காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் The Hidden Chapters of Gandhi’s Journey Lion Raja Ganesan

காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு போனார் எல்லாருக்கும் தெரியும் யார் கூட்டிட்டு போனது அன்றைக்கு 20 கப்பல் வைத்திருந்த அவர் தாதா அப்துல்லா & கோ என்ற இந்திய வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிவதற்காக அங்கு சென்றார்.
இந்த
நிறுவனம் தாதா அப்துல்லா ஷேத் என்பவருக்கு சொந்தமானது. அவர்
டர்பன்
(நட்டால்) பகுதியில் வாழ்ந்த இந்திய
முஸ்லிம் வியாபாரி.
20 ஆண்டுகள் பணி செய்தார் கூட இருந்தவங்க எல்லாம் தமிழர், தில்லையாடி வள்ளியம்மை கதையெல்லாம் எல்லாருக்கும் தெரியும் மகாத்மா காந்தி என்னைய விட நல்லா தமிழ் பேசுவார்,
வ உ சிதம்பரம் பிள்ளை நல்லா தொழில் செஞ்ச வக்கீல் ஒரு சின்ன பிரச்சனை நான் கப்பல் ஓட்ட போறேன் அப்படின்னு ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஆரம்பிச்சு ஒரு பங்கு 25 ரூபா எல்லாம் சரி இவரால 25000 ரூபா கூட தேத்த முடியல கப்பலோடதான் தூத்துக்குடி போவேன் இல்லையென்றால் கடலில் விழுந்து சாவேன் என்று சொன்னார் அப்ப இவருக்கு உதவி செஞ்சது பக்கீர் முகமது வ. உ. சிதம்பரம் பிள்ளை 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று 'சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை' (SSNCO) தொடங்கிய போது, அதற்குப் பெரும் நிதி உதவி செய்தவர்களில் ஹாஜி முகமது பக்கீர் ராவுத்தர் (Haji Mohammed Rowther Sait) பத்து லட்ச ரூபாய்க்கு அவர் பங்குகளை வாங்கி கப்பல் வாங்க காரணமாக இருந்தவர் இந்த செய்தி எல்லாம் ஆங்கிலேயர் காலத்திலும் அதன் பிறகு பார்ப்பனர்களாலும் மறைக்கப்பட்டது,
*****************
ஆட்சி மாற்றத்தின் சின்னம்: இந்தியா சுதந்திரம் அடைந்ததும், புதிய அரசாங்கத்திற்கு யார் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, எப்படி அதிகாரப் பரிமாற்றம் நடப்பது என்ற குழப்பம் இருந்தது.
அப்போது, ராஜாஜி, தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும் போது ராஜகுரு செங்கோல் கொடுப்பார், அதுவே அதிகார மாற்றத்தின் அடையாளம். அதுபோல, சுதந்திர இந்தியாவுக்கு ஒரு சின்னம் வேண்டும் என்று கூறினார்.
காந்தியின் ஒப்புதல்: ராஜாஜியின் கருத்தை காந்தி ஏற்றுக்கொண்டார்.
ஆதீனத்தின் பங்கு: தமிழ்நாட்டின் பாரம்பரியப்படி, சோழர் காலத்தில் இருந்து வந்த வழக்கம் இது. திருவாவடுதுறை ஆதீனத்தின் 20-வது மடாதிபதி, ஸ்ரீ-ல-ஸ்ரீ குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், செங்கோலை வடிவமைத்து, அதன் புனிதத்தன்மையை உணர்த்தி, அதை நேருவிடம் வழங்கினார்.
முஸ்லிம்களிடமிருந்து ஆட்சி மாறியது என்ற கூற்றுக்கு மறுப்பு: செங்கோல் வழங்கியது, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்திய மக்களிடம் அதிகாரம் கைமாறியதைக் குறிக்கிறது, இஸ்லாமியர்களிடமிருந்து கைமாறியதைக் குறிக்கவில்லை. புகைப்படம் மற்றும் சான்றுகள்: இந்த நிகழ்வின் புகைப்படங்கள் உள்ளன. லார்ட் மவுண்ட் பேட்டன், நேரு மற்றும் ஆதீனப் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
வரலாற்றுப் பெருமை:இந்த செங்கோல், சோழ மன்னர்களின் அதிகாரப் பாரம்பரியத்தையும், தமிழ்நாட்டின் ஆன்மிகப் பெருமையையும், சுதந்திர இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தையும் குறிக்கும் ஒரு வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது.
