hotel and restaurant history (Lion Raja Ganesan )
கேட்டரிங் காலேஜ் பரவலாக வந்துவிட்டது கோவையில் குறிப்பாக நான் பணியாற்றிய ஹோட்டலுக்கு கடைசி ஒரு மாதம் ப்ராஜெக்ட் வொர்க் ஆக வந்து வேலை செய்வார்கள் அவர்களிடமிருந்து தான் நான் இந்த ஹோட்டல் வரலாற்றை அறிந்து கொண்டேன்,
அவினாசிலிங்கம்
மகளிர் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகளும் என்னிடம் வந்து பயிற்சி எடுத்துக் கொண்டு போனார்கள்
அது ஒரு கனாக்காலம்
ஒரு பெண் எவனை வேண்டுமானாலும் கூப்பிட்டு இருக்காள் நடுவே ,,, வைக்கலாம்,
கிறிஸ்தவம் பரவி, சிலுவைப் போர்கள் நடந்தபோது, மக்கள் வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்தனர். அவர்களுக்கு தங்கவும் சாப்பிடவும் இடங்கள் தேவைப்பட்டன, ஹோட்டல்கள் என்ற யோசனை அப்படித்தான் தொடங்கியது.
சில நேரங்களில் இவர்களுக்கு வேற விஷயங்கள் தேவைப்படும் எல்லா உயிரினத்துக்கும் காமம் ஒன்றே முக்கியமான விடயம் அதுக்கும் ஏற்பாடு செய்தார்கள் அந்தக் காலத்து ஓட்டல் ஓனர்கள்
சரி குதிரை வண்டில போனவங்க தங்குவதற்கு எல்லாம் ரெடி ஆயிடுச்சு அதுக்கப்புறம் சாமானியனுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
அதுக்குத்தான் கொஞ்சம் டீப்பா பிரெஞ்சு புரட்சிக்கு போகணும் புரட்சி முடிஞ்சு போச்சு 16 ஆம் லூயி அவன் பொண்டாட்டி எல்லாரும் செத்துட்டாங்க,
https://ervsmug.com/the-french-revolution-restaurants
ஆனா அவங்களுக்கு சமையல்காரரா வந்திருந்த பத்தாயிரம் பேர் அவங்கள கழுத்தை வெட்டல, அவங்க எல்லாம் சேர்ந்து உருவாக்கினது தான் இந்த ரெஸ்டாரன்ட் கலாச்சாரம் இன்றைக்கும் ஹோட்டலில் ஆர்டர் எடுக்கும் ஒருவனுக்கு பெயர் கேப்டன் அதை சப்ளை செய்பவனுக்கு பெயர் ஸ்ரீவார்ட் வேற ஒன்னும் இல்ல,
பிரெஞ்சு புரட்சி முடிஞ்சு போச்சு 16 ஆம் லூயி செத்து,,,,,, இல்லையா அவங்க என்ன சொன்னாங்க ஒரு நாள் ராஜா மாறி எங்க ஓட்டல் வந்து சாப்பிடுங்க அப்படின்னு கூப்பிட்டு வந்து அவங்களுக்கு ஒரு மெனு கார்டு கொடுத்தாங்க,
அந்த மெனு கார்டு கொடுத்துவருக்கு பேர் தான் கேப்டன் அவர் கோட்டு போட்டு டை கட்டி இருப்பார் அவங்களுக்கு என்ன வேணும்னு எழுதி கொடுப்பாங்க அதை எழுதி வாங்குறவருக்கு பேர்தான் ஸ்ரீவாட் ஏன் அப்படி செஞ்சாங்கன்னா அவங்க மன்னர்களுக்காகவே வேலை செஞ்சு மன்னர்களுக்காகவே சேவகம் பண்ணியதால் சாமானியர் பத்தி அவங்களுக்கு ஒன்னும் தெரியல ஆனா சில பல சின்ன பணக்காரங்க ஆசைப்பட்டு வந்து அந்த ஓட்டலில் சாப்பிட்டு அது நம்ம ஊர்ல தமிழ்நாட்டுல சில ஓட்டல்ல இன்னைக்கு வரைக்கும் சிஸ்லர் என்று ஒரு ஐட்டம் இருக்கு அது என்ன தெரியுமா பிரான்சில் குளிர்காலத்தில் சீஸ் எல்லாம் போட்டு அந்த உணவு ஆரி போகாம இருக்க கெட்டியான கல் அதாவது நம்ம தோசை கல்லு மாதிரி ரெண்டு பங்கு இருக்கும் அதை சூடு பண்ணி அது மேல தான் இந்த உணவை வைப்பாங்க அதை சாப்பிடும் வரைக்கும் அது சூடா இருக்கனும் இல்லையா அதுக்காகத்தான் அதை நம்ம ஊரு டெம்பரேச்சர் கொண்டு வந்து சிஸ்லர் அமைப்பு இருந்து விக்கிறான் இது மாதிரி நிறைய அயோக்கியத்தனம்
