ரகசியமான பொய்கள், இரா கணேசன்


 1,நேரு படித்த Harrow  ஸ்கூல் லண்டனில் புகழ்பெற்ற பழைய கால நிறைய கட்டிடங்களை  ஒன்றிணைத்த ஒரு கேம்பஸ் அங்கு 1909 காலகட்டத்தில் கார்கள் அவ்வளவு புழக்கத்தில் இல்லை நேருவுக்காக இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் இரண்டு வாசலில் காத்திருக்கும் என்று சொல்லப்பட்டது அந்த காலத்தில் நம்பப்பட்ட பொய்

2,ஜின்னா குறித்து பரவும் ஒரு சுவாரஸ்யமான பொய்யான கதை!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா இங்கிலாந்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது, மன்னர் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஏழு குதிரைகள் பூட்டிய பெரிய சாரட் வண்டியைப் பயன்படுத்தியதாகவும், அது சட்டவிரோதம் என்று கூறி ஜின்னா வழக்குத் தொடர்ந்ததாகவும் ஒரு கதை பரவி வருகிறது.

அந்த வழக்கில் ஜின்னா மன்னர் குடும்பத்திற்கு எதிராக வாதாடி வெற்றி பெற்றதாகவும், ஏழு குதிரைகளில் ஆறு ஆண் குதிரைகள் என்றும், ஒன்று பெண் குதிரை என்றும் சுட்டிக்காட்டி, அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும் இந்தக் கதையில் கூறப்படுகிறது.

இந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதால் பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இங்கிலாந்தில் அப்படியொரு வழக்கு நடைபெற்றதற்கான நம்பகமான வரலாற்று அல்லது நீதிமன்றப் பதிவு இதுவரை கிடைக்கவில்லை.

ஜின்னா லண்டனில் சிறந்த வழக்கறிஞராகப் புகழ்பெற்றவர் என்பது உண்மை. ஆனால், ஏழு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி தொடர்பான இந்த வழக்கில் அவர் மன்னர் குடும்பத்திற்கு எதிராக வாதாடி வெற்றி பெற்றார் என்பதற்கு ஆதாரம் இல்லை.

எனவே, இந்தக் கதையை ஜின்னாவின் உண்மையான வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்ற சம்பவமாகக் கூறுவது தவறு. ஆதாரமற்ற ஒரு சுவாரஸ்யக் கதையாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும்.


3,
கடைசியாக நடந்த போரில் பூலித்தேவன் தோல்வியடைந்தார்

காப்டன் கேம்ப்பெல் என்பவனால் நெற்கட்டும்செவல் கோட்டை கைப்பற்றப்பட்ட பிறகு, பூலித்தேவர் தலைமறைவானார். பின்னர் ஆரணிக் கோட்டைத் தலைவன் அனந்த நாராயணன் என்பவனால் பூலித்தேவர் ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது அவரைப் பாளையங்கோட்டைச் சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில், தனக்குச் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமியை வழிபட வேண்டும் என்ற இறுதி ஆசையைக் கூறினார்.ஆங்கிலேயப் படைவீரர்கள் சூழ்ந்து நிற்க, அவர் கருவறைக்குள் சென்று இறைவனை வேண்டிப் பாடினார். அப்போது ஒரு பெரும் புகைமண்டலமும் சோதியும் (ஒளியும்) தோன்றியதாகவும், அவரது கைவிலங்குகள் தானாகவே அறுந்து விழுந்து அவர் இறைவனுடன் சோதியில் கலந்தார் (மறைந்தார்) என்றும் கூறப்படுகிறது 

ஆனால் அவர் மாறுவேடத்தில் தப்பித்து போய் விட்டதாகவும்  நம்பப்படுகிறது அது அவர் மீது கொண்ட ஜாதி பற்று பெருமையா பேசும் உண்மை உண்மையில் போரில் தோல்வியடைந்து பருத்தி வீரன் படத்தில் கடைசியாக சொல்லுவார் அல்ல என்னை காணாமல் கானா பிணமா அதாவது உருவம் தெரியாமல் முகத்தை சிதைத்து விடு என்று செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்


4,வள்ளலாரின் மறைவும் ஆங்கிலேய அரசின் அதிகாரப்பூர்வ கெஜட் பதிவும்!

1874 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று (தைப்பூச நாளன்று), கடலூர் மாவட்டம் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகத்தில் வள்ளலார் ராமலிங்க அடிகளார் தம் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். "யாரும் கதவைத் திறக்க வேண்டாம்; அறைக்கு வெளியே மட்டுமே பூட்டி விடுங்கள்" என்று தம் சீடர்களிடம் கூறிவிட்டுச் சென்றார்.

அக்காலத்தில் இந்திய மக்களின் மத நம்பிக்கைகளில் தேவையின்றித் தலையிடுவதில்லை என்ற கொள்கையை ஆங்கிலேய அரசு பின்பற்றி வந்தது. இருப்பினும், வள்ளலாரின் மறைவு குறித்துப் பல வதந்திகள் உலா வந்ததால், அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்பட்டது.

தென்னார்க்காடு (South Arcot) மாவட்டக் ஆட்சியரான ஜே. ஹெச். கார்ஸ்டின் (J. H. Garstin, I.C.S.) அவர்கள், அதிகாரிகளுடன் நேரில் சென்று பூட்டப்பட்டிருந்த அறையைத் திறந்து சோதனையிட்டார். ஆனால், அந்த அறையில் மனித உடல் எச்சங்களோ அல்லது வேறு எந்த ஆதாரங்களோ இன்றி அறை முற்றிலும் காலியாகவே இருந்தது.

பின்னர், டபிள்யூ. பிரான்சிஸ் (W. Francis, I.C.S.) என்பவரால் தொகுக்கப்பட்டு, 1906-இல் வெளியாக்கப்பட்ட தென்னார்க்காடு மாவட்ட கெஜட்டில் (South Arcot District Gazetteer) இச்சம்பவம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது:

"1874-இல் ராமலிங்க பரதேசி மேட்டுக்குப்பத்தில் உள்ள ஓர் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். அதன் பிறகு அவர் அங்கிருந்து காணப்படவில்லை. அந்த அறை பூட்டியே கிடக்கிறது."

வள்ளலார் ஜீவசமாதி அடைந்திருக்கலாம் அல்லது சீடர்களின் உதவியுடன் வெளியேறியிருக்கலாம் என்ற பல்வேறு ஊகங்கள் நிலவினாலும், மக்களின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் ஆங்கிலேய அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கை அப்படியே நிறைவு செய்தது.