இந்தியாவுக்கு வந்தவுடன் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயரை எதிர்த்து அகிம்சை முறையில் போராடி வென்றவுடன் அதே பாணியில் இங்கேயும் போராட்டம் செய்ய வேண்டும் அழைப்பெல்லாம் சரி காந்தி உடனே ஒத்துக்கல, நான் இந்தியாவுல பயணம் பண்ண வேண்டிய இடம் இருக்கு என்று ரயிலில் அன்று முதல் வகுப்பு இரண்டாம் வகுப்புகள் இல்லை மூன்றாம் தர நெஞ்சில் உட்கார்ந்து இந்தியாவை மூன்று முறை குறுக்கும் நெடுக்குமாக அளந்து பார்த்துவிட்டு தலைவர் பதவியைஒத்துக் கொண்டார் ,
உத்தமர் காந்தி
எந்த அதிகார
மையங்களையும் நோக்கிச்
சென்றதில்லை. நாடாளுமன்றத்தையும்,
சட்டமன்றத்தையும் பார்க்காத
அண்ணல் காந்தி,
சென்னையில் செயல்பட்ட
சென்னை ராஜதாணியில்
மேலவையில் வந்து
விவாதங்களை கவனித்தது
முக்கிய நிகழ்வாகும்.
நாட்டின் விடுதலைக்கு முன்பு ஆங்கிலேயர்கள் நடத்திய இந்த மேலவையில் சில்வர் டங், வி.எஸ்.சாஸ்திரி போன்றவர்கள் மேலவையில் உரையாற்றியதை இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அமர்ந்து கேட்டுச் சென்றார். அப்படிப்பட்ட இந்த மேலவை தமிழகத்தில் எம்.ஜி.ஆர் காலத்தில் ஒழிக்கப்பட்டது,
அந்த
காலத்தில், நமக்குத் தெரிந்த டிராபிக் ராமசாமி போல,
எதற்கெடுத்தாலும் வழக்கு
போடும்
நபராக
சைதாப்பேட்டை கோபால்சாமி இருந்தார். அவர்
நடிகை
வெண்ணிலாடை நிர்மலாவுக்கு எதிராக
வழக்கு
தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஸ்டே
ஆர்டர்
பெற்றார்.
இந்த
விவகாரம் மக்கள்
பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது என்று
கூறி
நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு
தமிழக
தலைமைச் செயலாளருக்கு ஆளுநர்
குரானா
கடிதம்
எழுதினார்.
10 லட்சம் ரூபாய்
கடன்
பாக்கியைச் செலுத்தினால் மட்டுமே எம்எல்சி பதவி
தொடர
முடியும் என்று
நீதிமன்றம் கூறியது. அதன்படி வெண்ணிலாடை நிர்மலா அந்த
தொகையைச் செலுத்தினார். ஆனால்,
கடனில்
தத்தளித்த ஒருவர்
ஒரே
நாளில்
10 லட்சம்
ரூபாயை
எப்படி
செலுத்தினார் என்ற
கேள்வி
எழுந்தது. இதையடுத்து நிர்மலா தனது
எம்எல்சி பதவியை
ராஜினாமா செய்தார்.
அதன்பின் மேலவையை கலைக்க
அதிமுக
அரசு
முடிவு
செய்தது. 14.5.1986 அன்று சட்டப்பேரவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“நான்
உறுப்பினராக இருப்பதாலேயே மேலவை
கலைக்கப்படுகிறதென்றால், நான்
ராஜினாமா செய்யத் தயார்”
என்று
கருணாநிதி கூறினார். மேலவையை கலைக்க
வேண்டாம் என்று
அதன்
தலைவர்
மாபொசி
உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். ஆனால்
இவற்றை
எம்ஜிஆர் ஏற்றுக்கொள்ளவில்லை.
