மகாபாரதம் பதிவு -2 Lion Raja Ganesan

 

பாஞ்சாலி தசதலதய உருவிய துச்சாதனன்பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலி சபதம்-25 

தர்மன் அவனோட மனைவியான பாஞ்சாலிய பந்தயம் கட்டி விளையாடுறான். இந்த டயமும் துரியோதனன்கிட்ட தோத்து போயிருக்குறான். பொண்டாட்டிய வச்சி தோத்துட்டானேன்னு நாலு தம்பிகளும் அழுகுறாங்க. அப்போ பீமன், "டேய்துரியோதனாஇப்ப வரைக்கும் நீ செஞ்சதெல்லாம் சரி. ஃபஸ்ட் தர்மன் அவன வச்சி தோத்தா, பிறகு எப்படிடா இன்னொரு பொருள வச்சி விளையாட முடியும்..?"னு கேக்கான்.

அதுக்கு கர்ணன், "டேய். பீமாதோத்த பிறகு உனக்கு ஏண்டா இந்த வேல?"னு சொல்லிட்டு, "துரியோதனா.. இந்த பாண்டவ பயலுக எல்லாம் நம்ம அடிமைக, இவங்க எல்லாம் இங்க இருக்கானுக. நம்ம அடிமை பாஞ்சாலி எங்க இருக்கா...? கூட்டி வர சொல்லு நண்பா.."னு சொல்றான்.

துரியோதனன் தன்னோட தேரோட்டிய கூப்பிட்டு, பாஞ்சாலிய கூட்டி வர காண்டவிரஸ்த நாட்டுக்கு அனுப்புறான். தேரோட்டி பாஞ்சாலிய பாத்து நடந்தத எடுத்து சொல்லி அஸ்தினாபுரத்துக்கு கூப்புடுறான். அதுக்கு பாஞ்சாலி, "தேரோட்டி.. தர்மன் என்ன வச்சி தோத்த பிறகு, அவன் வச்சி தோத்தானா..? இல்ல, தர்மன் அவன தோத்ததுக்கு அப்றம் என்ன வச்சி தோத்தானா..? னு உங்க மன்னன்ட்ட போயி கேட்டு வந்து சொல்லு"னு தேரோட்டிய திரும்ப அனுப்பி வச்சுருறா.

தேரோட்டி பாஞ்சாலி சொன்னத துரியோதனன்கிட்ட சொல்றான். கோவமான துரியோதனன், "தம்பிதுச்சாதனா.. இங்க வா"னு அவன் தம்பிய கூப்புடுறான். துச்சாதனனும், "சொல்லுங்கண்ணா"னு கேக்க, "டேய். தம்பிஅந்த பாஞ்சாலி சிரிக்கிக்கு ரொம்ப கொழுப்பு வச்சி போச்சி. நீ அவள தூக்கிட்டு வா. அவளோட கொழுப்ப கொறப்போம்"னு துரியோதனன் அவன அனுப்புறான். "செம சான்ஸ்"னு நினைச்சி துச்சாதனன் பாஞ்சாலிக்கிட்ட போறான்.

பாஞ்சாலிய பாத்து கூப்புடுறான். அதுக்கு பாஞ்சாலி தேரோட்டிக்கிட்ட சொன்ன மாதிரியே இவன்கிட்டயும் சொல்றா. அதுக்கு துச்சாதனன், "அத அங்க வந்து உன் புருசங்கள பாத்து கேளுடி"னு அவள புடிச்சி இழுத்து, அவனோட தொடமேல உக்கார வச்சி கூப்பிட்டு போறான்.

அஸ்தினாபுரம் வந்ததும் இத பாத்த பீமன், "டேய்துச்சாதனா.. என் பொண்டாட்டியோட தொடமேல உக்கார வச்சி கூட்டிட்டு வர.. உன்ன தொடைய அடிச்சே கொல்லுவேன்டா.. இது என் பொண்டாட்டி பாஞ்சாலி மே சத்தியம்"னு கத்துறான்.

அதுக்கு துச்சாதனன், "டேய்.. பீமா.. எப்பவும் தனிப்பட்டு செயல்படாதடா னு சொல்லியிருக்கேன்டா. ஃபஸ்ட் இவ உனக்கு மட்டும்தான் பொண்டாட்டியா..? சொல்லுடா..? இது உனக்கு சத்தியம் மயிரு வேற.."னு சொல்லிட்டே பாஞ்சாலி கைய புடிச்சி இழுத்துட்டு வந்து, "ரொம்ப போ.."னு பாஞ்சாலிய சபை நிறுத்துறான்.

துரியோதனன் பாஞ்சாலிய பாத்து, "அடியே பாஞ்சாலி. 3D பிக்சர்னு தெரியாம விழுந்தா... நக்கல் பண்ணி சிரிக்கவாடி செய்யுறஇப்ப சிரிடி"னு சொல்றான்.

அப்போ கர்ணன், "இனிமே இவளும் நமக்கு அடிமை நண்பா"னு சொல்றான். அந்த டயம் துச்சாதனன், "அப்போஅவ சேலையும் பாவாடை ஜாக்கெட் எல்லாம் நமக்கு சொந்தம் தானே"னு கர்ணன பாத்து கேக்குறான். அதுக்கு கர்ணன், "உனக்கு வேணுமுன்னா போயி உருவிக்கோடா தம்பி"னு சொல்றான்.

