கலைஞர் கருணாநிதி சந்தித்த தேர்தல்கள்

 


1952 இல் சென்னை சட்டமன்றத்தில் மொத்தம் 375 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 309 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது இரட்டை உறுப்பினர் முறை வழக்கில் இருந்ததால் 66 தொகுதிகள் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தன. இவற்றுள் 62 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவருக்கும் (SC) நான்கு தொகுதிகள் பழங்குடியினருக்கும் (ST) ஒதுக்கப்பட்டிருந்தன. இரட்டை உறுப்பினர் தொகுதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 332 ஆவது உட்பிரிவின்படி உருவாக்கப்பட்டன. உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 இல் விவரிக்கப் பட்டிருந்தது.


ராஜாஜி அமைத்த ஆட்சியில் மந்திரிகள் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை,  காமராசர் ஆட்சியில் ஒரு தலித்   அமைச்சராக்கினார் அவர்தான் கக்கன் 
அவங்க குடும்பம் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்கிறார்கள்  அவருக்கு காமராசர் மாதிரியே யோக்கிய பட்டம் கொடுத்துட்டாங்க அது பத்தி டாக்டர் kantharaj நிறைய பேசியிருக்கிறார் ,
அண்ணா அமைத்த மந்திரி சபை தான் தமிழ்நாட்டில் எல்லோருக்குமான பிரதிநிதித்துவம் ,



யாருமே பேச மாட்டேங்குற  முதல்ல திமுகவுல போட்டி போட்டு 57 ல ஜெயிச்சதுல 15 பேர்ல நாலு பேரு தலித்து,



 ஒரு இலட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளுக்கே இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தொகுதிகளில் இரு வேட்பாளர் பட்டியல்கள் இருந்தன - பொதுப் பட்டியல் மற்றும் தனிப் பட்டியல். வாக்காளர்கள் இரு பட்டியல்களுக்கும் தனித்தனியே இருமுறை வாக்களிக்க வேண்டும். வெற்றி பெற்ற இரு வேட்பாளர்கள் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.




  • தனி உறுப்பினர் - தனிப் பட்டியலில் உள்ள SC/ST வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர்
  • பொது உறுப்பினர் - தனி உறுப்பினரைத் தவிர்த்த ஏனைய வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர் இவர் பொதுப் பட்டியலிலும் இருக்கலாம், தனிப் பட்டியலிலும் இருக்கலாம்

இம்முறையினால் சில சிக்கல்கள் உண்டாகின. சில தொகுதிகளில் எ.கா. 1957 தேர்தலில் கோவை -2 தொகுதி இரு உறுப்பினர்களுமே தனிப் பட்டியலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சிக்கல்களால் 1961 இல் இரட்டை உறுப்பினர் முறை நீக்கப்பட்டு தற்போதுள்ள தனித்தொகுதி முறை அமல்படுத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்து பின்வருமாறு உறுப்பினர்கள் தெர்ந்தெடுக்கப்பட்டனர்:முழுமையான எண்ணிக்கை அல்ல



மூன்று உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 372 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 

1957 கருணாநிதிக்கு  இதுதான் முதல் தேர்தல். குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதிதன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.. தர்மலிங்கத்தைவிட 8, 296 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார். முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் காலடி வைத்தது திமுக. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, காமராசர் தமிழக முதல்வரானார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/140829-.html 

தமிழ்நாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத அத்தியாயமாக விளங்கியவர் திமுக தலைவர் கருணாநிதி. கலை, இலக்கியம், அரசியல் என பல்துறை வித்தகராக திகழ்ந்த அவர், விவசாயிகளுக்காக முதல் முதலில் நடத்திய நங்கவரம் போராட்டமும், அரசியலில் தடம்பதித்து முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்றதும் அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் ,

காங்கிரஸ் கட்சி நில உச்சவரம்பு 40க்கு 60 அதாவது 100 ஏக்கர் நிலம் இருந்தால் 40 ஏக்கரை குத்தகைக்கு உழுது கொண்டிருந்தவர்களுக்கு கிரயம் செய்து கொடுக்க வேண்டும் ,அதை சரியாக செய்யவில்லை ,மூப்பனார் வாண்டையார் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் கோலோச்சிய காலம் குளித்தலை தொகுதிக்கு உட்பட்ட நங்கவரம் பேரூராட்சி கீழநங்கவரம், மேள நங்கவரம் சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள், இங்கு மொத்த நிலமும் இரண்டு பண்ணை முதலாளிகளிடம் இருந்தது ,அவர்கள் பெயர் ரங்கநாத ஐயர் மற்றும் ராமநாத ஐயர் பெயர் சொன்னால் போதும் தரம் விளங்கும்