5, சஞ்சய் காந்திகாங்கிரஸ் அரசியலுக்குள் ஒரு பார்வை

காங்கிரஸ் கட்சியில் தன் இரண்டாவது மகனை அரசியல் சொல்லி வளர்த்தார் இந்திரா காந்தி. முதல் மகன் ராஜீவ் காந்தி இஷ்டப்படி வாழ விரும்பி, விமான ஓட்டியாக விரும்பினார். ஆனால், துரதிஷ்டவசமாக, நாட்டு மக்களுக்கு அரசியல்வாதியாக ஆக வேண்டிய சஞ்சய் காந்தி விமானம் ஓட்டப் போய் செத்துப் போயிட்டார். அதனால் விமானம் ஓட்டப் பழகியவர் அரசியலுக்கு வந்தார். அதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கொஞ்சம் உள்ளே போய்த் தேடிப் பார்ப்போம்.

90 களின் இறுதியில் கோமல் சாமிநாதன் தினத்தந்தியில் வாரக் கடைசியில் ரகசியமான ரகசியங்கள் என்ற தலைப்பில் 25 சம்பவங்கள் குறித்து எழுதி இருந்தார். அதிலிருந்து ஒன்றை இங்கே நான் எழுதுகிறேன்.

இப்போது அவருடைய பேரன் சஞ்சய் காந்திக்கு ஐந்து வயது. ஒரு வீட்டு பிறந்தநாளுக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார்கள். அந்த வீட்டில் ஒருவன் ஒரு ரயில் பொம்மை வைத்திருந்தான். அது சாவி கொடுத்தால் ஒரு ரவுண்டு சுற்றி வரும்.

ரயில் திரும்பி வீடு வந்ததும் எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் சஞ்சய் காந்தி மட்டும் அந்த ரயில் வேண்டும், இப்போதே வேண்டும் என்று அடம் பிடித்து தரையில் புரண்டு அழுது கொண்டிருந்தான்.

மிகவும் காலதாமதமாக வந்த நேரு, “என்ன?” என்று கேட்டார்.

நள்ளிரவு ஆகிவிட்டது. இருந்தாலும் பரவாயில்லை. எங்கேயாவது போய் ஏதாவது பூட்டி இருந்த கடையைத் திறந்து, என் பேரனுக்கு அந்த ரயில் பொம்மையைக் கொடுங்கள் என்று உத்தரவு பறந்தது.

இரண்டு மணி நேரம் கழித்து ரயில் பொம்மையோடு வந்தார்கள்.

மண்டையில் ஒரு தட்டு தட்டி அன்றைக்கே சரி பண்ணி இருந்தால், நேரு குடும்பத்திற்கு பின்னால் அவ்வளவு பெரிய அசிங்கம் வந்து நேர்ந்திருக்காது.

பள்ளிப் படிப்பு

விஐபிகள் படிக்கும் இரண்டு பள்ளிக்கூடங்கள் இவரை வெளியே அனுப்பி விட்டன. மூன்றாவதாக டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கும் இவர் மீது நிறைய குற்றப் பத்திரிகைகள்.

உங்கள் மகனை மரியாதையாக அழைத்துக் கொண்டு போய் விடுங்கள்என்று வேறு வழியில்லாமல் இந்திரா காந்தி அவனை அழைத்துக் கொண்டு வந்தார்.

சஞ்சய் காந்திக்கு கிளி, மைனா மற்றும் நாய் குட்டிகள் மீது விருப்பம். அதற்காகவே நேரு அவருடைய தீ மூர்த்தி பவனில் ஒரு குட்டி மிருகக்காட்சி சாலையை உருவாக்கி வைத்திருந்தார்.

கார் திருட்டு சம்பவங்கள்

அத்தோடு நிற்கவில்லை. ஒரு ஊதாரி அரசியல்வாதி, பணக்காரி மகன் என்பதற்கு சஞ்சய் காந்தியின் நடவடிக்கைகள் தான் உதாரணம்.

அவர்கள் எந்தக் காரை வேண்டுமானாலும் திருடுவார்கள். அப்போது பெரும் அதிகாரிகள், செல்வந்தர்கள் தான் கார் வைத்திருந்தார்கள். டெல்லியில் அதிகமாக கார்கள் திருடப்பட்டன.

குறிப்பாக டெல்லியில் பாலம் விமான நிலையத்திற்கு அருகில் ஒரு கார் திருடப்பட்டது. காருக்குள்ளே சஞ்சய் காந்தியின் ஆதர்சன் நண்பன் முகமது யூனுஸ் இன் மகன் விவகாரம் வெளியே போகாமல் மறைத்தார்கள்.

ஆனால் கரண்ட் பத்திரிகை இதை மோப்பம் பிடித்து செய்தியாக்கிவிட்டது. ஒரு படி மேலே போய், அந்தப் பத்திரிகை ஆசிரியர் டிஷ்யூ கரஹா இந்திராவுக்கு நேரடி சவால் விட்டார்.

திருட்டுக்கும் இந்திராவின் மகன் சஞ்சய்க்கும் தொடர்பு இல்லை என்பதை முடிந்தால் நிறுவுங்கள்என்று அறைகூவல் விடுத்தார். ஆனால், அவருடைய அறைகூவலுக்கு யாரிடமிருந்தும் பெயருக்கு கூட பதில் இல்லை.

Rolls-Royce சம்பவம்

rolls-royce கார் தயாரிக்கும் நிறுவனத்தில் மூன்று ஆண்டு எந்த இஞ்சு எப்படி படிக்காமலே ரெக்கமண்டேஷன் மூலம் போனார். ஆனாலும் அங்கே அந்தக் காருடைய சிம்பல்களைத் திருடி, அவருடைய பெட்டியில் உயர்ரக கார்களின் எம்பலங்கள், லோகோக்கள் இருந்ததைக் கண்டு, அங்கிருந்து துரத்தி விட்டு விட்டார்கள்.

இங்கிலாந்து பயணம்

1964-ல் தாத்தா நேரு செத்தார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து போனார் சஞ்சய் காந்தி.

பொது நண்பர்கள் கண்மூடித்தனமான கார் சவாரி. இங்கிலாந்திலும் போக்குவரத்து விதிகளை இஷ்டத்துக்கு மீறினார். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த நாட்டு ஓட்டுனர் உரிமம் வாங்காமலேயே வண்டி ஓட்டினார்.

மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் இந்திய தூதரக அதிகாரிகள் கெஞ்சி கூத்தாடி விடுவிப்பார்கள். சஞ்சய்க்கும் அதைப் பற்றி கவலை இல்லை.

சஞ்சய் காந்திக்காக இந்திரா காந்தி செய்த மிகப்பெரிய தவறு மறைக்கப்பட்டது. அதாவது, அவருடைய பெயர் சஞ்சீவ் என்று தான் முதலில் பாஸ்போர்ட்டில் இருந்தது. இங்கிலாந்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு பெயரை சஞ்சய் என்று மாற்றி புது பாஸ்போர்ட் எடுத்தார்கள்.

