கலைஞர் கருணாநிதி #Father Of Modern Tamil Nadu

 


மாமனிதன்கலைஞர்

கலைஞரை நேசிக்கும் நமக்கு, அவரின் ஆரம்ப வாழ்க்கை முதல் இறுதிக் கால அரசியல் வரை எல்லாமே தெரிந்தவை.

காவேரி மருத்துவமனையிலிருந்து கலைஞரின் உடல் ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான மக்கள் அதைச் சூழ்ந்தனர். ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே பல மணி நேரம் ஆனது.

கலைஞரைப் பார்க்க வந்திருந்த மம்தா பானர்ஜிக்கு அவரது மறைவு செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது. உடனே இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர், கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். இசட் பிரிவு பாதுகாப்பு இருந்ததால் அவர் தப்பினார். ஆனால் ரஜினிகாந்த் கடும் நெரிசலுக்கு உள்ளானார். அதுவும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. கூட்டம் கட்டுப்பாட்டுடன்தான் இருந்தது.

ஆனால் அதே பாதுகாப்பு இருந்தும், மறுநாள் ராகுல் காந்திக்கு கலைஞரின் உடலை எளிதில் பார்க்க முடியவில்லை. ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக உடல் வைக்கப்பட்டிருந்தும், சரியான ஏற்பாடுகள் இல்லாததால் அவர் படிக்கட்டின் கைப்பிடியில் பிடித்துக்கொண்டு மேலேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நாளில் ஏற்பட்ட நெரிசல் மரணத்திற்கும் தவறான நிர்வாகமே காரணம்.

இவை எல்லாம் கலைஞர் மீது கொண்ட அன்பால் திரண்ட மக்கள்.
ஆனால் கலைஞர் என்றாலே வெறுப்படையும் ஒரு கூட்டமும் உண்டு. அவர்கள் உண்மையை அறிய முயலாமல், பொய்களையே நம்புகிறார்கள்.

கலைஞர் மீது அவதூறு பரப்பப்படுவது புதிதல்ல. “மஞ்சப்பை”, “கள்ள ரயில்போன்ற கதைகள் அதற்கான உதாரணங்கள். உண்மைகளை நாம் சொன்னாலும், அதை அவர்கள் ஏற்கத் தயாராக இருப்பதில்லை.

கலைஞர்டி.ஆர். சுந்தரம் (சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்) நட்பு குறித்து பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது.
1950-
ல் வெளியான மந்திரிகுமாரி படத்தின் விளம்பரச் சுவரொட்டியிலேயே
மு. கருணாநிதியின் அறிவு மணக்கும் வசனங்கள்
என்று அச்சிடப்பட்டது. இதைச் செய்தவர் யார் தெரியுமா? யாரையும் எளிதில் மதிக்காத டி.ஆர். சுந்தரமே. தமிழ்த் திரையுலகில் இதுதான் முதல் முறை.

நாம் நினைப்பது போலபராசக்தியில்தான் கலைஞரின் பெருமை தொடங்கவில்லை.
அதற்கு முன்பேமந்திரிகுமாரியிலேயே அது நிகழ்ந்துவிட்டது.

கலைஞர், தன்னைத் தானே புகழ்ந்து பேசும் மனிதர் அல்ல.
காலம் உண்மையைச் சொல்லும்என்று அமைதியாக இருந்தவர்.
ஆனால் மறதி நிறைந்த இந்த உலகில், அந்த அமைதியே பல பொய்களுக்கு வழிவிட்டது.

மந்திரிகுமாரிபடத்தின் இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன்.
அந்தப் படத்தின் நாயகனாக எம்.ஜி.ஆரை பரிந்துரைத்தது கலைஞர்தான்.

எம்.ஜி.ஆரின் தாடையில் இருந்த குழி, டங்கனுக்கு பிடிக்கவில்லை.
நாயகனுக்கு இவர் பொருத்தமில்லைஎன்றார்.
அப்போது கலைஞர்,
ஒரு ஒட்டுத்தாடி வைத்தால் போதும்
என்று சொல்லி செய்து காட்டினார்.
அதன்பின் டங்கனே கலைஞரின் திறமையை ஏற்றுக்கொண்டார்.

வசனம் எழுதுவதோடு நிற்காமல், நடிப்பு, கேமரா கோணங்கள், வசனத்தை எப்படிப் பேச வேண்டும் என்பதுவரை கலைஞர் குறிப்புகள் எழுதுவார். படப்பிடிப்புத் தளத்திற்கே வந்து திருத்தங்களும் செய்வார். இதுவே டி.ஆர். சுந்தரத்தை மிகவும் கவர்ந்தது.

மாடர்ன் தியேட்டர்ஸின் சில படங்கள் தோல்வியடைந்த நிலையில்,
மந்திரிகுமாரி பெரிய வெற்றியைப் பெற்றது.

எம்.ஜி.ஆர் பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும், அவரை பெரிய நட்சத்திரமாக மாற்றியது இந்தப் படம்தான்.
எம்.ஜி.ஆருக்காக கலைஞர் 9 படங்களில் கதைவசனம் எழுதினார்.

மலைக்கள்ளன் படத்தில் கலைஞரின் பெயர் முதலில் வந்தாலும், அந்தப் படம் எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கியது.

1952-ல் வெளியான பராசக்தி படத்தில் சிவாஜி கணேசனின் சம்பளம் ரூ.250 மட்டுமே.
ஆனால் 1949-லேயே மாடர்ன் தியேட்டர்ஸில் கலைஞர் வாங்கிய சம்பளம் ரூ.500.

ஒருநாள், கலைஞர் பத்திரிகை வேலைக்கு சென்னைக்கு வந்தபோது,
டி.ஆர். சுந்தரம் கேட்டார்:
உனக்கு பணம் வேண்டாமா?”

அடுத்த மாதமே சம்பளத்தை ரூ.5000 ஆக உயர்த்தினார்.
இது 1950-ல் நடந்த சம்பவம்.

அப்படி உயரத்தில் இருந்த ஒருவரை,
டிக்கெட் இல்லாமல் மஞ்சப்பையுடன் வந்தார்
என்று எழுதுகிறார்கள்.

95 ஆண்டுகள் தமிழ்நாட்டின் பல நகரங்களில் வாழ்ந்த ஒரு மனிதனை,
ஓங்கோலிலிருந்து வந்தவர்
என்று குறைத்து பேசுகிறார்கள்.

இது அறியாமையல்ல.
பொறாமை.

  


73 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சராக 20 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சி செய்த தலைவர் கலைஞர் நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார்.

மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப் படுத்தினால் ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும்.






18 ஆண்டு காலமும் கஜினிமுகமது போல் யுத்தம் நடத்தியதால் தான் அரியணையில் அண்ணாவால் அமர முடிந்தது.

1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பபட்டது. அதற்கு மறுநாள் திருச்சி நீதிமன்றத்தில் அண்ணாவுக்கு ஆறுமாதம் சிறை என்று தீர்ப்பு வந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் அவரால் எழுதப்பட்டு 15 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகிவிட்ட #ஆரிய_மாயை என்ற புகழ் பெற்ற புத்தகம் வகுப்பு வேறுபாட்டை விதைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டது.

https://www.scribd.com/document/467472480/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%A3%E0%AE%BE-pdf

புத்தகத்தை எழுதிய அண்ணாவுக்கும் அதனை வெளியிட்ட திருச்சி திராவிட பண்ணை

#கண்ணப்பனுக்கும் 500 ருபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதனை கட்ட இவர்கள் இருவரும் மறுத்ததால் நான்கு மாதம் சிறை தணடனையை ஏற்றார்கள்.

இதை தொடர்ந்து திமுக கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது, நாடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது

1957 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் 16லட்சம் பேரின் நம்பிக்கையை பெற்றது திமுக.ஆகிய 15 பேர் சட்டமன்றத்திற்குள் போனார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் திமுக முதன் முதலாக உள்ளே சென்று உட்கார்ந்த நாள் 1957 ஏப்ரல் 29. நாங்கள் இந்த சபைக்கு வந்தது என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்கு நுழையவில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம் என்று 1957 ஜூலை 4 ம் நாள் நிதி நிலை அறிக்கை மீது நடந்த விவாதத்தில் அண்ணா பேசினார்.!

1,அண்ணா , 2,கலைஞர், 3,அன்பழகன்,4,சத்தியவானி முத்து,

5,ஏ.வி.பி ஆசைத்தம்பி,6,கடம்பூர் அண்ணாமலை, 7,ஆனந்தன்,

8,இருசப்பன் , 9,.கோவிந்த சாமி, 10,..சண்முகம், 11,பி எஸ் சந்தானம்

12.எம்.பி.சாரதி, 13,எம் பி சுப்ரமணியம், 14,எம்.செல்வராஜ், 15,ஜி.நடராஜன்

1962  சட்டமன்றத் தேர்தல்
அறிஞர் அண்ணா, அன்பழகன், ஏவிபி ஆசைத்தம்பி  போன்ற 14 பேர் அடுத்த 1962 தேர்தலில் ,காமராசர் நிறுத்திய பணக்காரர்கள் மூலம் பணமும் சில வாக்குறுதிகளும் சத்தியங்களும் பெறப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்  ஒருவருடையத் தலை மட்டும் தப்பியதுஅது நம்ம   தல ஆனால் அவர் தனியாகப் போகவில்லைஉடன் 49 பேர்அதாவது 15 பேர்   இப்போது 50 பேராக ஆகிவிட்டது 

தான் சந்தித்த இரண்டாவது பொதுத் தேர்தலியே எதிர்கட்சியாக உயர்ந்துவிட்டது திமுக.


1967 தேத்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது அண்ணா இரண்டாண்டுகள் ஆட்சிசெய்தார் அதன் பின் கலைஞர் கொண்டுவந்த செயல்திட்டங்கள்  

1967-1976 வரையில் திமுகவின் சாதனைகள் கீழ்கண்டவை:

அண்ணா அவர்களுடைய மறைவிற்குப் பிறகு அவரது வழிநின்று கழக ஆட்சி கலைஞர் தலைமையில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற முழக்கத்துடன் ஆற்றிய சாதனைகள் ஏராளம்.

குடிசை மாற்று வாரியம் ,ஆதிதிராவிடர்களுக்கு மக்களுக்கு இலவச வீடு கட்டி வழங்கும் திட்டம்


நகர்ப்புற கிராமப்புற ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மூலம் 

மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டம்

தொழுநோய் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைத்து அவர்களை வாழவைக்கும் திட்டம்

ஊனமுற்றோருக்கு உதவி அளித்து தொழில் பயிற்சி அளிக்கும் திட்டம்

சென்னை போன்ற நகரங்களில் தைரியத்தைக் கொடுத்து அந்த தொழிலாளர்களுக்கு இலவச சைக்கிள் #ரிக்ஷா வழங்கும் திட்டம்.


பள்ளி சிறுவர் சிறுமியருக்கு #காது கேட்கும் கருவிகள் வழங்கும் திட்டம்

ஆதரவற்ற சிறார்க்கு ஆலயங்களின் உதவியுடன் #கருணை இல்லங்கள் அமைத்து அவர்களுக்கு #கல்வி வழங்கும் திட்டம்

விதவைகள் மறுவாழ்வு திட்டம் கலப்பு மணங்களை ஊக்கப்படுத்தும் திட்டம்

இவைகள் மட்டுமேயல்லாமல்

விவசாய தொழிலாளர்களுக்கு

கூலி நிர்ணய சட்டம்

அவர்கள் குடியிருக்கும் மனைகளை அவர்களுக்கே #சொந்தமாக்கும் சட்டம்

தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு ஒப்படைப்பு செய்யும் சட்டம்



அரசுக்கு சொந்தமான நிலத்திலிருந்து #வீட்டுமனை ஒப்படை செய்யும் சட்டம்

பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு சட்டம்

பஸ்களை தேசியமயமாக்கும் சட்டம்

தனியாருக்கு சொந்தமாக இருந்த

மின் நிலையங்களை #நாட்டுடைமையாக்கும் சட்டம்

அனைத்து சாதியினரும் #அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம்



குதிரைப்பந்தய ஒழிப்புச் சட்டம்

பரிசு சீட்டு ஒழிப்பு மற்றும்

குடிநீர் வாரியம்

குறிப்பிட்ட காலத்துக்குள் #எல்லா கிராமங்களுக்கும் மின் வசதி செய்து கொடுத்தது

கிராமங்களை முக்கிய #சாலைகளை #இணைக்கும் #இணைப்பு சாலை திட்டம்

பல #நீர்தேக்கங்கள் அமைத்தது

புதிதாக #15லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுமாறு பாசன வசதிசெய்தது

அரசு ஊழியர்களை கவனிக்க இரண்டாவது #ஊதிய குழு அமைத்தது

இந்தியாவிலேயே முதன்முதலாக #போலீஸ் கமிஷன் அமைத்து



காவல் துறையினருக்கு #ஊதிய உயர்வு போன்ற பல பரிந்துரைகளை நிறைவேற்றியது

அரசு அலுவலர் ஒருவர் பணியில் இருக்கும் போது இறந்தால், #இறந்தவர் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் பாதுகாப்பு நிதி அளித்தது

