இலங்கையின் அரசியல் வரலாறு Lion Raja Ganesan
இலங்கை ஒரு தீவு இயற்கையின் கொடை நிறைய நீர் நிலைகள் அருவிகள் கொண்ட நாடு வடக்கு தெற்கு ஆக 432 கிலோமீட்டர், கிழக்கு மேற்காக 224 கிலோமீட்டர் மொத்த பரப்பளவு 65 610 சதுர கிலோமீட்டர், 2014 ஆம் ஆண்டு கணக்குப்படி 2 கோடியே 18 லட்சம் மக்கள் வாழும் தீவு.
லெஸ்லி குணவர்த்தனா என்ற அறிஞர் சிங்கள என்னும் சொல் மௌரியர், குப்தர், பல்லவர், சோழர், போன்ற அரச வம்ச சொல் என்று நிறுவுகிறார், அனுதாதபுரத்தை தலைமையாகக் கொண்டு ஆண்டு வந்த மன்னர் பரம்பரை சிங்கள என்று அழைக்கப்படுகிறது.
ஈழம் எனும் சொல் கிமு ஒன்றாம் நூற்றாண்டுகளில்
எருக்காட்டூர் இழகுடும்பிகன் பொலாலையன் செய்தான் ஆய்சயன் நெடுசாதன் எருக்காட்டூரைச் சேர்ந்த பொலாலையன் என்பவரும் ஆய்சயன் நெடுசாதன் என்பவரும் சமணர் படுக்கை செய்து கொடுத்ததைப் பற்றியது.
ஈழத்தைச் சேர்ந்த பொலாலையன் என்று எடுத்துக்கொண்டால் இவர் ஈழம் குறித்துக் கிடைக்கும் முதல் கல்வெட்டாகக் கொள்ளலாம். ஆயினும், இதை ஈழக்குடும்பத்தைச் சேர்ந்த எக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கொள்ளலாம். ‘’ஈழர்’’ என்பதற்குப் பனை மரத்திலிருந்து பதனி இறக்கும் இனத்தைச் சேர்ந்தவர் என்றும் பொருள் உண்டு.
ஐராவதம் மகாதேவன் குறிப்புகள்
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும்
கங்கை வாரியும், காவிரிப் பயனும்
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்
தென் கடலில் இருந்து முத்துக்களும், குணக் கடல், குணக்கு என்றால் கிழக்கு, எனவே கிழக்குக் கடலில் இருந்து சீனப் பட்டும், கங்கையில் இருந்து வாரியும், வருவாயும், காவிரியாற்றால் விளைந்த பொருள்களும், ஈழத்தில் இருந்து வந்த உணவும், காழகத்து, காழகம் என்றால் கடாரம், கடாரத்துப் பொருள்களும் வந்து குவிந்து கிடக்கும் தெருக்களை உடையது காவிரிப் பூம்பட்டினம் எனப் பெருமை பொங்க முழங்குகிறது பட்டினப்பாலை.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் பேராசிரியர் ஆர் எம் பிச்சப்பன் மரபணு குறித்த புலம்பெயர்வு பற்றிய ஒரு ஆய்வை வெளியிட்டார் ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு ஆண்டித்தேவர் குடும்பத்தில் 11 பேர் இருந்தனர் இந்த m 130 இருப்பதை கண்டறிந்தார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த ஆப்பிரிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் தமிழர் சிங்களவர் கேரளா போன்ற இடங்களில் வசிக்கிறார்கள்,
சிங்கள பௌத்த மக்களிடம் ஜாதிகள் இல்லையா தேடி பார்த்தேன் ரொம்ப நுட்பமா வச்சிருக்காங்க ஒரு சுவையான செய்தி இந்தியாவில் பார்ப்பனர் மாதிரி மகா சமாத maha sammata இவர்கள்தான் ஜாதிகளை உருவாக்கி அதற்கு பெயர் வைத்தார்கள் என்கிறது
https://en.wikipedia.org/wiki/Mah%C4%81sammata
வண்ணார் சமூகத்தை சிங்கள மக்கள் மிக மரியாதையாக அத்தை மாமா என்று அழைக்கிறார்கள் ஆண்களாக இருந்தால்
யகணிய மாமா என்றும் ,பெண்ணாக இருந்தால் யகணிய நெந்தா என்று அழைக்கிறார்கள் சிங்கள மொழியில் மாமா என்றால் தாய் மாமா என்று தான் பொருள்,
Fictive kinship
இலங்கை சிங்கள பௌத்த நாடு அப்படி யாருக்காவது எண்ணம் இருந்தா அதெல்லாம் அழிச்சு விட்டுடுங்க அது ஒரு சாப்ட் இந்துத்துவ நாடு அங்கு எல்லா ஜாதிஅடுக்குமுறைம் இருக்கு தொழில் முறை ஜாதிகள் இருக்கு நுட்பமா திருமண முறையில் ஒன்று வைத்திருக்கிறார்கள்,
ஒரே பௌத்த நாடு என்றால் ஒரே விதமான சடங்குகள் இருக்க வேண்டும் அல்லவா, திருமணம் முறை இறப்பு சடங்குகள் அப்படி இல்லை, இலங்கையில் சிங்களவர்கள் இடம் கண்டியில் பெரும்பான்மை சமூகம் திருமணத்திற்கு பொதுவான இரண்டு விதிகள் ஒன்று Binna என்றால் கணவன் மனைவி வீட்டில் சென்று அவங்க வீட்டோட வாழனும் அதாவது வீட்டோட மாப்பிள்ளை புரிந்து கொள்வதற்காக சொல்றேன்,
Binna marriage - A marriage in which the husband joins the wife's family, where the wife may inherit her family property in equal or more portion. The husband does not inherit his wife's estate which transfers to their children on her death.
இன்னொரு முறை இருக்கு Deega இதில் மனைவி கணவன் வீட்டுக்கு சென்று வாழ வேண்டும் நில உடமை சமூகம் ஆன பின்பு ஆன முறை
. "Deega" is a marriage custom among the Sinhalese of Kandy and the hill country (and other parts of Sri Lanka) where the wife moves in with her husband's family after marriage. This practice, also referred to as "diga," is the opposite of "binna," where the husband moves in with the wife's family.
