தேர்தல் வரலாறு

Lion Raja Ganesan pmjf


1990களில் சின்ன குத்தூசி தேர்தலோ தேர்தல் என்ற தொடர் ஒன்றை எழுதினார், 12 வாரங்கள் தான் வந்தது அவரை சந்தித்தபோது அதற்காக அவர் சேர்த்து வைத்திருந்த ஆதாரங்கள் 400 பக்கத்துக்கு மேல இருந்தது,

அது குறித்து கேட்டபோது நிறைய சுவாரஸ்யமான தகவல்களை சொன்னார் 

1977 தேர்தல் அன்று தாராபுரம் தொகுதியின் கட்சி வேட்பாளராக அலங்கியம் பாலகிருஷ்ணன் எம்ஜிஆரால் நிறுத்தப்பட்டார்

அன்று இருந்த குளறுபடியில் ஆல்டர்நேட் வேட்பாளர் அய்யாசாமி என்பவருக்கு இரட்டை இலை சின்னம் தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டது,

எம் ஜி ராமச்சந்திரன் ஈகோ எழுந்தது தான் விரும்பிய சிங்கம் சின்னத்தை அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு ஒதுக்கினார் அவருக்காக 17 முறை பிரச்சாரம் செய்தார் ஆனால் தேர்தல் முடிவு வேராய் இருந்தது அய்யாசாமி வென்றிருந்தார் நிற்க அன்று அது ஒரு தனித்தொகுதி

https://www.vikatan.com/government-and-politics/two-leaf-drooping-mgr-in-1977-assembly-election-what-happened-in-dharapuram-constituency 


தேர்தல்_வரலாறு 2

ஆங்கிலேயர் காலத்தில் இரண்டு முறை தேர்தல் நடைபெற்றது ஆனால் அன்று எல்லோருக்கும் வாக்குரிமை இல்லை

தமிழகத்தில் ஒரு கதை சொல்லப்பட்டு கொண்டிருந்தது ஏன் கதை என்கிறேன் என்றால்

இதை காமராஜர் எங்கும் பதிவு செய்யவில்லை அவர் ஒரு காந்தியவாதி உண்மையாக இருந்தால் அதுகுறித்து அவரும் பேசியிருப்பார்

1937 வருடம் பிப்ரவரி மாதம் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் காமராஜரை நிறுத்த விரும்பியது ஆனால் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்ன காரணம்

காமராசருக்கு சொத்து எதுவும் இல்லாததால் அவர் வரி எதுவும் கட்டுவதாக இல்லை நகரசபை வசூலிக்கும் சொத்துவரி போன்ற எந்த வரியையும் செலுத்துவதாக அவர் இல்லை அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் வசதி வாய்ப்புகள்ஓடு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கம் அதைக் கேள்விப்பட்டு இவரை எப்படியாவது தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்று எண்ணி

ஒரு ஆட்டுக்குட்டியை அவர் பெயரில் வாங்கி அதற்கு எட்டணா

இன்றைக்கு பெங்களூரில் செல்லாது 50 பைசா வரி கட்டினார் அதன் மூலம் வாக்குரிமை பெற்றார் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டார் பசும்பொன் முத்துராமலிங்கம் ஆதரவாக பிரச்சாரம் செய்தார் காமராஜர் வெற்றி பெற்றார் ,

தமிழ்நாடு பாதி ஒரிசா பாதி கேரளா பாதி கர்நாடகா பாதி ஆந்திராவை சேர்ந்த சென்னை மாகாணம் அவர்கள் 1946 இல் பிரகாசம் முதல்வரானார் ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் அவருக்கு பதிலாக ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓமந்தூரார் இரண்டு ஆண்டு காலம் பதவி வகித்தார்

அதன்பின் 1949 இல் மார்ச் மாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூடி புதிய முதல்வராக பி எஸ் குமாரசாமி ராஜா வை தேர்ந்தெடுத்தார்கள் 1949இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா அவர்களே 1952ஆம் வருடம் நடைபெற்ற முதல் பொதுத்தேர்வு வரையில் அமைச்சராக இருந்தார்

இவர் தலைமையில் முதல் பொதுத்தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது அமைச்சர்கள் 8 பேரும் தோற்றுப் போய்விட்டார்கள் அவரே தோற்றுப் போனார் ,

ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி காங்கிரஸ்க்கு இல்லை நண்பர்கள் கவனிக்க வேண்டும் 60 பேர் கம்யூனிஸ்டுகள் முதல் தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தனர் தேர்தலுக்கு முன்பே காங்கிரசை விட்டு விலகி இருந்தார்                   டி பிரகாசம் அன்றே ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டது,

ஒரு இலட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளுக்கே இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தொகுதிகளில் இரு வேட்பாளர் பட்டியல்கள் இருந்தன - பொதுப் பட்டியல் மற்றும் தனிப் பட்டியல். வாக்காளர்கள் இரு பட்டியல்களுக்கும் தனித்தனியே இருமுறை வாக்களிக்க வேண்டும். வெற்றி பெற்ற இரு வேட்பாளர்கள் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தனி உறுப்பினர் - தனிப் பட்டியலில் உள்ள SC/ST வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர்  

பொது உறுப்பினர் - தனி உறுப்பினரைத் தவிர்த்த ஏனைய வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர் இவர் பொதுப் பட்டியலிலும் இருக்கலாம், தனிப் பட்டியலிலும் இருக்கலாம்

இம்முறையினால் சில சிக்கல்கள் உண்டாகின. சில தொகுதிகளில் எ.கா. 1957 தேர்தலில் கோவை -2 தொகுதி இரு உறுப்பினர்களுமே தனிப் பட்டியலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சிக்கல்களால் 1961 இல் இரட்டை உறுப்பினர் முறை நீக்கப்பட்டு தற்போதுள்ள தனித்தொகுதி முறை அமல்படுத்தப்பட்டது.