அரசு ஊழியருக்கு #திருமண கடன் தந்தது

அரசு ஊழியர்களின் பல்லாண்டு கால கோரிக்கையான #ரகசிய குறியீட்டு முறையை ஒழித்தது

#விபத்தில் உயிர் நீத்த

#விவசாய தொழிலாளி

#மரம் ஏறும் தொழிலாளி

#மீனவர் குடும்பத்துக்கு

உடனடி நிதி உதவி அளித்தது

பெண் போலீஸ் படையை தொடங்கியது

அண்ணா பிறந்த நாளன்று போலீசாருக்கு #விருது வழங்கும் நிகழ்ச்சியை உருவாக்கியது

பிற்படுத்தப்பட்டோர் நலன்கள் பற்றி ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஒரு #குழுவை நியமித்து அதன் பரிந்துரைகள் பலவற்றை ஏற்றது

பிற்படுத்தப்பட்டோருக்கு

ஆதிதிராவிடர் நலனுக்கும்

தனித்தனியே துறைகளும் அமைச்சர்களும் என்ற நிலையை ஏற்படுத்தியது

தொழிற்கல்விகள் அதற்கு வசதியாக கல்லூரிகள்

வேலை வாய்ப்பு #இட ஒதுக்கீட்டில்

25% என்பதை 31 என்றும்

ஆதி திராவிடர்கள் 16 என்பதை 18% என்று உயர்த்தியது

பின்னர் பி.யு.சி. வரையில் எல்லா மாணவர்களுக்கும் #இலவசக் கல்வி என்று அறிவித்தது

புன்செய் #நில வரியை ரத்து செய்தது

நூற்றுக்கு ஐந்து ஏக்கர் வரையில் #வரியை விலக்கியது

இந்தியாவிலேயே முன்னோடியாக #மாநிலத் திட்டக்குழு கண்டது



ஆகஸ்ட் 15ல் கோட்டை முகப்பில் கவர்னருக்கு பதிலாக

#முதலமைச்சர் கொடியேற்ற வேண்டும் என்று கோரி அதிலேயே

நாம் வெற்றி கண்டது



முதல்வர் தலைமையில், அறநிலையத் துறை அமைச்சர், அறநிலையத் துறைசெயலாளர், அறநிலையத் துறை ஆணையர், குன்றக்குடி ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள், திருமதி சௌந்தரம் கைலாசம், மேனாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி, கருமுத்து கண்ணன் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைப்பு,

*********

#படித்துதெரிந்துகொள்ளுங்கள். இளம் தலைமுறையினரே..

யார் இந்த MGR?

மறைக்கப்பட்ட உண்மைகள்**

கலைஞருக்கு எதிரா சர்க்காரியா கமிசன் மட்டுமே.ஆனா MGR க்கு எதிரா பால்கமிசன், ரே கமிசன் எரிசாராய முறைகேடு, மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு,ராபின் மெயின் முறைகேடு, பாஸிச அடக்குமுறை ஆட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள், பொருளாதார நாசம், பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு, நீதித்துறை மிரட்டல் என எண்ணற்ற குற்றச்சாட்டுகள்.

ஆனால் எதுவுமே பேசப்படவில்லையே ஏன்?

இவர் சினிமாவில் நடிகராக உத்தமர், வீரர், மக்கள் போராளி, குடியை எதிர்ப்பவர் என பல வேசங்களில் வலம் வந்தவர். ஆனால் உண்மையில் அவர் யார்?

திமுகவின் பொருளாளராக அனைத்து அதிகாரத்துடன் இருந்த MGR கணக்கு கேட்டாராம். ஆனா கலைஞர் கணக்கு தரவில்லையாம். அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களாம்.


வேடிக்கையா இருக்குமே

ஆனால் ஊரெல்லாம் இதே பேச்சுதான். எல்லோரும் நம்பினர்.

ஆனா இந்திராவின் மிரட்டல்தான் MGR ரின் இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் காரணம்.

MGR ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி. மத்தியில் யார் பிரதமரோ யாரிடம் வருமானவரித்துறை இருக்கிறதோ அவர்களை கண்டாலே நடுக்கம்தான். அப்படித்தான் இந்திராவின் அடிமையாக மாறி திமுகவை பிரித்தார்.

MGR ன் அடிமைத்தனத்தால் கச்சத்தீவை இந்திரா கொடுத்தபோது திமுக மட்டுமே அதை எதிர்த்தது. அதிமுக அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டது. சட்டமன்ற தீர்மானத்தை கூட ஆதரிக்கவில்லை.

2016 ல் ஜெ சட்டமன்றத்தில் கச்சத்தீவை பற்றி வாய்கிழிய பேசியபோது MGR ன் கோழைத்தனத்தை பற்றி பேசாதது ஏன்?

மேலும் ஜெ பேசும்போது 2008 ல் தான் கச்சத்தீவை மீட்க வழக்கு போட்டதாக சொல்லியிருக்கிறார்

1977 ல் ஆட்சிக்கு வந்த MGR ஏன் வழக்கு போடவில்லை?

1991 இல் ஜெ ஆட்சிக்கு வந்ததும் ஏன் வழக்கு போடவில்லை?

1976 இல் எமர்ஜென்சி நேரத்தில் கலைஞர் மீது எண்ணிலா வழக்குகளை போட்டார் இந்திரா.

அவரது நோக்கம் கலைஞரை ஊழல்வாதியாக ஒரு பிம்பத்தை உருவாக்குவதே.

அத்தனை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் 2G விவகாரத்தை

எப்படி ஊதி பெருக்கினார்களோ அதே மாதிரிதான் அன்றும் அவாள் சார்பு பத்திரிக்கைகள் தினம் தினம் சர்க்காரியா விசாரணை செய்திகளை பரப்பின. எமர்ஜென்சி என்பதால் ஒரு தரப்பான கலைஞருக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டது.

கலைஞர் தரப்பு நியாயங்கள் மக்களுக்கு போய் சேராமல் பார்த்துக்கொண்டன

மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் அப்படியே நம்பினார்கள். இன்றும் கலைஞர் மீது அன்று குத்தப்பட்ட ஊழல் முத்திரை விலகவில்லை.

ஆனால் இறுதிவரை சர்க்காரியா கமிசனால் எதையும் நிரூபிக்கமுடியவில்லை. ஆனால் மக்களிடத்தில் திமுக மீது வெறுப்பு வந்தது.

விளைவு... 1977 ல் அதிமுக + இந்திரா கூட்டணி பெரும் வெற்றி.

ஆனால் மத்தியில் காங்கிரஸ் தோல்வி.

வழக்கம்போல வடிகட்டிய கோழை MGR மத்திய அரசு பக்கம் சாய்ந்ததுடன் தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார்.

மத்திய அரசுக்கு பயந்துக்கொண்டு தஞ்சை MP இடைத் தேர்தலில் இந்திரா போட்டியிட விரும்ப MGR அதை ஏற்கவில்லை.

இந்திரா கர்நாடகா சிக்மக்ளூரில் நின்று வென்றார்.

மத்தியஅரசின் நிர்ப்பந்தம் காரணமாக தன்னை நிராகரித்த கோழை MGR மீது கடும் கோபம் கொண்ட இந்திரா தான் கலைஞருக்கு செய்த கொடுமைகளுக்கு வருந்தி கலைஞருக்கு தூது அனுப்பி பின்பு மெரினாவில் மக்களிடம் தனது ஆட்சியின் எமெர்ஜென்சி கால தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்க திமுக- காங்கிரஸ் உறவு ஏற்பட்டு 1980 ல் தமிழகத்தில் ஒரு இடம் தவிர அனைத்து MP தொகுதிகளிலும்

அந்த கூட்டணி வென்றது.

ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் MGR மீண்டும் வெல்ல அதன் பிறகே MGR ன் உண்மை முகம் வெளியானது.

1980 தேர்தலில் வென்ற பிறகுதான் எம்ஜிஆர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ரத்து செய்தார். சாராயக் கடைகளை கொண்டு வந்தார். அந்த சாராயக்கடைகள் ஏலம் எடுப்பதன் மூலம் அந்த வருவாய் கட்சிக்காரர்களுக்கே இருக்க வேண்டும் என்று கருதினார்.

அதற்காக சாராயக்கடை ஏலம் கோருபவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் சீட்டு விவரங்களை குறிக்க வேண்டும். அவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதப்படாத ஆணை பிறப்பித்தார். அது முறையாக நடக்கிறதா என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்து நடைமுறைப்படுத்தவும் செய்தார்

சாராயக்கடைகள் திறக்கப்பட்ட வேளை. சாராயக் கம்பெனி நடத்த ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கே அனுமதி வழங்கப்பட்டது.

1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே.

1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது.

மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது.

இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது

இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.

இதெல்லாமே MGR ரால் ஏழைகள் உழைப்பு எப்படி உறிஞ்சப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள்

எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது அதிகம். பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள்

சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள்.

MGR ரின் அஇஅதிமுக அரசு முறையற்ற மோசடியான மதுக் கொள்கையை வகுத்தது

தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ள டாஸ்மாக் அமைப்பு

ஏற்படுத்தப்பட்டது.

********************************

இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களுக்கே மது விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது.

சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது.

இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன.

லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன.

1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது.

எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், இயக்கவாதிகள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் அடக்குமுறை அனுபவத்தை தந்தது

இதற்காக குண்டாஸ் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன

காவல்துறைக்கு தன்னிச்சையான அதிகாரம் கொடுக்கப்பட்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒடுக்கப்பட்டனர்.

விசாரணைக் கைதிகளின் மரணம் வருடம்தோறும் அதிகரித்தது.

1980-களில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்தியது. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பல்வேறு காலகட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர்.

* 1980 டிசம்பர் 31-ம் தேதி, குருஞ்சாக்குளம் விவசாயப் போராட்டத்தின்போது, 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர்.

* 1985-ம் ஆண்டு, சென்னையில் மீனவர் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 3 மீனவர்கள் பலியானார்கள். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பலியானார்கள்.

*1987 வன்னியர் சங்க போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் 21 பேர்

1980-ல் வடஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டகளில் மார்க்சிய லெனினிய கட்சியைசேர்ந்த 15 பேரும் 1981-ல் நான்குபேரும் எங்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை உயர் நீதிமன்றம் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் திரைப்படங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1981-ல் பத்திரிக்கைகளை ஒடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டது

எந்த வகையிலும் விமர்சனம் என்பது இல்லாமல் பார்த்துக்கொண்டது எம்ஜிஆர் அரசு. உதாரணமாக கோமல் சுவாமிநாதனின்தண்ணீர் தண்ணீர்நாடகம் தமிழக கிராமங்களின் அவலத்தை சொல்லும்பு நாடகமாகும். இந்த நாடகம் தணிக்கை செய்யப்பட்டது.

இதைத் தழுவி எடுக்கப்பட்ட

K. பாலசந்தரின்தண்ணீர் தண்ணீர்திரைப்படத்தை தடைசெய்ய்யக்

கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.

மத்திய அரசு தடைவிதிக்காத் சூழலில் காவல்துறை மூலம் அத்திரைப்படம் ஓடும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர்..

திட்டங்கள் கூட தொடர்ந்து 13 வருடம் ஆட்சியில் இருந்தும் சத்துணவை தவிர வேறு எதையும் பெரிதாக கொண்டு வர வில்லை என்பதும் உண்மை..

மக்களின் ஆதரவிருந்தும்தண்ணீர் தண்ணீர்ஒரு சில வாரங்களிலே திரையிலிருந்து விலகியது..

மொத்தத்தில் அடக்குமுறையாலும் பார்ப்பணீயத்தாலும் மூடி மறைக்கப்பட்ட மிக மிக மோசமானவர் தான் இந்த .கோ.இராமச்சந்திரன்...

அதில் சில ஆதாரங்கள்.....

எரிசாராய ஊழலும் ரே கமிசனும்**

MGR ம் ஈழமும்

எம்ஜிஆர் புலிகளை ஆதரிக்க காரணம் இரண்டு

1) கலைஞர் சபாரத்திணத்தை ஆதரித்தார். அவருக்கு எதிரா புலிகளை ஆதரித்தார்.

2) இந்திரா அப்போது ஈழப்போராளிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி தந்தார்

இல்லாவிடில் பொத்திக்கொண்டு

மௌனமாகத்தான் இருந்திருப்பார்.

எம்ஜிஆர் பணம் கொடுத்தார் என்பது உண்மைதான்

ஆனால் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுதான் கொடுத்தார்.

சார்க் மாநாட்டுக்கு ஜெயவர்த்தனே வந்தபோது சென்னையில் இருந்த பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்தது எம்ஜிஆர்.

டெல்லி அசோகோ ஹோட்டல் விவகாரத்தில் பிரபாகரன் எம்ஜிஆரிடம் உதவி கேட்டார் எம்ஜிஆர் கண்டுக்கொள்ளவில்லை.