மாருதி கார் திட்டம்

ஜப்பானில் இருப்பதைப் போல சிறிய ரக கார்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்ற அவருடைய எண்ணம் நியாயமானது. குறைந்த விலையில் எல்லோருக்கும் கார் என்பதுதான் அவருடைய தாரக மந்திரமாக இருந்தது.

ஆனால் அந்த கார் தயாரித்த கதை இந்தியாவில் யாருக்கும் தெரியாது. முதல் கார் டிவிஎஸ் கம்பெனி மாதிரி அசெம்பிள் பண்ணாங்க. அது இவர்கள் சொன்ன விலையை விட மூன்று பங்கு இருந்தது.

பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு கார் உற்பத்தி பண்ணலாம் என்று பெரும் முதலீடு முன்பணமாக பெறப்பட்டு, மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டார்கள். அதன் பிறகு எமர்ஜென்சி காலத்தில் அவை அனைத்தும் மூடி மறைக்கப்பட்டது.

இந்த மிகப்பெரிய ஊழலுக்கு துணையாக இருந்தது நம்ம சிதம்பரம் தான்.அன்று மாருதி நிறுவனத்தில் சஞ்சய் காந்தி நிர்வாக இயக்குனர். அவருக்கு மாதம் 4000 ரூபாய் சம்பளம். ரானக் சிங், வித்யாபூஷன், விஆர் மோகன் ஆகியோர் இணை இயக்குனர்கள்.

செட்டிநாட்டு அரசர் ராஜா அண்ணாமலை செட்டியார் இளைய மகன் எம் சிதம்பரம் நாரதர் நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

இப்ப தெரியுதா, காங்கிரஸ் கட்சிக்கும் சிதம்பரம் குடும்பத்திற்கும் உள்ள தொடர்புகள்?

சஞ்சய் காந்திமேனகா காந்தி

சஞ்சய் காந்தி கதை கொஞ்சம் நீளமா போகுது. எடிட் பண்ண முடியல. அவ்வளவு வேலையைப் பண்ணிப் போட்டு போயிருக்கான் அந்தப் படம் ராஸ்கல்.

ஒரு நாள் சீக்கிய பெண்ணான மேனகா, அழகிப் போட்டியில் வென்றவர். dowell katti கொண்டு விளம்பரத்தில் நடித்த அன்றைக்கு இந்தியாவே சொக்கிப் போயிருந்த ஒரு மாடல் அழகி.

திடீரென்றுஇவளைத்தான் கட்டுவேன். எனக்கு ரயில் பொம்மை வேண்டும்என்று அழுது அடம் பிடிப்பது போல, அந்தப் பொன் வேண்டும் என்று அடம் பிடித்து அந்தக் குடும்பத்தை மிரட்டி சரி செய்தார்.

வெறும் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட திருமணமாக, ஒரு நாள் இரவு கோடி இரவாக டெல்லியில் மின்னிய கவர்ச்சிகரமான விளம்பரங்கள் எல்லாம் தூக்கி மறைத்தார்கள்.

பிரதமர் வீட்டு மருமகள் ரோட்டோரமா துண்டு கட்டிக்கிட்டு இருப்பது ரசிக்கிற மாதிரி இருக்காது என்று நினைத்தார்கள்.

சஞ்சய் மீது ஒரு அப்பாவைப் போல பாசத்தைப் பொழிந்த யூனுஸ் யாரு? அந்தக் காரணத்தினால் அந்தப் பையனோட அப்பா, மேனகா காந்தியோட தாயார், மூணு பேர் தான் சாட்சிக்கு இழுத்துப் போட்டாங்க.

இதே மாதிரி தான் இந்த அண்ணன் கல்யாணமும் நடந்தது.

சஞ்சய் காந்தி இல்ல, ராஜீவ் காந்திக்கு. ராஜீவ் காந்தி கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டது என்னுடைய நண்பர் பழனி பாபா தான். அவர் இதைப் பற்றி நிறைய பேசி இருக்கிறார்.


யோகா குரு திரேந்திர பிரம்மச்சாரி

டெல்லியில் எப்போதுமே ஒரு சாமியார்களின் ஆதிக்கம் இருந்து கொண்டிருக்கும்.

டிரேந்திர பிரம்மச்சாரி என்ற ஒரு யோகா குரு இருந்தார். அவருக்கு அமெரிக்கா ஒரு விமானத்தை இலவசமாகக் கொடுக்கிறது. அதையும் வரி விளக்கு கொடுத்து வாங்கிக் கொடுத்தது இந்திரா காந்தி.

அவரது விமானத்தில் தான் சஞ்சய் காந்தி போய் செத்துப் போனான்.

இந்த யோகா சாமியார் இந்திரா காந்தி வீட்டிலேயே தங்கி, தாயோடு புழங்குவதைப் பார்த்து, பிறகு சஞ்சய் காந்திக்கு தைரியம் வந்துருச்சு.

அமெரிக்காவிலிருந்து அவர் வாங்கிட்டு வந்து, ஒழுங்கா வரி கட்டாத மூன்று சிறிய ரக விமானங்களில் ஒன்றை இவர் ஓட்டிக்கொண்டு போய் விபத்து நடந்து செத்துப் போயிட்டார்.

ஆனால் அந்த சாமியார் ஒரு நாள் இன்னொரு விமானத்தை எடுத்துட்டு முழு போதையில் பொதற்குள்ள விட்டு செத்துப் போயிட்டார்.

இது எல்லாம் அன்னைக்கு இந்திரா காந்தி உலகத்துக்குத் தெரியாமல் மறைச்சாங்க. ஆனாலும் ஒன்னு ரெண்டு யோக்கியங்கள் வெளியே வந்து சொல்லிட்டாங்க.

 
6, 🚢கப்பலோட்டிய தமிழன்னு ஸ்கூல்ல படிச்சோம்.. ஆனா கதையே வேற லெவல்!

.. சிதம்பரம் பிள்ளை கப்பலோட்டினார்.”ஸ்கூல்ல எல்லாரும் படிச்சிருப்போம்.

ஆனா எப்படி கப்பல் ஓட்டினார்ஏன் ஓட்டினார்?

அதுக்குப் பின்னாடி என்ன பிரச்சனை இருந்ததுஇதெல்லாம் கேட்டா..

அது வரலாறு சார்அடுத்த பாடத்துக்கு போலாம்!”னு சொல்லிட்டு போயிடுவாங்க! 😂

ஆனா உண்மையில் நடந்த விஷயம் ரொம்ப சுவாரஸ்யமானது.

.. சிதம்பரம் பிள்ளைதூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர்.

அந்தக் காலத்தில் இந்தியாவில் நடக்கிற வியாபாரம், அரசியல் எல்லாமே ஒன்றோட ஒன்று தொடர்புடையது என்பதை அவர் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார்.

அப்போது ஜப்பான் ஒரு சின்ன நாடு.

