ராணுவம், போலீஸ், சிறை அதிகாரிகள், அரச பயங்கரவாதம் Lion Raja Ganesan




சட்டம் யாருக்காகராணுவம் காவல்துறை எல்லாம் யாருக்காக அன்றைக்கு மன்னர்களுக்காக இன்றைக்கு ஆளும் பிரதமர், ஜனாதிபதி போன்ற உயர் பதவியில் இருப்பவர்களுக்காக,

கடவுள், அரசர், அரசு : ஒரே அடக்குமுறை இயந்திரம்

மனிதன் குற்றம்தண்டனை என்ற அமைப்பை உருவாக்கிய நாளிலிருந்தே, “சட்டம்என்பது நீதிக்கான கருவி அல்ல; அதிகாரத்தை காக்கும் கம்பியாகவே இருந்திருக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான சட்டங்கள் ஏழையை ஒடுக்க, உழைப்பவனை மிரட்ட, சொத்துடையவரை காப்பாற்றவே

எழுதப்பட்டன. திருடனுக்கு தூக்கு; பாலியல் குற்றம் என்று பெயர் வைத்து உடலை நசுக்கும் தண்டனை. சமூக சீர்திருத்தம் அல்லபயம்.

இந்த பயத்தை நிலைநாட்டிய முதன்மை ஆயுதம் கடவுள்.
சட்டமும் மதமும் பிரிக்கப்படாத காலத்தில், “தண்டனை கடவுளின் ஆணைஎன்று மனித மூளைக்குள் திணிக்கப்பட்டது. தலையை வெட்டும் கொலையாளி கடவுளின் பெயரைச் சொன்னான். அது பக்தி இல்லை; கொலைக்கு சாமி சான்றிதழ்.

பெரியார் தெளிவாகச் சொன்னார்:
கடவுள் மனிதனை உருவாக்கவில்லைமனிதன் தான் கடவுளை உருவாக்கினான்; தன்னை அடக்க.

அதே போல அரசர்களும் தங்களைகடவுளால் அனுப்பப்பட்டவர்கள்என்று அறிவித்துக் கொண்டார்கள்.
இங்கிலாந்து, பிரான்ஸ்எங்கும் அதே நாடகம்.
அரசருக்கு எதிராக பேசினால் கடவுளுக்கு எதிராகப் பேசுகிறாய்.
சட்டம்? அரசனின் விருப்பம்.
நீதி? அதிகாரியின் வசனம்.

சார்லஸ் முதலாம் அரசர் இதன் நேரடி உதாரணம்.
பாராளுமன்றம் இல்லாமல் 12 ஆண்டுகள் ஆட்சி.
நானே அரசு; நானே சட்டம்என்ற அகந்தை.
ஜனநாயகம் கேட்ட மக்களை அடக்கினான்.
அவனை மக்கள் கைது செய்து தலையறுத்தார்கள்.
இதில் அநீதி எங்கே?
ஜனநாயகத்தை மறுப்பவன் தலை தப்பிக்க உரிமையில்லை.

ஆனால் இங்கிலாந்து இதிலிருந்து ஜனநாயகத்தை கற்றுக்கொள்ளவில்லை.
அது கற்றுக்கொண்டது சூழ்ச்சி.

பிரிட்டிஷ் பேரரசு உலகம் முழுக்க செய்தது ஆட்சி அல்லஅரசு தீவிரவாதம்.
இந்தியாவில் மதத்தைப் பிளந்தது.
ஜாதியை நிரந்தரமாக்கியது.
மேல் ஜாதிகீழ் ஜாதிஎன்ற பட்டியலை அரசே எழுதி ஒட்டியது.
ஏன்?
உழைப்பவன் ஒன்றுபடக் கூடாது.

நிலத்தை பறிக்க சட்டம்.
உணவை பறிக்க வரி.
எதிர்த்தால் செடிஷன்.

சட்டம் என்ற பெயரில் கொள்ளை.
நீதிமன்றம் என்ற பெயரில் சுரண்டல்.

பஞ்சம் வந்தபோது கோடிக்கணக்கானவர்கள் செத்தார்கள்.
இது இயற்கை பேரழிவு அல்லஅரசின் கொள்கை கொலை.
ஆனால் புத்தகங்களில் எழுதப்பட்டது: “பிரிட்டிஷ் நிர்வாகம்”.

உள்நாட்டில் ஜனநாயகம் பேசும் அதே இங்கிலாந்து,
இந்தியாவில் துப்பாக்கியால் ஆட்சி செய்தது.
அங்கே போராடியவன்குற்றவாளி”.
இங்கே கொள்ளையடித்தவன்அரசர்”.

இன்று இங்கிலாந்து வீழ்ச்சியடைவது துயரம் அல்ல.
அது வரலாற்று பழிவாங்கல்.
சுரண்டலில் கட்டப்பட்ட பேரரசு சிதையாமல் என்ன செய்யும்?

மறுபுறம், ஒருகாலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நாடுகளில்
உழைக்கும் மக்கள் மெதுவாக எழுந்து நிற்கிறார்கள்.
இது உதவி அல்ல.
இது உரிமை மீட்பு.

பெரியார் சொன்ன அடிப்படை உண்மை இதுதான்:
சட்டம்சாமிஅரசு
மூன்றும் சேர்ந்தால் அது நீதி அல்ல; அடக்குமுறை.

சட்டம் மக்களின் கையில் வரும் வரை,
கடவுள் அரசியலிலிருந்து விரட்டப்படும் வரை,
ஜாதி சட்டத்தின் ஆதாரமாக இருக்கும் வரை,
நீதிஎன்பது ஏமாற்றுச் சொல் தான்.

மனிதனுடைய சிந்தனை தான் செய்வது சட்டத்திற்கு புறம்பானது அறமற்ற செயல் என்று தெரிந்தும் அதை செய்வதற்கான உண்மையான காரணம் அதனால் தான் தண்டிக்கப்பட மாட்டோம் என்பதுதான் அவன் அனைத்து தவறுகளையும் பெண்களை கற்பழிப்பது சித்தரவதை செய்து மனிதர்களை கொலை செய்வது எல்லாம் எல்லா நாடுகளிலும் எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் செயல் இது ரஷ்யாவில் அமெரிக்காவில் ஏன் இஸ்லாமிய நாடுகளிலும் சிறைகளில் இதுதான் நடந்தது

அபு கிரைப் சிறை, ஈராக் (2003–2004) –

அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக் மீது படையெடுத்த பிறகு, அபு கிரைப் சிறை கைதிகளை வைத்திருக்க பயன்படுத்தப்பட்டது. இதில் பலர் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களும், பொதுமக்களும் இருந்தனர்.

நிகழ்வு:
2003–2004
காலத்தில், சில அமெரிக்க சிப்பாய்கள் கைதிகளை கடுமையாக துன்புறுத்தினர். அவர்கள் கைதிகளை நிர்வாணமாக்கி அவமானப்படுத்தினர், அடித்தனர், மின்சார அதிர்ச்சி கொடுத்தனர், நாய்களால் தாக்கச் செய்தனர், பாலியல் வன்முறை செய்தனர்.
வெளியான புகைப்படங்களில், நிர்வாண கைதிகளை மனிதக் கோபுரம் போல அடுக்கி நிறுத்தியது, மின்சாரம் கொடுத்தது, நாய்களால் பயமுறுத்தியது போன்றவை இருந்தன.

உண்மை விவரம்:
இந்த கொடுமைகளில் முன்னணியில் இருந்ததாக ஸ்பெஷலிஸ்ட் சார்ல்ஸ் கிரேனர் தண்டிக்கப்பட்டார். சில கைதிகள், “நிர்வாணமாக தரையில் ஊர்ந்து செல்ல சொல்லி, சிப்பாய்கள் எங்களை கழுதை போல ஏறி சவாரி செய்தனர்என்று கூறினர்.
மனாதெல் அல்-ஜமாடி என்ற கைதி விசாரணை நேரத்தில் உயிரிழந்தார். அவரது உடல் பனியில் மூடப்பட்ட நிலையில், அருகில் சிரித்துக் கொண்டிருந்த காவலர்களின் புகைப்படங்களும் வெளிவந்தன.

விளைவு:
பல சிப்பாய்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இந்த சம்பவம்வார்ஆன் டெரர்காலத்தில் நடந்த மனிதாபிமானமற்ற சித்திரவதைகளின் உலகளாவிய அடையாளமாக மாறியது.


சைத்னயா சிறை: மனிதாபிமானத்திற்கு எதிரான கொடுமையின் சின்னம்

2011 ஆம் ஆண்டில் சிரியாவில் தொடங்கிய உள்நாட்டுப் போருக்குப் பிறகு, அரசுக்கு எதிராக குரல் கொடுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சைத்னயா இராணுவ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்த சிறையை சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) ஒரு மனித படுகொலை கூடம் என்று வர்ணித்துள்ளது.

சைத்னயா சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள், எந்தவிதமான நீதிமன்ற விசாரணையும் இன்றி நீண்ட காலம் சிறையில் வைக்கப்படுகின்றனர். அமைதியாக போராட்டம் செய்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் இதில் அடங்குவர். இங்கு கைதிகள் மனிதர்களாகவே பார்க்கப்படுவதில்லை. அவர்கள் தினமும் கடுமையான சித்திரவதை, அவமானம் மற்றும் மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

உயிர் பிழைத்தவர்கள் கூறும் தகவல்கள் மனதை உலுக்கும் வகையில் உள்ளன. காவலர்கள் கைதிகளை நிர்வாணமாக்கி, ஒருவரையொருவர் பாலியல் வன்முறைக்கு கட்டாயப்படுத்தியதாக சிலர் சாட்சி அளித்துள்ளனர். இத்தகைய உத்தரவுகளை மறுத்தால், கொலை செய்வோம் என மிரட்டப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இது தனிப்பட்ட சம்பவம் அல்ல; திட்டமிட்டு, முறையாக நடத்தப்படும் கொடுமையாகவே இது நடைபெறுகிறது.

இந்த சிறையில் போதுமான உணவும் இல்லை. பல கைதிகள் பட்டினியால் வாடுகின்றனர். மருத்துவ வசதிகள் கிடையாது. நோயாளிகளுக்கும், காயமடைந்தவர்களுக்கும் சிகிச்சை மறுக்கப்படுகிறது. காவலர்களின் அடிதடி மற்றும் மன உளவியல் வன்முறை தினசரி நிகழ்வாக உள்ளது.

இந்த கொடூர அனுபவங்களால் உயிர் பிழைத்தவர்கள் பலர் உடல்நலம் குன்றியும், மன உளைச்சலுடனும் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கை முழுவதும் இந்த வன்முறையின் தாக்கம் நீடிக்கிறது. இது ஒரு நாட்டின் சிறைச்சாலையில் நடக்கும் சம்பவமாக மட்டுமல்ல; மனித உரிமைகளுக்கு எதிரான மிகப் பெரிய குற்றமாக பார்க்கப்பட வேண்டும்.