ரௌலட்
மசோதா
விவகாரத்தில், இரண்டு
சட்ட
முன்வடிவுகள் இந்திய
சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றை
சட்டமாக்க வேண்டாம் என்று
மகாத்மா காந்தி
கேட்டுக்கொண்டார்.
இந்த சட்ட முன்வடிவுகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடந்த நாளில், காந்திஜி பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து விவாதங்களை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த அனுபவம் குறித்து மகாத்மா காந்தி பின்னர் கூறியதை இப்போது கேட்போம்.
“இந்திய
சட்டசபை கூட்டத்திற்கு
எனது வாழ்நாளில்
ஒரே ஒரு
முறைதான் போய்
இருக்கின்றேன். அது
ரெளலட் மசோதாவின்
பேரில் அந்த
சென்னை ராஜதானி
சட்டமன்றத்தில் (மேலவை
மட்டுமே இருந்தது)விவாதம்
நடந்தபோது தான்.
அப்போது வி.எஸ்.
சீனிவாச சாஸ்திரியார்
ஆவேசமாகப் பேசினார்.
அரசுக்குக் கடுமையான
எச்சரிக்கையும் விடுத்தார்.
வைஸ்ராய் வியப்பும்
திகைப்பும் அடைந்த
நிலையில் அவருடைய
பேச்சைக் கேட்டுக்
கொண்டு இருந்தார்."
மகாகனம் வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார், வைஸ்ராயால் நியமிக்கப்பட்ட உறுப்பினராய் இருந்தும் தயவு தாட்சண்யம் காட்டாமல் இந்திய அரசினை எதிர்த்து சட்டசபையில் முழக்கம் செய்தார். அவரது பேச்சைக் கேட்க ஒரே நேரத்தில் காந்திஜியும், வைஸ்ராயும் இந்திய சட்டசபையில் இருந்தார்கள்.
இப்படிப்பட்ட 1908 ஆம்
ஆண்டு குற்றவியல்
(திருத்தச்) சட்டத்தை
உடனடியாக ரத்து
செய்யவேண்டும் எனும்
தீர்மானத்தினை இன்னொரு
புதிய சட்ட
முன்வடிவின் மூலம்
அறிமுகப்படுத்திய டி.டி.
கிருஷ்ணாமாச்சாரி மேலும்
கூறுகையில், தனிநபர்
சுதந்திரத்தையும், உரிமையையும்
பறிப்பதாக உள்ளதான
இச்சட்டம் தொடர்ந்து
அமலில் இருப்பதனை
எதிர்த்தார். இந்நாட்டு
மக்கள், வெளிநாட்டு,
ஏகாதிபத்தியத்தினால் கொடுமைபடுத்தப்
படுவதன் காரணமாக
உரிமைக்குரலை எழுப்ப
வேண்டும் என
குரல்கள எழுந்தன.
****************
மகாத்மா காந்தி நடத்தி வைத்த மூன்று காதல் திருமணங்கள்
காந்தி நடத்தி வைத்த முதல் திருமணம்
அவர் குடும்பத்துக்குள் அவர் மகனை ராஜாஜி வீட்டில் தங்க வைத்தது அங்கே நெருப்பு பத்திக்கிச்சு
ஆனாலும், ராஜாஜியின் குடும்பம் உடனடியாக திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை.பல
நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மகாத்மா காந்தி
படுத்திருந்த நிலையிலேயே அந்த
திருமணத்தை ஆசீர்வதித்தார்.
ஆனால், இவர்களது காதல் தங்கள் நட்புறவையும், போராட்ட களத்தையும் பாதித்துவிடுமோ என்ற அச்சம் காந்திக்கு இருத்தது. ஆகினும், தங்கள்காதலில் உறுதியாக இருந்தனர் தேவதாசும், லட்சுமியம். அச்சமயம், தேவதாஸ் வயது 28 மற்றும், லட்சுமியின் வயது 15.
