இதுதான் மஹா..பாரத கதை Lion Raja Ganesan

 


மகாபாரதக் கதையும் அதை எழுதி பரப்பியவர்களின் அறிமுகமும்!

பராசர மகரிஷியின் மகனான வேத வியாசர், எப்படியாவது இந்த பூலோகத்திற்கு மகாபாரதக் கதையை எழுதிப் பரப்ப வேண்டுமென்று பிரம்மனை வேண்டி நிற்கிறார்.

கல்விக் கடவுள் சரஸ்வதிக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்த பிரம்மன், "யார்ரா இந்த நேரத்தில்?" என்று வியாசருக்குக் காட்சி தந்து, "என்னப்பா உனக்கு பிரச்சினை?" என்று கேட்கிறார்.

"மகாபாரதக் கதையை நீங்கள்தான் எழுத வேண்டும்" என்று சொல்கிறார் வியாச முனிவர்.

"மகாபாரதத்தை என்னால் எழுத முடியாது. அது பெரிய கதை, ரொம்பக் கதாபாத்திரங்கள் இருக்கும். அப்பப்போ அமெரிக்க மாப்பிள்ளை மாதிரி கிருஷ்ணன் வந்து போவான். அதை எழுதுற அளவுக்கு திறமையும், தகுந்த பேனாவும் (தந்தமும்) விநாயகனிடம் தான் இருக்கு. நீ அவனைப் பிடிச்சு எழுதிக்கோ" என்று சொல்லிவிடுகிறார்.

உடனே வியாசர், சித்தி-புத்தியோடு இருந்த விநாயகரைத் தன் தவத்தால் அழைக்கிறார். "இந்த நேரத்தில் எவன்டா கதவைத் தட்டுனது?" என்று விநாயகர் வியாசருக்குக் காட்சி தருகிறார். காட்சி தந்த விநாயகர், "என்ன விஷயம்ப்பா? எதுவாக இருந்தாலும் சீக்கிரமாகச் சொல்லிட்டுப் போ, எனக்கு வேலையிருக்கு" என்று சொல்ல.

அதற்கு வியாசர், "மகாபாரதத்தை எழுதுற தகுதி உங்களுக்குத்தான் இருக்கு என்றும், அதை எழுதக்கூடிய எழுதுகோல் உங்களிடம் தான் இருக்கிறது என்றும் பிரம்மன் சொன்னார். அதனால் எனக்கு அதை கதையாக எழுதித் தர நீங்கள்தான் உதவ வேண்டும்" என்று கேட்கிறார்.

உடனே விநாயகர், "சரி சரிநான் எழுத ஆரம்பித்தால் என்னுடைய பேனா நிற்காது. அதனால் நீ இடைவிடாமல் சொல்லிக்கொண்டே இரு, நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன்" என்று நிபந்தனை விதிக்கிறார். உடனே எழுதத் தேவையான பொருள்களை எடுத்துவைத்துக்கொண்டு, ஆளுக்கு எதிரெதிரே உட்கார்ந்து எழுதியிருக்கிறார்கள்.

இப்படித்தான் மகாபாரதம் எழுதி முடிக்கப்பட்டது!

மகாபாரதக் கதையை ஏற்கனவே எழுதி முடிச்சு..

அந்த மகாபாரதக் கதையைத் தன் மகன் சுகப்பிரம்ம ரிஷிக்குச் சொல்லியிருக்கான் வியாசர்.

வியாசரோட மகன் கந்தர்வர்களுக்கும், ராட்சதர்களுக்கும் சொல்லியிருக்கான்.

தேவர்களுக்கு நாரதர் சொல்லியிருக்கான். இந்த நாரதப் பயலுக்கு ஏன் சொன்னான்னு தெரியல.

கடைசியாக மனிதகுலத்துக்கு வியாசரோட சீடப்புள்ள வைசம்பாயனர் சொல்லியிருக்கான். இப்படி ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பய சொல்லி...

இப்போ இந்த 21ஆம் நூற்றாண்டுல இந்த மகாபாரதக் கதையை தெரிஞ்சவங்களுக்கு தெரியாதவங்களுக்கு நான் சொல்லியிருக்கேன்.

சண்டை ஆனதும் ஒரு பக்கம் பைபிள் தூக்கிட்டு ஓடுறானுங்க. ஒரு குரூப் யாருக்குடா நெத்தில பெரிய தழும்பு விழுதுனு போட்டி போடுறானுங்க. அதனால இந்து மக்களே, நீங்களும் உங்க நீதி நூலைப் பத்தி தெரிஞ்சிக்கோங்க.

உண்மையிலேயே உங்களுக்கு சிந்திக்கிற திறமை இருந்துச்சுனா, படிச்சிட்டு கேள்வி கேளுங்க. அதோட நிக்காம நாலு பேருக்கு இது அப்படித்தான் இருக்கு, அது இப்படித்தான் இருக்குனு பரப்புங்க.

கோபப்பட்டு திட்டுறது மட்டும்கூடாது.

படிச்சு முடிச்சதும், “என்னடா இது இவ்வளவு கேவலமான தனமா இருக்கு?”னு இதை தூக்கிச் சுமக்குற காவி சங்கிகளுக்கு புத்திமதி சொன்னாலும் சரி... கடவுள் என்கிற ஒண்ணு இல்லைடா என மத்த ரெண்டு பக்கிகளைக் கூப்பிட்டு புத்திமதி சொன்னாலும் சரி... ரெண்டும் வரவேற்கத்தக்கதுதான்.

வாங்க, தொடரத் தொடரலாம்..

**கங்காதேவியை இன்னும் எத்தனை பேரு வச்சிருப்பாங்களோ.? 1

சாந்தனுவும் கங்காவும்இதுதான் மகாபாரதக் கதை – 

பரத நாட்டுப் பிரதீபன் மன்னனின் நீண்டநாள் போராட்டத்துக்குப் பிறகு சாந்தனு என்கிற ஒரு பையன் பிறந்தான்.

சாந்தனு வளர்ந்து வாலிபம் ஆனதும், ஒரு தேவ மங்கையைக் கட்டுவான்னு ஜோதிடக் கட்டம் சொல்லுது.

ஒருநாள் சாந்தனு ஆத்தோரமா நடந்து போகும்போது கண்ணுல ஒரு பொண்ணு படுது. பார்த்த உடனே அவனுக்கு மூடு வந்து, அவள்கிட்ட போயி, “கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன். ஒத்தக் காலுல நிப்பேன்னு சொல்லிட்டான்.

அவளும், “நான் கட்டிக்கிறேன். ஆனா நான் என்ன பண்ணாலும் நீ கண்டுக்கக் கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா ஆர்டர் போட்டாள்.

இவனும் சரின்னு கட்டிக்கிட்டான்.

கொஞ்ச நாள் போராட்டத்துக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துச்சு. சாந்தனு சந்தோஷத்துல துள்ளிக் குதிக்கிறான்.

ஆனா கங்கா, பிறந்த குழந்தையைத் தூக்கிக்கிட்டு போயி கங்கை ஆத்துல வீசிட்டா.

அவ என்ன பண்ணுனாலும் கேள்வி கேட்கக் கூடாதுனு ஆர்டர் போட்டதால இவனும் பார்த்துட்டு கம்முனு இருந்துட்டான்.

குழந்தை பிறக்கப் பிறக்க வரிசையா ஏழு குழந்தைகளையும் ஆத்துல வீசிப்புட்டே இருக்கா.

ஒவ்வொரு டைமும் சாந்தனு பார்த்துட்டு கோபத்தை அடக்கிட்டு கம்முன்னு இருந்துட்டான்.

அப்புறம் எட்டாவது குழந்தை பிறக்குது. அதையும் ஆத்துல வீச கிளம்பிட்டா.

இந்த முறை இவனால் விட முடியல.

ஏய்.. கிறுக்கு! உனக்கு மனசாட்சின்னு ஒன்னே இல்லையா? பிறக்குற குழந்தைகளை எல்லாம் இப்படி ஆத்துல போட்டு கொல்றியே!”னு கோபமா திட்டி, ஆத்துல போடப் போன குழந்தையை அவகிட்ட இருந்து பிடிச்சிட்டான்.

அவளுக்கும் கோபம் வந்துருச்சு.

நான் என்ன செஞ்சாலும் கேள்வி கேட்கக் கூடாதுன்னு நீ வாக்குக் கொடுத்தது மறந்துருச்சாடா மக்குப் பயலே?”னு திட்டிட்டு,

நீ முதல்ல நான் யாருன்னு தெரிஞ்சிக்கோ. நான்தான் தேவர்கள், முனிவர்கள் போற்றும் கங்காதேவி.

ஒரு மகாமுனிவர் விட்ட சாபத்தால ஏழு குழந்தைகளைப் பெத்து ஆத்துல வீசினேன். அவங்க எல்லாம் முனிவர்களாக மாறி ஆத்துக்குள்ள தவம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

இந்த எட்டாவது பிள்ளையையும் ஆத்துல போடும்போது நீ தடுத்துட்ட. நான் போடுறதை நீ தடுத்ததால உனக்கு இனி  நீ என்னைய போடுறதுக்கு முடியாது  -க்கிற பாக்கியம் இல்லை.

உனக்கு மேட்டர் ஆசை போயி குழந்தை ஆசை வந்துருச்சு. இனி உன்கூட சேர்ந்து வாழ முடியாது.

இந்த எட்டாவது குழந்தைக்கு தேவவிரதன் என்று பேரு வச்சு, கொஞ்ச காலம் நான் வளர்க்கிறேன். இவன் வருங்காலத்தில் பீஷ்மன் என்று போற்றப்படுவான்னு சொல்லிட்டு குழந்தையைத் தூக்கிக்கிட்டு மறைஞ்சுட்டா.

சாந்தனு மன்னன் சோகமா,

இந்த கிறுக்கு.. இவ்வளவு நாளா நம்மளை ஏமாத்திட்டாளே!”னு புலம்பிட்டே அரண்மனைக்குத் திரும்பிட்டான்.

குறிப்பு: இந்தக் கங்காதேவிதான் சிவனின் இரண்டாவது பொண்டாட்டி, பார்வதியோட சக்களத்தி.. இந்து புராணத்துல பொண்டாட்டிகளை மாத்தி மாத்தி விட்டுருவாங்க போல. இந்து கடவுளைப் பற்றிய புராணம் முழுக்க இதே மாதிரி கதைகள்தான் இருக்கு!

மச்சகந்தி எனும் சத்தியவதி, மீனின் மகள்சாந்தனுவின் இரண்டாவது பொண்டாட்டி –2

அதிரிகைங்கிற பொண்ணுக்கு ஒரு முனிவர் சாபம் விட்டதுனால, அவ மீனாகப் பிறந்து கங்கை ஆத்துல நீந்திக்கிட்டு இருக்கா.

எவன் பார்த்த வேலையோ, அந்த மீனுக்குக் கர்ப்பம் ஆகி பிறந்த குழந்தைதான் இந்த மச்சகந்தி என்கிற சத்தியவதி.

அவளைத் தூக்கிட்டு போயி ஒரு பரிசல் ஓட்டுறவன் வளர்க்குறான்.

மீனுக்குப் பிறந்ததால மச்சகந்தி மேல எப்பவுமே மீன் வாடை அடிக்குமாம்.

ஒரு டைம் மச்சகந்தி பரிசலுல ஆத்துல போயிட்டு இருக்கும்போது அந்தப் பக்கமா வந்த பராசர முனிவர்,

எம்மா, என்ன அந்தக் கரையில இறக்கிவிட்டுரும்மா?”னு பரிசல்ல ஏறுறான்.

ஏறுனவன் சும்மா இல்லாம,

எம்மா, நீ ரொம்ப அழகா இருக்க. உன்ன ஒரு தடவை... (I mean, இங்கேயே காந்தர்வணம் பண்ணிக்கலாமா?)”னு கேக்குறான்.

நான் வேணா உன்மேல அடிக்கிற மீன் வாடையை சென்ட் வாசனையா மாத்துற வரம் தர்றேன்னு சொல்றான்.

அதுக்கு இவ, “குழந்தை உண்டானா என்ன பண்றது?”னு கேக்குறா.

பிறக்கிற குழந்தையை காட்டில விட்டுட்டு மறுபடியும் கன்னிப் பெண்ணா மாறுற வரம் தர்றேன்னு சொல்லிட்டு, பரிசல்ல ஏறுனவன் அவ மேலயும் ஏறிட்டான்.

அவளுக்கும் மீன் வாடை போயி சென்ட் வாசனை கிடைச்சது. கூட ஒரு குழந்தையும் கிடைச்சது.

முனிவன் சொன்ன மாதிரி பிறந்த குழந்தையைத் தீவுல விட்டுட்டா.

குழந்தையைத் தீவுல விடும்போது அந்தக் குழந்தை,

நீ எப்ப என்ன நினைச்சுக் கூப்பிட்டாலும் நான் உன் முன்னாடி வந்து நிற்பேன் தாயேனு சொல்லிச்சு.

சில நாட்களுக்குப் பிறகு...

சாந்தனு மன்னன் ஆத்தோரமா போகும்போது சென்ட் வாசனை வருது.

இவனும்எங்கிருந்து டா வருது?”னு மோப்பம் பிடிச்சிட்டே போறான்.

ஒரு பரிசல்ல மச்சகந்தி உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்துட்டான்.

பார்த்த உடனே அவ அழகுல மயங்கி, மூடாகி,

கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்னு அவகிட்ட சொல்லியிருக்கான்.

அதுக்கு அவ, “என்னைக் கட்டணும்னா எங்க அப்பன்கிட்ட போயி பொண்ணு கேளுனு சொல்லிட்டா.

பீஷ்மர் பிறந்த கதை-3

முன்னொரு காலத்துல சேதி தேசத்தை உபரிச்சரவசு என்ற பூர்வ வம்சத்து மகாராஜன் ஆண்டு கொண்டு இருந்தான். அவனை வாசு என்று கூப்பிடுவாங்க. வாரேன்னு வந்துட்டா போதும், நல்லா சண்டை போடுவோம். இவனை ஒரு பயலும் ஜெயிக்க முடியாது. அப்படி இருக்கிறவன், திடீர்னு ஒரு நாள் கையில் பிடிச்சுக்கிட்டு இருந்த ஆயுதத்தை கீழே போட்டுட்டு, ஒரு கல்லு மேல உட்கார்ந்து தவம் செய்ய ஆரம்பிச்சிட்டான்.

இவன் பண்ணுன தவத்தைப் பார்த்து, இவன் இந்த மாதிரி தவம் பண்ணுனா நம்ம தேவலோகத்தை வாங்கி, நம்ம ரம்பா, ஊர்வசி, மேனகையப் பூரா சாப்பிட்டுருவான்னு பயந்து, இந்திரனும் தேவர்களும் வாசுவோட தவத்தை எப்படியாவது டிஸ்டர்ப் பண்ணி கெடுக்கணும்னு முடிவு பண்ணி, இந்திரனும் தேவர்களும் அவன் தவம் பண்ணுற இடத்துக்கே வந்துட்டாங்க.

கண்ண மூடி தவம் செஞ்சுகிட்டு இருந்த வாசுவின் பக்கத்துல போன இந்திரன், “அடப்பாவி! உனக்குத்தான் ஒரு ராஜ்யத்தை கொடுத்து ராஜாவா ஆண்டுக்கிட்டு இருக்கியே. அப்புறம் ஏன்டா எங்களை வந்து டிஸ்டர்ப் பண்ற? தவத்தை கலைச்சிடுடா. நான் உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன்” அப்படின்னு ஒரு வரம் கொடுக்கிறான்.

“இதை வச்சு நீ யார வேணா கண்ட்ரோல் பண்ணலாம். பத்தலாட்டம்! உனக்கு இன்னொரு ஏரோபிளேனும் குடுக்கிறேன். அதை வச்சு நீ வானத்துக்கும் பூமிக்கும் எங்க வேணாலும் போயிட்டு வரலாம்” அப்படின்னு சொல்றான்.

வாயைப் பொளந்து ஆச்சரியமா பார்த்த அந்த வாசு, மந்திரக் கோலும் விமானமும் கொடுத்த இந்திரனையே ஹக் பண்றான், கட்டிப்பிடிக்கிறான். “டான்ஸ்” சொல்லி மேலே வைத்து அனுப்பி வைத்துவிட்டான்.

உடனே அந்த விமானத்தில் ஏறி, மந்திரக் கோலோட அவன் நாட்டைப் பூரா சுத்திப் பார்க்கிறான். ஆறடி மந்திரக் கோல் அவனால தூங்க முடியல.

இந்திரன் கொடுத்த மந்திரக் கோலுக்கு ஒரு விழா எடுக்கிறான். அந்த சமயம் சேதி தேசத்துல சுத்திமதி என்கிற நதி நாடு பூராவும் ஓடிக்கிட்டு இருந்தது.

இந்த நதியோட அழகுல மயங்குன பர்வதம் என்ற மலைக்கு, சுத்திமதி நதி மேல ச*** ஃபீல் அதிகமாகி, அந்த நதியை எல்லாம் அணைச்சுக்கிட்டு மேட்டர் பாத்துட்டு இருந்தது. இதனால் நதி எங்கேயும் போகாம, இப்ப கர்நாடகா கிட்ட காவேரி லாக்கான மாதிரி, சுத்திமதி நதி பர்வதமலை காதல்ல லாக்காகி, சேதி தேசத்துக்கு தண்ணி வராமல் இருந்தது. அதாவது காவேரி இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வராத மாதிரி நினைச்சுக்கோங்க.

இதைக் கேள்விப்பட்ட வாசு, நேரா அந்த மேட்டர் நடக்கிற மலைக்கு போயிட்டான்.

“என்ன திமிரு? காமக்கொடூர மழையை ஒரு நதியவே ரேப் பண்ணிக்கிட்டு கிடக்க!” அப்படின்னு சொல்லி, மந்திரக் கோலை வச்சி அந்த மலை மேல ஒரே அடி. மலை உடைஞ்சு போச்சு. நதி நார்மலா ஓட ஆரம்பிச்சிருச்சு.

தன்னை ஒரு ரேபிஸ்ட்டிடமிருந்து காப்பாத்துன வாசு மன்னனைப் பார்த்து நதி, “வாசு, ரொம்ப தேங்க்ஸ். நீ வரலைன்னா இந்த மலை என்னையே போட்டுக் கொன்னுருப்போம். நல்ல நேரமா வந்து காப்பாத்திட்டே” அப்படின்னு சொல்லுச்சு.

அந்த நதி, “அந்த மலை என்னைய மேட்டர் பண்ணதுல நான் கர்ப்பம் ஆயிட்டேன். அதுல ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் வயித்துல இருக்கு. இந்த ரெண்டு குழந்தைகளையும் உன்கிட்ட ஒப்படைக்கிறேன். பெண் குழந்தையை கிரிகை என்று பெயர் வைத்து, நீ கல்யாணம் பண்ணி அவளை வச்சுக்கோ. ஆண் குழந்தையை கிருபன் அப்படின்னு பெயர் வச்சு, அரசபையில் நல்லா பொறுப்பா கொடுத்து, உன் கூடவே வச்சுக்கோ” அப்படின்னு சொல்லுச்சு.

சரின்னு ரெண்டு குழந்தைகளையும் வாங்கிட்டு போயி வளர்த்தான். வழக்கம் போல, ஆண் குழந்தை பிறந்ததும் இளவரசன் ஆகிவிட்டான். பெண் குழந்தை வளர்ந்ததும் கல்யாணம் முடிச்சு பொண்டாட்டி ஆகிட்டாள்.