முடிவாக, சைத்னயா சிறை மனிதாபிமானத்தின் தோல்வியை வெளிப்படுத்தும் ஒரு இடமாக உள்ளது. உலக நாடுகள் இத்தகைய கொடுமைகளை கவனிக்காமல் இருப்பது, இத்தகைய குற்றங்கள் தொடர வாய்ப்பளிக்கும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே நாகரிக சமூகத்தின் அடிப்படை கடமையாகும்.

 


 பிரெசோவ்ஷ்சிகிசித்திரவதை சர்ச்சை (ரஷ்யா, 2021–2022)

என்ன நடந்தது?
ரஷ்யாவின் சரடோவ் (Saratov) சிறையில் உள்ள காசநோய் மருத்துவமனை (OTB-1) இலிருந்து வீடியோக்கள் வெளியானது. அந்த வீடியோக்களில் கைதிகள் மீது கடுமையான சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை நடந்தது தெரிய வந்தது. இதனால் பெரிய சர்ச்சை ஏற்பட்டது.

யார் செய்தது?
பிரெசோவ்ஷ்சிகிஎனப்படும் சில கைதிகள், சிறை அதிகாரிகளின் உத்தரவின்படி, மற்ற கைதிகளை சித்திரவதை செய்தனர்.
ஒப்புதல் வாக்குமூலம் வாங்கவும், எதிர்ப்பு காட்டியவர்களை தண்டிக்கவும் இந்த சித்திரவதை பயன்படுத்தப்பட்டது.

உண்மை சம்பவம்:
முன்னாள் கைதி டெனிஸ் போகுசாயேவ், தினமும் சித்திரவதை நடந்ததாக கூறினார்.
பல மாதங்கள் தொடர்ந்து பொருட்களால் பாலியல் வன்முறை உட்பட கொடூரமான தாக்குதல்கள் நடந்தன.
சிறை ஊழியர்கள் இதை பார்த்து சிரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

விளைவு:
மனித உரிமை அமைப்புகள் கூறுவதன்படி குறைந்தது 350 கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் வெளியான பிறகு ரஷ்ய சிறைத்துறை விசாரணையை தொடங்கியது.
ஆனால் சிறை அமைப்பில் உள்ள ஆழமான ஊழலும் வன்முறையும் இன்னும் பெரிய பிரச்சினையாகவே உள்ளது.

____________

https://www.gktoday.in/iaf-personnel-beard-sc/

இந்தியாவில் ராணுவம் தொடர்பான வழக்குகள் ரெண்டு வழக்கு  மட்டும் உங்களுக்கு நான் சொல்லணும் ஒன்று முகமது சுபர் அவரு ஆயுதப்படைகளுக்கு

உண்மையாக இந்தியாவுக்காக வேலை செய்தார் ஆனால் அவர் ராணுவத்தின் கட்டுப்பாடுப்படி நீங்க தாடி வைக்க கூடாது அது அவர் எதிர்த்து வழக்கு போட்டார் பஞ்சாப் சர்தார்ஜிகள் தாடி வைத்திருக்கிறார்கள் நான் ஏன் வைக்க கூடாது அதை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ன சொன்னாங்க சீக்கிய மதத்தில் இது போன்ற கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது அவன் கத்தி கூட வச்சுக்கலாம் இஸ்லாம் எங்கேயாவது இப்படி முகத்தில் தாடி வளர்க்கலாம் என்று சொல்லி இருக்கிறதா நக்கல் ,,,,, தீர்ப்பு 


சாமுவேல் கமலேசன் அவர் வழக்கு தான் இப்ப சமீபத்துல தீர்ப்பு வந்துச்சு ராணுவத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரி சொல்வதை கேட்பது மட்டும் தான் வேலை உன் மதம் இஸ்லாம் கிறிஸ்தவம் தேவையில்லை இந்தியாவில் ராணுவத்தில் அங்கு கோயிலில் பூஜை செய்யப்படும் நீ எவ்ளோ பெரிய அதிகாரியாக இருந்தாலும் அங்க போய் அவன் கூட

கலந்துக்கணும் மாட்டேன்னு சொன்னதுனால அந்த ஆளுக்கு பென்ஷன் இல்லை பிஎப் இல்லை  என்னமோ போங்கடா டேய்

https://www.thehindu.com/opinion/lead/the-kamalesan-case-and-its-simple-lesson/article70331102.ece



கம்யூனிஸ நாடான சீனாவில் தியாமின் சதுக்கத்தில் போராடிய மாணவர்களை சுட்டுக் கொன்றது இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசாங்கம்  

ஜூன் 3, 1989 அன்று, போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் பெரிதாகி, வியத்தகு நிகழ்வுகளை வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் படமாக்கியதால், சீன இராணுவம் இயக்கத்தை நசுக்க இயக்கப்பட்டது. தியனன்மென் சதுக்கப் படுகொலை என்று அறியப்பட்டபோது, ​​அறியப்படாத எண்ணிக்கையிலான சீன எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் (மதிப்பீடுகள் ஆயிரக்கணக்கானவை).

அமெரிக்காவில், போராட்டங்கள் பரவலான கவனத்தை ஈர்த்தன. சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிச நாடுகளைப் போலவே சீனாவும் சுதந்திர சந்தை மற்றும் அரசியல் ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக பல அமெரிக்கர்கள் கருதினர். போராட்டங்களை அரசாங்கம் கொடூரமாக அடக்கியது அமெரிக்க பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்க அரசாங்கம் சீனாவிற்கான ஆயுத விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி, சில பொருளாதாரத் தடைகளை விதித்தது, ஆனால் அந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் அடையாளமாகவே இருந்தன. சீனாவில் வளர்ந்து வரும் அமெரிக்க வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் படுகொலைக்கு அமெரிக்காவின் கடுமையான எதிர்வினை இராஜதந்திர முறிவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் ஆகியவை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பதிலை மட்டுப்படுத்தின.


https://www.youtube.com/watch?v=jxwiJZISg_A&t=276s

அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் எந்த வாய்க்கா தகராறும் இல்லை ஆனால் அங்கிருந்த பிரென்ச் ஆதிக்கத்தை முடிவு செய்ய அமெரிக்க ராணுவத்தை வியட்னாமுக்கு அனுப்புறாங்க அவர்கள் அங்க போயி அதிபர்கள் மாறிக்கிட்டே இருக்காங்க,

அவங்க ஒண்ணுமே செய்ய முடியல அதுக்கு என்ன காரணம் வியட்நாம் மக்களிடம் உண்மை இருந்தது நேர்மை இருந்தது கடைசில ஒரு ராணுவ அதிகாரி கோவத்துல ஒரு ஊர்ல போய் ஆண்கள் இல்லை  பெண்கள் முதியவர்கள் இளம் பெண்கள் எல்லோரையும் கற்பழித்து கொலை செய்து

அதை இன்னொரு அதிகாரி பார்த்து விட்டான் அவன் அமெரிக்காவுக்கு ரிப்போர்ட் பண்ணி அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்துட்டான் ஆனால் இரு வேறு அதிகாரிகள் ஒருத்தனுக்கு ஏன் அந்த புத்தி வந்தது இன்னொருத்தனுக்கு ஏன் இப்படி வந்தது இதுக்கு காரணம் உளவியல் தன் சொந்த ரத்தம் இருந்தால் அந்த துப்பாக்கி சூடு நடத்த மாட்டான் இதை ஒரு ஆய்வில் நான் கண்டறிந்தேன்

https://www.youtube.com/watch?v=dumuajcqiUw

வியட்நாம் நாட்டுக்குள் ஒரு குற்றமும் செய்யாத பெண்கள் குழந்தைகளை கொன்றுளித்த ஒரு ராணுவ வீரருக்கு எதிராக இன்னொரு ராணுவ வீரர் புகார் அளிக்கிறார், அவருக்கு எதிராக அமெரிக்க ராணுவத்திலும் நாட்டிலும் இருக்கும் சில அரசியல்வாதிகள் கொந்தளிக்கிறார்கள் நடுவில் புகுந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தான் இந்த செய்திகளை எல்லாம் வெளிக்கொண்டு வந்தார் ஒருவழியாக குற்றவாளி தண்டிக்கப்பட்டார் அந்த தாம்சன் சொந்த வாழ்க்கையில் அவ்வளவு நேர்மையாக வியட்நாம் மக்களை பாதுகாத்தவர் சொந்த வாழ்க்கையில் மிகவும் மன உளைச்சலுக்கு உட்பட்டு மரணம் ஆகிவிட்டார்


எம் ஜி ராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதல்வராகவும்  அதே ஊரில் அதே பேரில் பிறந்த எம் ஜி இராமச்சந்திரன் சிறைத்துறை அதிகாரியாகவும் ஆக்கப்பட்டது தான் அரசியல் விஞ்ஞானம் 

சிறைத் துறை அதிகாரி ராமச்சந்திரன் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் 60% உண்மையை பேசி இருக்கிறார் அவர் விட்ட இடத்தை நான் தொடர்கிறேன் 

சிறைச்சாலையை கட்டமைத்த ஆங்கிலேயர் எத்தனை பேர் இருந்தார்கள் இந்தியாவிலிருந்து சாதி மற்றும் மதம் அதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு அந்தமான் சிறைச்சாலையை யார் கட்டியது அங்கே சிறை வைக்கப்பட்டவர்கள் யார் வரலாற்றை பெரியார் கண் கொண்டு பார்க்க வேண்டும், அந்தமான் சிறையில் தலைமை அதிகாரி ஆப்கானிஸ்தான் இஸ்லாமியர் அதேபோல தமிழ்நாட்டில் சிறை அதிகாரி மலையாளி ராமச்சந்திரன்.

https://www.youtube.com/watch?v=5sJHxOG44r4

வாட்ட சாட்டமாக கோவை மத்திய சிறையை கடந்து போன இவரின் அப்பா கோபால நாயர் ஆங்கிலேயர் கண்ணில் பட்டு அவரை சிறை காவலராக நியமித்தார்கள் கடைசி வரை பதவி உயர்வு எதுவும் இல்லாமல் சிறையிலேயே ஆங்கிலேயர் ஆசைப்படி பல பேரை கொடுமைப்படுத்தி செத்துப் போனார்,

 இவரு ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியில் ஒரு பெண்ணை பற்றி சிவப்பான அழகான பெண் பொய்ச்சொல்ல மாட்டாள்? படிச்சவ அறிவாளி எதையும் சாப்பிட மாட்டேங்குற அவளுக்காக போய் மினரல் வாட்டர் அப்போது சென்னையில் ஒரே இடத்தில் தான் கிடைக்கும் அதுக்கெல்லாம் சட்டத்தில் அனுமதி இல்லை ,  இவர் கொஞ்சம் ஜாக்கிரதை யாரை காக்காய் பிடித்து யாருக்கு ஜால்ரா அடித்து சிறையில் இருக்கும் அத்தனை பதவிகளையும் அனுபவித்து வந்திருக்கிறார் அதிலும் இந்த பெண் குறித்து பேசும்போது அவருக்கு இயல்பிலேயே இருக்கும் வாழ்ந்தாருக்கு மாரடிக்கும் எண்ணம் தெளிவாகத் தெரிகிறது அந்தப் பெண் தவறு ஏதும் செய்யவில்லை என்று எப்படி சொல்கிறார் முழுக்க தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தை எப்படி தள்ளி விட்டாள் இறந்து போகும் என்னமோ போடா ராமச்சந்திரா,

https://www.youtube.com/watch?v=K2HuibjaQoI

மதுரை கலெக்டராக சம்பத் இருந்தார் அப்போது மதுரை சிறையில் தமிழகத்தில் இருந்த மத்த சிறையில் இல்லாத சிறப்பு சலுகை நேரடியாக முகம் பார்த்து கைகுலுக்கி சிறைவாசிகளை சந்திக்க வருபவர்கள் இயல்பாக இருக்கும் நிலைமையை மாற்றும் படி ஒரு சிறப்பு கண்ணாடி போடப்பட்டது, அதை எதிர்த்து போராட்டம் நடந்தது அதை அடக்குவதற்கு துப்பாக்கி பிரயோகம் செய்யலாம் என்று அனுமதி கொடுத்தவர் மதுரை கலெக்டராக சம்பத் ,என்ன நடந்ததுன்னா சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் இவர் மூன்றாவது குற்றவாளி அவரே சிறைச்சாலைக்கு வந்தார்.

