காங்கிரசின் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்
காங்கிரஸ் கட்சியில் தன் இரண்டாவது மகனை அரசியல் சொல்லி வளர்த்தார் இந்திரா காந்தி, முதல் மகன் ராஜீவ் காந்தி இஷ்டப்படி வாழ விரும்பி விமான ஓட்டியாக விரும்பினார் ஆனால் துரதிஷ்டம் நாட்டு மக்களுக்கு அரசியல்வாதியாக ஆக வேண்டிய சஞ்சய் காந்தி விமான ஓட்ட போய் செத்துப் போயிட்டார், அதனால விமானம் ஓட்ட பழகியவர் அரசியலுக்கு வந்தார் அதனால காங்கிரஸ் கட்சிக்குள்ள கொஞ்சம் உள்ள போய் தேடிப் பார்ப்போம்,
இன்றைக்கு பிஜேபி செய்கிற வேலைகளை ஆரம்பித்து வைத்த காங்கிரசின் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்
சஞ்சய் காந்தி விருப்பப்பட்ட மக்கள் கார்,
ஜெர்மனியில் குறைந்த விலையில் ஹோல்ஸ்வேகன் கார் உற்பத்தி செய்யப்பட்டது அதுபோல இந்தியாவிலும் உற்பத்தி செய்ய ஆசைப்பட்டது என்னமோ நல்ல விடயம் தான்,
ஆனால் அதற்கான தகுதி அவரிடம் இல்லை லண்டனில் போய் rolls-royce கம்பெனியில் இரண்டு ஆண்டுகள் சுற்றித்திரிந்தார் என்று அவர்களே அறிக்கை கொடுக்கிறார்கள்,
இந்த சஞ்சய் காந்தி மாணவராக இருந்தவர்பிரதம மந்திரியின் மகன் என்ற அடிப்படையில் மிகச்சிறந்த பள்ளிகளில் அவருக்கு இடம் கிடைக்கும் அங்கு இவர் செய்த குறும்புகளால் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்,
அதில் ஒரு ஹாஸ்டலில் கார்களின் லோகோக்கள் இரண்டு பெட்டி நிறைய வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு அதற்குப் பிறகு டெல்லியில் கார்கள் திருடும் கும்பலோடு சேர்ந்து கார் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்,
மே 16, 1969 உயர் ராணுவ அதிகாரியின் கார் திருடப்பட்டு பாலம் விமான நிலையம் அருகே கார் கண்டுபிடிக்கப்பட்டது அந்த காருக்குள் குடிபோதையில் சஞ்சய் காந்தியின் நண்பன் அணில் சரியார்இவர் வேறு யாரும் அல்ல இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பர் யூனோசின் மகன்
கரண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தொசி கரந்தாவின் நாலேஜுக்கு போனபோது இந்திரா மீது சவால் விட்டார் இந்த கார் திருட்டுக்கும் சஞ்சைக்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்க முடியுமா என்று இந்திரா அமைதியாகிவிட்டார்,
ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனியில் பயிற்சியில் இருந்தபோது பலமுறை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் அதிவேகத்தில் கார் ஓட்டிய வழக்கில் இவரை காப்பாற்றுவது அங்கிருந்து இந்திய தூதரத்துக்கு பெரும் தலைவலியாகிப் போனது ஒரு வழியாக நாடு கடத்தி வைத்தார்கள்,
ராஜீவ் காந்தி அவருடைய நண்பர் அர்ஜுன் தாஸ் என்பவரை சஞ்சய் காந்திக்கு அறிமுகம் செய்து வைத்தார் இவர் ஒரு சிறந்த மெக்கானிக் இவரை பயன்படுத்திக் கொள் என்றார் இருவரும் சேர்ந்து நிறைய கார்களை பிரித்து பிரித்து சலித்து போய் அங்கேயே தூங்கிடுவார்களாம்,
கார் கம்பெனி துவங்க மகன் ஆசைப்பட்டான் பிரதமர் இந்திரா அவருக்காக இடத்தை டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலமான அரியானா முதல்வர் 450 ஏக்கரை விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி கூடவே இந்தியன் விமான நிலையத்துக்கு சொந்தமான இடத்தையும் வளைத்து போட்டு ஒரு காயலாங்கடை போல ஒரு கார் கம்பெனியை உருவாக்கி இருந்தார்,
ஆண்டுகள் கடந்தன ஒரு காரும் உற்பத்தி செய்யப்படவில்லை
இதற்கிடையில் டீலர்ஷிப் கொடுக்கிறேன் என்று ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை அன்றைக்கு இது மிகப்பெரிய தொகை அம்பாசிடர் அப்போது டீலர்களிடம் வசூலித்தது வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே இப்படி பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நெருக்கி கேட்டபோது எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டார்கள்,
சஞ்சய் காந்திக்கு 1970 .71 காலத்தில் அவர் செய்த வருமான வரி தாக்களில் ஆண்டு வருமானம் 722 ரூபாய் மட்டுமே
இந்த லட்சணத்தில் இவரை நம்பி 4 கோடி வரை வங்கிகளும் காங்கிரஸ் கருப்பு பணம் முதலாளிகளும் முதலீடு செய்தார்கள்
இந்த மாருதி அயோக் கம்பெனியில் அதிக முதலீடு செய்தது யார் தெரியுமா நம்ம ஊர் எம் ஏ சிதம்பரம் தான் ஸ்டேடியம் இருக்குது அவர் பெயரில் தான்,
