிலும் காதலும்

தமிழ் திரை உலகம் போக்குவரத்தையும் காதலையும் இணைத்து அழகாகச் சொல்லி வெற்றி பெற்றிருக்கிறது.

·        Kizhakke Pogum Railரயில் பயணத்தில் மலரும் காதல்

·        Rayilukku Neramachuநேரமும் நெஞ்சும் இணையும் தருணங்கள்

·        Bhagavathipuram Railway Gateரயில் பாதையில் மாறும் வாழ்க்கைகள்

ரயில் ஓடும் போது வாழ்க்கையும் ஓடுகிறதுமனிதன் இடம் மாறும் போது
அவரது மனமும் மாறுகிறது.

அதை காதலாக உருமாற்றிய தமிழ் இயக்குநர்களுக்கு நன்றி.

🎬 சமூகமும் சினிமாவும்

சமீபத்திய படங்களில் போக்குவரத்து ஒரு சமூக அரசியலாக மாறுகிறது.

·        Karnanபேருந்து நிறுத்தம் கூட மரியாதையின் சின்னம்

·        Mandelaஓட்டுப்போட போகும் ஒரு பாதையும் சமூக மாற்றம் 

ஒரு பேருந்து நிறுத்தம் கிடைப்பது
ஒரு சமூகத்தின் மனித மரியாதையை மீட்டெடுப்பது.

ஒரு அரசு பேருந்து
ஒரு கிராமத்தை நகரத்துடன் இணைத்தது.
அந்த இணைப்பு
இரண்டு இதயங்களையும் இணைத்தது.

பேருந்து ஒவ்வொரு நாளும் புறப்படும் போது
அவர்கள் காதல் புதிதாக ஆரம்பிக்கிறது.

 








 

 

 

 

 


 

 

 



 

 




 

 






 

 

 

 

 

 











Comments

Popular posts from this blog

Language, Communication, and the Story of Migration

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் ( The Hidden Chapters of Gandhi’s Journey )