மொத்தம் 33 ஆயிரத்து 412 ஏக்கர் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணை தொழிலாளிகள் வேலை செய்தார்கள் ஆண்டுக்கு மூன்று போம் விளையும் காவிரி பாசனப்பகுதி இங்கு போராட்டத்தை அறிவித்தார் அண்ணா, தலைமை ஏற்று நடத்தினார் கலைஞர்,

நாடு பாதி நங்கவரம் பாதி " என்ற முழக்கத்தோடு ஆறு நாட்கள் வயலில் படுத்து போராட்டம் நடத்தினார் கலைஞர், பணிந்தார்கள் பண்ணையார்கள் விவசாயிகளுக்கு நிலம் உரிமையானது அந்தப் பகுதியின் ஹீரோவாக கலைஞர் கொண்டாடப்பட்டார் அதனால்தான் அவர் குளித்தலையில் போட்டியிட்டார் வென்றார்,


ஹிந்துவில் வந்த ஒரு செய்தி 94 வயதான கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் கலைஞருக்கும் தனக்கான அந்த வரலாற்றை பதிவு செய்திருக்கிறார் ரயில் நிலையம் வந்து இறங்கிய கலைஞரை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றார்கள் அவரை கொலை செய்ய ஒரு கூட்டம் காத்திருந்தது ஆனால் அவரை சைக்கிளில் உட்கார வைத்து

நான் ஊர்வலமாக அழைத்துச் சென்றேன் மிதிவண்டியை நானே ஓட்டினேன் என்று அவர் பதிவு செய்திருக்கிறார்,

https://www.vikatan.com/agriculture/the-fields-that-karunanidhi-fought-for-and-won-were-not-able-to-cultivate-farmers  

 1957  சட்டமன்றத் தேர்தல்


https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0058632/TVA_BOK_0058632_Who_is_who_1957.pdf  

2,ஆனந்தன் கள்ளக்குறிச்சியில் இருந்து வெற்றி பெற்றார் இது ஒரு ரிசர்வ் தொகுதி

3,அறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் இருந்து வெற்றி பெற்றார்

4,பேராசிரியர் அன்பழகன் சென்னை எழும்பூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்


5.அண்ணாமலை போளூர் நார்த்தார் காட்டில்  இருந்து வெற்றி பெற்றார்

6,ஏவிபி ஆசைத்தம்பி ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்

7,கோவிந்தசாமி நாயகர் வளவனூர் சவுத் ஆற்காடு திமுக எம்எல்ஏ

8,இருசப்பன் திமுகவிலிருந்து வெற்றி பெற்ற தனித் தொகுதியின் இரண்டாவது எம்எல்ஏ சேலம் மாவட்டம் ஆத்தூர்


9,நடராஜன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ

10,சந்தானம் திருவண்ணாமலை இதுவும் ரிசர்வ் தொகுதி

11,சாரதி வேலூர் நார்த்தார் காடு


12,சத்தியவாணி முத்து பெரம்பூர் தொகுதி எதுவும் ரிசர்வ் தொகுதி


13,செல்வராஜ் விருத்தாச்சலம் சவுத் ஆற்காடு
14, பியூ. சண்முகம் திருவண்ணாமலை பொதுத் தொகுதி எம்எல்ஏ


15,சுப்ரமணியம் ஆத்தூர் தொகுதி சேலம் எம்எல்ஏ
1962  சட்டமன்றத் தேர்தல்
அறிஞர் அண்ணா, அன்பழகன், ஏவிபி ஆசைத்தம்பி  போன்ற 14 பேர் அடுத்த 1962 தேர்தலில் ,காமராசர் நிறுத்திய பணக்காரர்கள் மூலம் பணமும் சில வாக்குறுதிகளும் சத்தியங்களும் பெறப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்  ஒருவருடையத் தலை மட்டும் தப்பியது. அது நம்ம தல ஆனால் அவர் தனியாகப் போகவில்லை. உடன் 49 பேர். அதாவது 15 பேர் இப்போது 50 பேராக ஆகிவிட்டது 

தான் சந்தித்த இரண்டாவது பொதுத் தேர்தலியே எதிர்கட்சியாக உயர்ந்துவிட்டது திமுக.

தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி இந்தப் பகுதியில் போட்டியிடாமல் திருச்சிக்கு அப்பால் குளித்தலையில் போட்டியிடுவது ஏன்  இங்கு நின்றால்  தோற்று விடுவோம் என்ற பயம் தான் காரணம்".... "நான் ஒரு சவால் விடுகிறேன் இந்தத் தஞ்சை மண்டலத்தில் ஏதேனும் ஒரு   தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறேன்என்று பரிசுத்த நாடார்   சவால்   விடுகிறார்இதெல்லாம் மறுநாள் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக   வெளிவந்ததை படித்துப் பார்த்த கலைஞர் எந்த வித எதிர்வினையும்   ஆற்றாமல்  அமைதி காக்கிறார்,

காலங்கள் உருண்டோடுகிறது மீண்டும்1962  பொதுத்தேர்தல்  அறிவிப்பு வெளியாகிறது திமுகவினர் சென்றமுறை போட்டியிட்டவர்கள் அனைவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அண்ணா   பட்டியல்  தயாரிக்கிறார்இதனை அறிந்த கலைஞர் அண்ணாவிடம் சென்று  "நான்  இந்த முறை குளித்தலையில் போட்டியிடவில்லை தஞ்சாவூரில்   போட்டியிட  போகிறேன்என்று கூறுகிறார்அதிர்ச்சியான அண்ணா "தஞ்சையில்  பரிசுத்த நாடார்  அல்லவா போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து   உன்னால்   வெற்றி பெற முடியுமாஎன்று கேட்கிறார்.

"இல்லை அண்ணா நான் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது   அதற்கு  சரியான களம்தான் இந்த தஞ்சை களம்இந்த தஞ்சை மண்டலத்தில் இந்த கருணாநிதி எத்தகையவன் என்பதை நிரூபித்து காட்ட ஒரு   சந்தர்ப்பம்   எனவே எனக்கு தஞ்சையை தாருங்கள்என்று வேண்டி விரும்பி #தஞ்சையில் போட்டி இடுகிறார் கலைஞர்.

https://tamil.oneindia.com/news/chennai/karunanidhis-election-campaign-345517.html 
 

தேர்தல்நாள் நெருங்க நெருங்க சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்   கலைஞர்.

ஆசைத்தம்பி_கோவிந்தசாமி விருத்தாச்சலம் செல்வராஜ் மா..சாரதி  களம்பூர்அண்ணாமலை #நடிகர் ஆனந்தன் அன்பில்தர்மலிங்கம்  மன்னைநாராயணசாமி பிஎஸ்சந்தானம் இசப்பன் என திமுகவின்   மற்ற  வேட்பாளர்களும் கலைஞருக்காக பிரச்சாரம் செய்துவிட்டு  போகிறார்கள்

இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில்  கருணாநிதி. 32,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் (காங்கிரஸ்) 1, 928 வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதியிடம் தோல்வியை தழுவினார்




1967 சட்டமன்றத் தேர்தல்

1967 போட்டியிட்ட 233 தொகுதிகளில், 138 இடங்களில் வென்று திமுக முதன்முறையாக அரியணை ஏறியது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

1971 சட்டமன்றத் தேர்தல்

      1971 - தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு, ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை வென்றார்.

தனக்கு இணையாக எதிரிகளை உருவாக்கியதில் கலைஞரின் ராஜதந்திரம் என்ன அந்த சைதாப்பேட்டையில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கம் புகைப்படம் கிடைக்கவில்லை 

கருணாநிதியை ஆட்சியில் அமர்த்திய தேர்தல் இது. புற்று நோய் பாதிப்பில் இருந்து மீளாமல் அண்ணா எதிர்பாராமல் இறந்ததையடுத்து முதல்வர் பொறுப்பேற்றார் கருணாநிதி. 1969 ம் ஆண்டின் மத்தியில் காங்கிரஸ் கட்சி .காங்கிரஸ் என்றும், தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் பிளவுபட்டு காங்கிரஸில் ஸ்திரமற்ற அரசியல் சூழல் ஏற்பட்டது.


