மேற்குத் தொடர்ச்சி மலை,கிழக்கிந்திய கம்பெனி
மேற்குத் தொடர்ச்சி
மலைத்தொடர்
பரப்பளவு:1, 60,000 சதுர கி. மீ. , நீளம்:1600 கி. மீ.
ஆங்கிலேயர் குளிர் பிரதேசத்தில் இருந்து வந்ததால் இந்தியாவில் சில பகுதிகளில் வாழ முடியவில்லை. ஒரு சிலர் மேற்கு தொடர்ச்சி மலை கோயமுத்தூரில் இருந்து ஊட்டிக்கு போய் அங்கு ஒருவன் தனக்கான வீட்டை கட்டிக் கொள்கிறான், கொஞ்சம் கொஞ்சமா இயற்கையை மாசு படுத்தி டீ தூள் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட டி பயிரிடப்படுகிறது காட்டை அழித்து இதுதான் முதல் அழிவு மேற்கு தொடர்ச்சி மலை நாசமானதுக்கு வெள்ளைக்காரன் தான் காரணம்,
வெள்ளைக்காரன் வாழ்த்தும்போது வார்ம் வெல்கம் அப்படின்னு சொல்லுவான் ஏன்னா அவன் குளிருபிரதேசத்தில் இருந்ததுனால கை கொடுக்கும் போது சூடா இருக்கணும் இல்லையா அதுக்காக சொன்னது ஆனா நம்ம ஊர்ல வெறும் 20% தான் குளிர் பிரதேசம் மிச்சமெல்லாம் வெப்பம் தமிழிலக்கியங்களில் பெண்ணை வர்ணிக்கும் போது கூட தண்ணிக்குள்ள இருக்குற பூக்கள் அள்ளி தாமரை அப்படித்தான் வர்ணிக்கிறாங்க திட்டும்போது கூட பன்றி எருமை ரெண்டுமே தண்ணி கூட இருக்கும்
இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு ரகசியம் இருக்கு இது குஜராத் வரைக்கும் போகுது ஆனா ,அங்க இருக்கிற காட்டுக்கோழி இருக்கு இல்லையா அதோட நிறம் மாறும் ,
மாறும் போது மண்ணும் மாறும் கலாச்சாரமும் மாறும் அதனால தான் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு
போன முறை நான் காவேரி உருவாகும் பகுதிக்கு போன போது ஒரு பூச்சியின் சத்தம் தொடர்ந்து கேட்கிறது ஒரு பூச்சி கத்துனா எல்லா பூச்சியும் கத்துது நான் ரொம்ப ரசிச்சு கேட்டேன்
கிராமத்தில் இயல்பாக இருந்த எண்பதுகளில் 3 மணிக்கு கரச்சான் குஞ்சு சத்தம் கேட்கும், அஞ்சு மணிக்கு குயில் சத்தம் கேட்கும் ,ஆறு மணிக்கு காக்கா கத்தும் இப்படி பறவைகளின் சத்தத்தோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கை தொலைந்து போனது
அதேபோல இது காட்டுக்கோழி அது கூடுவதை படம் எடுக்க கூடாது என்பதால் விட்டுவிட்டேன்
கூட வந்த நண்பர்கள் சொன்னாங்க எங்க ஊர்ல மயில் 15 ஆண்டுகளாகத்தான் நாங்க பார்க்கிறோம் ,எங்க ஊர்லயும் 20 ஆண்டுகளுக்கு முன்பு மயில் இல்லை இப்போது தான் வந்திருக்கிறது, இதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது நம் தேசியப் பறவை ஆனால் அதன் இனப்பெருக்கத்தில் சிக்கல் உண்டு.