#தேர்தல்_வரலாறு 3

மெட்ராஸ் ஸ்டேட் அப்படித்தான் வெள்ளைக்காரன் உருவாக்கி வைத்திருந்தான் மும்பை தலைமையாக ஒன்று கல்கத்தாவை தலைமையாக ஒன்று சென்னையை தலைமையாக ஒன்று அப்போது இருந்த சென்னை மாகாணம் 

தமிழ்நாட்டில் இருந்து 190 பேர் எம்எல்ஏ, ஆந்திராவில் இருந்து 143 பேர் ,அதே மாதிரி கர்நாடகா 11 பேர் கேரளா 29 

இது எல்லாம் சமாளிக்கறதுக்காக ஆந்திரா காரங்க நிறைய ஆதிக்கம் செலுத்திட்டாங்க எங்க போனாலும் பாப்பான்  உள்ள புகுந்து ஆட்டையை கலைச்சிடுவான் அப்படித்தான் ராஜாஜி உள்ள வந்தான் மொத்தம் உள்ள 375 சட்டமன்ற உறுப்பினர்களில் 66 தொகுதிகள் அப்போது இரட்டை வாக்குரிமை இருந்தது ஒரு தொகுதியில் ஒரு தலித் போட்டி போடலாம் அவரை எதிர்த்து பொதுவானவரும் போட்டி போடலாம் அது வேலைக்காம போனது பிற்காலத்தில் ஜனநாயகம் அமெரிக்காவில் முதல் முதல் அமல்படுத்தப்பட்டது இந்தியாவுக்கு வரும்போது அதை நீர்த்துப்போக செய்தது 

மூன்று உறுப்பினர்கள் தேர்தல் நடந்து விண்ணப்பம் கொடுத்து எதிர்த்து யாரும் போட்டியிடாமல் ஜெயித்தார்கள் அது ஜனநாயகத்தின் முதல் குற்றம் பிஜேபிகாரன் மூன்று இடத்தில் போட்டு அத்வானி வாஜ்பாய் போன்றவர்கள் ரெண்டு இடத்துல தான் நாலு வாட்டி போட்டி போட்டு இருக்காங்க ஏன் உங்களுக்கு இந்த சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டது  அமெரிக்காவில் இல்லை இங்க மட்டும் ஏன் 

சரி எதிர்ப்புகளே இல்லாமல தேர்தலில் வெற்றி பெற்ற அந்த மூணு பேரும் நாட்டுக்காக எண்ணத்தை புடுங்குனாங்க தேடிப் பார்த்தேன் எதுவும் இல்லை  அதுல ஒருத்தன் நம்ம வீணாப்போன முத்துராமலிங்க தேவன்

காங்கிரசின் தமிழகத்தில் ,முதல் தோல்வி , முதல் துரோகம்

1951 -52 முதல் பொதுத் தேர்தலில் சென்னையில் போட்டியிட்ட

டிடி கிருஷ்ணமாச்சாரி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார் அவரை எதிர்த்து சுயேச்சையாக சண்டே அப்சர்வர் என்ற பத்திரிகையில் ஆசிரியர் பி பாலசுப்பிரமணியம் போட்டியிட்டார்

ஒட்டு மொத்த சென்னையும் ஒரே தொகுதியாக இருந்த போதும் நான்கு நாட்கள் வாக்குகள் எண்ணப்பட்டன கடுமையான போட்டி இருந்தது

அன்றைய சென்னை காங்கிரஸ் கைகளில் இருந்தது கடைசியில் ஆயிரங்களில் கிருஷ்ணமாச்சாரி வென்றார் 

திண்டிவனம் தொகுதி இங்கே காங்கிரஸ் சார்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா போட்டியிட்டார்

அவர் எதிர்த்து தமிழறிஞர் திருக்குறள் முனுசாமி கோயங்கா விமானத்தில் நோட்டீஸ்கள் விநியோகித்தார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கே ஐயா முனுசாமி திருக்குறளார் வென்று இருந்தார்

இந்தத் தேர்தலில் பெரியாரின் புகழ் பெற்ற முழக்கம்

60 அடி குழி தோண்டி காங்கிரசை புதைப்போம் என்று கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக பெரியார் ஓட்டு கேட்டார் வீண் போகவில்லை,

கம்யூனிஸ்டுகள் 63 இடங்களில் வென்று இருந்தார்கள் தமிழக அரசியலில் அதுதான் இடதுசாரிகளின் உச்சம்

அன்று தேர்தல் மூன்று கட்டமாக பல மாதங்கள் நடந்தது முதல்கட்ட தேர்தலில் தமிழக தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியாக இருந்தது மொத்த பேரும் தோத்து போய் இருந்தார்கள்

இப்போது போல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்க வில்லை டெல்லிக்கு முதல் அதிர்ச்சி தமிழகத்தில் இருந்துதான் அப்போது வந்தது

அப்போதே டெல்லியின் கவர்னர் தில்லு முள்ளு அரங்கேறியது காங்கிரஸ் அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் மொத்தம் 375 தொகுதிகள் இதில் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காததால் கட்சிக்குள்

ராஜாஜி ,காய் நகர்த்தினார் எனக்கு பதவி வேண்டாம் என்று வெளியில் சொல்லிக் கொண்டு உள்ளுக்குள் தமக்கு ஆதரவாளர்களாக ஏற்கனவே இருந்த சி எஸ் 'சௌந்தரம் ராமச்சந்திரன்' ராம்நாத் கோயங்கா, நீலம் சஞ்சீவி ரெட்டி போன்றவர்களை சேர்த்துக்கொண்டு கொல்லைப்புறம் வழியாக முதல்வரானார்,

ராஜாஜி தேர்தல் பனி செய்ய வில்லை செய்த மபொ சிவஞ்ஞாம் போன்றவரை நக்கலடித்தார் அதை அவர் சிஷ்யர் மபொசி தன்வாழ்நாள் குறிப்பில் பதிவிட்டு போயிருக்கிறார்