லட்சுமியின் வயதை சுட்டிக்காட்டி காந்தி மற்றும் ராஜாஜி, நீங்கள் இருவரும் 5 ஆண்டுகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல், பேசிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தனர். இது, இவர்கள் காதலை இவர்களுக்கு ராஜ்மோகன் காந்தி, கோபால் கிருஷ்ணா காந்தி, ராமச்சந்திர காந்தி, தாரா காந்தி என நான்கு குழந்தைகள் பிறந்தனர். ராஜ்மோகன் காந்தி ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியராக விளங்கினார். ராமச்சந்திர காந்தி தத்துவவாதியாக திகழ்ந்தார். இவர், The Availability of Religious Ideas (1976), Sita's Kitchen, a Testimony of Faith and Inquiry (1992), Svaraj: A Journey with Tyeb Mehta's Shantiniketan Triptych (2003), Muniya's Light (2005) போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
அடுத்த மகன் கோபால கிருஷ்ணா தேவதாஸ் காந்தி ஓர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் இந்திய ஜனாதிபதியின் செயலாளராகவும், பீகார் மற்றும் மேற்குவங்காள மாநில கவர்னராகவும் பணியாற்றி இருக்கிறார். 2017ம் ஆண்டு துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கையா நாயுடுவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
******************
காந்தியார் நடத்தி வைத்த இரண்டாவது திருமணம்
1940 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம்
தமிழகத்தின் மிகப்பெரிய பணக்காரத் தொழில்அதிபர் டிவிஎஸ் ஐயங்கார் உடைய
மகள்
இவர்
காந்திகிராமத்தில் காந்தியாருக்கு உதவியாக இருந்தார் சௌந்தரம் அம்மா,
மிகப்பெரிய சேவையாளர் இவருக்கு 14 வயதில்
சௌந்தரராஜன் என்கிற
மருத்துவரை திருமணம் செய்து
வைத்தார்கள் இப்போது வந்த
கொரோனா
போல
அப்போது பிளேக்
நோய்
பரவியது இதில்
அவர்
பலியானார்,
ஆனால் அவர் இறக்கும் முன்பு நீ படித்து மருத்துவராகி மறுமணம் செய்து கொள்ள வேண்டும் அவரும் மருத்துவராக இருக்க வேண்டும் என்னை போன்ற சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், காந்தி அவர்களுக்கு உதவி செய்தார் அந்த அம்மையார் அதன் பிறகு டெல்லியில் லேடி ஹார்ட்டிங் மெடிக்கல் காலேஜில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாமல் மருத்துவராக தங்கப்பதக்கம் வென்றார், மருத்துவர் சுசீலா நய்யார் அறிமுகத்தோடு மகப்பேறு மருத்துவம் குழந்தை மருத்துவம் போன்றவற்றை படித்து வெளியேறி வந்தவர்
கேரளாவைச் சேர்ந்த பட்டியலின வகுப்பை சேர்ந்த ஜி
ராமச்சந்திரன் என்னும் மருத்துவரை இவருக்கும் பிடித்துப் போனதால் இவர்கள் காதலுக்கு காந்தி
பச்சைக்கொடி காட்டினார்,
மிக எளிய முறையில் ஒரு தொண்ணையில் பாயாசம் 20 பேருக்கு எளிய உணவு தமிழகத்தின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த பெண்மணிக்கு காந்தி ஆசிரமத்தில் காந்தியார் முன்னிலையில் நடந்த திருமணம் வெளியில் தெரியாது தெரியாமல் செய்து கொண்டார்கள் அன்றைக்கு இருந்த பத்திரிகை ஆசிரியர்கள்,
டிவிஎஸ் சுந்தரம் ஐயங்காரும் இந்த
காதலை
ஆரம்பத்தில் எதிர்த்தார் காந்தியார் வற்புறுத்தலில் ராஜாஜியின் ஆலோசனையின் பேரில்
தான்
இந்த
திருமணம் நடந்தேறியது
இவர் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தில் துணை அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கிக் கௌரவித்தது