6400 க்கு கார் அடக்க விலை இன்று தான் என்ற ஏலம் எடுத்தார் ஆனால் இரண்டு ஆண்டு கழித்து இரட்டிப்பாக்கி பதினோராயிரத்து முந்நூறு ரூபாய் என்றும் கடைசியில் கார் உற்பத்தியாகி சந்தைக்கு வந்த போது 50000 தொட்டிருந்தது
ஜெர்மனியைச் சேர்ந்த முல்லர் என்ற பொறியாளர் உதவியுடன் ஜெர்மன் இன்ஜின் பொருத்தப்பட்ட முதல் கார் காட்சிக்கு வைக்கப்பட்டது 50 கிலோ மீட்டர் வேகம்தான் அப்போது நிர்ணயிக்கப்பட்டது
கார் உற்பத்தி கிணற்றில் கல்லாக இருந்த போது எம்டிஎஸ் என்ற ஒரு டெக்னிகல் சர்வீஸ் துணை நிறுவனத்தை உருவாக்கினார்,
அது போதாது என்று மாருதி ஹெவி வேகல்ஸ் என்ற இன்னொரு நிறுவனம் இந்த நிறுவனம் மூலம் ரோடு ரோலர்கள் செய்ய ஒப்பந்தமும் பெறப்பட்டது
நம்ம ஊரு பக்கம் சொல்லுவாங்க பொட்ட கண்ணுக்கு ரெட்டை தீவட்டி என்று அப்படித்தான் அவர் எதையும் ஒழுங்காக சிரத்தை எடுத்து செய்ததில்லை
எமர்ஜென்சி காலத்தில் டெல்லி துர்குமான் கேட் என்ற குடிசைப்பகுதி அதிகம் இஸ்லாமியர்கள் வசிக்க கூடியது அதை காலி செய்ய புள் டோசர்களை கொண்டு போய் நிறுத்தினார் 40 ஆண்டுகளுக்கு மேல் அங்கே குடியிருந்தவர்கள் எதிர்ப்பு காட்டினார் அவர்களை தடியடி நடத்தினர் பின்பு துப்பாக்கிச் சூடு நடத்தினர் 400 பேர் வரை கொல்லப்பட்டனர் இது இந்திய வரலாற்றில் சஞ்சய் காந்தி நடத்திய சாலியன் வாலாபாக் போன்ற சம்பவம்
இந்த எல்லா சம்பவத்துக்கும் துணை நின்ற காரியத்தால் ஆர்கே தவான் என்கிறவர் தான் பின்னாளில் நிறைய பதவிகளை அனுபவித்தார்,
அவர் முதன் முதலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டார்
அங்கு வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையில் தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பு தன்னைத்தானே துப்பாக்கி சூடு நடத்திக் கொண்டார் அவர்கள் நினைத்திருந்தால் துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்திருக்கலாம் திட்டமிட்ட நாடகம் என்பது பின்னால் உறுதியானது
இவர் மட்டுமல்ல இவர் தாயார் இந்திராவும் ரேபரேலி தொகுதியில் ராஜ் நாராயணனிடம் தோற்றுப் போயிருந்தார் அப்போது ஜனதா கட்சிக்காரர்கள் சொன்னார்கள் சஞ்சய் காந்தியை எதிர்த்து கழுதையை நிறுத்தி இருந்தாலும் வெற்றி பெற்றிருக்கும், அது உண்மையும் கூட அவ்வளவு அரசியல் அழிச்சாட்டியங்கள் செய்திருந்தார்,
ஒரு வழியாக ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது வந்தவுடன் அவர்கள் செய்தது அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பஞ்சாப், அரியானா, இமாச்சல் பிரதேஷ், உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மாநிலங்கள் எல்லாம் 365 பயன்படுத்தி களைத்தது இதுவும் தவறுதான்,
இதையே இந்திராவும் செய்தார் திரும்பவும் எண்பதுகளில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு உட்பட காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை அனைத்தும் கலைக்கப்பட்டு தமிழ்நாடு மட்டும் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தார் மீதமெல்லாம் காங்கிரஸ்,
இங்குதான் எம்ஜிஆர் இடம் இந்திரா ஏமாந்தர்,
ஜனதா கட்சி ஒரு விசாரணை கமிஷனை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே சி ஷா தலைமையில் எமர்ஜென்சி காலத்திலிருந்து அநீதிகளை விசாரித்தது தான் குற்றவாளி ஆக்கப்படுவோம் என்ற பயத்தில் சொந்த மாமனார் டி எஸ் ஆனந்த் மர்மமான முறையில் செத்துப் போக வைத்தார் சஞ்சய் காந்தி அதுபோக டெல்லியில் இருந்த துணைநிலை ஆளுநர் கிசான் சந்த் கிணற்றில் இறந்து கிடந்தார் இவையெல்லாம் மர்ம மரணங்கள் சஞ்சய் காந்தியை காப்பாற்றப்பட ஆனால் இந்த ஜனதா கட்சி தனித்தனி ஈகோ பிரச்சினையால் ஆட்டம் கண்டது,
அவர் ஒத்துக் கொள்ளவில்லை விளைவு ஆட்சி கலைப்பு இதையே தான் ஜெயலலிதாவும் செய்தார் பிஜேபிக்கு எதிராக தன் மீது இருக்கும் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றார் முடியாது என்று வாஜ்பாய் மறுத்துவிட்டார்,
டெல்லியில் எப்போதுமே ஒரு சாமியார்களின் ஆதிக்கம் இருந்து கொண்டிருக்ம் டிரேந்திர பிரம்மச்சாரி என்ற ஒரு யோகா குரு அவருக்கு அமெரிக்கா ஒரு விமானத்தை இலவசமாக கொடுக்கிறது அதையும் வரி விளக்கு கொடுத்து வாங்கி கொடுத்தது இந்திரா காந்தி அவரது விமானத்தில் தான் சஞ்சய் காந்தி போய் செத்துப் போனான்,