இலங்கையில் மீன்பிடி சமூகம் எல்லோருக்கும் தெரிந்த போட்டோ முகத்துவாரத்தில் மீன்கள் அதிகம் வசிக்கும் அங்கு மரத்தாலான ஏணி மாதிரி ஒன்றில் கொக்கு போல உட்கார்ந்து மீன் பிடித்து குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் வீடு வரும் வாழ்க்கை,
அதை பாரம்பரியம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் தரவா மற்றும் முக்குவார் இதில் கிறிஸ்தவ மீன்பிடி தொழில் செய்யும் மக்கள் அவர்கள் ஜாதிக்குள்ளயே திருமணம் செய்கிறார்கள் அகமன முறை என்பது பௌத்தத்தில் இல்லை ஆனால் இலங்கையில் இருக்கிறது
In Sri Lanka, several ethnic groups traditionally practice fishing and are associated with specific castes. Key fishing communities include the Karaiyar and Karava, along with the Paravars, Mukkuvars, and Thimilar. The Karaiyar and Karava are dominant in coastal areas, particularly in the north and east, while other castes like the Paravars and Mukkuvars are also found on the west coast.
கவிஞர் அப்துல் ரகுமான், ஆனந்த விகடன் பத்திரிகையில் 90களில் ஒரு தொடர் எழுதினார் நரம்பு அறுந்த யாழ்
ஒரு ஒரு சூப்பி ஞாநி எப்படி எழுதுவரோ அந்த நடை மறக்க முடியாது, இலங்கை குறித்து அங்கு இருந்த இஸ்லாமியர்களின் வியாபாரம் குறித்து, ஒரு சங்கு மார்க் கைலி கட்டுகின்ற உணர்வு அப்போது இருந்தது ,நிறைய விஷயங்களை அழகான நடையில் எழுதி இருக்கிறார் வாய்ப் இருந்தால் வாங்கி வாசிக்கவும்
மதம் மன்னர்கள் காலத்தில் வேர் விட்டு கிளை விட்டு வளர்ந்ததற்கு காரணம் மன்னர்களை ஆட்டிப்படைப்பது மதகுருமார்கள், இயேசு ஒரு திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணுக்கு பிறந்தார், புத்தரும் அப்படித்தான் பிறந்தார் கிருஷ்ணா அவன் கூட அப்படித்தான் பிறந்தான், எல்லாம் ஒரே பார்மெட் ஊருக்கேத்த மாதிரி கதையை மாற்றி வைத்துவிடுவார்கள் மத தலைவர்கள்,
பௌத்த இளவரசன் டிகிரி பண்டார என்ற பெயர் உல்லாந்தர் அதாவது போர்ச்சுகீஸ் காலத்தில் தன் தந்தை மாயதுன்னை என்பவரை விஷம் வைத்துக்கொன்று விட்டான் பௌத்த மதத்தில் மன்னனாக முடி சூட்டிய போது தகப்பனை கொன்ற பாவம் பல ஜென்மத்துக்கு உன்னை விட்டு போகாது என்ற உடனே ஒரு நண்பனின் ஆலோசனையின் பேரில் இந்துவாக மதம் மாறி கண்ணகி சிலை வழிபாடு அவளுக்கு கோயில் கட்டுவது இப்படியாக 1505 வாக்கில் கோயிலுக்கு பக்கத்திலேயே கல்வெட்டு இருக்கு
அதே மாதிரி கொல்லர் ,தச்சர், குயவர் ,போன்றவர்களை உயர் குடி மக்களாக வைத்திருந்தது சிங்கள பௌத்தம்
காடுகளில் ஒட்டுண்ணிகள் வாழ்வது போல* மனித சமூகத்திலும் உழைப்பை சுரண்டி வாழும் குறி சொல்லும் பார்ப்பனர், ஜாதகம் பார்க்கும் வள்ளுவர், போன்ற உழைப்பின்றி உயிர் வாழ தங்களை பழக்கப்படுத்திக் கொண்டு உளவியல் ரீதியாக சாமானிய மனிதர் முதல் ,மன்னர்கள் வரை ஏமாற்றி பிழைக்கும் கூட்டமும் இலங்கை சிங்கள மக்களிடம் உண்டு,
இலங்கை அரசியல் வரலாற்றில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது மிக செல்வாக்கு மிக்க இலங்கையின் ஒரே தலைவராக திகழ்ந்தவர்
அது செந்நீரால் எழுதப்பட்ட தியாக வரலாறு.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை எங்களுடைய பிரதமராக இருந்த டி, எஸ் செனநாயக்க ஒரு பெரிய நீட்டுக் கத்தியையும் தூக்கிக் கொண்டு பிரிட்டிஷ் கவர்னர் மாளிகைக்குப் போனார். பூங்காவில் இருந்து வார்த்துக்குடித்துக் கொண்டிருந்த கவர்னர் இவரைக் கண்டதும் "வாருங்கள், வாருங்கள், உங்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்" என்று சொல்லி இவருக்கும் கொஞ்சம் வார்த்துக்கொடுத்தார். இவரோ முழுப் பாட்டிலையும் தானே சுத்தம் செய்துவிட்டு கத்தியையும் தூக்கிக்கொண்டு "குடிகாரப்பயல் நம்மை ஏமாற்றிவிட்டான்" என்று
ஐவோர் கவர்னர் வீடு போய் "அவன் கேட்பதைத்தான் கொடுத்துத் தொலையுங்களேன்" என்றாராம். கவர்னரோ "ஆனானப்பட்ட இந்தியாவே கையைவிட்டுப்போன பிறகு இந்தக் கொல்லைப்புறத்து வைக்கோற் கொட்டில்களை வைத்துக்கொண்டு நாம் என்ன பண்ணப் போகிறோமாம். அவனுக்கு வேண்டிய நேரம் வந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று சொல்லுங்கள் என்றார். ஐவோர் "இல்லையில்லை. அங்கே ஒரே ஒரு கிளாஸ் வொட்காவோடு நேரு இந்தியாவையும் லேடி மவுண்ட்பேட்டனயும் சேர்த்தேயல்லவா வாங்கிவிட்டார், இல்லையா, அது போல் தான் இவனும் ஏதாவது போனஸாக எதிர்பார்க்கிறானோ தெரியவில்லை " என்று அழுது வடிந்தார். கவர்னர் "அடுத்த மாதம் முதலாம் வாரத்திலயே உறுதியை முடித்து அவனுடைய நாட்டை அவனிடமே கொடுத்து விடுங்கள். அவனை இந்தப்பக்கம் வரவிடாதீர்கள்" என்று சொல்லி ஐவோரையும் வெளியே விட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டாராம்.