1987இல் ராஜிவ் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது எம்ஜிஆர்

#தலைவர் #கலைஞர் மட்டும் தான் .#நவீன_தமிழகத்தின் தந்தை

போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்


$$

மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப் படுத்தினால் ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும்.

#தண்ணீர்/

குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்.



காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர் கலைஞர்
இந்திய ஒன்றியத்தில் முதன் முறையாக நதிகள் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்



தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதி இணைப்பு திட்டம்


https://www.dinakaran.com/dreamproject_people_southtamilnadu_thamirabarani-karumeniyaru-nambiyaru_connectionproject_complete/ 



பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்

கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்















கலைஞருக்கு எதிராக பார்ப்பன பத்திரிகைகள் பரப்பிய பொய் மூட்டைகள் அதை ஒவ்வொன்றாக அவிழ்ப்போம்

வீராணம் குழாய் வழக்குஉண்மை (எளிய விளக்கம்)

கலைஞர் கருணாநிதி மீது பல ஆண்டுகளாக 56 ஊழல் வழக்குகள் புனையப்பட்டன. ஆரம்ப காலங்களில், அவர் அவற்றைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை.
பதில் சொல்ல வேண்டிய இடத்தில் சட்டப்படி பதில் சொல்கிறேன்என்ற உறுதியுடன் இருந்தார்.

வீராணம் குழாய் குற்றச்சாட்டு

ஒரு பெரிய ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கும்போது,
முதல்வரை சந்தித்தபோது தேர்தலுக்காக பணம் கேட்டார்.
மூன்று முறை பணம் கொடுத்தேன்
8.5
லட்சம், 10 லட்சம் எனஎன்று கூறினார்.

இந்த சாட்சியை வைத்து பட்டி தொட்டியெல்லாம் கலைஞர் ஊழல்வாதி எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
தினமலர் போன்ற பத்திரிகைகள் கிண்டல் செய்தன.
ஆனால் கலைஞர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

வழக்கின் திருப்புமுனை

இந்த வழக்கை பார்த்த தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி. ராமசாமி அய்யர்,
தானாக முன்வந்து கலைஞருக்காக வாதாடினார்.

குறுக்கு விசாரணையில் அவர் கேட்ட கேள்வி முக்கியமானது:

நீங்கள் பணம் கொடுத்ததாக சொன்ன அந்த ஆண்டு,
அந்த மாதத்தில் பாண்டிச்சேரியில் தேர்தலே நடந்ததா?

அப்போது அனைவருக்கும் அதிர்ச்சி
அந்த ஆண்டு பாண்டிச்சேரியில் தேர்தலே நடக்கவில்லை!

இதுவே வழக்கின் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது.
ஒப்பந்ததாரரின் சாட்சி பொய்யென்று நிரூபிக்கப்பட்டது.


கலைஞருக்கு ஆதரவாக வந்த வக்கீல்கள்

·        ஜி. ராமசாமி அய்யர்
ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்என்று இலவசமாக வாதாடினார்.

·        யாழ்ப்பாணம் ஜி.ஜி. பொன்னம்பலம்
ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன் உதவுவதற்கு கட்டணம் வேண்டுமா?”
என்று சொல்லி இலவசமாக வாதாடினார்.

·        சாந்தி பூஷன், கே.கே. வேணுகோபால் போன்ற உச்சநீதிமன்ற வக்கீல்களும் துணை நின்றனர்.

விசாரணை கமிஷனின் தோல்வி

வீராணம் குழாய் வழக்கில்:

·        குறுக்கு விசாரணை அனுமதிக்கப்பட்டது

·        எந்த குற்றமும் நிரூபிக்க முடியவில்லை

·        விசாரணை கமிஷன் திணறியது

👉 கலைஞர் கருணாநிதி முழுமையாக விடுவிக்கப்பட்டார்.

அரசியல் பழிவாங்கல்

1971ல் கலைஞர் தலைமையில் திமுக 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்திரா காந்தி பிரதமராக ஆன பின்னர்,
திமுக அரசை பல வழிகளில் நெருக்கடிக்கு உள்ளாக்கினார்.

·        எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்கினார்

·        வருமான வரி சோதனைகள்

·        1975 அவசரநிலை

·        சர்க்காரியா விசாரணை கமிஷன்

இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கலின் விளைவு என்று பின்னாளில்
மொரார்ஜி தேசாய், ஜகஜீவன் ராம், சாந்தி பூஷன் போன்றோர் பொதுவெளியில் தெரிவித்தனர்.

சோதனைகள்ஆனால் எதுவும் கிடைக்கவில்லை

·        கோபாலபுரம் வீடு

·        முரசொலி அலுவலகம்

·        ராஜா அண்ணாமலைபுரம் வீடு

👉 எங்கும் பணம், நகை, சட்டவிரோத சொத்து எதுவும் கிடைக்கவில்லை.

கலைஞரின் நிலைப்பாடு

·        வழக்குகளை எதிர்கொள்ளவில்லை என்று ஓடவில்லை

·        18 வருடங்கள் வாய்தா வாங்கவில்லை

·        சட்டப்படி நின்று போராடினார்

·        சட்டமன்றத்தில் விளக்கங்களை புத்தகமாக வெளியிட்டார்

முக்கிய உண்மை

·        கலைஞர் மீது ஊழல் வழக்கில்
ஒரு நாளும் சிறைத்தண்டனை கிடைக்கவில்லை

·        போராட்டங்களுக்காக மட்டுமே சிறை சென்றுள்ளார்

·        சர்க்காரியா கமிஷனில் கூட
ஊழல் நிரூபிக்கப்படவில்லை

முடிவு

கலைஞர் கருணாநிதி மீது சுமத்தப்பட்ட
வீராணம் குழாய் ஊழல் குற்றச்சாட்டும்,
சர்க்காரியா கமிஷனும்
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் விளைவே என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

 

  

Non - Nominated officers என்பவர்கள் ஊர் ஊராகச் சென்று சாட்சிகளை அடையாளம் கண்டு, அவர்களது வாக்குமூலங்கள் No-tarry Public அவர்களின் சான்றின் பேரில் பெற்று, கமிஷனுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியான கமிஷன் வேலையில் நான் non-nominated அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். எனவே நான் மதுரை, திருநெல்வேலி அவற்றைச் சார்ந்த கிராமங்களுக்கும் சென்று விசாரணையில் ஈடுபட்டேன். இந்த கமிஷனுக்கு திரு சுவர்ணா ஐ.பி.எஸ். டி.ஐ.ஜி. ஆகவும், திரு கணேசன் ஐ.பி.எஸ் கண்காணிப்பாளராகவும் இருந்தார்கள். நீதிபதி சர்க்காரியா அவர்கள் சென்னை, ஊட்டி போன்ற இடங்களில் தனி நீதிமன்றங்கள் அமைத்து சாட்சிகளை விசாரித்தார். விசாரணை முடிவில் கலைஞர் மீது கொடுக்கப்பட்ட ஊழலுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று அறிக்கை கொடுத்தார். ஆனாலும் எதிர்க்கட்சிக் காரர்கள் இந்தப் புகாரின் பேரில் அளவுக்கு அதிகமாக பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். அப்போது  எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் ஓங்கியிருந்தது. அந்த நேரத்தில் அவர் சொல்லும் அத்தனையும் உண்மை என்று நம்பினார்கள். எனவே கலைஞர் அவர்கள்மீது அவர் கூறிய புகார் யாவும் உண்மை என்று மக்கள் நம்பினார்கள். எதிர் கட்சிக்காரர்கள் இன்றும்கூட அதே பொய் பிரச்சாரத்தை தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இந்திராவின ஷா கமிஷன் விசாரணையை போன்றே சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் விரக்தியில் குப்பையில் தூக்கிப்போடப்பட்ட ஒன்றே. இந்த விவரங்கள் எதையுமே புரிந்துகொள்ளாமல் கருணாநிதி விஞ்ஞான ஊழல் புரிந்தார் என்று வண்டு சிண்டுகள் கூட குருட்டாம்போக்கில் உளறிக்கொட்டும் கற்பனைக்கு கதைகளுக்கு மேற்சொன்ன விவரங்கள் பொய்ப்பிக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பகுதி நிறைவு பெறுகிறது. 

மஞ்சப்பை உம்மையும் வதந்தியும்  

கலைஞர் திருட்டு ரயிலில் மஞ்சள் பையுடன் சென்னை வந்ததாக ஒரு உருட்டு அந்தக்கால சங்கிகள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்உண்மையில் கலைஞர் திருவாரூரிலிருந்து அப்பாயின்ட்மென்ட்  ஆர்டர் கையில் வைத்துக்கொண்டு ஈரோட்டுக்கு பயணமானார் ,  ஒரு ஏக்கர் நஞ்சை நிலம் 100 ரூபாய் விற்ற அதே காலத்தில் #பழனியப்பன்   என்ற நாடகத்தை நூறு ரூபாய்க்கு விற்றுவிட்டு உதவி எழுத்தாளர் பணிக்கு வேலைக்குப் போனார் ,அதன் பிறகு 1944 மாடர்ன்  தியேட்டர்ஸ் சினிமாவில் மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்கிறார்கோவை ஜுபிடர் நிறுவனம் இவருக்கு கதை இலாகாவில் துணை  எழுத்தாளராக பதவி கொடுத்தது

அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது #ராஜகுமாரி திரைப்படம் அதன் பின்பு என் எஸ் கே தயாரித்த #மணமகள் திரைப்படத்திற்கு கதை   எழுதியதற்காக அன்று ஒரு #கார்_பரிசாக கிடைத்தது காரை   கொடுத்த என் எஸ் கிருஷ்ணன் ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல்   கூப்பன் கொடுத்திருக்கிறார்உண்மையில் கலைஞர் சென்னைக்கு  தன்   சொந்த காரில் தான் வந்தார் 52 தேர்தலை கட்சி புறக்கணித்தது ஐம்பத்தி ஏழு முதல் முதல் திமுக தேர்தலை சந்தித்தது ,முதல்    தேர்தலில் போட்டி  இடும் முன்பே  அவருக்கு சென்னையில் சொந்த வீடும் கோபாலபுரம் ஐயங்கார் இடம் வாங்கிய பழைய வீடு தான்   கொஞ்சம் புதுமை படுத்தினார் அதே வீட்டில் தான் வாழ்ந்தும்   செத்தும் போனார்


மஞ்சப்பை கதை கண்ணதாசன் வனவாசத்தில் தன்னைப் பற்றி   எழுதும்போது அவன் இவன் ரயிலில் டிக்கெட் இல்லாமல் போன கதை எல்லாவற்றையும் எழுதி இருக்கிறார்

அதை சரியாக வாசிக்காமல் ஏதோ கண்ணதாசனுக்கு நடந்ததை    கலைஞரோடு ஒப்பிட்டு அந்தக்கால சங்கிகள் திருட்டு ரயிலில்   கலைஞர் போனதாகவும் கூடவே அவங்க அப்பத்தாவும்   போனதாகவும்  டீக்கடையில் பேசிக்கொள்வார்கள் மஞ்சப்பை   அதிகம் பரப்பப்பட்ட பச்சைப் பொய்

 கருணாநிதி கைது சர்ச்சைகள், 2001

கருணாநிதி கைது சர்ச்சைகள், 2001 அல்லது மேம்பாலங்கள் கட்டுமான கைது சர்ச்சைகள் என்பது 2001 சூன் 30 அன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் அவருடன் அப்போதைய மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன் மற்றும்  பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோது எழுந்த சர்ச்சைகளைக் குறிப்பது ஆகும். 

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக மத்திய அமைச்சராக உள்ள ஒருவர் கைது சைய்யப்பட்ட நிகழ்வு இது ஆகும். இந்த நிகழ்வின் துவக்கமானது, எழுபத்தி எட்டு வயதான முன்னாள் முதலமைச்சரை அவரது இல்லத்தில் இருந்து கைது செய்தபோது நடந்தது. அதற்கடுத்த 1 மணி நேரத்திற்குள், கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் சன் டிவி மற்றும் பிற அலைவரிசை நிலையங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. இதற்கு எதிர்வினையாக பின்னர் ஜெயா தொலைக்காட்சியில் அவரைக் கைது செய்யும் காட்சிகள் காட்டப்பட்டன.