ஆனால் பெரிய நாடான ரஷ்யாவையே எதிர்த்து நின்றது.

சின்ன நாடு என்பதாலே சின்ன சக்தி என்று அர்த்தமில்லைப்பா!” என்று சிதம்பரம் பிள்ளை நினைத்திருக்கலாம்

அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது:

வியாபாரத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களிடம்தான் உண்மையான அதிகாரமும் இருக்கும்!”

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டுமென்றால், ஆங்கிலேயர்களுடைய கப்பல்களைத்தான் பயன்படுத்த வேண்டிய நிலைகப்பல் அவர்களுடையது.

கட்டணம் அவர்களுடையதுவிதிமுறையும் அவர்களுடையது!

அதனால் சிதம்பரம் பிள்ளை நினைத்தார்:

நம்ம பொருளை நாமே அனுப்பணும்னாநம்ம கப்பல் வேணுமே!”

அதுதான் பெரிய திருப்பம் “நம்ம கப்பல் வாங்கணும்!”

சொல்வது சுலபம்கப்பல் வாங்குவதுஅதுதான் பிரச்சனை!

இன்று கார் வாங்க EMI இருக்குஅன்று கப்பல் வாங்க?

அண்ணே.. முதல்ல கப்பல் விலை சொல்லுங்க!” “20 லட்சம்!”

சரி... நம்ம கையில எவ்வளவு இருக்கு?” “20 ஆயிரம்!” 

அப்போ கப்பலை வாங்குறதா, கப்பல் படத்தையாவது வாங்குறதா?” 

ஆனால் சிதம்பரம் பிள்ளை பின்வாங்கவில்லை.

மக்களிடமிருந்து நிதி திரட்ட முயன்றார். பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சுதேசி கப்பல் நிறுவனத்தையும் உருவாக்கினார்.


அந்தக் காலத்திலேயேஇந்தியர்களும் சொந்தமாக வியாபாரம் செய்ய முடியும்என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம்.

 பலர் உதவினர் இந்த முயற்சிக்கு பல தேசபக்தர்களும் ஆதரவாளர்களும் உதவினர்.

பாண்டித்துரை தேவர் போன்றவர்களின் பங்களிப்பும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், கப்பல் வாங்கும் முயற்சியில் முஸ்லிம் தொழிலதிபர்களின் பங்களிப்பும் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

குறிப்பாக பக்கீர் முகமது என்ற தொழிலதிபர் கப்பல் வாங்கும் முயற்சியில் முக்கியமாக உதவியதாக இந்தக் கதையில் குறிப்பிடப்படுகிறது.

அதாவது.

சுதேசி கப்பல் என்பது ஒருத்தர் மட்டும் செய்த சாதனை இல்லை. பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து செய்த போராட்டம்.

இதுதான் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம்.

இறுதியாக கப்பல் வந்தது!

பிரான்சிலிருந்து கப்பல்கள் வாங்கப்பட்டன.

1907-ல் தூத்துக்குடிஇலங்கை இடையே சுதேசி கப்பல் சேவை தொடங்கியது.

அந்தக் காலத்தில் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்துக்கு இது என்ன மாதிரி இருந்திருக்கும் தெரியுமா?

இன்றைக்கு ஒரு பெரிய நிறுவனத்துக்கு பக்கத்து தெருவில் ஒருவர் அதே தொழிலை ஆரம்பிப்பது மாதிரி

அதுவும்.“நம்ம வாடிக்கையாளர்களை நம்மிடமிருந்து அழைத்துக்கிட்டு போறாரே!” 

 கட்டணம் குறைக்கப்பட்டது!

ஆங்கிலேய கப்பல் நிறுவனத்துக்கு போட்டி வந்ததும் பயணக் கட்டணம் குறைக்கப்பட்டது.

நீங்க ஐந்து ரூபாயா?”“ஆமாம்.”“நாங்க இரண்டரை ரூபாய்!”

சுதேசி கப்பல் மக்களிடம் ஆதரவைப் பெற்றது.

போட்டி தீவிரமானதுஅதனால் ஆங்கிலேயர்களுக்கும் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இதுதான் சுதேசி இயக்கத்தின் சக்தி.

வெள்ளைக்காரன் பொருளை மட்டும் புறக்கணிப்பது போதாது; நாமும் மாற்று அமைப்பை உருவாக்கணும்!”

என்பதை சிதம்பரம் பிள்ளை செயலால் காட்டினார்.

அடுத்தது தான் கொடூரமான பகுதி..

கப்பல் ஓட்டியது ஒரு விஷயம்.ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நின்றது இன்னொரு விஷயம்.

சிதம்பரம் பிள்ளை மீது வழக்கு தொடரப்பட்டது.அவருக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இரண்டு ஆயுள் தண்டனைகள்மொத்தம் 40 ஆண்டுகள்என்று கூறப்படும் அளவுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது.

அதாவது.“ஒரு ஆயுள் போதாதா?”இல்லை!”“அப்போ இன்னொரு ஆயுளையும் சேர்த்துக்கோங்க!” 

இது சாதாரண தண்டனை இல்லைஅவரை எவ்வளவு கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று ஆங்கிலேய அரசு நினைத்தது என்பதைக் காட்டும் சம்பவம்.

பின்னர் அந்தத் தண்டனை குறைக்கப்பட்டது. ஆனால் கதை இங்கே முடியவில்லை!

சிதம்பரம் பிள்ளை கப்பல் ஓட்டியவர் மட்டும் அல்ல.

அவர் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் போராடினார்.

கூலி உயர்வு, தொழிலாளர் உரிமை போன்ற விஷயங்களில் போராடியவர்.

அதனால் அவருடைய போராட்டம் வெறும்கப்பல் வாங்கி ஓட்டின கதைகிடையாதுஅது:

வியாபாரம் + தொழிலாளர் உரிமை + சுதேசி இயக்கம் + ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம்

எல்லாம் சேர்ந்த ஒரு பெரிய போராட்டம்.அதனால்தான் அவரை நாம்

 “கப்பலோட்டிய தமிழன்

என்று நினைவுகூர்கிறோம்.

அவர் சொல்லிக் கொடுத்த மிகப்பெரிய பாடம் என்ன தெரியுமா?

நம்மை ஆளுறவனோட கப்பல்ல போறதுக்கு பதிலா.. நாமே ஒரு கப்பலை உருவாக்கலாம்!”

அதுதான் சுதேசி.அதுதான் துணிச்சல்அதுதான் .. சிதம்பரம் பிள்ளை


 7, காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்த வருண் காந்தி, பிஜேபியில் சேர்ந்தான்.

அவன் நினைத்தது நடந்துவிடவில்லை. அதற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. வரலாறு எப்போதுமே ஒருத்தனுக்கு ஆதரவாக இருக்காது.. சில நேரங்களில் அது நம்மைத் திரும்பிப் பார்த்து சிரிக்கவும் வைக்கும்!