1940 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் தன் மனைவி நூற்ற கைத்தறி புடவை தான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தி அந்த கைத்தறி புடவை அணிந்து எளிய முறையில் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார் காந்தி 1967 ஆம் ஆண்டு வீசிய திராவிட புயலில் திண்டுக்கல் தொகுதியில் தோல்வி கண்டு அரசியலில் இருந்து விலகிக் கொண்டார்
காந்தியார் நடத்தி வைத்த மூன்றாவது திருமணம்
மார்ச் 26,1942
நேருவின் மகள் இந்திரா காந்திக்கும் அவரை காதலித்த பெரோஸ் கான் என்கிற பார்சி இனத்தவர் பின்னாலில் இவர் காங்கிரஸ் எம்பி ஆக இருந்து நேரு மந்திரி சபையில் நடந்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்தவர்,
நேருவின் மனைவிக்கு காச நோய் சிகிச்சைக்காக உதவியாக வந்தவர்தான் பெரோஸ் கான் இவர் மீது இந்திரா காந்திக்கு காதல் வந்தது நேரு அதை எதிர்த்தார்,
ஆனால் காந்தியார் ஆதரித்தார் பெரோஸ் கான் என்கிற பார்சி மகாத்மா காந்தி மீது கொண்ட ஈடுபாட்டால் அவருடன் ஆயிரம் பேரை சேர்த்துக்கொண்டு பேருக்கு பின்னால் இருந்த சாதி பட்டத்தை துறந்து காந்தி என்று போட்டுக் கொண்டார்கள்,
அப்படித்தான் பெரோஸ்(கான் காந்தி)யாக மாறினார் இன்றும் அவர் குடும்பத்திற்கு எல்லோருக்கும் காந்தி சேர்ந்தது அப்படித்தான் இந்தத் திருமணம் எளிய முறையில் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு வேதம் ஓதப்பட்டது,
ஆனால் ஆடம்பரம் இல்லாத எளிய திருமணமாக காந்தியார் நடத்தி வைத்தார் நேரு குடும்பத்தில் விஜயலட்சுமி பண்டிட் அவங்களும் மூன்று ஜாதியில அடுத்தடுத்த தலைமுறை திருமணம் செய்து கொண்டது ஒருத்தர் சிங்கு அவங்க எல்லாம் காந்தி பேர் போடல
https://www.bbc.com/news/world-asia-india-60013807
முதல் நிகழ்வு ஜூன் 25, 1934
அன்றைய தினம் கஸ்தூரிபாயோடு பூனே கார்ப்பரேஷன் பொது அரங்கிற்கு உரையாற்ற புறப்படுகிறார். காரில் செல்லும்போது, ரயில்வே லெவல் கிராஸ்சிங்கில் வண்டிகள் நிற்கின்றன. அவர் பயணம் செய்த காரைப்போலவே முன்னே சென்ற கார், ரயில்வே கேட்டை தாண்டி அந்தப்பக்கம் சென்றது. தாமதமாக வந்ததால், காந்தியின் கார் இந்தப்பக்கம் நின்றது. காந்தி பயணம் செய்த கார் என தவறுதாக எண்ணி, அந்தப்பக்கம் சென்ற கார் மீது கையெறி குண்டு போட்டு வெடித்து சிதறியது. பூனே கார்ப்பரேஷன் மூத்த அதிகாரி மற்றும் பல போலீஸார்கள் பலத்த காயமுற்றனர். இதைப் பற்றி பின்னர் விசாரணை நடத்தியதில் தெரியவந்ததுகொலையாளிகள் இந்துத்துவா தீவிரவாதிகள்.
இரண்டாம் நிகழ்வு ஜூலை, 1944
காந்தி மலேரியாவால் நோய் வாய்ப்பட்டிருந்தார். சிகிச்சை மற்றும் ஒய்வுக்காக பூனே அருகில் இருக்கும் பஞ்சகணி என்ற இடத்திற்கு புறப்பட தயாராக இருந்தார். இருபது நபர்கள் சட்டென அவர் வீட்டுக்கு எதிரில் குழுமி, காந்திக்கு எதிராக கோஷமிட்டனர். அதில் ஒருவன் கத்தியுடன் கொல்ல காந்தியை நெருங்கும்போது, உடன் இருந்தவர்கள் தடுத்ததால், காந்தி பிழைத்தார். கத்தியோடு வந்தவனை தன்னிடம் இருக்குமாறு காந்தி மன்றாடினார்..காந்திக்கு தன் மேல் ஏன் அவனுக்கு வெறுப்பு? என்பதை தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அவனை நல்வழிப்படுத்த முடியும் என நம்பினார். ஆனால், அந்த இளைஞனோ,அவரை சட்டை செய்யாமல், அவரை உதாசீதனப்படுத்தினான். அன்றைய தினம் கும்பலாக காந்திக்கு எதிராக கோஷமிட்டவர்கள் இந்துத்துவா தீவிரவாதிகள். கத்தியோடு கொல்ல முயன்ற இளைஞனின் பெயர் நாதுராம் கோட்சே.