பதவிக்கு வந்த ராஜாஜி ஒரு நல்ல திட்டம் கொண்டு வந்தார் என்றால் அது தஞ்சையில் நிலவிவந்த நிலவுடைமையாளர்கள்க்கும் உழைப்பாளர்களுக்கு மான பிரச்சனையை தீர்க்கும்"' பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் ;இதன்மூலம் தமிழகத்தில் நிலவிவந்த அரிசி பற்றாக்குறை தீர்ந்தது இருந்தும் இரண்டாண்டுகளில் அவர் பதவி விலக காரணம் குலக்கல்வித் திட்டம் தான்

ராஜாஜி முதல்வர் ஆனது கொல்லைப்புறம் வழியாக என்று ஏன் பெரியார் சொன்னார்

தமிழகத்திலிருந்து சி சுப்பிரமணியம் சௌந்தரம் ராமச்சந்திரன் இருவரும்

கல்கத்தாவில் இருந்த நேருவை சந்தித்து விளக்கம் கொடுத்த போது நேரு கைப்பட ஒரு கடிதம் எழுதி கொடுத்தார் அதில் ராஜாஜி முதல்வராகலாம் ஆனால் ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஜெயிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார் ,

https://en.wikipedia.org/wiki/Sri_Prakasa 



அந்த உத்தரவை கொண்டு வந்தது கட்சிக்குள் வாசித்து தீர்மானம் இயற்றிய அன்றே அவரை கவர்னர் பிரகாஷ் கவர்னரின் பிரதிநிதியாக சட்ட மேலவை உறுப்பினராக அவருக்கு பதவிப் பிரமாணம் செய்தார் முறைப்படி பத்து உறுப்பினர்கள் ஆதரவோடு மேலவை உறுப்பினராக ஆக்கி இருக்கலாம் அவசரமாக ராஜாஜி மேலவை உறுப்பினராக ஆக்கியது தான் இந்தியாவில் நடந்த முதல் பார்ப்பன அத்துமீறல்,

        ******************************

#தேர்தல்_வரலாறு 4

1952 க்கு முன் நீதிக்கட்சி காலத்தில் இரண்டு தேர்தல்கள் நடந்தன அப்போது

கட்சிக்கு சின்னம் இல்லை பெட்டி தான் சின்னம் காங்கிரசுக்கு ஓட்டு போட மஞ்சள் பெட்டியில் போடவும்

நீதிக்கட்சிக்கு வெள்ளை கோடு போட்ட பச்சை பெட்டியில் போடுங்கள்

என்றும் வாக்கு கேட்டார்கள்

களவாணி படத்தில் வருவதுபோல அப்போதே கள்ள ஓட்டு போடப்பட்டது எப்படி என்றால் வாக்குச் சீட்டை பெட்டியில் போடாமல் அவர் முகவரிடம் கொடுத்தாள் அவர் மொத்தமாய் கொண்டுபோய் அந்தக் கட்சி பெட்டியில் போடுவார்

நேருவுக்கு மிகவும் நெருக்கமான காஷ்மீர் பிரச்சினையிலும் உறுதுணையாக இருந்த சுகுமார் சென் இவரும் ஒரு ஐசிஎஸ் அதிகாரி

முதல் பொதுத் தேர்தலுக்கு சின்னங்களை தேர்வு செய்யும்போது அன்றைக்கிருந்த படிப்பறிவு 12 சதவிகிதம் அந்த எல்லா மக்களுக்கும் புரியும் வண்ணம் சின்னம் ஒதுக்க நிறைய உழைத்திருக்கிறார் அவர் கொண்டுவந்த சின்னங்களை கீழ்நிலையில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அனைவரும் பார்ப்பனர்கள்,

அந்தக் காலத்தில் நிறைய விளையாடி விட்டார்கள், சின்னங்கள் பசுமாடு ஒரு சின்னம், கன்றுடன் பசு இன்னொரு ,சின்னம் வாழைமரம் ,ஒரு சின்னம் குலை தள்ளிய வாழை இன்னொரு சின்னம் ,காளை மாடு ஒரு சின்னம் கலப்பையில் பூட்டிய காளை மாடு அது ஒரு சின்னம் ,குத்துவிளக்கு ஒரு சின்னம், அகல்விளக்கு ஒரு சின்னம் இதை ஏன் சொல்றேன்னா இக்கட்டான இடங்களில் கடைநிலையில் உள்ள தேர்தல் அதிகாரிகள் எப்படி சின்னம் ஒதுக்கி இருக்கிறார்கள் என்பதற்கு ஆர்கேநகர் குக்கர் போல அன்றைக்கே நிறைய உள்ளடி வேலைகள் நடந்திருக்கிறது,

 ஒரே ஒரு சம்பவம் சொல்கிறேன்,நாகப்பட்டினம் தொகுதியில் லாசர் மறைகாயர் என்பவர் போட்டியிட்டார் அவரது சின்னம் பூச்செண்டு அதாவது பொக்கே

அதே தொகுதியில் போட்டியிட்ட அப்பு என்ற வேட்பாளரின் சின்னம் ஆலமரம் தீப்பெட்டி சைஸில் போக்கையும் ஆல மரத்தையும் பிரிண்ட் செய்தால் கடைக்கோடி இஸ்லாமிய பெண்கள் எப்படி புரிந்து கொண்டிருப்பார்கள், இஸ்லாமியர்கள் 80% வசிக்கும் பகுதியில் அவரைவிட அப்பு அதிக ஓட்டுகள் பெற்றிருந்தார் இப்படியான குளறுபடிகள் ,

அன்றைக்கு வாக்கை பெட்டிக்குள்  குத்துவதற்கு ஒரு குச்சியும் வைத்திருந்தார்கள் ஆனால் அன்றைய அறியாமை பெட்டியின் மேலே வாக்குச் சீட்டை போட்டு விட்டு வந்தவர்கள் நிறைய பேர் இந்தியா முழுக்க காங்கிரஸ் வென்ற போதும் அன்றைய தமிழகத்திலும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது,