2001 அதிமுக ஆட்சிக்கு வந்தது உடனே கலைஞரை கைது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் துவங்கியது அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி எந்த ஊழல் செயலிலும் ஈடுபடவில்லை இதை அவரை கைது செய்த முத்துக்கருப்பன், முகமது அலி ,சார்ஜ் ,நெல்சன், சேவியர், எல்லோரும் நன்கு அறிவார்கள் இருந்தும்  அழுத்தம்

கலைஞர் ஆட்சியில் இருந்தபோது சென்னை மாநகர ஆணையர்      ஜே சி டி ஆச்சாரியாலு என்பவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டார் ,அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவரை மீண்டும் மாநகர ஆணையராக நியமித்து அவரிடமே புகார் பெற்று அவசரமாக கலைஞரை கைது செய்தார்கள். நள்ளிரவில் வீடு புகுந்து அது ஜெயலலிதாவுக்கு மிகவும் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது 

2016 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட சிறு மேம்பாலங்களில் 12 கோடி மதிப்புக்கு ஊழல் நடந்திருப்பதாக காவல்துறையிடம் ஜூன் 29 வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு புகார் பெறப்பட்ட நிலையில் கைதானது ஒரு சில மணி நேரங்களுக்குள் அருண் ஜெட்லி ஒருமுறை இதில் சட்டத்தை நிலை நாட்டுவதில் தனிப்பட்ட வெறுப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது ஆரம்ப கட்டத்திலேயே நன்கு தெரிகிறது என்று பேசியிருந்தார் 

அவரை கைது செய்து நீதிபதியிடம் நிறுத்திய போது மிகவும் வருத்தப்பட்டு அவருக்கு வீட்டில் இருந்து ஜூஸ் கொடுத்து முதலில் இவரை மருத்துவமனைக்கு அனுப்புங்கள் என்று சொன்னார், அவர் பேச்சைக் கேட்காததால் கோபத்தில் இருந்த அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போது உங்களுக்கெல்லாம் இதயம் இருக்கிறதா மனிதர்களா அல்லது ரோபோவா என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்கள் அந்த போலீஸ் அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த இந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற இஸ்லாமிய பெண் நீதிபதி, பாத்திமா பீபி தனக்கு திருமணம் இல்லை என்று சொல்லிக்கொண்டு குடும்பத்தோடு அவர் ஊட்டியில் செலவு பண்ணியது மட்டும் கோடிகளைத் தாண்டும், காலக்கொடுமை இரண்டு மாதங்களில் அரசியல் காப்பாற்ற தவறியமைக்காக ஒன்றிய அமைச்சரவை ஆளுநர் பாத்திமா பீதியை நீக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்ததை அடுத்து அவர் தன் பதவியில் இருந்து விலகினார். 

நான்காண்டுகள் கழித்து 2005ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது அரசாங்கத்தின் இந்த நடத்தை பற்றி நீதிமன்றத்தில் கேள்விகள் இருந்தன வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் பிரேமாப்பசி வழக்கு தொடர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தெளிவாக தீர்ப்பளித்து தள்ளுபடி செய்தார் ஏன் இவர்கள் இவ்வளவு காலதாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள் என்றால் எல்என்டி(L&T) கட்டுமானம் கட்டி வைத்த மேம்பாலம் மற்றும் அரசு பள்ளிகள் கட்டி வைத்த சுவர்களை உடைத்து அதில் மாதிரிகளை சேமித்து தரம் இல்லாதவை என்று நிரூபிப்பதற்காக நிறைய சிரமப்பட்டார்கள் ஆனால் இது தரம் இல்லாதவை என்று யாரும் சர்டிபிகேட் கொடுக்க முன்வராததால் இவர்களே போலியாக தயாரித்த பத்திரங்களை தூக்கி வீசி விட்டார்கள் நீதிமன்றத்தில்,

 தன்னை கைது செய்ததற்கு பழி வாங்குவதற்காக ஜெயலலிதா நானும் கலைஞரை கைது செய்து விட்டேன் என்று வேண்டுமானால் சந்தோஷப்பட்டு இருக்கலாம் ஆனால் எதையும் சட்டப்படியும் நியாயப்படியும் செய்யும் கலைஞரை அவரின் கடையடை ம..ரை கூட பிடுங்க முடியாது 

கலைஞர் கைது செய்யப்பட்டபோது, சென்னை காவல் ஆணையர் முத்துக்கருப்பன் நடந்துகொண்ட விதம் கடுமையானதாக இருந்தது. முன்னாள் முதல்வர், மூத்த தலைவர், அனுபவமிக்க அரசியல்வாதி என்பதைக் கூட அவர் கருத்தில் கொள்ளவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்ற வேண்டும் என்பதிலேயே அவர் முழுக் கவனம் செலுத்தினார்.

இந்த கடுமையான கைது நடவடிக்கைக்குப் பிறகு, அதிமுக ஆட்சியில் அவருக்கு பெரிய பதவி அல்லது மரியாதை வழங்கப்படும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் முத்துக்கருப்பனுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக, 2003ஆம் ஆண்டு முத்துக்கருப்பனை ஜெயலலிதா திடீரென பணியிலிருந்து நீக்கினார் (சஸ்பெண்ட்).

2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிந்து, மீண்டும் கலைஞர் முதல்வரானார். அப்போது, தனது கைது நடவடிக்கையின் போது கடுமையாக நடந்துகொண்ட முத்துக்கருப்பனுக்கு, கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தலைமை கண்காணிப்பு அதிகாரி பதவியை கலைஞர் வழங்கினார். இது கலைஞரின் தலைமைப் பண்புக்கும், பெருந்தன்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

அதே கைது சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு அதிகாரியான சிபிசிஐடி டிஐஜி முகமது அலி, பின்னாளில் முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்றார். மற்றொரு அதிகாரியான டிஜிபி ரவீந்திரநாத், இளம்பெண்களை செல்போனில் படம்பிடித்ததாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டுகளில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் பலமுறை ராஜினாமா கடிதம் எழுதி சர்ச்சைகளில் சிக்கியவராகவும் அறியப்பட்டார்.

காந்திய வழியில், கத்தியும் ரத்தமும் இன்றி போராடி, மக்களின் ஆதரவுடன் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கலைஞர்.

குளித்தலைக்கு அருகே உள்ள நங்கவரம் பகுதியில், ரங்கநாத ஐயர் மற்றும் ராமநாத ஐயர் என்ற இருவர் மட்டுமே மொத்தம் 33,412 ஏக்கர் நிலங்களை வைத்திருந்தனர். அந்த நிலங்களில் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் பண்ணை கூலி அடிமைகளாக வேலை செய்தனர்.

கூலித் தொழிலாளர்களுக்கும், குத்தகை விவசாயிகளுக்கும் எந்தச் சேமிப்பும் கிடையாது. கூலித் தொழிலாளர்களுக்கு அறுவடை முடிந்ததும் கூலி மட்டும் வழங்கப்படும். குத்தகைதாரர்கள் தாங்கள் விளைத்த பயிரின் பெரும்பகுதியை பண்ணையாரிடம் கொடுத்து,

மீதியை தங்கள் குடும்பத்தின் பசியை தீர்க்க மட்டும் வைத்துக்கொள்ள வேண்டிய நிலை இருந்தது.

அந்தக் காலத்தில் மக்களிடம் பணம் என்பது அரிது. வீட்டில் திருமணம் அல்லது வேறு விசேஷங்கள் வந்தால், பண்ணையாரிடம் கைக்கட்டி நின்று உதவி கேட்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
சடையன் மகன் முனியன் பேரில் ஆயிரம் ரூபாய் கணக்கில் எழுதி அவனிடம் பணம் கொடுஎன்று பண்ணையார் தனது கணக்குப் பிள்ளைக்கு உத்தரவிடுவார்.

அந்தப் பகுதியில் வசித்த எந்த ஜாதியினருக்கும் நில உரிமை கிடையாது. எல்லா நிலங்களும் அந்த இரு பண்ணையார்களிடமே இருந்தன.

இந்நிலையில், கூலி தொடர்பாக பண்ணையாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அறுவடை செய்த நெல் களத்தில் குவிக்கப்பட்டது. சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு. உழைத்த மக்கள் ஒரு நெல்லைக் கூட எடுக்க முடியாத கொடூர நிலை.

1957ஆம் ஆண்டு, குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினை வந்தது. அன்றைய இளைஞரான கலைஞர், மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தார்.

போராட்டம் தீவிரமானது. ஏதுமற்ற மக்கள் கலைஞரின் பின்னால் ஒன்றிணைந்தனர். அவர்களுக்கான ஒரே நம்பிக்கையாக கலைஞர் மாறினார்.

தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்த கலைஞரின் முதல் உரை நங்கவரம் பிரச்சினையைப் பற்றியதாகவே இருந்தது. கண்ணீரும் உணர்ச்சியும் பொங்க அவர் பேசினார். ஆனால் ஆட்சியாளர்கள் மனம் மாறவில்லை.

இருந்தாலும் கலைஞர் விடவில்லை. நங்கவரப் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
நீங்கள் என் நிலங்களில் வேலை செய்யவில்லை என்றால், வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வேலை செய்வேன்என்று பண்ணையார் மிரட்டினார். தென்மாவட்டங்களில் இருந்து வேலையாட்களையும் கொண்டு வந்து குவித்தார்.  

28-8-1957 முதல் இருபது நாட்கள் இடைவிடாத அறப்போராட்டம். ஒரு சிறு கலவரம் இல்லை. பண்ணையாரின் கைகால்கள் வெட்டப்படவில்லை. போராடும் மக்களின் கைகளில் கத்தியும்கடப்பாரையும் இருந்தாலும் பண்ணையாரின் உடம்பில் கீரல் கூட விழவில்லை. வயிற்றில் பசியும்மனதில் உரிமை வேட்கையுமாய் கட்டுப்பாடாக நின்றனர் மக்கள்!

துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்படுகின்றனர். கலெக்டர்எஸ்பி நங்கவரத்துக்கு வந்து பண்ணையாரிடம் நிலைமை குறித்து விவாதித்துச் செல்கின்றனர். ஆனால்மக்கள் பக்கம் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை.

வெளியூர் ஆட்களை வைத்து வேலையைத் தொடங்குவதற்கு பண்ணையார் எத்தனிக்கும்போதுகலைஞர் விஸ்வரூபம் எடுக்கிறார்.

தோளில் கிடந்த துண்டை எடுத்து தலைபாகைக் கட்டிக் கொண்டுநிலத்தில் இறங்கி ஏர்க்கலப்பை பிடித்து உழத் தொடங்குகிறார். அவ்வளவு தான்மக்களின் உரிமை முழக்கம் விண்ணைப் பிளக்கிறது. பதற்றம் தொற்றுகிறது. உயர் அதிகாரிகள் விரைகிறார்கள். போராட்டத்தின் கட்டுப்பாடுமக்களின் விடாமுயற்சி காரணமாக பண்ணையாருக்கு இறங்கி வருவது தவிர வேறு வழியில்லை பேச்சுவார்த்தை நடக்கிறது. குத்தகைதாரர்களுக்கும்கூலித் தொழிலாளர்களுக்கும் நிலங்களை பகிர்ந்து கொடுக்க ஒப்பந்தம் ஆகிறது. நிலத்திற்கான மதிப்பாக அந்த மக்கள் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் உழைத்து ஒரு தொகையை பண்ணையாருக்கு செலுத்திவிட வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாகிறது. ஆனால்அதற்காக தொகையைச் செலுத்த அம்மக்கள் சில ஆண்டுகள் தங்கள் உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது.

இப்போதுநங்கவரத்தில் எல்லா ஜாதியினருக்கும் சொந்தமாக நிலம்! இடைநிலை ஜாதியினருக்கும் உண்டுதாழ்த்தப்பட்டோருக்கும் உண்டு!

இந்த ஈடு இணையற்ற நங்கவரம் போராட்டத்தின் கதாநாயகன் கலைஞர் கருணாநிதி!

1973ஆம் ஆண்டு அலகாபாத்துக்கு செல்கிறார் கலைஞர். அங்கே கலைஞர் பேசவிருந்த இடத்தைச் சுற்றி இந்தியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. என்னவென்று தெரியுமா? ‘ராமனின் விரோதி கருணாநிதியே’ என்று! கலைஞர் அப்போதும் இப்போதும் எப்போதுமே ராவணன் தான்!

1966ஆம் ஆண்டு! திமுகவுக்கு தேர்தல் நிதி வசூலிக்க கலைஞர் சூறாவளிப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தைத் தாண்டிபம்பாய் வாழ் தமிழர்களிடம் இருந்தும் கலைஞர்க்கு அழைப்பு வருகிறது. அவரும் செல்கிறார்!

விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் புகைவண்டி வந்து நின்றது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பிமாலையும்கைத்தறி ஆடைகளையும் அணிவிக்கின்றனர்.

தான் இருப்பது தமிழ்நாடா அல்லது பம்பாயா என்று குழம்பும் அளவுக்கு தமிழர்கள் கலைஞரை சூழ்ந்துகொண்டு அன்புமழை பொழிந்தனர்.

மாதுங்காவில் இருந்து தாராவி வரை சுமார் கிலோமீட்டர் தூரத்துக்கு திறந்த காரில் கலைஞரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் தமிழ் மக்கள்!

வழியெங்கும் வரவேற்பு வளைவுகள்மலர்மாரி என திக்குமுக்காடினார். பம்பாய் மாநகரமே ஆச்சரியமாகப் பார்த்த ஊர்வலம் அது!

தாராவியில் நடந்த பொதுக்கூட்டத்தில்நகர்புறக் கூலியாய் வாழ்ந்துவந்த அம்மக்கள் திமுகவுக்கு அளித்த தேர்தல் நிதி 12000 ரூபாய்! இப்போது எவ்வளவு பெரிய தொகை அது!(இன்றய மதிப்பில் ஒரு கோடி )

கல்லக்குடியும்-பாளையங்கோட்டையும்

இராஜகோபாலச்சாரி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு  எதிராகப் போராட்டம் நடத்த திட்டமிடுவதற்காக 1953 ஜூலை 13 திமுக செயற்குழு கூடியதுமும்முனைப் போராட்டம் நடத்த திட்டமிடப் பட்டது.