பாபு ஜெகஜீவன் ராம் பிரதமர் பதவிக்கு வரக்கூடாது என்று இந்திரா காந்தி செய்த அரசியல் என்ன என்பதைப் பற்றி கொஞ்சம் வாசித்துவிட்டு போங்கள்.

உத்தரப் பிரதேசம், சுல்தான்பூர் தொகுதியின் எம்.பி.யான வருண் காந்தி, உத்தரப் பிரதேசத் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தனது தாயாரும் அன்றைய மத்திய அமைச்சருமான மேனகா காந்தி மூலம் பாஜகவை வலியுறுத்தி வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், பாஜக அதற்கு மறுத்துவிட்டது.

இவங்க அப்பனுக்கும்சஞ்சய் காந்திக்கும்கேட்டாங்க. அவருடைய அம்மாவான இந்திராவும் மறுத்தார்!

இந்த அரசியல் பரபரப்புக்கிடையில், வருண் காந்தி தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் எட்மண்ட்ஸ் ஆலன் என்பவர் கூறியிருந்த குற்றச்சாட்டு அப்போது அரசியல் அரங்கில் ஹாட் டாபிக் ஆனது.

எட்மண்ட்ஸ் ஆலன் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘வருண் காந்திக்கும் ஆயுதத் தரகர் அபிஷேக் வர்மாவுக்கும் தொடர்பு உள்ளது என்றும், வெளிநாட்டு அழகிகளை வருணுடன் பழகச் செய்து, அவர் அவர்களுடன் நெருக்கமாக இருந்தபோது வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்த அபிஷேக் வர்மா, அவற்றை வைத்து வருணை மிரட்டி, இந்தியப் பாதுகாப்புத் துறை தொடர்பான ரகசியத் தகவல்களைப் பெற்றிருப்பதாகவும்குறிப்பிட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகின.

கடிதம் எழுப்பிய பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த அதிர்ச்சியாக வருண் காந்தியை ஒத்த தோற்றமுடைய ஒருவர் சில அழகிகளுடன் அரை நிர்வாணக் கோலத்தில் இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

அதேசமயம், வருண் காந்தி சர்ச்சை தொடர்பான ஆவணங்கள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் 

எதிர்க்கட்சிகளிடையே இந்த விவகாரத்திற்கு மேலும் நம்பகத்தன்மை உருவானது.

ஆனால், தனது புகைப்படம் குறித்த சர்ச்சையை மறுத்த வருண் காந்தி, தன் மீது எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தக் குற்றச்சாட்டுகளில் ஒரு சதவீதத்தைக் கூட நிரூபித்தால்கூட அரசியலில் இருந்து விலகத் தயார் என்றும் கூறியதோடு, பிரசாந்த் பூஷண் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.

புகைப்படத்தில் இருப்பது வருண் காந்தியா? அல்லது அவரது புகைப்படத்தைப் போட்டோஷாப் முறையில் மாற்றி, உலவவிட்டார்களா?

இதுகுறித்து அந்தப் புகைப்படங்களை ஆய்வுக்குட்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இன்றைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், யாரை வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் பொருத்தி அவதூறு செய்துவிட முடியும்.

ஆனால், கிட்டத்தட்ட இன்றுள்ள அளவுக்கு அறிவியல் வளர்ச்சி துளியும் இல்லாத காலத்திலேயே, இப்போது நடப்பதைப் போலவே, நேரு காலத்து காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவரது மகனின் ஆபாசப் புகைப்படம் வெளியாகி சர்ச்சையானதுஅந்தத் தலைவர் யார் தெரியுமா?

பாபு ஜெகஜீவன் ராம்பாதுகாப்பு அமைச்சராக பாபு ஜெகஜீவன் ராம் இருந்த நேரம்.

இந்தியாவின் மிகப்பெரும் தலித் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்திருந்தார் அவர். எமர்ஜென்சி தோல்விக்குப் பிறகு, மீண்டும் இந்திரா காந்தி அன்றைய அரசியலில் தலையெடுக்க முயன்று வந்த நேரத்தில், அவர் பிரதமராவதற்கு முட்டுக்கட்டையாகவும், கடும் போட்டியாளராகவும் ஜெகஜீவன் ராம் இருந்தார்.

அன்றைய தலித் மக்களிடையே அவருக்கு இருந்த நற்பெயர் இந்திராவை உறுத்தியபடியே இருந்தது.

இந்திரா பிரதமராக இருந்தபோது, அவருக்கு எதிராக ஒரு கூட்டத்திற்கு அறிவிப்பு செய்தார் பாபு ஜெகஜீவன் ராம்அந்தக் கூட்டம் வெற்றியடைந்துவிடக் கூடாது என்பதற்காக, இந்தித் திரையுலகின் புகழ்பெற்ற திரைப்படமானபாபியை தூர்தர்ஷனில் ஒளிபரப்பச் செய்தார் இந்திரா என்று கூறப்படுகிறது.

மக்கள் கூட்டத்திற்குச் செல்வதை விட்டுவிட்டு, வீடுகளிலேயே முடங்கிவிட்டார்கள்!

மறுநாள் வடஇந்திய இதழ்கள் இந்திராவின் சாதுர்யத்தைப் பற்றி எழுதி, அதற்குபாபு வெர்சஸ் பாபிஎன்று தலைப்பிட்டன.

அதாவது, ஒரு பக்கம் அரசியல் கூட்டம்.

இன்னொரு பக்கம் டிவியில்பாபி’!

மக்கள் எதைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது வேறு கதை

இப்படி பாபுவின் புகழைக் குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இந்திரா ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

அவர் ஒரு பெரும் தலைவராக உருவானால், அது தனது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதுதான் இந்திராவின் எண்ணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில்தான் பாபு ஜெகஜீவன் ராமின் இமேஜை சரிய வைக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

அவரது மகன் சுரேஷ் ராம், கல்லூரி மாணவி ஒருவருடன் தனிமையில் இருக்கும் ஆபாசமான புகைப்படங்கள் தனிநபர்களிடையே உலவின.

இதைக் கேள்வியுற்ற பாபு ஜெகஜீவன் ராம் தர்மசங்கடத்திற்கு ஆளானார்.

அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்கள் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கின.

இன்றுள்ளதைப் போலமார்ஃபிங்’, ‘போட்டோஷாப்என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாத காலகட்டம் அது!

அதனால் பாபு பெரும் சங்கடத்திற்குள்ளானார்.

திட்டமிட்டு அந்தப் புகைப்படங்கள் அன்றைய பிரபல பத்திரிகைகள் அனைத்திற்கும் அனுப்பப்பட்டன.

ஆனால், தனிப்பட்ட விவகாரத்தைப் பெரிதுபடுத்த விரும்பாத சில பத்திரிகைகள் அவற்றைப் புறக்கணித்தன.