துச்சாதனன் பாஞ்சாலி பக்கத்துல போயி அவ சேலைய புடிக்கான். அப்போ பாஞ்சாலி, "டேய்.. பீஷ்மர்.. திருதராஷ்டிரனா.. நீங்கெல்லாம் பெரிய மனுசங்களாடா.. ஒரு பொடியன் சேலைய உருவ வரான், பாத்துட்டு கம்முன்னு கிடக்கீங்க.. ர்ர்ர்ர்..த்தூ.. நீங்கெல்லாம் நாசமாத்தாண்டா போவீங்க"னு சொல்லிட்டு, நடக்கிறது நடக்கட்டும்னு கண்ண மூடிக்கிட்டா.

துச்சாதனன் பாஞ்சாலி சேலைய புடிச்சி உருவ ஆரம்பிக்கான். உருவுறான்உருவுறான்.. சேலை நீளமா வந்துட்டே இருக்கு. இவனும் கொஞ்சம் வேகமா உருவுறான். 3 மீட்டர் சேலை 30 மீட்டர் வரைக்கும் நீளமா வந்துட்டே இருக்கு.

அந்த டயம் கிழக்குப் பாத்த ஒரு அசரீரி கேக்குது.

"பாஞ்சாலி மாதிரி பத்தினிய யாரும் களங்கப்படுத்த முடியாது. உங்களுக்கெல்லாம் அழிவு நெருங்கிருச்சி"னு.

சபையிலெல்லாம் சிரிப்பு சத்தம். அப்போ பீஷ்மர் துரியோதனன பாத்து, "டேய்... மகனே... நீ செய்யுறது ரொம்ப தப்பு. அவங்ககிட்ட போட்டி செஞ்சத எத்தனையோ, அதெல்லாத்தையும் அவங்ககிட்டயே திருப்பிக் கொடுத்து அவங்க நாட்டுக்கு அனுப்பு"னு கோவமா சொல்றான்.

"இந்த கிழட்டுநாயிக்கு மரக்கிற கழண்டு போச்சா"னு யோசிச்சி துரியோதனன்... பாண்டவங்ககிட்ட செஞ்ச பொருளையும், பொண்டாட்டியையும் திரும்பக் கொடுத்துட்டு, "இனிமே இந்த மக்களும் வராதீங்கடா பாண்டவ நாயிகளா"னு அவங்கள அனுப்புறான்.

அப்போ பாஞ்சாலி துரியோதனன பாத்து, "டேய்... நீ ஒன்னும் எங்களுக்கு பிச்ச போட்டு அனுப்ப வேண்டாம். இந்த டயம் தர்மன், அவன் செஞ்ச புண்ணியத்த எல்லாத்தையும் பிணையமா வச்சி விளையாடட்டும். இது நீ செஞ்சா... என்னய என்னவேணாலும் பண்ணிக்கோடா... ஆனா தர்மன் செஞ்சா, இப்ப வரைக்கும் நீங்க செஞ்ச எல்லா பொருளையும் திரும்ப வாங்கிட்டு கிளம்புறோம்"னு சொல்றா.

இத கேட்ட துரியோதனன், "சரிடி, உன் புருசன விளையாட சொல்லுடி"னு சொல்றான்.

இந்த போட்டி தர்மன் செஞ்சிருறான். தோத்த எல்லா பொருளையும் திரும்ப வாங்கிருறாங்க.

அப்போ பீமன், "டேய்.. துச்சாதனா.. உன்ன நார்நாரா கிழிக்காம விடமாட்டேன்டா"னு சொல்றான்.

தர்மன், "டேய்.. துரியோதனா.. உன் சாவு என் கையிலதான்டா... இது எங்கம்மா குந்தி மே சத்தியம்"னு சொல்றான்.

அதுக்கு, "அடபோங்கடா.. குந்தி மே சத்தியம், குண்டா மே சத்தியம்னுட்டு.. கதற விட்டது பத்தலையா.."ங்கிறான் துரியோதனன்.

அடுத்து அர்ஜுனன், "டேய்.. கர்ணா.. என் வில் வச்சி உன் நெஞ்சி ஓட்டைய போட்டு, உனக்கு சாவு காட்டுவேன்டா"னு சொல்றான்.

நம்ம பங்குக்கு எதையாவது சொல்லணுமே னு நகுலன், "டேய்.. சகுனி.. உன்னோட மகன் உலூகன கொல்லுவேன்டா"னு சொல்றான்.

சகாதேவன், "டேய்.. சகுனிநான் உன்னையே கொல்லுவேன்டா"னு சொல்றான்.

கடைசியா பாஞ்சாலி, "டேய்.. துரியோதனா.. உன்னோட ரத்தத்த நனைவாம, என் கூந்தல அள்ளிமுடிய மாட்டேன்டா. அதுவரைக்கும் விரிச்சி போட்டுதான் அலையுவேன்"னு சொல்றா.

அதுக்கு துரியோதனன், "நல்லா விரிச்சிப்போட்டு அலைடி.. உன்னு புல்லமைக் பாக்காதா ரொம்ப கேவளமாத்தான் இருப்ப.. இது விரிச்சி போட்டு அலைவேறா ம்"னு சிரிச்சிட்டே சொல்றான்.

அதுக்கு பீமன் பாஞ்சாலிய பாத்து, "உன்னய யாரடி இந்தமாதிரி சத்தியமெல்லாம் பண்ண சொன்னது. இப்ப நாம சீரிஸ்ஸா சத்தியம் பண்ணும் போது, அவனுக காமெடி பண்ணி சிரிக்கிறானுக பாரு.."னு சொல்றான்.

