பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
70களில் பெரும் பணக்காரர்களே பயன்படுத்திக் கொண்டிருந்த சாதனங்கள், குறிப்பாக கேசட், 80களில் எளிய மக்களிடமும் வந்து சேர்ந்தது. அது ஒரு முக்கியமான மாற்றமாகும்.
I. Leoni போன்றவர்கள் பட்டிமன்றங்களில் பேசிய கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து பேசப்பட்ட உரைகள் வெறும் பத்து ரூபாய் மதிப்பிலான கேசட்டுகளில் கிடைத்தன.
அவர் பேசிய சிந்தனைகள்தான் இன்று I. Leoniயை ஆட்சியாளர்களின் பக்கத்தில் நிற்கச் செய்திருக்கின்றன.
அதை கேட்டவர்களுக்கு தெரியும் — எவ்வளவு நுட்பமாகவும் ஆராய்ச்சியுடனும் I. Leoni அந்த உரைகளில் பேசினார் என்பதை.
https://www.youtube.com/watch?v=LHajVy7Re4M&list=RDLHajVy7Re4M&start_radio=1எங்க மச்சான் ஆலங்குடி வெள்ளைச்சாமி வேற லெவல்ல அனுபவிச்சு பதிவு போடுற அந்த திறமை இசையருவி எங்கேயும் தனியா இயங்குகிறார் வாழ்த்துக்கள் மச்சான் உங்களுக்கு
https://www.youtube.com/watch?v=oHaaYXNe1tE
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா!"- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுதினப் பகிர்வு!
குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்!
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா?
கூட்டிலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா!
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! - காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க்கரிசியிலே
கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா
பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் - முடிவில்
எவருக்குமே தெரியாமே ஓடினார் - மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்னை மூடினார்
செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக் காரன் யாரு! - நீ துணிவிருந்தா கூறு!
ரொம்ப - எளியவரும் பெரியவரும் எங்கே போனார் பாரு!
அவரு - எங்கே போனார் பாரு!
பொறந்த தெத்தனை எறந்த தெத்தனை
மானக் கேடாய் ஆனதெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு - இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்!
கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை வட்டம் செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தார். பல கலைஞர்களைப் போலவே வறுமை இவரையும் விட்டு வைக்கவில்லை. வறுமையின் காரணமாக, கிடைக்கும் தொழிலை எல்லாம் செய்து வந்த கல்யாணசுந்தரம் தன் நண்பர்களுடன் விவசாயச் சங்கத்தைத் தஞ்சையில் கட்டியெழுப்பினார். கலை மீது கொண்டிருந்த அவரது ஆர்வம் அவரை சென்னைக்கு வரவைத்தது. 29 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர், தன் கவிதைகள் மூலம் நூற்றாண்டுகளைக் கடந்த பகுத்தறிவு, சமத்துவக் கருத்துகளை விதைத்தவர்.
"தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது"
என்ற இரண்டே வரிகளில் உழைக்கும் மக்களின் பசியை, வறுமையை உலகுக்கு உணர்த்தியவர். 19வது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர் 1955-ம் ஆண்டு 'படித்த பெண்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் பாடல்கள் எழுதத் தொடங்கினார். தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் இவரது பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தன் வாழ்நாளில் 180க்கும் மேலான பாடல்களை எழுதியுள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், தன் அரசியல் நாற்காலியின் நான்காவது கால் 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
'ஆளுக்கொரு வீடு' படத்தில் இடம்பெற்ற
"செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நம் செல்வம்
கையும் காலுந்தான் உதவி - கொண்ட
கடமைதான் நம் பதவி.
பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரைக் காக்கும் உணவாகும்.
வெயிலே நமக்குத் துணையாகும் - இந்த
வேர்வைகள் எல்லாம் விதையாகும்.
தினம் வேலையுண்டு குல மானமுண்டு
வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம்."
என்னும் இவரது பாடல் உழைப்பின் முக்கியத்துவத்தையும், வேளாண்மையின் பண்புகளையும் எடுத்துரைக்கிறது.
"வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு
ஆடுதுன்னு விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க - உன் வீரத்தைக்
கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற
வார்த்தைகளை வேடிக்கையாக கூட
நம்பிவிடாதே – நீ வீட்டுக்குள்ளே இருந்து
வெம்பி விடாதே!"
என்று குழந்தைகளிடத்தில் பகுத்தறிவையும், தைரியத்தையும் விதைத்தவர். இவரது பாடல்கள் நாட்டுபுறத்தன்மையுடையது. காதலைக் கண்ணியமாக தன் கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவர்.
"வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது
கையடா - தனியுடைமைக் கொடுமைகள்
தீர தொண்டு செய்யடா - தானாய் எல்லாம்
மாறும் என்பது பழைய பொய்யடா!"
என்று தனியுடைமை கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுத்த கல்யாண சுந்தரனாரின் நினைவு நாள் இன்று (அக்டோபர் 8). பட்டுக்கோட்டையார் பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டன. இவருக்குத் தமிழக அரசு பாவேந்தர் பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளது. அவர் நீண்ட காலம் இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பார். அவரின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்வோம்.
https://www.youtube.com/watch?v=TyYEYFTuec0&list=RDTyYEYFTuec0&start_radio=1
உலகமே முடங்கியிருந்த கொரோனா காலத்தில் கையில வாங்கினேன் பையில போடல என்று தமிழில் டைப் செய்து இந்த பாடலை தேடினேன் கிடைக்கல உடனே நானே அதை எடிட் பண்ணி இதை யூடியூப்ல அப்லோட் பண்ணிட்டேன் நான் பார்க்கிறதுக்காகத்தான் திடீர்னு ஒரு நாள் திறந்து பார்த்தா 52 ஆயிரம் பேர் பார்த்து இருக்காங்க,
https://www.youtube.com/watch?v=iZbrVlmQfvI&list=RDiZbrVlmQfvI&start_radio=1
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் எழுதும் நினைவை புரிந்து கொள்ள முடியுமா இந்தப் பாடலின் வரிகள்
https://www.facebook.com/watch/?v=1655084404533125
கொக்கர கொக்கரக்கோ சேவலே கொஞ்சி இருக்கும் அன்பிலே இந்தப் பாடலை சேவலை கோழி கூப்டுகிறது அவ்வளவு நுட்பமா எங்க அத்தான் அந்த பாட்டு எழுதியிருக்கிறார்
https://www.youtube.com/watch?v=vHkziljMPWo&list=RDvHkziljMPWo&start_radio=1
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?
கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே _ உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே? _ உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே
கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே _ ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே _ அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே _ அதை
வாங்கிவந்து தந்துவிடு வெண்ணிலாவே!
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே…
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே _ நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே _ இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே _ இது
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே?

Comments
Post a Comment