சஞ்சய் காந்தி ஒரு விருந்துக்கு போன இடத்தில் அழகான பெண்ணை சந்திக்கிறார் அவளை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார் அவள் ஒரு மாடல் தெருவெங்கும் அவளின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது ஒரே இரவில் எல்லாம் அகற்றப்பட்டு நாலு பேர் மட்டுமே கலந்து கொண்டு அவர் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
மாருதி கம்பெனியை அரசுடைமையாக்கி அதற்கு தகுதியான நபர்களையும் நியமித்து உற்பத்தியை வேகப்படுத்தினார் 1983 டிசம்பர் 14ஆம் தேதி சஞ்சய் காந்தியின் பிறந்தநாள் அன்று முதல் காரை அவருக்கு நெருக்கமான ஏர் போர்ஸ் ஆபீஸர் ஒருவருக்கு சாவியை வழங்கி அந்த புகைப்படத்தை வெளியிட்டார் அவர் வாழ்நாள் முழுவதும் அந்த காரை பயன்படுத்தினார் அதற்கு பிறகு பராமரிக்கப்படாமல்கிடந்தது அதை கம்பெனியே தத்தெடுத்து புதுப்பித்து அதிக விலைக்கு ஏலம் என்ற போது அவர் குடும்பத்தார் அனுமதிக்கவில்லை அவர்களே அதை இன்னும் பராமரிக்கிறார்கள் அதன் எண் DIA 6479,
சுசுகி கம்பெனி தன் பங்குகளை அதிகப்படுத்தி 2000 க்கு பிறகு நிறைய மாடல்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது இன்றும் குறைந்த பராமரிப்பு தரமான கார் என்றால் மாருதி என்பதில் சந்தேகம் இல்லை அது மக்கள் கார் தான் அதுவும் மாருதி வேன் நிறைய குடும்பங்களுக்கு வீட்டில் ஒரு உறுப்பினர் போல மாறி இருந்தது இன்றும் தெருவோர பிரியாணி கடைகள் அந்த கார்களில் தான் நடக்கிறது,
காங்கிரஸ் கட்சியில் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தி மல்லிகார்ஜுன கார்கே கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்
கொஞ்சம் பின்னோக்கி போகிறேன் காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வருண் காந்தி பிஜேபியில் சேர்ந்தான்,
அவன் நினைச்சது நடக்கல அதற்கு வரலாற்று பின்னணி உண்டு வரலாறு எப்பவுமே ஒருத்தனுக்கு ஆதரவாக இருக்காது
பாபு ஜெகஜீவன் ராம் பதவிக்கு வரக்கூடாது என்று இந்திரா செய்த அரசியல் அது குறித்து கொஞ்சம் வாசித்து விட்டு போங்கள்
உத்தரப் பிரதேசம் சுல்தான்பூர் தொகுதி எம். பியான வருண்காந்தி உத்தரப் பிரதேச தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க
இவங்க
அப்பனுக்கும் ( சஞ்சய் காந்திக்கும்) கேட்டாங்க அவங்க அப்பத்தவே
(இந்திரா )மறுத்தார்
இந்த அரசியல் பரபரப்புக்கிடையில் வருண்காந்தி தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் எட்மண்ட்ஸ் ஆலன் என்பவர் கூறியுள்ள குற்றச்சாட்டு இப்போது அரசியல் அரங்கில் ஹாட் டாபிக் ஆக ஆகியுள்ளது.
எட்மண்ட்ஸ் ஆலன் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் ‘வருண் காந்திக்கும் ஆயுத தரகர் அபிஷேக் வர்மாவுக்கும் தொடர்பு உள்ளது என்றும் வெளிநாட்டு அழகிகளை வருணுடன் பழகச் செய்து அவர் நெருக்கமாக இருந்தபோது வீடியோ, புகைப் படங்களை எடுத்த அபிஷேக் வர்மா அதை வைத்து வருணை மிரட்டி இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பான ரகசிய தகவல்களை பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடிதம் எழுப்பிய பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக வருண் காந்தியை ஒத்த தோற்றத்துடன் கூடிய ஒருவர் சில அழகிகளுடன் அரைநிர்வாண கோலத்தில் இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
அதேசமயம் வருண்காந்தி சர்ச்சை தொடர்பான ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவிக்க எதிர்கட்சிகளிடையே இந்த விவகாரத்திற்கு நம்பகத்தன்மை உருவாகியுள்ளது. தனது புகைப்படம் குறித்த சர்ச்சையை மறுத்த வருண் காந்தி தன் மீது அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், குற்றச்சாட்டில் ஒரு சதவீதத்தை நிரூபித்தால்கூட அரசியலில் இருந்து தான் விலகத் தயார் என கூறியிருப்பதோடு, பிரசாந்த் பூஷண் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
புகைப்படத்தில் இருப்பது வருண் காந்தியா அல்லது அவரது புகைப்படத்தை போட்டோஷாப் முறையில் தயாரித்து உலவ விடப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து இப்போட்டோக்களை ஆய்வுக்குட்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் யாரைவேண்டுமானாலும் எங்கும் பொருத்தி அவதுாறு செய்துவிடமுடியும் இன்று.
ஆனால், கிட்டதட்ட இன்றுள்ள அறிவியல் வளர்ச்சி துளியும் வளர்ந்திராத காலத்தில் இப்போது போல நேரு காலத்து காங்கிரஸின் முக்கிய தலைவர் ஒருவரது மகனின் ஆபாச புகைப்படம் வெளியாகி சர்ச்சையானது. அந்த தலைவர் பாபு ஜெகஜீவன்ராம்.