அப்போ கர்ணன் பாண்டவங்கள பாத்து, "என்னங்கடா.. எல்லாம் வெட்டிப்புடுவோம், குத்திப்புடுவோம் னு பூச்சாண்டி காட்டுறீங்க.. இங்கதானடா நாங்களும் இருப்போம். எங்கே.. எங்கள வந்து கொல்லு பார்க்கலாம்"னு ஒரு கத்தி எடுத்துட்டு வரான்.

அப்போ பீமன், "வாங்கடா.. ஒத்தைக்கு ஒத்த"னு இவனும் ஒரு கத்தி தூக்குறான்.

இத பீஷ்மர், பீமன பொடனி ரெண்டு போட்டு, "டேய்.. அறிவுகெட்ட பீமாஉங்க அஞ்சு பேராலயும் கர்ணன கொல்ல முடியாது. இப்படியே முறுக்கிட்டு திரிஞ்சீங்கனா.. அவன் உங்க வாய கிழிச்சிதான் அனுப்பப் போறான். பாஞ்சாலிக்கும் கிழிக்கத்தான் போறான்"னு சொல்றான்.

பீஷ்மர் சொன்னத கேட்ட பாண்டவங்க, "அதுக்கு இப்ப நாங்க என்ன பண்றது.. இவனுகள சும்மா விட சொல்லுறீங்களா தாத்தா..?"னு கேக்குறாங்க.

அதுக்கு பீஷ்மர் சொல்றான், "டேய்.. பாண்டவங்களா.. இப்ப நீங்க சண்ட போட்டா, நம்ம குலம் அழிச்சி நாசமாத்தான் போகும். உங்களுக்கு ராமாயண கதை தெரியுமாடா..?"னு கேக்கான்.

அதுக்கு பாண்டவங்க, "தெரியும்"னு சொல்றாங்க.

பீஷ்மர், "டேய்.. ராமாயணத்துல இப்படி பிரச்சினை வரும்போது 14 வருஷம் வனவாசம் போன மாதிரி, நீங்களும் ஒரு 14 வருசம் காட்டுக்குள்ள வனவாசம் போங்க. அப்பறம் இங்க இவனுக கோபமும் கொறைஞ்சிரும், உங்க கோபமும் கொறைஞ்சிரும். அதுக்கு அப்றம் பாண்டவங்களும் கௌரவர்களும் ஒத்துமையா வாழலாம்"னு சொல்றான்.

பாண்டவர்களும் சரி சொல்லிட்டு வனவாசம் கிளம்புறாங்க..


பாண்டவர்களின் வனவாசம்அர்ஜுனன் செய்த தவம்பூ தேடிப் போன பீமன் – 26

பீஷ்மர் சொன்னதைக் கேட்டு பாண்டவங்க 14 வருஷம் வனவாசம் போறாங்க. போன இடத்துல பீமனுக்கும் தர்மனுக்கும் எப்பவும் பிரச்சினையா வருது. எப்பவும் பாஞ்சாலி பீமன் கூடவே கிடக்குறா. இந்த துரியோதனனையும் கர்ணப் பயலையும் எப்படியாவது கொன்னுரணும்னு துடிச்ச அர்ஜுனன்,

எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க... நாம எப்படியாவது கௌரவர்களோட போர் செஞ்சு ஜெயிக்கணும். அதனால நான் என் வில்லுக்கு வீரமான அம்புக் குச்சிகள் வாங்குறதுக்கு தனியா எங்கயாவது மலைக்காட்டுப் பக்கம் போயி தவம் இருக்கப் போறேன். நான் திரும்பி வர வரைக்கும் நீங்க இங்கேயே இருங்கனு சொல்றான்.

அதுக்கு பாண்டவங்களும் பாஞ்சாலியும், “நல்லபடியா போயிட்டு ரொம்ப வீரமான அம்புக் குச்சிகளோட வாங்கனு வழியனுப்பி வைக்குறாங்க.

அர்ஜுனன் காட்டுவழியா நடந்து இந்திரகீல மலைக்குப் போயி, ஒரு கல்லுக்கு மேல சம்மணம் போட்டு உக்காந்து, இந்திரனை நினைச்சி தவம் பண்ணுறான்.

ரம்பா, ஊர்வசி, மேனகைன்னு ஒரே டைம்ல மூணு பேரையும் ஓட்டிக்கிட்டு இருந்த இந்திரனுக்கு, அர்ஜுனனோட தவம் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிருக்கு.

இந்த மாதிரி நேரத்துல எவண்டா என்னைய நினைச்சி தவங்கிடக்குறது?”னு இந்திரன் அர்ஜுனன் முன்னாடி டொய்ங்னு போயி நிக்கான்.

அர்ஜுனன் இந்திரனுக்கு வணக்கம் வைக்கான்.

அதுக்கு இந்திரன், “யாருப்பா நீ? இந்த வேண்டாத வெயில்ல கல்லு மேல உக்காந்துருக்க? பழுக்கச் சுட்டுறப்போகுது. வேணும்னா என்னன்னு சொல்லிட்டு எந்திரிச்சு ஓடுனு சொல்றான்.

அதுக்கு அர்ஜுனன், “சுவாமி... உங்ககிட்ட இருந்து எனக்கு ஒரு வரம் வேணும்னு சொல்றான்.

அப்படின்னா என்ன வரம்டா வேணும்? சீக்கிரம் கேட்டுட்டு தொலை. எனக்கு மூணு பேரு வெயிட்டிங்னு இந்திரன் சொல்றான்.