1.குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து 1953 ஜூலை 14  இராஜகோபாலச்சாரி வீடு முன்பு .வெ.கி.சம்பத் முற்றுகையிட வேண்டும்.


2.திருச்சி அருகே கல்லக்குடியில்டால்மியா என்ற வடநாட்டுக்காரர்   சிமெண்ட் தொழிற்சாலை அமைத்ததால்அங்குள்ள இரயில் நிலையத்திற்கு டால்மியாபுரம் எனப் பெயர் வைத்துள்ளனர்அதை   கல்லக்குடி என மாற்ற வேண்டும்அதற்கு 1953 ஜூலை 15   மு.கருணாநிதி தலைமை தாங்கி போராட்டம் நடத்த வேண்டும்.

3.திமுகவின் போராட்டங்களைப் பிரதமர் நேரு 'நான்சென்ஸ்என்று  கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1953 ஜூலை 15 ரயில் நிறுத்தப்   போராட்டம் நடத்த வேண்டும்இந்தப் போராட்டம் குறித்த   தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றிக் கொண்டிருந்த   போதேபோலீஸ் படையுடன் துணைப் போலீஸ் கமிஷனர்   எப்.வி.அருள் வந்தார்அண்ணாநெடுஞ்செழியன்.வெ.கி.சம்பத்,   மதியழகன்என்.வி.நடராசன் ஆகியோரை கைது செய்து   அழைத்துச் சென்றார்.

4.தம்பிமார்களுடன் நான் கைது செய்யப்பட்டாலும்போராட்டத்தை   நடத்த ஆயிரக்கணக்கான தம்பிமார்கள் இருக்கிறார்கள் என்றார்   அண்ணா.

1953 ஜூலை 14, .வெ.கி சம்பத் கைது செய்யப்பட்டதால் இராஜகோபாலச்சாரி வீடு முன்பு நிறைமாதக் கர்ப்பிணியான சத்தியவாணிமுத்து மறியல் செய்து கைதானார்.

1953 ஜூலை 15 டால்மியாபுரம் என்று எழுதப்பட்ட பலகையின் மீது   கல்லக்குடி என்று எழுதப்பட்டத் தாளை ஒட்டினார் கலைஞர்காலை  9.50 மணிக்கு ரயில் வந்து நின்றது.கலைஞர்முல்லை சக்தி,  கஸ்தூரிகுமாரவேல்குழந்தைவேல் ஆகிய ஐவரும் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு மறியல் செய்தனர்.

கலெக்டர்எஸ்.பிமாஜிஸ்ரேட்டு போன்ற அதிகாரிகள் அனைவரும்  கலைஞரிடம் இரயிலை போகவிடச் சொன்னார்கள்கலைஞர்  மறுத்தார்இரயில் கிளம்பட்டும் என்று உத்தரவிட்டார்கள்தண்டவாளத்தில் போராட்டக்காரர்கள் படுத்திருக்கஅவர்கள் மீது  ஏற்றுவது போல் வந்து கலைஞருக்கு சில அடி தூரத்தில் வந்து நின்றது.கலைஞர் அசையவில்லைஅனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

பகல் 1.30 மணிக்கு கவிஞர் கண்ணதாசன் தலைமையில் 41 பேர்  தண்டவாளத்தில் படுத்து மறியல் செய்தனர்தடியடி நடத்தப்பட்டது. 17 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதுபலர் காயமடைந்தனர்இரயிலில் பயணம் செய்த கேசவன்நடராசன் இருவரும்   துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள்கண்ணதாசன் ரத்தம் சொட்டச்சொட்ட   இழுத்துச் செல்லப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டார்.

தூத்துக்குடியில் இரயில்வே பாலம் தீ வைத்துக் கொழுத்தப்பட்டது.   துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானார்கள்தமிழகம் முழுமையும் 5000 பேர்  கைது செய்யப்பட்டனர்அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட   கலைஞர் உள்ளிட்ட 35 பேருக்கு ஆறுமாதம் கடுங்காவல்   தண்டனை விதிக்கப்பட்டதுஅதன் பிறகு இராஜகோபாலச்சாரி   செல்லும் இடமெல்லாம் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.

1965 ஜனவரி 26 முதல் பிப்ரவரி 12 வரை 18 நாட்கள் தமிழகத்தை   உலுக்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம்போராட்டம் நிறுத்தப்பட்ட   நான்குநாட்கள் கழித்து 16-02-   5 நள்ளிரவு 12 மணிக்கு கோபாலபுரத்தில் பாதுகாப்புச் சட்டத்தின் படி   கலைஞர் கைது செய்யப்பட்டார்சென்னை போலீஸ் கமிசனர்   அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டு, 17-02-65 மதுரை கொண்டுவந்துஆயுதப்படை முகாமில் காவலில் வைக்கப்பட்டார். 

மீண்டும் 18-02-65 பாளையங்கோட்டை மத்தியசிறையில் தனிமைச்சிறையில்   அடைக்கப்பட்டார்என் தம்பி கருணாநிதி தனிமைச்சிறையில்   அடைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டையே எனக்கு யாத்திரை   செல்லக்கூடிய புனித பூமி என்றார் அண்ணா.

62 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு                                                                                                           

 சென்னை எழும்பூர் மாஜிஸ்ரேட்டால் விடுதலை செய்யப்பட்டார்.   பாதுகாப்புச் சட்டத்தின் 30(1)B பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததால்   விடுவிக்கப்பட்டார்.

1967 திமுக அதிகாரத்திற்கு வந்ததுபாளையங்கோட்டையில் அடைக்கப்பட்ட  கலைஞர்அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வரானார்செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு 1969 கலைஞர் முதல்வராகி அந்த ரயில் நிலையத்தின் பெயரை மாற்றினார் டால்மியாபுரம் என்று இருந்ததை 

கல்லக்குடி பழங்காநத்தம் என்று கலைஞர் பெயர் மாற்றியது வரலாறு

கலைஞரும் பட்டியல் இனமக்களும் 

சத்தியவாணி முத்து 

இவர் திமுக ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த பட்டியலின பெண்மணி ஆனால் இவர் குடும்பப் பின்னணி கொஞ்சம் வசதியானது 

பெரும் போராட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் எதிர்த்து திமுக ஆட்சிக்கு வந்தது இந்த அம்மையாருக்கு மந்திரிப்பதையும் கொடுக்கப்பட்டது ஆனால் முதலியார் சமூகம் திமுகவில் கிட்டத்தட்ட 70 சதவீத பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில், அதற்கு எதிராக பெரியார் ஆதரவோடு கலைஞர் முதல்வராகிறார் கட்சித் தலைவராகிறார் அந்தப் பணக்கார சமூகம் கலைஞர் ஏத்துக்க முடியல, 


சபாநாயகராக இருந்த ராஜாராம் நெடுஞ்செழியன் உள்ளிட்ட சிலர்,
பொட்டுக்கட்டும் சமூகத்தில் இருந்து வந்த கருணாநிதியை நாம் எப்படி தலைவராக ஏற்றுக் கொள்வது?”
என்று தங்களுக்குள் பேசியதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் கலைஞருக்குத் தெரிந்து போகக் கூடாது என்பதால்,
ராஜாஜி மரணத்திற்குப் பிறகு மயிலாப்பூரில் கூட்டம் நடத்தாமல்,
பாண்டிச்சேரியில் ரகசியமாக சந்தித்து பேசினார்கள்.

அதே காலகட்டத்தில்,
இந்தம்மா சத்தியவாணி முத்து ஏன் அதிமுகவுக்கு சென்றார் என்பது பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை.
அவர் மீது இருந்த ஊழல் வழக்குகளின் காரணமாகத்தான் அவர் அந்த முடிவை எடுத்தார் என்ற கருத்தும் உள்ளது.

ஒருமுறை சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர்
மூன்றாம் தர பேச்சுஎன்று கலைஞரை அவமதித்தபோது,
அதற்கு கலைஞர்,
நான் அதுவும் இல்லைநான்காம் தர மாணவன்
என்று பதிலளித்தார்.

அதன்பிறகு அவர்,
தன் ஆட்சிக் காலத்தில் தலித்துகளுக்காக செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.

உதாரணமாக,
கல்கத்தாவில் மனிதனை உட்கார வைத்து மனிதன் இழுக்கும் கைரிச்சா இருந்ததைப் போல,
தமிழ்நாட்டிலும் இருந்த அந்த இழிவான நடைமுறையை கலைஞர் ஒழித்து,
அவர்களுக்கு சைக்கிள் ரிச்சாவை வழங்கினார்.

ஆனால் எம்ஜிஆர்,
ரெயின் கோட் வாங்கிக் கொடுத்தார்;
அதற்கு படம் போட்டு விளம்பரம் செய்தார்.

இருப்பினும்,
தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சக்கிலிய மக்கள் கூட
எங்க ஆளுஎன்று சொல்லி
எம்ஜிஆருக்கே வாக்களித்தார்கள்.

இதற்கு முக்கிய காரணம்,
அந்த காலத்தில் இருந்த பார்ப்பன ஆதிக்கம் கொண்ட பத்திரிகைகளே.

இன்றைக்கு நமக்கு கைப்பேசியில் உலக அரசியல் தெரிகிறது.
ஆனால் 1970-களில்
நான்கு தினசரி செய்தித்தாள்களே இருந்தன.

அவற்றில் ஒன்றை விலக்கினால்,
தினத்தந்தி தவிர மற்ற எல்லா பத்திரிகைகளும்
கலைஞருக்கு எதிரான செய்திகளையே தொடர்ந்து எழுதின.

அந்த காலத்தில்,
எத்தனை தலித்துகள் கல்வி பெற்றிருந்தார்கள்?
அவர்கள் தங்கள் தலைவர்கள் சொன்னதைத்தான் நம்பினார்கள்.

அதே தவறை ஒருமுறை திருமாவளவனும் செய்தார்.
இனி அவர் அப்படிச் செய்ய மாட்டார் என்று நான் நம்புகிறேன்.

இப்போது,
கலைஞர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக என்ன செய்தார் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்

(இதற்குப் பிறகு நீங்கள் கொடுத்த பட்டியல்
இயக்குநரகங்கள், இடஒதுக்கீடு, வீடமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, நல வாரியங்கள், அம்பேத்கர் தொடர்பான திட்டங்கள்,
2006–11
ல் செலவிடப்பட்ட 12,400 கோடி ரூபாய்,
2010–11
பட்ஜெட்டில் 19.7% ஒதுக்கீடு
இவை அனைத்தையும் அதேபடி வைத்துக்கொள்ளலாம்.
அவை ஏற்கனவே ஆவணத் தன்மையுடன் தெளிவாக உள்ளன.)

திராவிடத்தையும், திமுகவையும், கலைஞரையும் விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும்,
இதற்கு இணையாக
தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக
உழைத்த இயக்கத்தையோ,
திட்டங்களை வகுத்த தலைவரையோ,
அவற்றை நடைமுறைப்படுத்திய ஆட்சியையோ
இந்தியாவின் எந்த மாநிலத்திலாவது காட்ட முடியுமா?

அப்படி காட்ட முடிந்தால்,
நாமும் நம் அறிவை வளர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

 

#கலைஞரும் - #காமராஜரும்

காமராஜ் என்ற பெயரை காமராஜர் என்றே இனி குறிப்பிட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தவர் கலைஞர்.

காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர்.

சென்னை மெரினா கடற்கரைச் சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயர் வைத்தவர் கலைஞர்.

சென்னை கிண்டியில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியவர் கலைஞர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் விமான நிலையம் என்று பெயர் வைக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் திரு. வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றித் தந்தவர் கலைஞர்.

காமராஜர் பிறந்த வீட்டை நினைவில்லமாக மாற்றியவர் கலைஞர்.

கன்னியாகுமரியில் காமராஜருக்கு நினைவுமண்டபம் எழுப்பியவர் கலைஞர்.

நெருக்கடி நிலையின் போது காமராஜரை கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கூறியபோது,
என் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை; காமராஜரை கைது செய்ய முடியாது. வேண்டுமானால் என் ஆட்சியை கலைத்து உங்கள் ராணுவம் அதை செய்யட்டும்
என்று துணிச்சலுடன் கூறியவர் கலைஞர்.

தன் மகன் ஸ்டாலினின் திருமணத்திற்கு மணமேடைக்கே காரில் காமராஜரை அழைத்து வந்து, அவரின் தலைமையில் திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர்.

காமராஜர் மறைந்த அன்று, கொட்டும் மழையில் இரவோடு இரவாக, தன்னுடைய நேரடி மேற்பார்வையில் அவருடைய அடக்கத்திற்கான இடத்தைத் தேர்வு செய்து தயார் செய்தவர் கலைஞர்.