இது தான் எங்களுடைய இரத்தின துவீபத்தின் இரத்தினச் சுருக்கமான வீர சுதந்திர வரலாறு!
இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு தனித்துவமான கண்ணோட்டம் கொண்ட யாழ்ப்பாணத் தமிழர்களின் வரலாறு என்பது பிரித்தானிய காலனியில் இருந்து வந்த ஒரு சிக்கலான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட நிகழ்வு. தேயிலை தொழிலாளர்கள், குறிப்பாக மலையகத் தமிழர்கள், காலனி ஆட்சியின் கீழ் ஒரு ஒடுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கமாக இருந்தனர், மேலும் அவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்களை விட வேறுபட்ட மொழி, கலாச்சாரம், மற்றும் சமூக நிலைமைகளைக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத் தமிழர்கள், குறிப்பாக மேல் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், தோட்டத் தொழிலாளர்களுடன் ஒரு பரஸ்பர உறவு வைத்திருந்தனர், அது பெரும்பாலும் அதிகாரத்தின் அடிப்படையில் இருந்தது.
இலங்கையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வரலாறு:
பிரித்தானிய காலனியம்:
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானியர்கள் இலங்கையில் தேயிலைத் தோட்டங்களை நிறுவினர், மேலும் அவர்கள் தொழிலாளர்களாக தென்னிந்தியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வந்தனர்.
தொழிலாளர் வர்க்கத்தின் ஒடுக்குதல்:
தேயிலைத் தொழிலாளர்கள் கடுமையான வேலைக்கு உட்படுத்தப்பட்டனர், மேலும் அவர்களுக்கு குறைந்த கூலி தரப்பட்டது. அவர்கள் வேறுபட்ட மொழி, கலாச்சாரம் மற்றும் சமூக நிலைமைகளைக் கொண்டிருந்தனர், இது அவர்களை யாழ்ப்பாணத் தமிழர்களுடன் ஒப்பிடும்போது வேறுபடுத்தியது.
https://www.ezhunaonline.com/srilankan-tea-has-enslaved-the-world/
(எனக்கு இலங்கை அரசியல் 86லேயே முழுவதுமாக தெரிந்து போனது அதற்கு காரணம் சுதந்திரப் போராட்டத் தியாகி வளமாவூர் கிருஷ்ணதேவர் அவருக்கு காலையில் தினமணி பேப்பரை வாசிக்கும் வேலை எனக்கு,
60 பைசா வேற செய்தி இருக்கான்னு பாருடா அப்படின்னு சொல்லுவாரு நீங்க வாங்குற பேப்பர்ல அம்புட்டு தான் இருக்கு வேற பேப்பர்ல நிறைய இருக்கு அதை நான் காசிம் சைக்கிள் கடை பெஞ்சில் வாசித்து விட்டேன் அப்படின்னு சொல்லுவேன்,
அவருக்கு தெரியும் திமுக காரங்க எல்லாரும் பேப்பர் வாங்க வசதி இருக்காது சைக்கிள் வாடகைக்கு விடும் காசிம் என்ன பண்ணுவார்னா ரெண்டு மர பெஞ்சு அவரு ரெண்டு செய்தித்தாள வாங்குவார் வர்றவங்க வார பத்திரிகை வாங்கிட்டு அங்கேயே வாசித்துவிட்டு அப்படியே விட்டு விட்டு போய் விடுவார்கள் அதை சொன்னவுடன் ஐயா நாளைக்கு தினகரன் வாங்கிட்டு வா அப்படின்னு சொன்னாரு)
https://www.ezhunaonline.com/jvp-insurrection-part-1/
1971 ஏப்ரல் இரண்டாம் தேதி ஜனதா விமுக்தி பெரமுன என்னும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கூட்டம் நடைபெற்றது அக்கூட்டத்தில் 1971 ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி நாட்டில் உள்ள எல்லா போலீஸ் நிலையங்கள் மீதும் ஆயுதப் படைகள் நிலைகள் மீதும் தாக்குதல் தொடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
93 காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அதில் ஐந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் அவை ஐந்தும் முக்கியமான ஆயுதக்கடங்குகள் அமைந்தவை,
மிகப்பெரிய தாக்குதல் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு பழக்கம் இல்லாத இலங்கை போலீஸ் முழுவதும் சிங்களர்கள் 43 காவல் நிலையங்களை கைவிட்டு பெரும்பான்மை காவலர்கள் பின் வாங்கினர்
14ஆம் தேதி கொழும்பு தவிர மீதம் அனைத்தும் கம்யூனிஸ்ட் போராளிகள் வசம் வந்தது,
எல்லை
மீறல்கள் அதிகரித்த போது,
இலங்கை
பிரதமர் பண்டாரநாயக்கா இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை தொடர்புகொண்டார். அதன்
பிறகு
இந்திய
ராணுவம் இலங்கையில் தரையிறங்கியது. ஆனால்
அந்தப்
படையினர் முதலில் பிரபாகரனுக்கு எதிராக
கால்
வைக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள
கம்யூனிஸ்ட் இயக்கங்களை அடக்குவதற்காகவே இந்திய
ராணுவம் இலங்கையில் நுழைந்தது. சில
இடங்களில் போக்குவரத்துக்காக பணம்
வசூலித்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் அவர்கள் திரும்பி வந்தனர்.
அந்த
காலகட்டத்தில் போராடிய பெண்கள் நடு
ரோட்டில் தீ
வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட பல
அநியாயங்கள் நடந்தன.