முதல் உலகப்போர் இரண்டாம் உலகப்போர் எல்லாம் ஆகி ஆண்கள் ஒட்டுமொத்த உலகத்திலும் 25 சதவீதத்திற்கும் மேல சண்டை போட்டு செத்துட்டாங்க மிச்சம் இருக்க பெண்களை புணர்வது யார்,
இஸ்லாத்தில் நாலு கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று சொன்னாங்க இல்லையா அது மாதிரி தான் ஆனால் அதற்கு அடுத்த ஆண்டுகளில் பிறப்பு சதவீதத்தில் 66 சதவீதம் ஆண் குழந்தைகள் பிறந்தது இது இயற்கையால் தீர்மானிக்கப்பட்டது இயற்கை அதன் செயல்பாடுகளை நம்ப வேண்டும்
இந்த பூமியின் ஆண்டு 460 கோடி அதையும் மனிதன் தான் சொல்றான் ஆனா இந்த மனிதனின் வாழ்க்கை நிரந்தரம் இல்லை பூமியை நாசம் பண்ணாம செத்துப் போங்க
மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை அதிசயம், ஆனால் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் வேண்டுமளவுக்கு காட்டை அழித்து வியாபாரம் செய்ய வேண்டி ஏலக்காய் டீ காபி ஏற்கனவே இருந்ததை அழித்து அரசுடமையாக்கி செய்த செயலை இன்றைக்கு நம்ம பெரும் பணக்காரங்க போய் செய்றாங்க,
நிறைய காசு சம்பாதித்த உடனே போய் ஒரு பண்ணை வீடு வாங்கணும் என்று இந்த குளிர் பிரதேசத்துக்கு போகிறார்கள் இவர்கள் பண்ணை வீடு வாங்கி அங்கே வேலைக்கு வைக்கிறது யாருன்னா யாரு நிலத்தை உங்களுக்கு வித்தாங்களோ அவங்கதான்,
இயற்கை ஒரு டிபன்ஸ் மெக்கானிசம் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும், கேரளா வயநாட்டில் நடந்த நிலச்சரிவு அதற்கு ஒரு உதாரணம்
இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் இலங்கையில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்தவர்களை இலங்கை அரசு குறிப்பாக தமிழர்களை அங்கிருந்து நாடு கடத்தியது அப்போது அவர்களுக்காக கலைஞர் கருணாநிதி உருவாக்கியது தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் ,
வேற ஒன்னும் இல்ல அவங்களுக்கு வேற வேலை தெரியாதுன்னுட்டாங்க அதனால அவங்களுக்காக இவரு தேயிலை தோட்டத்தை உருவாக்கினார்,
அது இப்ப உருப்படி இல்லாம போச்சு அதுக்கு காரணம் வேற ஒன்னும் இல்ல அடுத்த தலைமுறை படித்து வசதியாக வாழ்வது இதை நான் வாழ்த்துகிறேன் ஆனால் இதே மாதிரி இலங்கை அகதிகளை தமிழ்நாட்டில் கலைஞர் கொண்டு வந்து வாழ வச்சார்,
கலைஞர்
தெளிவாக திட்டமிட்டார் தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் அடுத்த வாரிசுகளை இதே வேலைக்கு அனுப்பக்கூடாது
என்பதில் தெளிவாக இருந்தால் கலைஞன் அவர்களை படிக்க வைத்தார் 90 நாள் குறைந்தபட்ச செலவில்
சுய வேலைக்குப் பழக்கப்படுத்தினார் அதனால் அடுத்த தலைமுறை இந்த தமிழ்நாடு தேயிலை
தோட்டத்தில் வேலை செய்ய இல்லாத
நேரத்தில் நான் அங்கிருந்த லேண்ட்லைன்
நம்பரில் பேசிக் கொண்டிருந்தேன் கடைசியாக பேசும்போது அந்த அம்மையார் சொன்னார்
இன்னும் இரண்டு மாதத்தில் இந்த நம்பர் இயங்காது
நான் மட்டும்தான் இருக்கிறேன் கலைஞர் திட்டமிட்டு தான் இதை செய்திருக்கிறார்
எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை மகிழ்ச்சியாக ஓய்வு பெற்று ஊருக்கு போகிறேன் என்று சொன்னார் இதுதான் கலைஞர்
அதே மாதிரி திபெத்தியன் நேரு தலாய்லாமா பிரச்சனை வந்தபோது அங்கிருந்து வந்த தீபத்தியர்களை அவர்கள் ஊரில் வாழ்வியல் எப்படி இருந்தது அது போன்ற சூழலுக்காக கொடுக்கப்பட்டது தான் இந்த பகுதி,