அது ஒரு மார்கழி மாசமா இருக்கும் போல. ஒரு நாள் அந்த ஆற்றுல குளிச்சு முடிச்சு, மயிருக்குச் சாம்பிராணி போட்டு அழகா உட்கார்ந்து இருந்த கிரிகையைப் பார்த்து ரொம்ப மூடான வாசு, “என்னடி, ரொம்ப அழகா இருக்கு” என்று தொடையைத் தட்டி, பின்னாடி தொடையைத் தடவும் போது, வாசுவோட முன்னோர்கள் ட்ரெயின் ஒரு நாலஞ்சு பேர் முன்னாடி தோன்றி,

“டேய் வாசு! நீ பண்றது சரி இல்ல. ஒழுங்கா வேட்டைக்கு போ. அடுத்து வந்து இதெல்லாம் பண்ணிக்கோ. சத்திரியனுக்கு கடமைதான் முக்கியம்”னு சொல்ல.

“அட போங்கடா தாய்வழிகளா! கைக்கு எட்டினது நடு விரலுக்கு ஏற்றலையே” அப்படின்னு திட்டிக்கிட்டே வேட்டைக்குப் போயிட்டான்.

காட்டுல முயல், மான், பன்னி, மாடு வேட்டையாடுன கலை போல, ஒரு ஆலமரத்துக்கு அடியில் படுத்து ரெஸ்ட் எடுத்திருக்கான்.

அப்ப திருகையோட ஆரம்பிச்சு வச்ச அந்த ச*** ஞாபகம் வர, மைண்டுக்கு வர அவளை நினைத்து ரொம்ப மூடாகி, கையில் பிடிச்சிருந்ததில் மூணு டிராபிக் ஆயிடுச்சு.

“என்னடா, அதுக்குள்ள இப்படியா? இதை வேஸ்ட் பண்ணக் கூடாது” அப்படின்னு, கிரிகையோட அதுல சேர்த்து குழந்தை ரெடி பண்ணணும்னு நினைச்சு, வாசு சுத்திமுத்தி பார்க்கிறான்.

அப்ப ஆலமரத்துக்கு மேல ஒரு பறவை, இவன் செஞ்சிட்டு இருந்த கன்றாவியெல்லாம் பார்த்துட்டு இருந்துச்சு.

இந்தப் பறவையைப் பார்த்து வாசு, “ஏன் பச்சி ராஜா, ஏதோ தெரியாம இப்படி லீக் ஆகிப் போச்சு. எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?” அப்படின்னு கேட்க, “சரி, என்ன ஹெல்ப் பண்ணனும்?” அப்படின்னு கேட்குது.

“பச்சி ராஜா, எனது இந்து மீனா சிதறுவதை பார்த்தாயா?”

“ஆமாடா, நீ செஞ்சது நான் பாத்துட்டுதான் இருந்தேன். மேல சொல்லுடா.”

“இந்த விந்து வேஸ்ட் ஆகக் கூடாது. இதை எடுத்துட்டுப் போய் என் தேவியிடம் கொடுத்து, நான் கொடுத்ததாக சொல்லி சேர்க்க வேண்டும்.”

“கருமம் பிடிச்ச காரியத்தைப் பண்ணிட்டு, உனக்கு செந்தமிழ் வேற கேக்குதா?” அப்படின்னு நினைச்சுட்ட அந்தப் பறவை, “சரி, கொடுடா. நான் உன் பொண்டாட்டிக்கிட்ட கொடுக்கப் போயிருச்சு”ன்னு சொல்லுது.

வாசு விந்தை ஆலமர இலையில் மடிச்சு ஒரு பொட்டணமா போட்டு, பறவையிடம் கொடுக்கிறான்.

இதை வாங்கின பறவை, இந்த விந்தை தேசத்து நாட்டுக்குள்ள இருக்குற வாசு பொண்டாட்டிக்கு கொடுப்பதற்காகப் பறந்து போகுது.

இந்தப் பறவை எதை ஒளித்துக்கொண்டு போகுது அப்படின்னு, ஒரு அஞ்சு ஆறு பறவை, இது மாமிசம்னு நினைச்சுக்கிட்டு புடுங்க ட்ரை பண்ணுது.

பறவைகளுக்கு இடையில் நடந்த சண்டையில் மிஸ்டர் பச்சை ராஜன் அந்த விந்துவை கீழே நழுவ விட, அது நேரா கங்கா, யமுனா, சரஸ்வதி என்கிற இந்தியாவின் மூன்று புண்ணிய நதிகளில் ஒன்றான யமுனை நதியில் சிதறுது.

ஏற்கனவே யமுனை ஆத்துல பிரம்ம சாபத்தால மீனா மாதிரி நீந்திக்கிட்டு கிடந்த அத்திரிகை என்கிற மீன், இந்த விந்து விழுந்ததைப் பார்த்து ஓடியது. இந்தப் பொட்டலத்தைக் கழுவிப் பிடிக்க, அதுக்கு என்ன பலன்? ஒரு மூணு மாசத்துல அத்திரிகை மீனுக்குக் கர்ப்பம் உண்டாகுது.

பத்து மாசம் ஆகப்போற சுச்சுவேஷன்ல, அந்த அத்திரிகை என்கிற மீனை ஒரு மீனவன் வலையப் போட்டு பிடிச்சிடுறான்.

“என்னடா, மீனோட வயிறு புல்லா, பொம்பளை வயிறு மாதிரி வீங்கி இருக்கு?”ன்னு நினைத்து, மீனவன் அந்த மீனை அறுத்துப் பார்க்க, அது ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை. ரெண்டு மனுசக் குழந்தைங்க இருந்து யாருடா மீனுக்கு இந்தச் சோலைய பார்த்துவிட்டது என்று, இரண்டு பேரையும் தூக்கிட்டு, தேசத்து நாட்டுக்கு ராஜாவான உபரிச்சரவசு அப்படிங்கிற வாசு மன்னன் கிட்ட இந்த ரெண்டு குழந்தைகளையும் கொண்டு போனான்.

கொண்டு போனதுமே அவனுக்குத் தெரிஞ்சு போச்சு. “இது நம்ம பார்த்த வேலையோட விளைவுதான்” என்று.

ஆண் குழந்தையை மட்டும் அவன் தத்தெடுத்துக்கிட்டான். அதாவது ஸ்பான்சர்.

அந்தக் குழந்தைக்கு மத்செயன் என்று பெயர் வைத்தான். நாட்டுக்கு ராஜாவாகிட்டான்.

மீனுக்குப் பிறந்ததால பெண் குழந்தை மேல மீனாதான் ரொம்ப அடிக்குது. அதை மூக்கைப் பொத்திக்கிட்டு தூக்கி, மீனவன் கிட்டயே கொடுத்துட்டான்.

அந்த மீனவன் இந்தக் குழந்தைக்கு மச்சக்கந்தி என்று பெயர் வச்சு வளர்த்தான்.

மச்சக்கந்தி வளர்ந்து பெரிய மனுஷியானதும், பரிசல் ஓட்டும் வேலையைப் பார்க்கிறாள். இதுதான் மச்சக்கன்னி என்னும் சத்தியவதியோட எஸ்.டி.டி.

இவளைப் பொண்ணு கேட்கத்தான் கிளம்பிப் போறான் சாந்தனு. அவள் அப்பன்கிட்ட பொண்ணைக் கேக்க, அவள் அப்பன் ஒரு ஆர்டர் போடுறான்:

“என் மகளை வேணும்னா கட்டிக்கோ. என்னைய வச்சுக்கோ. ஐ மீன், வச்சுச் சோறு போடு. ஆனா ஒரு கண்டிஷன். உங்க ரெண்டு பேருக்கும் பிறக்கிற குழந்தைதான் இந்த நாட்டை ஆள வேண்டும்.”

இதைக் கேட்டு அதிர்ச்சி ஆயிட்டான் சாந்தனு.

ஏன்னா, ஏற்கனவே கங்காதேவிக்கு பிறந்த குழந்தை தேவவிரதம் இருக்கும் போது, எப்படி மச்சக்கந்திக்குப் பிறக்கிற குழந்தையை மன்னன் ஆக்குவது என்று குழம்பிப் போய்ட்டான்.

இருந்தாலும் மச்சக்கந்தி மேல இருக்கிற மூடு குறையல.

“என் மகன் கிட்ட கேட்டு சொல்றேன்” அப்படின்னு நேரா அரண்மனைக்குப் போயிட்டான்.

நடந்ததை எல்லாம் மகனான தேவவிரதம் கிட்ட சொல்ல, “நம்ம அப்பன் ரொம்ப காஞ்சி போய் கிடக்கும். அவளுக்காக இந்தத் தியாகத்தைப் பண்ணி தொழப்போமுன்னு. அப்ப நீ கவலைப்படாத. உனக்காக நான் போய் பொண்ணு கேட்கிறேன்” என்று மச்சக்கந்தி வீட்டுக்கு கிளம்பிட்டான்.

மச்சக்கந்தி அப்பாகிட்ட போயி, “என் அப்பனுக்கு உன் பொண்ணைப் பிடிச்சுப் போச்சு. உங்க பொண்ணும் கன்னிப் பெண்ணாக இருக்கிறாள். எங்க அப்பனும் காஞ்சி போய் இருக்கார். அதனால எனக்கு இந்த டீல் ஓகே. எங்க அப்பனுக்கு உங்க பொண்ணைக் கட்டி வச்சிரு” அப்படின்னு சொல்லிட்டான்.

அதுக்கு மச்சக்கந்தி அப்பன், “நான் பொண்ணைக் கொடுக்கிறேன். ஆனால் உனக்குக் கல்யாணம் ஆனால் அதற்கு வாரிசு வரும் பிரச்சனை வரும். அதனால் நீ திருமணமே பண்ணக்கூடாது” அப்படின்னு ஒரு கண்டிஷன் போடுறான்.

அதாவது சத்தியம் வாங்கிட்டான்.

அப்புறம் என்ன? தேவவிரதன் அவன் அப்பன் சாந்தனுவுக்கும் மச்சக்கந்திக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டான்.

இதெல்லாம் வானத்திலிருந்து பார்த்துக்கிட்டு இருந்த தேவர்களும் முனிவர்களும், தேவவிரதனைப் பாராட்டி, “பீஷ்மர்! பீஷ்மர்! பீஷ்மர்!”ன்னு கோஷம் போட்டு, பூமாரி பொழிஞ்சாங்களாம்.

அதுநாளிலிருந்து இவனை எல்லோரும் பீஷ்மர் என்று கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

ஆதாரம்: மகாபாரதம் — ஆதிபர்வம், பகுதிகள் 26 மற்றும் 63.

குறிப்பு: அப்பனுக்கு மாமா வேலை பார்க்கிற மகனுக்குக் கொடுக்கிற பட்டம்தான் பீஷ்மர்.


பீஷ்மர் அவன் தம்பிக்காக தூக்கிய பெண்கள் - அம்பை சபதம் - இதுதான்.. மகாபாரத கதை.. 4- 

பீஷ்மர் மச்சகந்தியை தன்னோட அப்பனுக்கு கூட்டிக்கொடுத்ததால அவங்க ரெண்டு பேருக்கும் சித்திராங்கதன், விசித்திரவீரியன் னு ரெண்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 5 வருஷத்து பீஷ்மர் அப்பன் சாந்தனு இறந்துட்டான்.

பீஷ்மர் தன்னோட தம்பிகளை வளர்த்து, சித்திராங்கதனுக்கு மன்னனா முடிசூட்டுறான். பக்கத்து நாட்டு கந்தர்வ ராஜா மன்னன்ட்ட போர் செய்யும்போது தம்பி சித்திராங்கதன் செத்து போயிட்டான். பீஷ்மர் அடுத்ததா விசித்திரவீரியனுக்கு மன்னனா முடிசூட்டுறான். விசித்திரவீரியனுக்கு வாலிப வயசு வந்ததால பீஷ்மர் தன்னோட தம்பிக்கு பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டான். அப்போ அஸ்தினாபுரத்து காசிராஜன் மன்னன் தன்னோட மூணு பொண்ணுகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகைக்கு சுயவர போட்டி ஒன்னு நடத்தினான். அந்த போட்டி தன்னோட தம்பிக்காக கலந்துக்கிட்டான் பீஷ்மர். போட்டி ஜெயிச்சு மூணு பொண்ணுகளையும் கூட்டிட்டு தன்னோட தம்பிக்கு கல்யாணம் பண்ணிவைக்க தேர் கிளம்பிட்டான். அப்போ.. பாதி வழியி அம்பையோட காதலன் சால்வ நாட்டு மன்னன் பீஷ்மர்ட்ட போர் செஞ்சான். அவனை சமாளிச்சு ஒருவழியா தம்பிSubtly ட்ட வந்துசேர்ந்துட்டான்.

“உனக்காக மூணு பொண்ணுகள தூக்கிட்டு வந்திருக்கேன். மூணையும் வச்சு சந்தோஷமா இரு”னு தம்பிகிட்ட சொல்லும்போது, மூணு அம்பைங்கிற பொண்ணு "நான் சால்வநாட்டு மன்னனை லவ் பண்றேன், அவனைத்தான் கல்யாணம் முடிப்பேன்"னு சொல்ல, கோபமான விசித்திரவீரியன் "அண்ணே.. இந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டா.. இவ வேற ஒருத்தனை லவ் பண்றா னு நம்மட்டயே சொல்றா, இவளை அனுப்பிரு"னு பீஷ்மர்ட்ட சொல்ல, "யம்மா.. தெரியாம உன்னை தூக்கிட்டு வந்துட்டேன், நீ உன்னோட லவ்வர் கூடவே இரு.. நீ கிளம்பு"னு பீஷ்மர் சொல்ல, அம்பை சால்வநாட்டு மன்னன்ட்ட போயிட்டா.

"ஒன்னு போனா என்ன? மீதி ரெண்டு இருக்கு.. ரெண்டையும் வச்சுக்கோ தம்பி"னு சொல்றான் பீஷ்மர்.

அப்போ அந்த ரெண்டு பொண்ணுகளும் "பீஷ்மர்தான் போட்டி ஜெயிச்சாரு, அதனால பீஷ்மரைதான் கட்டிக்குவோம்"னு ரெண்டும் விசித்திரவீரியனுக்கு டிமிக்கி கொடுத்திருக்கு. உடனே பீஷ்மர் "நான் சாகும் வரைக்கும் தன் கையே தனக்கு உதவி னு சாகுற வரைக்கும் ஒண்டிக்கட்டையா சிங்கிள்ஸா வாழுறேன் னு என் சின்னம்மாவோட அப்பன்ட்ட சத்தியம் வாங்கிருக்கேன். அதனால என் தம்பியை கட்டிக்கோங்க"னு சொல்லி ரெண்டு பேரையும் தம்பிக்கு கட்டிவச்சுட்டான்.

அதேசமயம் ரிட்டர்ன் போன அம்பை சால்வ நாட்டு மன்னன்ட்ட "என்னைய கட்டிக்கோ"னு சொல்ல, "உன்னை பீஷ்மர் ஜெயிச்சு தூக்கிட்டு போயிட்டான். சோ, உன்னை கட்டிக்க முடியாது. நீ பீஷ்மர்ட்டயே போ. ஒருத்தன் தொட்டதை நான் தொடமாட்டேன்"னு சொல்லிட்டான். "நீயெல்லாம் ஒரு ஆளு மயிரு னு உன்னைய உண்மையா லவ் பண்ணேன் பாரு.. உனக்கு நல்ல சாவே வராது"னு அம்பை பீஷ்மர்ட்ட மறுபடியும் வந்துட்டா.

ஆனா பீஷ்மர் தம்பி "வேற ஒருத்தனை லவ் பண்ணுன பொண்ணை நான் கட்டிக்க முடியாது"னு திரும்ப திரும்ப சொல்ல, கோபமான அம்பை "டேய்.. பீஷ்மர் நீதான என்னைய தூக்கிட்டு வந்த.. நீ கட்டிக்கோ, வச்சு குடும்பம் நடத்து"னு சொல்ல, "அது என்னால முடியாது. நான் தன் கையே னு சிங்கிள்ஸ் மாதிரி சாகுற வரைக்கும் வாழுறதா சத்தியம் பண்ணிருக்கேன், என்னைய மன்னிச்சிரு"னு பீஷ்மர் சொல்ல,

கோபமாகி அவனை திட்டிட்டு அங்கயிருந்து கிளம்புன அம்பை, "இதுக்கெல்லாம் பீஷ்மர்தான் காரணம், லவ் பண்ணுனவன்கிட்டயும் போக விடாம, அவன் தம்பிட்டயும் போகவிடாம, அவனும் கட்டிக்காம, அவனை மாதிரியே என்னையும் ஒண்டிக்கட்டையா ஆக்கிட்டான்.. அவனை சும்மா விடமாட்டேன்.. பீஷ்மர் சாவு என்னோட கையாலதான்"னு சபதம் எடுக்கா..

தன்ஸோட லைஃப நாசமாக்கின பீஷ்மர எப்படியாவது கொல்லணும்னு பல நாட்டு மன்னர்கள்கிட்ட போயி நியாயம் கேட்டுருக்கா, எல்லாரும் முடியாதுனு சொல்லிட்டாங்க. கடைசியா துருபதநாட்டு மன்னன்கிட்ட பீஷ்மர கொல்ல டீல் பேசிருக்கா, அவனும் பயந்துட்டு முடியாதுன்னு சொல்லிட்டான்.

அப்றம் சிவன் மகன் கந்தனை நினைச்சு தவம் பண்றா. கந்தன் அவளுக்கு வரமா ஒரு படிகமாலை குடுத்துட்டு "யார் இந்த மாலைய போட்டு பீஷ்மர்கிட்ட சண்டை போடுறாங்களோ அவனால தான் பீஷ்மர கொல்ல முடியும்"னு சொல்லிட்டு டடாய்ங்னு மறைஞ்சிர்றான்.

அம்பை அந்த மாலைய கொண்டு போயி பல மன்னர்கிட்ட குடுத்து பீஷ்மர கொல்ல சொல்றா. எல்லா மன்னரும் முடியாதுன்னு கைய விரிச்சிட்டாங்க. என்னடா ஒரு பயலும் பீஷ்மர கொல்ல வரமாட்டேங்குறாங்களேனு மாலைய அவ வீட்டு கூரை மேல மாட்டி வச்சிட்டு வனவாசம் போயிட்டா.

காட்டுல பரசுராமர்ங்கிற ஒரு முனிவர்கூட அம்பைக்கு பழக்கம் ஆகுது. முனிவர்கிட்ட அவளோட கதைய சொல்லி, "பீஷ்மர எப்படியாவது சோலிய முடிக்கணும் அதுக்கு நீங்க எனக்கு உதவணும்"னு கேக்குறா. பரசுராம முனிவர் சரினு சொல்லிட்டு பீஷ்மர்கிட்ட சண்டைக்கு போறான்.

ரெண்டுபேரும் சரிவிகிதமா சண்டை போடுறானுங்க, யாரும் ஜெயிச்சபாடில்லை. முனிவர் அம்பைகிட்ட "இவன சண்டை போட்டு ஜெயிக்க முடியாது. நீ சிவனை நினைச்சு தவம் இரு"னு சொல்லிட்டான்.

இவளும் சிவனை நினைச்சு தவம் கிடக்க இமயமலைக்கு புறப்பட்டா. கடும் தவம் செஞ்சிட்டு இருக்கும் போது, சிவன் காட்சி தந்து "நீ மறுபிறவி எடுத்தாதான் பீஷ்மர கொல்ல முடியும்"னு சொல்லிட்டு மறைஞ்சிட்டான். செத்தாதானே மறுபிறவி எடுக்கமுடியும்னு நெருப்புல விழுந்து செத்துருறா.