5,தேர்தல்_வரலாறு #ஈரோடு_மாவட்டம்

இந்தியாவில் நடந்த தேர்தல் வரலாற்றில் மொடக்குறிச்சி தொகுதியில் கடந்த 1996ல் நடந்த விநோதத்தை எளிதாக யாரும் மறக்க முடியாது. இந்தத் தேர்தலில் 1030 சுயேச்சைகள் போட்டியினர். இவர்களில் 63 சுயேச்சைகளுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் முற்றிலும் விவசாயிகளை கொண்டது மொடக்குறிச்சி தொகுதி. கடந்த 1996 ல் நாடு முழுவதும் நடந்த மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நன்னடத்தை விதிகளை அமல்படுத்த அப்போதைய தேர்தல் ஆணையர் சேஷன் தீவிரமாக களமிறங்கினார். ஆனால், அவரையே திக்குமுக்காட வைத்தனர் மொடக்குறிச்சி தொகுதி வாக்காளர்கள் ஒரு பகுதியினர். தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் தேவை, விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக 120 பக்கங்களை கொண்ட வாக்கு சீட்டு புத்தகம் தயாரிக்கப்பட்டது.



 இத்தொகுதியில் மொத்தம் போட்டியிட்ட 1033 பேரில் 4 வேட்பாளர்கள் மட்டுமே 20,000 ஓட்டுகளுக்கு மேல் பெற்றனர். 4 சுயேச்சைகளுக்கு மட்டுமே 100 ஓட்டுக்கு மேல் கிடைத்தது. 1030 சுயேச்சை வேட்பாளர்களும் சேர்த்து வாங்கிய மொத்த ஓட்டு 7,480 தான். ஓரு ஓட்டு கூட வாங்காதவர்கள் 88 பேர். ஒரு ஓட்டு மட்டும் வாங்கியவர்கள் 97 பேர். 2 ஓட்டு வாங்கியவர்கள் 157 பேர். 3 ஓட்டு வாங்கியவர்கள் 108 பேர். 4 ஓட்டு வாங்கியவர்கள் 84 பேர், 5 ஓட்டு வாங்கியவர்கள் 60 பேர். மீதி அனைவரும் 10 ஓட்டுக்கு மேல் வாங்கியவர்கள். மேலும், இத்தொகுதியில் அப்போது 28 பெண்களும் போட்டியிட்டனர்

இந்த தொகுதியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார் அதனால் தான் அத்தனை பேர் போட்டியிட்ட போதும் வெற்றி பெற்றார் ஆனால் கடந்த தேர்தலில் பிஜேபி வேட்பாளர் டாக்டர் சி சரஸ்வதி பெற்ற வாக்குகள் 78,125 சுப்புலட்சுமி ஜெகதீசன் பெற்றது 77 844 வெறும் 281 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார் இதற்கான காரணம் அங்கே நாம் தமிழர் பத்தாயிரம் ஓட்டு வாங்கி இருந்தது எந்த அரசியலுக்காக அவர் திமுகவிலிருந்து போராடினாரோ அதே ஈழ அரசியலில் அவர் வீழ்த்தப்பட்டார், 

கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.

1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்.

15 பேரில் 14 பேர் அடுத்தத் தேர்தலில்(1962) தோற்றுவிட்டனர். திமுக தலைவர் அண்ணா உட்பட.
ஒருவருடையத் தலை மட்டும் தப்பியது. அது நம்ம தல 🖤❤
ஆனால் அவர் தனியாகப் போகவில்லை. உடன் 49 பேர். அதாவது 15 பேர் இப்போது 50 பேராக ஆகிவிட்டது.
தான் சந்தித்த இரண்டாவது பொதுத் தேர்தலியே எதிர்கட்சியாக உயர்ந்துவிட்டது திமுக.

திமுக சந்தித்த முதல் தேர்தல் 1957 இதில் வெற்றி பெற்றவர் 15 பேர் அதில் நான்கு பேர் தலித் அடுத்த தேர்தலில் 14 பேரும் தோற்றுப் போய் கலைஞர் ஒருவர் கூட 49 பேர் புதியவர்கள் கட்சி எதிர்க்கட்சியாக பதவி உயர்வு பெற்றது


ராஜாஜி அமைத்த ஆட்சியில் மந்திரிகள் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை, ஒருவர் கூட தலித் இல்லை காமராசர் ஆட்சியில் ஒரு தலித்   அமைச்சராக்கினார் அவர்தான் கக்கன்

அவங்க குடும்பம் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்கிறார்கள்  அவருக்கு காமராசர் மாதிரியே யோக்கிய பட்டம் கொடுத்துட்டாங்க அது பத்தி டாக்டர் kantharaj நிறைய பேசியிருக்கிறார்

அண்ணா அமைத்த மந்திரி சபை தான் தமிழ்நாட்டில் எல்லோருக்குமான பிரதிநிதித்துவம்

தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி இந்தப் பகுதியில் போட்டியிடாமல் திருச்சிக்கு அப்பால் குளித்தலையில் போட்டியிடுவது ஏன் இங்கு நின்றால் தோற்று விடுவோம் என்ற பயம் தான் காரணம்".... "நான் ஒரு சவால் விடுகிறேன் இந்தத் தஞ்சை மண்டலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறேன்" என்று பரிசுத்த நாடார் சவால்  விடுகிறார்இதெல்லாம் மறுநாள் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வெளிவந்ததை படித்துப் பார்த்த கலைஞர் எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கிறார்,

காலங்கள் உருண்டோடுகிறது மீண்டும்1962 சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது திமுகவினர் சென்றமுறை போட்டியிட்டவர்கள் அனைவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அண்ணா பட்டியல் தயாரிக்கிறார்.