மற்ற சில பத்திரிகைகள் புகைப்படங்களின் நம்பகத்தன்மை குறித்து ஐயம் கொண்டு அவற்றைப் பிரசுரிக்கவில்லை.

இந்த நிலையில்தான்சூர்யாஎன்ற மாத இதழ் மட்டும் அந்தப் புகைப்படங்களை இரு கரங்களாலும் வரவேற்று வெளியிட்டது.

அரசியலில் மரியாதையான இடத்தில் வைத்து மதிக்கப்பட்ட பாபு ஜெகஜீவன் ராம், இதனால் பெரும் சங்கடத்திற்கு ஆளானார்.

இந்திராவின் அரசியல் எதிரியை ஒழித்துக்கட்டுவதற்காக, அன்று இந்த விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர் இந்திராவின் மருமகள்களில் ஒருவர்தான் என்று பின்னாளில் பேசப்பட்டது.

ஆம்..

சூர்யாஇதழின் ஆசிரியர் வேறு யாருமல்ல..

இதேபோன்று ஆபாசப் படச் சர்ச்சையில் சிக்கி, அரசியல் தந்திரத்தால் பழிவாங்கப்பட்டு, தர்மசங்கடத்திற்கு ஆளாகி நின்றதாகக் கூறப்படும் இதே வருண் காந்தியின் தாயாரான மத்திய அமைச்சர் மேனகா காந்திதான்!

வரலாறு சில நேரங்களில் விசித்திரமாகத் திரும்பி வந்து நம்மையே பார்த்து, “அப்போது நடந்ததை மறந்துவிட்டீர்களா?” என்று கேட்பது இப்படித்தான்!

ஒரு காலத்தில் நடந்த அரசியல் புகைப்படச் சர்ச்சை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு தலைமுறையில் மீண்டும் புகைப்படச் சர்ச்சையாகவே வந்து நிற்கிறது.

காலம் மாறுகிறது.

தொழில்நுட்பம் மாறுகிறது.

ஆனால் அரசியலில் புகைப்படமும் சர்ச்சையும் மட்டும் சில நேரங்களில் மாறாமல் தொடர்கின்றன!

 


 8,  இந்திரா காந்தியின் #நகர்வாலா_ஊழல்

இந்திரா காந்தியின் நகர்வாலா ஊழல்விடை கிடைக்காத மர்மங்கள்!

1969ஆம் வருடம் பதினான்கு தனியார் வங்கிகள் அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களால் தேசியமயமாக்கப்பட்டன.

நாட்டை சோஷலிசப் பாதையில் இட்டுச் செல்வதற்காகவும், வங்கிகள் ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேசியமயமாக்கப்பட்டன என்றும் இந்திரா காந்தி அறிவித்தார்.

ஆனால் எதிர்க்கட்சியினரும், மக்களில் பெரும்பாலோரும் தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதில் வேறு சில உள்நோக்கங்கள் உள்ளன என்று கருதினர். வங்கிகள்மீதும், வங்கிகளில் உள்ளவர்கள்மீதும் அரசாங்கமும், அரசாங்கத்தில் உள்ளவர்களும் ஆதிக்கம் செலுத்துவதற்காகவே அவை தேசியமயமாக்கப்பட்டன என்ற கருத்து நிலவியது.

இதை மெய்ப்பிப்பது போன்று நடந்ததுதான் நகர்வாலா ஊழல் என்பது.

60 லட்ச ரூபாய்... ஒரு தொலைபேசி அழைப்பு!

1971ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி புதுடெல்லி நாடாளுமன்றச் சாலையிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை கேஷியர் வேத் பிரகாஷ் மல்ஹோத்ராவிற்கு போனில் ஒரு அழைப்பு வந்தது.

போனில் பேசியது ஒரு பெண்ணின் குரல்.

அது இந்திரா காந்தியின் குரலைப் போன்றே இருந்தது. மல்ஹோத்ரா, போனில் பேசியவர் இந்திரா காந்தி என்றே நம்பினார்.

அந்தப் பெண்குரல் சொன்னது:

சகோதரா! பங்களாதேஷில் நடக்கவுள்ள ஒரு ரகசியமான பணிக்கு 60 லட்ச ரூபாய் உடனடியாகத் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை நீ எப்படியாவது ஏற்பாடு செய்ய வேண்டும். நான் ஒரு நம்பகமான ஆசாமியை அனுப்புவேன். அவன் வங்கிக்கு வெளியே சற்று தூரத்தில் காத்திருப்பான்.

அவன் உன்னிடம்பங்களாதேஷ்கா பாபுஎன்று சங்கேதக் குறியீடாக (code language) சொல்லுவான். அவன் அப்படிச் சொன்னால், நான் அனுப்பிய ஆசாமி என்று அர்த்தம்.

நீ அவனிடம்பார்-அட்-லாஎன்று சொல்ல வேண்டும். அப்போதுதான் அவன் நீ மேற்படி என்ன செய்ய வேண்டும் என்று சொல்வான்.

அவனிடம் 60 லட்ச ரூபாயைக் கொடுத்துவிடு. பணத்திற்கான ரசீதை பிரதமர் அலுவலகத்திலிருந்து பிறகு பெற்றுக்கொள்!”

அவ்வளவுதான்!

பிரதமர்தான் ஆணையிட்டார் என்று உறுதியாக நம்பிய மல்ஹோத்ரா, தனக்குக் கீழ் வேலை செய்த கேஷியரிடம் 60 லட்ச ரூபாயை ஒரு பெரிய பெட்டியில் அடுக்கிக் கட்டும்படி பணித்தார்.

அவரும் அவ்வாறே செய்தார்.

இரண்டு வேலையாட்கள் பணப்பெட்டியை வங்கிக்குச் சொந்தமான காரில் ஏற்றினர். மல்ஹோத்ரா காரில் ஏறிக்கொண்டார். அவரே டிரைவ் செய்தார்.

சற்று தூரம் சென்றபின் உயரமான, சிவப்பான ஓர் ஆசாமி காரைக் கையசைத்து நிறுத்தினார்.

அவர்தான் ருஸ்டம் ஷோரப் நகர்வாலா!

அவர் சாதாரண மனிதரல்ல.

பிரிட்டிஷ் ராணுவத்தில் உயர் அதிகாரியாக வேலை பார்த்தவர். உளவுத்துறையில் (Intelligence Wing) பணியாற்றியவர்.

அவர்பங்களாதேஷ்கா பாபுஎன்று மல்ஹோத்ராவிடம் கூறினார்.

புரிந்துகொண்ட மல்ஹோத்ரா பதிலுக்குபார்-அட்-லாஎன்று சொன்னார்.

அவர் நகர்வாலாவைக் காரில் ஏற்றிக்கொண்டார்.

