coffee and tee Lion Raja Ganesan pmjf

புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்" சிறுகதை, யில், கந்தசாமி பிள்ளை கடவுளை காபி குடிக்க அழைத்துச் செல்கிறார்,

உலகின் மிக விலையுயர்ந்த காபி என்று அழைக்கப்படும் இந்தோனேசியாவின் கோபி லுவாக், உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது. காபி பிரியர்களுக்கு கட்டாயம் கோபி லுவாக்கைப் பற்றி தெரிந்திருக்கும். ஆம். உலகின் மிக விலையுயர்ந்த காபியைப் பற்றி தான் நாம் குறிப்பிடுகிறோம், இது உலகின் நான்கைந்து நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. அதில் இந்தியாவும் ஒன்று,

மிகவும் விலையுயர்ந்த காபி இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது

நாம் உலகின் மிக விலையுயர்ந்த காபி சிவெட் பற்றி பேசுகிறோம். ஆம், சிவெட் காபி தான் உலகின் விலை உயர்ந்த காபி. இந்த காபி செடிகளில் இருந்து தயாரிக்கப்படுவதில்லை, பூனையின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில், இந்த பூனை காபி விதைகளை சாப்பிடுகிறது. ஆனால் அது பூனையின் வயிற்றில் செரிமானம் ஆகாது.. அதன் பிறகு, காபி கொட்டைகள் பூனை அதை மலம் வழியாக வெளியேறுகிறது. மக்கள் அதை சேகரித்து அரைத்து உலகின் விலையுயர்ந்த காபியை உருவாக்குகிறார்கள். இந்த காபி மிகவும் விலை உயர்ந்தது.

யானைகள், குரங்குகள், பறவைகள் மற்றும் வேறு சில விலங்குகளின் கழிவுகளிலிருந்து பெறப்படும் காபி கொட்டைகளைப் பயன்படுத்தி காபி தயாரிக்கப்பட்டு குடிக்கப்படுகிறது. ஐரோப்பாவில், வோட்காவுடன் கலந்த காபி காபி மார்டினி என்ற பெயரில் விற்கப்படுகிறது.


எல்லா இடத்திலும் வந்த  ஜாதி காபி டீ உள்ளும் வந்தது சில உயர்தர சைவ உணவகங்களில் டீ பரிமாறப்படுவதில்லை காபி தான் பரிமாறப்படுகிறது

நிறைய ஏழைகள் டீ குடிக்க பழகிய பிறகுதான் சில உயர்ந்த ஜாதிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் டீ குடிப்பதை நிறுத்தி விட்டார்கள் உண்மையில் இஸ்லாமியர்களின் சொத்து தான் இந்த காபி மதுவுக்கு எதிராக இருந்ததால் காபிக்கு ஆதரவாக இருந்தார்கள் இஸ்லாமியர்

கோயம்புத்தூரில் ஒரு கோவிலின் நிர்வாகத்தில் இருக்கும் மிக உயர்ந்த சைவ உணவகத்தில் வெள்ளித் தட்டில் தான் உணவு பரிமாறப்படும் அங்கு காபி மட்டுமே தருவார்கள்

இந்தியாவில் முதல் காபி கடை 1780 இல் கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து ஜான் ஜாக்சன் என்பவர் 1792 இல் சென்னையில் மதராஸ் காபி ஹவுஸ் என்று ஒன்றை ஆரம்பித்தார் இங்கே காபி குடிக்க வருபவர்களுக்காக படிப்பதற்கு ஆங்கில பத்திரிக்கைகள் கொடுக்கப்பட்டன இன்றைக்கும் நவீன காபி ஹவுஸ்களில் புத்தகங்கள் வாசிக்க வைத்திருக்கிறார்கள்


எனக்கு ஒரு நகைச்சுவை ஞாபகத்துக்கு வருகிறது சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மனோரமா விசு இடையே நடக்கும் ஒரு சம்பாசனை,
மிகுந்த உணவு பிரியரான விசு வரப்போகிற மாப்பிளை வீட்டாருக்கு பிடித்த மாதிரி இனிப்பு வகைகள் அப்புறம் பசு மாட்டுகாம்பிலிருந்து நேரா கறந்த பாலு அதுல இருந்து காப்பி என்று   பேசும்போது மனோரமா இடைமறித்து ஏன் காபி கோட்டையை  மாட்டுக்கு கொடுத்துட்டு காப்பியாக கறந்து கொள்ளலாமே  என்று பேசுவார்

எல்லாத்துக்கும் கட்டுக்கதை இருக்கிற மாதிரி இந்த காப்பி எத்தியோப்பியாவில் சில ஆடு மாடுகள் இந்த காப்பி பழங்களை சாப்பிட்டு விட்டு மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்ததாகவும் பிறகு அவர்களது பயிர் செய்ததாகவும் சொல்லப்படுகிறது