1978 ஆண்டு மொரார்ஜிதேசாய் அரசில்
பாதுகாப்பு அமைச்சராக பாபு ஜெகஜீவன்ராம் இருந்த நேரம். இந்தியாவின் மிகப்பெரும் தலித் தலைவரான உருவெடுத்திருந்தார் அவர். எமர்ஜென்சி தோல்விக்குப்பிறகு மீண்டும் இந்திராகாந்தி அன்றைய அரசியலில் தலையெடுக்க முயன்றுவந்த நேரத்தில் அவர் பிரதமராவதற்கு முட்டுக்கட்டையாகவும் கடும்போட்டியாளராகவும் ஜெகஜீவன்ராம் இருந்தார். அன்றைய தலித் மக்களிடையே அவருக்கு இருந்த நற்பெயர் இந்திராவை உறுத்தியபடியே இருந்தது.
இந்திரா பிரதமராக இருந்தபோது அவருக்கு எதிராக ஒரு கூட்டத்திற்கு அறிவிப்பு செய்தார் பாபு ஜெகஜீவன்ராம். அந்தக் கூட்டம் வெற்றியடைந்துவிடக்கூடாது என்பதற்காக இந்தித் திரையுலகின் புகழ்பெற்ற திரைப்படமான பாபியை துார்தர்ஷனில் ஒளிபரப்பச் செய்தார் இந்திரா. மக்கள் கூட்டம் வீடுகளிலேயே முடங்கிவிட்டது. மறுநாள் வட இந்திய இதழ்களில் இந்திராவின் சாதுர்யத்தை எழுதி அதற்கு பாபு வெர்சஸ் பாபி என தலைப்பிட்டன. இப்படி பாபுவின் புகழை குலைக்கும்வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார் என்று சொல்வார்கள்.
அவர் பெரும் தலைவராக உருவானால் தன் எதிர்காலத்திற்கு அது நல்லதல்ல என்பது அவரது எண்ணம்.
அந்த நேரத்தில் தான் பாபு ஜெகஜீவன்ராமின் இமேஜை சரியும்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவரது மகன் சுரேஷ்ராம், கல்லூரி மாணவி ஒருவருடன் தனிமையில் இருக்கும் ஆபாசமான புகைப்படங்கள் தனிநபர்கள் மத்தியில் உலவின. இதைக் கேள்வியுற்ற பாபு ஜெகஜீவன்ராம் தர்ம சங்கடத்திற்கு ஆளானார். அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது. இன்றுள்ளதுபோல் மார்ஃபிங் என்றோ போட்டோ ஷாப் என்றோ தப்பிக்க முடியாத காலகட்டம் என்பதால் பெரும் சங்கடத்திற்குள்ளானார் பாபு.
திட்டமிட்டு அந்த புகைப்படங்கள், அன்றைய பிரபல பத்திரிகைகள் அனைத்திற்கும் அனுப்பப்பட்டன. ஆனால் தனிப்பட்ட விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பாத சில பத்திரிகைகள் அதை புறக்கணித்தன. மற்ற பத்திரிகைகள் அதன் நம்பகத்தன்மை குறித்து ஐயம் கொண்டு பிரசுரிக்கவில்லை. இந்த நிலையில்தான் சூர்யா என்ற மாத இதழ் மட்டும் அதை இரு கரங்களாலும் வரவேற்று வெளியிட்டது. அரசியலில் மரியாதையான இடத்தில் வைத்து மதிக்கப்பட்ட பாபு ஜெகஜீவன்ராம் இதனால் பெரும் சங்கடத்திற்கு ஆளானார். இந்திராவின் அரசியல் எதிரியை ஒழித்துக்கட்ட அன்று இந்த விவகாரத்தின் பின்னணியாக இருந்தவர் இந்திராவின் மருமகள்களில் ஒருவர்தான் என்று பின்னாளில் பேசப்பட்டது. ஆம், சூர்யா இதழின் ஆசிரியர், வேறு யாருமல்ல; இதேபோன்று ஆபாச பட சர்ச்சையில் சிக்கி அரசியல் தந்திரத்தால் பழிவாங்கப்பட்டு தர்ம சங்கடத்திற்கு ஆளாகி நிற்கும் இதே வருண்காந்தியின் தாயாரான மத்திய அமைச்சர் மேனகா காந்திதான்.
கடந்த 136 ஆண்டுக்கால காங்கிரஸ் வரலாற்றில் நான்கு தேர்தல்கள்தான் நடந்துள்ளன. தற்போது நடந்திருப்பது ஐந்தாவது தேர்தல்.”
முதல் மாநாடு 1885 டிசம்பர் 28 – இல் மும்பையில் நடந்தது. அதன் முதல் தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி நியமிக்கப்பட்டார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மதன் மோகன் மாளவியா 1909-ல் நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டிலும், அதன் பிறகு 1918 மற்றும் 1932–ல் நடைபெற்ற டெல்லி மாநாடுகளிலும், 1933–ல் நடந்த கல்கத்தா மாநாட்டிலும் நான்கு முறை காங்கிரஸ் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
காங்கிரஸின் சின்னங்களாக நுகத்தடி பூட்டிய இரட்டைக்காளைச் சின்னம், இந்திரா காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு பசுவும் கன்றும், அதற்குப் பிறகு கைச்சின்னம் ஆகியவை இருந்துவருகின்றன.