நான் 12 ஆண்டுகள் ஹோட்டல் சம்பந்தப்பட்ட அதாவது அனுமதி பெற்ற பர்மிட் பார் என்று சொல்றாங்க ரெண்ட்லயும் வேலை செஞ்சிருக்கேன் கடைநிலை ஊழியனாக போய் அதிகாரியாக வேலை செய்திருக்கிறேன்,
முதல்ல அந்த சிட்டி டவர் ஹோட்டல் கோயம்புத்தூர்ல அன்றைக்கு 1980களில் நான்கு ஓட்டல் தான், இந்த சிட்டி டவர் ஓட்டலோட ஓனர் அவர் பார்ட்னர் ரெண்டு பேரு வந்து அலங்கார் ஹோட்டல்ல ரூம் கேக்குறாங்க அவங்க வந்தது பிளைட்ல கட்டி இருக்கிறது கைலி ரூம் இல்லைன்டாங்க கோவம் வந்துருச்சு அவங்க கேட்டாங்க எப்பா உங்க ஓட்டல்ல ஏற்கனவே நாங்க புக்பண்ணிட்டு தான் வந்திருக்கோம் இல்ல இல்ல உங்களுக்கு ரூம் இல்லை வெளிய அனுப்பிட்டாங்க இது கதை இல்ல அந்த ஓட்டல் ஓனரே நான் பேட்டி கண்டேன் எங்கிட்ட அவர் சொன்னாரு அவருக்கு கோபம் வந்துருச்சு , கப்பல் உலகம் முழுவதும் இருந்து காயலாங்கடை சொல்லுவோம்ல அந்த மாதிரி இவங்க வந்து பழைய கப்பலை வாங்கி அதை ஒடச்சி வியாபாரம் பண்றவங்க பணம் கொழிக்குது ஆனா இவங்க இரவில் கைலி கட்டிட்டு வந்ததுதான் அலங்கார் ஹோட்டல் ஓட அன்னைக்கு இருந்த ரிசப்ஷன்ஸ்டுக்கு மரியாதை குறைவா இருந்திருக்கு ,
அவன் ஒரு அல்லக்கை அப்படின்னு இவர் நினைக்கிறார் இவர்ட்ட எவ்வளவு பணம் இருக்ணும் அவனுக்கு தெரியாது என்னமோ போங்கடா ரெண்டு பேரும் வேற hotel போய் தங்குனாங்க பேசி முடிவெடுத்துட்டாங்க நேர்எதிரில் காலி இடத்தை வாங்கினாங்க அங்க ரெண்டு வீடு இருந்துச்சு உடைத்து அன்னைக்கு கோயம்புத்தூரில் அதிக உயரத்தில் கட்டப்பட்ட பில்டிங் அது தான் சிட்டி டவர் அப்படின்னு கட்டிட்டாங்க ஆனா கோயம்புத்தூர்ல ஏற்கனவே இருக்குற பணக்கார பசங்களுக்கு எல்லாம் ஒரு குசும்பு இருக்கும் குறிப்பிட்ட இடத்தில் தான் சாப்பிடுவான் அது இவங்களுக்கு இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை
ஹோட்டல் கட்டியாச்சு ரூம் ரெடி இவர்கள் தெரிந்த இஸ்லாமிய நட்பு வட்டம் பாதி அறைகளை நிரப்பி விட்டது ஆனால் மூன்று கால் ஒன்னு திருமணம் நடத்துவது மாதிரி பெரிய ஹால் பர்த்டே பார்ட்டி பண்ற மாதிரி ஹால் இன்னொன்னு சின்ன ஹால் அங்கு வந்து வேலைக்கு ஆட்களை எடுக்கும் அதற்கான அறை அது எதுக்குமே யாரும் கேட்கல யாரோ ஒருத்தர் மூலமா என்னையும் என் நண்பர் இளங்கோவையும் அவர் ஓட்டலில் இருந்து அணுகுனாங்க நாங்க ஏற்கனவே கோயம்புத்தூருக்கு எல்லா பணக்காரங்களையும் ஸ்கேன் பண்ணி வச்சிருக்கோம்
