Posts

Showing posts from January, 2026

இலங்கையின் பூகோள,மத ,அரசியல் வரலாறு Lion Raja Ganesan

Image
  இலங்கை ஒரு தீவு நாடு. இது இயற்கையின் பெரிய கொடையாகும். இங்கு நிறைய நீர்நிலைகள் மற்றும் அருவிகள் உள்ளன. வடக்கு முதல் தெற்கு வரை சுமார் 432 கிலோமீட்டர் நீளம் உள்ளது. கிழக்கு முதல் மேற்கு வரை சுமார் 224 கிலோமீட்டர் அகலம் உள்ளது. மொத்த பரப்பளவு 65,610 சதுர கிலோமீட்டர். 2014 கணக்குப்படி, சுமார் 2 கோடியே 18 லட்சம் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.  லெஸ்லி குணவர்த்தனா என்ற அறிஞர், “சிங்கள” என்ற சொல் மௌரியர், குப்தர், பல்லவர், சோழர் போன்ற அரச வம்சங்களுடன் தொடர்புடையது என்று கூறுகிறார். அனுராதபுரத்தை தலைமையாக கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள் “சிங்களர்” என்று அழைக்கப்பட்டனர்.  “ஈழம்” என்ற சொல் கிமு 1ஆம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தப்பட்டது. அந்த காலத்திலேயே தமிழர்கள் தங்களது அடையாளத்தை அங்கு உருவாக்கியிருந்தனர். திருப்பரங்குன்றம் கல்வெட்டில்: எருக்காட்டூரைச் சேர்ந்த பொலாலையன் மற்றும் ஆய்சயன் நெடுசாதன் என்றோர் சமணர் படுக்கையை அமைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் “ஈழக் குடும்பிகன் பொலாலையன்” என்று கூறப்படுவதால், அவர் ஈழத்தைச் சேர்ந்தவர் என்றும் கொள்ளலாம். ஆனால், சிலர் இதை வேற...