அரபு நாடுகளுக்கு காப்பி போன பிறகு அவர்கள் இதை தங்கள் சொத்து என்பதாக கருதிக் கொண்டு வேறு நாட்டுக்கு காபி கொட்டைகளை கொண்டு போக தடை விதித்தார்கள் 1690 இல் தான் அதை மீறி டச்சு வணிகர்கள் காப்பி செடியை கொண்டு போய் ஜாவா நாட்டில் பயிர் செய்தார்கள் 17ஆம் நூற்றாண்டில் பாபா பூதன் எனும் ஒரு இஸ்லாமிய சுஃபி ஞானி தன் ,,,வாயில் மறைத்து வைத்து ஏழு காபி கொட்டைகளை கொண்டு வந்து சிக்மங்களூர் பகுதியில் பயிர் செய்து வளர்த்தார் சிக்மங்களூர் சந்திரகிரி மலையில் இன்றும் உலகின் சுவையான காபி கொட்டைகள் கிடைக்கிறது

ஆங்கிலேயருக்கு மிகவும் பிடித்துப் போனது காபி தான் எல்லாருக்கும் தெரியாத ஒரு விஷயம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு போகப்பட்ட மக்கள் முதலில் காபி தான் பயிர் செய்தார்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அது ஒரு நோய் பாதிக்கப்பட்டு அதையெல்லாம் அழித்துவிட்டு பிறகு தான் டி பயிரிடப்பட்டது

பரதேசி படத்தில் அதை காட்டி இருக்கலாம் ஏனோ மறந்து விட்டார்கள்

1675இல் இங்கிலாந்தில் 3 ஆயிரம் காப்பி கடைகள் இருந்தன அப்போது இருந்த மன்னர் சார்லஸ் இங்கு தான் மக்கள் கூடி மன்னருக்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் எதிராக அரட்டை அடிக்கிறார்கள் என்ற காரணத்தால் அனைத்து காபி கடைகளையும் மூட உத்தரவிட்டார்

பாவேந்தர் பாரதிதாசன்

காப்பி எதற்காக நெஞ்சே காப்பி எதற்காக கையினில்   சுக்குடன் மல்லி இருக்கையில் காப்பியதற்காக என்று பாடி இருக்கிறார்

 Shennong

என்ற ஒரு மன்னன் இவன் ஒரு ஆராய்ச்சியாளன் கூட ஒரு முறை சுடுதண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருந்த போது காற்றில் பறந்து வந்த ரெண்டு இலைகள்  அதில் விழுந்தன அந்த இலையை எடுத்து போட்டு நீரை பருகிய போது அதுதான் டி என்பது அப்போது அவருக்கு தெரியாது,
பிறகு தான் அதை மக்களுக்குச் சொன்னார் இதுவும் கதைதான் சீனாவுல சொல்றாங்க அங்கிருந்துதான் டீ உலகம் ஃபுல்லா பரவி இருக்கு

அமெரிக்காவின் பாஸ்ட்அண்ட் துறைமுகத்தில் 1773 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வெடித்த தேயிலை புரட்சி வேற ஒன்னும் இல்ல வியாபாரத்துக்காக வாங்குன தேயிலை பிரிட்டிஷ் கப்பல்ல நிறைய இருந்துச்சு அந்த நேரத்தில் அமெரிக்காவுலயும் தேயிலை உற்பத்தி ஆரம்பிச்சுருச்சு ஆனா வற்புறுத்தி இதை இந்த விலைக்குத்தான்  வாங்கணும்னு துறைமுகம் இறக்கும்போது

அங்க இருந்தவனும் பிரிட்டிஷ் தான் அவங்க எல்லாம் பூவ குடிமக்கள் செவ்விந்தியர்கள் போல வேடமடைந்து கப்பலில் இருந்த தேயிலைப் பெட்டிகளை எடுத்து கடலில் வீசினார்கள்

Boston tea party இன்று வரலாற்றில் பேசப்படும் சம்பவம் இதுதான்

சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்த தேயிலை உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது கிழக்கு இந்திய கம்பெனி மூலம் ஒரு கட்டத்தில் சீனா பண்டமாற்றுக் காலத்தில் வெள்ளியை கேட்டது இவர்களால் வெள்ளி கொடுக்க முடியவில்லை என்ன செய்தார்கள் தெரியுமா ஓப்பியத்தை பயிர் செய்தார்கள் இன்றைக்கு இருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் பகுதிகளில் பயிர் செய்து ஓப்பியம் மற்றும் கஞ்சா இதை சீனாவில் மறைமுகமாக விற்பனை செய்தார்கள் சீனா இதனால் பாதிக்கப்பட்டது

1856 மற்றும் 60களில் பெரிய போர் நடந்தது கடைசியாக கிழக்கு இந்திய கம்பெனி வழக்கம் போல காட்டியும் கூட்டியும் கொடுத்து போரில் வென்றது அப்படித்தான்  ஹாங்காங் துறைமுகம் கிடைத்தது

இங்க ஒன்னு சொல்லி ஆகணும் இன்னைக்கு இருக்குற டாட்டா கம்பெனி இந்த ஓபிஎம் கஞ்சா விற்பனைக்காக உருவாக்கப்பட்டது தான் ஏன்னா டாடா இந்தியன் கிடையாது அவனுக்கு யார் மீதும் அக்கறை இல்லை பணம் பணம் பணம்  

காபிக்கு ஆதரவாக இருந்தார்கள் இஸ்லாமியர்





Comments

Popular posts from this blog

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

தேர்தல் வரலாறு

Language, Communication, and the Story of Migration