மூன்றாம் நிகழ்வு செப்டம்பர் 1944
முகமது அலி ஜின்னாவுடன் பேச்சுவார்த்தை நடத்த காந்தி தயாராகுகிறார். சேவாகிராம் ஆசிரமத்திலிருந்து காந்தி புறம்படும்போது, ஒரு கும்பல் அவரை போகவிடாமல் தடுத்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு காந்தி போகக்கூடாது என்பதில் அந்தக் கும்பல் முனைப்பு காட்டியது. அந்தக்கும்பலின் தலைவன் காந்தியை நெருங்கியபோது, ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் தடுத்து அவனை சோதனையிட்டபோது அவனிடம் இருந்தது குறுங்கத்தி. இந்துமகா சபையை சேர்ந்தவர்கள் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். குறுங்கத்தியை வைத்திருந்த இளைஞனின் பெயர் நாதுராம் கோட்சே.
நான்காம் நிகழ்வு ஜூன் 1946
பூனே அருகில் ரயிலில் பயணித்தபோது, நெருல்,கஜ்ரட் ரயில்வே நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்துக்கு அடியில் குண்டு வைத்து சிதறடிக்கபட்டது. அவர் பயணம் செய்த கோச் அதிருஷ்டவசமாக தப்பியது. அவருக்கு முந்தைய கோச்சுகள் பலத்த சேதமுற்றன. விசாரணையில் இந்துமகாசபை இளைஞர்கள் இதில் ஈடுபட்டனர் எனத் தெரியவந்தது.
அடுத்த நாள் பிராத்தனைக் கூட்டத்தில் இதைப்பற்றி பேசும் போது, ஏன் தன் மேல் இவ்வளவு கொலை வெறி தாக்குதல்கள் நடக்கிறது எனப்புரியவில்லை என்றும், தப்பித்தேன் என சிரித்துக்கொண்டேக்கூறி, கடவுளின் கருணையால் 125 வயது வரை வாழ்வேன் என பேசியுள்ளார்.
ஐந்தாம் நிகழ்வு ஜனவரி 20 1948
பிர்லா ஹவுஸில் ஏழு பேர் வருகிறார்கள் அவர்களின் பெயர்—மதன்லால், நாரயண் அப்தே, விஷ்ணு கர்கரே, திகம்பர், கோபால், சங்கர் மற்றும் நாதுராம் கோட்சே. அனைவரும் பிராத்தனைக் கூட்டத்தில் நிற்கிறார்கள், மதன்லால், புகைப்படக்காரராக தன்னை மாறுவேடம் பூண்டு காந்தி அமரும் மேடைக்கு பின்புறம் செல்கிறார். சுவரில் வெடிகுண்டை வைத்தாலும் அது சரிவர வெடிக்கவில்லை. அதற்குள் அனைவரும் தப்பிவிட்டனர். ஆனால் மதன்லால் பிடிபட்டான், விசாரணையில் எழுவரின் சதிதிட்டம் தெரியவந்தது.
ஒன்பது நாட்கள் கழித்து ஜனவரி 29ம் தேதி நாதுராம் கோட்சே, நாராயண் அப்தே டில்லி பிர்லா ஹவுஸுக்கு வருகிறார்கள் கையில் பெரெட்டா (Beretta Gun) துப்பாக்கி, 11 ரவை குண்டுகளுடன் காத்திருக்கிறார்கள்..