சற்றுப் பின்னோக்கி வரலாற்றுரீதியாகப் பார்த்தால், 1938–ல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நேதாஜியும், பி. பட்டாபி சீதாராமய்யாவும் போட்டியிட்டனர். அதில் நேதாஜி வெற்றிபெற்றார். இரண்டாவது முறையாக 1950–ல் புருஷோத்தம் தாஸ் தாண்டன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெ.பி. கிருபளானியும் போட்டியிட்டனர். மூன்றாவது முறையாக 1997–ல் சீதாராம் கேசரி, சரத் பவார், ராஜேஷ் பைலட் ஆகிய மூவரும் போட்டியிட்டபோது, சீதாராம் கேசரி வெற்றிபெற்றார். சீதாராம் கேசரியும் தொடர்ந்து தலைவர் பதவியில் இருக்க முடியாமல், சோனியாவின் ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதங்களையெல்லாம் அன்றைக்குப் பத்திரிகைகள் வெளியிட்டன. சீதாராம் கேசரியை செயல்படவிடாமல் தடுத்து, அவரைத் தரம்தாழ்த்தி நடத்திய நடவடிக்கைகளெல்லாம் செய்திகளாக வந்தவண்ணம் இருந்தன. நான்காவது முறையாக, 2000–ல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியாவும், ஜிஜேந்திர பிரசாத்தும் போட்டியிட்டனர். சோனியா வெற்றிபெற்றார்.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்களாக, ஜே.பி.கிருபளானி (1946 -47), பி.பட்டாபி சீத்தாராமய்யா (1948 -49), புருஷோத்தம டாண்டன் (1950), பண்டித நேரு (1951 - 1954), யூ.என்.தேபர் (1955 -1959), இந்திரா காந்தி (1959), நீலம் சஞ்சீவ ரெட்டி (1960 -1963), காமராஜர் (1964 -1967), எஸ்.நிஜலிங்கப்பா (1968 -1969) இருந்தனர். அதற்குப் பிறகு காங்கிரஸில் இரண்டாகப் பிளவு ஏற்படுகிறது. இந்திரா காங்கிரஸின் தலைவராக ஜெகஜீவன்ராம் நியமிக்கப்படுகிறார். பின் சங்கர் தயாள் சர்மா, டி.கே. பரூவா, பிரமானந்தரெட்டி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், சீத்தாராம் கேசரியிலிருந்து சோனியா காந்தி வரை காங்கிரஸ் தலைவர்களாக இருந்த பட்டியல் மிக நீளமானது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காமராஜருடைய வழிகாட்டியாக இருந்த எஸ். சத்தியமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டபோது, இரு முறை 1936, 1939-ல் தோல்வியைக் கண்டார். இவரை எதிர்த்து பக்தவத்சலத்தின் தாய் மாமனார் சி. என். முத்துரங்க முதலியார் போட்டியிட்டார். இரண்டாம் முறை ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரிடம் 1939-ல் சத்தியமூர்த்தி தோல்வியைக் கண்டார். பிறகு 1940-ல் தி. நகர் இந்தி பிரசார சபாவில் நடந்த தேர்தலில் காமராஜரும், கோவையைச் சேர்ந்த சி.பி. சுப்பையாவும் போட்டியிட்டனர். காமராஜர் வெற்றிபெற்றார்.
காங்கிரஸ் 1969–ல் இரண்டாகப் பிளவுபட்டு, நிஜலிங்கப்பா, காமராஜர், நீலம் சஞ்சீவரெட்டி, அதுல்யா கோஷ் போன்ற தலைவர்களின் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸும், இந்திரா காந்தி தலைமையில் ஆளும் காங்கிரஸ் எனவும் இரண்டு பிரிவுகளாக இந்தியாவில் செயல்பட்டன. ஆனால் தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் இயங்கிய ஸ்தாபன காங்கிரஸ் வலுவாக இருந்தது. தமிழக இந்திரா காங்கிரஸில் எம். பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் ராமையா போன்ற சிலர் மட்டுமே தலைவர்களாக இருந்தனர். காமராஜர் மறைவுக்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸைச் சார்ந்த பெரும்பாலோர் இந்திரா காங்கிரஸில் இணைந்தனர். பா. இராமச்சந்திரன் அன்றைக்கு ஸ்தாபன காங்கிரஸ் தலைவர். அவரோடு இருந்த குமரி அனந்தன், தண்டாயுதபாணி போன்றோர் இந்திரா காங்கிரஸில் இணையவில்லை. பிறகு ஜனதா கட்சியில் அவர்கள் இணைந்தனர் என்பது வேறு விஷயம்.
கடந்த 1979 - 80 காலகட்டம் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் மயிலாப்பூர் சாய்பாபா திருமண மண்டத்தில் நடந்தது. அந்தத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பழ. நெடுமாறன், கருப்பையா மூப்பனார், தஞ்சை இராமமூர்த்தி மூவரும் போட்டியிட்டனர். எட்டு ஓட்டு வித்தியாசத்தில் நெடுமாறன், மூப்பனாரிடம் தோல்வியைக் கண்டார். நெடுமாறனின் நண்பர் தஞ்சை இராமமூர்த்தி ஏறத்தாழ ஏழு ஓட்டுகள் வாங்கியிருந்தார். தஞ்சை ராமமூர்த்தி தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால், நெடுமாறனிடம் உறுதியளித்தபடி, முன்னாள் சென்னை மாகாண சட்டப் பேரவைத் தலைவராக இருந்த செல்லப்பாண்டியன் வாக்களித்திருந்தால், இன்றைய காங்கிரஸின் நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும்.
(560 கோடி கண்டைனர் மர்மம் மக்கள் மறந்தாலும் மாயாசால அரசியல் எத்தனை உயர் பலி ஆகுமோ )
புது டெல்லி பார்லிமென்ட் ஸ்ட்ரீட் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.