இதைப் பயன்படுத்தி பாராளுமன்ற தேர்தலுடன் முன்கூட்டியே மாநிலத்திலும் தேர்தல் நடத்த திட்டமிட்டார் கருணாநிதி. 1971 ல் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணியில் .காங்கிரஸ், .கம்யூனிஸ்ட், பிரஜா சோஷலிஸ்ட் , மு.லீக் ,பார்வர்டு பிளாக் ,தமிழரசு கழகம் களத்தில் நின்றன. மீண்டும் சைதாப்பேட்டையில் நின்றார் கருணாநிதி

ஸ்தாபன காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சுதந்திரா கட்சி, சம்யுக்த சோஷலிஸ்ட், குடியரசு கட்சி , உழைப்பாளர் கட்சி உள்ளிட்டவை தோள்கொடுத்தன. முந்தைய தேர்தலில் அண்ணாவின் மேடையில் நின்று காமராஜரை வசைபாடிய ராஜாஜிஇம்முறை தம் அரசியல் எதிரியான காமராஜருடன் கைகோத்து திமுகவை எதிர்த்தார்

தேர்தல் முடிவு, கருணாநிதிக்கு சாதகமாகவே வந்தது. போட்டியிட்ட 201 இடங்களில் 183 இடங்களை பெற்று ஆட்சியமைத்தது திமுக. 

சைதாப்பேட்டையில் தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட  சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.
முந்தைய திமுக ஆட்சி மீது பெரிய அளவு அதிருப்தியில்லாதது ,காலம் முழுவதும் இருதுருவங்களாக நின்ற ராஜாஜி -காமராஜரின் திடீர் நட்பை மக்கள் நாடகமாக கருதியது, இளைஞர்களிடையே கனன்று கொண்டிருந்த தீவிர மொழியுணர்வு போன்றவை திமுக வெற்றிக்கு காரணங்களாக சொல்லப்பட்டன.

கலைஞருக்கு தெரியும் எந்த ஒன்றும் ஒரு கட்டத்துக்கு மேல _ போயிரும் அப்படி எம்ஜிஆர் வருவார் என்று தெரிஞ்சி அவரும் இவரும் சேர்ந்து பேசி ஏன்னா அவங்க ரெண்டு பேரும் ஒரு தட்டில் சாப்பிட்டு ஒரே கட்டில் ___ எல்லாம் இருந்தவர்கள் அப்படித்தான் என்ன தோன்றுகிறது  

1977 சட்டமன்றத் தேர்தல்

தமிழக அரசியல் அரங்கில் புது அலை வீசிய தேர்தல் இது. திமுக - காங்கிரஸ் என அதுவரை மையம் கொண்டு இயங்கிய தமிழக அரசியல் திமுக - அதிமுக என வேறுதிசையில் இன்றுவரை உழலக் காரணமான தேர்தல் இதுதான். ஆம்..திமுகவில் கருணாநிதி-எம்.ஜி.ஆர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியே(ற்)றும் வரை சென்றது. அதிமுக என்ற கட்சியை உருவாக்கி

பெரும்பான்மை தொண்டர்களால் பலமான எதிர்ப்பை கருணாநிதிக்கு தந்தார் எம்.ஜி.ஆர். 1973- திண்டுக்கல் பாராளுமன்ற தொதியில் முதல் களம் கண்ட அதிமுக, அதில் வெற்றியும் பெற்று களிப்பில் இருந்தது. திமுகவிற்கு அது கிலி கொடுத்தது. இந்தியாவில் எமர்ஜென்சியை அறிவித்திருந்த இந்திராவின் போக்கு  பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் 1977 தேர்தல் வந்தது.


திமுக ஒரு அணியாகவும், அதிமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் நின்றன. 3வது அணியாக காங்கிரஸ், .கம்யூனிஸ்ட்டுடன் கூட்டணி கண்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதிமுக 130 இடங்களை வென்று, முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. திமுக 48 இடங்களை மட்டுமே வென்றது. திமுகவிற்கு வனவாசம் தந்ததாக அமைந்தது எம்.ஜி.ஆரின் இந்த வெற்றி


அந்த சுனாமியிலும் கருணாநிதிதான் போட்டியிட்ட அண்ணா நகர் தொகுதியில்      43, 076 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி பெற்ற வாக்குகள் 26, 638.  திமுக மீதான சர்க்காரியா உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள், எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட எழுச்சி, எம்.ஜி.ஆரின் வலுவான பிரசாரம் ஆகியவைதான் கருணாநிதியை வனவாசத்திற்கு அனுப்பிய காரணங்கள்


1977 தேர்தலில் தமிழக அரசியல் களத்தில் தனித்து விடப்பட்ட கருணாநிதிஅடுத்த 2 வருடங்களில் இந்திராவுடன் நட்பை புதுப்பித்துக்கொண்டார். இதன் காரணமாக 1980 ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி உருவானது. மத்தியில் வெற்றிபெற்று பிரதமரான இந்திரா

யாரும் எதிர்பாராதவகையில் 9 மாநிலங்களின் ஆட்சியை கலைத்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது.