சுவாமி... என்னோட வில்லுக்கு ரொம்ப வீரமான அம்புக் குச்சிகள் வேணும்னு சொல்றான்.

அதுக்கு இந்திரன், “இங்க வீரமான குச்சிகள் எதுவும் சப்ளை பண்ற மாதிரி இல்லை. உனக்கு வீரமா வேணும்னா நீ சிவன்கிட்ட போயி கேளு. அவன்தான் ரொம்ப நீளமா வீரமான குச்சிகள் வச்சிருப்பான். போயி வாங்கிக்கோனு சொல்றான்.

அதுக்கு அர்ஜுனன், “அப்படியே ஆகட்டும் சாமினு சொல்றான்.

யார்ரா இவன்... நல்லா போயிட்டு இருந்த நேரத்துல வீரமான குச்சி வேணும்னு நம்ம குச்சிப் பேரை இறக்கிப்புட்டான்னு புலம்பிக்கிட்டே, “சரிடா, கிளம்புறேன்னு சொல்லிட்டு மறைஞ்சிருறான்.

அர்ஜுனன் இப்போ சிவனை நினைச்சி தவம் பண்ணுறான்.

பார்வதி கூட இருந்த சிவனுக்கு இவனோட தவம் டிஸ்டர்ப் பண்ண, சிவன் பார்வதியைப் பாத்து சொல்றான்:

இவனுகளுக்கு இதே வேலையா போச்சி! எந்த நேரத்துல தவம் பண்ணி கூப்பிடணும்னு தெரிய மாட்டிக்குது. இந்த நாயி ஏதோ குச்சிக்குத்தான் இந்த வேலையைப் பாத்துட்டு திரியுது. நான் அவன்கிட்ட என்னோட திருவிளையாடலைக் கொஞ்சம் காட்டிட்டு வரேன்னு சிவன் ஒரு பன்னி பிடிக்குறவன் வேஷம் போட்டு வாரான்.

அர்ஜுனன் தவத்தில் இருக்க, சிவன் வீம்புக்குனு சண்டைக்கு போறான்.

ரெண்டு பேருக்கும் சண்டை நடக்கும் போது சிவன், அர்ஜுனனை வெளு வெளுனு வெளுத்து, அவன்கிட்ட இருந்த வில்லையும் அம்புக் குச்சியையும் பிடுங்கிக்கிட்டு, “போடா!”னு பொடனியில அடிச்சு விரட்டுறான்.

அர்ஜுனன், “தென்பாண்டிச் சீமை...”னு சோர்ந்து போயிருக்க, சிவனும் பார்வதியும் அர்ஜுனன் முன்னாடி தன்னோட ஒரிஜினல் கெட்டப்புல வந்து நிக்காங்க.

டேய் அர்ஜுனா... நான்தான்டா சிவன்!”னு சொட்டை ஸ்பீட்ல சொல்லி, “உன்னை சும்மா கலாய்க்கிறதுக்கு நான் பண்ணுன திருவிளையாடல் இது. உனக்கு என்ன வேணும் கேளு... நான் தர்றேன்னு சொல்றான்.

அதுக்கு அர்ஜுனன், “என்னோட வில்லுக்கு ரொம்ப வீரமான அம்புக் குச்சிகள் வேணும். அத வச்சி நான் கர்ணன் நெஞ்சுல ஓட்டை போட்டு கொல்லணும்னு சொல்றான்.

அதுக்கு சிவன், “சரிடா... அப்படியே ஆகட்டும். நீ போற போக்குல இந்திரனைப் போயி பாருனு சொல்லிட்டு, அவனோட வில்லையும் குச்சிகளையும் திரும்பக் கொடுத்துட்டு மறைஞ்சிருறான்.

அந்த சமயம் அர்ஜுனன் வீரமான குச்சியோட வருவான்னு வெயிட் பண்ணுன பாண்டவங்களும் பாஞ்சாலியும் அந்த இடத்தை விட்டு இமயமலைப் பக்கம் போறாங்க. அங்க ஒரு டெண்ட் போட்டு தங்குறாங்க.

இமயமலைக்கு அடிப்பகுதி இருக்குறதால நல்ல கிளைமேட். சாரல் காத்து, பொசு பொசுனு வானம் தூறுது. எங்க பாத்தாலும் பசேல்னு இருக்கு. காத்துல சாமந்திப் பூ வாசம் வேற ஹெவியா வருது.

இதையெல்லாம் கண்ணை மூடி ரசிச்சிக்கிட்டு கிடந்த பாஞ்சாலி, பீமனைக் கூப்பிட்டு,

என்னங்க... சாமந்திப் பூ வாசம் எங்கயிருந்தோ காத்துல வருது. எனக்காக அந்தப் பூவையெல்லாம் பறிச்சிட்டு வரீங்களா?”னு கேக்குறா.

அதுக்கு பீமன், “கொஞ்சம் வெயிட் பண்ணுடி. மாமன் பூவோட வரேன்னு சொல்லிட்டு பூவைத் தேடி ஒரு மலைக்கு போயிருக்கான்.

அங்க குரங்கு மாதிரி இருக்குற ஒரு மனுசனைப் பாக்கான்.

மனுசன் குரங்கு போட்டுட்டு, குரங்குக்கு குழந்தை பிறந்தா எப்படியிருக்குமோ... அச்சு அசல் அப்படியே இருக்கான்!

அவன் பேரு அனுமன்.

இந்த குரங்குப் பயகிட்ட பீமன் அவனோட எல்லா பிளாஷ்பேக் கதையையும் சொல்றான்.