சில நாள் கழிச்சு துருபத ராஜாவுக்கு மகளா பிறக்கிறாள். சிகண்டனினு பேரு வச்சு நல்லா வளர்க்குறாங்க. அவ இளமை பருவம் ஆனதும் பீஷ்மர கொல்ல ரெடி ஆயிட்டா. அவ அப்பன் துருபத மகாராஜாகிட்ட சொல்றா. "பீஷ்மர்கிட்ட சண்டை போடமுடியாது"னு ஓங்கி சிகண்டனி செவுளுல அடிச்சு "வனவாசம் போ"னு அவள அரண்மனைய விட்டு விரட்டிட்டான்.

காட்டுக்கு போன சிகண்டனி அங்க கந்தர்வன்ங்கிற ஒரு முனிவர்கிட்ட பழக்கமாகி, நடந்தத சொல்றா. அதுக்கு அந்த முனிவர் "நீ ஆம்பளயா மாறுனாத்தான் பீஷ்மர கொல்ல முடியும் அதனால் நம்ம ரெண்டு பேரு உடம்ப எக்சேஞ்ச் பண்ணிக்குவோம். பீஷ்மர கொல்ற வரைக்கும் நீ ஆணா என் உடம்ப யூஸ் பண்ணிக்கோ, உன்னோட உடம்ப நான் யூஸ் பண்ணிக்கிறேன், எல்லாம் முடிச்சதும் நாம பழைய மாதிரி உடம்ப மாத்திக்கலாம்"னு சொல்லுறான்.

இவளும் சரினு சொல்லி முனிவர் உடம்புல பூந்து ஆம்பளயா மாறிட்டா. முனிவன் சிகண்டனி உடம்புல பூந்து லேடீஸ் ஆகிட்டான். ஆணா மாறின சிகண்டனி, தன்னோட பேர சிகண்டினு மாத்தி பீஷ்மர கொல்ல புறப்படுறா.


பீஷ்மரின் தம்பி மனைவிகளிடம் உடலுறவு பண்ணச் சொன்ன சத்தியவதி - வம்ச விழுதுகள் இதுதான்.. மஹாபாரதக் கதை.. -  5

பீஷ்மர் தன்னோட தம்பிக்கு
அம்பிகா, அம்பாலிகையைக் கல்யாணம் பண்ணி வச்சி
பல வருசம் ஆகியும் ஒரு புழுப்பூச்சி கூட உண்டாகல. ஒன்னுக்கு ரெண்டு வச்சிருந்தும், ஏன், தம்பி விசித்திரவீரியனுக்கு குழந்தை இல்லன்னு பீஷ்மர் யோசிச்சான். அந்த டயம் விசித்திரவீரியன்
பக்கத்து நாட்டோட போர் செஞ்சி செத்துட்டான்.

என் மகன் ரெண்டு இளம்
பொண்டாட்டிகள அனாதையா விட்டுட்டு செத்துட்டானே... என் வம்சம் தழைக்க இப்ப என்ன பண்றதுன்னு, மச்சகந்தி எனும் சத்தியவதி பீஷ்மரை
கூப்பிடுறா.

"பீஷ்மா, உன் தம்பி இளம் பொண்டாட்டிய
இப்படி நடுத்தெருவில் விட்டுட்டு போயிட்டான். நீதான் நம்ம வம்சம் கண்டினியூ ஆகுறதுக்கு உதவணும். நான் சொல்றபடி கேளு. உன் தம்பி பொண்டாட்டிகள நீ போட்டு
நம்ம வம்சத்துக்கு நீ குழந்தைய குடு"னு சொல்றா.

அதுக்கு பீஷ்மர் முடியாதுனு சொன்னான்.

"ஏன் பீஷ்மா, உனக்கும் உன் தம்பிய
மாதிரி எதும் வீக்னஸ் இருக்கா..?"

அதுக்கு பீஷ்மர், "இல்ல சின்னம்மா, நான் வாழ்நாள் முழுவதும் தன்விரதம் தனக்குதவி னு ஒண்டிக்கட்டையா வாழ்வேனு, எங்க அப்பன் உன்ன கட்டிக்கிறதுக்காக உங்க அப்பன்ட்ட
சத்தியம் பண்ணிருக்கேன். அதனால என்னால இந்த ரெண்டு பொண்ணுகளையும்
மேட்டர் பண்ண முடியாது"னு சொல்லிட்டான்.

அதுக்கு சத்தியவதி, "எனக்காகத்தானே நீ சத்தியம் பண்ணுன? நானே அந்த சத்தியத்த கேன்சல் பண்ணிருவேன். நீ நம்ம வம்ச விருத்திக்காக உன்
தம்பி பொண்டாட்டிககிட்ட போயிதான் ஆகணும்"னு அழுகுறா.

பீஷ்மர் அதுக்கு, "சத்தியத்த மீறுறது தர்மத்துக்கு ஆகாது. இந்த மாதிரி சுச்சுவேசன்ல நாம ரிஷி
அல்லது முனிவரை கூட்டி வந்து மேட்டர் பாக்கவிடுறதுதான் முறை. அதனால முனிவர் உதவிய நாடலாம்"னு இந்து தர்மத்த விளக்கி சின்னம்மாட்ட
சொல்றான்.

அதுக்கு சின்னம்மா
சத்தியவதி, "உங்ககிட்டேயும் ஒரு ரகசியத்த
இவ்வளவு நாளா மறைச்சி வச்சிருந்தேன். அத இப்ப சொல்லக் கட்டாயம் வந்துருச்சி. நீ என்ன தப்பா நினைச்சாலும் பரவாயில்ல,
பீஷ்மா"னு ஃப்ளாஷ்பேக் சொல்ல ரெடியாயிட்டா.

சின்னம்மா அது என்ன
ரகசியம்னு பீஷ்மர் கேக்க, சத்தியவதி சொல்ல ஆரம்பிக்குறா..

"உங்க அப்பன கட்டுறதுக்கு முன்னாடி, ஒருநாள் நான் பரிசலு பராசர முனிவர
அக்கரைக்கு கூட்டிப் போகும் போது, நாங்க ரெண்டுபேரும்
பரிசலிலேயே மேட்டர் பண்ணிக்கிட்டோம், I mean, காந்தர்வணம் பண்ணிக்கிட்டோம். அது பிறந்த குழந்தைய காப்பதீவு
விட்டுட்டோம். இப்ப அந்த குழந்தை பெரியவனா ஆகி
வியாசர் முனிவரா அங்க தவம் செஞ்சிட்டு கிடக்கான். உனக்கு அண்ணன் முறைதான் வேணும் பீஷ்மா"னு சொல்.

பீஷ்மர் ஆச்சரியப்பட்டுப்
போனான்.

"சின்னம்மா, நல்ல காரியம் பண்ணுனீங்க. அந்த வியாசர் முனிவரைப் பற்றி நானும்
கேள்விப்பட்டிருக்கேன். உடனே அந்த சகோதரரை வரவழைச்சி, தம்பி பொண்டாட்டிககிட்ட விடணும்
சின்னம்மா. அவர் எப்படி இங்க வரவைக்கிறது?"னு கேக்குறான்.

"பீஷ்மா, நான் அவனைக்
காட்டில் விடும் போது எனக்கு அவன் ஒரு வரம் தந்தான்.

'நீ எப்ப என்னை நினைச்சிக் கூப்பிட்டாலும் வருவேன் தாயே'னு இப்ப அவனைக் கூப்பிடலாமா பீஷ்மா?"ன்ட்டு,

“மகனே.. வியாச முனிவா, உன் தாய்க்கு உன்னோட ஹெல்ப் தேவைப்படுது. உடனே இங்க வா மகனே..”


மருமகள முனிவருக்கு கூட்டிவிட்ட சத்தியவதியும், ஐடியா கொடுத்த பீஷ்மரும் - திருதராஷ்டிரன் பிறப்பு - இதுதான்.. மஹாபாரதக் கதை.. 6 

வம்ச விருத்திக்காக
சத்தியவதி தவம் செஞ்சிட்டு இருந்த தன்னோட மகன் வியாசர் முனிவரை நினைச்சி வேண்டுறா. உடனே டொய்னு வியாசர் முனிவர் வந்து
நிக்கான். பார்க்க மெலிஞ்ச ஒடம்பு, தமிழிசை ஹேர் ஸ்டைல்'னு பத்து வருசம்
செய்யாத தாடியோடு வந்து நின்னான். "உங்களுக்கு என்ன உதவி வேணும் தாயே, உங்களுக்கு உதவ நான் ரெடியா இருக்கேன்"னு சொல்றான்.

"மகனே, நீ வந்ததுக்கு ரொம்ப மகிழ்ச்சி. உன்னோட தம்பி விசித்திரவீரியன்
போர் செத்துட்டான். அவனுக்கு ரெண்டு பொண்ணுக கல்யாணம்
பண்ணிக்குடுத்தும் ஒரு புழுப்பூச்சி கூட இல்ல. அவனும் இப்ப செத்துட்டான். நம்ம வம்ச விருத்திக்காக
உன்னோட தம்பி பொண்டாட்டிக மேட்டர் பண்ணி நம்ம வம்சத்துக்கு வாரிசு தரணும். அதனாலதான் உன்ன அவசரமா வரவச்சேன்"னு சொல்றா.

"தாயே, நான் ஒரு முனிவர். இந்த மாதிரி காரியமெல்லாம் பண்ணக்கூடாது. இருந்தாலும் நீங்க நம்ம வம்ச வாரிசுக்காகனு
கேக்குறீங்க. உங்க சொல் எப்பவுமே தட்டமாட்டேன். நான் ரெடி தாயே. நல்ல முகூர்த்த நேரமா பார்த்து சொல்லுங்க. ஒன்னு என்ன... நம்ம வம்சத்துக்கு நூறு ஆண் குழந்தைகளையும், ஒரு பெண் குழந்தையையும் தாறேன்"னு சொல்லிட்டான்.

சத்தியவதி மருமகள்
அம்பிகாவோட அத்தப்புரத்து அவள் பார்த்து, "மருமகளே, நம்ம வம்ச விருத்திக்காக இன்னைக்கு நைட் உங்கூட உடலுறவு பண்ண நம் உறவினர்
ஒருவர் வருவார். அவரை அனுசரிச்சி நடந்துக்கோடி"னு சொல்றா.

அதுக்கு அம்பிகா, "அத்தை.. நீங்க நம்ம வம்ச
விருத்திக்காகனு சொல்றீங்க. அதுக்காக நான் இதுகூட பண்ண மாட்டேனா.. நான் ஒத்துக்கிறேன்"னு சொல்லிட்டு கிளம்பிட்டா.

அம்பிகைக்கு ஒரே சந்தோஷம். இன்னைக்கு நைட் நம்ம கூட பண்ணப்போறது
பீஷ்மராதான் இருக்கும் னு தன்னோட பெட்ரூம் முழுவதும் அகில்புகை போட்டு, சந்தனம் மணம் கமழ தெளிச்சி, பெட்டு நிறைய மல்லிகைப்பூ தூவி ரெடி
பண்ணி வச்சிட்டு வெயிட்டிங் இருக்கா.

வியாசர் முனிவர் வந்தத
பாத்து அதிர்ச்சி ஆயிட்டா. தமிழிசை ஹேர் ஸ்டைல், பத்து வருசமா செறக்காத தாடி மீசை... (இப்படி வந்தா யாருக்குத்தான் பிடிக்கும்?) "இவனோட மேட்டர் பண்ண முடியாது, அத்தகாரி நம்மள ஏமாத்திட்டாளே.."னு அம்பிகா பயந்து கண்ண மூடிக்கிட்டா. வந்த முனிவர் மேட்டர் பாத்துட்டு
போயிட்டான்.

"மகனே.. வியாசர் முனிவா.. நைட் போன காரியம் நல்லா நடந்துச்சா?"னு சத்தியவதி முனிவன்ட்ட கேக்குறா.

அதுக்கு வியாசர் முனிவன், "எங்க தாயே, உங்க மருமகள் அம்பிகா நான் பண்ணும்
போது கண்ண மூடிக்கிட்டா. அதனால உங்க மருமகளுக்கு பிறக்குற
குழந்தை குருடனாத்தான் பிறக்கும்"னு சொல்லிட்டான்.

பத்துமாசம் கழிச்சி அம்பிகைக்கு
ஒரு குழந்தை கண் மூடுன மாதிரியே பொறக்குது. அந்த குழந்தைக்கு திருதராஷ்டிரன் னு பேரு வச்சி வளர்க்குறாங்க.

சத்தியவதி ரொம்ப மன உச்சலுக்கு ஆளாயிட்டா. "ஒரு குருட்டு வாரிசு எப்படி இவ்வளவு
பெரிய ராஜ்யத்த ஆள முடியும் பீஷ்மா.."னு மகன் பீஷ்மர்ட்ட சொல்லி அழுகுறா.

அதுக்கு பீஷ்மர், "சின்னம்மா, கவலைப்படாதீங்க. மறுபடியும் சகோதரர் வியாசர் முனிவரை
கூப்பிட்டு, இந்த தடவை அம்பிகா தங்கச்சி அம்பாலிகாகிட்ட விட்டு மேட்டர் பண்ணலாம்"னு சத்யவதிக்கு சமாதானம் சொல்றான்.

சத்தியவதியும் அதுதான் சரினு சொல்லிட்டு, தன்னோட மகனை நினைக்குறா.

"மகனே வியாசர் முனிவா, எனக்கு உன்னோட ஹெல்ப் தேவைப்படுது. உடனே இங்கே வா.."னு வேண்டுறா..

 


பாண்டு மற்றும் விதுரன் பிறப்பு - வம்ச விழுதுகள் - இதுதான் மகாபாரத கதை.. இதுதான் மகாபாரத கதை.. -  7

"இந்த ராஜ்யத்தை ஆள நல்ல திறமையான வாரிசு வேணுமுன்னு" மகன் வியாச முனிவரை மறுபடியும் சத்யவதி கூப்பிடுறா. முனிவரும் "வறாய்ங்"னு வந்து நின்னு, "உங்களுக்கு மறுபடியும் என்ன உதவி வேணும் தாயே"னு கேட்க, "மகனே முனிவா.. நம்ம ராஜ்யத்தை ஆள திறமையான வாரிசு வேணும், நீ அம்பிகை தங்கச்சி அம்பாலிகை கூட பண்ணி நல்ல வாரிசா ரெடி பண்ணு"னு சொல்றா.

அதுக்கு வியாச முனிவன், "உங்க பேச்சை எப்பவும் தட்ட மாட்டேன் தாயே, நல்ல முகூர்த்த நேரமா பார்த்து சொல்லுங்க, நான் அதுவரை என்னை தயார்படுத்திக்கிறேன்"னு சொல்லிட்டான். சத்யவதி தன்னோட மருமகளான அம்பாலிகையை பார்க்க போறா. "மருமகளே அம்பாலிகை, அத்தை சொல்றதை கவனமா கேளு. இன்னைக்கு நைட் உன்னை மேட்டர் பண்ண நம்ம உறவினர் ஒருத்தர் வருவாரு. அவரை அனுசரிச்சு நடந்துக்கோ. உன்னோட அக்கா பண்ணுன தப்பை நீயும் பண்ணிராத. அவளை மேட்டர் பண்ணும்போது கண்ணை மூடினதால் தான் பிறந்த குழந்தை குருடா பிறந்துச்சு. அதனால் நீ எந்த காரணத்தைக் கொண்டும் பண்ணும்போது கண்ணை மட்டும் மூடிராதடி தங்கம்"னு சொல்றா.

அதுக்கு அம்பாலிகை, "அத்தை நீங்க திறமையான வாரிசு கேட்கிறீங்க. அக்கா பண்ணுன தப்பை நான் எப்பவும் பண்ண மாட்டேன். நீங்க தைரியமா போங்க"னு சொல்லிட்டு தன்னோட பெட்ரூமை ரெடி பண்றா. முகூர்த்த நேரம் ஆச்சு, பெட்ரூம்க்குள்ள முனிவரும் வந்துட்டான். அம்பாலிகை முனிவரை பார்த்து ஷாக் ஆயிட்டா. "அத்தை உறவினர்னு சொன்னாங்க, இவன் என்னடானா பஞ்சத்தில் அடிபட்ட பைத்தியக்காரன் மாதிரி இருக்கானே.. இவன் கூட படுத்து எப்படி புள்ளையை பெக்குறது.. அக்கா எதுக்கு கண்ணை மூடுனான்னு இப்பதானே.."னு மனசுக்குள்ளேயே நினைச்சுக்கிட்டு, அத்தை சொல்றதை தட்டக்கூடாதுனு படுக்க ரெடியாயிட்டா.

முனிவர் அவளை தொடும்போது பயந்து நடுங்கி, உடம்பெல்லாம் வெளுத்து போகுது அவளுக்கு. இருந்தாலும் மேட்டர் பண்ணும்போது அவ கண்ணை மூடாமல் இருந்தா. ஒருவழியா எல்லாம் முடிஞ்சு முனிவர் வெளியே வர்றான்.

சத்யவதி முனிவனை பார்த்து, "மகனே போன காரியம் நல்லபடியா இருந்ததா? ஏதும் குறை கீறை இருக்கா?"னு கேட்க, அதுக்கு முனிவன், "எல்லாம் நல்லபடியா முடிஞ்சது, ஆனா உன் மருமகளை பண்ணும்போதுதான் அவளோட உடம்பு பயத்தில் நடுங்கி வெளுத்து போச்சு. அதனால் பிறக்கிற குழந்தை ஒயிட் கலர்ல பிறக்கும், வேற எந்த குறையும் இருக்காது. குழந்தை வெள்ளையா இருக்குறதால் அந்த குழந்தைக்கு பாண்டுனு பேர் வைங்க"னு சொல்லிட்டு தீவுக்கு கிளம்பிட்டான்.

பத்து மாசம் கழிச்சு அம்பாலிகைக்கு ஒயிட்டா ஒரு குழந்தை பிறக்குது. அதுக்கு பாண்டுனு பேர் வச்சு வளர்க்குறாங்க. இருந்தாலும் சத்யவதிக்கு மனக்கவலையா இருந்துச்சு. சத்யவதி பீஷ்மரை கூப்பிடுறா. "மகனே பீஷ்மா.. இந்த ராஜ்யத்துக்கு ரெண்டு வாரிசு இருந்தும், ரெண்டுலயும் குறை இருக்கிற மாதிரி தெரியுது. ஒன்னு என்னடானா வெள்ளையா இருக்கு, இன்னொன்னுக்கு என்னடானா கண்ணு நொள்ளையா இருக்கு. நம்ம ராஜ்யத்தை ஆள இன்னும் நல்ல திறமையான வாரிசு வேணும் பீஷ்மா"னு பீஷ்மர்ட்ட சோகமா சொல்றா.

அதுக்கு பீஷ்மர், "நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் சின்னம்மா.. சரி, முனிவரை எப்ப வரச்சொல்ல போறீங்க? இந்த தடவை அக்கா கூடயா? தங்கச்சி கூடயா?"னு கேட்க, "இந்த முறை அக்கா அம்பிகை கூட பீஷ்மா.."னு சொல்லிட்டு, சத்யவதி தீவில் தவம் பண்ணிட்டு இருக்குற மகன் வியாச முனிவனை மறுபடியும் கூப்பிடுறா. முனிவனும் கூப்பிட்ட மாத்திரத்தில் வந்து நிக்கான்.

சத்யவதி முனிவனை பார்த்து, "மகனே வியாச முனிவா... நீ ரெண்டு வாரிசு கொடுத்த. அந்த ரெண்டு குழந்தைகளும் நாங்க திருப்திப்படுற மாதிரி இல்லை. அதனால் நாங்க திருப்திப்படுற மாதிரி ஒரு வாரிசை கொடு"னு கேட்குறா.