தலைமைக் காசாளர் மல்ஹோத்ராவுக்கு ட்ரிங்..ட்ரிங். தொலைபேசியை எடுத்தவர் ஆடிப் போய் விட்டார். எதிர்முனையில் பிரதமர் இந்திராகாந்தி.
"தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்துக்காக அவசரமாக அறுபது லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. பணத்தை எடுத்துக் கொண்டு உடனே வரவும்!"
அது 1971 மே 21. பிரதமர் இந்திராகாந்தியின் குரலில் பேசியவர் நகர்வாலா என்பவர். தமிழ்ச்சினிமாவில் வருவது போல் அவர் ஒரு பாஸ்வேர்ட் சொல்ல மல்ஹோத்ரா பதில் பாஸ்வேர்ட் கூறிவிட்டுப் பணம் கொடுத்தார். எவ்வித நடைமுறைகளும் இன்றிப் பணம் பெறப்பட்டது. பின்னர் ரசீது வாங்க பிரதமரின் வீட்டிற்குப் போனார் மல்ஹோத்ரா.
அவருக்கு அங்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
பிரதமர் எந்தப் பணமும் கேட்கவில்லை. மிமிக்ரி குரல் மோசடி மூலம் பணம் பெறப்பட்டுள்ளது.
போலீசுக்குப் புகார் பறந்தது.
ஒரே நாளில் நகர்வாலா கைது செய்யப்பட்டார். அவர் எக்ஸ் ஆர்மி கேப்டன். இந்திய உளவுத்துறையின்முன்னாள்
அதிகாரி.அவரிடமிருந்துபெரும்பாலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மல்ஹோத்ராவிடம்
வாக்குமூலம் பெறப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்.
நகர்வாலா வழக்கைப் புலன்விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் காஷ்யப் விபத்தில்
இறந்தார். காஷ்யப் மரணத்தை விசாரிக்க ராமநாதன் என்பவர் வந்தார். விசாரணை
சம்பந்தமாக டெல்லியிலிருந்து ஆக்ரா போகும்போது லாரி மோதி அவரும் மரணமடைந்தார்.
இந்த ஊழலை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் மார்க்சிஸ்ட் உறுப்பினர்
ஜோதிர்மயி பாசு அவசரநிலைக்காலத்தில் அவரக் கைது செய்து.சித்திரவதை செய்தார்கள்.
அவரும் குற்றுயிரும் குலை உயிருமாக வெளியே வந்து இறந்தார்.
1977ல் ஜனதா ஆட்சியின்போது, நகர்வாலா ஊழல் குறித்து விசாரிக்க பி.ஜகன்மோகன்
ரெட்டி கமிஷன் அமைக்கப் பட்டது. பெரியளவில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
நகர்வாலாவுக்கும் இந்திராகாந்திக்கும் அறிமுகம் இருந்தது என்பதும், சிறையிலிருந்தபோது நகர்வாலா எழுதிய கடிதத்தில், நாட்டின் நலன் கருதி சில உண்மைகளை சொல்ல விரும்புவதாக
அவர் குறிப்பிட்டிருந்ததும் ஊடகங்கள் மூலமாக வெளிப்பட்டன.
பின்னாட்களில் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் மாருதி கார்க் கம்பெனி "மாருதி உத்யோக் " ஆனது. மல்ஹோத்ரா அதில் நிர்வாக இயக்குனர் ஆனார்.
இன்று வரை யாருக்கும் விடை தெரியாத கேள்விகள் என்னவென்றால்-
தொலைபேசிக் குரலுக்கு அறுபது லட்ச ரூபாய் வங்கிப் பணத்தை எடுத்துக் கொடுப்பது அதுதான் முதல் முறையா?
இந்திராகாந்திக்கு அந்த வங்கியில் கணக்கு உண்டா?
எந்த அடிப்படையில் வங்கிப் பணம் பேங்க்கை விட்டு வெளியே எடுத்துச் செல்லப்பட்டது?
பத்து நிமிடத்தில் நீதிமன்ற விசாரணை எப்படி முடிந்தது? பிரதமர் குரலில் பேச நகர்வாலாவால் முடியுமா என்று கூடச் சோதனை
நடத்தப்படவில்லையே, அது ஏன்?
பாதிக்கப்பட்டவர்கள் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?
இந்திரா காந்தியுடன் நெருக்கமாக இருந்து இந்திய
அரசியலில் செல்வாக்கு செலுத்தியவர் யோகா
குரு
தீரேந்திர பிரம்மச்சாரி.
அவர்
இந்திரா காந்தியின் யோகா
ஆசிரியர் என்பதால், மத்திய
அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் பல
முக்கிய நபர்கள் அவரைச்
சந்திக்க வரிசையில் காத்திருப்பார்கள். அவர்
நீல
நிற
டொயோட்டா காரை
தானே
ஓட்டுவார். அதோடு,
4 இருக்கைகள் கொண்ட
செஸ்னா
விமானம், 19 இருக்கைகள் கொண்ட
டோர்னியர் விமானம், மேலும்
மால்-5
போன்ற
தனியார் விமானங்களும் அவரிடம் இருந்தன. அவற்றையும் அவர்
தானே
இயக்குவார்.