ஆறாம் நிகழ்வு ஜனவரி 30 1948
ஏகப்பட்ட விருந்தினர்கள் அவரை காண்பதற்கு காத்திருக்கிறார்கள். காந்தி மிகப்பெரிய தீர்க்கதரிசி….அன்று நடந்த இரண்டு உரையாடல்களில் தன் முடிவை அவர் கணித்துள்ளார்.
அன்று காலை முதல், கத்தியவார் தலைவர்கள் அவரை பார்க்க காத்திருக்கிறார்கள்.அன்று காந்தி பல தலைவர்களை ஒருவர்பின் ஒருவராக சந்தித்ததால், பலர் கால வரையின்றி காத்திருந்தனர். அவர் பேத்தி மனுபாய்காந்தி, அவருக்கு கத்தியவார் தலைவர்கள் காத்திருக்கிறார்கள் என நினைவூட்டுகிறார். அதற்கு காந்தி, “ நான் உயிரோடிருந்தால் இன்று மாலை, பிராத்தனைக் கூட்டத்திற்கு பிறகு சந்திக்கலாம்” என்கிறார்.
அன்று மதியம் 2 மணிக்கு, அமெரிக்காவின் LIFE இதழின் பெயர் பெற்ற புகைப்பட நிபுணர் மார்க்ரெட் ஒயிட் உடன் காந்தியின் நேர்காணல் நடந்தது. மார்க்ரெட், காந்தியிடம் “ நீங்கள் 125 ஆண்டுகள் வாழ ஆசைப்படுவதாக சொல்லியுள்ளீர்கள். எதன் அடிப்படியில் இதை கூறினீர்கள்? எதற்காக இவ்வளவு ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறீர்கள்?” என்ற கேள்விக்கு காந்தி “ அதை நான் சொன்னது உண்மைதான், ஆனால் இப்போது எனக்கு விருப்பமில்லை. இப்போது நடக்கும் சகிப்புதன்மையற்ற வன்முறைகள் என்னை நிம்மதி இழக்க செய்கின்றன. நான் விரைவில் விடைபெறுவதையே விரும்புகிறேன்” என்றார்.
பட்டேலுடன் நடந்த உரையாடல் நீடித்து, பத்து நிமிடம் தாமதமாக பிராத்தனைக் கூட்டத்திற்கு காந்தி வருகிறார். மாலை 5.17 மணிக்கு, இந்துத்வா தீவிரவாதி நாதுராம் கோட்சே அவர் நெஞ்சை நோக்கி குறிபார்த்து மூன்று முறை துப்பாக்கியால் சுட்டான்..
காந்தி வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்காக வாழ்ந்தவர் அல்லவா..தன் மரணத்தின் மூலம் இந்துத்வா அடிப்படைவாதியின் விருப்பத்தையும் பூர்த்தி செய்தார்.
காந்தியின் மகன்ஹரிலால் காந்தி ஒருகட்டத்தில்
குடும்பத்தை விட்டுப் பிரிந்தார்.
1936இல் அப்துல்லா காந்தி என்ற பெயருடன் முஸ்லீம் மதத்தைத் தழுவினார். சில ஆண்டுகளில் மீண்டும் இந்துவானார். காந்தி அந்நியப் பொருள்களைப் புறக்கணிக்க இயக்கம் நடத்திய நிலையில் இவர் அந்நியப் பொருள்களை விற்பனை செய்தார். விடுதலைப் போராட்டத்தைவிட
ஹரிலால் காந்தியைச் சமாளிப்பது கூடுதல் பிரச்சினையாக
இருந்ததை காந்தி தமது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
ஹரிலாலின் மகள் மனுபென் காந்தி 1943 முதல் காந்தியின் உதவியாளராக இருந்தார். காந்தி என் தாய் (Bapu My Mother) எனும் நூலை எழுதினார்.
ஜூன் 18, 1948இல் பம்பாயில் உள்ள முனிசிபல் மருத்துவமனையில் 55 வயதில் காசநோயால் இறந்தார். பம்பாய் காமாதிபுராவில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் காந்தியின் மகன் என்று அங்கு யாரிடமும் கூறவில்லை. இறந்தபிறகு அவரது பையில் கிடைத்த ஆதாரங்களில் அடிப்படையில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.






















Comments
Post a Comment