இதனை அறிந்த கலைஞர் அண்ணாவிடம் சென்று "நான் இந்த முறை குளித்தலையில் போட்டியிடவில்லை தஞ்சாவூரில் போட்டியிட போகிறேன்" என்று கூறுகிறார்அதிர்ச்சியான அண்ணா "தஞ்சையில் பரிசுத்த நாடார் அல்லவா போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து உன்னால் வெற்றி பெற முடியுமா" என்று கேட்கிறார்.

"இல்லை அண்ணா நான் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது அதற்கு சரியான களம்தான் இந்த தஞ்சை களம்இந்த தஞ்சை மண்டலத்தில் இந்த கருணாநிதி எத்தகையவன் என்பதை நிரூபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம் எனவே எனக்கு தஞ்சையை தாருங்கள்" என்று வேண்டி விரும்பி #தஞ்சையில் போட்டி இடுகிறார் கலைஞர்.

தேர்தல்நாள் நெருங்க நெருங்க சூறாவளி பிரச்சாரம் செய்கிறார் கலைஞர்.ஆசைத்தம்பி, _கோவிந்தசாமி விருத்தாச்சலம் செல்வராஜ் மா..சாரதி களம்பூர்அண்ணாமலை #நடிகர் ஆனந்தன் அன்பில்தர்மலிங்கம் மன்னைநாராயணசாமி பிஎஸ்சந்தானம் இசப்பன் என திமுகவின் மற்ற தொகுதி வேட்பாளர்களும் கலைஞருக்காக பிரச்சாரம் செய்துவிட்டு போகிறார்கள்,


https://tamil.oneindia.com/news/chennai/karunanidhis-election-campaign-345517.html 

எதிர் முகாமில் உள்ள பரிசுத்தநாடார் அன்றைய காங்கிரஸ் பெருந்தலைகள் அனைவரையும் பிரச்சார களத்தில் இறக்கி விடுகிறார் தனக்கு சொந்தமான 45 பேருந்துகளில் தொண்டர்களை அழைத்துக்கொண்டு தொகுதி முழுவதும் அணிவகுப்பு நடத்திக் காட்டுகிறார்.

தொகுதி முழுவதும்   பரிசுத்த நாடாரின் பண மழை பொழிந்ததால் பரிசுத்த நாடாரே வெற்றி பெறுவார் என கணிப்புகள் தெரிவித்தன.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாத கலைஞர் தன் பிரச்சாரத்தை டாப் கியரில் உயர்த்தினார். ஆம் வீடு வீடாகச் சென்று தெருத்தெருவாக சென்று ஊர் ஊராகச் சென்று ஒவ்வொரு மனிதராக கைகுலுக்கி திமுகவிற்கு ஓட்டு கேட்டார்.

ஏற்கனவே குளித்தலை எம்எல்ஏவாக இருந்து தான் செய்த பணிகளை துண்டு பிரசுரமாக வீடுவீடாக வழங்கினார். அவருக்கு துணையாக பரப்புரையில் கேடிஎம் பஸ் நிறுவன ஊழியர்கள் உதவினர்.

தேர்தலும் நல்ல முறையில் முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஓட்டுக்களும் எண்ணப்பட்டன,

தஞ்சை தொகுதியை கொஞ்சம் சென்சிட்டிவான தொகுதியாக அறிவித்திருந்த தேர்தல் கமிஷன் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் மத்தியபடைகளை கொஞ்சம் கூடுதலாக இறக்கிவிட்டு இருந்தது,ஆம் அன்றைய கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தவிடுபொடியாக்கி கலைஞரே வெற்றி பெற்றார்.

பரிசுத்தநாடார் தோல்வியா?" செய்தியைக் கேட்ட முதலமைச்சர்காமராஜரே சற்று அதிர்ந்து போய்விட்டார்,ஏன் அண்ணாவே சற்று ஆடிப்போய் விட்டார்.

"போர்க்களத்தில் ஒரு வீரன் எப்படிப் போர் புரிய வேண்டும் என்பதை நமக்கெல்லாம் பாடமே நடத்திக் காட்டிவிட்டான் என் தம்பி கருணாநிதி" என்று தஞ்சை வெற்றியை அண்ணா கலைஞருக்கு புகழ்மாலை சூட்டினார்.

காங்கிரசின் பெருந்தலைகள் கலைஞரின் பாய்ச்சல் எத்தகையது என்பதை ஏற்கனவே குளித்தலையில் உணர்ந்து கொண்டாலும் தஞ்சையில் அவரது வெற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாக அசரடித்தது, அதன் எதிரொலியாக தேர்தல் வெற்றியை முரசொலியில் குறிப்பிட்ட கலைஞர் "தஞ்சையில் தி.மு. வெற்றி பெற்றுவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று பரிசுத்த நாடார் கூறியிருந்தார்"இதோ இந்த கடிதத்தின் வாயிலாக நான் கேட்டுக் கொள்ளுகிறேன் அவர் அரசியலில் இருந்து விலகத் தேவையில்லை எப்போதும்போல் இதுபோன்ற சவால்களை எங்களுக்கு விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நாங்கள் இன்னும் வேகத்தோடு பணியாற்ற முடியும்" என்று நச்சென்று மூன்றே வரிகளில் முடித்துக் கொண்டார் கலைஞர்.. கலைஞர் என்றால் சும்மாவா.

காமராஜர், அண்ணா இருவரும் தலைமைப் பொறுப்பில் இருந்த போது அவர்களுக்கு கட்சித் தலைமை என்பது ஒரு அழுத்தம்.

கலைஞர் தலைவராக ஆகும் வரை அந்த அழுத்தம் இல்லை. தலைவர் ஆனதும் அவரது தலைமைப் பதவியே அவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.

காவியத் தலைவர் அவர்.