கே எ கிருஷ்ணசாமி இவரு நல்ல மனுஷன் தான் அவரு கைதாகி சிறைச்சாலைக்கு போன போது அன்றைக்கு இருந்த சிறைச்சாலையை அதிகாரிகள் அவரை மரியாதை குறைவாக நடத்தினார்கள்* ஆனால் அவருக்கு அங்கிருந்த ஒரு கன்வெர்ட் வாடன் வேற ஒன்னும் இல்ல கும்மகி யானை , சிறையில் 7 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் கைதிகளை பழக்கி சிறைச்சாலை அவர்களை அவர்களுக்கானவர்களாக மாற்றும் அப்படி மாற்றப்பட்ட மனிதன் சமையல் டிபார்ட்மெண்ட் பெரிய அண்டா அதை தூக்கிட்டு வந்து வைக்கிறதுக்கு உடல் பலமும் வேண்டும் மன பலமும் வேண்டும் அப்படி ஒருத்தர் அவரு இந்த கே.ஏ கிருஷ்ணசாமி பாத்துட்டு அவருக்காக பொது கிச்சன்ல போய் சாம்பார் காய் தட்டோட கொண்டு வந்து அவரை கவனிச்சார்,

 காலம் மாறுது மீண்டும் அதிமுக ஆட்சி கே.ஏ கிருஷ்ணசாமி சட்டத்துறை அமைச்சர் ஜெயில் நிர்வாகம் அவருக்கு கீழே அவர் வருகிறார் இதே ஜெயிலுக்கு  ஆனா அவரு ஜெயிலர் இருக்கையில் அமர்ந்து கொண்டு காளிதாஸ் எங்கே என்றார் அவருடைய இயற்பெயர் காளிதாஸ் என்று ஜெயிலில் யாருக்கும் தெரியாது எல்லோரும் காலி காலி என்றுதான் அழைக்கிறார்கள் அங்கு வந்த அந்த காளிதாசை அனைவரு முன்னிலையிலும் கட்டித் தழுவினார் இதுவும் வரலாறு உன் விடுதலைக்காக நான் வெளியே போய் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு போனார்   கே ஏ கிருஷ்ணசாமி


அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உதயமானபோது எம்.ஜி. ராமச்சந்திரன். அவர்களை முதல் உறுப்பினராகவும், கே.ஏ. கிருஷ்ணசாமி அவர்களை இரண்டாவது உறுப்பினராகவும் முறையே கையொப்பமிட்டு கழகம் தொடங்கப்பட்டது. அன்றுவரை புரட்சிநடிகர் என்றழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புரட்சித்தலைவர் என்று பெயர் சூட்டிய பெருமைக்குரியவர் கே.ஏ.கே. அவர்கள்.கொளுத்த பணக்காரர்கள் எல்லாம்
எம்ஜிஆரை ஆதரித்து நெடுஞ்செழியன் ராஜாராம் போன்றவர்கள் எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை இவர்களை மரியாதையாக நடத்தினார் ஜெயலலிதா சசிகலா கூட்டணி வேரோடு புடுங்கி எறிந்தது இப்படி எல்லா பதவியும் புடுங்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் தான் இந்த கேஏ கிருஷ்ணசாமி இவர் மீது கலைஞருக்கு வன்மம் இருந்திருக்கும் மறுக்க முடியாது அதில் தவறும் இல்லை

https://www.youtube.com/watch?v=K2HuibjaQoI

மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார் மனித வளர்ச்சியில் ஏற்றப்படும் சட்டங்கள் அதை மீறும் அதிகாரத்தோடு தான் இருக்க வேண்டும், அதுபோலவே சிறைச்சாலை கட்டமைப்பு மிகத் தெளிவாக அதற்காக ரூல்ஸ் பிரேம் பண்ணியது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தான் 

டெல்லி திகார் திரை ஆசியாவில் பெரியது பாதுகாப்பு நிறைந்தது  அங்கிருந்து சோப்ராஜ் தப்பித்தது இன்றும் பேசப்படுகிறது அவரை கோவாவில் கைது செய்தார்கள் அவன் ஏன் உலக அளவில் பேசப்படுகிறான் இந்திய தந்தைக்கும் வியட்நாம் தாய்க்கும் பிறந்த மகன் இளம் வயதில் அமெரிக்க ராணுவம் வியட்நாமில் செய்த அநியாயங்களை அவர்கள் நடத்திய கேளிக்கைகள் எல்லாம் பார்த்து தானும் இப்படி வாழ வேண்டும் என்று விரும்பி பிகினி டிரஸ் போட்டிருந்த அழகான பெண்களைத்தான் முதலில் கொலை செய்தான் 70 வயதில் 20 வயதுப் பெண் அதுவும் இவருடைய வழக்கறிஞரின் மகள் விரும்பி திருமணம் செய்து கொண்டால் என்றால் இயல்பிலேயே ஹீரோக்களை விரும்பும் ஹார்மோன்கள் பெண்களிடம் இருப்பதும் இதற்கு காரணம்


1995 வேலூர் கோட்டை சிறை தகர்ப்பு என்பது 1995 ஆகத்து 15 அன்று வேலூர் சிறையில் 153 அடி நீள 47 மீட்டர் சுரங்கப் பாதையை தோண்டி 43 விடுதலைப்புலி கைதிகள் தப்பிய நிகழ்வு ஆகும். இவ்வாறு தப்பியோடிய விடுதலைப் புலி கைதிகளில் 21 பேர் சில வாரங்களில் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.


1999 நவம்பர் 17 
ஜெயிலர் ஜெயக்குமார் உயிரோடு அறையில் வைத்து கொளுத்தப்பட்டார், இதுகுறித்து இராமச்சந்திரன் புத்தகத்தில் இரண்டு வரி எழுதி இருக்கிறார் ஆனந்த விகடன் காணொளியில் புரியிற மாதிரி ஈஸியா சொல்றார்,
 அதாவது எனக்கு அனுபவம் உள்ள விடயம் அதனால் சொல்கிறேன் ஜெயலலிதா தங்கி இருந்த பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இரண்டு முறை லயன்ஸ் கிளப் மூலம் சென்று இருக்கிறேன் ஒருமுறை அவர்களை மகிழ்விக்க இரண்டு ஸ்டாண்ட் அப் காமெடியன் கனடாவில் நகையப்பா என்று அழைப்பார்கள் ஒரு முறை ஸ்வீட் பழங்கள் கொடுக்கச் சென்றோம். 
 ராமச்சந்திரன் சென்னை  சிறைக்கு ரோட்டரி கிளப் மூலம் வந்து தேவையான பொருட்களை சப்ளை செய்த சடங்கு வழக்கத்திற்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தது இது நல்லதல்ல என்று அவருடைய நீண்டகால சிறை அனுபவத்தில் சொல்கிறார், அதாவது மிகப்பெரிய அமைதி என்பது ஆபத்தின் அறிகுறி அளவுக்கு மீறி சிறையில் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறார் இந்த ஜெயக்குமார் அது தவறு என்பதைத்தான் சொல்லாமல் சொல்கிறார். ஜெயக்குமார் பழிவாங்கப்பட்டதற்கு காரணம் இருக்கிறது 
சார்பட்டா பரம்பரை படம் பார்த்த உங்களுக்கு தெரியும் ஆங்கிலேயர் காலத்தில் துறைமுகத்தில் வேலை செய்ய உடல் உழைப்பு அதிகமான ஆட்கள் தேவை அவர்களுக்காகத்தான் இந்த குத்துச் சண்டைகள் நடத்தப்பட்டன விளையாட்டுப் போட்டிகளுக்குள் இருக்கும் அரசியலை இன்னொரு வாட்டி பேசுவோம் 



இந்த பாக்ஸர் வடிவேலு 

பாக்ஸர் வடிவேலு உடல் நலக் கோளாறால் வயிற்று வலியில் இறந்து போனதாகத்தான் அவருடைய போஸ்ட் மாடம் ரிப்போர்ட் சொல்லுது அதுவும் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை 
இதில் ஒரு உண்மையை ராமச்சந்திரன் சொல்கிறார் என்னவென்றால் அன்றைக்கு சென்னையில் திருமாவளவன் தன் அரசியல் வரவை அறிவிக்கிறார் பெரிய கூட்டம் அதை மடை மாற்றவே இந்த செய்தி, செயல், நடந்ததாக  சந்தேகப்படுகிறார் திருமாவளவன் பேசப்படக்கூடாது என்பதற்காகத்தான் சிறைக்குள் கலவரம்

https://en.wikipedia.org/wiki/June_1962_Alcatraz_escape_attempt


உலகத்தில் கட்டப்பட்ட சிறைச்சாலைகளில் மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லப்பட்ட  Alcatraz Federal Penitentiary இந்த சிறைச்சாலையில் இருந்து இவர்கள் தப்பித்ததை அவர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள், என்ன கொடுமை என்றால் இவர்கள் இறந்த உடல்களும் எங்கும் கிடைக்கவில்லை உயிரோடு இருக்கிறார்களா அதற்கான ஆதாரமும் இல்லை, இன்றும் தேடப்படும் குற்றவாளிகளாக அந்த மூன்று பேரும் நம்பப்படுகிறார்கள், 
நகம் வெட்டும் சிறிய கருவியை கொண்டு துருப்பிடித்து இருந்த இரும்புக் கம்பிகளை அறுத்து இவர்கள் தப்பித்த கதையை உலகம் பேசிக் கொண்டிருக்கிறது.


