தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan


உலகில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழிகள் 

தமிழ், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், ஹீப்ரு, சீனம், அரபு, பாரசீகம்.

Greek, Latin, Sanskrit, Tamil, Hebrew, Arabic, and Chinese, are recognized as classical languages. 

திருக்குறள் வெளிவந்த காலத்தில், உலக இலக்கியங்கள் எப்படி இருந்தது என்றால், அரபி மொழியில் அரபி என்பதன் பொருள் பேசத் தெரிந்தவன் என்றால் மற்றவர்களை அஜமிகள் என்கிறார்கள் அதன் பொருள் மற்றவர்கள் எல்லாம் ஊமைகள்,

 அதே காலத்தில் சீன மொழியில் நாங்கள் எல்லாம் மேன்மையான மனிதர்கள், மற்றவர்கள் எல்லாம் வெளிநாட்டுப் பேய்கள் ஃபாரின் டெவில் என்கிறான்,

ஐரோப்பாவில் உள்ள இலக்கியங்கள் நாங்கள் நாகரிகமானவர்கள் மற்றவர்கள் காட்டுமிராண்டிகள் என்பதாக எழுதி வைத்திருக்கிறார்கள்,

2000 ஆண்டுகளுக்கு முன்பு அதே காலத்தில் தமிழில் வந்த இலக்கியங்களில்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 

என்றால் எல்லா மனிதர்களுக்கும் இல்லை காக்கை குருவி விலங்குகள் பூச்சிகள் எல்லாவற்றையும் இந்த பூமியில் வாழும் அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்று பாடியிருக்கிறார்,

பிற மொழிகள் எல்லாம் யார் சொர்கத்திற்கு போவார் என்ற கேள்விக்கு ஐந்து வேளை தொழுபவன் சரியான பூசை மதம் சொல்வதை சரியாக கடைபிடிப்பவன் என்று எவ்வளவோ சாஸ்திரங்கள் சொல்லு கிறது தமிழனின் அறிவு சொத்து சிறுபஞ்சமூலம்

குளம் வெட்டுபவன் நீர்வழிப் பாதை அமைப்பவன்

காட்டை அழித்து விளைநிலம் உருவாக்குபவன் மரம் வளர்ப்பவன் சொர்க்கத்துக்கு போகலாம் என்று சிறுபஞ்சமூலம் சொல்கிறது ஆனால் இதை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள் என்று சொல்லவில்லை

என் சிற்றறிவுக்கு ஏற்றிய வரை மூலக்குள்ள சின்ன சின்ன கேள்வி இருக்கு இந்தியாவில் ஏன் உலகம் முழுவதும் எல்லா மன்னருக்கும் அவர்கள் அரண்மனைகள் பாதுகாப்பா இருக்கு தமிழ் பேசும் தமிழ்நாட்டை ஆண்ட எந்த மன்னனுக்கும் அரண்மனை இல்லை பொலிட்டிக்கல் சயின்ஸ் என்ன சொல்லுது,

https://play.google.com/store/apps/details?id=com.sangathamizh.sangathamizh&pcampaignid=web_share

மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;

உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்

பொன்னும் கொள்ளார், மன்னர் - நன்னுதல்!

நாம் தம் உண்மையின் உளமே; அதனால்

தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து,

என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,

சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்

இன்ன நிலைமைத்து என்ப;

என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.

- கணி புன்குன்றனார்.

இதன் பொருள் என்னவென்றால் அழகிய இலை காய் பூ பழம் எல்லாம் இருக்கும் மரத்தை வேரோடு வெட்டி தனக்கு தேவையான மருந்து வந்தால் அப்படி அந்த மருந்து ஏற்றுக்கொள்ள மாட்டேன் சில இலைகளை சில பூக்களை மட்டுமே பறித்து மருந்தாக்கி எனக்கு சிகிச்சை அளித்தால் அதை ஏற்றுக் கொள்வேன் என்கிறது இந்த சங்க பாடல்

அரசன் தன் குடிமக்கள் வைத்திருக்கும் செல்வம் குறைந்து போகும் அளவுக்கு வரி வாங்க வேண்டாம் என்கிறது இது எப்படி என்றால் பூவிலிருந்து தேனை எடுப்பது போல பொதுமக்களிடம் இருந்து வரி வாங்க வேண்டும்

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே அரண்மனை

அதன் மிச்சம் மீதி மதுரையில் இருக்கு அது நாயக்கர் வம்சம் மதுரை ஆண்டபோது கட்டியது


தஞ்சாவூர்ல இப்ப இருக்க அரண்மனை சிவாஜி அவர் வம்சாவளி கட்டி வைத்த அரண்மனை

தமிழ் பேசும் தமிழ்நாட்டை ஆண்ட எந்த மன்னனுக்கும் அரண்மனை இல்லை பொலிட்டிக்கல் சயின்ஸ் என்ன சொல்லுது காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்கணும் மன்னன் மாறலாம் ஓட்டு போட்டு ஜனநாயகப்படி வரவுங்க எளிமைய இருக்க கத்துக்குங்க அதைத்தான் தமிழ் சொல்லிவச்சிருக்கு 

பாரதியார் நடத்திய இந்தியா பத்திரிகையில் 1907 ஆம் ஆண்டு சித்திரை முதல் நாள் அட்டைப்பட சித்திரம் தான் இது ,எல்லா மதத்தினரும் தமிழ் தாயை வணங்குவதாக இருக்கிறது,


&&&&&&&&&&&&&

தமிழின் பெருமைகம்பராமாயணத்தின் இலக்கிய உயரம்

இராமாயணம் ஒரு நூல் அல்ல; அது இந்திய நாகரிகத்தின் சுவாசம். வால்மீகியால் எழுத்துருவாக வடிவம் பெறுவதற்கு முன்பே, தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகப் பரவிய கதை அது. உலகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த இதிகாசம், ஒவ்வொரு மொழியிலும் அந்த மொழியின் பண்பாட்டையும் சிந்தனையையும் பிரதிபலித்துள்ளது.

வால்மீகி கூறிய இராமாயணம் ஒரு அடிப்படை வடிவமாக இருந்தாலும், தமிழில் கம்பர் படைத்த கம்பராமாயணம் ஒரு மொழிபெயர்ப்பு அல்ல; அது ஒரு மறுபிறப்பு. இராமாயணம் என்ற பெயரில் 33-க்கும் மேற்பட்ட கதைகள் பரவிய காலத்தில், கம்பர் தமிழின் செம்மையும் அறத்தையும் கொண்டு, ஒப்பற்ற ஒரு காவியத்தை உருவாக்கினார்.

வால்மீகியின் இராமாயணத்தில் இறுதிக் காட்சி மிகுந்த சோகத்துடன் முடிகிறது. இராமன் சரயு நதியில் மூழ்கி உயிர் நீத்ததாகக் கூறப்படுகிறது. மகாபாரதத்திலும் கூட கிருஷ்ணன் வேடன் விட்ட அம்பால் உயிர் நீத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் கம்பராமாயணத்தில் அத்தகைய துயரமான முடிவுகள் இல்லை. தமிழ் அறம் தெய்வங்களை வீழ்ச்சியடையச் செய்யாது; உயர்த்தியே காட்டும்.

கம்பர், மூல ஆசிரியர் வால்மீகி வைத்த பெயர்களைச் சிறு கதாபாத்திரங்களுக்குக்கூட மாற்றவில்லை. ஒரே ஒரு மாற்றம் மட்டும்—‘ராமனைத் தமிழின் ஒலிச்சுவைக்கு ஏற்றவாறு இராமன் என அழைத்தார். இதுவே கம்பரின் இலக்கிய நேர்மையும் மரியாதையும்.

வால்மீகியின் சமஸ்கிருத இராமாயணத்தில் காணப்படும் சில அறமற்ற, பொருத்தமற்ற நிகழ்வுகளை கம்பர் முற்றிலும் நீக்கினார். இதன் காரணமாகவே, அந்தக் கால அரசர்கள் கம்பராமாயணத்தை 800 ஆண்டுகள் மறைத்துவைத்ததாக வரலாறு சொல்கிறது. அறம் பேசும் தமிழ், அதிகாரத்திற்கு அச்சமூட்டியது.

சமஸ்கிருத இராமாயணத்தில் சீதை மாரீசனிடம் மானை வேண்டுவதும், அதனைத் தொடர்ந்து கோடு இழுத்து யாரும் கடக்கக் கூடாது எனக் கூறும் நிகழ்வும் உள்ளது. ஆனால் கம்பராமாயணத்தில் அந்தகோடுஇல்லை. கம்பர் அந்தக் கோட்டை அழித்தார். காரணம், தமிழ் சீதையை பலவீனமான பெண்ணாக அல்ல; அறிவும் அறமும் நிறைந்தவளாகவே பார்க்கிறது.

மேலும், வால்மீகியின் இராமாயணத்தில் இராமன் 12 வயதும், சீதை 6 வயதும் திருமணம் செய்துகொள்வதாகக் கூறப்படுகிறது. இன்றைய பார்வையில் அது குழந்தைத் திருமணம். ஆனால் கம்பரின் இராமாயணத்தில்,

கண்டபோது அவளும் கண்டாள்
என்ற அந்த ஒரு வரியே, உலகின் சிறந்த காதல் கவிதைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கம்பரின் வர்ணனையில் சீதை 18 வயதுக்கு மேல், இராமன் 21 வயது இளைஞன். அது காதலின் பரிணாமம்; அறத்தின் அழகு.

சமஸ்கிருத இராமாயணத்தில் சுயம்வரம் சற்று வறட்சியானதாக இருந்தாலும், கம்பராமாயணத்தில் அது ஒரு கனவுலகமாக மாறுகிறது. வில் முறியும் தருணம் மட்டும் அல்ல; அரங்கின் அமைப்பு, மன்னர்கள் கூடியிருக்கும் முறை, இளவரசர்களின் எதிர்பார்ப்புஅனைத்தும் கவிதையாக விரிகிறது.

சுயம்வரத்தில் பங்கேற்ற அரசர்களில், சீதை மாடத்தில் நின்றபோது அவளைப் பார்த்த ஒரே அரசன் இராமன். அதே தருணத்தில் சீதையும் இராமனைப் பார்க்கிறாள். அந்தக் கண நேரக் காதலே, சிவதனுசை முறிக்கும் ஆற்றலாக மாறுகிறது.
காதல் தான் வீரத்தின் ஊற்றுக்கண்இது கம்பரின் அற்புதமான கற்பனை.கம்பராமாயணம், இராமாயணத்தின் தமிழ்ச் சிகரம். அது மொழிபெயர்ப்பு அல்ல; அது தமிழின் ஆன்மா. அறம், காதல், வீரியம், கருணைஅனைத்தையும் ஒன்றாகக் கலந்து, கம்பர் தமிழுக்கு ஒரு அமர காவியத்தை அளித்தார்.