அதில் போய் நான் பார்த்தபோது தெரிந்து கொண்டது அவர்கள் தான் பணக்காரராக வாழ்கிறார்கள், அவர்களைப் பார்த்து தான் பெங்களூரில் இருந்து போயி இவங்க எல்லாம் அங்க பண்ணை வீடு வாங்குறாங்க ஒன்னும் இல்ல ஒரு வயதானவரை நான் பேட்டி கண்டபோது,
எங்களுக்கு விவசாயத்தின் நுட்பங்களை சொல்லிக் கொடுத்தது இந்த திபெத்தியன் என்கிறார் இந்திய அரசு அவர்களுக்கு ஒரு சமவெளி இல்லாத ஒரு மலை வழியைத்தான் கொடுத்தது அவர்கள் ஊர்ல இருந்து வரும்போது தங்கத்தை கொண்டு வரவில்லை சில விதைகளை கொண்டு வந்திருக்கிறார்கள் அதை பயிரிடுகிறார்கள் பணப்பயிர் பூண்டு உருளைக்கிழங்கு அதற்கு முன்பு இங்கிருந்து விவசாயிகள் வெறும் ராகி மற்றும் சோளம் இதற்கு விலை கிடைக்காது ஆடு மாடு வளர்ப்பது கோழி வளர்ப்பது அத்தோடு முடிந்து விட்டது ஆனால் அகதியாக வந்தவன் சிறப்பாக வாழ்கிறான், ஆனால் இவர்களுக்கு விவசாயத்தின் நுட்பங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறான் ஆனால் அவனிடம் மிக நுட்பமான மத நம்பிக்கை இருக்கிறது அது அவர்கள் பகுதிக்கு போகும் போது தெரிகிறது,
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் எல்லா இடத்திலும்
போய் மாரியம்மா இயேசு எல்லாத்தையும் கொண்டாடுறாங்க அதைவிட முக்கியம் விதையை கொண்டு
போங்க தமிழனின் வாழ்வில் அகழாய்வுகளில் எங்கும் கடவுள்களின் சிலைகளோ அது குறித்த
ஆவணங்களோ கிடைத்ததில்லை, சிலப்பதிகாரத்தில் இயற்கையை போற்றித் தான் மாமழை போற்றுவோம்
என்று பாடல் துவங்குகிறது
சீனாவில் கம்யூனிஸியம் மா சே துங் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் ஆயிரம் மயில்களுக்கும் மேலே காடு மேடு நதிகளை கடந்து ஆட்சியை கைப்பற்றிய பிறகு அவர்கள் கொண்டு வந்த இயற்கைக்கு மாறான தவறான செயல்பாடுகளால் 20 ஆண்டுகள் பெரும் பஞ்சத்தில் வாடியது அந்த நாடு,
அவர் எழுதிய புத்தகம் தான் அதிகம் விற்கப்பட்டது சீனாவில் அதற்குப் பிறகு நேர் எதிர் கருத்து கொண்ட பெயரை மாற்றி இந்த கதையை எழுதி இருக்கிறார் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் சீனாவுக்கும் சம்பந்தம் இருக்கிறது ஜப்பானிலிருந்து வந்து ஆய்வு செய்தார்கள் நான் கூட போனேன் மேற்கு தொடர்ச்சி மலையில் தேன்கூடுகளை எப்படி பாதுகாக்க வேண்டும் தேனீக்கள் இல்லை என்றால் (நான்காண்டுகளுக்கு மேல் மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் ) உலகம் உணவுக்கு திண்டாடும் நிலைமை வரும் என்றார்கள் அதுபோலவே சலீம் அலி பேர்ட் ரிசர்ச் பறவைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கோவைக்கு வந்த போது அவர்களோடு 15 நாட்கள் நானும் சுற்றி திரிந்தேன் அப்போது முக்கியமானவற்றையெல்லாம் அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டேன் இயற்கை குறித்த எனக்குள்ளே ஒரு எண்ணம் இருந்தது அதற்கு இரண்டு குழுக்களும் தீனி போட்டார்கள்.
🌍 இந்த உலகம் மனிதர்களுக்கே அல்ல
பூமியை காத்த பூர்வீக அமெரிக்கர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும், இயற்கையை ஒத்துச் செல்ல வேண்டிய செயற்கைக் காடுகளும்
நிலம், நீர், காடு, விலங்குகள்—இவை அனைத்தையும் அவர்கள் சொத்துகளாக அல்ல, உயிருள்ள உறவுகளாகவே பார்த்தனர். இந்த பார்வையே அவர்களின் வேட்டையாடல், விவசாயம், வாழ்வியல், அடுத்த தலைமுறைக்கான சிந்தனை ஆகியவற்றின் அடித்தளம்.