அதுக்கு முனிவன், "தாயே.. இந்த தவறான காரியத்தை அடிக்கடி பண்ணுனா, என்னோட தவத்துக்கு கேடு உண்டாகும். இதுதான் உங்களுக்கு லாஸ்ட், இந்த மாதிரி வேலைக்கு இனிமே என்னை கூப்பிடாதீங்க. நல்ல முகூர்த்த நேரமா பார்த்து பொண்ணை ரெடி பண்ணுங்க, உங்களுக்காக கடைசியா இதை பண்றேன்"னு சொல்லிட்டான்.

சத்யவதி அம்பிகையை பார்த்து விஷயத்தை சொல்றா. "மருமகளே போன முறை கண்ணை மூடுன மாதிரி இந்த தடவை பண்ணிராத. நமக்கு திறமையுள்ள வாரிசு வேணும். நீ சீக்கிரமா உன்னோட பெட்ரூமை ரெடி பண்ணுடி"னு சொல்லிட்டு கிளம்பிட்டா.

அம்பிகை எரிச்சல்பட்டு யோசிக்கிறா.. "போன தடவை இந்த முனிவப்பய மூஞ்சியை பார்க்க முடியாமதானே கண்ணை மூடிக்கிட்டேன். இப்ப அத்தகாரி மறுபடியும் அதே முனிவப்பயலுக்கு கூட்டிக்குடுக்க பார்க்கறாளே"னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதே ஒரு ஐடியா தோணுது.

அம்பிகை பெட்ரூமை ரெடி பண்ணிட்டு அவளுக்கு பதிலா அவளோட வேலைக்கார பொண்ணை உட்கார வச்சுட்டு எஸ்கேப் ஆயிடுறா. முனிவன் வந்து மேட்டரை தொடங்கும் போது பொண்ணு சேஞ்ச் ஆனது அவனுக்கு தெரிஞ்சு போகுது. முனிவன் வேலைக்கார பொண்ணை பார்த்து, "யார் உன்னை மாத்துனது?"னு கேட்க, "என்னை மன்னிச்சிருங்க முனிவரே.. அம்பிகையம்மா தான் உங்க கூட படுக்க பிடிக்காமல் என்னை அனுப்பி வச்சாங்க"னு சொல்றா.

அதுக்கு முனிவன், "பயப்படாத பணிவிடை பெண்ணே.. நீயும் அழகாகத்தான் இருக்க, உனக்கு பிறக்க போகம் குழந்தையும் இந்த ராஜ்யத்துக்கு வாரிசு ஆவான்.. அதுமட்டுமில்ல அவன் ராஜாவா ரொம்ப ஆட்சி செய்வான்"னு பணிவிடை பொண்ணு மேல் பாஞ்சிடுறான் முனிவன்.

பத்து மாசம் கழிச்சு வேலைக்கார பொண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்குது. அந்த குழந்தைக்கு விதுரன்னு பேர் வச்சு வளர்க்குறாங்க.


காந்தாரி கல்யாணம் - குருடனுக்கு வந்த வாழ்வு (1+10) - இதுதான்.. மகாபாரத.. கதை.. - தொடர் 8

பீஷ்மர் தன்னோட சகோதரன் விசித்திரவீரியனின் வாரிசுகளான (அப்படினு சொல்ல முடியாது "உ"னா சுழி போட்டது வியாச முனிவன்) ஆனால் கதைப்படி விசித்திரவீரியன் வாரிசுகளான திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் நு மூணு பேரையும் நல்லபடியா வளர்க்குறான். திருதராஷ்டிரன் மூத்தவன். ஆனால் அவனுக்கு கண்ணு தெரியாது. அதனால் பாண்டு, விதுரன் இந்த ரெண்டு பேருக்கும் போர் பயிற்சி, கலை, கல்வி நு, தான் கத்துகிட்ட மொத்த வித்யையையும், தம்பி மகன்களுக்கு கத்துத்தர்றான்.

தம்பி மகன்கள் மூணு பேரும் பெரியவங்களா ஆயிட்டானுக. பீஷ்மர் மூணு பேருக்கும் கல்யாணம் பண்ண ரெடி பண்றான். பீஷ்மர் வேலையே புரோக்கர் தொழிலா ஆகிப்போச்சு.. அவன் அப்பன் சாந்தனுவுக்கு பொண்ணு புடிச்சு கொடுத்து, அவன் தம்பி விசித்திரவீரியனுக்கு பொண்ணு புடிச்சு கொடுத்து, இப்ப விசித்திரவீரியன் மகன்களுக்கும் பொண்ணு தேடுறான்.

அந்த சமயத்தில் பக்கத்து நாடான காந்தார நாட்டு இளவரசியான காந்தாரியின் அழகு, பெருமையைப் பற்றி பீஷ்மர் அரசவை அமைச்சருங்க எல்லாம் பீஷ்மர்ட்ட எடுத்து சொல்றானுக. பீஷ்மரும் சரி நு, ஃபர்ஸ்ட் மூத்தவனான திருதராஷ்டிரனுக்கு கல்யாணத்தை முடிச்சு வைப்போம்னு காந்தார நாட்டு மன்னன்கிட்ட பொண்ணு கேட்டு போறான்.

காந்தார நாட்டு மன்னன் முடியாதுனு சொல்றான். ஏன் நு பீஷ்மர் கேட்க, "திருதராஷ்டிரனுக்கு பார்வை தெரியாது. அவனுக்கு எங்க நாட்டு இளவரசியை கொடுக்க முடியாது பீஷ்மா, பார்வை இருக்குறவனே தெறாவுவான் (தெறாவான்), அதெல்லாம் சரிப்படாது, நீங்க வேற இடத்தை பார்த்துக்கோங்க"னு சொல்றான். அப்புறம் நீண்ட விவாதத்துக்கு பிறகு அஸ்தினாபுரம் உறவு விட்டு போயிடக் கூடாதுனு காந்தார நாட்டு மன்னன் கல்யாணத்துக்கு சரி நு சொல்லிட்டான்.

காந்தாரி செம அழகி. ஒரு குருடனை கட்டிக்க போறோமேனு ஒரு கவலையும் படலை. அவளும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா.

திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. தன்னோட புருஷன் குருடனா இருக்கும் போது எனக்கு மட்டும் பார்வை எதுக்குனு, காந்தாரி தன்னோட வாழ்நாள் முழுவதும் கண்ணை கட்டி புருஷன் மாதிரி பார்வையில்லாமல் வாழனும்னு சத்தியம் செஞ்சு ரெண்டு கண்ணையும் கருப்பு துணியால் கட்டிக்கிட்டா.

காந்தாரி பண்ணுன இந்த செயலைப் பார்த்து அஸ்தினாபுரமே அவளை பாராட்டுனாங்க. இதை கேள்விப்பட்ட பீஷ்மருக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதே சந்தோஷத்தில் காந்தாரி தங்கச்சிங்க பத்து பேரையும் "அக்காவுக்கும், மச்சானுக்கும் துணையாக இருக்கட்டுமே"னு யோசிச்ச பீஷ்மர்.. திருதராஷ்டிரனுக்கே பத்து பேரையும் கட்டி வச்சுட்டான்.

திருதராஷ்டிரன் வாழ்க்கை செமையா போயிட்டு இருந்துச்சு...

அடுத்து பாண்டு பயலுக்கு பொண்ணு பார்ப்போம்..


குந்தியை முதலில் பார்த்த சூரியன் - கர்ணன் பிறப்பும், பாண்டு திருமணமும் - இதுதான்.. மகாபாரத.. கதை.. -  9

குந்திபோஜன் எனும் யாதவ மன்னனுக்கு ரொம்ப நாளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவனோட அத்தை மகன் சூரனுக்கு ஒரு பெண் குழந்தை பொறக்குது. அந்தக் குழந்தையைத் தன் மாமன் குந்திபோஜனுக்குத் தத்துக் கொடுத்துட்டான் சூரன்.

குந்திபோஜன் அந்தக் குழந்தைக்கு குந்தி னு பேரு வச்சி வளர்க்குறான். குந்தி வளர்ந்து கன்னிப்பெண்ணா ஆயிட்டா. ஒரு சமயம் அங்கே அரண்மனைக்கு துர்வாச முனிவன் விருந்துக்கு வரான். அந்த முனிவன் ரொம்ப கோபக்காரன். அவனுக்கு விருந்து பரிமாறுறவங்க பயந்து பயந்துதான் பரிமாறுவாங்க. குந்தியும் முனிவனுக்கு விருந்து பரிமாறி பணிவிடை செய்யுறா.

முனிவனுக்கு குந்தி செய்யுற பணிவிடை பிடிச்சுப் போயி, குந்தியைத் தனியா கூப்புடுறான். நம்ம எதுக்கு இந்த முனிவர் கூப்புடுறான் னு இவளும் போறா. குந்திட்ட முனிவர் சொல்றான், "குந்தி, நீ பரிமாறுனதும், பணிவிடை செஞ்சதும் எனக்கு பிடிச்சிப் போச்சி. அதனால உனக்கு ஒரு வரம் தாவறேன். இந்த மந்திரத்தைச் சொல்லி யாரை வேணும்னு கூப்புடுறியோ, அவங்க உன் முன்னாடி வந்து நிப்பாங்க. உன்ன மாத்திரம் பாத்து குழந்தையும் கொடுப்பாங்க" னு சொல்லி குந்திக்கு அப்படி ஒரு வரத்தைக் கொடுத்து, அதுக்கான மந்திரத்தையும் குடுக்கான்.

கொஞ்ச நாளுக்குப் பிறகு குறும்புத்தனமான குந்தி நந்தவனத்து தனியா இருக்கா. "ரொம்ப போரடிக்குது.. அந்த மந்திரத்தையாவது சொல்லி டைம்பாஸ் பண்ணுவோம்" னு சூரியனை நினைச்சி மந்திரத்தைச் சொல்றா. உடனே சூரியபகவான் அவ முன்னாடி வந்து டொய்ங்னு நிக்கிறான்.

குந்தி.. "நான் ரெடி, நீ ரெடியா?" னு சூரியன் கேக்க, குந்தி பயந்துட்டா.

"ஏய் பெண்ணே, பயப்படாதே. உன்னை முடிச்சிட்டு ஒரு குழந்தையைக் குடுத்துட்டுப் போயிருவேன். உனக்குப் பிறக்குற குழந்தை தெய்வக் குழந்தை. அதனால அவன் பொறக்குற போதே கவச குண்டலத்தோட பொறப்பன். அவனை யாரும் வெல்ல முடியாத வீரனா இருப்பான், தானம் பண்றதுல்லாம் வள்ளலா இருப்பான்" னு சொல்றான்.

அதுக்கு குந்தி, "நான் இன்னும் கன்னிகழியாத பொண்ணு. அதனாலதான் பயமா இருக்கு" னு சொல்றா.

அதுக்கு சூரியன், "பெண்ணே, பிறக்கப்போகும் குழந்தை தெய்வக் குழந்தை. அதனால அது பொறந்ததும் நீயும் பழைய மாதிரி கன்னிப்பொண்ணா மாறிருவ" னு சொல்றான்.

குந்தியும் மேட்டர்க்கு சரி னு சொல்லிட்டு சூரியபகவனை ஆலிங்கனம் செய்யுறா. எல்லாம் முடிச்சிட்டு சூரியன் கிளம்பிருறான்.

பிறகு குந்திக்கு ஒரு குழந்தை கவசகுண்டலத்தோட பொறக்கு. இன்னும் கல்யாணமே ஆகலையே, குழந்தையோட நம்மைப் பார்த்தா காரித்துப்புவாங்களே னு, குழந்தையை ஒரு பெட்டியில வச்சி ஆத்து அனுப்பிருறா.

ஆத்துக்கு அந்தப்பக்கமா இருந்த திருதராஷ்டிரனோட தேர்ப்பாகன், கண்ணு தண்ணி மிதந்து வர டப்பா தென்படுது.

தேர்ப்பாகன் அந்த டப்பா தங்கப் பேரம், முத்துக்கள் இருக்குமுனு நினைச்சி டப்பியத் திறக்கான். கழுத்து கவச குண்டலத்தோட குழந்தை இருக்குறதைப் பார்த்து அதிர்ச்சி ஆகுறான்.

"எந்த கண்டாரஓலி இந்தக் காரியத்தைப் பண்ணுனது?" னு குழந்தையைத் தூக்கிட்டு போயி, வீட்டில் இருக்குற அவனோட பொண்டாட்டிக்கிட்ட காட்டுறான்.

தேவராட்டி பொண்டாட்டி குழந்தையைப் பார்த்து சந்தோசப்படுறா.

"நமக்கும் குழந்தை இல்ல, இந்தக் குழந்தை பாக்க நல்லாருக்கு. அதனால இந்தக் குழந்தைக்கு கர்ணன் னு பேரு வச்சி நாமே வளர்ப்போம்" னு புருசன்ட்ட சொல்றா.

அவனும் சரினு சொல்லி சந்தோசமா வளர்க்குறாங்க.

இந்த சமயத்து குந்திபோஜன் மன்னன், தன்னோட மக குந்திக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கணுமுனு ஆசப்படுறான். அமைச்சர்கள் எல்லாம் கூப்பிட்டு, குந்திக்கு சுயம்வரம் நடத்த, எல்லா அரசர்களுக்கும் ஓலை அனுப்பச் சொல்றான். சுயம்வர ஓலையை அனுப்புறாங்க.

சுயம்வர ஓலை பீஷ்மர் கைக்குக் கிடைக்குது. உடனே பீஷ்மர் தன்னோட தம்பியின் ரெண்டாவது வாரிசான பாண்டுவைக் கூப்புடுறான்.

பாண்டு, "என்ன பெரியப்பா?" னு வரான்.

பீஷ்மர் பாண்டுவைப் பார்த்து, "டேய் பாண்டு பயலே.. பக்கத்து நாட்டு குந்திபோஜன் மன்னன், அவன் மகளுக்கு சுயம்வரம் நடத்துறான்டா. அது போயி கலந்துக்கோ. நீயும் எத்தனை நாளைக்குத்தான் சொந்தக் கையில் வாழ்வ? உங்க அண்ணன் திருதராஷ்டிரனுக்கு மாதிரி உனக்கும் கல்யாணம் ஆகவேண்டாமா? உடனே புறப்படு" னு சொல்றான்.

பாண்டு கிளம்பிட்டான்.

சுயம்வரத்து எல்லா நாட்டு மன்னனும் வரிசையி உக்காந்திருக்காங்க. பாண்டுவும் அங்கே உக்காந்திருக்கான். குந்தி பாக்குறதுக்கு ஏஞ்சல் மாதிரி இருக்கா. பொட்டு மாதிரி இருக்குற குந்தியைப் பார்த்து எல்லாம் நாட்டு இளவரசர்களும் வழிஞ்சிகிட்டு கிடக்கானுக.

பாண்டுவும் ஓவரா வழியுறான்.

குந்தி கையில் மாலை வைத்துக்கிட்டு, யாரு கழுத்துல போடலாமுனு யோசிச்சுக்கிட்டு இருக்குற எல்லாம் இளவரசர்களையும் பாக்குறா. பாண்டுவையும் பாக்குறா.

"என்னடா இவன், யாருக்கும் சம்பந்தமில்லாம ஒயிட்டா உக்காந்துருக்கான். ஆளும் பாக்க ஒரு டப்பப்பா இருக்கான்" னு மாலை பாண்டு கழுத்துல போடுறா.

பாண்டுக்கும், குந்திக்கும் கல்யாணம் ஆகுது.

குந்திபோஜன் மன்னன் சீர் வரிசையோட மகள் குந்தியை அஸ்தினாபுரத்துக்கு அனுப்புறான்.

பீஷ்மர் பாண்டுவுக்கு இன்னொரு பொண்டாட்டி இருந்தா சிறப்பா இருக்குமுனு யோசிக்குறான். மித்திரநாட்டு மன்னன் சிபிச்சக்ரவர்த்தி மகனான மித்திரனின் மகளைப் பாண்டுவுக்குப் பொண்ணு கேக்குறான் பீஷ்மர்.

அந்தப் பொண்ணோட பேரு மாத்ரி. ஆளும் ஒரு மாதிரிதான், அழகுனா அழகு.. அப்படி ஒரு அழகு. அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பேரு சல்லியன்.

சல்லியனுக்கு பீஷ்மரைப் பிடிச்சிப் போக, தங்கச்சியைப் பாண்டுவுக்குத் தர சம்மதிச்சான்.

பாண்டுக்கும் மாத்ரிக்கும் கல்யாணம் கிராண்டா நடந்துச்சி.

அந்தப் படம் பாண்டு போர் செஞ்ச மகதம், விவகதம், காசி, அங்கதம் னு நாலு நாட்டையும் ஜெயிக்கான்.

அப்புறம் பீஷ்மர் தன்னோட தம்பியின் கடைசி வாரிசான விதுரனுக்கு பொண்ணு தேடுறான். கிருஷ்ணனோட பாட்டன் தேவகன் ங்கிற மன்னனுக்கு ஒரு ஐயர் மாமி மூலமா பொறந்த சாத்வி ங்கிற பொண்ணுக்குட்டியை விதுரனுக்குக் கட்டி வைக்கிறான்.


பரிகாரமும் இல்ல, பனியாரமும் இல்ல - பாண்டுவுக்கு முனிவர் விட்ட சாபம்

இதுதான்.. மகாபாரதக் கதைத் - 10

ஒரு வழியா பீஷ்மர் தம்பி மகன்கள் மூணு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சி வச்சிட்டான். பிறகு பாண்டுவை ஹனிமூனுக்கு அனுப்பி வச்சான் பீஷ்மர். பாண்டுவும் அவனோட பொண்டாட்டிகள் குந்தி, மாத்ரியோட டபுள்ஸ் ஹனிமூனுக்கு ஊட்டி மாதிரி இருக்குற ஒரு மலைக்காட்டு பக்கம் தென்னிவுக்கு கிளம்பிட்டான்.

அருமையான காட்டிப்பகுதி, ச ச னு விழுற அருவி சத்தம், ஆள மயக்கும் பூஞ்சோலை, வேட்டேட் மாதிரி புல்வெளிகள், மூவடத்துர ஈரக்காத்து, அதோட புசுபுசுனு பெய்ற சாரல் மழைனு செம அட்வெஞ்சர் பகுதிக்கு ஹனிமூன் வந்துருக்காங்க. அங்க ஒரு கூடாரத்தப் போட்டு பாண்டு, ரெண்டு பொண்டாட்டிகளோட தங்கிருக்கான்.

கூடாரம் போட்டவனுக்கு கூடாரம் போடாம, "வேட்டைக்கு கிளம்புறேன்"னு சொல்லிருக்கான். பாண்டு ஒரு வேட்டை பிரியன். "ரெண்டு பேரும் டெண்டுக்குள்ளேயே இருங்கடி, நான் வேட்டைக்குப் போயிட்டு வர்றேன்"னு வேட்டைக்குக் கிளம்பிட்டான். சமவெளி பக்கமா போறான், ஆடு, மாடு, பன்னினு எல்லாம் விலங்குகள் இருக்கு.

"எதையாவது அடிச்சி, புது பொண்டாட்டிகள் பேருக்கும் பெரிய விருந்தா வைக்கணுமுன்னு" யோசிச்ச பாண்டு, ஒரு மான் கூட்டத்தைப் பாக்குறான். மான் கூட்டத்தில் ரெண்டு மான் மட்டும் தனியா ஜோடி சேர்ந்து நிக்குது. ஒரு டென்ஸ் மான், டீஸ் மானை ஏறிட்டு மேட்டர்க்கு பாக்க சோம்பலாகிட்டு கிடக்கு. அந்த நேரம் பார்த்து பாண்டு பய, மேட்டர்க்கு சொணங்குன ஆண் மான் மேலையும், ஈடு கொடுத்துட்டு இருந்த பெண் மான் மேலையும் அம்பு விட்டுறான்.