சரி சம்பளம் எல்லாம் வேற எங்களுக்கும் சில கண்டிஷன் இருக்கு அப்படின்னு நான் தான் முதல்ல பேசினேன் அவங்க ரெண்டு பேருக்கும் தமிழ் தெரியாது மலையாளம் தான் தெரியும் எனக்கு அப்ப கொஞ்சம் மலையாளம் தெரியும் நான் என்ன சொன்னேன்னா நீங்க இஸ்லாமிய உங்களுக்கு மது பிடிக்காது ஆனாலும் காபரென்ஸ் ஹாலில் அரிமா சங்கம் ரோட்டரி போன்றவர்கள் மது அருந்துவார்கள் அதுக்காக வேணும்னா போலீஸ் ஸ்டேஷனில் பேசி மாசம் 9000 கொடுத்துடலாம் அவங்க கண்டுக்க மாட்டாங்கன்னு சொன்னேன் ஒரு மாதிரி பார்த்தாரு அப்புறம் என்னமோ போங்கன்னு விட்டுட்டாரு நான் அதை நல்லா பயன்படுத்திகிட்டேன்,
கோயம்புத்தூர்ல யார் யார் அடிக்கடி கூட்டம் நடத்துவாங்க எல்லா லிஸ்டும் நம்ம கைல பார்த்தா மூன்று கான்ஃபரன்ஸ் கால் ஒரு மாதத்திற்கு புக் ஆயிடுச்சு முதலாளி நம்மள கண்டுக்கவே இல்ல அவன் ஒரு கழிசடை நான் தான் நேரடியா வீட்டுக்கு போனேன் ஐயா உங்க ஓட்டல் வந்து காத்து வாங்கிட்டு இருந்துச்சு இப்ப அதை நிரப்பி வச்சிருக்கோம் உங்களுக்கு சந்தோசமா இல்லையா என்று கேட்டேன் ஒன்னும் சொல்ல அந்த மனுஷன்
இந்த ஹோட்டல் நம்மனால தான் லாபத்துல ஓடுது என்ற எண்ணம் எங்க ரெண்டு பேருக்கும் இருந்தது
கோவை சிட்டி டவர் ஹோட்டல் பொறுத்தவரை மொத்த வேலைகளின் 90 சதவிகிதம் கேரள முஸ்லிம்கள் 10% இந்துக்கள் இது அந்த முதலாளிகள் கட்டமைத்த அமைப்பு ,
இஸ்லாமியர்களின் நோன்பு காலத்தில் அவர்களுக்கு இறைச்சி கஞ்சி என்று ஒன்று அதை காலையிலிருந்து பட்டினியா இருந்தவன் ஒரு கிளாஸ் குடிச்சா போதும் மறுநாள் வரைக்கும் அவனுக்கு பசிக்காது அந்த அளவுக்கு புரோட்டின் மிகுதியான ஒரு சாப்பாடு இங்கே நான் சொல்லணும் பழனிபாபா என்ற மிகப்பெரிய போராளி இந்திரா காந்தி எம்ஜிஆர் கலைஞர் எல்லாரையும் விமர்சனம் பண்ண ஒரு பெரிய மனுஷன் அவரு ஒரு முறை இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்,
அவர் கிட்ட இதை நான் சொன்னேன் இஸ்லாமியர்களுக்கு இந்த ஓட்டலில் வேலை செய்தாலும் ராஜபோஜனம் கிடைக்குது ஆனால் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு இருக்கிற பத்து பேருக்கு ரெகுலர் லேபர் காண்டியனில் உப்புமா தான் போடுறாங்க உடனே பழனிபாபா சொன்னாரு நேரா போ இப்பதான் நான் பேசிட்டு வர்றேன் ஜே எம் டி அறையில் இருக்கிறார் இப்படி கேள் என்று சொல்லிக் கொடுத்தார் போய் கேட்டேன் அவரு பத்து பேருக்கும் இந்துக்களின் நல்ல சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு ஆனால் என் மேல ஒரு கண்ணு வச்சுட்டார் அதனாலதான் என்ன அவர் கண்டுக்கல
இந்தியாவுக்கு வந்த வெள்ளைக்காரன் பிரித்தாலும் சூழ்ச்சி பண்ணியது போல தான் கேரள முஸ்லிம் கோயம்புத்தூரில் ஹோட்டல் நடத்தும் போது அதையேதான் செஞ்சாரு முதலாளிகள் எப்போதும் வலதுசாரிகள் தான்
ஒரு முக்கிய மாற்றம் பொது உணவகத்தை அறிமுகப்படுத்தியது, அங்கு மக்கள் உணவுகளை ஆர்டர் செய்யலாம் - அதாவது, குறிப்பிட்ட உணவுகளுக்குப் பதிலாக தனிப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த கண்டுபிடிப்பு இன்று உணவகங்களில் பயன்படுத்தப்படும் மெனு முறைக்கு அடித்தளம் அமைத்தது. பாரிஸில் நவீன பாணி உணவகத்தைத் திறந்த முதல் நபர்களில் சமையல்காரர் அன்டோயின் பியூவில்லியர்ஸ் ஒருவர். அவரது நிறுவனமான லா கிராண்டே டேவர்ன் டி லண்ட்ரெஸ் ,