தமிழகத்திலேயே முதன்முறையாக காமராஜருக்கு சிலை நிறுவியது திமுக. சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியபோது, பெரியார் பாலம் அருகே காமராஜர் சிலை அமைக்கப்பட்டு, அதை நேருவை கொண்டு திறந்து வைத்தது திமுக.

காமராஜர் நினைவுமண்டபத்தில் அணையா விளக்கு இல்லை என்ற குறை இருந்து வந்தது. அதை உணர்ந்து, 25.07.2010 அன்று காமராஜர்

நினைவுமண்டபத்தில் அணையா விளக்கை ஏற்றி வைத்தவர் கலைஞர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு, காமராஜரின் தாயார் பெயர் நிலைத்திருக்கும்வகையில் அன்னை சிவகாமி அம்மையார் வளாகம் என்று பெயர் சூட்டியவர் தலைவர் கலைஞர்.

திமுக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு சிவகாமி அம்மையார் பெயரைச் சூட்டி, அந்தத் திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார் கலைஞர்.

பெருந்தலைவர் காமராஜரின் படத்திற்குக் கீழே எழுதுவதற்கு பொருத்தமான வாசகம் கேட்டபோது,
உழைப்பே உயர்வு தரும்
என்று அந்தக் கணமே எழுதிக் கொடுத்து, கர்மயோகி காமராஜருக்கு பெருமை சேர்த்தவர் கலைஞர்.

நெல்லை மாவட்டம் இராதாபுரம் பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு, அதற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.

காமராஜர் பெயரில் தபால் தலை வெளியிட கலைஞர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததன் பேரில், மத்திய அரசு தபால் தலை வெளியிட்டது.

காமராஜர் பெயரில் அரசு விருது ஒன்றை நிறுவி, பெருந்தலைவர் காமராசர் விருது சமூகப் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

கண்ட கண்ட வாட்ஸ்அப் பதிவுகளை பரப்பும் இளைஞர்கள், இந்த வரலாற்று நிகழ்வுகளை பலருக்குத் தெரியச் செய்வதே பெருந்தலைவர் காமராஜருக்கான உண்மையான புகழ்வணக்கம்.

 

#கல்வி/ Education:

பெண்களை படிக்க ஊக்குவிக்க, 8ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 5,000 வழங்கியதுபிறகு அதனை 10ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 10,000 என்று உயர்த்தி வழங்கியது கலைஞர்.


பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு வழங்கியது.



ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்


MGR மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்


இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர்அம்பேத்கார் சட்ட கல்லூரி மற்றும் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்


 பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்



பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்


உலக தமிழர்களுக்கு உதவதமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர்

முதன்முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ   கல்லூரியில் இட ஒதுக்கீடு அளித்தது கலைஞர்

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15%   இடஒதுக்கீடு வழங்கியது.

உருது அக்காடமி தந்தது கலைஞர்

பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்தது கலைஞர்

அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சிகோவைமதுரை,   திருநெல்வேலிதிருவாரூரில் உருவாக்கியது கலைஞர்

முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000   பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர்

சமச்சீர் கல்வி தந்தது கலைஞர்

மாவட்டமாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர்

பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்

இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்
காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர்

பள்ளிகள்கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிக்க விடுதிகளை நிறுவியவர் கலைஞர்.

உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்

உலகதரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முன்மாதிரி பள்ளி வேண்டும்   என்ற திட்டமிட்டுமுதலில் புதுக்கோட்டையில் ஆண்களுக்கு ஒரு பள்ளி    பெண்களுக்கு சென்னை சைதாப்பேட்டையில் ஒரு பள்ளி என்று ஆரம்பித்தவர் கலைஞர்.


#மொழி/ Language

முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்


திருக்குறளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வள்ளுவர் கோட்டம்குமரி முனையில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை நிறுவியது கலைஞர்.




#பாதுகாப்பு/ Police

இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்

மகளிர் காவலர்களை நியமித்தவர்.

சிறைச்சாலை சீர்திருத்தம் செய்தவர்.

புழல் சிறைச்சாலை கட்டியவர்.


#சாலைவசதி/ Road and Rail

1000 நபர்கள் கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்

கிராமங்கள் மற்றும் நகரங்களின் வீதிகள் தோறும் கான்கிரீட் சாலை அமைத்தவர் கலைஞர்

மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி 3,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை அமைய காரணமாக இருந்தவர் கலைஞர்

சென்னை - மதுரை மின்மய இரட்டை வழி ரயில்பாதை அமைய காரணமாக இருந்தவர் கலைஞர்.

#போக்குவரத்து/ Transport:

போக்குவரத்து துறையை உருவாக்கியவர் கலைஞர்

பேருந்துகளை நாட்டு உடமயமாக்கியவர் கலைஞர்

கிராமங்களில் சிறிய பேருந்து சேவையை கொண்டுவந்தது கலைஞர்

போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கிய கலைஞர்

பேருந்து கட்டணத்தை ஏற்றாமல் 13,000 புதிய பேருந்துகள் வழங்கியவர் கலைஞர்


#மின்சாரம்/ Electricity:

மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

நெய்வேலி இரண்டாம் அலகு அனல் மின்நிலையம் கொண்டுவந்தது கலைஞர்

தூத்துக்குடி அனல்மின் நிலையம்.



எண்ணூர் அனல்மின் நிலையம் 3, 4வது அலகு




காடம்பாறை நீர் மின் நிலையம்.

காற்றாலை மின்சாரம் ஆரம்பித்து வைத்தவர் கலைஞர்.

1500 கோடி ரூபாயில் 350 துணை மின்நிலையம் உருவாக்கியது கலைஞர்

தொழிற்சாலைகளுக்கு தேவையான மின் வழித்தடம்.

#தொழிற்சாலைமற்றும்வேலைவாய்ப்பு/ Industries and Job Opportunities:

SIPCOT உருவாக்கியது கலைஞர்

SIDCO உருவாக்கியது கலைஞர்


சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்



பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்

பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

தொழிற்சாலைகளுக்கு வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்

முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர் 

 Automobile companies, Automobile testing centres உருவாக்கியது.

Electronic manufacturing companies, Saint Gobain கண்ணாடி தொழிற்சாலைகள் கொண்டு வந்தவர்

டைடல் பார்க் சென்னையில் அமைத்தது கலைஞர்

புதிய டைடல் பார்க் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில்யில் உருவாக்கியது கலைஞர்









புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புது நிறுவனங்களை ஈர்த்து 41,090 கோடி முதலீடை கொண்டு வந்தவர் கலைஞர்.

37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியது கலைஞர்

4. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தது கலைஞர் .

13,000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்தது கலைஞர்

முதல் முறையாக 10,000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தது கலைஞர்

TNPSC உருவாக்கிஅண்ணன்தம்பிமாமன்மச்சான்களை வேலையில் அமர்த்தியதை தடுத்துமுறையாக எல்லோருக்கும் பணி கிடைக்க வழி செய்தவர் கலைஞர்.

#அரசுகட்டிடங்கள்/ Government Buildings:

மதுரை நீதிமன்றம் உட்பட 119 புதிய நீதிமன்றம் உருவாக்கியது கலைஞர்

மாலை நேரம்மற்றும் விடுமுறை தின நீதிமன்றம் உருவாக்கியவர் கலைஞர்

அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தது கலைஞர்

அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து உருவாக்கியது கலைஞர்

420 பேரூராட்சிகள் உருவாக்கி "அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்தந்தது கலைஞர்

ஆசியவையே திரும்பி பார்க்க வைத்த புதிய சட்டமன்றம் நிறுவியது கலைஞர்

ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தது கலைஞர்

சென்னையில் 20 மேம்பாலங்கள் மற்றும் 200 அடி வெளிவட்ட சாலை உருவாக்கியது கலைஞர்

21 மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்தாலுக்கா மற்றும் யூனியன் கட்டிடங்களை கொடுத்தவர் கலைஞர்

ஆசியாவிலே மிக பெரிய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அமைத்தது கலைஞர்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்கள் உட்பட பல புதிய பேருந்து நிலையங்களை நிறுவியவர் கலைஞர்.

















1962  சட்டமன்றத் தேர்தல்

https://tamil.oneindia.com/news/chennai/karunanidhis-election-campaign-345517.html 

அறிஞர் அண்ணா, அன்பழகன், .வி.பி. ஆசைத்தம்பி உள்ளிட்ட 14 பேர் 1962 சட்டமன்றத் தேர்தலில், காமராசர் நிறுத்திய பணக்கார வேட்பாளர்கள் மூலம்பணம், வாக்குறுதிகள், சத்தியங்கள் ஆகியவற்றின் பலத்தால்தோற்கடிக்கப்பட்டனர். ஒருவரின் தலை மட்டும் தப்பியது. அது நம்ம தலையவர். ஆனால் அவர் தனியாகப் போகவில்லை; அவருடன் மேலும் 49 பேர். அதாவது, 15 பேர் இருந்த திமுக, இப்போது 50 பேராக உயர்ந்தது.

தான் சந்தித்த இரண்டாவது பொதுத் தேர்தலிலேயே திமுக எதிர்க்கட்சியாக உயர்ந்தது.

தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி, இந்தப் பகுதியில் போட்டியிடாமல் திருச்சிக்கு அப்பால் உள்ள குளித்தலையில் போட்டியிட்டதற்குக் காரணம், “இங்கு நின்றால் தோற்று விடுவோம்என்ற பயமே என கூறப்பட்டது.
இந்தத் தஞ்சை மண்டலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால், நான் அரசியலை விட்டே ஒதுங்கிக் கொள்கிறேன்என்று பரிசுத்த நாடார் சவால் விடுத்தார்.

இந்தச் சவால் மறுநாள் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வெளிவந்தது. அதை வாசித்த கலைஞர் எந்த விதமான எதிர்வினையும் காட்டாமல் அமைதி காத்தார்.

காலங்கள் உருண்டோடின. மீண்டும் 1962 சட்டமன்றப் பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. சென்ற முறை போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் அனைவரும் அதே தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வேண்டும் என அண்ணா பட்டியல் தயாரித்தார். இதை அறிந்த கலைஞர், அண்ணாவிடம் சென்று,

நான் இந்த முறை குளித்தலையில் போட்டியிடவில்லை; தஞ்சாவூரில் போட்டியிடப் போகிறேன்என்று கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அண்ணா,
தஞ்சையில் பரிசுத்த நாடார் அல்லவா போட்டியிடுகிறார்? அவரை எதிர்த்து உன்னால் வெற்றி பெற முடியுமா?” என்று கேட்டார்.

அதற்கு கலைஞர்,
இல்லை அண்ணா. நான் தீர்க்க வேண்டிய ஒரு கணக்கு இருக்கிறது. அதற்குச் சரியான களம்தான் இந்தத் தஞ்சை களம். இந்தத் தஞ்சை மண்டலத்தில் இந்த கருணாநிதி எத்தகையவன் என்பதை நிரூபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம் இது. எனவே தஞ்சையை எனக்கு தாருங்கள்என்று வேண்டி, விரும்பி தஞ்சாவூரில் போட்டியிட்டார்.

தேர்தல் நாள் நெருங்க நெருங்க கலைஞர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆசைத்தம்பி, . கோவிந்தசாமி, விருத்தாச்சலம் செல்வராஜ், மா.. சாரதி, களம்பூர் அண்ணாமலை, நடிகர் ஆனந்தன், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, பி. எஸ். சந்தானம், இசப்பன் உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள் அனைவரும் கலைஞருக்காகப் பிரச்சாரம் செய்து சென்றனர்.

இந்தத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் கருணாநிதி 32,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடார், 1,928 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதியிடம் தோல்வியைத் தழுவினார்.

 


https://www.facebook.com/share/r/1JNUXe3p7z/

வள்ளுவர் கோட்டம் 

எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதால் திறப்பதற்கு சில நாட்களே இருந்த நேரத்தில் ஆட்சி மாற்றம்எம் ஜி ஆர் ஆட்சிக்கு வந்து அதை திறந்து வைத்தார் அப்போது பேசிய அறிஞர்கள் எம் ஜி ஆர்  புகழ்ந்து பேசிய போது மரபுக் கவிஞர் திராவிட பேராண்மை சுரதா மட்டும் தான்  எதிர்த்துப் பேசினார்கூட்டத்தினர் திகைத்துப் போயினர்,



கலைஞர் கருணாநிதி - சி.பா.ஆதித்தனார்

இருவரும் சமகால அரசியல்வாதிகள் சமகால பத்திரிக்கையாளர்தான்

கலைஞர் கூடுதலாக வசனகர்த்தா தயாரிப்பாளர் எழுத்தாளர் என பயணித்தபோதும் ஆதித்தனார் பொருளாதார உச்சத்தை தொட்டது தந்தி பேப்பரால் என்பதை ஒப்புக்கொள்ளும்

துக்ளக் அறிவாளிகள் கலைஞர் குடும்பத்தார் சன்டிவி தொடங்கியதால்  பொருளாதார உச்சம் தொட்டனர் என்பதை ஏற்க மறுப்பார்கள் காரணம்?