https://www.pbs.org/wgbh/nova/greatescape/history.html

1568 இங்கிலாந்தில் முதலாம் எலிசபெத் ரொம்ப ஸ்ட்ராங்கா பிராட்டஸ்டண்ட் உதவியுடன் கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்துக்கு எதிராக ஆட்சி நடத்தினார் அவளின் சொந்தக்காரி கசின் மேரி ரொம்ப குடைச்சல் கொடுத்தா அவள புடிச்சு ஜெயில்ல போட்டுட்டா எலிசபெத் ராணி அவ தப்பிச்சு போறதுக்கான முதல் முயற்சி இவை அழகுல மயங்கின படகு காரன் கடந்து போகும் தூரம் அதிகம் குளிர் வேற கொஞ்சம் உன்னோட இவ ஒத்துஉழைக்க வில்லை  விட்டுட்டு போயிட்டான் மீண்டும் முயற்சி அனாதை உதவியுடன் தப்பித்து போய் தலை வெட்டி செத்ததெல்லாம் வேற கதை



இங்கிலாந்தின் அரசு குடும்பத்தின் பாதுகாப்பான சிறை லண்டன் கோபுரம் இங்கிருந்து ஒரு கைதி செலிப்ரட்டி 1715 இல் Jacobite Rebellion 
இரவில் தன்னை சந்திக்க வந்த வாடிக்கையாளர் போல  அன்று லண்டன் நகரத்தில் நடந்த இரவு கொண்டாட்டத்தில் கலந்து விட்டு விடியும் முன் திரும்பி வந்து சிறையில் படுத்து கொண்டார் இது உண்மையான ஹிஸ்டரி இதைப்போல ராமச்சந்திரன் ஒரு கதை சொல்றாரு,

*************
சிறைச்சாலை என்பதை   17ஆம் நூற்றாண்டு காலம் வரை மன்னர் ஆட்சி தான் அவங்க சொந்தக்காரங்களை சிறையில் வச்சிருப்பாங்க எதிரிகளை சோறு போட்டு பாதுகாக்கிறது அந்த காலத்து மன்னர்களுக்கு வழக்கம் இல்லை உடனே கொன்னு புதைத்துவிடுவார்கள் ஆனால் எப்ப இந்த சிறைச்சாலை சிறப்பாக கட்டமைக்கப்பட்டது,

பதினெட்டாம் நூற்றாண்டில் தான் குறிப்பாக ஆங்கிலேயர் 9 ஆண்டுகள் சிறையில் இருந்த வலமாவூர் கிருஷ்ணதேவர் என்னிடம் சொன்னது ஐயா உங்களுக்கு தமிழே வரலைன்னு தான் என்னை கூப்பிட்டு காலையில தினமணி பேப்பரை படிக்க சொல்றீங்க ஆனா ரேடியோவை திறந்து பிபிசி ஆங்கில செய்திகள் எல்லாம் கேக்குறீங்க எப்படின்னு கேட்டேன் அப்பதான் அந்த உண்மையை அவர் சொன்னாரு,
எனக்கு ஆங்கிலம் எழுதத் தெரியாது ஆனால் நல்லா பேசத் தெரியும் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது ஐந்து ஆண்டுகள் எங்களுக்கு ஆங்கிலம் போதிக்கப்பட்டது அப்பத்தான் இன்னொரு உண்மையவும் சொன்னாரு காமராஜருக்கும் அதே போல அந்த காலத்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் பென்ஷன் வாங்கியவர்களுக்கு எல்லாம் நல்ல ஆங்கிலம் தெரியும் இது எதற்காக கும்கி யானை இவர்கள் இதே வார்த்தையை அவர் சொன்னாரு  இவங்கள வெறும் சோறு போட்டு தண்டனை கொடுக்கல நமக்கு ஆதரவா நாளைக்கு வெளியே போய் இவங்களே வேலை செய்யணும் என்பதற்காக கட்டமைக்கப்பட்டது தான் சிறைச்சாலை

&&&&&&&&&&&&&&

தமிழகத்தில் நடந்த என்கவுண்டர்கள் உண்மையான காரணம் ஆளும் வர்க்கம் எல்லாவற்றையும் சட்டப்படி ,நீதித்துறைப்படி செய்ய முடியாத செயல்களை ரவுடிகளை கொண்டு செய்து விடும் அது வெளியே தெரிந்தால் நமக்கு சிக்கல் வரும் என்று தெரிந்து வேட்டை நாய்களை கொல்வது போல ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டு இருக்கிறார்கள் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் செய்த கொலைகள் கற்பழிப்புகள் அதை செய்தவர்களுக்கு பரிசு வேறு வழங்கினார் ஜெயலலிதா 30 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தான் அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியானது

வாச்சாத்தி சம்பவம் நடந்தபோது நான் கோயமுத்தூரில் இருந்தேன் மார்ட்டின் என்கிற இடதுசாரி தோழர் அழைப்பின் பேரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக  நிதி திரட்டி கொடுத்திருக்கிறேன் அதெல்லாம் முடிந்து போய்விட்டது   சமீபத்தில் ஒரு யூட்யூப் காணொளி பிரமிப்பாக இருக்கிறது தமிழன் மிகவும்   முற்போக்குவாதி எங்கேயும் தவறு செய்ய மாட்டான் எல்லாவற்றையும்    உடைத்து போடும் அந்த காணொளியை இடதுசாரி தோழர்கள்    அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்

வாச்சாத்தியில் நடந்தது என்ன வீடியோவை பார்க்கும் போது ஒரு விஷயம்   தெளிவா தெரியுது பெரியார் கலைஞர் ரெண்டு பேருக்கும் எதிரா எம்ஜிஆர் ஜெயலலிதா என்கிற போர்வையில் இடதுசாரி தோழர்களை என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் எம்ஜிஆர் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 18 பேர்   ஜெயலலிதா காலத்தில் கொடியங்குளம் வன்முறை அது ஜாதி அரசியல்   இல்லை மிகவும் அரசியல் படுத்தப்பட்ட முக்குலத்தோர் சமூகம்   போன்றவர்கள் போலீஸ் மற்றும் எல்லா இடங்களிலும் நிறைந்து இருந்தபோது தமிழ்நாட்டில் இருந்து வெளியே போய் மலேசியா சிங்கப்பூர் போன்ற   நாடுகளில் நிறைய சம்பாதிச்சு நல்ல வசதியான வீடு கட்டி வாழ்ந்தவர்கள்   மீது ஏற்பட்ட வன்மம் அங்கு புகுந்து போலீசார் தலித்துகள் சண்டையாக    மாற்றியது ஜெயலலிதா சசிகலா செய்த மிகப்பெரிய தவறு அதை வரலாறு   மன்னிக்காது

சரி வாச்சாத்தி வீரப்பன் ஏரியா கிடையாது அந்த ஊரில் ஒரே ஒரு கொடி தான் பறக்கும் அது அதிமுக கொடி அப்படி இருந்த கிராமத்தில் எப்படி 500 போலீசார் உள்ளே புகுந்து 18 பெண்களை அதில் எட்டு பேர் இளம்பெண்கள் தனியாக   கூட்டிக்கொண்டு போய் கற்பழிக்கும் தைரியம் எப்படி வந்தது போனபோது   இவர்களில் இருந்த பெண் போலீசார் வழியிலேயே இறங்கி விட்டார்கள்   அவர்கள் சொன்ன வாக்கு மூலம் தான் இந்த தண்டனைக்கு காரணமாக   இருந்தது

எம்ஜிஆர் காலத்தில் தேவாரம் அதுபோல ஜெயலலிதா காலத்தில் இரண்டு பேர் இவர்கள் போலீசார் கிடையாது மனுநீதி சொல்வதை செயல்படுத்தக்கூடிய   அதிகாரிகள்


வாசாத்தி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான ரேஞ்சர் எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரர் அவர் நேர்மைக்காக நிறைய விருது வாங்கினவர் அவர்  இந்த வழக்கில் சம்பந்தப்பட்டார் என்பது எனக்கே புரியவில்லை அவர் அண்ணன் ஒருமுறை வந்து சொன்னார்,

என் தம்பியும் ,,,,,,, ஆயிட்டான் ஏன்னா இல்லாம நேர்மையா தான் இருப்பேன்னு சொன்னா  உயிரோடு இருக்க முடியாது அந்த அளவுக்கு அன்றைக்கு இருந்த ஃபாரஸ்ட் அதிகாரி தமிழ்நாட்டு செங்கோட்டையன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதை அவர் சொல்லி கேட்டிருக்கிறேன்

இவன் சொல்லித்தான் அந்தப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஒரு முறை ஜெயலலிதா இவனை தொடர்பு கொண்ட போது ஒரு முன்னணி நடிகை பானு பேசினால் செங்கோட்டையனின் மனைவி நேரடியாக ஜெயலலிதாவிடம் அவர் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் அதன் பிறகு தான் இந்த அயோக்கிய தாயோ,,, மந்திரி பதவி இருந்து தூக்கி வீசப்பட்டான் சந்தன கடத்தல் அப்படின்னு சொல்றாங்க அவங்க போய் சர்ச் பண்ணி அவ்வளவு அயோக்கியத்தனம் பண்ண ஊர்ல யாரும் வசதியா வாழல அவ்வளவு மதிப்புள்ள சந்தனத்தை கடத்தி இருந்தால் அவர்கள் வசதியாக இருக்க வேண்டும் அல்லவா இந்த எடப்பாடி பழனிச்சாமி சின்ன தப்பு சொந்தக்காரங்க கொலை பண்ணிட்டு ஜெயலலிதா கூட சரண்டர் ஆயிட்டான் ஆனா இந்த செங்கோட்டையன் செஞ்சிருக்க தப்பு மன்னிக்க முடியாது


இந்த வாசாத்தி வழக்குல யாரும் சொல்ல முடியாம தவிக்கிறாங்க உண்மை என்னன்னா ஜெயலலிதாவோட மூணு பங்களாவுக்கு தேவையான மரங்கள் அதிலும் சந்தன மரம் தேக்கு மரம் எல்லாம் வெட்டி கடத்தப்பட்டது,

செங்கோட்டையன் அதற்கு துணை போனான் சரி தமிழ்நாட்டில் முதல்முறையாக பெண் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி பெண் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் பத்மினி சேசுதுரை ரெண்டு பேரும் என்ன சொன்னாங்க தெரியுமா இந்த வழக்கு பத்தி இது தேவையில்லாத வழக்கு பொய் வழக்கு அப்படின்னு சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசுனாங்க நீதிமன்றத்தில் பத்மினி சேசுதுரை பேசுறாங்க இந்த பெண்களை நம்பி வழக்கு நடத்த முடியாது என்று தான் சிபிஐக்கு கொடுத்தார்கள்

இந்த வழக்கை பொறுத்தவரை பாப்பா மோகன் நாடறிந்த கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் அவர் வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் ஆனா லலிதா பாய் என்ற பெயர் கொண்ட சேலத்தில் பெண்கள் சிறைச்சாலையில் இருந்த அந்த அதிகாரி ,

அவங்க ஒத்துழைப்போடு தான் இந்த வழக்கு சரியான பாதையில் போனது அதற்கு இன்னமும் உதவி செய்தது பாமதி ஐ ஏ எஸ் மொத்த சிஸ்டமும் கரெக்டா வச்சிருந்த ஜெயலலிதாவுக்கு நாலஞ்சு அதிகாரிகள் பாடம் சொல்லிக் கொடுத்த வழக்கு அந்த அம்மா உயிரோடு இருந்து இதெல்லாம் பார்க்க விரும்பாமல் தான் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க


https://www.youtube.com/watch?v=ZgkPtjotOJ4&t=26s

1995 கொடியங்குளம் வன்முறை

1995 ஆகஸ்ட் 31 அன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தில் ஒரு பெரிய வன்முறை நடந்தது. அந்த கிராமத்தில் பெரும்பாலும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர்.