ஒரு லா கார்டே மெனுவைக் கொண்டிருந்தது மற்றும் ஒரு நேர்த்தியான சாப்பாட்டு அறை, நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள், ஒரு சிறந்த பாதாள அறை மற்றும் ஒரு உயர்ந்த சமையலறையுடன் ஒரு முறையான சாப்பாட்டு அனுபவத்தை வழங்கியது, இது உணவின் பரிணாம வளர்ச்சியில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்தப் புரட்சி சமையல்காரர்களின் பங்கை உயர்த்தவும் உதவியது. ஒரு காலத்தில் பிரபுக்களின் தனிப்பட்ட விஷயமாக இருந்த சமையல், ஒரு மரியாதைக்குரிய தொழிலாக மாறியது. இதன் விளைவாக, சமையல்காரர்கள் தங்கள் சமையல் திறமைகளுக்கு அங்கீகாரம் பெற்றனர், இது உலகளாவிய சிறந்த உணவு வகைகளில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் பிரெஞ்சு உயர் உணவு வகைகளின் வளர்ச்சிக்கு களம் அமைத்தது.
இந்தப் புரட்சி, அனைத்து சமூக வகுப்பினருக்கும் உணவை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றியது, இதனால் சாதாரண உணவகங்கள் முதல் ஆடம்பர உணவகங்கள் வரை பல்வேறு வகையான உணவு விருப்பங்கள் கிடைக்க வழிவகுத்தன. உணவின் இந்த ஜனநாயகமயமாக்கல் இன்று கிடைக்கக்கூடிய பரந்த அளவிலான உணவகங்களில் பிரதிபலிக்கிறது, ஒவ்வொரு ரசனைக்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது.
சரி இப்போ நம்ம ஊர்ல வந்து உணவு திருவிழா அப்படின்னு ஒன்னு பண்ணுவாங்க இதை யார் ஆரம்பிச்சு வச்சது தெரியுமா பதினாறாம் லூயி மனைவி அதனுடைய நீட்சி இன்று வரை வியட்நாமில் நூறாண்டுகள் அவர்கள் ஆண்டு கொண்டிருந்த போது மலை மீது மனிதன் சாப்பிடும் அத்தனை உணவும் தினமும் பரிமாறப்படுகிறது தலைவாழை இலை போட்டு எவனும் கொண்டு வந்து வைக்க முடியாது அவ்வளவு சாப்பாடு பஃபே சிஸ்டம் அங்க இருக்கும் நம்ம போய் பார்த்து அதை சாப்பிட்டுக்கணும் நானும் என் பசங்களும் போய் அதை பார்த்துட்டு சாப்பிட்டு வந்துட்டோம்
அனைத்திந்திய பில்டர்ஸ் அசோசியேசன் எனக்கு தெரிந்து கடைசியா அந்த கூட்டத்தை நடத்துனது நாங்க தான் 1994 கோயமுத்தூரில் மூணு ஓட்டல் காரங்க சேர்ந்து அந்த கூட்டத்தை ஏன் மூணு பேரும் சேர்ந்தோம்னா அவங்க வந்து நிறைய பெரிய இடங்கெட்டாங்க அவ்வளவு பெரிய இடம் அன்னைக்கு கோயம்புத்தூரில் இல்லை அதுக்காக ஒரு மாட்டு பண்ணையை சுத்தம் செய்து நடிகர் சத்யராஜுக்கு சொந்தக்காரங்க அதையும் சொல்லனும் இல்ல சுத்தம் பண்ணி மாட்டு தொட்டியில தண்ணிய ஊத்தி தாமரை பூ இலையை போட்டு அவங்களுக்கு ஒரு என்டர்டைன்மென்ட் வேண்டும் நிறைய பேர் வராங்க பேச்சாளர்கள் மட்டுமே 30 பேர் பேசி முடிக்கிற வரைக்கும் எவனும் பொறுமையா உட்கார முடியாது அதனால நாங்க என்ன பண்ணும் நாங்களும் நான் சொல்றது என் கூட மூணு பேரு வேலை செஞ்சாங்க உதவிக்கு அன்றைக்கு கோயம்புத்தூர் சுற்றுவட்டாரத்தில் புகழ்பெற்ற தெரு