 வால்மீகி எழுதிய ராமாயணத்தில் கைகேகி இரண்டு வரம் கேட்டு பெற்றிருப்பாள் ஆனால் ராமனுக்கு அவன் தந்தை தசரதன் இந்த வரத்துக்கும் உனக்கும் சம்பந்தமில்லை அது எங்களுக்கு மட்டுமே பொருந்தும் நீ போய் நாட்டை ஆளு என்பதை எழுதி இருக்கிறார் ஆனால் கம்பன் கைகேயியின் வாக்குறுதியை நம்பி பதவி துறந்து காட்டுக்குச் செல்வதாய் எழுதியிருக்கிறார் கம்பர் இல்லையென்றால் தசரத சக்கரவர்த்தியின் நேர்மை கேள்விக்குறியாகிவிடும்

சமஸ்கிருத வால்மீகி ராமாயணத்தில் சீத்தையை ராவணன் ஒரு கையில் தலைமுடியையும் ஒரு கையில் அவளுடைய கால் எடுக்கில் தொடையையும் சேர்த்து தூக்கி கொண்டு போய் தேரில் அமர்த்தி கடத்திக் கொண்டு போவதாக எழுதியிருக்கிறார் ஆனால் கம்பராமாயணத்தில் அடுத்தவன் மனைவியை அவமானப்படுத்த விரும்பாத கம்பர் சீதை இருந்த இடத்தை அப்படியே பெயர்த்து தூக்கிக் கொண்டு போனதாக எழுதி இருக்கிறார் இங்கே தொடுதல் நிகழவில்லை

வால்மீகி ராமாயணத்தில் மானை வேட்டையாடி நெய் ஊத்தி சுட்டு சாப்பிட்டதாக எழுதி இருக்கிறார் ஆனால் கம்பராமாயணத்தில் ராமன் சைவம் காரணம் அப்போது தமிழ்நாட்டில்

புத்த மதம் பரவியிருந்தது

இது இராமாயணம் அல்லஇது தமிழின் பெருமை.

"மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ உன்னை அறிந்தோ தமிழ் ஓதினேன்" என்ற வரிகள், கவிச்சக்கரவர்த்தி கம்பர் சோழ மன்னன் குலோத்துங்கன் மீது கோபம் கொண்டு பாடியவை, மன்னன் தமிழை மதிக்காததால், "உன்னைக் கண்டு நான் தமிழை ஓதவில்லை, எனக்குத் தமிழ் இருக்கிறது" என்று கூறியபோது உருவானவை; இது கம்பரின் சுயமரியாதையையும், தமிழின் பெருமையையும் உணர்த்துகிறது. 

*********

ஒரு வணிகனின் மனைவி மதுரையை ஆண்டு கொண்டிருந்த பாண்டிய மன்னனின் எதிரில் இப்படி வழக்குத் தொடர்க முடியுமா முடியும் என்கிறது சிலப்பதிகாரம்

தேரா மன்னா! செப்புவது உடையேன்;

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,

புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,

வாயில் கடை மணி நடு நா நடுங்க,

ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும் பெயர்ப் புகார் என் பதியே;

 


பக்தி இலக்கியங்கள் பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவதை வன்மையாகக் கண்டித்தன. "சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்" நிலை மாற வேண்டும் என்று மாணிக்கவாசகர் வலியுறுத்தினார். நாயன்மார்களும் ஆழ்வார்களும் பல்வேறு சாதிப் பின்னணியில் இருந்து வந்தனர். "சாதி பிரிவினையிலே தீயை மூட்டுவோம்" என்ற ரீதியில் பல பாடல்கள் அமைந்தன. இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதே இவர்களின் முதன்மையான முற்போக்கு முழக்கம்  

கோவில்களுக்குச் செல்வதை விடவும், மனதையே கோவிலாகக் கருதும் சிந்தனையை பக்தி இலக்கியம் போதித்தது. திருமூலர் தனது திருமந்திரத்தில்"படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயிற் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா" என்று பாடினார். அதாவது, கோவிலில் உள்ள இறைவனுக்குக் கொடுப்பதை விட, நடமாடும் கோவிலாகிய மனிதர்களுக்கு (ஏழைகளுக்கு) உதவுவதே சிறந்தது என்ற புரட்சிகரமான கருத்தை முன்வைத்தார்.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால் தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்" என்பதாகும், இது ஆண்டாள், நப்பின்னையை எழுப்பும் பாசுரமாகும்; இதில், நப்பின்னை, கண்ணன் ஆகியோரின் திவ்ய தம்பதியினரை எழுப்ப, மலர் போன்ற கூந்தல் கொண்ட நப்பின்னையின் மார்பில் தலை வைத்து உறங்கும் மலர் மார்பனே, வாய் திறவாய் என்று வேண்டுகிறாள்.

வாரண மாயிரம் சூழ வலம் செய்து,

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,

பூரண பொற்கடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

"தோழியே! ஆயிரம் யானைகள் புடைசூழ, நாராயணன் (கண்ணன்) கம்பீரமாக நடந்து வருகிறான். ஊரெங்கும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டு, வீதியெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டிருக்க, நான் அவனை எதிர்கொண்டு அழைப்பது போலக் கனவு கண்டேன்."


விருந்தே புதுமைஎன்று தொல்காப்பியம் கூறுகிறது.

உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுவோருக்கு உணவிடுவது விருந்து அல்ல;
பசித்திருப்போர்க்கு, உணவு கிடைக்காமல் தவிக்கும் மனிதர்களுக்கு,
நாம் அறியாத புதியவர்களுக்கு உணவளிப்பதே உண்மையான விருந்து.

பசியை போக்குவது தான் உயர்ந்த மனிதநேயம்.
அந்த ஒரு தட்டுச் சாப்பாடுஒருவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றமாக இருக்கலாம்.

#விருந்தேபுதுமை #மனிதநேயம் #பசி #அன்பு


கீழே உள்ள திருமூலரின் இரு திருமந்திரப் பாடல்கள், சாதாரரிகள் போலத் தோன்றினாலும்,  உள்ளார்ந்து பயணிக்கஒரு பேருண்மை புலனாகும் என்பது திண்ணம்

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!!

தந்தையும், தாயும், குழந்தை மகளும் நகைக்கடைக்குள் நுழைந்தால், பளபளக்கும் நகைகளைவிட, அங்கே பளபளப்பாக இருக்கும் தாயின் மனம்.  ஆனால், குழந்தைக்கோ அங்கிருக்கும் பலூன்களிலோ, பொம்மைகளிலோ பதிந்திருக்கும் மனம்.  ந்தையின் ம் .. சொல்லவே வேண்டாம் :)

எல்லாவற்றிற்கும் காரணம் நாம் தான்.  அது .. நம்மை ஆட்டுவிக்கும் மனம் தான்.  இந்த பாழாய்போன மனது இருக்கிறதே, அது, கட்டவிழ்த்த கன்றுக்குட்டியாய் துள்ளித் திரிவது.  இலக்கின்றித் துள்ளிக் குதிப்பது.  ஓரிடம் பற்றாது, முட்டி மோதி வீழ்ந்தெழுந்து .. மீண்டும் அங்குமிங்கும் துள்ளி ஓடுவது.  மனதினை அடக்கிய மனிதன் மகான் ஆகின்றான்.

நம்மை அறிவதை விடுத்து பிறரை அறிவதில் அதிகநாட்டம் செலுத்துகிறோம்பிறரை அறிவதுகூட ஒரு கட்டத்தில் சுலபம் என்றாகிவிடும், நம்மை நாமே அறிய முற்படுகையில்.

நம்மை அறிய‌, மனதை ஒருமுகப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.  காலையில் எழுந்ததில் இருந்து, மாலை வரை உடலாலும் மனதாலும் அலுத்துத் திரியும் நாம், 'ஓரிடம் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது சாத்தியமா ?'  என்றால், ஆம் ... ஆனால், உடனே இல்லை எனலாம்மனதை ஒருமுகப்படுத்தி, தன்னை அறிய, நமது சுவாசத்தைக் கவனிக்க மற்றும் சரி செய்யச் சொல்கிறார் திருமூலர்

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மனதைத் தைத்தது.  எவரெஸ்ட் ஏறிய டென்சிங்கிடம், 'இந்த மலையில் ஏறி என்ன கண்டீர்கள் ?' என்று கேட்டதற்கு, 'மனிதன் மலைச் சிகரத்தைக் கைப்பற்றுவதைவிட, தன்னைத் தானே உணர்வது முக்கியம் என்று புரிந்து கொண்டேன்! இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள நான் எவரெஸ்ட் மீது ஏற வேண்டி இருந்தது!!" என்றாராம்.

திருமூலர் சொன்னது தான் இன்றைய சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கத்தின் கோட்பாடு


1,Antiquity, தொல்பழங்காலம்



"தொல்காப்பியம்" நம் மொழியின் இலக்கணநூல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே..அது மொழிக்குமட்டும் அல்ல வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்துக்கொடுத்துள்ளது. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்தது நாமாகத்தான் இருக்கும். நாகரீகம் வளர்ந்த இன்றைய நவீன வாழ்க்கைக்கு இந்த இலக்கணம் பொருந்தாமல் போகலாம்.ஆனால் நம் பழந்தமிழர் வாழ்வியலை அறிய தொல்காப்பியரின் இந்த "பொருளதிகாரம்" மிகவும் உதவும்


மொத்தத்தில், தொல்காப்பியம், முதலாம் நூற்றாண்டில் ஒரு முற்போக்கு நூலாக இருந்ததற்கான காரணங்கள்:

     தமிழ் மொழிக்கு ஒரு முறையான இலக்கணம்:

இது தமிழ் மொழியைப் பயன்படுத்தவும், புரிந்துகொள்ளவும் ஒரு அடிப்படையை வழங்குகிறது

      இலக்கியத்தின் ஒரு தாராளமான விளக்கம்:

இது இலக்கியத்தின் பல்வேறு அம்சங்களை விவரிக்கிறது, மேலும் இலக்கியத்தை சமூக சூழலுடன் இணைக்கிறது

        சமூகத்தின் ஒரு பரந்த பார்வை:

இது சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் உறவுகளைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது


 https://chellappatamildiary.blogspot.com/2013/07/blog-post_17.html


தொல்காப்பியர் கூறும் பத்து பொருத்தங்களாவன:

1.       குடும்பத்தின் பரம்பரை வரலாறு. (இருவருடைய குடும்பங்களும் குற்றமில்லாத குடிப்பிறப்பைக் கொண்டனவா என்று பார்த்தல்)  

2.       இருவரின் ஒழுக்கம். (தனி நபருக்குரிய ஒழுக்கனெறியில் இருவரும் சிறந்தவர்களா என்று பார்த்தல்