அவருக்கு அதிகமான அரசியல் செல்வாக்கு இருந்ததாக கூறப்படுகிறது. கோபம்
வந்தால், அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும், அமைச்சர்களின் துறைகளை மாற்றவும் முடியும் என்ற
அளவுக்கு அவர்
செல்வாக்கு கொண்டிருந்தார் என்று
கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் இந்தர்
குமார்
குஜ்ரால், தனது
சுயசரிதை ‘Matters of Discretion’ நூலில் இதைப்
பற்றி
குறிப்பிட்டுள்ளார். அவர்
எழுதுவது:
தான்
வீட்டுவசதி துறை
இணையமைச்சராக இருந்தபோது, டெல்லியில் கோல்
டாக்
கானா
அருகிலுள்ள ஒரு
அரசு
நிலத்தை தனது
ஆசிரமத்திற்காக மாற்றித் தரும்படி பிரம்மச்சாரி வற்புறுத்தினார். குஜ்ரால் அதற்கு
ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர், பிரம்மச்சாரி தொலைபேசியில் மிரட்டி, “என்
வேலையை
செய்யவில்லை என்றால், உன்னை
பதவியில் இருந்து குறைப்பேன்” என்று
கூறியதாக அவர்
எழுதியுள்ளார்.
ஒரு
வாரம்
கழித்து அமைச்சரவை மாற்றத்தில், உமாசங்கர் தீட்சித் அவரை
விட
மேலான
பதவியில் நியமிக்கப்பட்டார். குஜ்ரால் இந்த
சம்பவத்தை இந்திரா காந்தியிடம் கூறியபோதும், அவர்
அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். பின்னர் உமாசங்கர் தீட்சித்தும் அந்த
நிலத்தை வழங்க
மறுத்ததால், அவரும்
மாற்றப்பட்டதாக குஜ்ரால் எழுதுகிறார்.
1963ஆம் ஆண்டு,
தனது
யோகா
மையத்திற்கான மானியத்தை புதுப்பிக்க கல்வி
அமைச்சர் கே.எல். ஸ்ரீமாலியிடம் பிரம்மச்சாரி கோரிக்கை வைத்தார். அதற்கான கணக்குத் தகவலை
ஸ்ரீமாலி கேட்டார். இந்த
விஷயம்
நேருவிடம் சென்றபோதும், அவர்
ஸ்ரீமாலியின் முடிவை
மாற்றவில்லை. பின்னர் ஸ்ரீமாலி ராஜினாமா செய்தார். சிலர்
இது
இந்தச்
சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதினர்.
பிரம்மச்சாரி 1924 பிப்ரவரி 12ஆம்
தேதி
பிகாரின் மதுபனி
மாவட்டத்தில் பிறந்தார். அவரது
இயற்பெயர் திரேந்திர சௌத்ரி.
இளமையில் வீட்டை
விட்டு
வெளியேறி யோகா
பயிற்சி பெற்றார். 1958ஆம்
ஆண்டு
டெல்லி
வந்தார்.
அவர்
முதலில் நேருவுக்கும் பின்னர் லால்
பகதூர்
சாஸ்திரி, ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய்,
டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பல
தலைவர்களுக்கும் யோகா
கற்றுத்தந்ததாக கூறப்படுகிறது. 1959ஆம்
ஆண்டு
‘விஸ்வயதன் யோகா
ஆசிரமம்’ என்ற
மையத்தை தொடங்கினார். அதை
நேரு
திறந்து வைத்தார்.
அவருக்கு கல்வி
அமைச்சகத்திலிருந்து மானியம் கிடைத்ததாகவும், ஜந்தர்
மந்தர்
சாலையில் அரசு
பங்களா
வழங்கப்பட்டதாகவும் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளில் கூறப்படுகிறது.
இந்திரா காந்தியின் தோழி
டோரதி
நார்மன் எழுதிய
கடிதங்களில், “ஒரு
அழகான
யோகி
எனக்கு
யோகா
கற்றுத்தருகிறார்” என்று
இந்திரா குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.
பிரம்மச்சாரியின் தோற்றமும், உடல்
அமைப்பும் பலரை
ஈர்த்ததாக கூறப்படுகிறது. ஆனால்
அவருடன் பேசுவது சிரமமான அனுபவமாக இருந்ததாக சிலர்
எழுதியுள்ளனர்.
“அவர் ரொம்பவே மூடநம்பிக்கை பிடிச்சவர்”ன்னு
டோரதி
எழுதுறார்.
ஆனா
இந்த
தீரேந்திர பிரம்மச்சாரி எப்பவும் கம்பளி
துணி
எல்லாம் போட்டதே கிடையாது.
மூத்த
பத்திரிக்கையாளர் திலீப்
பாப்,
1980 நவம்பர் 30-ம்
தேதி
இந்தியா டுடேல எழுதிய கட்டுரையில,
இந்த
சுவாமியை ஆறடி
உயரம்,
ஒல்லியான உடல்,
எப்பவும் மெல்லிய முஸ்லின் துணி
மட்டும் கட்டிக்கிட்டு திரியுற ஆள்னு
சொல்றார்.
கையில
எப்பவும் ஒரு
வெள்ளை
தோல்
பை
– பார்ப்பதுக்கு பெண்கள் கைப்பை
மாதிரி
இருக்கும்னு கூட
எழுதுறார்.
அவர்
சொல்வதப்படி,
“இந்த
சுவாமி
முழுக்க முழுக்க முரண்பாடுகளால ஆனவன்.
பதவி
எதுவும் இல்ல.
ஆனா
அதிகாரம் மட்டும் கணக்கே
இல்ல.
துறவின்னு சொல்லிக்கிட்டு ஆடம்பர
வாழ்க்கை.
பிரதமரையே நேரா
சந்திக்கிற யோகா
குரு.
மக்கள்
பயப்படுவாங்க, அதே
நேரம்
மரியாதையும் கொடுப்பாங்க.”