உணவகங்கள் வாத்து கறி விக்கிறவன்ல இருந்து பொரி உருண்டை எல்லாத்தையும் கொண்டு வந்து வச்சுட்டோம் எல்லாரும் பாராட்டு குமிச்சிட்டாங்க எங்களை இது ஒரு உணவு திருவிழா மாதிரி நடந்தது ஆனால் அதுதான் கடைசி அதற்கு பிறகு ஆல் இந்தியா பில்டர்ஸ அசோசியன் கூடவில்லை அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் அன்னைக்கு வந்த பணக்காரங்களுக்கு எல்லாருக்கும் என்னையே தெரியும் அப்படி ஒரு வேலையை நான் செஞ்சு விட்டேன் அதெல்லாம் இங்க சொல்ல முடியாது ஹோட்டல் டேபிள் மற்றும் அரை 13 என் இருக்காது , இது கிருஸ்தவ பிரான்ஸ் கலாச்சாரம் இயேசுவுடன் கடைசியாக விருந்தில் 13 பேர் கலந்து கொண்டதால் கிறிஸ்த நம்பிக்கை
1987 ஆம் ஆண்டு, சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் ரிப்பன் கட்டிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு ஏக்கர் நிலம். அந்த நேரத்தில், டிராஃபிக் ராமசாமியிடமிருந்து ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைக் கற்றுக்கொண்டேன். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, அவரது வகுப்புத் தோழர் ஒருவர் சென்னையில் ஒரு வண்டி வியாபாரத்தை நடத்தி வந்தார். பிக்னிக் ஹோட்டல் என்று அழைக்கப்படும் இடம் அவருக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஹோட்டலின் உரிமையாளர் அவர் செல்லும் போதெல்லாம் வெள்ளித் தட்டில் இலவச உணவை வழங்குவதாக உறுதியளித்திருந்தார், ஆனால் அவர் அந்த சலுகையை ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இந்தக் கதையை நான் குறிப்பிடுகிறேன், ஏனென்றால் இன்றும் கூட, இந்தியாவில் பல சொத்துக்கள் அரசியல்வாதிகள் அல்லது செல்வாக்கு மிக்கவர்களுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றன. இப்போது, ஒரு புதிய மெட்ரோ நிலையத்திற்கு வழிவகுக்க அதே இடம் காலி செய்யப்படுகிறது. சில கதைகள் மறக்கப்படுவதற்கு முன்பு சொல்லப்பட வேண்டியவை.
நான் முதன்முதலில் பிக்னிக் ஹோட்டலில் வேலைக்குச் சென்றபோது, எனக்கு ஆங்கிலத்தில் வேலை விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. அப்போது எனக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது, எனவே வேறொருவர் என்ன எழுதுகிறார் என்பதைப் பார்த்து அதை நகலெடுத்தேன். நான் எனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தேன், 14வது வேட்பாளராக அழைக்கப்பட்டேன்.
என்னை நேர்காணல் செய்தவர் அப்போது ஆளுநராக இருந்த அலெக்சாண்டர் நண்பர், செயல்பாட்டு மேலாளர் தான் என்னைப் பரிந்துரைக்கும் பொறுப்பு என்று அவர் என்னிடம் கூறினார். அவர் பத்தாயிரம் ரூபாய் முன்பணம் கேட்டார், ஆனால் நான் மறுத்துவிட்டேன். அதற்கு பதிலாக, எனது அசல் பத்தாம் வகுப்பு சான்றிதழைப் பாதுகாப்பாக விட்டுவிட முன்வந்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு நான் வெளியேறலாம் என்று கூறினார்.