அதுக்கு அந்தக் குரங்குப் பய, “கவலைப்படாத பீமா. எங்க அப்பன் வாயுதேவன் உங்கம்மா குந்தியைப் பாத்துவிட்டதாலதான் நீயும் பொறந்துருக்க. ஒரு விதத்துல நீயும் எனக்குத் தம்பி முறைதான் வேணும்.

நான் நேரடியா உனக்கு ஹெல்ப் பண்ணாட்டியும், நீ கௌரவர்களை ஜெயிக்க மறைமுகமா ஹெல்ப் பண்ணுறேன்.

இந்தா.. இந்தப் பூவைத் தேடித்தானே வந்த? இந்த சாமந்திப் பூவை நான் கொடுத்தேன்னு சொல்லி உன் பொண்டாட்டி பாஞ்சாலிக்கிட்ட கொடுனு பளீர்னு ஒரு பிட்டு போட்டு, பூவை குடுத்த அனுமாரு, பீமனை அனுப்பி வைக்கிறான்.

 


பாஞ்சாலிக்குக் கிடைத்த அட்சயபாத்திரம்-27

பாண்டவர்களும் பாஞ்சாலியும் வனவாசத்தில் எப்படி கஷ்டப்படுறாங்கன்னு அதைப் பார்த்து சந்தோஷப்பட துரியோதனன் அந்தக் காட்டுக்கு போறான். பார்டர் தாண்டுனதும் அவனோட எதிரி நாட்டு மன்னன், துரியோதனனைப் பிடிச்சு அந்தக் காட்டுக்குள்ள ஒரு மரத்துல கட்டி வச்சி அடிக்கான்.

இதைக் கேள்விப்பட்ட தர்மன்,
**"ஏய்... பீமா.. துரியோதனனை எவனோ மரத்துல கட்டி வச்சி அடிக்குறான். அவன் வேற ஒருத்தன் கையால சாகக்கூடாது. அதனால நீ இப்ப அவனைக் காப்பாத்து"**ன்னு சொல்றான்.

பீமனும் துரியோதனனைக் காப்பாத்தி அவன் நாட்டுக்கு அனுப்பி வைக்கான்.

நாட்டுக்குப் போன துரியோதனன்,
**"வேற எவனோ இவனுகளைக் காப்பாத்தி நாம உயிர் வாழணுமா.? இவனுகளப் போட்டாதான் நாம நிம்மதியா இருக்க முடியும்"**ன்னு யோசிச்சிட்டு இருக்கும்போது, கோபத்துக்குப் பேர் போன துர்வாச முனிவர் துரியோதனன் அரண்மனைக்கு விருந்துக்கு வர்றார்.

துரியோதனனும் முனிவருக்கு விருந்து வச்சி நல்லா பணிவிடை செய்யுறான். அப்போ துரியோதனனுக்கு ஒரு யோசனை வருது.

**"பிளான் போடுறேன்... முனிவரைப் பாண்டவர்கள்கிட்ட விருந்துக்கு அனுப்புனா... அவனுக முனிவரை நல்லா கவனிக்க முடியாது. கோவக்கார முனிவரும் அவனுகளுக்குச் சாபம் விட்டுருவான். அவனுகளும் நாசமத்துப் போவானுக"**ன்னு நினைச்சிட்டு, முனிவரைப் பார்த்து,

**"முனிவரே... இமயமலை காட்டுப் பக்கம் பாண்டவங்க இருக்காங்க. அங்க போய் நீங்க விருந்துக்குப் போனீங்கன்னா, உங்களுக்கு செமத்தியா செஞ்சு தருவானுக"**ன்னு சொல்றான்.

முனிவரும் சரின்னு சொல்லிட்டு இமயமலைக்குப் போறார்.

அதுக்கு முன்னாடியே தர்மன் தவம் பண்ணி ரிஷிங்ககிட்ட ஒரு அட்சயபாத்திரம்ங்கற ஒரு குண்டாசட்டியை வாங்கி, பாஞ்சாலிக்குக் கொடுத்து வச்சிருக்கான்.

அந்த அட்சய குண்டாசட்டியில் எவ்வளவு வேணும்னாலும் சோறு, குழம்பு ஒரே நேரத்துல ரெடியாகும். அப்படி ஒரு டெரம்பெரப்பு உள்ள மந்திரச்சட்டி அது.

அதுக்கும் ஒரு கண்டிஷன் இருக்கு.

சாப்பாட்டை ரெடி பண்ணி, சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் அந்தச் சட்டியைக் கழுவிக் கவிழ்த்து வச்சிட்டா, மறுபடியும் சோறு ரெடி பண்ண முடியாது. அந்த மந்திரச்சட்டியோட சக்தி அடுத்த நாள்தான் வேலை செய்யும்.

முனிவர் ஒரு படையோட வந்து, பாண்டவங்க வீட்டுக்கு விருந்துக்கு வர்றோம்னு தர்மன்கிட்ட சொல்லி அனுப்பிட்டு, ஆத்துக்குக் குளிக்கப் போயிருக்கிறார்.

தர்மனும் பாஞ்சாலியைக் கூப்பிட்டு,

**"அடியே... இன்னைக்கு துர்வாச முனிவர் நம்ம வீட்டுக்குச் சோறு திங்க வர்றார். அவன் டெரம்ப கோவக்காரன். நீ போயி அந்த மந்திரச்சட்டி நிறைய சாப்பாட்டை ரெடி பண்ணி எடுத்து வை"**ன்னு சொல்றான்.