3.       ஆளுமை. (ஆணாகின், ஆண்மைக்குரிய ஆளுமையும், பெண்ணாகின், பெண்ணுக்குரிய  ஆளுமையும் உள்ளனவா என்று பார்த்தல்

4.       வயது. (இருவரும் ஒத்த வயதினரா என்று பார்த்தல்

5.       வடிவம். (இருவருக்கும் உருவ ஒற்றுமை உள்ளதா என்று பார்த்தல்

6.       காம உறுப்பு. (இருவருக்கும் காம உறுப்புப் பொருத்தம் உள்ளதா என்று பார்த்தல். தோற்றத்திலிருந்தும் பழக்க வழக்கங்களிலிருந்தும் இதனை அறிய வேண்டும். வெளிப்படையாகக் கூறாமல்ஒத்த காம உணர்ச்சி உடையனரா என்று பார்த்தல் என்று உரையாசிரியர்கள் மழுப்புவர்

7.       மனவுறுதி

8.       அருளுடைமை.(பெண், ஆணின் பாலும், ஆண், பெண்ணின் பாலும், திருமணத்திற்குப்பின் குறை கண்டவிடத்து, புரிந்துணர்வோடு ஒன்றாதல்

9.       உணர்வு. (ஒத்த சிந்தனை உடையவர்களா என்று பார்த்தல். எடுத்துக்காட்டாக, இருவருமே முன் கோபம் உடையவர்களாகவோ அல்லது இருவருமே முன்யோசனை யில்லாதவர்களாகவோ இருந்துவிடலாகாது

10.   பொருளாதாரம். (இருவரும் ஒத்த பொருளாதார அந்தஸ்து உடையவரா என்று பார்த்தல்). 

தொல்காப்பியத்தின் (1219வது) பாடல்வரிகள் இவை

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,

உருவு, நிறுத்த காம வாயில்,

நிறையே, அருளே, உணர்வொடு, திரு -என

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.




காலம் சுமார் கி.மு 750 முதல் கி.மு.50 வரை.   இயற்கையை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருந்த நம் மக்கள் போக்குவரத்து மிகக்குறைந்த அக்காலத்தில் தான் வாழ்ந்த மலை, காடு, நதிக்கரை, கடற்கரை பகுதிகளில் உள்ள மரம், பறவை, விலங்குகள், தொழில் என்று இயற்கையுடன் இணைந்து அப்படியே வாழத்தொடங்கினர். அவைகளை ஐவகை நிலங்களின் அடிப்படையில் அமைந்த ஐந்திணைப் பாடல்களாக (குறிஞ்சி, முல்லை, மருந்தம், நெய்தல், பாலை) சங்கப்பாடல்களில் பிரித்து காட்டப்பட்டுள்ளன. இப்படி ஐந்திணை நிலங்களில் தலைவன், தலைவி இவர்களுக்குள் உருவான அகம் சார்ந்த (புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ) உணர்வுகளை இயற்கையுடன் இணைத்து பாடப்பட்ட பாடல்களை "அகத்திணை"பாடல்கள் என்று பிரித்தனர்பல சிற்றூர்களும் மிகச் சில நகரங்களும் உருவாகி இருந்தன. பல குழுக்கள் இணைந்து சிற்றரசர்கள், குறுநிலமன்னர்கள், வேளிர் என்று இருபதுக்கும் மேற்பட்ட சிறு சிறு அரசுகளாக பிரிந்து சங்க காலத் தமிழகம் விளங்கியது. தங்களுக்குள் பெரிய மோதல்கள் எதுவும் இல்லாமல் சிற்றரசர்கள் ஆட்சிபுரிய மக்கள் இன்புற்று வாழ்ந்த பொற்காலம் அது. மூவேந்தர்கள் கூட சிற்றசர்களாகவே இருந்தனர்.இந்த அரசர்களின் வீரம்,கொடை,புகழ் பற்றி பாடப்பட்ட பாடல்கள் "புறத்திணை" என்று பிரிக்கப்பட்டன.


 சங்க இலக்கியங்களில், முற்போக்கு சிந்தனைகள் காணமுடியும்குறிப்பாக, அகம், புறம் ஆகிய இரு பிரிவுகளிலும், மனிதர்களின் வாழ்வியல், காதல், போர், வீரம், சமூக ஒழுக்கம் போன்ற பல விஷயங்களை இலக்கியங்கள் விவரிக்கின்றன

முற்போக்கு சிந்தனைகள்:

        சமூக ஒழுக்கம்:

அகம் இலக்கியங்களில், காதல், இல்லற வாழ்க்கை, பெண் பாலியல் சுதந்திரம் போன்ற விஷயங்கள் விவரிக்கப்படுகின்றனஇது, அந்த காலத்து மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றியும், அவர்கள் எப்படிப்பட்ட சிந்தனைகளை கொண்டிருந்தார்கள் என்பதையும் அறிய உதவுகிறது

    வீரம் மற்றும் போர்:

புற இலக்கியங்களில், போர், வீரம், அரசர்கள், புலவர்கள் போன்ற விஷயங்கள் விவரிக்கப்படுகின்றனஇது, அந்த காலத்து மக்கள் எப்படி போரிட்டார்கள், எப்படிப்பட்ட வீரர்களைப் போற்றினார்கள் என்பதை அறிய உதவுகிறது

        தன்னம்பிக்கை:

சங்க இலக்கியத்தில், சில வீரர்களிடமும், சில புலவர்களிடமும் தன்னம்பிக்கை காணப்படுகிறதுஇது, அந்த காலத்து மக்கள் எப்படிப்பட்ட தன்னம்பிக்கையோடு இருந்தார்கள் என்பதை அறிய உதவுகிறது

      சமூக சீர்திருத்தம்:

சில சங்க இலக்கியங்களில், சமூகத்தில் காணப்படும் சில குறைகளை சுட்டிக் காட்டி, அதை சீர்திருத்த வேண்டும் என்ற சிந்தனைகளும் காணப்படுகின்றன

      அன்பு மற்றும் பாசம்:

சங்க இலக்கியங்களில், மனிதர்கள் ஒருவருக்கொருவர் எப்படி அன்பு வைத்திருக்கிறார்கள், எப்படிப்பட்ட பாசத்தை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் விவரிக்கப்படுகிறது

சங்க இலக்கியங்கள் ஏன் முக்கியம்?:

    தமிழ் இலக்கியத்தின் அடிப்படை:

சங்க இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாகும்இது, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான பங்காற்றியுள்ளது

     சமூக வாழ்க்கை:

சங்க இலக்கியங்கள், அந்த காலத்து மக்களின் சமூக வாழ்க்கை, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அறிய உதவுகிறது

     பண்பாடு:

சங்க இலக்கியங்கள், தமிழ் மக்களின் பண்பாடு, விழுமியங்கள், கலாச்சாரம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன

        முற்போக்கு சிந்தனைகள்:

சங்க இலக்கியங்களில், முற்போக்கு சிந்தனைகள் காணப்படுகின்றனஇது, அந்த காலத்து மக்கள் எப்படிப்பட்ட சிந்தனைகளை கொண்டிருந்தார்கள் என்பதை அறிய உதவுகிறது

சங்க காலத்தை புரிந்துகொள்ள:

சங்க இலக்கியங்கள் மூலம், சங்க காலத்தை பற்றிய பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்இதில், மனிதர்களின் வாழ்வியல், சமூக ஒழுக்கம், காதல், போர், வீரம், பண்பாடு, கலாச்சாரம், முற்போக்கு சிந்தனைகள் போன்ற பல விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன





தங்கள் மதத்தை பரப்ப வந்த கால்டுவெல் போன்றவர்கள், தமிழ் இலக்கியங்களை படித்துவிட்டு எழுதிய கடிதங்கள் இன்னும் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது,

திருவாசகத்தில் வரும் ஒரு வாசகம் அவர் மனதை மாற்றி இருக்கிறது

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !

2,Noble ideas and ideals நல்லொழுக்கம், நேர்மை


திருவாசகத்தின் ஆறு வரிகளில் அண்டம் விரிகிறது! 

‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய

சிறியோனாகப் பெரியோன் தெரியின்’ என்பது திருவாசகம்.

அண்டமாகிய இந்தப் பிரபஞ்சத்தின் காட்சியை விளக்குவதென்றால், இங்கே உள்ள பொருட்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்து அழகுற திகழ்கின்றன. இவற்றின் எண்ணிக்கையோ நூறு கோடிகளுக்கும் மேற்பட்டது. இந்த எண்ணிக்கையும் நிலையாக இருப்பதில்லை அவை விரிந்துகொண்டே செல்கின்றன. இது எப்படி இருக்கிறதென்றால், வீட்டுக் கூரையில் உள்ள சிறிய ஓட்டை வழியாக வெயில் நுழையும்போது, அந்த நீண்ட குழல் வடிவமான ஒளியில் பல கோடி தூசுத் துகள்கள் சுழலுமல்லவா! அதைப்போல அண்டம் முழுவதும் அணுத் துகள்களும் அவற்றாலான பெரும் பொருட்களும் எல்லை வகுக்கவே இயலாத வகையில் சுழல்கின்றன. இந்த அண்டத்தின் அணுக்களில் சிறியதாகத் தெரிபவன் யாரென்றால் யாவற்றுக்கும் பெரிதான இறைவன்’ – என்பது இப்பாடலின் கருத்து.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய இதே கருத்தைத்தான் நவீன அறிவியல் இப்போது செயற்கைக்கோள் உதவியுடனும் தொலைநோக்கிகள் துணையுடனும் முன்வைக்கிறது.

நேரடியாகவே பின்வரும் செய்திகளைத் தாங்கியுள்ளன இவ்வாசகங்கள்:
1. அண்டம் என்பது ஒன்றல்ல, பல்வேறு பகுதிகளை அடக்கியது. ஆகவேஅண்டப் பகுதிஎனப்பட்டது.

2. ’உண்டைஎனும் சொல்லுக்குஉருண்டை, கூட்டம்உள்ளிட்ட பொருட்கள் உண்டு. உருண்டை வடிவமான கூட்டம் என்பதை உண்டை எனலாம்.

3. ‘பிறக்கம்எனும் சொல்லுக்கு, ‘ஒளி, உயர்ச்சி, குவியல்ஆகிய அர்த்தங்கள் உள்ளன.

4. ஆக, ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்என்றால், ”எண்ணற்ற அளவில் உள்ள அண்டத்தின் ஒரு பகுதி, உருண்டை வடிவத்தில் கூட்டம் கூட்டமாக, ஒளிக் குவியலாக உள்ளதுஎன்று அர்த்தம்.