நான் வெளியேறவிருந்தபோது, யாரோ ஒருவர் என்னைத் தடுத்து, என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். நான் குழப்பமடைந்தேன், ஆனால் அவர்கள் என் அளவீடுகளையும், எனக்காக ஆடைகளையும் தைக்கப் போகிறார்கள் என்று அவர் விளக்கினார். அப்போதுதான் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி மரியாதைக்குரியது என்பதை உணர்ந்தேன்.
நான் அங்கு ஆறு மாதங்கள் வேலை செய்தேன். அந்த நேரத்தில், என் உள்ளார்ந்த திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் நம்பிக்கைகள் என்னைச் சுற்றியுள்ள உலகத்தை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதைப் பாதிக்கத் தொடங்கின. பிக்னிக் ஹோட்டலின் உரிமையாளர் ஒவ்வொரு நாளும் ஒரு காரில் வருவார், ஆனால் அவர் வரவேற்பறையில் தனது காலணிகளைக் கழற்றிவிட்டு, ஒருபோதும் பாருக்குள் நுழைய மாட்டார். அதற்கு ஒரு காரணம் இருந்தது. நான் சேருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, பல இந்தி திரைப்பட நடிகர்கள் மற்றும் துணை கலைஞர்கள் சென்னைக்கு ரயிலில் வருவார்கள். அவர்கள் மதுவை விரும்பினர், ஆனால் எங்கள் ஹோட்டல் அதை வழங்கவில்லை. உரிமையாளர் ஊழியர்களிடம் அவர்களுக்காக "ஏற்பாடுகளைச்" செய்யுமாறு அறிவுறுத்தினார் - பின்னர் அவர் வெளியேறினார்.
சில விஐபிக்கள் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கு சில அறைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். நான் அங்கு பணிபுரிந்தபோது, ஒரு முன்னாள் முக்கிய பெண் கூட ஒரு காலத்தில் ஹோட்டலில் தங்கியிருந்ததை அறிந்தேன்.
இந்த அனுபவம் மனித இயல்பைப் பற்றி எனக்குக் கற்றுக் கொடுத்தது - ஒரு ஆண் வாழ்க்கையில் முன்னேறும்போது, அவனது ஆசைகள் பெரும்பாலும் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்கின்றன. திருப்பதி அதன் லட்டுகளுக்கு மட்டுமல்ல, வருகை தரும் பெண்களின் அழகுக்கும் பெயர் பெற்றது. சென்னையிலிருந்து பல தொழிலாளர்கள் திருப்பதிக்குச் செல்வது வழக்கம், பெருமாளைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அங்கிருந்து அழகிகளை ,,,,,,,,
ரெஸ்டாரன்ட் என்பது பெரும் பணக்காரர்களுக்கு பிரெஞ்சு நாகரிகத்தை அப்படியே இன்றைக்கும் பயன்படுத்தும் சில ஹோட்டல்கள் சிறப்பாக இயங்குகிறது அதற்கான காரணம் ஒவ்வொரு நாளும் உணவு தயாரான பின்பு அந்த ரெஸ்டாரன்ட் ஓட கேப்டன் உணவுக்கான மேனேஜர் ஒரு 20 நிமிடம் எல்லோரையும் அழைத்து பேசுவார் இன்று என்ன ஸ்பெஷல் உணவு அது எப்படி தயாரிக்கப்படுகிறது வரும் விருந்தினர்களுக்கு விளக்கம் சொல்வதற்காக அப்படித்தான் எனக்கும் சீனர்கள் பயன்படுத்தும் ஜாப்ஸ்டிக் எப்படி பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுத்தார்கள்
டேபிளில் இன்றைக்கு பேப்பர் நாப்கின் வந்துவிட்டது ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு துணியால் செய்யப்பட்ட நாப்கின் தான் அதை டேபிளில் மடித்து வைப்பதற்கு ஒரு கலை பெரும்பாலும் பெண்குறி ஆண்குறி அதுபோல சில பாலியல் சம்பந்தப்பட்ட வகையில் தான் அந்த துணி நாப்கின்கள் மடித்து வைக்கப்படும் இது அன்றைக்கு இருந்த பழக்கம் அது இன்றைக்கும் பயன்படுத்தப்படுகிறது