1972-ல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர். அதற்கு அடுத்த ஆண்டே திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றியை சுவைத்தார். அடுத்ததாக 1974 தொடக்கத்தில் புதுச்சேரி பேரவை தேர்தலிலும் 30-ல் 12 இடங்களைப் பெற்று தனிப்பெருங்கட்சியாகி ஆட்சி அமைத்தது அதிமுக, இந்திரா காந்தி எம்ஜிஆருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றாததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று ஆட்சியை அதிமுக பறிகொடுத்தது. திண்டுக்கல் இடைத்தேர்தல், 1974 புதுவை பேரவைத் தேர்தல் என வரிசையாக வெற்றிகளைக் குவித்த எம்ஜிஆர் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காத்திருந்தார். 1975-ல் அவசர நிலையை இந்திரா பிரகடனப்படுத்தியபோது முந்தைய தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த கருணாநிதி, இப்போது கடுமையாக காங்கிரசை எதிர்த்தார். அதைத் தொடர்ந்து திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. எம்ஜிஆரோ, எமர்ஜன்சியை ஆதரித்தார்.

இந்நிலையில் 1977 பிப்ரவரியில் மக்களவைத் தேர்தல் நடைபெற பிரதமர் இந்திரா காந்தி ஏற்பாடு செய்தார். புதுச்சேரியில் கிடைத்த ஏமாற்ற தழும்பு மறையாத நிலையில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து இந்திரா காந்தி அறிவிக்காதது எம்ஜிஆரை மேலும் காயப்படுத்தியது. சினிமாவுலகில் தன்னை பகைத்தவர்களை எம்ஜிஆர் நன்றாக பழகியபடியே சத்தமின்றி பழிவாங்குவார் என தகவல்கள் உலவியதுண்டு. ஆனால் இந்திரா காந்தி தன்னை தொடர்ந்து

கோபமூட்டியபோதும் எம்ஜிஆர் அமைதி காத்தார். என்ன செய்வது பிரதமராயிற்றே. ஆனால் தக்க தருணத்திற்காக காத்திருந்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கூட்டணியை தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்தனர்.

மறுபுறம் நாடெங்கும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்திருந்தது. இந்திரா காந்தியே ரேபரேலி தொகுதியில் தோற்றிருந்தார்.

சில மாதங்கள் கழித்து பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இதுதான் சமயமென காங்கிரசுடன் உறவை முறித்து தேர்தல் களம் கண்டு முதல்வரானார் எம்ஜிஆர். சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த இந்திரா காந்தி, மீண்டும் எம்.பி.யாக விரும்பியபோது, கர்நாடகாவில் சிக்மகளூர் தொகுதியை ஒரு எம்.பி. ராஜினாமா செய்ய, அங்கு  களம் கண்டு இந்திரா வெற்றி பெற்றார். எனினும், சஞ்சய் காந்தி தொடர்பான ஊழல் புகாரை தூசி தட்டி எடுத்த மொரார்ஜி தேசாயின் மத்திய ஜனதா அரசு இந்திரா காந்தியின் எம்.பி. பதவியை பறித்து சிறையிலும் தள்ளியது


சில காலம் கழித்து, தஞ்சாவூரில் எஸ்.டி.சோமசுந்தரம் ராஜினாமா செய்தததால் மக்களவைத் தொகுதி காலியானது. அங்கு இந்திரா காந்தி போட்டியிட விரும்பினார். டெல்லி சென்ற எம்ஜிஆரை மூப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து தஞ்சாவூர் தொகுதியில் இந்திரா போட்டியிடுவது குறித்து பேசினர்.அதற்கென்ன ஓகே எனக் கூறிய எம்ஜிஆர் அடுத்ததாக பிரதமர் மொரார்ஜியை சந்தித்தார். பின்னர் அவரது தொனியே மாறியது. தேர்தல் தோல்விக்குப் பின் மதுரைக்கு இந்திரா வந்தபோது திமுக-வினர் கல்வீசி தாக்கியதுபோல் அசம்பாவிதம் நடக்கும் என்பதால் அவர் போட்டியிடுவது பாதுகாப்பாக இருக்காது எனக் கூறினார். அதனால் காங்கிரஸ் கட்சி வேறு ஒருவரை நிறுத்தியது. எனினும் எம்ஜிஆர் அவரை ஆதரித்து பிரசாரம் செய்தார் அவரும் வென்றார்,

ஆனாலும் இந்திராவுக்கு தஞ்சாவூரில் வாய்ப்பு தராததால் எம்ஜிஆர் பழிவாங்கியதாக காங்கிரஸ் கட்சியினர் கருதினர். பின்னர், மொரார்ஜி தேசாய் ஆட்சி கவிழ்ந்து இந்திரா காந்தி தயவால் சரண் சிங் பிரதமரானார். ஆனால் இரு வாரங்களுக்குள் ஆதரவை இந்திரா வாபஸ் பெற்றார். அதைத் தொடர்ந்து மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் எம்ஜிஆர் மீதிருந்த கோபத்தில் திமுக-வுடன் இந்திரா கைகோர்த்தார், ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. மதுரை கல்வீச்சு சம்பவத்தை மறந்து கருணாநிதியுடன் ஒரே மேடையில் இந்திரா பேசினார்.

எம்ஜிஆர் முதல்வரான பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் 1980 நாடாளுமன்றத் தேர்தல்தான்.

அந்தத் தேர்தலில் தி.மு.கழகமும் இந்திரா காங்கிரசும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. கிடைத்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல. எம்ஜுஆருக்கும் கிடைக்காத 90 சதவீத வெற்றி..

அந்த தேர்தலில்தமிழகம் புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில்

எம்.ஜி.ஆர். தலைமையிலான .தி.மு. கூட்டணி இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது!.

தி.மு..- காங்கிரஸ் கூட்டணியிடம் அவரது கூட்டணி 38 தொகுதிகளில் தோல்வி அடைந்தது அந்தத் தேர்தலில தி.மு.கழகம் போட்டியிட்ட 16 இடங்களிலும் வெற்றிவாகை சூடியது. 24 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ்22 தொகுதிகளில் வெற்றி பெற்றது!