5. இந்தக் காட்சியைக் காணும்போது, அது அளவிடுவதற்கே இயலாததாகவும் மேன்மை பொருந்திய காட்சியாகவும் (வளப்பரும் காட்சி) உள்ளது.

6. ’ ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தனஎன்றால், பின்வரும் பொருள் கொண்ட வாசகம், ’இந்த அண்டப் பகுதியின் பொருட்கள் யாவும் தனித்தனியாக இருப்பதில்லை. ஒன்றுக்கு ஒன்று பொருந்துமாறு நின்றுகொண்டுள்ளன. இதன் அழகை விவரிப்பதானால்...அவை நிலையாக நில்லாமல் நூற்றுக் கணக்கான கோடிகள் எனும் எண்ணிக்கையில் விரிந்துகொண்டுள்ளன

மேற்கண்ட விளக்கங்களில் ஒரே ஒரு சொல்லைக் கூட மிகைப்படுத்தி நான் எழுதவில்லை. திருவாசகத்தில் உள்ள பொருள் மாறாமல் நேரடியாக விளக்கியுள்ளேன்.




இயற்கையிடமிருந்து கற்றல்

மனிதர்கள் தம்மைச் சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிடமிருந்தும் சில நல்ல பழக்கங்களைக் கற்றுத் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் பெருவாயின் முள்ளியார். சிறிய எறும்பும் கிடைக்கின்றபோதே உணவுப்பொருளை எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்துக் கொள்ளும். தூக்கணாங்குருவி குளிர், காற்று முதலியவற்றால் இடையூறு ஏற்படாத வகையில் தனக்குரிய வீட்டைக் கட்டிக் கொள்ளும். காக்கை தன் இனத்தாரை அழைத்த பின்னரே உண்ணும் பழக்கமுடையது. இம்மூன்று பழக்கங்களையும் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் சிறப்புறுவர். சுறுசுறுப்பும், எதிர்காலச் சேமிப்பும், சுற்றத்தாரை அழைத்து உண்ணலும் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுவன அல்லவா? 



 ஐந்தாம் நூற்றாண்டில் பெருங்கதை என்பது கொங்கு வேளாளர் படைப்பு, இது வடமொழி நூலான பிருகத் கதையைத் தழுவி எழுதப்பட்ட ஒரு தமிழ்க் காப்பியம் ஆகும். இதில் உதயணன் என்ற வீரனின் வாழ்க்கையும், அவன் அரசனாக வருவது, பல பெண்களை மணப்பது, கடைசியில் துறவு பூணுவது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பெருங்கதை ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு காவியம் என்பது குறிப்பிடத்தக்கது

நாட்டியக் கலை, வாட்போர் முறை, மணிகளின் விளக்கம், முதலியன சுருக்கமாகவும் சுவைபடவும் சொல்லப் பெற்றிருக்கின்றன. உலகியற் செய்திகளும், ஒழுகலாற்றுக்குத் துணையான உண்மைகளும், உவமை வழியாகவும், உருவகமாகவும், பழ நிகழ்ச்சிகளைக் கூறும் வழியாகவும்,           உள்ளம் கொள்ளுமாறு கூறப்பெற்றிருக்கின்றன.






திருநாவுக்கரசர் தேவாரம்

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

          நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

          இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

          சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

          கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.  

விளக்கம்

     மலர் போன்ற சிவபெருமானின் திருவடிகளை அடைக்கலமாக அடைந்தமையால், நாம் யாருக்கும் அடிமையாவதில்லை. மரணத்தைத் தருகின்ற இயமனுக்கு அஞ்சுவதில்லை. நரகத்தில் புகுந்து துன்பமடைவதில்லை. பொய்யும் புரட்டும் இனி நம்மை அணுகுவதில்லை. என்றும் ஆனந்தமாக இருப்போம். நோய் என்பதையே அறியாது இருப்போம். வேறு யாரையும் பணிந்து நிற்க மாட்டோம். எந்நாளும் நமக்கு இன்பமே ஏற்படும். துன்பம் என்பதை நாம் அறிய மாட்டோம். யாருக்கும் அடிமையாகாதவனும், வெண்குழையைக் காதில் அணிந்த அரசனாகிய ஆதி சங்கரனுக்கு மட்டுமே நாம் அடிமையாக இருப்போம் என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார்.



நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.

பாடலின் பின்னணிதலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான்பிரிவினால் தலைவி வருந்துகிறாள்அதைக் கண்ட தோழி, “ தலைவன் உன் மீது மிகவும் அன்புடையவன்தலைவன் சென்ற வழியில் பெரிய துதிக்கையையுடைய ஆண்யானைமெல்லிய கிளைகளை உடைய யாமரத்தைப் பிளந்து பெண்யானையின் பசியைப் போக்கி அவற்றை அன்போடு பாதுகாப்பதைக் கண்ட தலைவன் தன் கடமையை உணர்ந்து உன்னிடம் விரைவில் வருவான் என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.


சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணி

பிணைமான் இனிதுண்ண வேண்டி - கலைமாதன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி. - 38. 

சுனையில் கொஞ்சம் தண்ணீர் மட்டும் இருக்கும். பெண்மான் ஆண்மானை விட்டுவிட்டுத் தனியே அதனை உண்ணாது என்று எண்ணிய ஆண்மான் வாயைத் தண்ணீரில் வைத்துக்கொண்டு உரிஞ்சுவது போலப் பாசாங்கு செய்யும். உன் காதலர் சென்ற வழி அப்படிப்பட்டது என்கின்றனர்.
இப்படிப்பட்ட மானைப் பார்த்ததும் அவருக்கு உன் நினைவு வரும்.
இவ்வாறு கூறித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.  

           

&&&&&&&&&&&&&&&&&&&&

நந்தெறும்பு தூக்கணம்புள் காக்கை யென்றிவைபோல்
தங்கருமம் நல்ல கடைப்பிடித்துத்-தங்கருமம்
அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யானும் படும்


3,individuality தனித்துவம் 


கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறை வகையால் ஊண்
பிறநாடுகளில் உணவுப் பொருள்களில் எதை முதலில் உண்ண வேண்டும், எதைக் கடைசியில் உண்ண வேண்டும் என்ற பழக்கங்கள் உள்ளன அல்லவா? அதுபோல் நம் நாட்டிலும் உண்டு. நம் முன்னோர் அதனையும் அறிந்து வைத்துள்ளனர். முதலில் இனிப்பான பண்டங்களை உண்ண வேண்டும். இறுதியில் கசப்பானவற்றை உட்கொள்ள வேண்டும். வேறு சுவைப் பொருள்களை இடையே சுவைத்தல் வேண்டும். 




***************

2000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் விலங்குகளின் தோலில் எழுதப்பட்டது இது மிகக் கடினமான ஒன்று, சீனாவில் களிமண்ணில் எழுதினார்கள் ஆனால் தமிழ்நாட்டில் எழுத்து ஓலை உருவாக்கப்பட்டது அதனால் தான் இங்கு எண்ணிலடங்காத சங்க இலக்கியங்கள் காணக் கிடைக்கிறது,

இளம் பதமுள்ள பனை ஓலை பொறுக்கி, அளவுக்குத்தக்க நறுக்கி, குழந்தைக்கு நகம் வெட்டுவதுபோல் நளினமாய் நரம்பு களைந்து, நிழலில் உலர்த்தி, பனியில் பதப்படுத்தி, இளக்கமுறுமாறு இளஞ்சூட்டு வெந்நீரில் வெதுப்பி..

பளபளப்பான சங்கு அல்லது கல்கொண்டு அழுத்தி அழுத்தித் தேய்த்து அழகுறுத்தி, பக்குவமாய்ப் பாடஞ்செய்து, மஞ்சள் நீரிலோ அரிசிக் கஞ்சியிலோ உள்ளார ஊறவைத்து, பிள்ளைக்கு வலிக்காமல் காது குத்துவதுபோல சுவடிக்கு இரு துளைகளிட்டு, ஒரு முனையில் கயிறு செருகி, மறுமுனையில் சுள்ளாணி செருக, பனை ஓலை பாட்டுச் சுவடியாய் மோட்சமுறும்.


ஓலையின் மீது மஞ்சளும் வேப்பெண்ணெயும் பூசி, கோவை, ஊமத்தை இலைச்சாறுகளும், மாவிலை அருகம்புல் விளக்கு ஆகியவற்றின் கரியும் தடவி 'மையாடல்' செய்வதுமுண்டு.

4,Common character பொதுவான பாத்திரம்

புறநானூற்றில் உள்ள கணியன் பூங்குன்றனாரின் புகழ் பெற்ற பாடலான “யாதும் ஊரே யாவரும் கேளிர்” 

அந்தப் பாடல் இதோ:

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே;...

வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;

முனிவின் இன்னாது என்றலும் இலமே;

மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது

திறவோர் காட்சியின் தெளிந்தனம்

ஆதலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”

கணியன் பூங்குன்றனார்

பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடிந்தது.

All towns are mine. Everyone is my relative.

Any adversity that strikes you or anything good that happens to you is not because of others. It's entirely of your making.

Worry or comfort doesn't come from others. If your mind is mature enough, worries won't affect you. And you will not rejoice over comfort either.

Nor is death something new. It has been there from time immemorial, from the day man was born.

Don't get unduly excited about pleasant happenings in life. Similarly, don't get unduly perturbed about bitter happenings in life and hate it either. Be level headed that happiness and sorrow constitute life equally.

The sky gives hot lightning as well as cold rain. Just as a boat struggles its way hitting and missing through a wild river that rushes along crushing and gathering stones, life also goes on amidst adversities and pleasant happenings. Be clear that this is the nature of life.

If you have this clarity, you'll not unduly look high upon those at the top. What is more, you will certainly not look down upon those who are down below in the ladder of success. Each one is great in his own life.

***************
வணிகம் பொருளீட்டுதல் குறித்து தமிழ் பார்வை

வள்ளுவன் வணிகம் சார்ந்த திருக்குறள் 

 பொருள் அதிகாரத்தில் வைக்காமல் அறம் சம்பந்தப்பட்டதாக கருதி

அறத்துப்பாலில் வைத்திருக்கிறான்👌

இன்று உலகில் தரமில்லாத ஒரு பொருளையும் திறமையான விற்பனையாளர் விற்றுவிட முடியும் என்ற நிலையில்

அன்றே வியாபாரம் குறித அரத்தை தமிழன் பட்டினப் பாலையிலும்                திருக்குறளிலும் எவ்வளவு தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்,

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்🙌👍👍

பொருள்

பிறர் பொருளையும் தம் பொருள்போல் கருதி வாணிகம் செய்தால்          வணிகர்க்கு அதுவே மேலும் வாணிகப் பெருக்கம் உண்டாகச்    செய்யும்    என்பது பாடலின் பொருள்.


அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

தீதின்றி வந்த பொருள்"

திறன்அறிந்து குற்றமின்றி வந்த பொருளானது அறத்தையும் கொடுக்கும்இன்பத்தையும் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.


பட்டினப்பாலை


நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நன்னெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டி துவன்று இருக்கை

   கடியலூர் உருத்திரங் கண்ணனார், 

வணிகர் அறம் - உழவரின் ஏரில் இரண்டு மாடுகள் பூட்டிய நுகத்தின் நடுவில்                இருக்கும்   பகலாணி போல நடுவுநிலை கொண்ட நன்னெஞ்சோடு வணிகர்கள்       வாணிகம் செய்தனர்தமக்குப் பழி வந்துவிடுமோ என்னும்          அச்சத்தோடு   சொன்னசொல் மாறாமல் வாய்மையையே பேசினர்தாம்            கொடுக்கும்          பொருளையும்தாம் பிறரிடமிருந்து விலையாக வாங்கும் பொருளையும் ஒத்த நிறையுடையதாகக் கருதினர்எனவே மதிப்புக்கு அதிகமாக வாங்குவதோ,   குறையாகக் கொடுப்பதோ அவர்களின் வாழ்க்கையில் இல்லை.


5,Neutrality நடுநிலைமை

உலகில் வேறு எந்த நாட்டிலாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெண் கல்வி குறித்து இப்படி பேசியிருக்கிறதா

நாலடியார்

கல்வி 

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.



நம் தலையில் உள்ள முடிகளைச் சீர்ப்படுத்துவதால் வருகின்ற அழகும், கரையிட்ட (border) ஆடையை அணிவதால் உண்டாகும் அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகின்ற அழகும் உண்மையான அழகல்ல. அவை யாவும் புறத்தே உள்ள அழகை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. மாறாக, அறநெறியில் நடந்து, நடுவுநிலைமையோடு வாழ்கின்றோம் என்ற பெருமிதத்தைத் தருகின்ற கல்வியே உண்மையான அழகாகும். அது ஒன்றே அகத்தில் அழகைத் தரக் கூடியதாகும்.

      


இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு.     

இந்த அழகு அத்தனையும் அழகு அன்று.
பெண்ணுக்கு எண்ணும் எழுத்தும் கற்றிருக்கும் அழகுதான் உண்மையான அழகு.
**************


யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்
தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்

ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்

 ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்

 துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

 கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்
தெய்த்திடை வருந்த எழுந்து புடைவரந்
தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்

 கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்
பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி யென்னும் பல்கடல் பிழைத்தும்

 நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும்
புல்வரம் பாகிய பல்துறை பிழைத்தும்

6,Parental conceives 


விளக்கம் : வினைக்கு ஈடாக உயிரானது பல பிறப்புகளில் பிறந்து இளைக்கின்ற தன்மையைக் குறிப்பிட, "யானை முதல் எறும்பீறாய்" என்றார்.

அடுத்து, மானுடப்பிறப்பில் பத்து மாதங்கள் தாய் வயிற்றில் உண்டாகும் பலவகையான வேதனைகளைக் குறிப்பிடுகிறார், தான்றி - தான்றிக்காய். இஃது உடல் திரண்டு முனை குவிந்து இருக்கும். மதியின் இயக்கம் பற்றி வரையறுக்கப்படுவது மாதம். ஆதலால், மாதத்தை மதியெனக் குறிப்பிட்டார். பத்தாம் மாதத்தில் தாய் படும் துன்பத்தை, "துக்க சாகரம்" என்றும், குழவி படும் துன்பத்தை, "துயர்" என்றும் பிரித்துக் கூறினார்.
குழவியாய்ப் பிறந்த பின்னைத் தினசரி வாழ்க்கையில் உண்டாகும் துன்பங்களைக் குறிப்பிடுவார், "காலை மலமொடு கடும்பகற் பசிநிசி வேலை நித்திரை யாத்திரை" என்றார்.


**************

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்

   நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்

      வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்

         கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

 கூர்மையான ஒளிவீசும் அழகான வேலையுடைய திருமுருகப்

பெருமானைத் துதித்து ஏழைகளுக்கு எப்போதும் நொய்யில் பாதி

அளவாவாயினும் பங்கிட்டுக் கொடுங்கள். உங்களுக்கு இவ்விடத்து

வெய்யிலுக்கு ஒதுங்கி நிற்க உதவாத இந்த உடலின் பயனற்ற

நிழலைப் போல மரணகாலத்தில் ஆன்மா புறப்பட்டுச் செல்லும்

இறுதி வழிக்கு உங்கள் கையிலுள்ள பொருளும் துணை

செய்யமாட்டாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

*************
பெருத்தநின் இளமுலை
மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நின்கண்டார்
உயிர்வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ?

“இளமையான அழகியே! உன் மார்பு கண்டவர்களின் உயிரை வாங்கி விடுகிறது. இதனை நீ உணர்வாயா? உணர மாட்டாயா?” என்று அவன் கூறும்போது அவனுள் காதல் பெருக்கெடுக்கிறது.

நீயும் தவறிலை, நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமரும் தவறு இலர்
நிறைஅழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
‘பறைஅறைந் தல்லது செல்லற்க’ என்னா
இறையே தவறுடை யான்

“அழகால் பிறரைக் கவர்ந்து இழுக்கும் பெண்ணே! நீ குற்றம் உடையவள் இல்லை. உன்னை இங்குச் செல்ல விட்ட உறவினரும் குற்றம் உடையவர் அல்லர். கொல்லும் இயல்புடைய யானையை நீர்நிலைக்கு அனுப்பும் போது பறைசாற்றி மக்களுக்குத் தெரிவிப்பது போல, நீ செல்லும் போதும் பறை முழக்காமல் செல்லக் கூடாது என்று உன்னைத் தடுத்து ஆணையிடாத அரசனே குற்றம் உடையவன்” என்கிறான் அந்த இளைஞன்.

7,Culture and art independent 


"பாணர்கள்" பற்றி பார்ப்போம்.

பாணர்கள் என்பவர்கள் பண் இசைப்பவர்கள். அதாவது இசைக்கருவிகளை ஒரு ஒழுங்குடன் இசைப்பவர்கள். இசையை பண்ணுபவர்கள் (உருவாக்குபவர்கள்) "பாணர்கள்" எனவும் கூறலாம். அதுமட்டும் இல்லாமல் பாடல்களை பாடுதல்,பாடலுக்கு ஏற்றாற்போல் நடனம் ஆடுதல், நாடகம் அமைத்தல் அகியற்றை தொழிலாக கொண்டவர்கள். இவர்கள் நாடோடிகள் போல் பல ஊர்களுக்கு சென்று இக்கலைகளால் மக்களை மகிழ்வித்தனர்.

இசைக்கருவியை இசைக்கும் பாணர்களில்,

ஏழு நரம்புகள் கொண்ட சிறிய யாழை இசைப்பவர்கள் "சிறுபாணர்" என்றும்.

இருபத்து ஒன்று (21) நரம்புகளை கொண்ட பெரிய யாழை இசைப்பவர்கள் "பெரும்பாணர்" என்றும்..



இசைக்கு பொருந்த ஆடுபவர்கள் "பொருநர்" என்றும்.

பாடலின் பொருளை சிறப்பித்து ஆடுவள் "விறலியர்" என்றும் (விறல் - சிறப்பு).

கதைப்பாட்டுடன் ஆடுபவர்கள் "கூத்தர்" என்றும்...

பாணர் மகள் "பாமகள்" என்றும் பலவாறு அழைக்கப்பட்டனர்.

மலைபடுகடாம் - மலையில் பட்டு எழும் முழக்கம். (காடம்-முழக்கம்)

மலை என்ன முழக்கத்தை எழுப்பிவிடும்.?

மலையில் இருந்து விழும் அருவி பாறையில் மோதி எழுப்பும் ஓசை,.

     

 **********************
8,Noble ideas and ideals 

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!
கோத்திர(ம்) மும் குலமும் கொண்டு என் செய்வீர்?
ழுபாத்திரம் சிவன்ழு என்று பணிதிரேல்,
மாத்திரைக்குள் அருளும், மாற்பேறரே.

என்பது அப்பரடிகள் வாக்கு மக்கள் சிவத்தின் அருளைப் பெற்று நடமாடக் கோயில் எனப்படுவர். திருமூலர் வாக்கில் சிவம் எழுந்தருளுதற்குரிய நடமாடும் கோயில்கள்! அங்ஙனம் நடமாடும் உயிர்வர்க்கத்தின் அருமையை உணராமல், குலம் கோத்திரம் சொல்லி ஒதுக்குதல் நீதியுமன்று; நெறியுமன்று. பிறப்பில் வேறுபாடு காட்டுதல் பெருநெறி அன்று. சீலத்தின் காரணமாக வேறுபாடு காட்டினாலும் காட்டலாம். அதனைக் கூட அப்பரடிகளின் அருள் நெஞ்சம் ஏற்றுக் கொள்ளவில்லை.

&&&&&&&&&&&&&&&



குளம் அமைக்கப் படும் நிலத்துக்கு ஏற்ப நீர்க்கொள்ளவும், நீர்பரப்பும் இருக்கும். குளத்தை எப்படி அமைக்க வேண்டும்? எங்கு அமைக்க வேண்டும்? குளத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் எனப் பதினெண்கணக்கு நூலான சிறுபஞ்சமூலம் (பாடல் 64) தெரிவிக்கிறது.

கோடு என்பது குளத்திலிருந்து வெள்ள நீர் வெளியேறும் கலிங்கு. குளம் நிரம்பி வழிவதைக் கோடிப் பாய்ந்து விட்டதென்றே இன்னமும் கிராம மக்களில் கூறுகின்றனர்.

குளம் வெட்டுதல், மரம் நடுதல், சாலை அமைத்தல், உழுவயல் ஆக்குதல், கிணறு தோண்டுதல் என்ற 5 பணிகளைச் செய்வதன் சுவர்க்கம் போனான் என்று சிறுபஞ்ச மூலப் பாடலுக்குப் பொருள் கூறுவார்கள். ஆனால் இவற்றை ஒன்றோடொன்று தொடர்புக் கொண்டதாகக் கருதிப் பாடலுக்கு பொருளை ஆராய்ந்தால் பொருத்தமான உரை புலன் ஆகும்.

. குளம் அமைத்தல்

 மிகைநீர் வழிய கலிங்கு அமைத்தல்

 குளத்துக்கு வரும் வரத்துக்கால் ; விவசாயத்திக்கு தண்ணீர் வழங்கும் மதகு.தூம்பு, கலிங்கிலிருந்து வெள்ள நீர் வெளியேறும் பாதை ஆகிய வழிகளை செவ்வனே அமைத்தல்.