ஒரு உடன்படிக்கைக்குள் இருந்த எச்சரிக்கை
ஐரோப்பிய
குடியேற்றங்களுக்குப் பிறகு, செல்வந்த நாடுகளின் மூலதனவாதிகள் அமெரிக்காவின் வளமான நிலங்களை கைப்பற்றினர். லட்சக்கணக்கான பூர்வீக மக்கள் கொல்லப்பட்டனர்; மீதமிருந்தவர்கள் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து விரட்டப்பட்டனர். இப்படியான சூழலில் கட்டாயமாகச் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்று சீஃப்
சியாட்டில்
அவர்களின் பெயருடன் இணைக்கப்படுகிறது.
அவரின்
சொல்லாக வரலாற்றில் பதிந்துள்ள கருத்து இன்றும் ஒலிக்கிறது:
“இந்த பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல; மனிதனே பூமிக்குச் சொந்தமானவன்.”
அவரின் பெயரால் அழைக்கப்படும் சியாட்டில்
நகரம்
இன்றும் சுற்றியுள்ள காடுகள், நீர்நிலைகள், இயற்கை பாதுகாப்பு முயற்சிகளுக்காக அறியப்படுகிறது. அந்த உடன்படிக்கை சொல்லியது
ஒன்றே—
இயற்கையின்
சமநிலையை
மதிக்காமல்
நிலத்தை
கைப்பற்றினால்,
அழிவு
தவிர்க்க
முடியாது.
🌱 பூர்வீக
அமெரிக்கர்களின் சுற்றுச்சூழல் ஒழுக்கம்
பூர்வீக
மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒரு சட்டம் அல்ல—அது வாழ்க்கை முறையே.
·
காலநிலைக்கு
ஏற்ப வேட்டையாடல் – விலங்கு இனங்கள் அழியாமல்
·
கலப்பு
பயிரிடல் – மண் வளம் காக்க
·
புனிதமான
காடுகள், நதிகளைத் தொடாத நடைமுறை
·
“ஏழு
தலைமுறைகள்” நினைவில் வைத்து எடுக்கப்படும் முடிவுகள்
இயற்கை
என்பது அவர்களுக்கு உயிருள்ள உறவுகளின் வலை.
ஒரு நூல் அறுந்தால், முழு
வலையும் சிதறும்.
இயற்கையை ‘உருவாக்க’ முயன்ற மனிதன்
நவீன காலத்தில் அரசுகளும், நிறுவனங்களும் செயற்கைக் காடுகள், பெரும் பூங்காக்கள் உருவாக்க முயன்றன. ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, விலங்குகளை வேலிக்குள் அடைத்து, அதையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று நினைத்தனர். ஆனால் பல திட்டங்கள் தோல்வியடைந்தன.
மரங்கள் வளர்ந்தன;ஆனால் காடு உயிரோடு இருக்கவில்லை.
ஏனெனில்—
இயற்கை
என்பது
மரங்களின்
கூட்டம்
மட்டுமல்ல.
அமெரிக்காவின்
யெல்லோஸ்டோன்
தேசியப்
பூங்கா
இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
வேட்டையாடும் விலங்குகள் இல்லாமல் போனபோது, மான் போன்ற தாவரவாசி
விலங்குகள் அளவுக்கு மீறி பெருகி, காடுகளை
உண்ணி, நதிக்கரைகளை அழித்தன.
பரஸ்பர சார்பின் பாடம்
இந்த
இடத்தில், பறவையியல் அறிஞர் சாலிம்
அலி
அவர்கள் வலியுறுத்திய உண்மை மீண்டும் உறுதியாகிறது:
இயற்கை
என்பது
பரஸ்பர
சார்பு
கொண்ட
அமைப்பு.
·
மரங்கள்
நட்டால் பூக்கள் மலரும்
·
மான்களை
வளர்த்தால் அவை பெருகும்
·
அவற்றை
கட்டுப்படுத்த தாவரவாசிகளை வேட்டையாடும் விலங்குகள் (ஓநாய்கள்) தேவை
யெல்லோஸ்டோனில்
ஓநாய்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டபோது:
·
மான்களின்
எண்ணிக்கை கட்டுப்பாட்டில் வந்தது
·
தாவர
வளம் மீண்டும் செழித்தது
·
பறவைகள்
திரும்பின
·
நதிகள்
கூட இயற்கையாக மாற்றம் பெற்றன
மனித
திட்டங்கள் தோல்வியடைந்த இடத்தில்,
இயற்கையின்
சமநிலையே
வெற்றி
பெற்றது.