இந்தியாவின் கருத்துகளை இலங்கை
அரசு
புறக்கணித்ததோடு மட்டுமல்லாமல், வெளிப்படையான இந்தியத் துவேஷத்தையும் காட்டியது. அன்றைய
ஆளும்
கட்சியின் அரசியல் மொழியில் “தமிழ்
எதிர்ப்பு” என்பதும் “இந்தியா எதிர்ப்பு” என்பதும் ஒன்றாகவே பார்க்கப்பட்டது. இருந்தாலும், பெருந்தன்மையும் உலகளாவிய பார்வையும் கொண்ட
பிரதமர் நேருவின் அரசு,
இலங்கையை எதிரியாக அல்லாது நண்பராக அணுகும் கொள்கையையே பின்பற்றியது.
மலையகத் தமிழ்
மக்களின் உரிமைகளை உறுதியாகக் காக்காமல், இந்திய
அரசு
பல
இடங்களில் பெருமளவு விட்டுக் கொடுத்தது.
1954-ல்
நேரு – கொத்தலாவல ஒப்பந்தம்,
1964-ல்
சாஸ்திரி – சிறிமாவோ பண்டாரநாயக்கா ஒப்பந்தம்,
1974-ல்
கச்சத்தீவு ஒப்பந்தம்
என
இந்த
ஒப்பந்தங்கள் அனைத்தும் இலங்கைக்கு சாதகமாகவும், தமிழ்
மக்களின் உரிமைகள் போதிய
அளவில்
பாதுகாக்கப்படாதவையாகவும் அமைந்தன.
இந்தியாவின் இந்த
தாராள
மனப்பான்மை, இலங்கை
அரசுக்கு தமிழ்
மக்களை
மேலும்
ஒடுக்கவும், இந்தியாவுக்கு எதிரான
கொள்கைகளை மேற்கொள்ளவும் ஊக்கமளித்தது. ஆனால்
அதனால்
உண்மையான நட்புணர்வு உருவாகவில்லை.
1962-ம் ஆண்டு
சீனா–இந்தியா எல்லைப் போரின் போது, இலங்கை
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா இந்தியாவுக்கு ஆதரவான
நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பது
உலகம்
அறிந்த
உண்மை.
அதேபோல், 1971-ல் கிழக்கு வங்கதேசப் போரின்போது, பாகிஸ்தான் படைகளை
ஏற்றிச் சென்ற
விமானங்களுக்கு கட்டுநாயகா விமான
நிலையத்தில் எரிபொருள் நிரப்ப
அனுமதித்தது இந்தியாவுக்கு பெரிய
பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த இரு சந்தர்ப்பங்களிலும், இலங்கைத் தமிழ் மக்களே இந்தியாவுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டனர். சீனா–இந்தியா போரின் போது, இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றவும் இலங்கைத் தமிழர்கள் முன்வந்தனர்.
https://www.youtube.com/watch?v=5UZ-6YQq430
திருமதி ஆர் தம்பி முத்து இவர் கணவர் கிழக்கு மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் 1920 ஆகஸ்ட் 13ஆம் தேதி முதன்முதல் இச்சங்கத்தை ஸ்தாபிக்கப்படுத்துவதாக பெண்கள் கூடிய பொது திருமதி தம்பித்துவே விமன் பிரான்சிஸ் பெண்கள் வாக்குரிமை சங்கம் என்ற ஒன்றை நிறுவினர்,
இந்தியாவில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி கொண்டு சுன்னத்து பண்ணிக்கொண்டு காந்தியை சுட்டான்,
இதற்கு சற்றும் குறையாத ஒரு வழக்கு தான் இலங்கையில் நடந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொலை வழக்கு இங்கு போலவே அங்கும் புத்த பிட்ச்சிகள் அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி குனிந்து வணங்கும் வழக்கம் உண்டு இவர் மீது கோபம் கொண்டு இவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்
டல் டுவாரா சோம ராமா இந்தப் பெயர் தான் அவனின் இயற்பெயர் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்த போது கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் அதற்கு அந்த சிறை அதிகாரி தான் காரணம் என்று அப்போது ஊடகங்களில் பேசப்பட்டது,
https://thuppahis.com/2022/05/27/a-note-on-the-bandaranaike-assassination-case-its-sources/
பாதர் மேத்யூ ப்ளீஸ் இது ஆங்கிலேயர் ஆட்சியின் கொஞ்சம் நீச்சம் போல் தெரியும் அதுதான் உண்மை பண்டாரநாயக்காவை சுட்டுக் கொன்ற புத்த பிக்கு கிறிஸ்தவனாக மாறி அவர் பீட்டர் என்று பெயர் மாறி ஞானஸ்தானம் பெற்றார்,
இவர் செய்தது எதையும் ஏற்றுக் கொள்ளாமல் குறிப்பிட்ட நேரத்தில் 1962 ஜூலை மாதம் தூக்கிடப்பட்டார் ,கூட்டு சதி இவர்தான் சுட்டார் உடன் இருந்தவர்கள் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு பின்பு அது ஆயுள் தண்டனையாக பின்னர் 20 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு மாபெனிகமா புத்தககிறதா இவர் 1967 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் மருத்துவமனையில் இதய நோயால் இறந்தார் இன்னொருத்தர் ஜெயவர்த்தன இது 1977 நன்னடத்தை காக குறைத்து விடுதலை செய்யப்பட்டார்.