கலைஞருடனான ஆரிய திராவிட பகை

டிவி தொடங்க பணம் ஏதுன்னு அந்தகால தயாரிப்பாளரான கலைஞரை  பார்த்து கேட்கிற பசங்களுக்கு

சன் டிவி தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில்தான்

அந்தகால வெறும் காமெடி நடிகரான சோ கோல்டன் ஈகிள் டிவி என ஒரு   சாட்டிலைட் டிவியை தொடங்கி மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை   தேர்ந்தெடுத்து சிறப்பாக நடத்த தெரியாமல் தோல்வியுற்று கைமாறி   கைமாறி இன்று விஜய் டிவி என்ற பெயருடன் ஸ்டார் குரூப்பிடம் உள்ளது   என்பதை நினைவு கூறுகிறேன்

கலைஞர் குடும்பத்தார் சன்டிவியை சிறப்பாக நடத்தியதால் மேற்கொண்டு   சூர்யா டிவி ஜெமினி டிவி உதயா டிவி சுட்டி டிவி கலைஞர் டிவி என்று   பிரம்மாண்டமாக வளர்ந்தனர் அதே

காலகட்டத்தில் 1990 ல் ஸ்டார் டிவி என்ற ஒரே ஒரு சேனலை தொடங்கிய   ருபேட் முர்ட்டாச் ஸ்டார் பிளஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என படிப்படியாக வளந்து இன்று 60 சேனல் வைத்துள்ளனர்

சன் ஸ்டார் இரண்டும் ஆரம்பித்த காலகட்டம் தூர்தர்சனில் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்க்க தவமாய் காத்துக்கிடந்த காலகட்டம்

வாரத்தில் ஐந்து பாடலுக்கு ஏங்கி கிடந்த மக்களுக்கு தினமும் ஐம்பது   பாடல்களை கொடுத்து அவர்களின் அன்பையும் ஆதரவையும் சன் டிவியின்   தமிழ்மாலை அள்ளிக்கொண்ட காலம் அது

அதாவது பெட்டிக்கடை மட்டுமே இருந்த மிகப்பெரிய ஊரில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் வந்தது போல இருந்தது அந்த காலகட்டம் அது   அஞ்சலிதேவியை பார்த்து புளித்து போன சினிமாவில் பத்மினியும்   சரோஜாதேவியும் கே..விஜயாவும் திடீரென வந்து கண்களை   குளிர்வித்தது போல அமைந்தது சி.டி போய் பென்டிரைவ் வந்தது   போல பெரிய அளவுக்கு போட்டிகள் வரும்முன்னே மளமளவென   வளர்ந்து ஆலமரமாகி போனது சன் குழுமம்

பிறகென்ன வருமானம் குறைவாகவா வரும் வாங்கி வைக்க    இடமின்றி வந்தது விளம்பரதாரர் வருமானம் அத்தனைக்கும் வரி   கட்டி முறைப்படி கணக்கு வைத்துள்ளனர் அடிமைகளின் சங்கிகளின் கூற்றுப்படி அது ஊழல் பணமென்றால் ஏன் கடைசி வரை கலைஞர்  குடும்பத்தை ஜெயலலிதாவால் ஒன்றும் பன்ன முடியவில்லை

இன்னபிற திமுக எதிரிகளால் ஒன்றும் பன்ன முடியல?

அந்தக்கால சினிமா ஜாம்பவான் கலைஞர் டிவி தொடங்கினால்   ஊழல் பணம்னு சொல்லுற நீங்கள் ஸ்டார் டிவி ஓனரை   ஊழல்வாதின்னு சொல்ல முடியுமா?

சரிப்பா எல்லா பணமும் கலைஞர் குடும்பத்திற்கு டிவி வருமானம்   மூலமாகவே வந்ததுன்னு ஒத்துக்கிறேன் அந்த டிவி தொடங்க   கலைஞருக்கு பணம் எப்படி வந்ததுன்னு ஒரு சங்கியும் ஒரு   அடிமையும் கேட்பது என் காதில் விழுகிறது

சங்கியே கேள் அடிமையே கேள்

ஜெயலலிதாவால் ஜெயா டிவி தொடங்க முடியும்போது

ராமதாசால் மக்கள் டிவி தொடங்க முடியும்போது

எடப்பாடியால் ஒரே மாதத்தில் ஜெ நியூஸ்

தொடங்க முடியும்போது

விஜயகாந்தால் கேப்டன் டிவி தொடங்க முடியும்போது

கல்யாண சுந்தரத்தால் பாலிமர் டிவி தொடங்க முடியும்போது

பச்சமுத்துவால் புதியதலைமுறை டிவி தொடங்க முடியும்போது

தேவநாதனால் வின் டிவி தொடங்க முடியும்போது

வசந்தகுமாரால் வசந்த் டிவி தொடங்க முடியும்போது

தங்கபாலுவால் மெகா டிவி தொடங்க முடியும் போது

வைகோவால் மதிமுகம் டிவி தொடங்க முடியும்போது

1960 களிலேயே தமிழ் சினிமா தயாரிப்பாளராகவும் கலைஞர்  எழுதினால்தான் நான் நடிப்பேன்னு எம்ஜிஆரும் சிவாஜியும்  அடம்பிடித்த காஸ்ட்லி வசனகர்த்தாவாகவும் இருந்த கலைஞர்  குடும்பம் டிவி தொடங்க முடியாதா?

ஆரிய திராவிட போரின் உச்சம்தான் குற்றவாளி ஜெயலலிதாவை போல்ட்  லேடி என கொஞ்சுவதும் ஊழல்வாதி என கலைஞரை ஏசுவதும் இதை மனசாட்சியோடும் அறிவோடும் புரிந்துகொண்டால் மட்டும் புரியும்  

 மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப்  படுத்தினால் ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும்.

நில உச்சவரம்பு சட்டத்தை முறையாக செயல்படுத்தி 2 முதல் 5 ஏக்கர் நில உடமையாளர்களாக, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை உருவாக்கியவர் கலைஞர்.



இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது   கலைஞர்



விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக பயானாளிகளிடம்   விற்பனை செய்ய ஏதுவாகஉழவர் சந்தை திட்டம் தந்தது  கலைஞர்


விவசாய கடன் ரூ.7,000 கோடி தள்ளுபடி செய்தது கலைஞர்


3,000த்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13,000த்திற்கும் மேற்பட்ட Sub Health Centres உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர்மேலும்  மாவட்டங்களையும்தாலுக்காக்களையும் பிரித்ததால் பல மாவட்ட  தலைமை மருத்துவமனைகள்தாலுக்கா அரசு மருத்துவமனைகள்  உருவாக காரணமாக இருந்தவர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி என்று சட்டம்  இயற்றி,   கன்னியாகுமரிதூத்துக்குடிசிவகங்கைபுதுக்கோட்டை,  திருச்சிதிருவாரூர்விழுப்புரம்திருவண்ணாமலைதர்மபுரிவேலூர் மருத்துவ கல்லூரிகளை   அமைத்தது கலைஞர்மருத்துவ  கல்லூரிகளில் பல துறைகள் உருவாக   காரணமாக இருந்தவர்   கலைஞர்.


கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலமாக 2 லட்சம் மதிப்புள்ள இலவச  மருத்துவ காப்பீடு திட்டம் தந்தது கலைஞர்

புரட்சித் தலைவர் மற்றும் கலைஞர் இருவருமே மூன்று திருமணங்கள்   செய்தவர்கள் தான்.

கலைஞர் யாருடைய மனைவியையும் மணம் புரியவில்லைபுரட்சித்   தலைவரோ அதிலும் புரட்சி செய்தார்.

ஆனால்கலைஞரின் திருமணங்கள் மட்டுமேவிமர்சிக்கப்படுகின்றன ஏன்?

பெருமுதற்காரணம் தமிழ் நாட்டு அரசியல் அதிகார மையத்தில்  இருந்து   பார்ப்பனர்களையும் பார்ப்பனீயத்தையும் முற்றாக  தள்ளி வைக்க கலைஞர் போராடினார்புரட்சித் தலைவரோ  நேரெதிராக பார்பனர்களையும்   பார்ப்பனீயத்தையும் அரவணைத்து பெரியாரியத்துக்கு கொள்ளி வைக்க   முயன்றார்.

அடுத்த காரணம் கலைஞரைப்போல புரட்சித் தலைவருக்கு   வாரிசுகள் இல்லை.

கலைஞர் இறந்த பின்னும் அரசியலில் அவரை நிலை நிறுத்த  ஸ்டாலின் கனிமொழி மற்றும் உதயநிதி இருக்கிறார்கள்.

எம் ஜி ஆருக்கு ஊரறிய மூன்று மனைவிகள் இருந்தனர்.. முதலில்   தங்கமணியை மணந்தார்பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற   தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்ததுஅதன் பின் தங்கமணியும்   உடல்நலக் குறைவினால் இறந்தார்.

இரண்டாவது திருமணம்

அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர்இருவருக்கும்    குழந்தைகள் இல்லைபின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக   இறந்தாக கருதப்பட்டார் அல்லது தள்ளி வைக்கப் பட்டார்.

மூன்றாவது திருமணம் அல்லது இணையம்:-

1948 மோகினி திரைப்படத்தில் தான் எம்ஜிஆரும் விஎன்ஜானகியும்   தோன்றும் காட்சி இருந்தது.


எம்.ஜி.ஆர் இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர்  தயாரித்த  ராஜ முக்தி படத்தில் நடித்தார்அப்படத்தில் வைக்கம்  நாராயணி ஜானகி   என்னும் விஎன்.ஜானகி கதாநாயகியாகநடித்தார்.

அவர் எம்.ஜி.ஆரின் முதல் மனைவியான தங்கமணி சாயலில்   இருந்தார்இதனால் ஜானகியின் மீது எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது   என்றொரு கம்பி கட்டும் கதையை புரட்சித் தலைவர் கூறினார்.

அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது தொடங்கி  தொடர்ந்து இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத்  தலைவனாக   எம்.ஜி.ஆரும் கதைத்தலைவியாக ஜானகியும்  நடிக்கும்பொழுது காதலாக   மாறியதுஅப்போது ஜானகி அவர்கள்  பாபநாசம் சிவனின் சகோதரர்   கணபதி பட் அவர்களின் இல்லத்தரசி.

அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆரால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதல்  கடிதங்கள் ஜானகியின் கணவரான கணபதி பட் கைகளில்  கிடைத்தன.

கணவர் கணபதி பட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை  முற்றியது.   ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது  வீட்டைவிட்டு வெளியேறி,   அப்பொழுது லாயிட்ஸ் சாலையில்  (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலைகுடியிருந்த எம்.ஜி.ஆரின்  வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார்.

எம்.ஜி.ஆர் அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு  வீட்டில்   குடிவைத்தார்.

கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில்   எம்.ஜி.ஆரும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர்ஜானகிக்கு   மகனான அப்பு என்ற சுரேந்திரனை எம்.ஜி.ஆர் தன் வளர்ப்பு  மகனாக   ஏற்றுக்கொண்டார்.

இத்திருமணத்தை எம்.ஜி.ஆரின் அண்ணனும் நடிகருமான எம்.ஜி.  சக்ரபாணியும்குடும்ப நண்பரும் நடிகருமான சிடிஇராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர்.

எனினும் எம்.ஜி.ஆரின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு   இருந்ததால் தம் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே   எம்.ஜி.ஆரும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together).

12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி   மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் எம்.ஜி.ஆரும் ஜானகியும் சட்டப்படி தம்   திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். (கணபதி பட் உயிரோடு இருந்தார்ஆக்டிவாக கோலிவுட்டில் நடித்துக்   கொண்டிருந்தார்.)

எம்ஜியார் அவர்களும் முன்னாள் முதலமைச்சர் ஜானகி அவர்களும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமாவரம்  தோட்டத்திற்குச் சென்று   குடியேறினர்

இன்றைய மதிப்பில் ரூ 1,120 கோடி மதிப்புள்ள அன்றைய 40 ஏக்கர் வளசரவாக்கம் தமிழ்நாடு அரசின் நிலத்தை கேரள நடிகைகள் அம்பிகா ராதாவுக்கு எம்ஜிஆர் தானமாக வழங்கிய போது எடுக்கப்பட்ட படம்!.
இவங்க ரெண்டு பேரும் அப்படி
என்னதான் நல்லது பண்ணாங்க தமிழ்நாட்டுக்கு?

தெரிஞ்சவங்க சொல்லுங்க.