1980 புதுவை மாநில சட்டமன்றத்திற்கான தேர்தலில்,

எம்.ஜி.ஆரின் .தி.மு.. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை! எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு. கூட்டணி 25 தொகுதிகளில் தி.மு.. 14 இடங்களிலும் ,இந்திரா காங்கிரஸ் 10 இடங்களிலும், முஸ்லிம் லீக் 1 இடத்திலுமாக மொத்தம் 25 இடங்களில் தி.மு.. கூட்டணி வெற்றி பெற்றது.

.தி.மு. கூட்டணியில்ஜனதா கட்சி 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சி 1 இடத்திலும், சுயேட்ச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

ஆனால், கூட்டணிக்குத் தலைமை வகித்த எம்.ஜி.ஆர். கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. 

அது மட்டுமா

1986ம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. அப்போதும் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலம்தான்.

அந்தத் தேர்தலின் பொதுஇந்திரா காங்கிரசும்.தி.மு.கவும் சேர்ந்து போட்டியிட்டன.

மொத்தம் இருந்த 97 நகர்மன்றத் தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 72 இடங்களில் தி.மு.கழகக் கூட்டணி வெற்றி பெற்றது.

அதிலே தி.மு.கழகம் மட்டும் தனித்து 64 நகர்மன்றங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி 4 இடத்திலும், முஸ்லிம் லீக் கட்சி 1 இடத்திலும்,ஜனதா கட்சி 2 இடத்திலும் , தி.மு.. ஆதரவுடன் வெற்றி பெற்றன.!

எம்.ஜி.ஆரின் கூட்டணியில் .தி.மு. 11 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும்மட்டுமே வெற்றி பெற்றன.

அது போலவே, அந்தத் தேர்தலில் ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி மன்றங்கள் ஆகியவாற்ற்ர்துக்கான தேர்தல்களிலும் தி.மு.கழகக் கூட்டணியே பெரும் வெற்றியை பெற்றது!

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வீழ்த்தப்பட முடியாத சக்திகளும் கிடையாது. இரட்டை இலை வீழ்த்தப்பட முடியாத சின்னமும் கிடையாது

6,தமிழகத்தில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்   வென்ற வரலாறு

1962 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றிபெற்ற சுப்பராயம், மகாராஷ்டிர மாநில ஆளுநரானார். சில மாதங்களிலேயே அவர் உடல்நலக் குறைவால் உயிரிழக்கவே, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செங்கோடக் கவுண்டரும் திமுக சார்பில் செ.கந்தப்பனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கு பிரஜா சோசலிஸ்ட் கட்சி, தமிழ்த் தேசியக் கட்சி, சோசலிசக் கட்சி, ஜனசங்கம் மற்றும் மா.பொ.சியின் தமிழரசுக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. அத்தோடு ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலமும் முக்கியமான பங்காற்றின. மறுபக்கம் திமுகவை ராஜாஜியின் சுதந்திரா கட்சி மட்டுமே ஆதரித்தது. கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் செ.கந்தப்பன் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்தார். தமிழகத்தில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் வென்ற வரலாறு அதுதான் முதல்முறை 

திருவண்ணாமலை இடைத்தேர்தல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு விதை போட்ட தேர்தல் என்றே இந்த இடைத்தேர்தலைச் சொல்லலாம். திருவண்ணாமலை தொகுதியில் 1962-ல் வென்ற காங்கிரஸ் எம்.எல். பழனிபிள்ளை 1963-ல் உயிரிழந்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் ..சண்முகம் போட்டியிட்டார். இவர் ஏற்கனவே சுயேச்சை வேட்பாளராக திருவண்ணாமலையில் 1957-ல் போட்டியிட்டவர். அத்தோடு 1962 தேர்தலில் திமுக வேட்பாளராகக் களமிறங்கி தோல்வி கண்டவர். அவருக்கே மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பளித்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் பத்ராசலம் நிறுத்தப்பட்டார். திமுக வளர்ச்சியைக் கண்ட முதல்வர் காமராஜர், அமைச்சர்களுடன் திருவண்ணாமலையிலேயே முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அனைவருக்கும் இலவசக் கல்வி, சீருடை, சத்துணவுஇதுமட்டுமில்லாமல், மதுரைக்கு அறிவித்த கூட்டுக் குடிநீர் திட்டத்தை விட அதிக பொருட்செலவில் ரூ.48 லட்ச ரூபாயில் திருவண்ணாமலைக்குக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் காமராஜர் அளித்தார்.

மறுபக்கம் திமுக, `வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது, காகிதப்பூ மணக்காது, காங்கிரஸின் சமதர்மம் இனிக்காது. மத்திய அரசு இந்தியைத் திணிக்கிறது, மெல்லத் தமிழ் இனி சாகும்போன்ற முழக்கங்களை முன்வைத்தது. திமுக வேட்பாளர் ..சண்முகம், 38,666 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பொதுக்கூட்ட மேடைகளில் முழங்கினர் திமுக தலைவர்கள். தேசிய அளவில் திமுகவின் வெற்றி எதிரொலித்தது. இதையடுத்தே, 1967 தேர்தலில் திமுக வென்று முதல்முறையாக தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏறியது 