பாண்டு அம்பு விட்டது அந்தப் பக்கமா ஒரு கதறல் சத்தம்.

"எந்த பயபுள்ளடா என் மேல் அம்பு விட்டது?"னு மார் அம்பு பாஞ்ச நிமிஷம், பெரிய விழுந்துருது ஆண் மான்.

பாண்டு அங்கிட்டும் இங்கிட்டும் முழிக்கிறான். "மான அம்பு விட்டா யார்ரா பேசுறது?"னு மானு பக்கத்து போறான்.

"என்ன ஏண்டா அம்பு விட்ட?"னு மானு பாண்டுவைப் பார்த்துக் கெக்க, "தெரியாம நடந்துருச்சி மானே"னு பாண்டு சொல்றான்.

அதுக்கு அந்த மான், "நான் யாருன்னு தெரியுமாடா...? என் பேரு கிந்தகமுனிவன். உங்கள மாதிரி மனுசப் பிறவியா வாழப் பிடிக்காமத்தான்டா மான் கூட்டத்தோட மானா வாழுறேன். இப்பதான் ஒரு லேடீஸ் மான் மேல மேட்டர்க்கு கரெக்ட் பண்ணுவேன், அதுக்குள்ள என்னய அம்பு விட்டு படுக்க போட்டயடா.."னு மார் சொருக்குனு இருந்த அம்பைப் பிடிச்சிட்டு முனிவனா மாறுறான்.

பாண்டு பதட்டத்து, "என்ன மன்னிச்சிருங்க முனிவரே, தெரியாம நடந்துருச்சி.. நீங்க மான் கூட எல்லாம் வேல பாப்பீங்க தெரியாது.. என்னய மன்னிச்சிருங்க முனிவரே.."னு முனிவன் காலப்புடிச்சி அழுகுறான்.

அதுக்கு முனிவன், "உனக்கு மன்னிப்புங்கறது கிடையாது. நீ மன்னிக்கிற அளவுக்கு சாதாரண பாவமா பண்ணிருக்க, என்னய மேட்டர் பாக்கவிடாம அம்பு விட்ட.. இது எவ்வளவு பாவம்னு உனக்குத் தெரியாம, கண்ணு தெரியாத கபோதியா நீ.. சுத்தி அவ்வளோ மான் நிக்க, ஏறுற மானத்தான் அடிப்பியே? அவ்வளவு திமிர்..?

இந்த பாவத்துக்கு மன்னிப்பே கிடையாதுடா.. நான் போடுறத தடுத்ததால இந்த ஜென்மத்துக்கு நீ போடவே முடியாதுடா.. போடுற மூடு வந்து நீ எப்ப உன் பொண்டாட்டி கூட மேட்டர் பண்ணுறியோ, பண்ணுற பாதியிலேயே நெஞ்சப் புடிச்சி செத்துப்போவ்டா.. இதுதான் நான் உனக்கு கொடுக்கிற சாபம்"னு முனிவன் சொல்ல,

சாபத்தைக் கேட்ட பாண்டு பதறிப்போயிட்டான்.

"முனிவரே.. இது ரொம்ப மோசமான சாபமா இருக்கு. இதுல இருந்து வெளியேறதுக்கு ஏதும் பரிகாரம் இருக்கா?"னு கேக்குறான்.

"பரிகாரமும் இல்ல, பனியாரமும் இல்ல.. ஒழுங்கா கிளம்பிரு"னு சொல்லிட்டு நெஞ்சைப் புடிச்சிட்டு முனிவன் செத்துட்டான்.

"அய்யய்யோ.. முனிவன் செத்துட்டானா..!"னு பாண்டு அவசர அவசரமா பொண்டாட்டிகள் இருக்குற கூடாரத்துக்கு போறான்.

பொண்டாட்டிகளைப் பார்த்து நடந்ததை சொல்றான். நடந்ததைக் கேட்ட ரெண்டு பொண்டாட்டிகளுக்கும் தலை சுத்திப்போச்சி.

"வருத்தப்படாதீங்க அத்தான்.. படுபாவி முனிவன் இப்படியொரு சாபத்தைப் போட்டுட்டானே.. இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கும். மனச மட்டும் தளரவிடாதீங்க"னு குந்தி சொல்றா.

"ஆமா அத்தான், தெம்பா இருங்க"னு மாத்ரி ஆறுதல் சொல்றா.

மனைவிகளிடம் இந்துதர்மத்தை விளக்கிய பாண்டு -

முனிவர் விட்ட சாபத்தால் ரொம்ப பீலிங்கா இருந்த பாண்டு, அவனோட ரெண்டு பொண்டாட்டிகளையும் கூப்புடுறான். குந்தியும், மாத்ரியும் என்னங்கன்னு வராங்க.

"அருமையான பொண்டாட்டிகளே.. முனிவர் விட்ட சாபத்தால் நான் ரொம்ப சங்கடப்பட்டு கிடக்கிறேன். எனக்கு உங்க ஆறுதல் வேண்டாம், நீங்க ரெண்டு பேரும் அரண்மனைக்கு போயி இங்க நடந்தத எல்லாம் சொல்லுங்க. நான் இங்கேயே துறவி வாழ்க்கை வாழப் போறேன்"னு சொல்றான்.

அதுக்கு மாத்ரி "இதுக்கு முன்னாடியும் நீங்க இப்படி தானே இருந்தீங்க அத்தான்.."னு சொல்ல,

"யம்மா தாயே.. நானே சங்கடத்து இருக்கேன் சொன்னா கேளுங்க.. என்னய இன்னும் சங்கடப்படுற மாதிரி பேசாதிங்க.. முத கிளம்புங்க"னு பாண்டு சொல்றான்.

அதுக்கு பொண்டாட்டிக, "உங்கள விட்டு நாங்க சந்தோசமா இருக்க முடியாது, நாங்களும் உங்களுக்கு துணையா உங்களோடவே இருக்கோம்"னு சொல்லிட்டாளுக.

அதுக்கு பாண்டு, "சரி.. இருந்து தொலைங்க.. ஆனா சந்தோசமா இருக்க முடியாது.."னு சொல்லிட்டு தன்னோட வேலக்காரங்கள கூப்பிட்டு, இங்க நடந்த விஷயத்த அரண்மனைக்கு சொல்லி சொல்லி எல்லாத்தையும் அனுப்பிட்டு. அவனும் அவன் பொண்டாட்டிக மட்டும் காட்டுக்குள்ள துறவு வாழ்க்கை நடத்துறாங்க.

காட்டுக்குள்ள பாண்டுக்கு ரொம்ப முனிவர்கள் பழக்கம் ஆகுது. ஒருசமயம் ஒரு ரிஷிக கூட்டம் அந்தப் பக்கமா நடந்து போறாங்க. அதப் பாத்த பாண்டு, "நீங்க எல்லாம் எங்க போறீங்க?"னு கேக்கான்.

அதுக்கு அந்தக் கூட்டத்தில இருந்த ஒரு ரிஷி, "நாங்க சொர்க்கத்துக்கு போறோம்"னு சொல்றான்.

அதுக்கு பாண்டு, "நானும் வரட்டுமா?"னு கேக்குறான்.

அதுக்கு ரிஷி, "புள்ளகுட்டி இருக்குறவனுக்குத்தான் சொர்க்கத்துல இடம் கிடைக்கும், உன்ன மாதிரி இருக்குற ஆளுக்கெல்லாம் இடம் கிடைக்காது. உனக்கு குழந்தை இல்லாததால உனக்கு சொர்க்கம் கிடைக்காது"னு சொல்லிட்டான்.

"ஓத்தா போறேன் வாரேன் எல்லாம் கேவளப்படுத்துறானே"னு ரிஷி சொன்னத கேட்ட பாண்டு ரொம்ப பீலிங்க நடந்து வரும் போது ஒரு முனிவன் கூப்புடுறான்.

முனிவன்ட்ட போன பாண்டு அந்த ரிஷி சொன்னத சொல்லி அழுகுறான்.

"பீல் பண்ணாத பாண்டு, உனக்கு பஞ்சபாண்டவர்கள் னு அஞ்சு குழந்தைக பொறக்கும். அதுக்கு அப்பறம் உனக்கு சொர்க்கம் கிடைக்கும்"னு முனிவன் சொல்றான்.

"முனிவன் விட்ட சாபம் இருக்கும் போது எனக்கு எப்படி அஞ்சு குழந்தை பொறக்கும்?"னு பாண்டு கேக்குறான்.

அதுக்கு முனிவன், "பாண்டு நீ ஒரு மண்டு. உனக்கு இந்துதர்மமான மனுதர்மம் பத்தி தெரியாதா.? இந்துதர்மப்படி நடந்துக்கோ, உனக்கு சொர்க்கம் கிடைக்கும்"னு சொல்றான்.

ஓ... இப்படி ஒரு மேட்டர் இருக்கோன்னு யோசிச்ச பாண்டு, "ரொம்ப தேங்க்ஸ் முனிவரே"னு சொல்லிட்டு பாண்டு பொண்டாட்டிககிட்ட போறான்.

"அருமையான பொண்டாட்டிகளா, இங்க வாங்க. எனக்கும் சொர்க்கம் கிடைக்கும்"னு ரெண்டு பேருட்டையும் சொல்றான்.

எப்படி?னு அவன் பொண்டாட்டிக கேக்க, அதுக்கு பாண்டு சொல்றான், "ரெண்டு பேரும் நான் சொல்றத பண்ணுனா எனக்கு சொர்க்கம் கிடைக்கும்."

"என்ன பண்ணனும்?"னு பொண்டாட்டிக கேக்க, அதுக்கு பாண்டு,

"இந்துதர்மப்படி குழந்தை பாக்கியம் இல்லாதவங்க, அவங்க பொண்டாட்டிய ஒரு ஐயர்ட்ட கூட்டிக்குடுத்து, ஐயர் பாத்த மேட்டர் மூலமா பொறக்குற குழந்தைய தன்னோட வாரிசு னு ஏத்துக்கலாம். அவங்களுக்கும் புத்திர பாக்கியம் கிடைச்சிரும்"னு பொண்டாட்டிககிட்ட இந்துதர்மத்த பத்தி கிளாஸ் எடுக்கான்.

பொண்டாட்டிக ரெண்டு பேரும் பாண்டுவ பாத்து, "அதுக்கு நாங்க இப்ப என்ன பண்ணனும்?"னு கேக்குறாளுக.


ஆட்டுக்குட்டியுடன் காந்தாரி செய்த கல்யாணம் - போர் செய்யும் பீஷ்மர் 

ரெண்டு பொண்டாட்டி கூட ஹனிமூன் போன பாண்டுக்கு இப்படி ஒரு சாபம் வந்த செய்தியை படைவீரர்கள் பரத நாட்டில் இருக்குற பீஷ்மர்க்குப் போயி சொல்றாங்க. அதிர்ச்சியான பீஷ்மர்,

"என் தம்பியின் ரெண்டாவது மகன் பாண்டுவுக்கு இந்த நிலைமையா..? ஹனிமூன் போன இடத்துலாய் விரிச்சி போனா வேற வேலையைப் பார்க்காம, இந்த பாண்டு பயலுக்கு மான் வேட்டையாட அவசியம் தானா.. வயசாகியும் இன்னும் விவரம் தெரியாத லூசு பயனா இருக்கானே.."னு கண்ணு தெரியாத திருதிராஷ்டிரன்ட்ட சொல்லி வேதனைப்படுறான்.

அதுக்கு திருதராஷ்டிரன்,

"நம்மகிட்ட என்ன இருக்கு பெரியப்பா.. இந்த பாண்டு பயலுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சும் பொறுப்பில்லாம இருக்கான். ஹனிமூனு போன இடத்துல ஓட்டய தேடாம வேட்டைய தேடுனா இந்த நிலைமை தான் வரும்.

அந்த கிந்தம முனிவன் விட்ட சாபத்துக்கு ஏதும் பரிகாரம் இல்லையா பெரியப்பா..?"னு கேக்குறான்.

அதுக்கு பீஷ்மர்,

"என்ன பண்றது மகனே.. உனக்கு கண்ணு தெரியாது இருந்தாலும் உனக்கு காந்தாரி, கூடவே அவ தங்கச்சி பத்து பேர கட்டிச் சேச்சேன், நீ ஒழுங்கா உன் வேலைய பாத்துட்டு இருக்க.. உன் தம்பிக்கு கண்ணு இருந்தும் இப்படி பண்ணிட்டானே, முனிவன் விட்ட சாபத்துக்கு பரிகாரம் சொல்லாமே அந்த முனிவனும் செத்துட்டானாம்.. இப்ப நாம என்ன பண்றது..? உன் தம்பி காட்டு ரெண்டு பொண்டாட்டி இருந்தும் துறவியா தன்பகையே தனக்குதவி னு என்னை மாதிரியே சிங்கிள்ஸா வாழ்றத நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு"னு சொல்ல,

அந்த சமயம் அந்த பக்கம் வந்த காந்தாரி,

"பீஷ்மர் மாமா.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. என்னோட புருஷன் திருதராஷ்டிரன், அவர் தம்பிக பாண்டு, விதுரன் எல்லாம் நீங்க வளர்த்த புள்ளிங்கோ.. அவங்களுக்கு ஒரு குறையும் வராது.. என் கொழுந்தன் பாண்டு மேல போட்ட சாபத்துக்கு எப்பிடியும் பரிகாரம் இருக்கும். அத பண்ணுனா சரி ஆயிரும் மாமா"னு பீஷ்மர்ட்ட சொல்றா..

"என்ன மருமகளே இப்படி சொல்ற.. அந்த முனிவன்தான் பரிகாரமும் இல்ல, பணியாரமும் இல்லன்னு தெளிவா சொல்லிட்டானே"னு பீஷ்மர் காந்தாரிட்ட கேக்க..

அதுக்கு காந்தாரி,

"மாமா.. இப்ப என்னை எடுத்துக்கோங்க.. எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி செவ்வாய் தோஷம் இருந்துச்சி, என்னைய எவன் முத கட்டுறானோ, கட்டுன மாப்பிள்ள ரத்தம் கக்கி செத்துருவான் னு ஜோசியம் சொல்லிச்சி.. அதுக்கு பரிகாரமா எங்க அப்பன், எனக்கு இருந்த தோஷத்த கழிக்க முத ஒரு ஆடு கூட கல்யாணம் பண்ணிவைக்க ஆடு செத்துப்போச்சி, அடுத்து அந்த ஆட்ட கரி சமைச்சு விருந்து வச்சி தின்னுட்டோம்.. அடுத்து இப்ப உங்க பையன் திருதராஷ்டிரன்க்கு என்னய கல்யாணம் முடிச்சி வச்சீங்க.. என்னோட செவ்வாய் தோஷ பிராப்ளம் சால்வ். அதனாலதான் மாமா இந்தமாதிரி என் கொழுந்தன் பாண்டுவுக்கும் பரிகாரம் இருக்கும், தேடி பண்ணுங்க"னு பீஷ்மர்ட்ட சொல்றா..

பீஷ்மர் கோவமாயிட்டான்..

"ஏன்டி.. என்ன தைரியம் இருந்தா உங்க அப்பன் என் தம்பிக்கு பொண்ணு கொடுக்காத முன்னமே உனக்கு ஒரு ஆட்ட கல்யாணம் பண்ணி வச்சிருப்பான்.. எங்க பரத வம்சத்தையே ஏமாத்திட்டான் உங்க அப்பன்.. இப்பவே அவன் நாட்டோட போர் செஞ்சி அவனை பழி வாங்காம விடமாட்டேன்.. உங்களுக்கு எங்க பரத வம்சம் என்ன தொக்கா..?"னு கோவப்பட..

"மாமா.. அது சும்மா சாஸ்திரத்துக்காக நடந்த கல்யாணம்.. நானும் உங்க மகனும் இப்ப நல்லாத்தான் வாழ்றோம்.. நீங்க என்னோட அப்பாவ தப்பா நினைச்சி கேவலம் ஒரு ஆட்டுக்குட்டிக்காக போர் செய்யப் போறேன்னு சொல்லும் போது ரொம்ப கேவலமா இருக்கு"னு காந்தாரி சொல்ல,

"உங்க அப்பன் எவ்வளவு பெரிய துரோகத்த இந்த பரதநாட்டுக்கு செஞ்சிருக்கான். எப்ப உனக்கு ஒரு ஆட்ட கல்யாணம் முடிச்சி வச்சானோ.. அப்பவே அந்த ஆடு தான் உனக்கு முதல் புருஷன்.. எப்ப அந்த ஆடு செத்துப்போச்சோ அப்பவே நீ ஒரு விதவை.. ஒரு விதவைய ரெண்டாம் தாரமா உங்க அப்பன் என்னோட மகனுக்கு கட்டிக் கொடுத்து எங்க ஏமாத்திட்டான்.. ஒரு விதவைக்கு கல்யாணம் பண்றது இந்து தர்மத்தில எவ்வளவு பெரிய பாவம்..? அந்த பாவத்த என்னோட பரத வம்சத்துக்கு உங்க அப்பன் பண்ணிட்டான், அவன சும்மா விடலாமா..? இப்பவே படைகள திரட்டி போர் செஞ்சி பழிவாங்குறேன்"னு சொல்றான்.

"மாமா.. ஒரு ஆட்டுக்குட்டிக்கு போரா..? மாமா உங்க மகனும் நானும் சந்தோசமா இருக்கோம். அவருக்கு கண்ணு தெரியங்கிற குறைக்காக நானும் என் வாழ்நாள் முழுவதும் கண்ண கட்டிக்கிட்டு குருடியா வாழ்ந்துட்டு இருக்கேன்.. என்னோட இந்த மணவாழ்க்கைய கொச்சைப்படுத்தாதீங்க, இதுக்கெல்லாம் போர் செஞ்சி போர் ங்கிற வார்த்தைய கொச்சைப்படுத்தாதீங்க"னு காந்தாரி சொல்ல,

இன்னும் கோவமான பீஷ்மர்,

"டேய்.. மகனே திருதராஷ்டிரா.. உன் பொண்டாட்டிக்கு வாய் நீளுது அடக்கி வை.. எனக்கே அறிவுரை சொல்றா.. இந்த போர் நடந்தே தீரும்.."னு சொல்லிட்டு போருக்கு கிளம்புறான்.

"என்னங்க.. நான் சாஸ்திரத்துக்காக கல்யாணம் பண்ணுனாங்கன்னு உங்க பெரியப்பாட்ட இவ்வளவு எடுத்து சொல்லியும்.. போர்க்கு கிளம்பி போயிட்டுருக்காரு.. நீங்க அவர தடுக்காம நடு ஹால்ல உக்காந்து மிச்சர் சாப்பிட்டுட்டு இருக்கீங்க... எதாவது பண்ணுங்க..?"னு காந்தாரி திருதராஷ்டிரன பாத்து கேக்க,

"பொறும்மா.. பெரியப்பா பீஷ்மர் எது பண்ணுனாலும் நம்ம நல்லதுக்கே பண்ணுவாரு.."னு சொல்றான்.

பீஷ்மர் காந்தார நாட்டின் மீது போர் செய்ய வந்த செய்திய கேள்விப்பட்ட காந்தாரநாட்டு மன்னன் சுபலன் என்ன பண்றது னு தெரியாம,

"ஆட்டுக்கு இவ்வளவு அக்கப்போரா... பீஷ்மர் பய ரொம்ப கிருத்தனம் புடிச்சி அலையுறானே.."னு தன்னோட படைகள உடனே திரட்டி "ரெண்டு ஒன்னு பாத்துப்புடலாம்"னு எல்லையில நிக்கான்.