இங்கிலாந்தில் இருந்து வந்த வெள்ளைக்காரனுக்கு யானை தெரியாது,
புலி தெரியாது, சிங்கம் தெரியாது ,அவன் பார்த்ததெல்லாம் முயலும் ஓநாயும் தான் ஆனா இங்க வந்து எல்லாம் வேட்டையாடுவதற்கு ஆசைப்பட்டான் கூட துணைக்கு போனது யாரு நம்ம இந்திய அடிமைகள் இவர்கள் வேட்டையாடி அதை ஒரு புகைப்படம் எடுத்து இங்கிலாந்துக்கு அனுப்புவார்கள்,
ஆனால் அவர்களுக்கு ஒரு அரசியல் தெளிவு இருந்தது அவர்கள் உருவாக்கிய அரசியல் சட்டம்தான் வனவிலங்குகளை வேட்டையாடுவது குறித்த தெளிவான சிந்தனையை உருவாக்கியவன் வெல்லஸ்லி,
பெண் மானை கொன்றால் நாளாண்டு சிறை, ஆண் மானை கொன்றால் ஆறு மாதம் சிறை. ஏன்னா
ஒரு பெண் மான் என்பது இனப்பெருக்கத்திற்கு உதவி செய்வது ஆடு மாடு வளர்ப்பவர்களுக்கு
தெரியும் 50 பெண் ஆடுகள் மாடுகள் இருந்தாலும் அதற்கு ஒரு ஆண் போதும் இனப்பெருக்கத்திற்கு
ஆனால் பெண் அப்படி அல்ல அதன் மீட்சி தான் தமிழகத்தில் இந்துக்கள் பலி கொடுக்கும் போது
யாரும் பெண் கோழியையோ பெண் ஆட்டையோ பலி கொடுக்க மாட்டார்கள் ஆண் ஆடுகளைத் தான் சேவல்கள்
தான் பலி கொடுக்கப்படும், இது இயற்கையை காப்பாற்றும் ஒரு நியதி ஆனால் வீட்டில் பெண்களுக்கு
மரியாதை இருக்காது,
தெய்வ வழிபாடுகள் குறித்த ஆய்வில் ஒரு சின்ன
பொறி கிடைத்தது, ஒரு வழிபாட்டு தளம் என்னை ஈர்த்தது அதை போட்டோ எடுத்திருக்கிறேன்,
அது இயற்கையோடு ஒன்றிப்போவதாக இருக்கிறது எளிமையான மனிதர்கள் நியாயமாக நேர்மையாக வாழ்கிறார்கள்
என்பதற்கான அடையாளம் அது.
கேரளாவுக்கு
வந்த முதல் வெளிநாட்டு வணிகக் கப்பல் (ஐரோப்பியர்) வாஸ்கோடகாமா தலைமையிலான போர்ச்சுகீசியப் படகு, இது 1498 மே 20 அன்று கோழிக்கோடு (Calicut) துறைமுகத்தை அடைந்தது, இது ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கப்பட்டதைக் குறிக்கிறது, இது நீண்டகாலமாக மிளகு மற்றும் வாசனைத் திரவிய வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது, ஐரோப்பியர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே அரேபியர்கள் மற்றும் பாரசீகர்களுடன் வர்த்தகம் செய்தாலும், வாஸ்கோடகாமா தான் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை நேரடியாக அடைந்த முதல் ஐரோப்பியர்.