1952 ல் முதல் இலங்கையில் தேர்தல் நடக்கிறது
ஐக்கிய தேசியக் கட்சி தக்கிலி தலைமையில் பாராளுமன்றத்தில் 54 இடங்கள் அப்போது 94 இடம் இருந்தது இறுதி பெரும்பான்மை பெற்று அங்கு இடதுசாரிகள் போராட்டம் நாட்டை உலுக்கியது துப்பாக்கிச் சூடு 12 பேர் செத்துப் போயிட்டாங்க அமைச்சரலாம் பயந்து போய் ஒரு ராணுவ கப்பல் ஹச் எம் எஸ் நியூ பவுண்ட்லாந்து என்ற கப்பலில் தங்கி அங்கேயே அமைச்சர்கள் கூட்டமும் நடத்தினார்கள் இந்திரா காந்தி எமர்ஜென்சி கொண்டு வைத்த நிலைமை அதை சமாளித்து அடுத்த தேர்தலில்
உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர் கணவர் இறந்தவுடன் இவர் உடனே பதவிக்கு வரவில்லை
1959 செப்டம்பர் 25 அன்று தன் வீட்டு வாசலில் புத்த பிச்சு அவரை சுட்டுக் கொன்றார் எல் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கா இறப்பு அறிவிக்கப்பட்டவுடன் மறுநாள் 26 ஆம் தேதி பேராசிரியர் விஜயாநந்த தகநாயக்கர் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார்,
நிர்வாக சிக்கல் டிசம்பர் 5ஆம் தேதி அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றத்திற்கான தேர்தலை அறிவித்தார் அதன்படி 1960 ஜனவரி 4ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்
இலங்கை ஜனநாயகத்திலும் 89 தேர்தல் தொகுதியாக இருந்தது 145 தொகுதிகளாக மாற்றப்பட்டது இந்த முறை 14 பெண்கள் போட்டியிட்டு மூன்று பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்
மார்ச் மாதம் நடந்த தேர்தலில் மிகவும் அதிர்ச்சியான தேர்தலில் பெரும்பான்மை இல்லாமல் சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கட்சி தோல்வி அடைந்தது, வேறு வழியில்லை 33 நாட்கள் மட்டுமே நீடித்தது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜூலையில் தேர்தல்
அவர்தான் விவியன் குணவர்த்தன கொழும்பு வடக்கில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்
சிறிமாவோ பண்டாரணாயக்க அப்போது ஜனாதிபதி இல்லை பிரதமருக்கு தான் அதிகாரம், அதிகாரமிக்க ஒரு பிரதமர் பதவிக்கு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சிறிமாவோ பண்டாரநாயக்கா என்று அன்றைக்கு நியூயார்க் டைம்ஸ் எழுதியது மன்னர் ஆட்சியில் மகாராணிகள் இருந்திருக்கிறார்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்று பாராட்டு பத்திரம் வாசித்திருக்கிறோம்,
கொஞ்சம் வரலாறை தேடினால் அவன் ஒரு கதை சொல்றான் அதில் உண்மை இருக்கலாம் எத்தனை சதவீதம் என்பதுதான் எனக்கு இருக்கும் சிக்கல்
விஜயன்
வரவு
குறித்து இலங்கையின் அந்த
ஊர்
பள்ளிக்கூடங்களில் சின்னப் பசங்களுக்கு பாடமாகக் கற்பிக்கப்படுவது இதுதான்.
வரலாறு
என்றாலே கட்டுக்கதை தானே!
வங்கதேசத்தை சிங்கபாகு என்ற
ஒருவன்
ஆண்டுவந்தானாம்.
அவன்
மனைவியின் பெயர்
சிங்க சீவளி.
இப்ப
புரியுதா — இலங்கையில மழை
கூட
பெய்யாத இடத்துல சிங்கம் படம்
ஏன்
வந்ததுன்னு?
இந்த
இருவருக்கும் ஆறு
ஜோடி
குழந்தைகள் பிறந்ததாம்.
ஆண்மையின் பெருமையைப் பேசிக்கிட்டு, மொத்தம் 12 குழந்தைகள்!
அதில்
மூத்த
மகன்
விஜயன்
— ஆட்டம்
ரொம்ப
ஜாஸ்தியாம்.
அதனால
அவனை
திரும்ப வர
வழியில்லாத ஒரு
கப்பலில் ஏற்றி
அனுப்பிட்டாங்களாம்.
அதுவும் “சுக்கான் இல்லாத
கப்பல்”னு எழுதி வெச்சிருக்காங்க!
விஜயனோட சேர்த்து 700 பேர்
கடலில்
போய்,
அதுவா
ஒரு
கரை
சேர்ந்த இடம்தான் இலங்கைனு கதை.
ஆனா
அந்த
700 பேரோட
மனைவிகளும் குழந்தைகளும் நாகதீவில் இறங்கி,
அங்கிருந்த மக்களின் ஆதரவோட
அங்கேயே குடியமர்ந்தார்களாம்.
இதற்கிடையில், விஜயன்
வந்த
கப்பல்
ஆதரவில்லாமல் தொடர்ந்து போய்,
யாருமில்லாத ஒரு
தீவில்
கரை
சேர்ந்ததாம்.
அங்கே
காட்டுக்குள் ஒரு
பார்ப்பனர் அமர்ந்திருந்தாராம்.
அவனுடைய தலையில் பாதி
மட்டும் சவரம்
செய்யப்பட்டிருந்ததாம்.
அந்த
பார்ப்பனர், விஜயனும் அவன்
கூட்டமும் மேல
தன்னிடம் இருந்த
புனித
நீரைத்
தெளித்து,
“இனிமேல் உங்களுக்கு நல்லதே
நடக்கும்”னு
சொல்லிட்டு உடனே
மறைந்துவிட்டாராம்!
எவ்வளவு கட்டுக்கதைகளை வைத்திருக்கிறார்கள் பாருங்க —
இந்தியா மட்டுமல்ல, இலங்கையிலும்!
சிங்கவாகுவுக்கும் குவேனிக்கும் பிறந்தவர்கள்தான் சிங்களர்கள் என்ற ஒரு கதை. அதைத்தான் அந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள்.நாமும் நம்பிக்கிட்டா சரிதான்!