1977 ல் மத்தியில் ஆண்ட ஜனதா அரசு, காங்கிரஸ் கட்சி ஆண்ட 9 மாநிலங்களை கலைத்தது குறிப்பிட்டத்தக்கது.


1980  சட்டமன்றத் தேர்தல்

இதனையடுத்து 1980 ல் தமிழக சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, ஜனதா கட்சி என மும்முனைப் போட்டி நிலவியது. திமுக அணியில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், அதிமுக அணியில் .கம்யூனிஸ்ட், .கம்யூனிஸ்ட்கா.கா.தே.கா, தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ், தமிழ்நாடு முஸ்லீம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. ஜனதா கட்சி தனித்து நின்றது.

தேர்தல் முடிவுகள் அதிர்ச்சிகரமாக இருந்தது. அதிமுக 162 இடங்களை வென்று, மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார். திமுக கூட்டணி 69 இடங்களை மட்டுமே வென்றது. அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 51,290 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஹண்டே    50 591 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார். வித்தியாசம் 699 மட்டுமே. நுாலிழையில் வெற்றியை தக்கவைத்துக்கொண்டார் கருணாநிதி. இந்த வித்தியாசமே மக்களிடையே கருணாநிதிக்கு இருந்த அதிருப்தியை காட்டுவதாக இருந்தது.

தன்னிச்சையாக காங்கிரஸ், தமிழக அரசை கலைத்ததால் ஏற்பட்ட பச்சாதாபம்,  'நான் என்ன தவறு செய்தேன்..?' என உருக்கமாக

மக்களிடையே கேள்வி எழுப்பி எம்.ஜி.ஆர் செய்த பிரசாரம் ஆகியவையே எம்.ஜி.ஆருக்கு வெற்றியை எளிதாக்கியது.

1989  சட்டமன்றத் தேர்தல்

1989 சட்டமன்ற தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் நான்குமுனை போட்டியில் வென்று கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.

  • துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 41, 632 வாக்குகளில் வென்றார்.

எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் ஏற்பட்ட குழப்பமான அரசியல், முந்தைய நிலையற்ற அரசு, முந்தைய ஆண்டு சட்டமன்றத்தில் அதிமுகவின் இரு அணியினரும் கைகலப்பில் ஈடுபட்டதால்  மக்களிடையே அதிமுக மீது ஏற்பட்ட வெறுப்பு போன்றவையே திமுகவின் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன. தேர்தல் முடிவுக்குப்பின் ஜானகி அணி, ஜெ அணி இணைந்தது குறிப்பிடத்தக்கது.

1991  சட்டமன்றத் தேர்தல்

1991 - சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் கருணாநிதி வென்றார்.

திமுக வேட்பாளர்களில் கருணாநிதியும்  துறைமுகம் தொகுதி பரிதி இளம்வழுதியும் எழும்பூர்  மட்டுமே வென்றது திமுக வரலாற்றில் அதிர்ச்சி தோல்வி. ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதல்வரானார்.

1996  சட்டமன்றத் தேர்தல்

1996 - சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை  35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் கருணாநிதிமீண்டும் தமிழக முதல்வரானார். 

2001 சட்டமன்றத் தேர்தல்

சேப்பாக்கம் தொகுதியில் நின்ற கருணாநிதி 29,836 வாக்குகள் பெற்று வென்றார். வாக்கு வித்தியாசம் 4834.

2006  சட்டமன்றத் தேர்தல்

இந்த தேர்தலில் திமுக 31 இடங்களை மட்டும் பெற்றது. அதிமுக கூட்டணி 203 இடங்களை பெற்று ஆட்சிக்கு வந்தது. கருணாநிதிதனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டு 1,09, 014 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் எம். இராசேந்திரனை தோற்கடித்தார். வாக்கு வித்தியாசம் 50, 249.

2011  சட்டமன்றத் தேர்தல் 

 - சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

2016  சட்டமன்றத் தேர்தல் 

- சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை தோற்கடித்தார். 2016-ஆம் தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்.

 




 




   



Comments

Popular posts from this blog

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

Language, Communication, and the Story of Migration

காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் ( The Hidden Chapters of Gandhi’s Journey )