 பாசனம் பெரும் பகுதியை உழுவயல் ஆக்குதல்

 தண்ணீர் குறைவின் போது பயன் படுத்த ஊர் போது கிணறு அமைத்தல்

ஆகிய ஐந்தையும் செய்பவன் சொர்கத்துக்கு போவான் என்பது ஏரி பாசன அமைப்புக் குறித்து நமக்கு ஒரு வரைபடத்தைத் தருகிறது. ஏரி, குளங்களில் இருக்க வேண்டிய கட்டுமானங்கள் பற்றியும், சங்கப்பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. மடை என்பது ஆறு, ஏரி, கால்வாய்களில் தண்ணீர் வெளியேறுவதற்காக அமைக்கப் படுகிறது. மடையில் ஒரு கதவு இருக்கும்,,. கதவைத் திறந்தால் (மடை திறந்த வெள்ளம் போல) தண்ணீர் வெளியேறும். வெளியேறும் தண்ணீரின் அளவை கூட்டவோ குறைக்கவோ முடியாது.மதகு,மடை அமைப்பில் இருந்தாலும் இதன் கதவைச் சிறுகச் சிறுகத் திறக்கலாம். வெளியேறும் தண்ணீரின் அளவை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.(தற்காலத்தில் திருகு மதகு அடைப்பான் பயன் படுத்தப் படுகிறது) குமிழி என்பது குளங்களில் இருந்து தண்ணீர் வெளியேற கல்லால் ஆன பெட்டியொன்றை அமைத்து அதில் துளையிட்டு அதன் வழியே தண்ணீர் புகுந்து வெளிவரும் அமைப்பு. மரத்தாலான சக்கையால் குமிழியின் வாயை அடைப்பார்கள். தூம்பு நீண்ட குளாய் அமைப்பின் வழியாக நீர் சரிந்து இறங்கி வெளியேறும் அமைப்பு , யானையின் கை உள்தூளையிருப்பதால் தூம்புக்கை தும்பிக்கை ஆனது. மடை, மதகு, குமிழி போன்றவையெல்லாம் குளக்கரையிலிருந்து சற்று உள் வாங்கித் தொலைவிலேயே இருக்கும். குளத்தின் ஆழமானப் பகுதியில் அமைந்துள்ளதால் குளத்திலுள்ள தண்ணீர் முழுவதையும் பயன் படுத்த முடியும். தண்ணீரில் நீந்திச் சென்று முழ்கித் தான் மடையைத் திறக்க முடியும். எனவே நீர்க் குடும்பரையும், மடைக்குடும்பரையும் தவிர வேறுயாரும் எதுவும் செய்ய இயலாது. (இப்போது கரையிலேயே கட்டுமானங்கள் அமைப்பதால் யார் வேண்டுமானாலும் திறக்கலாம். மேலும் உயரத்தில் அமைக்கப் படுவதால் கீழே உள்ளத் தண்ணீர் வீணாகத்தான் நிற்கும்)

ஆற்றிலிருந்து கால்கள் பிரித்து வெட்டி அவற்றின் வாயிலாக நீர் பாய்ந்தால் கால்வாய்; கால்வாயிலிருந்து வயலுக்குள், கால்கள் பிரித்து வெட்டினால், வாய்க்கால்.

9,Linguistic principles 

சிலம்பின் முதல் காதை மங்கல வாழ்த்துப் பாடல். அதனை எவ்வளவு மங்கலமாகத் தொடங்குகிறார் பாருங்கள்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ்
அங்கண் உலகளித்த லான்.



    

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்



 

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்


****************************

கும்பகர்ணன் இறந்த போது நீதியால் வந்ததொரு நெடு தர்மம் நெறி அல்லாமல் சாதியால் வந்த சிறுநெறி ஏற்கவில்லை என்று கம்பன் எழுதுகிறான்,

************************************

10,Originality


மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் - என்னை
விரைந்து ஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளஈத கொம்பு

—கம்பர்.

அங்ஙனம் சிலகாலம் இருந்தபின் மீண்டும் வந்து திருவெண்ணெய் நல்லூர் சடையப்பரின் ஆதரவு பெற்று இராமாயணத்தைப் பாடி முடிந்தார் என்பது செவி வழி வந்த கதை.

******************



ஏழாம் நூற்றாண்டு உலகம் முழுவதும் மன்னர் ஆட்சி மன்னருக்கு எதிராக பேச முடியாது ஆனால் சைவ சித்தாந்தம் அப்பரடிகள் பல்லவ மன்னரை எதிர்த்து இப்படி பாடியிருக்கிறார்

நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
'சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடி இணையே குறுகினோமே.

பாடல் இது. இது விடுதலை முழக்கம்;

மரணமிலாப் பெருவாழ்க்கை; துன்பம் நீங்கிய துரய வாழ்க்கை, நின்ற சீலத்தால் பெற்ற ஏமத்தின் முழுயாப்பு (கலப்பு); பிணி நீங்கிய பெருமிதம். ஆம்; அடிமை வாழ்க்கையில் மரணமிலாப் பெருவாழ்வு கிடைக்குமா? அடிமை வாழ்க்கையே ஒரு நரகம் தானே; அடிமை வாழ்க்கை ஒரு நடைப் பிண வாழ்க்கை; அடிமை வாழ்க்கையில் பாதுகாப்பு ஏது: அடிமை வாழ்க்கை உடற் பிணிகளையும் உயிர்ப் பிணியையும் ஆக்கும். அடிமை வாழ்க்கையின் அவலங்களை எதிர்மறையால் சுட்டிக்காட்டி அடிமை விலங்கை             அறுத்தெறியச் சொன்ன முதற் கவிஞர் அப்பரடிகளேயாவார்.   சுதந்திரமான ஆன்மாவால்தான் இறைவனை அணுக முடியும். அனுபவிக்க முடியும். கோழைமையும் கொத்தடிமைப் புத்தியும் உடையவர்கள் அச்சத்தின் அடிமைகள்; அருள்நெறிக்குப் புறம்பானவர்கள். ஆண்டவன் அவர்களை ஏறெடுத்தும் பாரான், சுதந்திரம் இறையருளின் நியதி; இதனை அப்பரடிகள் தமது பாடலில் தெளிவாக விளக்குகின்றார். பல்லவப் பேரரசன் ஆணையை மறுத்து, அரசனைப் பார்க்க மறுத்துவிட்டார். அப்பரடிகளது வழியினைத் தொடர்ந்தே பாரதி,

பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் - பரி

பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்,

என்றான்.

ஆக, அரசியல் அடிமைத் தனத்தை எதிர்த்துப் போராடியதில்வால்டேரு"க்கும்ரூஸ்ஸோ"வுக்கும்ஜார்ஜ் வாஷிங்ட"னுக்கும் முன்னோடி, அப்பர் அடிகள் என்பதே உண்மை.

சாத்திரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமுங் கொண்டு என் செய்வீர்
பாத்திரம் சிவமென்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும்மாற் பேறரே!

என்பது அப்பரடிகள் வாக்கு மக்கள் சிவத்தின் அருளைப் பெற்று நடமாடக் கோயில் எனப்படுவர். திருமூலர் வாக்கில் சிவம் எழுந்தருளுதற்குரிய நடமாடும் கோயில்கள்! அங்ஙனம் நடமாடும் உயிர்வர்க்கத்தின் அருமையை உணராமல், குலம் கோத்திரம் சொல்லி ஒதுக்குதல் நீதியுமன்று; நெறியுமன்று. பிறப்பில் வேறுபாடு காட்டுதல் பெருநெறி அன்று. சீலத்தின் காரணமாக வேறுபாடு காட்டினாலும் காட்டலாம். அதனைக் கூட அப்பரடிகளின் அருள் நெஞ்சம் ஏற்றுக் கொள்ளவில்லை.

***************************

குளம் அமைக்கப் படும் நிலத்துக்கு ஏற்ப நீர்க்கொள்ளவும், நீர்பரப்பும் இருக்கும். குளத்தை எப்படி அமைக்க வேண்டும்? எங்கு அமைக்க வேண்டும்? குளத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் எனப் பதினெண்கணக்கு நூலான சிறுபஞ்சமூலம்  தெரிவிக்கிறது.

கோடு என்பது குளத்திலிருந்து வெள்ள நீர் வெளியேறும் கலிங்கு. குளம் நிரம்பி வழிவதைக் கோடிப் பாய்ந்து விட்டதென்றே இன்னமும் கிராம மக்களில் கூறுகின்றனர்.

குளம் வெட்டுதல், மரம் நடுதல், சாலை அமைத்தல், உழுவயல் ஆக்குதல், கிணறு தோண்டுதல் என்ற 5 பணிகளைச் செய்வதன் சுவர்க்கம் போனான் என்று சிறுபஞ்ச மூலப் பாடலுக்குப் பொருள் கூறுவார்கள். ஆனால் இவற்றை ஒன்றோடொன்று தொடர்புக் கொண்டதாகக் கருதிப் பாடலுக்கு பொருளை ஆராய்ந்தால் பொருத்தமான உரை புலன் ஆகும்.

ஏரி, குளங்களில் இருக்க வேண்டிய கட்டுமானங்கள் பற்றியும், சங்கப்பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. மடை என்பது ஆறு, ஏரி, கால்வாய்களில் தண்ணீர் வெளியேறுவதற்காக அமைக்கப் படுகிறது. மடையில் ஒரு கதவு இருக்கும்,,. கதவைத் திறந்தால் (மடை திறந்த வெள்ளம் போல) தண்ணீர் வெளியேறும். வெளியேறும் தண்ணீரின் அளவை கூட்டவோ குறைக்கவோ முடியாது.மதகு,மடை அமைப்பில் இருந்தாலும் இதன் கதவைச் சிறுகச் சிறுகத் திறக்கலாம். வெளியேறும் தண்ணீரின் அளவை கூட்டவோ, குறைக்கவோ முடியும் .(தற்காலத்தில் திருகு மதகு அடைப்பான் பயன் படுத்தப் படுகிறது) குமிழி என்பது குளங்களில் இருந்து தண்ணீர் வெளியேற கல்லால் ஆன பெட்டியொன்றை அமைத்து அதில் துளையிட்டு அதன் வழியே தண்ணீர் புகுந்து வெளிவரும் அமைப்பு. மரத்தாலான சக்கையால் குமிழியின் வாயை அடைப்பார்கள். தூம்பு நீண்ட குளாய் அமைப்பின் வழியாக நீர் சரிந்து இறங்கி வெளியேறும் அமைப்பு , யானையின் கை உள்தூளையிருப்பதால் தூம்புக்கை தும்பிக்கை ஆனது. மடை, மதகு, குமிழி போன்றவையெல்லாம் குளக்கரையிலிருந்து சற்று உள் வாங்கித் தொலைவிலேயே இருக்கும். குளத்தின் ஆழமானப் பகுதியில் அமைந்துள்ளதால் குளத்திலுள்ள தண்ணீர் முழுவதையும் பயன் படுத்த முடியும். தண்ணீரில் நீந்திச் சென்று முழ்கித் தான் மடையைத் திறக்க முடியும். எனவே நீர்க் குடும்பரையும், மடைக்குடும்பரையும் தவிர வேறுயாரும் எதுவும் செய்ய இயலாது. (இப்போது கரையிலேயே கட்டுமானங்கள் அமைப்பதால் யார் வேண்டுமானாலும் திறக்கலாம். மேலும் உயரத்தில் அமைக்கப் படுவதால் கீழே உள்ளத் தண்ணீர் வீணாகத்தான் நிற்கும்)