வாஸ்கோடகாமா கேரளாவிற்கு வந்தபோது, கோழிக்கோட்டை ஆண்ட ஜாமரின் மன்னர் அவரை வரவேற்றாலும், அரபு வணிகர்களின் செல்வாக்கைக் குறைக்கவும், மசாலாப் பொருட்களின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும் முயன்றதால், போர்ச்சுகீசியர்களுக்கும், ஜாமரின் படைகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன; குறிப்பாக, ஜாமரின் படைகளுக்கும், வாஸ்கோடகாமாவுக்கும் இடையில் வர்த்தக உரிமைகள் தொடர்பாகப் பல சண்டைகளும், போராட்டங்களும் நடந்தன, இது ஐரோப்பியர்களின் காலனித்துவ ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது
திப்பு
சுல்தான் காலத்தில் தான் மேற்குத் தொடர்ச்சி
மலையில் விளைந்த மிளகு, ஏலக்காய், போன்ற வாசனை பொருட்கள் அன்றைக்கு பெரும் உலக சந்தையாக இருந்த
துருக்கி
ஒட்டோமான் பேரரசு மூலம் நடந்த வியாபாரம் அங்கிருந்து திரும்ப வரும் கப்பல் காலியாக வரக்கூடாது என்பதற்காக வரும் பகுதிகளில் விளையும்
பழ வகைகளை இந்தியாவில் பயிரிட வேண்டும் என்று ஆசைப்பட்டு பழ கன்றுகளை ஏன்
இன்னும் சில மரக்கன்றுகளை கூட
திப்பு சுல்தான் கொண்டு வந்து குற்றவாளிகளுக்கு தண்டனையாக அந்த செடிகளை ஆளு
உயரத்திற்கு வளர்க்கச் செய்தார்
இது
மறைக்கப்பட்ட வரலாறு
மேற்கு
தொடர்ச்சி மலையின் சிறப்பு என்னவென்றால் அந்த மண்ணும் அந்தத்
தட்பவெப்ப நிலையும் இதனால் தான் அங்கு விளையும்
ஏலக்காய் மிளகு காபி மிகவும் சுவையாக
இருக்கிறது
ஆப்கானிஸ்தானில் மட்டுமே விளைகிறது பெருங்காயம் இது ஒரு வகை மரத்திலிருந்து வெளிவரும் பிசின் அதாவது ஒரு மரத்தை கீரி எப்படி ரப்பர் உற்பத்தியாகிறதோ அதேபோலத்தான் இந்த பெருங்காயமும் மரத்திலிருந்து வடியும் ஒரு வகை திரவம்,
இது கெட்டியானது ஆனால் இது அந்த மக்கள்
பயன்படுத்துவதில்லை இந்தியாவில்தான் அதிகம் பயன்படுத்துகிறோம் குறிப்பாக தென்னிந்தியாவில்
ஆனால் அந்தப் பெயர் மட்டும் பதிவு செய்யப்பட்டு இருந்தது அதையும் இன்று ஒரு இந்தியர் விலை கொடுத்து வாங்கி விட்டார் அதே கிழக்கு இந்திய கம்பெனி என்ற பெயரில் விலை உயர்ந்த பரிசு பொருள்களை தங்கம் வெள்ளி வைரம் பொருள்களையும் வியாபாரம் செய்கிறார் இந்தியாவையே சுழன்று கொண்டு போன கிழக்கிந்திய கம்பெனியின் இன்றைய முதலாளி ஒரு இந்தியர்
🌿 கருப்பு மிளகின்
தோற்றம்
கருப்பு மிளகு, தற்போதைய கேரளாவில் உள்ள மலபார் கடற்கரையைத் தாயகமாகக் கொண்ட பைப்பர் நிக்ரம் (Piper nigrum) என்ற தாவரத்திலிருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகில் கருப்பு மிளகு இயற்கையாக வளர்ந்த ஒரே இடம் இந்தப் பகுதிதான்.
💰 இது ஏன்
“கருப்பு தங்கம்” என்று அழைக்கப்பட்டது?
கருப்பு மிளகு “கருப்பு தங்கம்” என்ற பெயரைப் பெற்றதற்குக் காரணம்:
• இது இந்தியாவிற்கு வெளியே மிகவும் மதிப்புமிக்கதாகவும் அரிதாகவும் இருந்தது.
• சுவையூட்டவும், மருந்தாகவும், உணவுப் பதப்படுத்துதலுக்கும் பயன்படுத்தப்பட்டது.
• சில சமயங்களில் நாணயமாகவோ அல்லது திறையாகவோ கூட பயன்படுத்தப்பட்டது.
• ஐரோப்பாவில், செல்வந்தர்களால் மட்டுமே இதை வாங்க முடிந்தது.
இதன் மதிப்பு மிகவும் அதிகமாக இருந்ததால், இது தங்கத்தைப் போல வர்த்தகம் செய்யப்பட்டது—எனவே இந்தப் பெயர் வந்தது.