அதுக்குப் பாஞ்சாலி,

**"என்னங்க... நான் இப்பத்தான் சட்டியைக் கழுவிக் கவிழ்த்து வச்சிட்டேன். அது சோறு நாளைக்குத்தான் ரெடியாகும். இப்ப என்னங்க பண்றது...?"**ன்னு தர்மன்கிட்ட சொல்றா.

அதுக்கு தர்மன்,

**"ஏன்டி... அப்படி பண்ணுன? முனிவன் வந்ததும் சோறுன்னு நிப்பான். நீ ஏதோ பண்ணி ரெடி பண்ணு"**ன்னு சொல்லிட்டுக் கிளம்பிடுறான்.

பாஞ்சாலி என்ன பண்ணறதுன்னு முழிச்சிட்டு இருந்தப்போ, ஒரு யோசனை வருது.

உடனே கிருஷ்ணனை நினைக்கிறா.

கிருஷ்ணனும் இவ முன்னாடி வந்து டொய்ங்னு நின்னுட்டு,

**"என்ன பாஞ்சாலி... ஏதும் குழந்தை கிழந்தை வேணுமா?"**ன்னு கேக்குறான்.

அதுக்குப் பாஞ்சாலி,

**"அது ஒண்ணும் இப்ப வேண்டாம். நாங்க சாப்பாடு பண்ணுற மந்திரச்சட்டியைக் கழுவிக் கவிழ்த்து வச்சிட்டேன். இந்த முனிவர் வேற சோறுன்னு வந்து நிப்பார். எனக்கு சாப்பாடு பண்ண ஏதாவது ஹெல்ப் பண்ணு"**ன்னு சொல்றா.

அதுக்குக் கிருஷ்ணன்,

**"நீ உன்னோட சட்டியை இங்க எடுத்துட்டு வா, பாஞ்சாலி"**ன்னு சொல்றான்.

அதுக்குப் பாஞ்சாலி,

**"அதை நான் கழுவிக் கவிழ்த்திட்டேன். அது நாளைக்குத்தான் சோறு ரெடி பண்ண முடியும்"**ன்னு சொல்றா.

அதுக்குக் கிருஷ்ணன்,

**"சொல்றதைப் பண்ணுடி"**ன்னு அனுப்புறான்.

அவளும் சட்டியை எடுத்துட்டு வந்து கிருஷ்ணன்கிட்ட கொடுக்கிறா.

சட்டியைப் பார்த்த கிருஷ்ணன், சட்டிக்குள்ள ஓரமா ஒரு சோத்துப் பருக்கை ஒட்டிக்கிட்டு இருந்ததைப் பாஞ்சாலிக்குக் காட்டுறான்.

அதைப் பார்த்து குஷியான பாஞ்சாலி,

**"எப்பிடி கிருஷ்ணா... இதைக் கண்டுபிடிச்ச?"**ன்னு கேக்குறா.

அதுக்குக் கிருஷ்ணன்,

**"உன்னோட கழுவுமாணம் தான் ஊருக்கே தெரியுமே!"**ன்னு சொல்றான்.

அந்த நேரம் அங்க வந்த தர்மன்,

**"சரியாதான் சொன்னீரு கிருஷ்ணா... இவ எந்தச் சாமானையும் சரியா கழுவி வைக்கிறதில்ல. இப்ப உமக்கும் இந்த மேட்டர் தெரிஞ்சு போச்சா!"**ன்னு சிரிக்கிறான்.

அப்போ கிருஷ்ணன், அந்த ஒட்டிக்கிட்டு கிடந்த அந்த ஒத்த சோத்துப் பருக்கையையும் எடுத்து சாப்பிடுறான்.

அதைப் பார்த்த கோவமான பாஞ்சாலி,

**"உன்ன ஹெல்ப்க்கு கூப்பிட்டா... இதையும் எடுத்து சாப்பிட்ட. இப்ப நான் எப்பிடி சோறு ரெடி பண்றது?"**ன்னு கேக்குறா.

அதுக்குக் கிருஷ்ணன்,

**"நான் சாப்பிட்டா... அந்த முனிவங்க சாப்பிட்ட மாதிரி"**ன்னு சொல்லிட்டு மறைஞ்சிருறான்.

முனிவர்களுக்கும் வயிறு மந்தமா இருக்கு.

பாஞ்சாலி வீட்டுக்கு வந்த முனிவர்,

**"இன்னைக்கி விருந்து வேண்டாம்"**ன்னு சொல்லிட்டு கிளம்பிருறார்.

 


பாண்டவர்கள் போட்ட வேசம்முதல் தடவை ஆரம்பம்-28

குச்சிக்குப் போன அர்ஜுனனும் திரும்பப் பாண்டேங்ககிட்ட வந்துட்டான். 12 வருஷம் வனவாசம் முடிஞ்சி, இப்ப 13-வது வருஷம் போயிட்டு இருக்கு.

தர்மன் எல்லாரையும் கூப்பிட்டு,
தம்பிகளா... இப்ப நமக்கு வனவாசம் 13-வது வருஷம் போயிட்டு இருக்கு. இந்த டயம் நாம துரியோதனன் கண்ணுல பட்டா.. அந்த பீஷ்மர் கிழவன் திரும்பவும் 14 வருஷம் வனவாசம் அனுப்பிருவான். அதனால நாம யாருக்கும் தெரியாம இந்த வருஷத்த ஓட்டிட்டோமுனாஅடுத்து நாம துரியோதனன் கூட சண்ட போட்டு ஜெயிச்சிட்டு, நம்ம நாட்டுல சந்தோசமா இருக்கலாம்னு சொல்றான்.