மற்றபடி எம் ஜி ஆருக்கும் நடிகைகளான ஜெயலலிதாமஞ்சுளாலதாவிற்கும் அம்பிகா ராதாக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை

எம்ஜிஆர் இறந்த பின்பு வி என் ஜானகி மகனுக்கும் எம் ஜி சக்கரபாணி குடும்பத்தினருக்கும் நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டு, ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு அந்த கதை எல்லாம் ஊர் அறியும்,


ஆனால் கலைஞர் குடும்பத்தில் அப்படி இல்லை எல்லோரும் மண்ணள்ளி போட்டார்கள் ஐஏஎஸ் அமுதாவும் அள்ளிப் போட்டார் ஆனால் கொள்கை ஆலமரம் அவருக்குப் பிறகும் அதைவிட மேலாக வேர் விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது கலைஞர் பெறாத வெற்றி எல்லாம் ஸ்டாலின் பெற்றுக் கொண்டிருக்கிறார் வெல்க திராவிடம் ,


இந்தியா டுடே இதழில் ஆசிரியராக இருந்த வாஸந்தி,
தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால் ஆடல்பாடல் கலைகள் அழிந்து விட்டன என்ற கருத்துடன் ஒரு கட்டுரை எழுதினார்.

அந்தக் கட்டுரையைப் படித்த திமுக தலைவர் கலைஞர்,
உடனே வாஸந்தியை அழைத்து,
தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல மிகச் சிறப்பாக இருக்கிறதுஎன்று கூறினார்.

இதைக் கேட்ட வாஸந்தி அதிர்ச்சி அடைந்தார்.

அவர், தனக்குத் தெரிந்த திமுக தலைவர்களிடம் எல்லாம்,
கலைஞர் இப்படிப் பேசி விட்டார்என்று புகார் கூறினார்.

மூத்த தலைவர்கள், வாஸந்தியின் வருத்தத்தை கலைஞரிடம் தெரிவித்தபோது,
கலைஞர் அதைக் கவனிக்காமல்,
அப்படியென்றால் தேவதாசி முறை வேண்டுமாம்.
ஆனால் வேறு குடும்பத்து பெண்கள் தேவதாசியாக இருக்க வேண்டுமாம்.
இவங்க வீட்டுப் பெண்கள் வேண்டாமாம்என்று கூறிவிட்டார்.

🔹 தேவதாசி முறைஒரு வரலாற்றுப் பின்னணி

முன்பு தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்து,
அதைத் தடை செய்தால் தெய்வ அபச்சாரம் ஆகிவிடும்என்று
சத்தியமூர்த்தி ஐயர் கூறினார்.

அதற்கு முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்,
அப்படியானால், உங்கள் பிராமண குலப் பெண்களுக்குப்
பொட்டுக்கட்டி தேவதாசிகளாக வைத்துக் கொள்ளுங்கள்என்று பதிலளித்தார்.

அந்தக் கடும் பதிலால்,
சத்தியமூர்த்தி ஐயர் மௌனமாகி விட்டார்.

அதே பாணியில்,
வரலாற்றை மறக்காத கலைஞர்,
வாஸந்திக்கும் அறிவுரை கூறினார்.

🔹 வாஸந்தியின் மாற்றம்

கலைஞரின் விமர்சனத்தால் மனம் பாதிக்கப்பட்ட வாஸந்தி,
சில நாட்களிலேயே
தேவதாசி முறையின் கொடுமைகள் பற்றி ஒரு சிறுகதை எழுதினார்.

அதைப் படித்த கலைஞர்,
வாஸந்தியை அழைத்து பாராட்டினார்.

பின்னர்,
தேவதாசி முறையின் கொடுமைகளை மையமாக வைத்து
விட்டு விடுதலையாகி என்ற புதினத்தையும் வாஸந்தி எழுதியார்.

🔹 நல்லம நாயுடுஒரு நேர்மையான அதிகாரி

நல்லம நாயுடு,
1961
ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர்.

  • 1983 – சிறந்த சேவைக்கான அண்ணா விருது (எம்ஜிஆர் வழங்கியது)
  • 1989 – குடியரசுத் தலைவர் மதிப்புமிக்க சேவை விருது
    (
    அன்றைய ஆளுநர் அலெக்சாண்டர் வழங்கினார்)
  • 1992 – சிறப்பு ஊழல் தடுப்பு விருது (தங்கப் பதக்கம்)
    இதற்கு பரிந்துரை செய்தவர் ஜெயலலிதா
  • 1996 – சுதந்திர தின சிறந்த சேவை விருது
  • பதவி உயர்வும் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது

🔹 சொத்து குவிப்பு வழக்கு

ஜெயலலிதா மீது நடந்த சொத்து குவிப்பு வழக்கில்,
விசாரணை அதிகாரியாக இருந்தவர் நல்லம நாயுடு.

சிறையில் இருந்த ஜெயலலிதாவை விசாரிக்கச் சென்றபோது,
அவர் கோபமடைந்து,
நான் மட்டும்தானா ஊழல் செய்தேன்?
வேறு யாரும் செய்யவில்லையா?
ஏன் இவ்வளவு கடுமையாக விசாரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு நல்லம நாயுடு,
நீங்கள் மீண்டும் முதல்வராக வந்தால்,
அவர்கள்மீது வழக்கு தொடருங்கள்.
என்னை அதிகாரியாக நியமியுங்கள்.
இதேபோல் நேர்மையாக விசாரிப்பேன்என்று கூறினார்.

ஆனால்,
அவை நடக்காமல் போய்விட்டன.

ஜெயலலிதா வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்தது   மட்டுமில்லை எவ்வளவு தொல்லை கொடுத்து இருக்கிறார்   அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு வழக்கு விசாரணை செய்த   நல்லம்ம நாயுடுவுக்கு துக்கையாண்டி ஐபிஎஸ்   போன்றவர்களுக்கும் ஜெயலலிதாவுக்காக வாதாடிய   வழக்கறிஞர்கள் ஊதியம் மட்டுமே 200 கோடியை தாண்டும்   இந்தியாவில் மிகப்பெரும் வக்கீல்கள் எல்லாம் சாதாரண   நீதிமன்றங்களில் வந்து மணிக்கணக்கில் காத்திருந்து   வாதாடிய கதை நாடறியும்

இதே நல்லம நாயுடு தான் கலைஞருக்கு எதிராக மிசா   காலத்தில் தொடுக்கப்பட்ட #சர்க்காரியா_கமிஷனில் நான்கு   பேரில் ஒரு விசாரணை அதிகாரியாக ஆதாரங்களைத் தேடி   தமிழகமெங்கும் போயிருக்கிறார் இவருக்கு மேலதிகாரியாக   சுவர்ணா ஐபிஎஸ் டிஐஜி மற்றும் கணேசன் ஐபிஎஸ் கண்காணிப்பாளர் அனைவருமே நேர்மைக்கான விருது 

பெற்றவர்கள் ஒரு ,,,,,, கிடைக்க வில்லை என்று அவரே பதிவு   செய்கிறார் தீர்ப்பு என்னவோ ஆதாரங்கள் இல்லை என்று தான்   அன்றைக்கிருந்த பத்திரிகைகளும் பொய்யையே   பேசிக்கொண்டிருந்த எம்ஜிஆரும் மக்களை நம்ப வைத்தார்கள்

பதவி ஓய்வு பெரும் வயது வந்த பின்பும் இரண்டு முறை ஓர் ஆண்டுகளும் மூன்று முறை ஆறு மாதங்களும் பதவி நீட்டிக்கப்பட்டு   கடைசியில் உடல் நலத்தை காரணம் சொல்லி விருப்ப ஓய்வில்   தான் வெளியேறினார் இந்த நல்லம்ம நாயுடு


முல்லை பெரியார் அணை உயரத்தை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைப்பதற்கு மூலக் காரணமாக இருந்தது யார்

 1976 ம் ஆண்டு இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது , அணையில் 152 அடி நீர் தேங்கியிருந்தது.145 அடிக்கு மேல் இருக்கக்கூடிய சராசரி நீரின்   அழுத்தத்தை விட சற்று அதிகமாக இருந்ததால் , நீர் மட்டத்தை 145 அடியாக   குறைத்து அனைத்தும் பரிசோதித்து , அணையை   பலப்படுத்திய பின் மீண்டும் நீரை 152 அடிக்கு உயர்த்த தமிழக அரசு முடிவு  செய்ததுஇது நம் அரசின் அக்கரையைக் காட்டுகிறதுஇதற்கு கேரள அரசும் ஒத்துக் கொண்டது


ஆனால் மலையாள மனோரமா பத்திரிக்கையின் கருத்து பல்வேறு  பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைந்ததுஇரு மாநிலங்களும்  கலந்து கொண்ட   கூட்டத்தில் ( 25.11.1979) தேவையற்ற பயத்தைப் போக்கவும் மீண்டும் அணையை சோதித்து பார்ப்பதற்காகவும் நீர் மட்டம் 136அடியாக குறைக்கப்பட்டது. (17.12.1979 )

இவ்வளவு செய்தும் மத்தியிலிருந்து பல வல்லுநர்கள் வந்து அணையை   பார்வையிட்டு அணையின் பலத்தை பல முறை உறுதி செய்தும் , கேரள அரசு பிடிவாதம் காட்டுவதற்கு மூல காரணம் இடுக்கி அணை.

,இது பெரியாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணை. 1973 ல் பயன்பாட்டுக்கு வந்ததுஇந்த அணை நீர்மின்சாரம் தயாரிக்க மட்டுமே கட்டப்பட்டது . இதற்கு அதிகப்படியான நீர் தேவைமுல்லைப் பெரியாறு   அணையில் தமிழக அரசு தேக்கும் நீரை குறைத்தால் ,   மீதி நீர் இடுக்கி அணையில் சேர்ந்து நீர் மட்டம் அதிகரிக்கும்.

இத்தனைக்கும் மின்சாரம் தயாரிக்கும் போது வெளியேறும் நீர் எந்த  பயனும் இன்றி நேராக கடலை சென்றடைகிறது.

முல்லைப்பெரியாறு என்பது கேரள அரசியல் கட்சிகளுக்கு வாக்கு   வங்கி. பாகிஸ்தானுக்கு காஷ்மீர். கர்நாடகாவுக்கு காவிரி என்பது போல.


கடைசியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 136 அடி   நீர்மட்டம் பல கட்ட சட்டப்போராட்ங்களுக்குப் பின் 142 அடியாக   உயர்த்தப்பட்டது.

142 அடியாக உயர்த்தப்பட்டால் 82 மில்லியன் கன மீட்டர் நீர் உபரியாக கிடைக்கும்.152 என்றால் 126 மில்லியன் கன மீட்டர் நீர் கிடைக்கும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மறைக்கப்படும் உண்மைகள் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தாமஸ் கொரியன் என்பவர்தான் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அப்போது தமிழகத்தில்   நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர்

ராஜா முகமது மற்றும் அரங்கநாயகம்

152 அடி உயரமாக இருந்த அணையின் கொள்ளளவை   மெயின்டனன்ஸ் காரணம் காட்டி 136 அடியாக குறைத்தது எம்ஜிஆர் அப்போது நடந்த கூட்டத்தில் அனைவரும் மலையாளத்தில்   பேசிக்கொண்டனர் என்பது தான் ஹைலைட்

காவிரி மேலாண்மை வாரியம்  உண்மையில் கலைஞர் இங்கே மிகப்பெரிய   அளவில் அரசியல் பண்ணி ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வாங்கி அதை   காலாவதியா பண்ணது பிஜேபி நதிநீர் ஆணையம் நிரந்தரமாக இருந்தால்   நினைத்தபோது அவர்கள் நீரை திறந்து விட முடியும் ஆனால் இப்போது   இருக்கும் உச்ச நீதிமன்றத்தில் மிகத் தெளிவான தீர்ப்பை பெற்றிருந்த போதும் இவர்கள் அமைத்த கமிட்டி ஒன்றுக்கு லாயக்கு இல்லாத காவிரி   மேனேஜ்மென்ட் போர்டு அத்தாரிட்டி இது நினைச்சா தண்ணீர் திறந்து   விடும் அதிகாரம் இல்லை பல்லு புடுங்குன பாம்பு   இது தெரியாம நிறைய பேரு உளறி கிட்டு இருக்காங்க

முரசொலி மாறன் மல்லிகா என்ற பாப்பாத்திய கல்யாணம் பண்ணிட்டாரு கலைஞர் அப்பவே சில அட்வைஸ் கொடுத்தார் ஆனால் அவர் மகன் ரெண்டு பேரும் தயாநிதி மாறன் கலாநிதி மாறன் இரண்டு பாப்பாத்தி கர்நாடக பாப்பாத்திங்க இப்ப தெரியுதா கலைஞர் நேரடியா எதுக்கு முடியல பார்ப்பன பெண்களை வீட்டுக்குள் அனுப்பி அவன் பண்ண அயோக்கியத்தனத்துக்கு இவர் அசிங்கப்படுத்தினானுங்க


சென்னையை சீரழித்த பெருமை எம்ஜிஆரையே சாரும்.

இது எத்தனை பேருக்கு தெரியும்.

போரூர் ஏரி -உடையார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி


பொத்தேரி - பச்சமுத்து SRM கல்லூரி


கூவம் ஆறு - .சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி


பல்லாவரம் ஏரி - ஐசரி கணேஷ் வேல் பல்கலைக்கழகம்

 


ஜேப்பியார் - சத்தியபாமா பல்கலைக்கழகம்


நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது



தொகுப்பு  இரா கணேசன் 

Comments

Popular posts from this blog

Language, Communication, and the Story of Migration

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் ( The Hidden Chapters of Gandhi’s Journey )