கார் சர்தார் படேல் சாலையும், பஞ்சசீல சாலையும் சந்திக்கும் இடம்வரை சென்றபோது நகர்வாலா காரை நிறுத்தச் சொன்னார்.

மல்ஹோத்ராவும் அவ்வாறே செய்தார்.நகர்வாலா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டார்.அவர் மல்ஹோத்ராவிடம்,

நீங்கள் பிரதமர் பங்களாவுக்குச் சென்று ரசீதைப் பெற்றுக்கொள்ளுங்கள்!”

என்று கூறினார்.அவ்வளவுதான்... பணம் போய்விட்டது!

ரசீது வாங்கப் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மல்ஹோத்ரா காரை ஓட்டிக்கொண்டு பிரதமரின் இல்லத்திற்குச் சென்றார்.

அங்கே பிரதமர் இல்லை.

அங்கிருந்த சிலர், பிரதமர் நாடாளுமன்ற இல்லத்தில் (Parliament House) இருப்பார் என்று கூறினர்.

மல்ஹோத்ரா அங்கேயும் சென்று பார்த்தார்அங்கேயும் பிரதமர் இல்லை.

உடனே மல்ஹோத்ரா பிரதமர் அலுவலகம் சென்று, அங்கிருந்த பிரதமரின் தனிச்செயலாளரான திரு. P.N. ஹக்சரை அணுகி, தான் கொடுத்த பணத்திற்கு ரசீது கேட்டார்.அதற்கு ஹக்சர்,“ரசீதா? எதற்கு?”என்று கேட்டார்.நடுங்கிப்போன மல்ஹோத்ரா நடந்ததைக் கூறினார்.

ஹக்சர், “மல்ஹோத்ரா அவர்களே! பிரதமர் அவ்வாறு உங்களிடம் ஏதும் கூறவில்லை. நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள்! நீங்கள் நேராக போலீஸிடம் சென்று புகார் அளியுங்கள்!”

என்று அறிவுரை கூறினார்.

படபடத்துப்போன மல்ஹோத்ரா நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார்.

இதற்கிடையில் நகர்வாலா..

மல்ஹோத்ரா போலீஸுக்குப் போக, நகர்வாலா என்ன செய்தார்?

நகர்வாலா ஒரு டாக்ஸியில் பணப்பெட்டியை ஏற்றிக்கொண்டு நேராக டிபென்ஸ் காலனிக்குச் சென்றார்.

அங்கு இறங்கி வேறு ஒரு டாக்ஸியைப் பிடித்து, பணப்பெட்டியுடன் ராஜிந்தர் நகருக்குச் சென்றார்.

அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் சூட்கேஸ் ஒன்றைக் கடன் வாங்கிக்கொண்டு, பணப்பெட்டியுடன் நிக்கல்சன் ரோடு சென்றார்.

பிறகு ரூட்டை மாற்றி டிபென்ஸ் காலனிக்கு வந்து, நண்பர் ஒருவர் வீட்டில் பணப்பெட்டியை இறக்கினார்.

பின்னர் நகர்வாலா பார்சி தர்மசாலாவில் உள்ள தனது அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.

ஆனால் போலீஸ் அவருக்கு ஓய்வு கொடுக்கவில்லை!

ஆபரேஷன் தூஃபான்!”

மல்ஹோத்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் உடனே விசாரணையைத் துவக்கியது.

பிரதமர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மின்னல் வேகத்தில் விசாரணை நடந்தது.

D.K. காஷ்யப் என்ற போலீஸ் உயரதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

அவருக்கு உதவ ஹரிதேவ், A.K. கோஷ் என்ற இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்தத் துப்புத் துலக்குவதற்கு ஆபரேஷன் தூஃபான் என்று பெயரிடப்பட்டது.

இரண்டு மணி நேரத்திற்குள் நகர்வாலாவையும், பணப்பெட்டியை ஏற்றிச்சென்ற டாக்ஸி டிரைவரையும் போலீஸார் பிடித்துவிட்டனர்.

அவர் நகர்வாலா எங்கெல்லாம் சென்றார் என்று கூறிவிட்டார்.

இதற்குள் வங்கி மோசடிச் செய்தி டெல்லி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

நகர்வாலா டிபென்ஸ் காலனியில் யார் வீட்டில் பணப்பெட்டியை இறக்கினாரோ, அவர் தன் வீட்டில் பெட்டி இருக்கிறது என்று போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.

போலீஸார் விரைந்து வந்து பணப்பெட்டியைக் கைப்பற்றினர்.

அதில் முழுப் பணமும் இருந்தது.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் பார்சி தர்மசாலாவுக்குச் சென்று நகர்வாலாவைக் கைது செய்தனர்.

எல்லாம் பத்து மணி நேரத்திற்குள் நடந்துவிட்டது!

பத்து நிமிட நீதிமன்ற விசாரணை!

இரண்டு நாட்களுக்குப் பிறகு நகர்வாலா மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கு விசாரணை பத்து நிமிடங்களே நீடித்தது.

அது நீதிபதி அறையில் ரகசியமாக விசாரிக்கப்பட்டது. வழக்கறிஞர்களோ, பார்வையாளர்களோ அனுமதிக்கப்படவில்லை.

நகர்வாலா தனக்கு அந்தச் சமயத்தில் தோன்றிய திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதாகவும், தொலைபேசியில் பெண்குரலில் இந்திரா காந்தி போல் பேசியது தான் தான் என்றும் ஒப்புக்கொண்டதாகவும் நீதிபதி கூறி, உடனேயே தீர்ப்பை வாசித்தார்.

நகர்வாலாவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் நகர்வாலா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்!

சில நாட்களுக்குப் பிறகு நகர்வாலா செஷன்ஸ் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

தன்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சரியான முறையில் விசாரிக்கப்படவில்லை என்றும், வழக்கை மறுவிசாரணை (Retrial) செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறினார்.

வழக்கை செஷன்ஸ் நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

ஆனால் நகர்வாலா, தனக்குத் தண்டனை வழங்கிய நீதிபதியே இந்த வழக்கை மறுவிசாரணை செய்யக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதை நிராகரித்த செஷன்ஸ் நீதிபதி நகர்வாலாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

அடுத்த மாதம் நகர்வாலா செஷன்ஸ் நீதிமன்றத்தில் வேறு ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமை கேஷியர் மல்ஹோத்ராவைக் கோர்ட்டில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் கோர்ட்டார் அவரது வேண்டுகோளின்மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

விசாரணை அதிகாரியின் மர்ம மரணம்!

இந்த வழக்கைத் துப்புத் துலக்கிய போலீஸ் அதிகாரி காஷ்யப், தனது தேனிலவிற்காக நவம்பர் 20, 1971இல் காரில் சென்றுகொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சிறையில் வாழ்நாளைக் கழித்த நகர்வாலா உடல்நலம் குன்றி, திகார் சிறை மருத்துவமனையில் 1972 பிப்ரவரி மாதம் அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு டெல்லியில் உள்ள G.B. Pant மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மார்ச் 2ஆம் தேதி 1972 அன்று நகர்வாலா மயங்கி விழுந்தார்.