பீஷ்மர் படைகள் வந்து சண்ட போட, இந்த சண்டை ரெண்டு நாளா நடக்குது. காந்தாரநாட்டு மன்னனின் மகங்க ரெண்டு பேர போர்ல போட்டுருறான் பீஷ்மர். மிச்சம் இருக்குறது காந்தார நாட்டு மன்னன் சுபலனும், அவன் மகன் சகுனியும்.. ரெண்டு பேரும் எவ்வளவு சண்ட போட்டும் பீஷ்மர் படைய ஜெயிக்க முடியல..

போர்ல ஜெயிச்ச பீஷ்மர், சுபலன் குடும்பத்தோட புடிச்சி கொண்டு போயி சிறைக்கைதியா அடைக்கான்.


பசியால் செத்த சகுனி குடும்பமும் - சப்பாணி சகுனியின் சபதமும் - பீஷ்மரின் சித்திரவதை

காந்தாரநாட்டு மன்னன் சுபலன் குடும்பத்தோட ஜெயிலில் அடைச்ச பீஷ்மர் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சோறு அதுவும் ஒரு கை உருண்ட அளவே சோறு போட்டு சித்திரவதைப்படுத்துனான். குடிக்க தண்ணி கூட குடுக்க மறுத்து பட்டினியா சாகட்டும் னு ரொம்ப கொடுமை பண்ணுனான். இந்த கொடுமைய எல்லாம் தாங்கிட்டு சிறையில் இருந்த சுபலன், அவன் மகன் சகுனிய கூப்புடுறான்.

"என்னப்பா சொல்லுங்க"னு சகுனி கேக்க,

"மகனே சகுனி.. நாம என்ன தப்பு செஞ்சிட்டோம் னு இவன் நம்ம நாட்டுமேல போர் செஞ்சதும் இல்லாம நம்மளையும் இப்படியொரு பிடி சோறுக்கு பிச்சைக்காரன் போல நம்ம குடும்பத்த நடத்துறான்.. நாம அரசரா வாழ்ந்த குடும்பம்.. இவன் கொடுக்குற ஒரு பிடி சோறு தின்னு உயிர் வாழணுமுனு அவசியம் இல்ல, எனக்கும் உன் அம்மாகாரிக்கும் கொடுத்த ஒரு பிடி சோறு நீயே தின்னு"னு கொடுக்கா சுபலன்.

"அப்பா வேண்டாம்ப்பா.. நீங்க சாப்புடுங்க. எப்படி என் சகோதரி காந்தாரி நம்மள விடுதலை பண்ணிருவா.. சோறு சாப்புடுங்கப்பா.."னு அழுதுட்டே சுபலன் கொடுத்த சோற வாங்க மறுக்குறான்.

"மகனே சகுனி.. எவ்வளவு அழகான குடும்பம். காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமா மூணு மகன்கள். அதில் நீ இளையவன். பீஷ்மர் என்னோட ரெண்டு மகன்களையும் கொல்ல, இப்ப அனாதைகளா ஆயிட்டோம். நான் கொடுக்குற சோற நீ சாப்பிட்டு உயிரோட இருடா மகனே.. அவனுக நமக்கு பண்ணுன கொடுமைக்கு நீ உயிரோட இருந்து பழி வாங்கணும். இது என் சத்தியம்"னு சொல்றான் சுபலன்.

"நீங்களும் அம்மாவும் உயிரோட இருக்கணும். சோறு சாப்புடுங்கப்பா.. அம்மா அப்பாட்ட எடுத்துச் சொல்லுங்க"னு சகுனி அழுறான்.

"டேய்.. கோழை மாதிரி அழக்கூடாது.. உனக்கு நான் எவ்வளவு கத்து கொடுத்திருப்பேன்.. நாங்க செத்ததான் நீ பீஷ்மர போடுவ, உனக்கு கத்து கொடுத்த என் விரல்கள் வேணாம்"னு ஒவ்வொரு விரலையா வெட்டிக்கிறான்.

"வேணாம்ப்பா.. நான் கொல்றேன் அந்த பீஷ்மர, எங்க நீங்க உங்களே வெட்டிக்க வேணாம்"னு தடுக்குறான்.

"டேய்.. மகனே.. உன் ரெண்டு அண்ணன்களையும் பீஷ்மர் குத்திக் கொன்னது இன்னும் கண்ணு முன்னாடியே இருக்கு. ராணி மாதிரி இருந்த என் மகள ஒரு ஆட்டுக்குட்டி கூட கம்பேர் பண்ணி கேவலப்படுத்துறான், போர் செஞ்சி நாட்டு மக்கள அழிச்சிட்டான். அவன் எப்படி இவ்வளவு மகனயா போட்டு தள்ளுனானோ.. அதே மாதிரி நீயும் பீஷ்மர் குடும்பத்து ஒரு பய மிச்சம் வைக்காம போடணும்.. அப்பனுக்கு சத்தியம் பண்ணுடா மகனே..."னு சுபலன் கேக்க..

அழுதுட்டே சத்தியம் பண்ணுறான்.

"சத்தியம்ப்பா.. நான் அவனுகள போடுறேன்ப்பா.. ஆனா பீஷ்மர எதுக்குற பலம் எனக்கு இல்லையே.."னு சகுனி அழுக..

"டேய்.. மகனே.. உன்ன மல்லுக்கு யாருடா நிக்க சொன்னது.. நீ படிச்ச அறிவா சிந்திச்சி ஆட்படைய குழப்பி ஒவ்வொருத்தனயா போடு.. வீரத்த விட சூதுவாது முக்கியம் மகனே.."னு சுபலன் சொல்ல,

"சரிப்பா, நீங்க சொல்ற மாதிரி பன்றேன்ப்பா"னு சகுனி சொல்றான்.

"மகிழ்ச்சிடா.. இந்தா என்னோட சோத்து உருண்ட சாப்புடு.. இது அம்மாவோட சோத்து உருண்ட, நீ சாப்புடு.."னு டெய்லி சுபலன் பட்டினி கிடந்து தனக்கு கிடைச்ச ஒரு வாய் சோத்தையும் சகுனிக்கு ஊட்டி விட்டு வளர்க்குறாங்க.

நாள் போகப் போக பட்டினி கிடந்து சகுனி அம்மா இருந்துட்டாங்க. அப்றம் சுபலன்க்கும் ரொம்ப சீரியஸ் கண்டிசன்.

"டேய் மகனே.. அப்பன் இப்ப சாகப்போறேன், சாவு நெருங்கிருச்சி. என்னோட பக்கத்துல வாடா.."சுபலன் கூப்புட, சகுனி "அப்படி நடக்காதுப்பா.."னு பக்கத்து போக..

படக்குனு சகுனி கால் புடிச்சி இழுத்த சுபலன், சகுனியோட ஒரு கெண்டைக்கால் நரம்ப அறுத்துப்புட்டான்.

"அப்பா.. வலிக்குதுப்பா. எதுக்கு கால் வெட்டுனீங்க..? நான் இனிமேல் சப்பாணி மாதிரி நடந்து எப்படி அவுங்கள போடப்போறேன்..? எதுக்கு இப்படி செஞ்சிங்க?" சகுனி கேக்க..

"டேய் மகனே.. இந்த வலி எப்பவும் உன்னோட நெஞ்சிலேயே இருக்கணும். நீ எப்பவும் பீஷ்மர போட வெறியா இருக்கணும். உன் கால் வெட்டி சப்பாணியா ஆகிட்டேன்னு என் மேல் வருத்தப்படாதே.

உன்ன யாரும் சப்பாணி னு கூப்பிட்டா சப்பு அடிச்சிரு.. நீ அவமானப்பட்டாதான் ஒரு விஷயத்த சாதிக்க முடியும்"னு சொல்லிட்டு நெஞ்சைப் பிடிச்சு செத்துப் போறான் சுபலன்.

"அப்பா.. என்ன விட்டு போயிட்டியேப்பா.. நீ பண்ணுன சத்தியத்த கண்டிப்பா நிறைவேத்துவேன்ப்பா.."னு தேம்பித் தேம்பி அழுறான் சகுனி.

அப்பன் சுபலன் செத்த மேட்டர் தெரிஞ்ச காந்தாரி ரொம்ப கோவமாயி அவ புருஷன் திருதராஷ்டிரன்ட்ட சொல்லி பீஷ்மர்ட்ட சண்ட போட வைக்கா.

திருதராஷ்டிரன் பீஷ்மர பாத்து,

"பெரியப்பா, காந்தாரிய ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு நீங்க போர் செஞ்சிங்க, அவங்க மகங்க ரெண்டு பேர கொன்னிங்க.. இப்ப சுபலன் செத்துட்டான். இன்னும் அவங்க குடும்பத்துக்கு ஏன் இவ்வளவு கொடுமை பண்றீங்க..?"னு கேக்க..

"டேய்.. மகனே, உன் பொண்டாட்டி பேச்ச கேட்டு என்கிட்ட முட்டிக்கிட்டு நிக்காத.. சாதாரண துரோகமா பண்ணிருக்காங்க.. ஒரு ஆட்டுக்கு மொத்தமா காந்தாரிய கட்டி வச்சி ஏமாத்திட்டாங்க.. இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா எவ்வளவு கேவலமா நம்ம பேரை வச்சி பேசுவாங்க னு தெரியுமா..? அதான் பட்டினி போட்டு கொல்றேன்"னு பீஷ்மர் சொல்ல..

"பெரியப்பா.. இது ஓவர்.. என் பொண்டாட்டி எப்படிப்பட்டவங்கங்கிறது எனக்கு தெரியும்.. நீங்க இந்த விஷயத்துல தலையிடாதீங்க. இப்பவே சகுனிய விடுதலை செய்யணும்"னு திருதராஷ்டிரன் சொல்ல,

"சரி, எல்லாம் செத்ததுக்கு அப்புறம் இந்த பொடிப்பய நம்மள என்ன பண்ண முடியும்.. போய் தொலையட்டும்"னு சகுனிய விடுதலை பண்ணிறுறான் பீஷ்மர்.

ஜெயில்ல இருந்து வெளிய வந்த சகுனி, எப்படா இந்த பீஷ்மர் குடும்பத்தோட போட்டு தள்ளலாம் னு வெயிட் பண்ணிட்டு இருக்கான்.

 


 

பாண்டவர்களின் பிறப்பு

தயாகியததகள் - நான் ரெடி நீங்க ரெடியா.. - 

திருதராஷ்டிரன் காந்தாரி, வபமலி சகுனி குடும்பத்தைக் காப்பாத்துற பிரச்சினை போயிட்டு இருந்த சமயம், பாண்டு வம்சத்தில் குழந்தை வேணும்ங்கிற பிரச்சினை போயிட்டு இருந்தது.

பாண்டு இந்துதர்மத்தை எடுத்துச் சொன்ன பிறகு, குந்தி பாண்டுவை தனியா கூட்டிப் போயி,

"அத்தான்.. இங்க பாருங்க.. நமக்குப் புள்ள வேணுமுனா ஐயர்ட்ட படுக்க வேண்டியதில்ல. இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதானா என்னவோ, எனக்குக் கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி, எங்க அரண்மனைக்கு வந்த துர்வாச முனிவன் ஒரு வரம் கொடுத்தான். அதைப் ட்ரை பண்ணிப் பாக்கலாம்"னு சொல்றா.

"அது என்ன வரம்டி.."னு பாண்டு கேக்க, குந்தி சொல்றா,

"நான் யாரை வேண்டும்னு நினைச்சிக் கூப்பிடுறேனோ, அவங்க என் முன்னாடி வந்து நிப்பாங்க. என்னை மேட்டர் பாத்து ஒரு குழந்தையும் கொடுப்பாங்க"னு சொல்றா.

அதைக் கேட்ட பாண்டு,

"என்ன ஒரு அற்புதம்... இப்படியெல்லாம் வரம் இருக்கா... நாம குழந்தை பிறக்க ஐயர்ட்ட போக வேண்டியில்ல. குந்தி, நீ க்யூக்கா அறக்கடவுளை வேண்டு. அவன் வந்து உங்கூட படுத்துப் புள்ள தரட்டும்"னு குந்தியைப் பாத்துச் சொல்றான்.

குந்தியும் அறக்கடவுளான எமதர்மனை வேண்டுறா. உடனே எமதர்மன் வந்து குந்தி முன்னாடி நிக்கான்.

"குந்தி.. நான் ரெடி, நீ ரெடியானு" கேக்குறான் எமன்.

அப்புறம் குந்தியும் எமனும் மேட்டர் பண்றாங்க. எல்லாம் முடிஞ்சதும்,

எமன் சொல்றான்,

"குந்தி, உனக்குப் பொறக்கப் போற புள்ள நீதி தவறாம இருப்பான். தானம் தர்மம் பண்றதுல வல்லவன். தர்மன்னு கூட சொல்லலாம்"னு சொல்லிட்டு மறைஞ்சிருறான்.

குந்திக்கும் ஒரு பிள்ளை பொறக்கு. குழந்தைக்கு யுதிஷ்டிரன்னு பேரு வைக்கிறாங்க.

ஆனாலும் பாண்டுக்கு ஒரே குறையாவே தெரியுது. குந்தியைக் கூப்பிடுறான்.

"குந்தி டியர்.. எமன், புள்ளையக் குடுத்துட்டு, இவன் வளர்ந்து பெரியவனானதும் தானதர்மம் நல்லா பண்ணுவான்னு சொல்லிட்டு போறான். இந்த மாதிரி பண்ணுனா யாரு நம்ம சொத்தைக் காப்பாத்துறது?"னு கேக்குறான்.

"அதுக்கு என்ன பண்ண, அத்தான்"னு குந்தி கேக்க..

அதுக்குப் பாண்டு,

"அடியே குந்தி.. நம்ம சொத்தைக் காப்பாத்துற மாதிரி ஒரு பலசாலியான வாரிசு வேணும். நீ பலசாலியா இருக்குற வாயுபகவானைக் கூப்பிடு. அவன்ட்ட மேட்டர் பாத்து எனக்கு பலசாலியான புள்ளையக் குடுனு கேளு"னு சொல்ல, குந்தியும் சரின்னு சொல்லிட்டு வாயுபகவானைக் கூப்பிடுறா.

வாயுபகவானும் குந்திய பண்ணிட்டு கிளம்பிருறான். அது பிறந்த குழந்தைக்கு பீமன்னு பேர் வைக்கிறாங்க.

பாண்டுக்கு திரும்பவும் ஒரு குறை இருக்குற மாதிரி தெரியுது. மறுபடியும் குந்தியைக் கூப்பிடுறான்.

"நமக்கு இப்ப ரெண்டு வாரிசு இருக்கு. வெறும் வீரத்தை மட்டும் வச்சி ஒன்னும் பண்ணமுடியாது. அதனா, கல்வி, வீரம், வில்வித்தைன்னு எல்லாம் தெரிஞ்ச ஒருத்தன்தான் நம்ம நாட்டை ஆள்றது சரியா இருக்கும்"னு சொல்றான்.

அதுக்கு குந்தி,

"இப்ப யாருட்ட படுக்கணும்?"னு கேக்க,

"எல்லாக் கலைகளும் தெரிஞ்ச இந்திரனைக் கூப்பிட்டு பண்ணு, நமக்கு நல்ல திறமையான வாரிசு கிடைக்கும்"னு பாண்டு சொல்றான்.

குந்தியும் சரின்னு, இந்திரனை நினைச்சிக் கூப்பிடுறா. இந்திரனும்,

"எப்படா நம்மள கூப்பிடுவாங்க"னு எதிர்பார்த்ததைப் போல வேகமா வந்து குந்தி முன்னாடி நிக்கான்.


குந்தியும் மேட்டருக்கு ரெடி. இந்திரன் குந்தியைப் பண்ணி முடிச்சிட்டு சொல்றான்,

"குந்திக்குப் பிறக்கும் குழந்தை எல்லாக் கலையும் கத்துக்கிட்டு செமையா வருவான். குறிப்பா வில்வித்தை இவனை அடிச்சிக்க முடியாது. இவன் சிவன்ட்ட அஸ்திர அம்புகள் வாங்கி வித்தை காட்டுவான். அதனால் இவனுக்கு அர்ஜுனன்னு பேர் வையுங்க"னு சொல்லிட்டு மறைஞ்சிருறான்.

குந்திக்குப் புள்ள பொறந்துச்சி. அதுக்கு அர்ஜுனன்னு பேரு வச்சி, மொத்தம் மூணு புள்ளைகளையும் வளர்க்குறாங்க.

"குந்திக்கு மட்டும் எப்படி வரிசையா புள்ள பொறக்கு..? நம்மட்ட சாபம் மயிருனு ஏமாத்திட்டு, இந்த மனுசன் குந்திய மட்டும் டெய்லி வே பாத்துட்டு இருக்கான்.. இவங்கள சும்மா விடமாட்டேன்"னு கோவமான மாத்ரி, வேமா பாண்டுகிட்ட போயிக் கேக்குறா.

அதுக்குப் பாண்டு,

"இத வச்சி என்னைச் சந்தேகப்படுறயா..? சாபம் உண்மதான். அந்தக் குழந்தைகள் எனக்குப் பொறக்கல. உனக்கும் புள்ள ரெடி பன்றேன், அந்த அதிசயத்த பாரு"னு சொல்லி குந்தியைக் கூப்பிடுறான்.

"குந்தி டார்லிங்.. உனக்கு மட்டும் மூணு புள்ள இருக்கு, மாத்ரிக்கு இல்லன்னு என்னைச் சந்தேகப்பட்டு சண்டைக்கு வாரா.. அவளுக்கும் நீ மந்திரம் சொல்லிக் கொடுத்துடி"னு சொல்றான்.

குந்தியும் சரின்னு சொல்லிட்டு, மாத்ரிக்கு மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கா.

மாத்ரி மந்திரத்தைக் கத்துக்கிட்டு சூரியபகவானோட புத்திரராகிய அஸ்வினி குமாரர்களை வேண்டுறா.

அஸ்வினி குமாரர்கள் ட்வின்ஸ்.. ரெண்டு பேரும் வந்து மாத்ரி முன்னாடி நிக்க,

"நான் ரெடி, நீ ரெடியா மாத்ரி?"னு சூரியன் கேக்க,

"நான் எப்பவோ ரெடி, நீங்க ரெடியா?"னு மாத்ரி அஸ்வினி குமாரர்களைக் கூப்பிட,

ரூமுக்குள்ள போயி, மாத்ரியோட குரூப் செக்ஸ் பண்ணி முடிச்சிட்டு மறைஞ்சிருறாங்க சூரியன் மகங்க.


சூரியபகவான் மகங்க ரெண்டு பேரும் பண்ணுனதுனால மாத்ரிக்கு ரெட்டைக் குழந்தை பொறக்கு.

ஒன்னுக்கு நகுலன்னு, இன்னொன்னுக்கு சகாதேவன்னு பேர் வச்சி வளர்க்குறாங்க.

ஆதாரம்: (மஹாபாரதம் ஆதிபருவம் பகுதி 123).


கௌரவர்களின் பிறப்பு

  • குழந்தையைக் கொல்ல வேண்டாம்

குந்திக்கு ஃபர்ஸ்ட் குழந்தை யுதிஷ்டிரன் பிறக்குறதுக்கு முன்னாடியே பீஷ்மர் தம்பியோட மூத்த பையன் திருதராஷ்டிரன் பொண்டாட்டி காந்தாரி கர்ப்பமாயிட்டா. ஆனா, இரண்டு வருசம் ஆகியும் அவளுக்குப் புள்ள பொறக்கல. "பத்து மாசத்துலயே புள்ள பொறந்துருமே...? என்னடா இது.. இரண்டு வருசம் ஆகியும் புள்ள பொறக்கமாட்டிக்கு"னு காந்தாரி ஒரு அம்மிக்கல்லைத் தூக்கி அவளோட வயித்துல ஓங்கி அடிச்சிக்கிட்டா.