ஒரு டேபிள் செட்டிங் என்பது மதிய உணவு என்றால் ஆரம்பத்தில் அபிடேசர் அதாவது பசியை தூண்டும் உணவு பிறகு முதன்மையான உணவு கடைசியில் செரிமானத்திற்கான உணவு இப்படி கட்டமைக்கப்படும்
சிலவற்றை காலம் கடந்து சொல்லலாம் அப்படித்தான் என்னை நம்பி கொடுக்கப்பட்ட சில வேலைகள் அப்போது நான் அவர்களிடம் நேர்மையாக நடந்து கொண்டேன் அதில் ஒன்று தமிழ்நாடு முழுக்க சுப்பிரமணியசாமி தேடிக் கொண்டிருந்தது ஆனால் அவர் பேரூர் நாகராஜ் என்னும் பழைய ஜனதா கட்சி காரர் மூலம் நான் பணியாற்றிய ஹோட்டலில் தான் 15 நாள் தங்கியிருந்தார் என்னை அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது ஒரு முறை அவருக்கு தலைமுடிக்கு கருப்பு சாயம் பூசிக் கொண்டிருந்தபோது ஒரு உளவுத்துறை அதிகாரி கதவை தட்டினார் பார்த்துவிட்டு சுப்ரமணியசாமி இடம் சொன்னேன் அவர் சொன்னார் நீ எதுக்கு கவலைப்படாத இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியும் ஏற்கனவே பேசிட்டாங்க என்று சொன்னார்
ஒரு ஸ்டாண்டர்ட் ஹோட்டல் என்றால் அதில் பிரசிடெண்ட்ஷூட் ரூம் என்று ஒன்று அல்லது இரண்டு இருக்கும் எல்லா ரூமுக்கும் இந்த ஸ்பெஷல் ரூமுக்கும் என்ன வித்தியாசம் வேற ஒன்னும் இல்ல இந்த ரூமுக்கு இரண்டு கதவுகள் இருக்கும் அதாவது ஒரு கதவுகள் வழியா இவர் வருவாரு இன்னொரு கதவுகள் வழியா வேண்டிய வகை வருவாங்க அப்படித்தான் அன்றைக்கு புகழோடு இருந்த ஒரு முன்னாள் ஐஏஎஸ் வந்தார்
எம் ஜி ராமச்சந்திரன் இளம் வயதில் உணவுக்காக ஏங்கிய வரலாற்றை அவரே எழுதியிருக்கிறார் அதனால் தான் சினிமாவில் புகழ்பெற்று பணமெல்லாம் வந்த பிறகு நல்ல சாப்பாடு,
அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கூட அதை எதிர்பார்த்தார் கடைநிலை ஊழியருக்கும் நல்ல உணவு கிடைக்கும் வரை காத்திருந்து கடைசியாக இவர் சாப்பிட்ட கதை எல்லாம் உண்மை என்று நான் நம்புகிறேன்,
எம் ஜி ராமச்சந்திரன் பார்ப்பனர்களால் கபிலிகரம் செய்யப்பட்டபோது உள்ளே புகுந்த திராவிட ஆளுமைகள் கொஞ்சம் மடை மாற்றினார்கள் ஆனாலும் அவர் வள்ளலார் போல அணையாத அடுப்பு வைத்திருந்தார் இது எல்லாம் குறிப்பிட்ட சில பேருக்கு மட்டுமே தன் வாழ்நாளில் பாதி கடந்த பின்பு சாப்பிட விரும்பிய அத்தனையும் அவர் சாப்பிட ஆரம்பித்த போது தான் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை அவர் சாப்பிட்டு பத்து நிமிடத்தில் பாத்ரூம்ல போய் வாந்தி எடுத்து விடுவார் இதையும் நான் நம்புறேன் ஆனா அவர் அந்த வயதில் செத்ததுக்கு அளவுக்கு மீறிய உணவு அதை உடம்பு ஏத்துக்காது உழைக்கும் மக்களிடம் மட்டுமே உணவு செரிமானம் ஆகும்
ஹோட்டல் ஹிஸ்டரி நம்ம சொந்த கதையையும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் நாங்க எங்க ஊர்ல ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரையில் வெள்ளை எலி பிடிக்கும் வேட்டை இரவில் தான் இதை செய்வோம்,