**************
இலங்கையில் எண்பதுகளில் தமிழர்களுக்கு எதிராக பெரிய கலவரம் வர காரணம், அங்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த சைவப் பிள்ளைகள் மற்றும் முதலியார்கள் மொத்த இலங்கையிலும் உள்ள 90 சதவீத பதவிகளில் உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஆடிட்டர் சுருக்கமா சொல்லணும்னா இந்தியாவில் இருக்கிற பார்ப்பனர்கள் போன்று இலங்கையில் ஆக்கிரமித்து இருந்தது இந்த ஜாப்நா தமிழர்கள் முதலில் அவர்கள் கல்வி சீர்திருத்தத்தை தான் கொண்டு வந்தார்கள்,
வேறு ஒன்றும் இல்லை இட ஒதுக்கீடு கட் ஆப் மார்க் ஒரு கட்டத்தில் அது எல்லை மீறிப் போன போது தான் பெரும் பணக்கார வணிக நிறுவன தலைவர் வீடுகள் பெண்கள் மீது வன்முறை இந்த விடயத்தில் தமிழ் போராட்டக் குழு பெண்களிடம் கொஞ்சம் மரியாதையாக நடந்து கொண்டது வரம்பு மீறிய அதிகாரம் எல்லா தவறுக்கும் காரணமாகும் அது பிரபாகரனுக்கும் பொருந்தும் அவரால் கொன்று ஒழிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் இதோ
ஒரு காரணம் புலிகள் கடைசியாக தோற்றுப் போவார்கள் என்று பத்மநாபாவுக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது நானும் அந்த கூட்டத்தில் இருந்தேன், அது நடந்தே தீரும் என்றார் அவரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு கைக்குள் அடங்கிவிடும் சிறிய கூட்டம் அவர்களுக்கு யாரும் நண்பர்கள் இல்லை ஏன் தமக்கே நண்பரில்லை ஒரு காலத்தில் அளித்து ஒழிக்கப்படுவார்கள் அடையாளம் தெரியாமல் என்று பேசினார் அது நடந்து ,
தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam (LTTE)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP)
தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE)
தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization (TELO)
தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (Tamil United Liberation Front)
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of
Students (EROS)
ஆயுதம் ஏந்திய போராளிகள் எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்ட பிறகு ஜனநாயகம் மலரும் முதல் தீவிரவாதம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது அந்தக் கட்சியின் வாரிசு தான் இப்போது அதிபராக இருக்கிறார் ஜனநாயகத்திற்கு தேவையான சாத்திய கூறுகள் நடந்து கொண்டிருக்கிறது இலங்கையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் சின்னங்கள்
பிரிட்டிஸார் க்கு முன்னர் போர்ச்சுக்கீஸ் இலங்கையை கைப்பற்றிய போது அங்கிருந்து மன்னனுக்கு ஒரு பிரச்சனை வந்தது,
https://www.mea.gov.in/portal/legaltreatiesdoc/lk74b1634.pdf
இன்றைக்கு மோடியை திட்டிக் கொண்டிருக்கிறோம், மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்டு இருக்கிறது இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது எழுப்பப்பட்ட கேள்விகள் அம்பேத்கர் சொன்ன பதில்கள், அமெரிக்கா போன்று மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கத்தான் அம்பேத்கர் விரும்பினார் அவரால் முடியல ,
இந்திரா காந்தி இந்தியாவில் எல்லாமும் நானே ஒரு மகாராணி என்று நினைத்துக் கொண்டார் ஆனால் இவங்க அப்பா நேரு இந்தியா முழுமைக்கும் காங்கிரஸ் கட்சி தான் ஜெயிக்கிறது ரெண்டு பேர்தான் அன்னைக்கு இருந்த பிஜேபிகாரன் ஜெயிச்சான் அதுவும் ரெண்டு இடத்தில் போட்டி போட்டு.
இவரே உருவாக்கிய எதிர்க்கட்சி ராஜாஜி தலைமையிலான சுயராஜ்ய கட்சி அந்த நேர்மை இந்திரா காந்தியிடம் இல்லை,அதனாலதான் மாமன் பொண்ணு கூட பாக்காம மண்டையை உடைத்து விட்டாங்க அதுக்கு பழ. நெடுமாறன் தான் சாட்சி,
உலகில் முதன் முதலில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் கேரளாவில் கம்யூனிஸியம் அதுக்கு காரணம் பெரியார் போன்ற சிந்தனை வாதிகள் இதை பொறுக்க முடியல இந்திரா காந்திக்கு,
சரி நம்ம ஈழத்துக்கு வருவோம், இந்த அம்மா தமிழ்நாட்டில் ஒரு மாநில கட்சி காங்கிரஸ் எதிர்த்து ஜெயித்து விட்டது ஒன்னும் பண்ண முடியல அதனால தான் ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான பகுதியை பூலோக எல்லை எல்லாவற்றையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம்,
உலகின் செழிப்பான பகுதி இலங்கை காஷ்மீருக்கு அடுத்து அதை பிச்சு திங்க தான் பாக்குறானுங்க இந்திய மத்திய ஆளுமைகள் இந்திரா காந்தி வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறுகளில் கச்சத்தீவை தாரை வார்த்தது
https://www.mea.gov.in/portal/legaltreatiesdoc/lk74b1634.pdf
1658ஆம் ஆண்டு
இலங்கையில் போர்ச்சுகீசர் ஆட்சி
முடிவுக்கு வந்து,
ஒல்லாந்தர் (டச்சு)
ஆட்சி
தொடங்கியது. அமெரிக்காவையே ஆங்கிலேயர்களுக்கு முன்பே
அச்சுறுத்தி ஆட்டிப்படைத்த நாடு
போர்ச்சுகீச நாடே.
இந்தியாவில் கோவாவை
நீண்ட
காலம்
அவர்கள் ஆட்சி
செய்தனர்.
இலங்கையில் வியாபாரம் செய்ய
வந்த
போர்ச்சுகீசர்களுக்கு ஏற்கனவே அங்கு
வலுவாக
இருந்த
இஸ்லாமிய வணிகக்
குழுக்கள் பெரும்
போட்டியாக இருந்தன. கப்பல்
கட்டும் தொழில்,
கடல்
வியாபாரம் ஆகியவை
பெரும்பாலும் இஸ்லாமியர்களின் கையில்
இருந்தன. உலக
வரலாற்றில் நடந்த
மிகப்
பெரிய
போர்களுக்குப் பின்னணியில் பெரும்பாலும் வியாபாரப் போட்டியே காரணமாக இருந்துள்ளது.
ஆங்கிலேயர்களுக்கு திப்பு
சுல்தான்மீது ஏற்பட்ட வெறுப்புக்கும் இதுவே
முக்கிய காரணம்.
மத்திய
இஸ்லாமிய நாடுகளின் கப்பல்களுக்கு திப்பு
சுல்தான் குறைந்த வரி
விதித்தார்; ஆனால்
ஆங்கிலேயர்களிடம் மூன்று
சதவீதம் அதிக
வரி
வசூலித்தார். இதுவே
அவர்களின் கோபத்திற்குக் காரணமாக அமைந்தது.