பாண்டேங்க எல்லாரும் எங்க போயி மறைவா இருக்குறதுன்னு யோசிச்சிட்டு கிடக்கானுக.

அந்த சமயம் ஒரு மான்குட்டி, ஒரு ஐயர் வீட்டுல இருக்குற விறகுக் கட்ட மேலே அதோட முதுகைத் தேச்சிக்கிட்டிருக்கு. இதைப் பார்த்த ஐயரு அத விரட்டுறான். மானு ஓடும்போது ஒரு விறகுக்குச்சி மானோட கொம்புல மாட்டிக்கிறது.

உடனே அந்த ஐயர்,
மானு என்னோட விறகுக் கட்டய தூக்கிட்டு போயிருச்சி!”னு கூப்பாடு போடுறான்.

அப்புறம் ஐயர் பாண்டேங்ககிட்ட போயி,
பாண்டேங்களாநான் ஓமகுண்டம் வளர்க்க சேத்து வச்ச விறகை ஒரு மானு தூக்கிட்டு போயிருச்சினு ரிப்போர்ட் பண்ணுறான்.

இது தப்பாச்சே.. ஒரு ஐயர்கிட்ட எப்படி திருடலாம்?”னு பாண்டேங்க,
எங்க அந்த மானு?”னு கேக்குறாங்க.

அதுக்கு அந்த ஐயரு,
அது கிழக்குப் பாத்து ஓடுதுனு சொல்றான்.

பாண்டேங்க அந்த மானைத் தேடி போறாங்க. ரொம்ப தூரம் போயும் மானு கைப்படக்காம, எல்லாரும் சோர்ந்து போயி ஒரு ஆலமரத்துக்கு அடியில் உக்காருறாங்க.

அப்போ தர்மன் நகுலனைப் பார்த்து,
தம்பி... இங்க எங்கேயாவது தண்ணி கிடைக்குமானு அந்த மரத்து மேலே ஏறிப் பாருடானு சொல்றான்.

நகுலனும் மரத்துமேலே ஏறிப் பாக்கான். அந்த மரத்துக்கு வடக்குப் பக்கமா ஒரு கொக்கு கூட்டம் வட்டம் போட்டு சுத்திட்டு கிடக்கு. அங்கதான் தண்ணி இருக்கும்னு அண்ணன் தர்மன்கிட்ட சொல்லிட்டு தண்ணி கொண்டு வரப் போறான்.

அங்க போயிப் பாத்தா ஒரு பெரிய கம்மா இருக்கு. அது இறங்கி தண்ணியக் குடிச்சிட்டு, ஒரு குடம் தண்ணி மொண்டு வர்றான்.

அந்தப் பக்கமா ஒரு அசரீரி கேக்குது:

இது என்னோட கம்மாய். இங்க தண்ணி எடுக்கணுமுனா, நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்னு சொல்லுது.

அதைக் காதுல வாங்காம குடம் தண்ணிய எடுத்துட்டு கிளம்பி வர்றான். கொஞ்ச தூரம் வந்ததும் மயங்கி விழுந்து செத்துப் போறான்.

தண்ணி எடுக்கப் போனவன் ஏன் இன்னும் வரலன்னு தர்மன்,
அவன் என்ன பண்றானுன்னு பாத்துட்டு வாடானு சகாதேவனை அனுப்புறான்.

அவனும் அந்த அசரீரியைக் காதுல வாங்காம தண்ணியக் குடிச்சு செத்துருறான்.

அடுத்து இவங்களத் தேடி வந்த அர்ஜுனனும் அதே மாதிரி செத்துருறான். அப்புறம் பீமனும் அதே மாதிரி செத்துருறான்.

என்னடா.. போனவங்க எவனையும் காணோமே?”னு தர்மன் போறான்.

அதே அசரீரி கேக்குது.

அது என்ன கேள்வின்னு தர்மன் கேக்க, அந்த அசரீரி,
அதுக்கு சரியான விடையச் சொல்லுனு சொல்றது.

தர்மன் அந்தக் கேள்விக்கு சரியான பதிலைச் சொல்றான். உடனே அந்த அசரீரி, செத்த எல்லாத்தையும் உயிரோட வரவச்சி, தண்ணியும் கொடுத்து வழியனுப்பி வச்சிருக்கு.

மறுபடியும் ஆலமரத்தடி உக்காந்து, 13-வது வருஷ வனவாசத்த எங்க போயி பாதுகாப்பா கழிக்கலாமுன்னு பிளான் போடுறாங்க.

அப்போ தர்மன் சொல்றான்:

டேய் தம்பிகளா... நாம எல்லாரும் பாதுகாப்பா இருக்க, விராடராஜனோட மத்தியப் பிரதேசம்தான் சரியான இடம். அந்த அரசன் துரியோதனனுக்கு எதிரி. அதனால நாம இருக்குற இடம் துரியோதனனுக்குத் தெரியாதுனு சொல்றான்.

அதுக்கு பாஞ்சாலி,
அவங்க அரண்மனையில நாம எப்படி இருக்குறது?”னு கேக்குறா.

அதுக்கு தர்மன்,
நான் அந்த அரசனுக்கு விசிறி வீசுறவனா வேலைக்குச் சேருறேன்னு சொல்றான்.

பீமன்,
நான் அந்த அரண்மனையில சமையல் வேலைக்குச் சேருறேன்னு சொல்றான்.

அர்ஜுனன்,
நான் திருநங்கையா வேசம் போட்டு அரசனுக்குப் பணிவிடை செய்றேன்னு சொல்றான்.