டார்ச் லைட் அடிச்சு அந்த எலிகளை மடைமாற்றி சாக்கை போட்டு அடிச்சு சாவடிக்கிறது அதை இரவிலேயே சுத்தம் செய்து அன்றைக்கு எங்க ஊரில் ஏது என்கிற ஒருவர் காட்சிய சாராயம் கூடவே இந்த உலகில் மிக சுவையான இந்த வெள்ளை எலி கறி வருப்போம் ஒரு பாதி உடைந்த பானை அதில் உப்பு மிளகாய் மட்டுமே போட்டு வறுத்து சாப்பிட்டபோது கிடைத்த ருசி வேறு எங்கும் நான் அனுபவிக்கவில்லை
பைவ் ஸ்டார் ஹோட்டலில் இப்போதும் மகாராஜா மட்டன் ஃப்ரை என்று ஒன்று இருக்கிறது அது வேற ஒன்னும் இல்ல வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்த போது வேட்டையாடிய மான்களை காட்டுக்குள்ளேயே அந்த ஊர் ஆதிவாசிகள் உதவியோடு சமைத்தார்கள் அப்போது அதிகமான மசாலா சாமான்கள் இல்லை உப்பு மிளகாயும் தான் அது அறுசுவையாக இருந்தது
சுவைக்கும் உழைப்புக்கும் சம்பந்தம் உண்டு எங்க வீட்ல நான் பத்து வயசு இருக்கும்போது வயல் வேலைக்கு குறைந்தது 30 லிருந்து 50 பேர் வருவார்கள் அவர்களுக்கு மதிய உணவு எங்க அம்மாவோட அம்மா எப்படி செய்வாங்க போய் பார்த்து இருக்கேன்,
கருவாடு கூடவே மொச்சை கொட்டை வீட்ல இருக்க கத்தரி வத்தல் கொத்தவரங்காய் வத்தல் எல்லாத்தையும் போட்டு பிரஷா புடுங்கி கீரைத்தண்டு எல்லாம் சேர்ந்து ஒரு பத்து கிலோ எடை இருக்கும் ஆனால் ஒரு பெரிய சட்டியில இந்த குழம்பு வைக்கும் போது ஊரே மணக்கும் அதை மூணு பேர் சேர்ந்து தலைசுமையாக கொண்டு போய் வேலை செய்றவங்களுக்கெல்லாம் தட்டு எல்லாம் கிடையாது பனை ஓலையில் குருத்து பகுதியை அறுத்து பட்டை பிடிப்பார்கள் அது ஒரு கலை வாய்க்காலில் ஓடி இருக்கும் தண்ணீரில் கழுவி சுடச்சுட சோறு அந்த கருவாட்டு குழம்பு நான் அதை உணர்ந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இன்னமும் என் மூளைக்குள் அந்த வாசமும் அந்த சந்தோஷமும் ருசியும் இருக்கிறது
தமிழ்நாட்டில்
1960கள் வரை பெரிய அளவில்
வியாபார நோக்கம் கொண்ட ஸ்டார் ஹோட்டல்கள் வளரவில்லை மதுரை என்றால் பாண்டியன் ஹோட்டல்,
சென்னை
என்றால் தாஜ் கோரமண்டல், இப்படி
பெயர் சொல்லும் அளவில் சில ஓட்டல்கள் மட்டுமே
இருந்தது தமிழக அரசியலில் திமுக ஆட்சி கட்டிலில் ஏறிய பிறகு மதுரை
முனியாண்டி விலாஸ் என்ற பெயரில்,
அசைவ
உணவகங்கள் நிறைய வளர்ந்தது இதே போல ஆந்திராவைச்
சேர்ந்த ராஜா என்கிற வகுப்பைச்
சேர்ந்த ஒரு பிரிவினர் அசைவ
உணவகங்களை அதிகம் திறந்தனர் அப்போதெல்லாம் அசைவம் என்பது கிளப் கடை என்று சொல்வார்கள்
அதாவது ஒரு கிளப் என்பது
குறிப்பிட்ட சில நபர்களுக்காக விலை
குறைவாக மதுபானம் முதல் உணவுகள் வரை பரிமாறப்படும் அங்கு
அடுத்தவர்களுக்கு பார்சல் கொடுப்பார்கள் அசைவ உணவு பெரிய
அளவில் கொண்டாடப்பட்டது சமீப காலங்களில் தான்
பெங்களூரில்
இன்றும் ஐந்து கிளப்புகள் 130 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கிறது இவை எல்லாம் ஆங்கிலேயர்கள்
பெங்களூரில் இருந்த போது அவர்களுக்காக மது
மற்றும் மாட்டுக்கறி தின்பதற்கு ஆரம்பிக்கப்பட்டவை







Comments
Post a Comment