சிறிது நேரத்தில் அவர் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

அவரது மரணத்துடன் இந்த ஊழல் வழக்கும் முடிவுக்கு வந்தது.

ஆனால் மர்மங்கள் மட்டும் முடியவில்லை!

இருந்தாலும் இந்த வழக்கில் விடை கிடைக்காத சில மர்மங்கள் இன்றுவரை நீடிக்கின்றன.

காசோலையோ, அடமானமோ இல்லாமல், மல்ஹோத்ரா எப்படி 60 லட்ச ரூபாயை நகர்வாலாவிடம் அளித்தார்?

இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் பல தடவை பிரதமர் அலுவலகத்திலிருந்து மல்ஹோத்ராவிற்கு பணம் அனுப்பும்படி உத்தரவு வந்து, அவர் கொடுத்துள்ளதாக சில வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை?

மல்ஹோத்ரா போனில் பேசியது இந்திரா காந்திதான் என்று எப்படி உணர்ந்தார்?

ஆண் ஆன நகர்வாலாவால் எப்படி பெண் குரலில் இந்திரா காந்தி போல் பேச முடிந்தது?

கோர்ட்டில் நீதிபதி நகர்வாலாவை ஏன் தன் அறையில் கூப்பிட்டு விசாரித்தார்? வழக்கறிஞர்கள் ஏன் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை?

வழக்கை அவசர அவசரமாக விசாரித்து உடனேயே தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன?

போலீஸ் அதிகாரி காஷ்யப் மர்மமான முறையில் கார் விபத்தில் இறந்தது பற்றி ஏன் முறையான விசாரணை நடத்தப்படவில்லை?

நகர்வாலா மரணத்திலும் மர்மம் உள்ளது என்று பலர் கூறினர். அதுபற்றி விரிவான விசாரணை ஏன் நடத்தப்படவில்லை?

நகர்வாலா இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பிரதமரின் தூதுவராக சென்றுள்ளார் என்று சிலர் கூறினர். இது உண்மையா?

இன்னொரு அதிர்ச்சித் தகவல்!

புது டெல்லி பார்லிமென்ட் ஸ்ட்ரீட் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.

தலைமைக் காசாளர் மல்ஹோத்ராவுக்கு ட்ரிங்... ட்ரிங்...

தொலைபேசியை எடுத்தவர் ஆடிப்போய் விட்டார்.

எதிர்முனையில் பிரதமர் இந்திரா காந்தி!

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்துக்காக அவசரமாக அறுபது லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. பணத்தை எடுத்துக்கொண்டு உடனே வரவும்!”

அது 1971 மே 21.

பிரதமர் இந்திரா காந்தியின் குரலில் பேசியவர் நகர்வாலா என்பவர்.

தமிழ்ச்சினிமாவில் வருவது போல் அவர் ஒரு பாஸ்வேர்ட் சொல்ல, மல்ஹோத்ரா பதில் பாஸ்வேர்ட் கூறிவிட்டுப் பணம் கொடுத்தார்.

எவ்வித நடைமுறைகளும் இன்றிப் பணம் பெறப்பட்டது.

பின்னர் ரசீது வாங்க பிரதமரின் வீட்டிற்குப் போனார் மல்ஹோத்ரா.

அவருக்கு அங்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.பிரதமர் எந்தப் பணமும் கேட்கவில்லை!மிமிக்ரி குரல் மோசடி மூலம் பணம் பெறப்பட்டுள்ளது.

போலீசுக்குப் புகார் பறந்தது.ஒரே நாளில் நகர்வாலா கைது செய்யப்பட்டார்.

அவர் முன்னாள் ராணுவ கேப்டன். இந்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி.அவரிடமிருந்து பெரும்பாலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மல்ஹோத்ராவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டார்.

பத்தே நிமிட கோர்ட் விசாரணைக்குப் பிறகு நான்காண்டு கால தண்டனை பெற்ற நகர்வாலா சிறையிலேயே மரணமடைந்தார்.

நகர்வாலா வழக்கைப் புலன்விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் காஷ்யப் விபத்தில் இறந்தார்.

காஷ்யப் மரணத்தை விசாரிக்க ராமநாதன் என்பவர் வந்தார்.

விசாரணை சம்பந்தமாக டெல்லியிலிருந்து ஆக்ரா போகும்போது லாரி மோதி அவரும் மரணமடைந்தார்.

இந்த ஊழலை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஜோதிர்மயி பாசு.

அவசரநிலைக் காலத்தில் அவரைக் கைது செய்து சித்திரவதை செய்தார்கள். அவரும் குற்றுயிரும் குலை உயிருமாக வெளியே வந்து இறந்தார்.

ஜனதா ஆட்சியிலும் விசாரணை!

1977ல் ஜனதா ஆட்சியின்போது, நகர்வாலா ஊழல் குறித்து விசாரிக்க பி. ஜகன்மோகன் ரெட்டி கமிஷன் அமைக்கப்பட்டது.

பெரியளவில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

நகர்வாலாவுக்கும் இந்திரா காந்திக்கும் அறிமுகம் இருந்தது என்பதும், சிறையிலிருந்தபோது நகர்வாலா எழுதிய கடிதத்தில், நாட்டின் நலன் கருதி சில உண்மைகளைச் சொல்ல விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்ததும் ஊடகங்கள் மூலமாக வெளிவந்தன.

பின்னாட்களில் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் மாருதி கார் கம்பெனி, “மாருதி உத்யோக்ஆனது.

மல்ஹோத்ரா அதில் நிர்வாக இயக்குநர் ஆனார் என்றும் கூறப்படுகிறது.

ஆக மொத்தம்.ஒரு தொலைபேசி அழைப்பு.ஒரு பெண் குரல்.ஒரு பாஸ்வேர்ட்.

60 லட்ச ரூபாய்.ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி.பத்து நிமிட நீதிமன்ற விசாரணை.விசாரணை அதிகாரியின் மரணம்.நகர்வாலாவின் மரணம்.

அதன்பிறகும் எழுந்த ஏராளமான கேள்விகள்..

இவை எல்லாவற்றுக்கும் தெளிவான விடை கிடைத்ததா?அல்லது...

நகர்வாலா ஊழல்இந்திய அரசியல் வரலாற்றில் விடை கிடைக்காத மர்மமாகவே இருந்து விட்டதா?

அதுதான் இன்றுவரை பலரையும் யோசிக்க வைக்கும் கேள்வி!



 



Comments

Popular posts from this blog

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

தேர்தல் வரலாறு

சமூகவியல், சாதிய கட்டமைப்பு , Lion Raja Ganesan