நகுலன்,
நான் அரண்மனையில இருக்குற குதிரையப் பாத்துக்குறவனா வேலைக்குச் சேருறேன்னு சொல்றான்.

சகாதேவன்,
நான் அங்க மாடு மேய்க்குறேன்னு சொல்றான்.

பாண்டேங்க எல்லாரும், “நீ என்ன வேசம் போடப் போற?”னு பாஞ்சாலியைக் கேக்குறாங்க.

பாஞ்சாலி,
நான் அந்தப்புரத்துப் பெண் தோழியா இருந்து அரசனுக்குப் பணிவிடை செய்றேன்னு சொல்றா.

எல்லாரும் விராடராஜாவோட அரண்மனையில ஒவ்வொரு வேலையில சேருறாங்க.

பாஞ்சாலி எப்பவும் விராடன் பொண்டாட்டி சுதேஷ்ணைகூடவே துணையா இருக்கா.

விராடனோட தம்பி சீசகனுக்கு பாஞ்சாலிய ரொம்பப் பிடிச்சுப் போயிருது.

இவள ஒரு தடவையாவது மேட்டாரா பாத்துறணும்னு சீசகன், அவன் அண்ணன் பொண்டாட்டிகிட்ட இது சம்பந்தமா பேசப் போறான்.

அண்ணி... உங்க தோழி எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சி. ஒரே நாள் மட்டும் என் ரூமுக்கு அனுப்பி வைங்கனு சொல்றான்.

அவனோட அண்ணியும் சரின்னு சொல்லிட்டு, பாஞ்சாலிகிட்ட பேசி ஒத்துக்க வைக்குறா.


பாஞ்சாலியும் சீசகன் ரூமுக்குப் போறா.

இந்த மேட்டர் பீமனுக்குத் தெரிஞ்சிப் போக, சீசகன் ரூமுக்குப் போயி சீசகன்கூட சண்டையைப் போட்டு கொன்னுருறான்.

இந்த விஷயம் விராடன் அரசனுக்குத் தெரிய, அரசன் பாஞ்சாலிகிட்ட வந்து,

நீதானே என்னோட தம்பி ரூம்ல இருந்த? அவன் எப்படி செத்தான்? எவண்டி கொன்னான்?”னு மிரட்டிக் கேக்குறான்.

அதுக்கு பாஞ்சாலி,

என்னோட புருசன் ஒரு தெய்வ சக்தி இருக்குறவன். என்னோட உடம்ப உன் தம்பி தொட்டதும், என் புருசன் வந்து உன் தம்பியக் கொன்னுட்டு மறைஞ்சிட்டான்னு சொல்றா.

அரசனும் இவ சொல்றத நம்பிட்டான்.

சீசகன் செத்த நியூஸ் எல்லா நாட்டுக்கும் பரவுது. துரியோதனனும் இதைக் கேள்விப்படுறான்.

சீசகன் ரொம்பப் பலமானவன். அவனைக் கொல்லணுமுன்னா அது பீமனா மட்டும்தான் முடியும். அப்போ அவன் மத்தியப் பிரதேசத்தில்தான் இருக்கான்னு கர்ணன்கிட்ட சொல்றான்.

உடனே எல்லாரும் விராடன் மன்னன் கூட போருக்குப் புறப்படுங்கனு எல்லாப் படையையும் கூட்டிக்கிட்டு போருக்குப் போறான்.

போர் செய்தி கேட்ட விராடன் மன்னனும் போருக்குப் போறான்.

ரெண்டு நாட்டுக்கும் சண்ட நடக்குது. விராடனால் போரைச் சமாளிக்க முடியல.

அப்போ விராடன் மகன் ஒரு படையோட போர் செய்ய வர்றான். அவனோட தேரை அரவாணி வேசம் போட்ட அர்ஜுனன் ஓட்டிட்டு வர்றான்.

துரியோதனன் பக்கம் பீஷ்மர், துரோணர், கர்ணன் இருக்காங்க. விராடன் பக்கம் அவன் மகன் மட்டும் இருக்கான்.

போர் தோக்குற நிலைமையில இருக்காங்க.

அந்த நேரம் அர்ஜுனன் தன்னோட வேசத்தைக் கழிச்சிட்டு, சிவன்கிட்ட வாங்கிட்டு வந்த குச்சிய வில்லு வச்சி வீச் வீச்சுனு விடுறான்.

துரியோதனன் படையில பாதி பேரு செத்துருறாங்க.

விராடன் அர்ஜுனனைக் கட்டிப்புடிச்சி,

யாரு ராசா நீ?”னு கேக்குறான்.

அதுக்கு அர்ஜுனன் அவனோட ஃபிளாஷ்பேக் சொல்லுறான்.

அப்புறம் பாண்டேங்க எல்லாம் வந்து போருக்குக் குதிக்காங்க.

பீமன் ஒத்த கைய வச்சி அந்தா அடி அடிக்குறான்.

பயந்து போன துரியோதனன் பீஷ்மரைக் கூப்புடுறான்.

பீஷ்மர் அர்ஜுனன் மேல அம்பு வச்சி வீச் வீச்சுனு விடுறார். எல்லாம் மிஸ் ஆகுது.

கௌரவர்கள் தோத்து நாட்டுக்குத் திரும்பிப் போயிருறாங்க.

 



 

Comments

Popular posts from this blog

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

தேர்தல் வரலாறு

சமூகவியல், சாதிய கட்டமைப்பு , Lion Raja Ganesan