அதேபோல், ஜப்பான் மீது
அமெரிக்கா அணுகுண்டு வீசியதற்கும் வியாபார ஆதிக்கமே முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்காவின் முதல்
எதிரி
ஹிட்லரும், ரஷ்யாவின் ஸ்டாலினும் இருந்தபோதும், ஜப்பான் மீது
மட்டுமே அணுகுண்டு வீசப்பட்டது—இதற்குப் பின்னணியிலும் வணிக
அரசியலே இருந்தது.
இலங்கையில் தமிழ்
பேசும்
முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கும் அவர்கள் வலுவான
வணிகக்
கேந்திரமாக இருந்ததே காரணம்.
‘மரக்காயர்’ என்ற
சொல்லே
வணிகத்தை அடையாளப்படுத்தும் பெயராகும். அவர்களை அகற்றுவதன் மூலம்
வணிக
ஆதிக்கத்தை கைப்பற்றலாம் என்ற
எண்ணமே
அங்கு
உருவானது.
இதற்கிடையில், போர்ச்சுகீச பாதிரியார் ஒருவர்
சிங்கள
மன்னனிடம், “உங்கள்
நாட்டில் உள்ள
இஸ்லாமியர்களை நாடு
கடத்தினால் உங்கள்
பிரச்சனை தானாகவே தீரும்”
என்று
கூறினார். அந்த
மன்னன்
இந்த
ஆலோசனையை நம்பி,
வணிகப்
போட்டி
காரணமாக 1700களிலேயே தமிழ்
பேசும்
இஸ்லாமியர்களுக்கு கடும்
கொடுமைகள் இழைத்தான். இது
1990ஆம்
ஆண்டு
பிரபாகரன் நடத்திய வெளியேற்றத்தைக் காட்டிலும் மிக
மோசமானதாக இருந்தது.
போப்
ஆண்டவருக்கு எதிராக
புரொடஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் வலுப்பெற காரணமானவர்களில் முதலாம் எலிசபெத் முக்கியமானவர். அதன்
நீட்சியாகவே, 1796ஆம்
ஆண்டு
ஒல்லாந்தர்கள் ஆங்கிலேயர்களுடன் ஒரு
‘ஜென்டில்மேன் ஒப்பந்தம்’ செய்து
இலங்கையை ஒப்படைத்தனர்.
பொன்பரப்பி கிராமத்தில் நடந்த
தமிழ்ச்செல்வன் வங்கி கொள்ளை பற்றி,
2000-க்கு
பிறகு
பிறந்தவர்களுக்கு தெளிவாகச் சொல்ல
வேண்டிய அவசியம் இருக்கிறது.
அதற்காக, நீர்வேலி கொள்ளையை இப்போது ஒதுக்கி வைத்து,
முதலில் பொன்பரப்பி கிராமத்துக்கே வருவோம்.
செப்டம்பர் 1, 1987. அது ஒரு செவ்வாய்க்கிழமை.
அந்த
காலத்தில் கிராமத்தில்
80 சதவீதம் கூரை
வீடுகள்,
20 சதவீதம் ஓட்டு
வீடுகள் இருந்தன.
ஒரே
ஒரு
காங்கிரீட் கட்டிடம் மட்டும் இருந்தது.
அது
தான்
ஸ்டேட் பேங்க்.
பணம்
வைக்க
வேண்டிய இடம்
அதுவே.
காலை
11.30 மணிக்கு
நாலு
பேர்
சைக்கிளில் வந்தார்கள்.
முதுகில் துப்பாக்கி,
கையில்
கையெறி
குண்டு.
இப்படி
ஆயுதம்
பார்த்த பழக்கம் இல்லாத
மக்கள்
உடனே
பயந்து
சிதறி
ஓடினார்கள்.
அப்போது வங்கியின் கேஷியர் நந்தகுமார்.
அவருக்கு வயது
27.
அவர்
உள்ளே
பூட்டிக்கொண்டு அமர்ந்தார்.
கொள்ளையர்கள் கத்திக்கொண்டு உள்ளே
நுழைந்தபோது
ஒரு
குண்டு
வெடித்தது.
அதில்
நந்தகுமார் உயிரிழந்தார்.
இதைக்
கண்ட
பொதுமக்களுக்கு கடும்
கோபம்
வந்தது.
லாக்கரை உடைத்து,
பணத்தை
மூட்டையாக கட்டிக்கொண்டு
கொள்ளையர்கள் வெளியே
வந்தார்கள்.
“இந்த வங்கியில்
நாம்
அடகு
வைத்த
கம்மல்,
மூக்குத்தி
எல்லாம் இவர்கள் எடுத்துச் செல்கிறார்கள்” என்று.
அவர்கள் கொள்ளையர்களை மறித்தனர்.
கற்களை
எறிந்து தாக்கினர்.
அந்த
தாக்குதலில்
அனைத்து கொள்ளையர்களும் உயிரிழந்தனர்.
இந்த
சம்பவம்
இப்போது ஐம்பது
வயதை
கடந்த
அனைவருக்கும் தெரியும்.
இங்கு
கவனிக்க வேண்டிய ஒன்று
உள்ளது.
கொள்ளையர்கள்
கேஷியர் நந்தகுமாரை மட்டுமே சுட்டனர்.
பொது
மக்களில் ஒருவரையும் தாக்கவில்லை.
அந்த
நேரத்தில்,
கொள்ளையர்கள் பயந்து
“பணத்தை
விட்டுவிடுகிறோம்” என்று
பணத்தை
வீசியும் பார்த்தார்கள்.
ஆனால்
மக்கள்
வீசப்பட்ட பணத்தை
எடுக்கவில்லை.
அவர்கள் கொள்ளையர்களையே துரத்தினார்கள்.
அந்த
காலத்தில்
பொன்பரப்பி கிராமத்தில்
காவல்
நிலையம் இல்லை.
இதே
போன்ற
ஒரு
சம்பவம்
இலங்கையின் நீர்வேலி பகுதியில் நடந்தது.
நீர்வேலி என்ற
பெயருக்கேற்றபடி
சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்த
அழகான
பகுதி
அது.
1981 மார்ச்
25 அன்று
விடுதலைப் புலிகள் உள்ளிட்ட
போட்டி
குழுக்கள் சேர்ந்து
வங்கிப் பணத்தை
நடு
வழியில் கொள்ளை
அடித்தனர்.
அந்த
முயற்சி முதலில் வெற்றி
பெற்றது.