ஓங்கி அடிச்சதும், அவளோட கரு கஞ்சி, சதசதப்பா அவ காலுக்கு கீழே ஒழுகுது. காந்தாரி அதைப் பார்த்து அதிர்ச்சி ஆயிட்டா. அந்த சதையெல்லாம் கிளீன் பண்ணிட்டு இருக்கும்போது வியாசபகவான் காந்தாரி முன்னாடி வந்துநிக்கான்.

"அடியே காந்தாரி.. என்ன காரியம் பண்ணிருக்க? உனக்கு எதுக்கு அதுக்குள்ள இம்புட்டு அவசரம்? உன் வயித்துல உண்டான கருவைப் புட்டும் காலி பண்ணிட்டியேடி"னு திட்டுறான். அதுக்குக் காந்தாரி, "மன்னிச்சிருங்க பகவானே.. இரண்டு வருசம் கர்ப்பமா இருந்தும் ஒரு புள்ளபூச்சி கூட பொறக்கல.."னு சொல்லி அழுகுறா. அதுக்கு வியாசபகவான், "அழுகுறதை நிறுத்து.. இப்பயும் ஒன்னும் குடி முழுகிப்போகல. அந்த சதையெல்லாம் பொறுக்கி, நூறு பானையில ஒன்னு ஒன்னா போடு, அது வளர்ந்து உனக்கு நூறு குழந்தைகள் பொறக்கும்"னு சொல்லிட்டு மறைஞ்சிருறான்.

காந்தாரியும் வியாசர் சொன்ன மாதிரி, ஒழுகுன சதையெல்லாம் எடுத்து நூறு பானையில போடுறா. மிச்சம் ஒழுகிக் கிடக்குற பிசுர ஒரு குண்டாக்குள்ள போடுறா.

கொஞ்ச நாளுக்கு அப்பறம், சீமானுக்குப் பிடித்தமான ஆமக்குஞ்சி முட்டையை ஓடச்சிக்கிட்டு வெளியே வர மாதிரி, ஒரு பானையில இருந்து ஒரு குழந்தை வெளியே எட்டிப் பாக்கு. இப்படி முதலாவதாக எட்டிப் பார்த்த குழந்தைதான் "துரியோதனன்".

இந்த துரியோதனன் பானையில இருந்து பொறக்குற போது.. திடீர்.. திடீர்னு எல்லாப் பொருளும் கீழே விழுந்து உடையுதாம்... ஃபர்னிச்சர் எல்லாம் சாயுதாம்.. தூரத்தில் ஒரு கழுதை (... ....) கனைக்கிற மாதிரி ஒரு சவுண்ட்.. அப்படி மின்னல் எல்லாம் படபடப்பா.. படபடப்பா.. அடிக்க... கடைசியா திடீர்னு மேகம் எல்லாம் கருப்பா மாறி, புகை மாதிரி கிளம்பி அஸ்தினாபுர அரண்மனையைச் சுத்திட்டு இருந்துச்சாம்..

இதெல்லாம் கேள்விப்பட்ட பீஷ்மர் தம்பியோட கடைசி மகன் விதுரன், பீஷ்மர்கிட்ட சொல்றான். "பீஷ்மர்ப்பா.. இந்த மொத குழந்தை பிறந்தது, ஏதோ கெட்ட சகுனம் மாதிரி தெரியுது, எனக்கென்னமோ சரிப்படல.."னு சொல்றான்.

"அப்படித்தாண்டா மகனே எனக்கும் தோணுது"னு சொன்ன பீஷ்மர், உடனே காந்தாரி புருசன் திருதராஷ்டிரனைக் கூப்பிட்டு, "மகனே.. உனக்குப் பொறந்த இந்த மகன் நம்ம குலத்தை அழிக்கப் பொறந்த மாதிரி தெரியுது. இந்தக் குழந்தையைக் கொன்னுட்டு மீதி இருக்குற 99 குழந்தைய வளர்ப்போம்"னு சொல்றான்.

அதுக்குத் திருதராஷ்டிரன், "இல்ல பீஷ்மரப்பா.. இந்தக் குழந்தையக் கொல்ல வேண்டாம். இத வளர்ப்போம். வர்றதை அப்பறம் பாத்துக்கலாம்.. மீறி எவனுக்காகக் குழந்தையக் கொல்லணும்னு எண்ணம் வந்தா இங்க நடக்குறதே வேற.."னு ஸ்ட்ரிட்டா சொல்லிட்டான்.

துரியோதனன் பொறந்த பிறகு மீதி இருக்குற 99 குடத்துல இருந்தும் ஒரு ஒரு நாளா ஒவ்வொரு குழந்தையா பொறக்குது. 100 குழந்தைகள் பிறந்தது போக, லாஸ்ட்டா குண்டாக்குள்ள போட்ட பிசுருல இருந்து ஒரு பெண் குழந்தை பொறக்கு. அதுக்கு "துச்சலை"னு பேரு வைக்குறாங்க.

மொத்தம் கௌரவர்கள்னு 101 உருப்படி. 100 ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை. இந்தக் குழந்தைகள் வளர்க்க 'பேபி கிளாஸ்' மாதிரி ஆரம்பிச்சு ஒரு ஆயாவை வேலைக்கு விட்டு கண்ணும் கருத்துமா வளர்த்து வர்றாங்க.   

குறிப்பு :- கௌரவர்கள் வேற யாருமில்ல, பாண்டுவோட அண்ணன் திருதராஷ்டிரன் மகங்கதான். பாண்டு மகங்க பாண்டவர்கள்.

மேலும் ஒரு குறிப்பு :- இந்தப் பானைக்குள்ள போட்டு குழந்தைய வளர்க்குற கதையத் தூக்கிட்டு குளோனிங் முறைனு இந்து மதம் அப்பவே குளோனிங் முறையைக் கண்டுபிடிச்சிருச்சின்னு RSS, BJP தலைவர்கள், சங்கிகள் பீத்திட்டு அலையுறாங்க.. ஒரு கன்ராவிய அறிவியலோட சேர்த்து வச்சுப் பேசுறது மூத்திரக் குடிக்கிகள மிஞ்ச முடியாது.. ஆனா உண்மை என்னன்னா.? இந்து மதத்துல அவ்வளவு கடவுள்கள் இருந்து ஒரு பட்டி கூட கண்டுபிடிக்கலங்கறதுதான்.. அதான் நெசம்.


அந்த நேரத்தில் நெஞ்சைப் பிடிச்சிட்டு இறந்த பாண்டு - பாண்டு மரணமும் அஸ்தினாபுரப் பயணமும்

பாண்டு அவனோட இரண்டு பொண்டாட்டிக, அஞ்சு புள்ளகுட்டிகளோட காட்டுத் துறவு வாழ்க்கை வாழுறான். தன்னோட அஞ்சு பசங்களையும் சுக்கிராச்சாரியார்கிட்ட டியூஷன் சேர்த்து விடுறான். சுக்கிராச்சாரியார் பாண்டவர்களுக்கு பல கலைகளைப் பத்தி கிளாஸ் எடுக்கான். அவன் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் சொல்லித்தாறான். இந்த கிளாஸ நல்லா கவனிச்ச அஞ்சுபேரும், யுதிஷ்டிரன் நல்லா ஈட்டி எறியக் கத்துக்கிறான். பீமன் கதைய வச்சி பிராக்டீஸ் பன்றான். அர்ஜுனன் வில்வித்தை கத்துக்கிறான். நகுலனும், சகாதேவனும் நல்லா வாள் சுழட்டிட்டு கிடக்காணுக.

காட்டுக்குள்ள இப்ப வசந்தகால சீசன். பறவைங்க எல்லாம் குய்யாம்முய்யானு கத்திப் பாட்டு பாடுது, மயிலு அதுக்கு டான்ஸ் போடுது, காடு புல்லாம் கலர்கலரா பூக்கள் பூக்குது, பூவோட வாசனை எல்லா இடமும் பரவுது, வாசனைய மோப்பம் புடிச்சி வந்த வண்டுக பூக்கள் மேல படபடன்னு தூக்கிட்டு உக்காந்து தேனெடுக்குது..

இந்தமாதிரி ரம்மியமான கிளைமேட், சுச்சுவேஷன் பாண்டுக்கு ரொம்ப மூடாயி கூடாரம் போட.. பாண்டு நேரா கூடாரத்துக்கு போறான். அந்த நேரம் குந்தி அஞ்சு மகன்களைக் கூப்பிட்டு ஆத்தங்கரைக்கு துணி துவைக்கப் போயிருறா. மாத்ரி மட்டும் தனியா இருக்கா. புல் மூட்டோட வந்த பாண்டு, மாத்ரிய கட்டிப்பிடிக்குறான்.

அதுக்கு மாத்ரி, "முனிவர் சொன்ன சாபம் மறந்துபோச்சா மூதேவி?"னு பாண்டுவ திட்டி, விலகி நிக்கிறா. மூட கட்டுப்படுத்த முடியாம பாண்டு, "முனிவர் சாபமெல்லாம் என்ன ஒன்னும் பண்ணாதுடி"னு மாத்ரிய கட்டிப்புடிச்சிக் கட்டிலு தூக்கிப் போடுறான்.

ரெண்டு பேரும் பண்ணிட்டு இருக்கும்போது, (நாலு கால்கள் பின்னி உரசுறத மட்டும் தான் காட்டுவறாம். சென்சார் பிரச்சினை இருக்கு) இப்படி பாண்டு பண்ணிட்டு இருக்கும்போது பாதியிலேயே நெஞ்சைப் பிடிச்சுக் கீழே விழுந்து செத்துருறான். மாத்ரி பாத்துட்டு, "என்னங்க.."னு ஒப்பாரி வச்சி அழுகுறா. "என்னடா நம்ம வீட்டு அழுகைச் சத்தம் கேக்குது"னு வீட்டுக்கு வந்த குந்தி, பாண்டு செத்தத பாத்து, "என்னங்கா.."னு மூச்சுப் பேச்சில்லாம மயங்கி விழுந்துட்டா.

பாண்டு செத்தத பாக்க வானத்துல இருந்து தேவர்கள், முனிவர்கள் எல்லாம் எழவு கேட்டு வாராங்க. மயங்கி கிடந்த குந்தி முகத்து ஒரு முனிவன் தண்ணி தெளிச்சி எழுப்பி விடுறான். எழுந்த குந்தி, "இந்த மாதிரி ஆகிப்போச்சே.. பாவி மனுசன் ரெண்டு கட்டியும் ஒரு சோகத்தையும் அனுபவிக்காம அப்பாஸ் போயிட்டானே."னு முனிவரைப் பாத்து கதறி அழுகுறா. முனிவர்களும், "ஆனது

ஆகிப்போச்சி.. ஆகவேண்டிய காரியத்தப் பார்ப்போம்"னு சொல்றாங்க.

அது ஒரு முனிவன், "யாருப்பா அங்கபாண்டு செத்தத துஷ்டி சொல்லி அஸ்தினாபுரத்துக்கு யாராச்சும் அனுப்புங்கப்பாஅவுங்க வந்தாதான், இவனத் தூக்கிக் கொண்டுபோயி எரிக்க முடியும்"னு சொல்றான். அதுக்கு இன்னொரு முனிவன், "சேதி சொல்லி, அவனுக வரதுக்குள்ள இங்க பொணம் நாறிரும்ய்யா.. அதுவரைக்கி நடுவீட்டு பொணத்த வச்சிருக்கறது நல்லதில்ல"னு சொல்ல, இதைக் கேட்ட இன்னொரு முனிவன், "ஆளாளுக்கு ஒன்னு பேசாதீங்கய்யா.. செத்துப்போனவனோட வாரிசுக இங்கதானே இருக்காங்க? அவங்கள வச்சி சட்டுப்புட்டுனு எல்லா காரியமும் செஞ்சி, ஆகவேண்டிய காரியத்தப் பாருங்கய்யா"னு சொல்றான்.

முனிவர் சொன்னமாதிரி அஞ்சு மகன்கள வச்சி முறைப்படி பண்ணவேண்டியதெல்லாம் சடங்கு, சாஸ்திரம் எல்லாம் பண்ணி, எரிக்கிறதுக்கு பாண்டுவ தூக்கிட்டு எல்லாரும் "கோவிந்தா, கோவிந்தா.. கோவிந்தா, கோவிந்தா.."னு சத்தம் போட்டே போறாங்க.

கட்டையெல்லாம் ஒன்னு மேல ஒன்னா அடுக்கி, அதுமேல பாண்டு பொணத்த வைக்குறாங்க. "யாருப்பா இவனுக்கு மூத்த மகன்"னு யுதிஷ்டிரனைக் கொள்ளி போடக் கூப்புடுறாங்க. அந்த நேரம் பாண்டு பொண்டாட்டி மாத்ரி, "இவன் செத்ததுல எனக்கும் பங்கு இருக்கு, அதனா நானும் இவன்கூடவே உடன்கட்டை ஏறிச் செத்துருவறன்"னு சொல்றா.

உடன்கட்டை ஏறுறது இந்து தர்மப்படிதான் நல்லதுதானேனு அங்க இருக்குற ஒரு முனிவன் சொல்ல, பாண்டுவ எரிக்கும் போது குதிக்கச் சொல்லி அவளையும் சேர்த்து எறிச்சிருறாங்க. எல்லா காரியமும் முடிஞ்சதும் முனிவர்களும், தேவர்களும் வானத்தை நோக்கி அவனவனுக இடத்துக்குப் போயிட்டாங்க.

இவங்களுக்கு ஒத்தாசையா ஒரு முனிவர் மட்டும் கூட இருக்கான். "இனிமே இந்தக் காட்டுக்குள்ள நீங்க இருக்குறது சரிப்படாது, அதனா நீங்க எல்லாம் அஸ்தினாபுரத்துக்குப் போங்க"னு முனிவர் சொல்ல,

குந்தியும் சரினு அஞ்சு பசங்களையும், முனிவரையும் கூட்டிட்டு அஸ்தினாபுர அரண்மனைக்கு போறா...

ஆதாரம் :- (மஹாபாரதம் ஆதிபருவம் பகுதி 127)

 


 பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கிளாஸ் எடுக்க முனிவர்கள் தேடல்

அஸ்தினாபுர அரண்மனைக்கு புள்ளகுட்டிகளோட வந்த குந்தி, பாண்டு இறந்த செய்திய சொல்றா. செய்திய கேட்ட பீஷ்மரு ஒப்பாரி வச்சி அழுகுறான். சத்தியவதி கிழவி மயங்கி விழுந்துட்டா. அஸ்தினாபுரமே சோகத்தில் இருந்திச்சி.

குந்திக்கு எல்லோரும் ஆறுதல் சொல்லிட்டு, பாண்டுவும், மாத்ரியும் செத்ததுக்கு பதினாறாவது நாள் காரியம் செயுறாங்க. அந்த சமயம் வியாசர்முனிவன் டொய்னு தோன்றி, அம்மா சத்தியவதி எனும் மச்சகந்திட்ட சொல்றான், "அம்மா.. இனி நடக்குறதெல்லாம் இங்க கெட்டதாகவே நடக்கும். நீங்களும் என்னோட காட்டுக்கு வந்துருங்க"னு சொல்றான். சத்தியவதியும் மகன் சொல்றத கேட்டு ரெண்டு மருமகளான அம்பிகை, அம்பாலிகைய கூட்டிக்கிட்டு முனிவனோட வனவாசம் போயிருறா. முனிவனுக்கு ரெண்டு.. சொல்லவா வேணும்..? கள்ளாதான்.

பஞ்ச பாண்டவர் பொடுசுகளுக்கும், கௌரவர் பொடுசுகளுக்கும் 14, 15 வயசுதான் இருக்கும். கௌரவர்களான துரியோதனனுக்கு பஞ்சபாண்டவர்களைக் கண்டா ஆகுறதில்ல. அவன் பீமன எப்படியாவது ஒழிச்சிக்கட்டணும்னு குறியா இருந்தான். அதுக்காக பஞ்சபாண்டவர்களையும் அஞ்சு பேரையும் விளையாடக் கூப்புடுறான்.

ஆத்து விளையாண்டுட்டு எல்லோரும் களைப்பா இருக்காங்க. அப்போ பீமன் மட்டும் ஒரு பொந்தருக்கு அடியில் நல்லா தூங்குறான். இதுதான் சமயம்னு துரியோதனன் பீமனோட கையையும் காலையும் கட்டி ஆத்துக்குள்ள எறிஞ்சிருறான்.

"எவன்டா இத்துப்போன கயிற வச்சி கட்டுனது"னு தண்ணிய விட்டு வெளியே வந்துருறான் பீமன். "போட்ட திட்டம் பெயிலியர் ஆச்சே"னு தோரோட்டி மகன் கர்ணன பிரண்டா சேர்த்துக்கிட்டு, மறுநாளும் பஞ்சபாண்டவர்கள விளையாடக் கூப்புடுறான் துரியோதனன். இந்த டயம் மிஸ் ஆகக்கூடாதுனு நல்ல பாம்ப ஒரு நாள் புடிச்சிப் போட்டு வரான். அந்தப் பாம்புகள் பீமன் தூங்கும்போது கடிக்கவிடுறான். பீமன் மயங்கிட்டான். அவன அள்ளித் தூக்கிட்டு போயி ஆத்துக்குள்ள போட்டுட்டான் துரியோதனன்.

தண்ணிக்குள்ள போனவன் ரொம்ப ஆழத்துக்கு போயிட்டான். அங்க ஒரு பத்து கருநாகம் பீமனக் கடிக்குது. ஏற்கனவே அவன் நல்ல பாம்பு கடிச்சிருக்கு, இப்ப நாகப்பாம்பு கடிக்குது. மைனஸும், மைனஸும் பிளஸுங்கிற கதையா.. விஷத்துக்கு விஷமே மருந்தாகி பொழச்சிருறான். அத வானத்து இருந்து பாத்துட்டு இருந்த நாகலோகத்து இளவரசி வாசுகி பீமன புடிச்சிப்போயி அவளோட வீட்டுக்கு தூக்கிட்டு வந்துருறா.

"பீமா.. உனக்கு மட்டும் எப்படி இந்த சக்தி இருக்கு?"னு கேட்டு, "உனக்கு நான் நாகப்பால் தாறேன்"னு அவட்ட இருந்து ஒரு அஞ்சி குடம் பால் பீச்சி தூக்கி பீமன் வாயி ஊத்துறா. பீமனும் எல்லாத்தையும் குடிச்சிட்டு போதை ஏறி, எட்டு நாளா தண்ணிக்குள்ளேயே தூங்கிட்டு கிடந்துருக்கான்.

புள்ளயக் காணோமேனு பதறிப்போன குந்தி, அங்கிட்டும் இங்கிட்டும் தேடுறா. துரியோதனன்தான் கொண்ணுருப்பான் னு குந்தி மகன்கள் 4 பேரும் சொல்ல, நேரா காந்தாரி வீட்டு வாசலுக்கு போன குந்தி, "அடியே காந்தாரி சிரிக்கி.. உன் மகன ஒழுங்கா வளரடி.. எப்ப பாத்தாலும் என் மகங்க கூடவே சிலுவு இழுத்துட்டு கிடக்கான்.."னு காந்தாரி கூட சண்டையப் போட.. இவங்க சண்டைய விளக்கிவிட வேண்டியதே பீஷ்மர் வேலையா போச்சி. எட்டு நாளுக்கு அப்பறம் போதை தெளிஞ்சி வரான் பீமன். ஒருவழியா பிரச்சினை ஓஞ்சது.