அன்று சுமார் 600 காவலர்கள் கிராமத்துக்குள் நுழைந்து, “குற்றவாளிகள் இங்கு மறைந்துள்ளனர்என்று கூறி வீடு வீடாக சோதனை செய்தனர். ஆனால் அந்த சோதனை மிகவும் கொடூரமாக மாறியது.

  • பல வீடுகள் உடைக்கப்பட்டன.
  • பணம், நகைகள் எடுத்துச் செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  • வீட்டு பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.
  • மக்கள் குடிக்கும் கிணற்றில் பெட்ரோல், பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டது.
  • உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டன.
  • சில இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடந்தது.

இதனால் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்

ஏன் இந்த வன்முறை?

1990களில் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவிற்கு பிறகு, பட்டியலின மக்களிடையே அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு அதிகரித்தது. இதனால் சில இடங்களில் சாதி மோதல்கள் அதிகரித்தன. தென் தமிழ்நாட்டிலும் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன.

அந்த நேரத்தில் கொடியங்குளம் கிராம மக்கள் வெளிநாடுகளில் வேலை செய்து, நல்ல பொருளாதார நிலையில் இருந்தனர். கல்வியிலும் முன்னேற்றம் அடைந்திருந்தனர். இதனால் மற்ற பகுதிகளில் சிலருக்கு எதிர்ப்பும், பொறாமையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பத்திரிகையாளர் பா. ஏகலைவன் கூறியதாவது:

மற்ற கலவரங்களில் இரண்டு சமூகங்களுக்கு இடையே சண்டை நடக்கும். ஆனால் கொடியங்குளத்தில் காவல்துறையே நேரடியாக பட்டியல் சமூக மக்களை தாக்கியது.”

பின்னர் என்ன நடந்தது?

இந்த சம்பவத்துக்குப் பிறகு பல விசாரணைகள் நடத்தப்பட்டன. காவல்துறையிலும் அதிகாரிகளிடமும் இருந்த சாதி மனப்பான்மையே காரணம் என பலரும் கூறினர்.

அந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஆட்சி மீது பல கேள்விகள் எழுந்தன. பின்னர் அனைவருக்கும் சமமான ஆட்சி தேவை என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

கொடியங்குளம் சம்பவம் நடந்தது இன்று பல ஆண்டுகள் ஆனாலும், அது இன்னும் மக்களின் நினைவில் ஆறாத காயமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வெளியானகர்ணன்திரைப்படம் இந்த சம்பவத்தை மீண்டும் பொதுமக்கள் பேச வைத்தது

கொடியங்குளம் வன்முறை என்பது ஒரு கிராமத்தின் மீது நடந்த தாக்குதல் மட்டுமல்ல. அது சாதி, அதிகாரம், மற்றும் மனித உரிமை குறித்து பெரிய கேள்விகளை எழுப்பிய ஒரு முக்கிய சம்பவமாக நினைவுகூரப்படுகிறது.

இன்றும் அந்த நிகழ்வு நமக்கு ஒரு பாடம் சொல்லுகிறது:
சமத்துவமும், மனித நேயமும் இல்லாமல் சமூக அமைதி சாத்தியமில்லை.

  • முதுகுளத்தூர் கலவரம்: 1957-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சாதிய மோதல்களில் இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. இந்த கலவரங்களில் பலர் உயிரிழந்தனர். அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு சமூகங்களை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர்.
  • வன்னியர் இடஒதுக்கீடு போராட்ட கலவரம்: 1987-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்றன. இந்த இடஒதுக்கீடு போராட்டகாரர்களை அடக்குவதற்கு தமிழக காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் நடந்தபோது எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தக் கலவரத்தின்போது பல பட்டியல் சமூக மக்களின் குடிசைகளும் கொளுத்தப்பட்டன.
  • யினில் உள்ளனர்.
தமிழகத்தில் நடந்த என்கவுண்டர்கள் பெரும்பாலும் கட்டப்பஞ்சாயத்து சம்பந்தப்பட்டது, கட்டப்பஞ்சாயத்துகள் ஏன் ரவுடிகள் மூலம் நடத்தப்படுகிறது ஆளும் அரசாங்கத்திற்கு தெரியாமல் எந்த ரௌடியும் வளர முடியாது அப்படி என்றால் இவர்களுக்கும் அதில் சம்பந்தம் உண்டு ,கைமீறிப் போகும்போது அவனுக்கு துப்பாக்கி குண்டுகள் பரிசளிக்கப்படுகிறது அப்படி கலைஞரும் சில பேருக்கு துப்பாக்கி குண்டுகளை பரிசளித்து இருக்கிறார் 



அரசு என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட ரவுடித்தனம் தான் அதன்  கையால்கள்தான் போலீஸ்

மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த போலீஸ் சட்டம் எல்லாம் பெரும்பாலும் அவர்கள் ஆள்பவர்களுக்கு ஆதரவாளர்கள்தான்

அது சுயநலமான சில பேர் மட்டுமல்ல அப்படித்தான்   கட்டமைக்கப்பட்டிருக்கிறது ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே


காவல்துறை பயிற்சி என்பது உலகம் முழுவதும்  உளவியல் சார்ந்து  கட்டமைக்கப்பட்ட பயிற்சிகள் அதாவது உன்  மூளை சொல்வதை  உன் அறிவு சொல்வதை நீ கேட்கக் கூடாது  மேலதிகாரியின் உத்தரவை மட்டுமே நீ பின்பற்ற வேண்டும் அவ்வளவுதான் சுருக்கமாக  சொல்ல முடியும் 

ஜெயலலிதா எம்ஜிஆர் இருவரும் தான் போலீசாரையும் ரவுடிகளையும் சரியாக பயன்படுத்தினார்கள்

அரசாங்கமாக கட்டமைக்கப்பட்ட பிறகு போலீஸ் ஆத்துமீறல் 40 ஆண்டுகளாக தமிழக அரசியலில் வாசித்தும் நேசித்தும் கொண்டிருப்பவன் அதனால தான் இந்த பதிவு 

தமிழ்நாட்டில் நிறைய என்கவுண்டர்கள் செய்து புகழ் பெற்றவர் தான் வெள்ளத்துரை அவரின் போலீஸ் வாழ்க்கையின் கடைசி நாள்   மரியாதையாக இருக்கக் கூடாது என்பதற்காக அவர் சஸ்பெண்ட்   செய்யப்பட்டார், இது ஒரு வகையில் நல்ல நடைமுறைதான் அதற்கு  உத்தரவிட்டது முதல்வர் ஸ்டாலின் ஐஏஎஸ் அமுதா இருவருக்கும்   வாழ்த்துக்கள்


ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் போலீசையும் ரவுடிகளையும் தங்கள் அரசியல் தேவைக்கு பயன்படுத்தியவர்கள் என்று கூறப்படுகிறது. திமுக ஊர்வலத்தை கலைக்க வீரமணி குழுவுக்கு ஜெயலலிதா பணம் கொடுத்து பெரிய கலவரம் ஏற்படுத்தச் செய்தார் என பேசப்பட்டது. பின்னர் அதே வீரமணியை சுட உத்தரவு போட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

வீரமணி ஆள் கடத்தலில் ஈடுபட்டவர் என்றும் கூறப்பட்டது. ஒரு வடஇந்திய பெண்ணை கடத்தி நடுக்கடலில் வைத்து பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு இருந்தது. அந்த பெண் தவறாக நடத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் டெல்லியில் இருந்த வைர வியாபாரி ஒருவர் தனது தொடர்புகள் மூலம் புகார் அளித்தார். இதற்கு முன்பே, நடிகர் கார்த்திக்கை கடத்தி மிரட்டியதாகவும் சசிகலா மூலம் புகார் வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த இரண்டு காரணங்களாலும் வீரமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

சட்டம் நம்மைக் காப்பாற்றும்என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்க வேண்டும். ஆனால் சில காவல் நிலையங்களில் நடந்த கொடுமைகள் மக்களை பயமுறுத்தின. ஒரு சம்பவத்தில் அப்பாமகன் இருவரும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு இறந்தனர். அந்த வழக்கில் தொடர்புடைய நான்கு போலீசார் தண்டிக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் ஒரு கருப்பின நபர் போலீசால் துன்புறுத்தப்பட்ட போது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பொதுவாக மன்னிப்பு கேட்டார்.

1,அல் - உம்மா இயக்கத்தினர் என்கவுன்டர் (2002 செப்டம்பர்)

மாதம்அல்-உம்மாஇயக்கத்தைச் சேர்ந்த இமாம் அலி உள்ளிட்ட ஐந்து பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கோவை குண்டுவெடிப்பு வழக்கிலும், சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள்.

மார்ச் 7, 2002 அன்று காவல்துறையிலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்பட்ட இவர்கள், செப்டம்பர் 29 அன்று பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இமாம் அலி மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர். அவர் மற்றும் அவரது கூட்டாளிகள் பெங்களூரில் ஒரு வீட்டில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற தமிழக காவல்துறை அதிகாரிகள் அவர்களைச் சுற்றிவளைத்தனர். சரணடையச் சொன்னபோது அவர்கள் மறுத்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது. இந்த சம்பவத்தில் இமாம் அலி, முகமது இப்ராஹிம், சைபுல்லா, சைபுல்லாவின் மனைவி மற்றும் மங்கா பஷீர் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர்.

 



 2. வெங்கடேச பண்ணையார் என்கவுன்டர் (2003 செப்டம்பர்)

தூத்துக்குடி மாவட்டத்தில் செல்வாக்குமிக்கவராக இருந்த வெங்கடேச பண்ணையார் என்பவர் சென்னையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி அதிகாலை நுங்கம்பாக்கம்  ஏரிக்கரைச் சாலையில் உள்ள ஓர் அபார்ட்மென்டில் இந்த என்கவுன்டர் நடந்தது.

 

ஆனால்வீட்டின் கதவைத் திறந்தவுடனேயே காவல்துறை வெங்கடேச பண்ணையாரைச் சுட்டதாக அவர் தரப்பினர் தெரிவித்தனர்

இந்த சம்பவத்திற்குப் பிறகுஅவருடைய மனைவி ராதிகா செல்வி    தி.மு.சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு   வெற்றிபெற்றார்பிறகுஉள்துறை இணை அமைச்சராகவும்    பதவிவகித்தார்.

3. சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்டர் (2004 அக்டோபர்)

தமிழ்நாடுகர்நாடக மாநிலங்களுக்கு இடைப்பட்ட வனப் பகுதியில்   சந்தன மரங்கள்யானைத் தந்தம் ஆகியவற்றைக் கடத்துவதில்   ஈடுபட்ட வீரப்பன்ஒரு கட்டத்தில் காவல்துறையினர்பொதுமக்கள் ஆகியோரையும் கொல்ல ஆரம்பித்தார்இவரைத் தேடுவதற்காக   இரு மாநில காவல்துறையினரும் தீவிர தேடுதல் வேட்டையில்   ஈடுபட்டிருந்தனர்இந்தத் தேடுதல் வேட்டையின்போதுஅந்தப்   பகுதியில் வசித்த பழங்குடியினர் பலரும் காவல்துறையின்   துன்புறுத்தலுக்கு உள்ளாயினர்.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் ஆம்புலன்சில் பயணம் செய்துகொண்டிருந்த வீரப்பன் காவல்துறையினரால் சுட்டுக்   கொல்லப்பட்டார்.

அப்போது அவருடன் அவருடைய கூட்டாளிகள் சேத்துக்குளி   கோவிந்தன்சந்திரகவுடாசேதுமணி ஆகியோரும் சுட்டுக்   கொல்லப்பட்டனர்.



வீரப்பனைத் தேடுவதற்காக விஜயகுமார் தலைமையில்   அமைக்கப்பட்ட அதிரடிப் படை இந்த என்கவுன்டரைச் செய்தது.   இந்த அதிரடிப் படையைச் சேர்ந்த அனைவருக்கும் பரிசுகளும்    பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டன.


வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது 12 வயது முதல் 60 வயது      வரை ஆன பெண்களின் வன்புணர்வு செய்த மார்பகங்களில் சூடு வைத்த போலீசார் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் ஜனநாயகம் தமிழகத்தில் இன்னமும் முழுதாக வரவில்லை,


4. கோயம்புத்தூர் சிறார் கொலை வழக்கு (2010 நவம்பர்)

கோயம்புத்தூரில் வசித்து வந்த ரஞ்சித் - சங்கீதா தம்பதியின் குழந்தைகள் 2010ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதியன்று கடத்தப்பட்டனர்குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து   திரும்பிச் செல்ல வேனுக்காகக் காத்திருந்தபோதுஅவர்களுக்கு   ஏற்கனவே அறிமுகமான மோகன்ராஜ் என்ற மோகன கிருஷ்ணன் ஒரு வேனை எடுத்துவந்து அவர்களைக் கடத்தினார்அதற்குப் பிறகு,   மோகன்ராஜுடன் அவருடைய நண்பர் மனோகரன் என்பவர்   இணைந்துகொண்டார்.

குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்க நினைத்தவர்கள் பிறகு,   அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பிஏபி கால்வாயில்   மூழ்கடித்துக் கொலை செய்தனர்இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

நவம்பர் 8ஆம் தேதியன்று இருவரும் போலீஸ் காவலில்   எடுக்கப்பட்டனர்நவம்பர் 9ஆம் தேதி அதிகாலை ஐந்தரை மணிக்கு எங்கு குற்றங்கள் நடைபெற்றனவோ அந்த இடத்தைக்   காண்பிப்பதற்காக குற்றவாளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.   அப்படிச் சென்று கொண்டிருக்கும்போதுகுற்றஞ்சாட்டப்பட்ட   மோகன்ராஜ் காவலர்களைத் தாக்கிதப்பிக்க முயன்றதாகவும்   இதையடுத்து காவலர்கள் திருப்பிச் சுட்டதில் மோகன்ராஜ்   கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு நீதிமன்றம் தூக்குத்   தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டபோதுகாவலர்களைப் பாராட்டி கோவையில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டன.




5. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்கவுன்டர் (2012 பிப்ரவரி)

2012ஆம் ஆண்டில் சென்னையில் இரண்டு மிகப் பெரிய                 வங்கிக்   கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றனஜனவரி 23ஆம் தேதி    ஆயுதம் தாங்கிய நான்கு பேர் பெருங்குடியில் உள்ள பேங்க் ஆஃப்   பரோடா வங்கிக் கிளைக்குள் நுழைந்து 19 லட்ச ரூபாயைத்  திருடிச் சென்றனர்.

அதேபோல பிப்ரவரி 20ஆம் தேதி இதேபோல ஆயுதம் தாங்கிய   நான்கு பேர் கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்ஸீஸ்   வங்கிக்குள் நுழைந்து 14 லட்ச ரூபாயைத் திருடிச் சென்றனர்.

இந்தச் சம்பவங்கள் சென்னை நகரை உலுக்கிய நிலையில்பிப்ரவரி  23ஆம் தேதியன்று அதிகாலை ஒரு மணியளவில் வேளச்சேரி    வண்டிக்காரன் தெருவில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்ட   காவல்துறையினர்அந்த வீட்டிலிருந்த ஐந்து பேரைச் சுட்டுக்   கொன்றனர்.


அந்த வீட்டிலிருந்தவர்களை வெளியேறச் சொன்னபோது அவர்கள்  வெளியேற மறுத்துதுப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால்தாங்கள்   திருப்பிச் சுட்டதாகக் காவல்துறை கூறியதுஇந்தத் துப்பாக்கிச்   சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 30-35 வயதுக்குட்பட்டவர்கள்வினோத் குமார்சந்திரிகா ராய்வினய்   பிரசாத்அபய் குமார்ஹரீஷ் குமார் ஆகிய ஐந்து பேரில் நான்கு   பேர் பிஹாரைச் சேர்ந்தவர்கள்ஒருவர் மேற்கு வங்கத்தைச்   சேர்ந்தவர்.

இவர்களிடமிருந்து 14 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது.   தற்காப்பிற்காகச் சுட்டதாக காவல்துறை சொன்னாலும்அந்தத்   தருணத்தில் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து கடும்   விமர்சனங்கள் எழுந்தன.

6. காவலரைக் கொலைசெய்ததாக இரண்டு பேர் என்கவுன்டர் (2012 டிசம்பர்)

2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மருதுபாண்டியர் குரு பூஜை   தினத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தைச் சேர்ந்த துணை ஆய்வாளர் ஆல்வின் சுதர்   என்பவர் பிரபு என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார்மேலும் இரண்டு காவல்துறையினரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கலவரம் வெடித்ததுஇந்த   கொலை தொடர்பாக பிரபு உள்ளிட்டவர்கள் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்அவர்கள் அனைவரும் மதுரைச் சிறையில்   அடைக்கப்பட்டிருந்தனர்இவர்களில் பிரபுபாரதி ஆகியோர் மீது   30க்கும்   மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இந்த நிலையில் ஒரு வழக்கின் விசாரணைக்காக மதுரை சிறையில்  இருந்து சிவகங்கை செசன்ஸ் நீதிமன்றத்திற்கு இவர்கள் இருவரையும் காவல்துறையினர் அழைத்து வந்தனர்மதுரை அண்ணா நகர் அருகே வரும்போது பிரபுபாரதி ஆகிய இருவரும் காவலர்களைத்              தாக்கி  விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறதுஇதற்குப் பிறகு   இவர்கள்  இருவரும் மானாமதுரை தீர்த்தான்பேட்டை அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பிரபுவும்பாரதியும் இருசக்கர வாகனத்தில் சென்றதாகவும்   அவர்களை காவல்துறையினர் நிறுத்தியபோது பெட்ரோல் குண்டை வீசியும்அரிவாளைக் கொண்டும் தாக்க முயன்றதாகக் கூறிய காவல்துறையினர்தற்காப்பிற்காகத் திருப்பிச் சுட்டதாகக் கூறியது.

இந்த என்கவுன்டர் சம்பவங்கள் தவிரதனித்தனியாக ரவுடிகள்சமூக விரோதிகள் என்ற பெயரில் பலர் கடந்த சில ஆண்டுகளில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.


தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளில் 125 என்கவுன்டர் மரணங்கள்

யாருடைய ஆட்சியில் எவ்வளவு நடந்தது?

தமிழ்நாட்டில் கடந்த 26 ஆண்டுகளில் மொத்தம் 125 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த ஆட்சியில் எவ்வளவு நடந்தது என்பதைப் பார்ப்போம்.

ஆட்சிப்படி விவரம்

·        1998–2001 (திமுக ஆட்சி) – 22 என்கவுன்டர்கள்

·        2001–2006 (அதிமுக ஆட்சி) – 29 என்கவுன்டர்கள்

·        2006–2011 (திமுக ஆட்சி) – 31 என்கவுன்டர்கள்

·        2011–2021 (அதிமுக ஆட்சி) – 27 என்கவுன்டர்கள்

·        2021 மே முதல் தற்போது வரை (திமுக ஆட்சி) – 16 என்கவுன்டர்கள்

மொத்தத்தில்:

·        திமுக ஆட்சிக் காலங்களில் – 69 என்கவுன்டர்கள்

·        அதிமுக ஆட்சிக் காலங்களில் – 56 என்கவுன்டர்கள்

(இந்த தகவல்கள் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் காவல்துறை வட்டார தகவல்களின் அடிப்படையில் கூறப்படுகின்றன.)

சர்ச்சைக்குரிய துப்பாக்கிச் சூட்டுகள்

·        2011 – பரமக்குடி துப்பாக்கிச் சூடு – 7 பேர் உயிரிழப்பு

·        2018 – தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – 13 பேர் உயிரிழப்பு

இவை என்கவுன்டர் சம்பவங்கள் அல்லாதாலும், காவல்துறை துப்பாக்கிச் சூடு தொடர்பான முக்கிய சம்பவங்களாக குறிப்பிடப்படுகின்றன.

கைது செய்யும்போது காவல்துறை பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

தமிழக காவல்துறைக்கு கைது செய்யும்போது பின்பற்ற 41 விதிமுறைகள் உள்ளன. அவற்றில் சில:

 ·        குற்றம் சாட்டப்பட்டவரை அடிக்கவோ சித்ரவதை செய்யவோ கூடாது.

·        காவல் நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் தங்க வைக்கக்கூடாது.

·        24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

·        சட்டவிரோத காவலில் வைக்கக் கூடாது.

·        கைது செய்ய குடும்பத்தினரை அழைத்து வந்து அழுத்தம் கொடுக்கக் கூடாது.

·        போலீசார் மீது தாக்குதல் நடக்கும் சூழலில், பாதுகாப்பு காரணமாக தேவையான நடவடிக்கை எடுக்கலாம்.