🌍 ஆரம்பகால வர்த்தகம்
(ஐரோப்பியர்களுக்கு முன்)
ஐரோப்பியர்கள் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே:
• இந்திய வர்த்தகர்கள் ரோமானியப் பேரரசுக்கு மிளகை ஏற்றுமதி செய்தனர்.
• ரோமானியப் பதிவுகள் இந்திய மசாலாப் பொருட்களின் பெரும் இறக்குமதியைக் காட்டுகின்றன.
• அரபு வணிகர்கள் மசாலாப்
பொருட்களின் பாதைகளைக் கட்டுப்படுத்தி, ஐரோப்பாவிற்கு மிளகை அதிக விலையில் விற்றனர்.
இது மிளகை பண்டைய உலகில் மிகவும் விரும்பப்படும் பொருட்களில் ஒன்றாக மாற்றியது.
🚢 ஐரோப்பியர்கள் ஏன் இந்தியாவிற்கு வந்தார்கள்?
15 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகள் அரபு இடைத்தரகர்கள் மூலம் வாங்குவதற்குப் பதிலாக, மசாலாப் பொருட்களை நேரடியாகப் பெற விரும்பின.
இது ஆய்வுக்காலத்திற்கு வழிவகுத்தது:
• ஆய்வாளர்கள் இந்தியாவிற்கு கடல் வழிகளைத் தேடினர்
• போர்த்துகீசியர்களே முதலில் வெற்றி பெற்றனர்
1498 இல்,
வாஸ்கோ டா காமா மலபார்
கடற்கரையில் உள்ள கோழிக்கோட்டை அடைந்தார்.
👉 அவரது முக்கிய நோக்கம்? மசாலாப் பொருட்கள்—குறிப்பாக கருப்பு மிளகு.
⚔️ மிளகு வர்த்தகத்தின்
தாக்கம்
கருப்பு
மிளகுக்கான தேவை பெரும் உலகளாவிய
மாற்றங்களுக்கு வழிவகுத்தது:
1. காலனித்துவம்
• போர்ச்சுகல், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற ஐரோப்பிய வல்லரசுகள் இந்தியாவிற்கு வந்தன.
• அவர்கள்
வர்த்தக மையங்களையும், பிற்காலத்தில் குடியேற்றங்களையும் நிறுவினர்.
2. வர்த்தகக்
கட்டுப்பாடு
• ஆசியாவில்
ஐரோப்பிய ஆதிக்கம் நிலைபெறுவதற்கு நறுமணப் பொருட்கள் ஒரு முக்கிய காரணமாக
அமைந்தன.
• மிளகின்
மீதான கட்டுப்பாடு என்பது செல்வத்தையும் அதிகாரத்தையும் குறிப்பதாக இருந்தது.
3. உலகமயமாக்கல்
• மிளகு,
இந்தியாவை ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளுடன் இணைத்தது.
• ஆரம்பகால
உலகளாவிய வர்த்தக வலைப்பின்னல்களை வடிவமைப்பதில் இது ஒரு முக்கிய
பங்காற்றியது.
🧭 பரந்த கண்ணோட்டம்
உங்கள்
கூற்று முற்றிலும் சரியானது:
• வெளிநாட்டு
வர்த்தகர்கள் முதன்முதலில் இந்தியாவிற்கு வந்தது, பெரும்பாலும் கருமிளகைத் தேடியே ஆகும்.
• அவர்கள்
"கருப்புத் தங்கம்" (Black Gold) என்று அழைத்த முதல் வணிகப் பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.
• இந்தச்
சிறிய நறுமணப் பொருளே புதிய நிலப்பரப்புத் தேடல்கள், வர்த்தகப் போர்கள் மற்றும் குடியேற்றங்களை முன்னெடுத்துச் சென்றது.
எளிய
வார்த்தைகளில்
கருமிளகு
இன்று ஒரு சாதாரணப் பொருளாகத்
தோன்றலாம்; ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு:
இது இந்தியாவை
உலக வர்த்தகத்தின் மையமாக மாற்றியது.
இது கடல்களுக்கு
அப்பாலிருந்தும் ஆய்வாளர்களை ஈர்த்தது.
இது உலக
வரலாற்றையே மாற்றியமைத்தது.


.jpeg)





.jpeg)


.jpg)



Comments
Post a Comment