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கம்பன் அதிகாரக் குவியலை சாடிய நான் எல்லோருக்கும் எல்லாம் இருக்கும் நாட்டில் கொடுப்பவனும் இல்லை பிச்சைக்காரனும் இல்லை திருடவில்லை

பாரதி இந்த உலகை உய்விக்க வந்த என்னை உப்புக்கும் புலிக்கும் பாட வைத்தால் நான் நாத்திகன் ஆகி விடுவேன் என்று பராசக்தியை பார்த்து பேசினார்

எடுத்தது கண்டனர் இட்டது கேட்டனர் என்ன ஒரு கம்பெனி வர்ணனை வில் உடைத்ததை இப்படி வர்ணிக்கிறான் அம்பு எடுத்ததை பார்த்தார்கள் உடைந்ததை கேட்டார்கள் அவ்வளவு வேகமாக நடந்ததாம்

அணிசை காவியம் ஆயிரம் கற்பினும் கவிகுளம் ஆங்கிலம் என்ன கூறி எங்கனம் உணர்த்துவேன் இங்கு இவருக்கு என் உள்ளம் நெறி வழி

நிலம் நீர் தீ வழி விண்ணோடு ஐந்தும் கலந்த மயக்கம் இந்த மண்ணுலகம் தொல்காப்பியம் தொல்காப்பியர் எழுதியிருக்கிறார்

கும்பகர்ணன் இறந்த போது நீதியால் வந்ததொரு நெடு தர்மம் நெறி அல்லாமல் சாதியால் வந்த சிறுநெறி ஏற்கவில்லை என்று கம்பன் எழுதுகிறான்

தனக்கு மரியாதை இல்லை என்கிற போது மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ உன்னை அறிந்தே தமிழன் ஓதினேன் என்று கோபப்படுகிறான் இளங்கோவடிகள் இறை வழிபாட்டு பாடலில் ஞாயிறு போற்றுதும் திங்களைப் போற்றுதும் மாமழை போற்றுதும் என்று இயற்கையை வழிபடுகிறான்

“The fountains mingle with the river,
And the rivers with the ocean;
The winds of heaven mix forever,
With a sweet emotion;
Nothing in the world is single;
All things by a law divine
In one another's being mingle:—
Why not I with thine?

See! the mountains kiss high heaven,
And the waves clasp one another;
No sister flower would be forgiven
If it disdained its brother;
And the sunlight clasps the earth,
And the moonbeams kiss the sea:—
What are all these kissings worth,
If thou kiss not me?”

செல்லி எழுதிய பாடல் நம்ம பாட்டோட ஒத்துப் போகுது அதுக்காக அவன் இங்க இருந்து தான் காப்பி அடிச்சான்னு சொல்றதுக்கு நான் ரெடி இல்லை ஆனால் அவர்களுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாங்க வெச்சிருந்தோம்

கல்லோட கல்லுரச கடலு தண்ணீர் மீன் உரச உன்னோட நான் உரச உலகம் பொருட்கலையே

கம்பன் கடவுள் வாழ்த்து வள்ளுவன் போல யாருக்கும் பொருந்தும் வகையில் யுத்த காண்டத்தில் இப்படி எழுதுகிறான் ஒன்றே எண்ணின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம்

ஆம் என்று உரைக்கின் இன்றே எண்ணின் இன்றே ஆம் நன்றே நம்பி குடி வாழ்க்கை

கம்பனின் மேனேஜ்மென்ட் சைன்ஸ் இத பத்தி இறையன்பு எழுதி இருக்கிறார் அதை நான் வாசிச்சிட்டு உங்க கிட்ட சொல்றேன்

பாலகாண்டம்

உலகம் யாவையும் தாமுல ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்களா அழகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்கள்

ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட தலைமை பின்பு தானாகவே செயல் நடக்கும்  free rain laissez fair

விபீசன் சேர்த்துக் கொள்ளும் முடிவை தனியாக எடுக்காமல் சுக்ரீவன் அங்கதன் ஜாம்பவான் நீளன் சாம்பன் அனுமன் என பலரிடமும் ஆலோசனை கேட்டு முடிவு எடுத்தார்,

Finding out of facts not jumping to conclusion

ராமனுக்கு வசிஷ்டன் முடி சுட்டும் போது அதை கம்பன் இப்படி வர்ணிக்கிறார் இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன் வினையன் தூயன் விழுமியன் வென்றியன் நினையும் நீதியும் கடவான் எனில் அனைய மன்னர்க்கு அழிவும் உண்டாம் கொலோ

ஒரு மன்னன் இனிய சொற்களைச் சொல்பவனாகவும் ஏழைகளுக்கும் கேட்பவர்களுக்கும் கொடுப்பவனாகவும்

ஒரு செயலை ஆராய்ந்து செய்பவனுக்கு அழிவு வராது என்ற பொருள்

Following the protocol under any circumstance

வாலிகாதலனை முந்தை வணங்கினான்

என்கின் வேந்தை காலுற பணிந்து பின்னை கடன் முறை கடவவோர் கெல்லாம் எலுற இயற்றி ஆண்கள் இருந்து இவன் இருந்தோர்க்கெல்லாம் ஞால நாயகர்தம் தேதி சொல்லிநல் நன்மை என்றால்

இலங்கை சென்று சீதை இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட அனுமன் நேரடியாக ராமனிடம் தெரிவிக்காமல் புரோட்டா கால் படி நாட்டின் அரசனான வாலியின் மகன் அங்கதனை முதலில் வழங்குகிறான் அதன்பிறகு வயதில் மூத்த கரடிகளின் அரசன் ஆன ஜாம்பவான் காலில் விழுந்து வணங்குகிறான் பிறகு விருந்தோருக்கெல்லாம் தலைவரான ராமபிரானின் தேவி சீதாப்பிரியா தமிழ் தரக்கூடிய ஆசிரியர்களை சொன்னார்கள் என்று சொன்னார் அவன் மகன் அங்கு தான் நாட்டின் தற்போதைய அரசு அதனுடைய

அசோகவனத்தை அளித்த அனுமனை கட்டி இழுத்து வந்து வாலில்       தீ வைத்து அது நாட்டை அழித்தபின் ஒரு முடிவு எடுக்க ராவணன் குழுவை கூட்டுகிறான் அப்போது குழந்தைகள் பெண்கள் போன்ற வரை அங்கிருந்து வெளியேறச் சொல்கிறான்

முனைவரும் தேவரும் மற்றும் உற்றுவோர்  எனைவரும் தவிர்க்க

என ஏய ஆனியான் புனைகுழல் மகளிர் ரோடு இளைஞர் போக்கினான்

நினைவுரு  காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான்


கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!
*உலக_தாய்மொழி_தினம்*

கனியின் உள்ளே இருக்கும் சுவை மிகுந்த சுளை.முற்றிய கரும்பில் இருக்கும் சாறு. குளிர்ந்த மலர்களில் உள்ள தேன். காய்ச்சிய சர்க்கரைப் பாகின் சுவை. மிகவும் நல்ல பசு கொடுக்கும் பால்.  தென்னை மரம் தரும் குளிர்ந்த இளநீர். இவை அனைத்தையும் விட தமிழே என் உயிருக்கு இணையான இனிமையானது என பாரதிதாசன் கூறுகிறார். 

"தொல்காப்பியம்" நம் மொழியின் இலக்கணநூல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே..அது மொழிக்குமட்டும் அல்ல வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்துக்கொடுத்துள்ளது. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்தது நாமாகத்தான் இருக்கும். நாகரீகம் வளர்ந்த இன்றைய நவீன வாழ்க்கைக்கு இந்த இலக்கணம் பொருந்தாமல் போகலாம்.ஆனால் நம் பழந்தமிழர் வாழ்வியலை அறிய தொல்காப்பியரின் இந்த "பொருளதிகாரம்" மிகவும் உதவும்.

அதில் அகத்திணை வாழ்வினை கூறும் முக்கியமான இரண்டு இயல்கள் "களவியல்" மற்றும் "கற்பியல்".

களவியல் - திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்கைக்கான இலக்கணம்.

கற்பியல் - திருமணத்திற்கு பிறகான இல்லற வாழ்கைக்கான இலக்கணம்.

கற்பியலில் பொருள் தேடி (பணம் சம்பாதிக்க) தலைவன் பிரிந்து செல்வது என்பது கடமையாக கூறப்படுகிறது. அதுவே "வினை" என்ற சொல்லால் அழைக்கிறது தொல்காப்பியம்.

இதையே "வினையே ஆடவர்க்கு உயிரே"- என்றது குறுந்தொகைப் பாடல்.


அணிலாடு முன்றிலார் 

சங்கப்பாடலில் ஒரே ஒரு பாடலை பாடிய புலவர் இவர். குறுந்தொகையில் தலைவி தோழியிடம் கூறியதாக அமைந்த பாடல் அது.

தலைவன் என் உடன் இருந்தால் ஏற்படும் மகிழ்ச்சி என்பது நம் சிற்றூரே திருவிழா கோலம் கொண்டது போல மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறுகிறாள். ஊரில் திருவிழா என்றால் எப்படி வீடு நிறைய உறவினர்கள் கூட்டமாக கூடி குழந்ததைகள் பெரியவர்கள் ஒன்றாக மகிழ்வாக வீட்டின் முற்றத்தில் விளையாடுவோம். கலகலப்பான அந்த முற்றத்தை போல தலைவின் மனம் மகிழ்வாக இருக்கும் என்கிறார் புலவர்.


அதே போல் தலைவனை பிரிந்திருக்கும் பொழுது அதே வீட்டில் அணில் துள்ளி விளையாடும் முற்றம் போல தன் மனம் இருக்கிறது என்று தலைவி கூறுகிறாள்.
புலவர் சொல்லவரும் கருத்து: நெடுநாளாக ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டின் முற்றத்தில் தான் அணில் பயம் இன்றி வந்து விளையாடும். ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மழை பொய்த்ததால் (முல்லை நிலம் பாலையாக திரிதல் ) வாழ வழி இல்லாமல் ஊரை காலி செய்து சென்றுவிடுகின்றனர். அதனால் பாழடைந்த அந்த வீட்டில் முற்றத்தில் அணில் பயம் இன்றி துள்ளி விடையாடுகிறது. தலைவின் மனம் அந்த வீட்டின் முற்றத்தைப் போல களை இழந்து தனிமையில் வருந்துகிறது என்று விளக்குகிறார்.

"மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பு இல் போலப்"

தலைவியின் தனிமைத் துயரை அழகான உவமை கொண்டு விளக்கியதால் அந்த சொற்றொடரே அந்த புலவருக்கு பெயராக வைத்துவிட்டனர்.

காதலர் உழையராகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற,
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பு இல் போலப் புல்லென்று
அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.
- குறுந்தொகை 41

https://www.youtube.com/watch?v=yHE95qDjQ_Q

இந்தியாவிலிருந்து இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் குடியேறிய இந்திய மக்களின் குறிப்பாக குஜராத்திகள் ஒழுக்க கேடாக வெற்றிலை போட்டு பான்பராக் போட்டு பொது இடங்களை அசிங்கப்படுத்துவதாக கருதி அந்த மொழியிலேயே அபராதம் விதிக்கும் பலகைகளை வைத்திருக்கிறார்கள்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலும்

இங்கிலாந்தில் லண்டன் நகரத்தில் குறிப்பாக லைசெஸ்டர் என்ற நகரத்தில் வைத்திருக்கிறார்கள் இதுபோன்ற அவமானங்களை எந்த நாட்டிலும் தமிழன் சந்தித்தது இல்லை


இந்தியாவில் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் வாங்கி விட்டு நாட்டை விட்டு ஓடிப்போன ஒருவர் கூட தமிழர் கிடையாது 56 சதவிகிதம் குஜராத்திகள் அதிலும் சனாதனவாதிகள்

*******

இந்தியாவில் குறிப்பாக எஸ்பிஐ பேங்க் இங்கு பல பேரோட உழைக்கும் மக்களின் பணம் சேமிக்கப்பட்டது அதிலிருந்து கடன வாங்கி தொழில் நடத்தி இந்தியாவை ஏமாற்றிவிட்டு போன பல பேரு அதுல சில பேரு சவுத் இந்தியாவுல ஒருத்தன் விஜய் மல்லையா மிச்சம் பூரா பேரும் பார்ப்பனிய பணியாக்கள் குஜராத் சம்பந்தப்பட்டவர்கள் ஒருபோதும் தமிழன் இப்படி செய்ய மாட்டான் 


இந்தியாவில் முதன்முதலில் அச்சிடப்பட்ட நூல் 'தம்பிரான் வணக்கம்' ஆகும். இது அக்டோபர் 20, 1578 அன்று கேரளாவின் கொல்லத்தில் அச்சிடப்பட்டது, 1508 அல்ல. போர்த்துகீசிய மதபோதகர் ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் (Henrique Henriques) எழுதிய இந்தத் தமிழ் நூல், கத்தோலிக்கக் கோட்பாடுகளை விளக்கும் 16 பக்கங்கள் கொண்ட ஒரு சிறிய கிறித்தவ வழிபாட்டு நூலாகும்தம்பிரான் வணக்கம் - வரலாறு மற்றும் சிறப்புகள்:

  • வரலாறு: போர்ச்சுகலில் இருந்து கோவாவிற்கு கொண்டுவரப்பட்ட அச்சு இயந்திரம் மூலம், தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி இந்நுால் பதிப்பிக்கப்பட்டது.
  • பொருள்: இது 'Doctrina Christam' என்ற போர்த்துகீசிய நூலின் தமிழாக்கமாகும் (கிறிஸ்துவக் கோட்பாடுகள்).
  • மொழியாக்கம்: என்றிக்கே என்றீக்கசு (Father Henriques) தமிழ் மொழியை நன்கு கற்று, இப்புத்தகத்தை உருவாக்கினார்.
  • முக்கியத்துவம்: இந்திய மொழிகளில் முதன்முதலில் அச்சில் வெளியான நூல் இதுவே. மேலும், இது தமிழ் அச்சு வரலாற்றின் தொடக்கமாகக் கருதப்படுகிறதுகுறிப்பு: தம்பிரான் வணக்கம் என்ற நூலின் அசல் பிரதி தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.  


சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை (சென்னை மத்திய மருத்துவமனை) இந்தியாவின் முதல் நவீன மருத்துவமனையாகக் கருதப்படுகிறது. 1664-ஆம் ஆண்டு நவம்பர் 16-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் ராணுவ வீரர்களுக்காகத் தொடங்கப்பட்ட இது, இன்று சென்னை பாரிமுனை (Park Town) பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் முன்னணி அரசு மருத்துவமனையாக இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது

முக்கிய அம்சங்கள்:

  • நிறுவப்பட்ட ஆண்டு: 1664 (போர்ட் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள்ளே தொடங்கப்பட்டது).
  • நோக்கம்: தொடக்கத்தில் ஆங்கிலேயப் படைகளின் நோய்வாய்ப்பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க உருவாக்கப்பட்டது.
  • வளர்ச்சி: 1842-ல் இந்தியர்களுக்கும் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டது.
  • கல்வி இணைப்பு: புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரி (Madras Medical College) இதனுடன் இணைந்தது. 

இந்த மருத்துவமனை இந்தியாவின் நவீன மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக இன்றும் செயல்பட்டு வருகிறது


சென்னையில் (அன்றைய மதராஸ்) தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் வங்கி மதராஸ் வங்கி (The Madras Bank) - 1683 ஆகும். இது ஜூன் 21, 1683-ல் கவர்னர் வில்லியம் கிஃபோர்டால், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகத் தேவைகளுக்காக நிறுவப்பட்டது. இதுவே இந்தியாவில் நவீன வங்கி முறைக்கு அடித்தளமிட்டது

சென்னையில் வங்கித் தொடக்கம் - முக்கியக் குறிப்புகள்:

  • தோற்றம்: 1683-ல் மதராஸ் பிரசிடென்சியில் ஐரோப்பிய வர்த்தகர்களால் இது நிறுவப்பட்டது, பின்னர் 1843-ல் பாங்க் ஆஃப் மதராஸுடன் இணைக்கப்பட்டது.
  • பரிணாம வளர்ச்சி: 1806-ல் 'மதராஸ் வங்கி' (Madras Bank) என்று அழைக்கப்பட்டு, பின்னர் 1843-ல் கார்நாடிக் வங்கி, பிரிட்டிஷ் வங்கி மற்றும் ஆசிய வங்கி ஆகியவற்றுடன் இணைந்து பாங்க் ஆஃப் மதராஸ் (Bank of Madras) ஆக உருமாறியது.   
  • பிற்கால நிலை: இந்த பாங்க் ஆஃப் மதராஸ், 1921-ல் கல்கத்தா மற்றும் பம்பாய் வங்கிகளுடன் இணைந்து இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா (Imperial Bank of India) ஆனது, இதுவே பின்னர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆக மாறியது.
  • இந்தியன் பேங்க்: சென்னையில் 1907-ல் தொடங்கப்பட்ட மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வங்கி இந்தியன் பேங்க் ஆகும், இது இந்தியர்களின் நிதித் தன்னிறைவுக்காக உருவாக்கப்பட்டது

 

 பாங்க் ஆஃப் ஹிந்துஸ்தான் (1770) இந்தியாவின் முதல் வங்கி எனக் கருதப்பட்டாலும், சென்னையில் நிறுவப்பட்ட மதராஸ் வங்கியே (1683) இந்தியாவின் மிகப் பழமையான வங்கியாகக் கருதப்படுகிறது

இந்தியாவில் வங்கித் துறையின் ஆரம்பகால வளர்ச்சி குறித்து உங்களுக்கு இன்னும் விவரங்கள் தேவையா?

 

1. மதராஸ் வங்கி (1683) - ஒரு முன்னோடி

இது 1683-ல் ஜூன் 21 அன்று சென்னை ஜார்ஜ் டவுனில் தலைமை இடத்தைக் கொண்டு தொடங்கப்பட்டது

  • நிர்வாகம்: இது பெரும்பாலும் ஐரோப்பிய வர்த்தகர்களால் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியுடன் இணைந்து நிர்வகிக்கப்பட்டது.
  • சிறப்பு: நவீன வங்கி முறைக்கு வித்திட்ட இது, 1806-ல் சிறிய சரிவைச் சந்தித்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டது

2. பாங்க் ஆஃப் மதராஸ் (1843) - பிரசிடென்சி வங்கி

1843 ஜூலை 1 அன்று, மதராஸ் வங்கி மற்றும் சில சிறிய வங்கிகள் (Carnatic Bank, Asiatic Bank) இணைந்து பாங்க் ஆஃப் மதராஸ் என்ற பிரசிடென்சி வங்கியாக உருவெடுத்தது

  • அதிகாரம்: இது தென்னிந்தியாவின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ததுடன், அந்த காலத்தில் தனக்கெனத் தனி பணத்தாள்களை (Currency Notes) அச்சிடும் அதிகாரத்தையும் பெற்றிருந்தது.
  • கட்டடம்: இதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் 1897-ல் கட்டி முடிக்கப்பட்டது. இன்று அது பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) முக்கிய அலுவலகமாகச் சென்னையில் இயங்கி வருகிறது

3. இந்தியன் பேங்க் (1907) - சுதேசி எழுச்சி

ஆங்கிலேய வங்கிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தியர்களுக்காக ஒரு வங்கி வேண்டும் என்ற நோக்கத்தில் 1907-ல் இந்தியன் பேங்க் தொடங்கப்பட்டது

MatrixBCG.com

  • காரணம்: 1906-ல் சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிதி நெருக்கடி மற்றும் 'அர்பத்நாட் & கோ' (Arbuthnot & Co) நிறுவனத்தின் வீழ்ச்சியே இந்த வங்கி தொடங்க முக்கியக் காரணமாக அமைந்தது.
  • தலைவர்கள்: வழக்கறிஞர் வி. கிருஷ்ணசாமி ஐயர் மற்றும் செட்டியார் சமூகத்தினர் ஒன்றிணைந்து இந்த சுதேசி வங்கியை உருவாக்கினர்

4. வங்கித்துறையின் ஒருங்கிணைப்பு

  • 1921-ல் பாங்க் ஆஃப் மதராஸ், கல்கத்தா மற்றும் பம்பாய் வங்கிகளுடன் இணைந்து இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா ஆனது.
  • சுதந்திரத்திற்குப் பிறகு 1955-ல் இதுவே பாரத ஸ்டேட் வங்கி (SBI) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது   

 

Lion Raja Ganesan 

Comments

Popular posts from this blog

தேர்தல் வரலாறு

Language, Communication, and the Story of Migration