தமிழகத்தில் என்கவுன்டர் வரலாறு

தமிழகத்தில் 1970-களின் இறுதியில் இருந்து என்கவுன்டர்கள் தொடங்கின. அப்போது நக்சலைட் இயக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பின்னர், ரவுடி குற்றச்செயல்கள் அதிகரித்ததால் என்கவுன்டர்கள் நடந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

போலீசார் பொதுவாக கூறுவது:
குற்றவாளிகள் தாக்குதல் நடத்தியதால், எங்களைப் பாதுகாக்க எதிர்த்தாக்குதல் நடத்த வேண்டியதாக இருந்ததுஎன்பதே.

குறிப்பிடத்தக்க பழைய என்கவுன்டர்கள்

·        1984சீவலப்பேரி பாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார்.

·        1996 ஜூலை 10லயோலா கல்லூரி அருகே ஆசைத்தம்பி மற்றும் அவரது கூட்டாளிகள் குணா, மனோ சுட்டுக்கொல்லப்பட்டனர்.

·        அதே ஆண்டுஜிம் பாடிகபிலன் அடையாறு அருகே நடந்த மோதலில் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துகள் உள்ளன. சிலர் இதை குற்றத் தடுப்பு நடவடிக்கை எனக் கருதுகிறார்கள். மற்றவர்கள் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள்

தமிழ்நாட்டில் பல்வேறு காலகட்டங்களில்என்கவுண்டர்எனப்படும் போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அரசியல் ஆட்சி


மாறினாலும், இந்த நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு.

2007 ஆகஸ்ட் 1ஆம் தேதி, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட வெள்ளை ரவி மற்றும் அவரது கூட்டாளி குணா ஆகியோர் ஓசூர் அருகே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2008 ஜூலை 11ஆம் தேதி, கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 28 வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட பாபா சுரேஷ், சென்னை காசிமேடு பகுதியில் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

2010 பிப்ரவரி 16ஆம் தேதி, பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட திண்டுக்கல் பாண்டி மற்றும் கூடுவாஞ்சேரி வேலி ஆகியோர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு, சாத்தூர்கோவில்பட்டி சாலையில் பதுங்கியிருந்த சாத்தூர் குமார் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதே 2010ஆம் ஆண்டில், கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுநர் மோகன் ராஜ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

2006 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 29 பேர் என்கவுண்டரில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

2012ஆம் ஆண்டு, சிவகங்கை காவலர் சால்பின் சுதனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்பட்ட பிரபு மற்றும் பாரதி ஆகியோர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு பிப்ரவரி மாதம், பல்வேறு வங்கிக் கொள்ளைகளில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட பீகாரைச் சேர்ந்த ஐந்து பேர் சென்னை வேளச்சேரியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2018 மார்ச் 1ஆம் தேதி, மதுரையைச் சேர்ந்த முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்தி ஆகியோர் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஜூலை மாதம், ராயப்பேட்டை ஆனந்தன் தரமணியில் என்கவுண்டரில் உயிரிழந்தார்.

2019 மே 2ஆம் தேதி, சேலம் காரிப்பட்டி பகுதியில் கதிர்வேல் என்கிற நபர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதேபோல், ஜூன் 15ஆம் தேதி சென்னை மாதவரம் பகுதியில் வல்லரசு எனப்படும் நபர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவர் மீது பல

கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 24ஆம் தேதி, விழுப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் கொரட்டூரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மீது எட்டு கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 27 வழக்குகள் நிலுவையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு பிணையில் வெளியேறிய இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாகவும், கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நாங்கள் திருந்த விரும்புகிறோம்என்று தெரிவித்த சிலர் அல்லது சரணடைந்த சிலர் கூட பின்னர் என்கவுண்டரில் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து இதுபோன்ற என்கவுண்டர் சம்பவங்களை கண்டித்து வருகின்றன. என்கவுண்டர் என்பது ஒரு பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக கருதப்படக்கூடாது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

திரைப்படங்களில் என்கவுண்டர்களைவீரச் செயலாகஅல்லதுநீதியின் வடிவமாகரொமாண்டிசைஸ் செய்வதும் சமூகத்தில் தவறான புரிதலை உருவாக்கும் அபாயம் உள்ளது. சட்ட நடைமுறைகள் மற்றும் நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கை வலுவாக நிலைத்திருக்க வேண்டியது அவசியம்.

தமிழகத்தில் போலீஸ் அடக்குமுறைகள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பல்வேறு ஆட்சிக் காலங்களிலும் நடந்துள்ளன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மீதும் காவல்துறை வன்முறை பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சில சந்தர்ப்பங்களில் பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் பாதுகாப்பு, மற்றும் வெளிப்படையான விசாரணை ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களாகும்.

 சென்னை மெரினாவில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

வட ஆற்காடு, தர்மபுரி பகுதிகளில் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய ஏழை, எளிய இளைஞர்களைநக்சலைட்டுகள்என்று முத்திரை குத்தி, குருவி சுடுவது போல சுட்டுக் கொன்றதில் சுமார் 25 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இடஒதுக்கீடு போராட்டம் நடத்திய வன்னியர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

போராடும் தொழிலாளர்கள் மீது ஆயிரக்கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது மற்றும் சித்திரவதைகள் நடத்தப்பட்டன.

சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளின் மரணங்கள் அதிகரித்தன.

போராட்டக்காரர்களைப் பற்றி எம்.ஜி.ஆர் அடிக்கடி கூறிய புகழ்பெற்ற வாசகம்: “பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்.” இதன் பொருள், போலீஸ் அல்லாதவர்களின் தாக்குதலை போராட்டக்காரர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது அனுபவம் காட்டியது.

அதிமுக உறுப்பினர்கள் பாதுகாப்பிற்காக கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆர் பேசியதும், “முதலமைச்சர் இவ்வாறு கூறலாமா?” என்ற பெரிய சர்ச்சை எழுந்தது; பின்னர் அவர் அந்தக் கருத்திலிருந்து பின்வாங்கினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியபிள்ளை கொலை வழக்கில் பால்கமிஷன் அறிக்கையை மறைத்து, அரசு பதிவுகளில் பொய்யான தகவல்கள்

பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. (திருச்செந்தூர் கோவிலில் வைரவேல் திருடப்பட்ட சம்பவத்தை மறைக்க நடந்த கொலை என கூறப்பட்டது.) இதற்காக கலைஞர் நீதிக்காக நெடும்பயணப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சாராய சாம்ராஜ்யம் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது; கட்சியினருக்கு அதில் ஆதாயம் கிடைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எரிசாராய ஊழல் குறித்து ரே கமிஷன் விசாரணை நடந்தது.

மதுபான உற்பத்தியாளர்களுக்கு கலால் வரியில் விலக்கு அளித்த ஆட்சி என்றும் விமர்சிக்கப்பட்டது.

பால்டிகா கப்பல் நிலக்கரி பேரழிவு முதல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வரை அந்த ஆட்சி விமர்சிக்கப்பட்டது.

அரசுப் பள்ளி, கல்லூரிகள் புறக்கணிக்கப்பட்டதால் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்து, கல்வி வணிகமயமாகியது என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

பனை வளம் செழித்த தமிழ்நாட்டில் பனை ஏறுதல் குற்றமாக்கப்பட்டதால், பனை தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர் என்ற விமர்சனமும் எழுந்தது.

அதிரடி சட்டத்தின் மூலம் பாரம்பரிய கிராம அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டதால், கிராம நீர்நிலைகள் மற்றும் பொதுநிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாக கூறப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால், உள்ளாட்சி அமைப்புகள் பலவீனமடைந்தன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அரசியலில் மத்திய அரசிடம் பணிவது போன்ற நடைமுறைகள் அக்காலத்தில் வலுப்பெற்றதாகவும் விமர்சகர்கள் கூறினர்.

இவ்வாறு பல சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் அந்த ஆட்சி தொடர்புபடுத்தப்பட்டது.

1979ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. 1980ஆம் ஆண்டுபாலன்எனப்படும் நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டார். 1990களில் திண்டுக்கல் அருகே நாகராசன் என்கிற நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல் ஊத்தங்கரை மற்றும் கொடைக்கானலில் நடந்த மோதல்களிலும் சிலர் உயிரிழந்தனர்.

1996ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை நகரில் ஆசைத்தம்பி, மனோ ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1999ஆம் ஆண்டு கபிலன் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தமிழ்நாட்டில்என்கவுண்டர் கலாச்சாரம்அக்காலத்தில் தொடங்கியது என்றும், பின்னர் அது வலுவடைந்தது என்றும் விமர்சனங்கள் கூறுகின்றன.


ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டுகள்: வரலாறு, அரசியல் மற்றும் நெறி முரண்பாடுகள்

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், முதலாம் உலகப்போர் மற்றும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த இரண்டாம் உலகப்போர் மூலம் அமெரிக்கா தனது இராணுவதொழில்துறை சக்தியை மிகுந்த அளவில் வளர்த்துக் கொண்டது. ஆயுத உற்பத்தி அமெரிக்கப் போர்க்கால பொருளாதாரத்தின் முக்கிய அடித்தளமாக மாறியது.

ஆசியபசிபிக் பிராந்தியத்தில் வளங்களுக்கான போட்டி, பொருளாதாரத் தடைகள் மற்றும் அரசியல் மோதல்கள் காரணமாக பதற்றம் அதிகரித்தது. அதன் உச்சமாக, 1941 டிசம்பர் 7 அன்று ஜப்பான், அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்தைத் தாக்கியது. இதன் விளைவாக அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் நேரடியாக ஈடுபட்டது.

ஆனால், அணுகுண்டு உருவாக்க முயற்சி அதற்கு முன்னரே தொடங்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டு அமெரிக்காமான்‌ஹாட்டன் திட்டம்” (Manhattan Project) எனப்படும் ரகசிய அணு ஆய்வு திட்டத்தை ஆரம்பித்தது. அணுகுண்டுகள் ஒரு மாதத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல; அவற்றை உருவாக்க சுமார் மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

1945 ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டன:

·        லிட்டில் பாய்” (Little Boy) எனப் பெயரிடப்பட்ட, சுமார் 15 கிலோடன் வெடிசக்தி கொண்ட யுரேனியம் அணுகுண்டு, 1945 ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மீது வீசப்பட்டது.

·        ஃபாட் மேன்” (Fat Man) என அழைக்கப்பட்ட, சுமார் 21 கிலோடன் வெடிசக்தி கொண்ட புளூட்டோனியம் அணுகுண்டு, 1945 ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி மீது வீசப்பட்டது.

ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசிய விமானம்எனோலா கே” (Enola Gay) எனப்படும் B-29 வகை விமானமாகும். அதை இயக்கியவர் கர்னல் பால் டிபெட்ஸ் (Paul Tibbets Jr.). நாகசாகி குண்டு வீச்சிற்கான முதன்மை இலக்கு கோகுரா நகரமாக இருந்தது. ஆனால் வானிலை காரணமாக, மாற்று இலக்காக நாகசாகி தேர்ந்தெடுக்கப்பட்டது.