"இனிமே உங்களுக்கு விளையாட்டு மயிரெல்லாம் வேண்டாம். ஒழுங்கா கிளாஸ்க்கு போங்க"னு பீஷ்மர், கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் கிளாஸ் எடுக்க கிருபச்சாரியாரை வாத்தியாரா அப்பாயிண்ட் பண்ணுனான்.

இந்த கிருபச்சாரியார் யாருனா...?

(ஃப்ளாஷ்பேக் @)...

கௌதமமுனிவர்க்கு சாரத்வான் னு ஒரு பையன் இருந்தான். அந்த சாரத்வான் வில்வித்தை பெரிய ஆளு. உலகத்துல நான்தான் பெரிய வித்துவானா ஆகணுமுனு, வானத்து இருக்குற தேவர்கள நினைச்சித் தவம் பண்றான். இவன் இப்படித் தவத்த கலைக்கணுமுனு வானத்து இருக்குற ரிஷிங்க "ஜானபதி"னு ஒரு லேடீஸை அனுப்பி வைக்கிறாங்க.

சாரத்வான் தவம் செஞ்சிட்டு இருக்கும் போது ஜானபதி வந்து ஒவ்வொரு டிரஸ்ஸா கழட்டி போட்டுக்கிட்டே டான்ஸ் ஆடுறா. இதப் பாத்த சாரத்வானுக்கு மூடாகி, லீக் ஆகி அவன் உக்காந்து இருக்குற பாயிலேயே ஒழுகிருச்சி. இவனுக்கு தவம் கலைஞ்சி போச்சி. அவளுக்கும் "நாம வந்த வேலை முடிஞ்சிபோச்சி"னு கிளம்பிருறா.

பாயில ஒழுகுன விந்து ஒரு கோட்டு போனது, ரெண்டா பிரிஞ்சி ஓட.., அது ரெண்டு குழந்தை உண்டாகுது. ஒன்னு ஆணு, இன்னொன்னு பொண்ணு. அந்தப் பக்கமா வேட்டைக்கு வந்த சேகன், அந்த ரெண்டு குழந்தையையும் தூக்கிட்டுப்போயி அந்த நாட்டு மன்னர்கிட்ட குடுக்கான். அந்த மன்னனும் இந்த ரெண்டு குழந்தையையும் வளர்க்கான். மன்னன் கிருபையா அந்தக் குழந்தைகள் வளர்ந்ததுனால, அதுகளுக்கு "கிருபா", "கிருபி"னு பேர் வச்சிட்டாங்க. கிருபா கலை, வேள்வி, வேத, ஆச்சாரங்கள்னு படிச்சதால "கிருபச்சாரியார்"னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

இந்த கிருபச்சாரியார் முனிவரை வச்சித்தான் பீஷ்மர் தன்னோட பேரப்புள்ளிகளுக்கு கிளாஸ் எடுக்கச் சொன்னான். முனிவனும் நல்லா கிளாஸ் எடுத்துட்டுத்தான் வந்தான். இருந்தும் இதைவிட ஒரு பெட்டர் முனிவர் கிளாஸ் எடுக்கவிட்டா பசங்க இன்னும் நல்லா கத்துக்குவாங்கனு யோசிச்ச பீஷ்மர் இன்னொரு முனிவர் தேடுறான். துரோணர் னு ஒரு முனிவர அப்பாயிண்ட் பன்றான்.

இந்த துரோணர் யாருனா....?

(ஃப்ளாஷ்பேக் @)

பரத்வாஜன் னு ஒரு முனிவர் கங்கைக்கரை சின்னதா ஒரு ஆசிரமம் வச்சி நடத்திட்டுருந்துருக்கான். அவன் ரெகுலரா விடிஞ்சதும் காலை கங்கா நதியி குளிப்பான். எப்பவும் போல ஒருநாள் குளிக்கப் போகும்போது, நதிக்கரையி ஒரு பதினெட்டு வயசு பொண்ணு டிரஸ் இல்லாம அம்மணக்கட்டையா குளிச்சிட்டு இருக்க. அதப் பாத்த பரத்வாஜ முனிவருக்கு மூடாகி வந்து லீக்காயிருச்சி.

லீக்கான விந்துவ கையில புடிச்சிட்டு போயி ஒரு பானையப் போட்டு வளர்க்குறான். அதிலிருந்து பிறந்தவன்தான் துரோணர். ("துரோணர்"னா சமஸ்கிருதத்துல "பானை"னு அர்த்தம்) துரோணர் எல்லா வித்தையையும் அவன் அப்பன்கிட்ட இருந்தே கத்துக்கிறான். அதேசமயம் வடபாஞ்சால நாட்டு மன்னன் மகன் துருபதனும் பரத்வாஜ முனிவர்கிட்ட வித்த கத்துக்க வரான். துரோணரும், துருபதனும் ரொம்ப க்ளோஸ் பிரண்டா ஆகுறாங்க.

துருபதன் சொல்றான், "துரோணர் நண்பா.. நான் பெரியவனா ஆனதும் என்னாட்டோட பாதி ஊர உனக்கு தாறேன்"னு சொல்றான். இவனும் சரிடா னு சொல்றான். கோர்ஸ் முடிஞ்சதும் ரெண்டு பேரும் பிரிஞ்சி போயிட்டாங்க.

துரோணர் எல்லா வித்தையும் கத்துக்கிட்டு பெரியாளா ஆயிட்டான்.

துரோணர்க்கு கிருபாச்சாரியார் தங்கச்சி, கிருபியக் கல்யாணம் செஞ்சி வச்சிட்டாங்க. அந்த சமயத்துல துரோணர் குடும்பத்து வறுமை தவிரிச்சி ஆடுது. அப்போ துரோணர்க்கு அவன் கூட பழகுன நண்பன் ஞாபகத்துக்கு வர்றான். "சரி நம்ம நண்பன்ட்ட ஹெல்ப் கேக்கலாம்"னு வடபாஞ்சால நாட்டு அரண்மனைக்கு போறான்.

அரண்மனை துரோணருக்கு செம விருந்து வைக்குறாங்க. எல்லாம் முடிஞ்சி துரோணர் நண்பனான துருபதன்கிட்ட கேக்குறான், "நண்பா, எனக்கு முன்னாடி ஒரு வாக்கு குடுத்தியே.. அதுப்பிரகாரம் உன் நாட்டு பாதி ஊர எனக்கு குடுத்துரு"னு கேக்கான். அதுக்குத் துருபதன், "கெக்கப்புக்க..."னு சிரிச்சிட்டே, "என்னடா காமெடி பண்ற. சின்ன புள்ளையா இருக்கும் போது சொன்னத நம்பிட்டு, சொத்துக் கேக்குற? இன்னும் வேணுமுனா சாப்பாடு போடுறேன், சாப்புட்டு வந்தவழியப் பாத்து கிளம்பிரு"னு சொல்லிட்டான். கோவமான துரோணர், "டேய்.. இத என் வாழ்நாளு மறக்கமாட்டேன், உன் காலண்டர் குறிச்சி வச்சிக்கோ.. உன் நாட்ட எப்படியாவது கைப்பற்றுவேன்"னு சவால் விட்டுட்டு தங்கச்சி புருசனான கிருபச்சாரியார் வீட்டுக்கு போறான்.

கிருபச்சாரியார் கௌரவர்கள், பாண்டவர்களுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்கான். "வாழ்க்கை ரொம்ப போரா போகுதே"னு துரோணர் ஒரு கிணத்துமேட்டு உக்காருறான். அந்த நேரம் பாத்து ஒரு பந்து கிணத்துக்குள்ள விழுது. பந்து விளையாண்ட பாண்டவர்க பந்து எடுக்க வராங்க. எடுக்க ட்ரை பண்ணும் போது யுதிஷ்டிரன் மோதிரம் கிணத்துல விழுந்துருது.

இத எப்படி எடுக்கறது யோசிக்கும் போது, துரோணர் முனிவன், "இத நான் எடுத்துத் தாறேன். அதுக்குப் பதிலா நீங்க என்னோட குடும்பத்துக்கு சோறு போடுவீங்களா..?"னு கேக்குறான். யுதிஷ்டிரனும், துரியோதனனும் சரினு சொல்றாங்க. துரோணர் வித்தை செஞ்சி பந்தையும், மோதிரத்தையும் எடுத்து குடுக்கான்.

இவன் காட்டுன வித்தையப் பாத்து ஆச்சரியப்பட்டு இங்க நடந்ததெல்லாம் பீஷ்மர்கிட்ட சொல்றாங்க. பீஷ்மரும், "நம்ம பேரப்புள்ளைகளுக்கு கிளாஸ் எடுக்க இவன்தான் சரியான ஆளு"னு துரோணர் முனிவனை அப்பாயிண்ட் பண்ணுறான்.

 


வீர விளையாட்டு போட்டிகள்- திரௌபதி எனும் பாஞ்சாலி பிறப்பு- 

துரோணர் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் எல்லா வித்தையும் கத்துக் கொடுக்கிறான். இவங்களோட சேர்ந்து கர்ணனும் துரோணர் மகன் அஸ்வத்தாமனும் வித்தைய கத்துக்குறாங்க. ஏகலைவன் னு ஒருத்தன் அந்த பக்கமா டெய்லி ஆடு மேச்சிட்டு இருக்கான். துரோணர் அர்ஜுனனுக்கு கத்துத்தந்தத பாத்து ஏகலைவனும் யாருக்கும் தெரியாம கத்துக்குறான். ஏகலைவன் ஒரு சமயம் காட்டுள்ள அம்பு விட்டு பழகிட்டு இருக்க.. அத பாத்த அர்ஜுனன் துரோணர்ட்ட போட்டு கொடுத்துடுறான். ஏகலைவன கூப்பிட்ட துரோணர் "யாருடா நீ...? உனக்கு எப்பிடி இந்த வித்தை தெரிஞ்சது"னு கேட்க, அதுக்கு ஏகலைவன் "குருவே.. உங்கள வச்சு தான் கத்துக்கிட்டேன்.. டெய்லி ஆடு மேய்க்க வரும்போது, அர்ஜுனனுக்கு சொல்லி குடுப்பீங்க.. தூரத்துல இருந்து பாத்து கத்துக்கிட்டேன்"னு சொல்ல, அதுக்கு துரோணர்"டேய்.. ஆடு மேய்க்கிறவன் எல்லாம் வித்தை கத்துக்க கூடாது, இந்த வில் வித்தை சத்திரியரான அர்ஜுனனுக்கு மட்டும் தான் தெரியணும்.. இவங்க எல்லாம் எனக்கு குருதட்சணை கொடுக்குறாங்கடா.. நீ எனக்கு என்ன தரப்போற"னு கேட்க.. "என்ன குருவே வேணும் சொல்லுங்க தர்றேன்.. என்கிட்ட ஆட்டுக்குட்டி இருக்கு, மலை தேன் எடுத்து கொடுக்கவா.. என்ன வேணும் னு சொல்லுங்க குருவே உங்களுக்கு எதுனாலும் குடுப்பேன்"னு ஏகலைவன் சொல்ல, "அதெல்லாம் வேணாம்டேய்.. உன்னோட கட்ட விரல காணிக்கையா குடு"னு கேட்குறான் துரோணர்.. முனிவர சோகமா பாத்த ஏகலைவன் "இந்தாங்க குருவே கட்ட விரல்.. நான் வாக்கு தவறமாட்டேன்"னு வெட்டி கொடுக்கான். இனிமே நான் மட்டும்தான் வில்லுல பெரிய வித்துவான் னு அர்ஜுனன் பெருமைபேசிட்டு திரியுறான்.

பசங்களும் பெரிசாயிட்டாங்க. துரோணர் "எல்லா பயலுகளும் வாங்கடா" னு கூப்பிட்டு, "நான் இவ்வளவு நாளா உங்களுக்கு வித்தை கத்துக்குடுத்ததுக்கு நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்" னு சொல்ல, எல்லா பசங்களும் "என்ன ஹெல்ப் வேணுமுனாலும் பண்றோம்"னு சொல்றாங்க. அதுக்கு துரோணர், அவன் பிரண்டு துருபதன் அவன ஏமாத்துன கதைய சொல்லி, அவன் நாட்டு மேல போர் செஞ்சு, அவன அலைக்காவா இங்க தூக்கிட்டு வர சொல்றான். துரியோதனனும் பீமனும் போயி துரோணர் பிரண்டு துருபதன் கூட சண்டை போட்டு ஜெயிச்சி அவன கொண்டு வந்து துரோணர் முன்னாடி போடுறாங்க. துரோணர் அவன் நாட்ட பாதிய புடுங்கீட்டு அனுப்புறான்.

அந்தசமயத்துல கிருபாச்சாரியார், வித்தை கத்துக்கிட்ட எல்லாருக்கும் ஒரு போட்டி நடத்துறான். பெரிய கிரவுண்ட்ல நாட்டு மக்கள் கூடியிருக்க, போட்டி நடக்குது. அர்ஜுனன் வில்லு வச்சு பலான வித்தை செஞ்சு காட்டுறான். அடுத்தது கர்ணன் வரான் "டேய்.. அர்ஜுனா

உனக்கு மட்டும்தான் வித்தை தெரியுமா..? நீ செஞ்சதுக்கு மேல நான் வித்தை செஞ்சு காட்டுவேன். உனக்கு தைரியம் இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வாரியாடா"னு கூப்பிடுறான்.

இந்த பிரச்சினைய பாத்த கிருபாச்சாரியார், "டேய் கர்ணா.. நீ அரசகுல பையன்கிட்ட மோதுறதா இருந்தா, நீயும் ஒரு அரசரா இருக்கணும். நீ யாருடா...? சாதாரண தேரோட்டி மகன். உன்னோட பிறப்பு தாழ்ந்து இருக்குறதா, நீ போட்டி மேடைய விட்டு வெளிய போடா.."னு கர்ணன ரொம்ப அசிங்க படுத்திடுறான்.

"என்னோட பிரண்ட எவன்டா அசிங்கப்படுத்துறது"னு கோபமாயிட்ட துரியோதனன். "டேய்.. கிருபாச்சாரி.. கர்ணன் தேரோட்டி மகனா இருக்குறது உனக்கு கேவலமா தெரியுதா..? அப்போ உன்னோட பொறப்பு என்ன..? உங்கப்பன் பாயி ஒழுக விட்டதில பொறந்த நீ கர்ணன பத்தி பேசக்கூடாது. எங்க மாஸ்டர் துரோணர் கூட குடத்துல இருந்துதான் பொறந்திருக்கான். இங்க பாண்டவங்க பொறந்த கதைய சொன்னா ஒவ்வொருத்தனும் நாறிடுவான் ஜாக்கிரதை.."னு கர்ணனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறான்.

அதுக்கு துரோணர்''டேய்.. துரியோதனா.. கொஞ்சம் அமைதியா உக்காருடா. முனிவர் என்ன தப்பா சொல்லிட்டாரு.. ஒரு அரசன் இன்னொரு அரசன் கூட மோதுறது தாண்டா முறை"னு சொல்றான்.

அதுக்கு துரியோதனன்"நீங்க சொல்றது சரி மாஸ்டரே.. டேய்.. பஞ்சாயத்து பண்ற பெரியமனுஷங்களா.. நல்லா கேட்டுக்கோங்கடா..கர்ணன் என்னோட பிரண்டு. நான் அவனுக்கு என்னோட நாட்டுல சில ஊர்களை குடுத்து அரசனாக்குறேன். இனி எவனாவது பேசுங்கடா பாப்போம்.."னு சொல்லிட்டு சில நாட்ட எழுதி கொடுத்து அங்கேயே கர்ணனுக்கு முடிசூட்டுறான்.

அங்க என்ன பிரச்சினைனு பாக்க வந்த குந்தி கர்ணன் கவசகுண்டலத்தோட இருக்குறத பாத்து தன்னோட மகன் தான்னு அடையாளம் கண்டுபிடிச்சிடுறா. வெளிய சொன்னா கேவலப்படுத்துவாங்கனு அப்படியே கமுக்கமா யார்கிட்டயும் சொல்லாம இருந்துடுறா. ஒருவழியா பிரச்சினை முடிஞ்சி எல்லாம் கலைஞ்சி போயிடுறாங்க. கர்ணனும் துரியோதனனுக்கு "நன்றி நண்பா.. என் உயிர் இருக்குற வரைக்கும் உங்கூடவே இருப்பேன்"னு சொல்லிட்டு கிளம்புளான்.

கொஞ்சநாளுக்கு அப்புறம் திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனுக்கு அஸ்தினாபுர இளவரசனா பட்டம் சூட்டுறான். துரியோதனனுக்கு கோபம் வந்து கண்ணு சிவப்பேறி, விரல்ல இருந்து ஒரு நரம்பு மட்டும் பகைவழியா ஏறி கழுத்து வழியா போயி அவன் பொடனியில புடைச்சிட்டு நிக்கி.

துரியோதனன் இந்த பாண்டவ பயலுகள எப்படியாவது ஒழிச்சிக்கட்டி

நாட்டவிட்டு துரத்தணும்னு பிளான் போடுறான். கர்ணன ஹெல்ப்புக்கு கூப்ட்டுகிட்டு பாண்டவங்க கூட சண்டை போடுறான். "இவன் தொல்லையில மனுஷன் இருப்பானா"னு நினைச்ச குந்தி அரண்மனைய விட்டு பாண்டவங்கள கூப்பிட்டு அவுட்ஹவுஸ்ல தங்குறாங்க., துரியோதனன் "இவனுங்க இந்த நாட்டுல இருந்தா ஏழரை எப்படியாவது வரும்"னு நினைச்சி அவுட்ஹவுஸ்க்கு தீ வச்சி அவனுங்க சோலிய முடிக்க பாக்கான். ஆனா பாண்டவங்க சுரங்க பாதை தோண்டி நேக்கா எஸ்கேப் ஆயி துரியோதனனுக்கு பயந்து காட்டுக்குள்ள தலைமறைவா வாழுறாங்க.

ஆனா ஊருக்குள்ள பாண்டவங்க தீயில் கருகி செத்துட்டாங்கனு யாரோ ஒரு வதந்திய கிளப்பி விட்டுட்டானுக.

இந்த சமயத்தில் "நம்மள அடிச்சி துரோணர் பய நாட்ட புடுங்கிக்கிட்டானே"னு துருபதன் மன்னன் ஒருபக்கம் நிறைய ஐயரை கூப்பிட்டு துரோணரை கொல்ல யாகம் நடத்துறான். ஐயர் ஓமாகுண்டத்த சுத்தி உக்காந்து தீய போட்டு மந்திரம் ஓதுறாங்க. திடீர்னு நெருப்புக்குள்ள இருந்து ஒரு பொண்ணு வரா. பாக்குறதுக்கு ரொம்ப சிவப்பா, அழகா இருக்கா. அந்தபக்கமா இருந்து ஒரு அசரீரி சவுண்ட் கேட்குது "இவள் தான் பாஞ்சாலி, இனி எல்லாம் கெட்ட காலம் தான்"னு.

அதுக்கு அப்புறம் ஒரு ஒன் ஹவர் கழிச்சி அதே நெருப்புக்குள்ள இருந்து ஒரு பையன் வரான். மறுபடியும் அந்தபக்கமா இருந்து ஒரு அசரீரி கேட்குது "இவன்தான் திருஷ்டத்யும்னன், இவனால தான் துரோணர் சாவான்"னு.

அத கேட்டு துருபதன் ரொம்ப சந்தோஷப்படுறான். பொண்ணுக்கு திரௌபதினு பேரு வச்சி வளர்க்கான்.


 


Comments

Popular posts from this blog

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

தேர்தல் வரலாறு

சமூகவியல், சாதிய கட்டமைப்பு , Lion Raja Ganesan