திருப்பம் கொடுத்த தென்காசி

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகம் சந்தித்த முதல் இடைத்தேர்தல் தென்காசி தொகுதி இடைத்தேர்தல்தான். 1967 தேர்தலில் தென்காசி தொகுதியில் வென்றிருந்த காங்கிரஸ் எம்.எல். சிதம்பரம் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, 1968-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி உள்பட 8 அமைச்சர்கள் தென்காசியில் முகாமிட்டு திமுகவுக்காகத் தேர்தல் வேலை பார்த்தனர். திமுக வேட்பாளராக சம்சுதீன் என்கிற கா.மு.கதிரவன் களமிறக்கப்பட்டார். முதலமைச்சர் அண்ணா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “ஒரு விருந்தில் இலை விரித்து அறுசுவை பண்டங்களையும் வைத்திருப்பதுபோல், தமிழக மக்கள் திமுகவுக்கு ஆட்சி என்ற விருந்தை அளித்திருக்கிறீர்கள். அதில் இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது ஊறுகாய் போன்றது. அறுசுவை விருந்தில் ஊறுகாய் இல்லாவிட்டால் எப்படி இருக்கும்?” என்று பேசினார். திமுக உறுப்பினராக இருந்த எம்.ஜி.ஆர், அப்போது எடுத்த புதிய பூமி படத்தில் கதிரவன் என்கிற கேரக்டரை ஏற்று நடித்தார். தென்காசி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இப்படியும் ஒரு பிரசாரத்தை திமுக முன்னெடுத்தது. காங்கிரஸ் வசமிருந்த அந்தத் தொகுதியை திமுக கைப்பற்றியது 

காமராஜர் ஆட்சிக்கு வந்தபோது குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகத் தனியாளாக திறந்த ஜீப்பில் ஏறி வேலூருக்குச் சென்றார் காமராஜர். குடியாத்தம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக வி.கே.கோதண்டராமன் என்பவர் காமராஜரை எதிர்த்து நிற்கிறார்..
தான் போட்டி இடுகிற குடியாத்தம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு எந்த ஒரு அமைச்சரும், அதிகாரிகளும் வரக் கூடாது என்றார். பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தபோது, நான் முதலமைச்சராக வரவில்லை. இங்கு கோரிக்கை மனுக்கள் வாங்குவது சரியாக இருக்காது. எதிர்க்கட்சி வேட்பாளர் வந்தால், அவரிடம் இப்படி கோரிக்கை மனுக்கள் கொடுப்பீங்களா என்று கேட்டார். காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை வாக்கு சேகரித்துவிட்டு, எந்த ஊரில் இருக்கிறாரோ அங்கு இருக்கும் காங்கிரஸ் தொண்டர் வீட்டில் இரவு உணவு முடித்துவிட்டு தூங்கியிருக்கிறார் காமராஜர். `என்னை எதிர்த்து நிற்கும் கம்யூனிஸ்ட் வேட்பாளரும் அப்பழுக்கற்றவர். அவரும் மக்களை நேசிப்பவர். என்னைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும். எல்லாத்தையும் யோசித்துப் பார்த்து வாக்களியுங்கள்என்று பெருந்தன்மையோடு பல இடங்களில் குறிப்பிட்டார் காமராஜர். அந்த இடைத்தேர்தலில் மக்கள் பெருவாரியான வெற்றியை காமராஜருக்கு அளித்தனர்.

https://www.newindianexpress.com/states/karnataka/2018/Mar/18/when-just-one-vote-mattered-for-rajasthan-cms-post-1788862.html



காங்கிரஸ் கட்சி தலைவரும் ராஜஸ்தான் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் அவர்தான் சிபி ஜோசி அந்த தேர்தலில் 1988 ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போயிட்டார் என்ன கொடுமை என்றால் இவரே ஒரு சங்கீ தான் இவங்க குடும்பத்துல ஆறு ஓட்டு போட வேண்டியவங்க எல்லாரும் சேர்ந்து இவருக்காக வேண்டிக்கொண்டு கோயிலுக்கு போயிட்டாங்க கோவில்ல போய் பூஜை பண்ணிட்டு வந்து ரிசல்ட் பார்த்தா முதலமைச்சர் ஆக வேண்டியவர் நான்கு வாட்டி ரீகவுண்டிங் பண்ணி கூட அந்த ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போயிட்டாரு இதுவும் நம்ம தோழர்களுக்கு சொல்ல வேண்டும் அல்லவா அதுக்காக சொல்றேன்


ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்று நேரு விரும்பி காங்கிரஸ் கட்சிக்குள்ள இருந்த ஆர்எஸ்எஸ் சிந்தனை உள்ள ஆட்களை எல்லாம் சேர்த்து தான் ராஜாஜி தலைமையில் சுதந்திரக் கட்சி என்று ஒன்று உருவாக்கப்பட்டது,

அது வலுவாகி இந்திரா காந்தி காலத்தில் அவரை மடை மாற்றி சில தவறுகளை செய்ய தூண்டியது அப்போது இந்திரா காந்திக்கு தெரியாது ஆர்எஸ்எஸ் எவ்வளவு பெரிய வேலைகளை செய்யும் என்று எமர்ஜென்சிக்கு பிறகு படுதோல்வி அடைந்த இந்திரா காந்தி மகன் மாருதி கார் பிரச்சனையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அப்போது இரண்டு வசதி இல்லாத ஆர்எஸ்எஸ் முற்போக்கு சிந்தனை உள்ள பாலாநாத் பாண்டே தேவேந்திர பாண்டே பெயர் சொன்னாலே தெரியும் இவங்க ரெண்டு பேரும் பார்ப்பனர்கள்,

சிறுவர்கள் விளையாடும் பொம்மை துப்பாக்கியை வைத்துக்கொண்டு கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு வரும் விமானத்தை கடத்தினார்கள் 11 மணி நேரம் அந்த ட்ராமா கடைசியில் அது பொம்மை துப்பாக்கி என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டார்கள் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்த போது அவர்களுக்கு எம்எல்ஏ சீட் கொடுத்தார் இரண்டு முறை ஏன் இந்த வேலையை இந்திரா காந்தி செஞ்சாங்க அரசியலில் இந்திரா காந்தியை பாராட்டும் பல கூமுட்டைகளுக்கு தமிழகத்தில் ஏன் அவர் மண்டை உடைக்கப்பட்டது என்பது தெரியாது அது மாதிரி தான் ஜெயலலிதாவும்



 




Comments

Popular posts from this blog

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

Language, Communication, and the Story of Migration

காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் ( The Hidden Chapters of Gandhi’s Journey )