பின்னர் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
பலர்
தண்டிக்கப்பட்டனர்.
இந்த
சம்பவத்தில்
புகழ்
பெற்ற
ஒருவரின் பெயர்
குமரன் பத்மநாபா.
பின்னாளில்
அவர்
ஒரு
ஆயுத
வியாபாரியாக மாறினார்.
புகழ்பெற்ற இரு “சிங்கள” இனவாதத் தலைவர்களின் தமிழ் பூர்வீகம்
1950-களின்
நடுப்பகுதியில் பண்டாரநாயக்கா பிரதமராக வந்தார்.
அவர், தமிழர் அரசியல் பிரச்சனையில், தமிழர் தலைவர் செல்வநாயகத்துடன் சில சமரச முடிவுகளை
எடுக்க முயன்றார்.
அதை
முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில், ஜெ.ஆர். ஜெயவர்த்தனே சிங்கள
இனவாதிகளை ஒன்றிணைக்கும் அரசியலைத் தொடங்கினார்.
அதில் மிகவும் புகழ்பெற்றது “கண்டி யாத்திரை”.
அதோடு
மட்டுமல்லாமல்,
“பண்டாரநாயக்கா அடிப்படையில் ஒரு தமிழர். அதனால்தான்
தமிழர்களுக்கு உரிமை கொடுக்க நினைக்கிறார்”
என்று, அவரது தமிழ்
பூர்வீகத்தை முன்னிறுத்தி
சிங்கள மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.
இதன்
எதிர் விளைவாக,
பண்டாரநாயக்காவும், ஜெயவர்த்தனாவும் இருவருமே தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள்
என்பதை அன்றைய பத்திரிகைகள் வெளிச்சம் போட்டுக் காட்டின.
1. பண்டாரநாயக்கா
– குடும்ப வரலாறு
·
17-ஆம்
நூற்றாண்டில், தமிழகத்திலிருந்து இலங்கைக்கு குடியேறியவர்
“நீலபெருமாள்” என்ற
தமிழர்.
·
அவர்
தன் பெயரை சிங்கள வடிவில்
“நீலபெருமாள்கே” என்று
மாற்றிக் கொண்டார்.
·
அவரது
வாரிசு
டயஸ்
வியசதுங்க பண்டாரநாயக்கா – 1770 இல் பிறந்தார்.
இவர் கோரலை முதலியாராக இருந்தார்.
·
இவரது
மகன் – டானியல் பண்டாரநாயக்கா
(1748 இல் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்)
·
அடுத்த
தலைமுறை – தொன்
சொலொமன் பண்டாரநாயக்கா
இவர் பிரிட்டிஷ் ஆட்சிக்காக உளவாளியாக செயல்பட்டார்.
·
அவரது
மகன் – தொன்
கிறிஸ்டோபர் பண்டாரநாயக்கா
·
அவரின்
மகன் – தொன்
சொலொமன் டயஸ்
பண்டாரநாயக்கா
👉 இவரது மகன்தான்
S.W.R.D.
பண்டாரநாயக்கா
👉 இந்த
குடும்பம்
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமிழர் வம்சம்.
2. ஜெ.ஆர். ஜெயவர்த்தன – குடும்ப
வரலாறு
·
சிறு
வயதில் தந்தையை இழந்த
“தம்பி முதலியார்” என்ற
தமிழர்
கொழும்பில் குடியேறினார்.
·
ஒல்லாந்து
ஆட்சிக்காக உளவு பார்ப்பதே அவரது
தொழில்.
·
அவர்
தன் பெயரை
“ஏட்ரியன் ஜெயவர்த்தன” என்று
மாற்றிக் கொண்டார்.
·
அவரது
மகன் – தொன்
ஏப்ரஹாம் ஜெயவர்த்தன
·
அடுத்த
தலைமுறை – ஜேம்ஸ் அல்பிரட் ஜெயவர்த்தன
·
பின்னர்
– யுஜின் வில்பிரட் ஜெயவர்த்தன
👉 இவரது மகனே
J.R. ஜெயவர்த்தன
கூடுதல்
உண்மை
·
பண்டாரநாயக்காவின் மனைவி சிறிமாவோவும்
தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்தவர்தான்.
முடிவாக
தமிழர்கள்
பலர் காலப்போக்கில் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டார்கள்.
அதை அறியாமல்,
“நாயக்க” என்ற பெயரை வைத்து தெலுங்கர், வடுகர் என்று
சிலர் அர்த்தமில்லாமல் பேசுகிறார்கள்.
👉 இலங்கை என்பது பல்லின மக்கள் குடியேறிய நாடு.
👉
பூர்வீகங்களை தோண்ட ஆரம்பித்தால்,
நமக்கு பிடிக்காத, நமது நம்பிக்கைகளை உடைக்கும்
பல உண்மைகள் வெளிவரும்.
அதனால்தான்,
வரலாற்றை இனவாத
ஆயுதமாக பயன்படுத்துவது ஆபத்தானது.
இலங்கையில் அங்கிருந்த சைவப் பிள்ளைகள் மற்றும் முதலியார்கள் ஆங்கிலேயர் காலத்தில் செல்வாக்கோடு இருந்தனர்.
அதே காலத்தில் இந்தியாவில் ஐயர் ஐயங்கார் மேனன் வகுப்பார் ஆங்கிலேயர் ரோடு இணக்கமாக இருந்து அந்த காலத்து ஐசிஎஸ் தேர்ச்சி பெற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கே பி எஸ் மேனன், திரும்ப அவர் அவர் மகன் கே பி எஸ் ஜூனியர், சிவசங்கரமேனன் ஒரே குடும்பம் இலங்கைக்கு தொடர்பாக வெளியுறவுத்துறை அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள் எப்பவும் அதிகாரம் குவிக்கப்பட்டால் அது தரம் தாழ்ந்து போகும் அதற்கு இலங்கை இந்திய அதிகாரிகள் காரணம்
https://en.wikipedia.org/wiki/K._P._S._Menon




.jpg)







.jpg)

.jpg)
.jpg)
















.jpg)




.jpg)




.jpg)
Comments
Post a Comment