1945 ஆம் ஆண்டுக்குள் நேரடி வெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கதிர்வீச்சு பாதிப்புகளால் சுமார் இரண்டு இலட்சம் பேர் உயிரிழந்தனர். பின்னர் பல ஆண்டுகள் கதிர்வீச்சு நோய்களால்

பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்தால், பல இலட்சம் மக்கள் இந்த அணுகுண்டுகளின் விளைவுகளை அனுபவித்தனர்.

இந்தப் பெரும் அழிவில் நேரடியாக ஈடுபட்டவர்களில் ஒருவர் பால் டிபெட்ஸ். தனது வாழ்நாளின் இறுதி வரை அவர் எந்த வருத்தமும் இல்லை என்று கூறினார். அரசின் உத்தரவை நிறைவேற்றியது தான் தனது கடமை என அவர் தெரிவித்தார். இது அரசியல் அதிகாரத்தின் மிகக் கடுமையான முகத்தை வெளிப்படுத்துகிறது — மனிதனின் மனச்சாட்சியை அதிகாரம் எவ்வாறு அடக்க முடியும் என்பதற்கான உதாரணமாகும்.

மற்றொரு புறம், அணுகுண்டின் அறிவியல் தந்தை எனக் கருதப்படும் ஜே. ராபர்ட் ஒப்பன்ஹைமர், பகவத் கீதையின் வரிகளை மேற்கோள் காட்டினார்:
“இப்போது நான் மரணமாகி விட்டேன்; உலகங்களை அழிப்பவன்.”

இந்த வரி அறிவியல், மதம் மற்றும் அதிகாரம் ஆகியவை எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைகின்றன என்பதற்கான ஒரு சின்னமாக மாறியது. மத நூல்கள் மனிதனை நெறிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. ஆனால் அவை அரசியல் குற்றங்களை நியாயப்படுத்தும் கருவிகளாக மாற்றப்படும் போது, அவற்றின் அடிப்படை நோக்கம் சிதைக்கப்படுகிறது.

இந்த முரண்பாடு இந்தியாவிலும் காணப்படுகிறது. 1974 ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியபோது, அதற்கு “ஸ்மைலிங் புத்தா” (Smiling Buddha) என்று பெயரிடப்பட்டது. அஹிம்சையின் உலகச் சின்னமாக விளங்கும் புத்தரின் பெயரில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது என்பது அரசியல் இரட்டை நிலைப்பாட்டின் வெளிப்பாடாகும். புத்தர் போதித்த கருணையும் அஹிம்சையும், அரசியல் அதிகாரத்தின் முன் வெறும் பெயராக மட்டுமே மாறின.

பகவத் கீதையோ, புத்த தத்துவமோ வன்முறையை ஊக்குவிப்பவை அல்ல. ஆனால் அவற்றை தங்களுக்கு ஏற்றவாறு விளக்கி, அரசியல் அதிகாரம் தனது செயல்களை நியாயப்படுத்த முயல்கிறது. மதம் இங்கே மனிதனை விடுவிப்பதற்குப் பதிலாக, அதிகாரத்தின் கருவியாக மாறுகிறது. இதுவே சில சமூக–அரசியல் அமைப்புகள் மத நூல்களை மேற்கோள் காட்டி ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலும் அடிப்படை இயல்பாகும்.

அணுகுண்டுகள் விழுந்தது ஜப்பான் மீது மட்டுமல்ல; மனித நெறி, மனிதம், மனித சமத்துவம் ஆகியவற்றின் மீதும் ஆகும். அந்த வெடிப்புகளின் கதிர்வீச்சு இன்னும் உலக அரசியலில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது — ஆயுதப் போட்டியாகவும், அணு அச்சுறுத்தலாகவும், “தேசிய பெருமை” என்ற அரசியல் மொழியாகவும்.

இந்த வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றே:
அதிகாரம் எப்போது மதத்தைத் தனது ஆயுதமாக மாற்றுகிறதோ, அப்போது மனிதகுலம் அழிவின் விளிம்பில் நிற்கத் தொடங்குகிறது.

 

  



திருக்குறளில் “காவல்” என்ற கருத்து (போலீஸ்)

திருவள்ளுவர் ஒரு நாட்டின் முதன்மை கடமை மக்களை பாதுகாப்பது என    வலியுறுத்துகிறார்காவல் என்பது தண்டனை வழங்கும் அமைப்பு மட்டுமல்லஅநீதிகுற்றம்அச்சம் ஆகியவற்றை முன்கூட்டியே தடுக்கும் நெறி   அமைப்பாகும்.

கொலைகொள்ளும் காழ்ப்புணர்ச்சி இல்லான் வலிகாவல் 

செய்யும் அரசு.

பொருள்: கொடுமையான எண்ணங்களின்றிநீதி வழியிலான வலிமையான காவலை மேற்கொள்ளும் அரசே சிறந்த அரசு.

👉 இக்குறள்காவல் அமைப்பு பழிவாங்கும் மனநிலையுடன் அல்லாமல்,   நீதியும் ஒழுக்கமும் கொண்டதாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது.

குடிமக்கள் காத்து குற்றம் தண்டித்து வடுவற்றான் 

செய்வதே அரசு.

பொருள்: குடிமக்களை பாதுகாத்துகுற்றம் செய்தவர்களை நியாயமாகத்    தண்டித்துதன்னிலே குற்றமில்லாமல் நடப்பதே அரசின் கடமை.

👉 இக்குறள் இன்றைய போலீஸ் துறையின் மூலக் கொள்கைகளைப்   பிரதிபலிக்கிறது:

·        மக்கள் பாதுகாப்பு

·        சட்டத்தின் முன் சமத்துவம்

·        அதிகார துஷ்பிரயோகம் இல்லாமை 

நாட்டின் பாதுகாப்பு – படையின் அவசியம்

திருவள்ளுவர் ஒரு நாட்டிற்கு தேவையான ஆறு முக்கிய அங்கங்களைச்   சொல்கிறார்அதில் படை முக்கியமான ஒன்று.

படை குடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் 

உடையது அரசு.

பொருள்: படைமக்கள்பொருள் வளம்அமைச்சர்கள்நட்பு நாடுகள்அரண்   (கோட்டை/பாதுகாப்புஆகிய ஆறு உடையதே ஒரு முழுமையான அரசு.

👉 இக்குறள் ராணுவத்தை நாட்டின் அடித்தள அமைப்பாகக் காட்டுகிறது.

படையின் பண்புகள்

எண்ணி துணிக கருமம்துணிந்தபின் எண்ணுவம்

என்பது இழுக்கு.

பொருள்: ஒரு செயலை முன்கூட்டியே நன்கு ஆராய்ந்து துணிய வேண்டும்;   துணிந்த பின் தயக்கம் காட்டுவது தோல்விக்கு வழி.

👉 இது ராணுவத் திட்டமிடல்தளபதி முடிவெடுப்புபோர் நெறி   ஆகியவற்றுக்கான அடிப்படை சிந்தனையாகும்.

ஒழுக்கமுள்ள படை

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தனை

வெல்லும் படை.

பொருள்: ஒழுங்கமைந்ததுன்பத்திற்கும் அஞ்சாதஒற்றுமையுள்ள படையே அரசனை வெற்றி பெறச் செய்யும்.

👉 ராணுவத்தின் பலம் ஆயுதங்களில் அல்லஒழுக்கம்பயிற்சிஒருமைப்பாடு என்பதில்தான் உள்ளது என்பதை வள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்

காவலும் ராணுவமும் – அரசாட்சியின் இரு கண்கள்

திருக்குறளில் காவல் மற்றும் படை இரண்டும் தனித்தனியாக இல்லாமல்,   அரசாட்சியின் நீதி மற்றும் பாதுகாப்பு என்ற ஒரே நோக்கத்தில்   இணைக்கப்பட்டுள்ளன.

·        உள்நாட்டு பாதுகாப்பு → காவல் (Police)

·        வெளிநாட்டு மற்றும் எல்லை பாதுகாப்பு → படை (Army)

இரண்டும் அரசன் (அரசுகட்டுப்பாட்டில்நீதியோடு செயல்பட வேண்டும்

நவீன காலத்துடன் ஒப்பீடு

திருக்குறள் கருத்து

நவீன விளக்கம்

குடிமக்கள் காத்தல்

Internal Security

குற்றம் தண்டித்தல்

Criminal Justice System

ஒழுக்கமுள்ள படை

Professional Army

அதிகார துஷ்பிரயோகம் தவிர்ப்பு

Human Rights & Rule of Law

 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள்இன்றைய அரசியல்   அறிவியல் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுடன் நேரடியாக   பொருந்துகிறது.


 



இரவு 12 மணிக்கு கலைஞர் கருணாநிதியை கைது செய்த, ஜார்ஜ் ,முகமது அலி, முத்துக்கருப்பன் போன்றவர்களுக்கு இந்த பதவிக்கு வர காரணமானவர் கலைஞர் என்பது தெரியும் உடை சீர்திருத்தம் கலைஞர் கொண்டு வந்தது, வெள்ளையர் காலத்தில் கோமாளிகள் போல இருந்த கால் டவுசர் தொப்பி எல்லாவற்றையும் மாற்றி நவீனமாக மரியாதையான ஆடையாக மாற்றியவர் கலைஞர் ஆடைகளை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்

ஆங்கிலேயர் இந்தியாவில் பிரித்தாலும் சூழ்ச்சி மூலம் அன்றைக்கு இருந்த ஜமீன்தார்களுக்கு நல்ல வாழ்க்கை முறை ,ஆங்கில கல்வி அழகான பெண்களோடு தொடர்பு ,வெளிநாட்டு மதுபானம் இதில் மயங்கி அவர்கள் அனுமதியோடு அவர்களுக்கு துணை இராணுவமாக செயல்பட்டார்கள் அப்போது பெரும் பணக்காரர்கள் எல்லாம் தங்களுக்கு வேலைக்காரனாக மாற்றிய புத்திசாலித்தனம் ஆங்கிலேயனிடமிருந்து



சமூகத்தில் ஜாதி அடக்குமுறை குறித்து நாம் கவலைப்படுகிறோம்,ஆனால் ராணுவத்திலும் போலீஷ் நிர்வாகத்திலும் அடுக்குமுறை புரோட்டோகால் மிகக் கெட்டியானது சாமானிய நிலையில் இருக்கும் கான்ஸ்டபிள் முதல் ஐபிஎஸ் வரை மேலதிகாரியை பார்த்தவுடன் சல்யூட் அடிக்க வேண்டும் அப்படி சல்யூட் அடிக்கவில்லை என்றால் அவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மேலதிகாரிக்கு உண்டு இறுக்கமான இது போன்ற அதிகாரங்களால்தான் அவை நிலைநிறுத்தப்படுகிறது இல்லை என்றால் ராணுவம் போலீஸ் காலாவதியாகிவிடும் இது உளவியல் சார்ந்த ஜாதியே அடுக்கு முறை







Comments

Popular posts from this blog

Language, Communication, and the Story of Migration

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் ( The Hidden Chapters of Gandhi’s Journey )