ஸ்ரீநகர்ல பனிக்குளிரா இருந்தாலும் சரி,
மாஸ்கோல மைனஸ்
டிகிரி
போனாலும் சரி,
இந்த
ஆள்
கம்பளி
துணியையே தொடமாட்டார்.
மெல்லிய துணி
தான்
எப்பவும்.
அப்போ
அவருக்கு வயசு
60.
ஆனா
பார்க்க 45 வயசு
மாதிரி
இருப்பாராம்.
இந்திரா காந்திக்கு நெருக்கமான நட்வர்
சிங்
சொல்றார்:
“சுவாமி
எனக்கு
யோகா
கத்துக்கொடுத்தார்.
நாலு–ஐந்து மாதத்துல எனக்கு
இருந்த
ஆஸ்துமா சரியாகிடுச்சு.”
ஒவ்வொரு புதன்கிழமையும்
தூர்தர்ஷன்ல யோகா
நிகழ்ச்சி நடத்துவார்.
அதனால
தான்
70கள்ல
யோகா
நாடு
முழுக்க பிரபலமாச்சு.
அந்த
காலத்துல சஞ்சய்
காந்தியோட ரொம்ப
நெருக்கமா இருந்து,
காந்தி
குடும்பத்துக்குள்ளேயே ஒருத்தர் மாதிரி
ஆகிட்டார்.
“யோகா கத்துக்கொடுப்பதுன்னு சொல்லி
இந்திரா காந்தியின் ரூமுக்குள்ள தனியா
போகக்கூடிய ஒரே
ஆள்
இந்த
பிரம்மச்சாரிதான்”
ன்னு
கேத்தரின் ஃபிராங்க் எழுதுறார்.
அதனாலதான் அவரை
“இந்தியாவின் ரஸ்புடின்”னு
சொல்ல
ஆரம்பிச்சாங்க.
ஆனா
இந்திரா காந்தியின் பழைய
நண்பர்
பி.டி. டாண்டன்,
“இது
எல்லாம் வெறும்
வதந்தி”ன்னு அடிச்சே சொல்றார்.
நேருவே
தன்
மகளுக்கு யோகா
கத்துக்கொடுங்கன்னு
பிரம்மச்சாரியைக் கேட்டாராம்.
சில
சமயம்
நேருவே
யோகா
கத்துக்கிட்டாராம்.
ஆனா
எமர்ஜென்சி காலத்துல
இந்திராவுக்கு எல்லார்மேலும் சந்தேகம் அதிகமானதும்,
இந்த
சுவாமியின் செல்வாக்கு ரொம்பவே பெருசா
போச்சு.
“உங்களுக்கு எதிரியா இருக்குறவங்க
மந்திரம், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி
எல்லாம் பயன்படுத்தி
தீங்கு
செய்ய
பார்க்குறாங்க”
ன்னு
சொல்லி
சொல்லி
இந்திரா காந்தியின் பயத்தை
இன்னும் அதிகப்படுத்துவாராம்.
பிறகு
அதிலிருந்து தப்பிக்க சடங்கு,
மந்திரம் எல்லாம் சொல்வாராம்.
இந்திரா காந்தி
அவர்
சொன்னதையெல்லாம் நம்பினது மட்டும் இல்ல,
அரசியல் விஷயங்களில கூட
அவருடைய ஆலோசனையை கேட்டாராம்.
இதுல
சுவாமிக்கு சுயநலம் இருக்கும்னு
அவர்
நினைச்சே பார்க்கலன்னு
புபுல்
ஜெயகர்
எழுதுறார்.
ஷா
கமிஷன்
ரிப்போர்ட்ல
இந்த
செல்வாக்கைப் பயன்படுத்தி
சுவாமி
எப்படி
செல்வம் சேர்த்தார்னு தெளிவா
சொல்லப்பட்டிருக்கு.
1976க்குப் பிறகு
அமெரிக்காவிலிருந்து நாலு
சீட்
கொண்ட
எம்-5
விமானம் வாங்க
அரசாங்க அனுமதி
கேட்டார்.
அதுவும் கிடைச்சுது.
இறக்குமதி வரியும் இல்ல.
காஷ்மீர்ல தனியா
விமான
ஓடுதளமும் அனுமதி.
பாகிஸ்தான் எல்லைக்கு பக்கத்துல இருந்தும்
பாதுகாப்பு விதிகள் எல்லாம் மீறப்பட்டுச்சு.
1977-ல இந்திரா காந்தி
தோற்ற
பிறகு
வருமான
வரித்துறை
காஷ்மீர்ல உள்ள
அபர்ணா
ஆசிரமத்துக்கு போனப்ப,
பளிங்குத் தரை,
ஆடம்பர
அலங்காரம்,
நாலு
குளியலறை, பத்து
தொலைபேசி
எல்லாமே இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டாங்க.
“இது ஆசிரமம் இல்ல,
பணக்காரங்களுக்கும் செல்வாக்கு உள்ளவங்களுக்கும்
விடுமுறை விடுதி
மாதிரி
இருக்கு”
ன்னு
ஷா
கமிஷன்
தன்
அறிக்கையில சொல்லிச்சு.
இந்திரா காந்தி
மீண்டும் பிரதமராக வந்தபோது, தீரேந்திர பிரம்மச்சாரி மீது
இருந்த
எல்லா
வழக்குகளும் ரத்து
செய்யப்பட்டன. அவர்
மீண்டும் பிரதமர் இல்லத்தில் அடிக்கடி வரத்
தொடங்கினார். காந்தி
குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார்.
சஞ்சய்
காந்தி
அவரை
மிகவும் மதித்தார். ஜனதா
அரசு
ஆட்சியில் இருந்தபோது கூட
பிரம்மச்சாரி இந்திரா மற்றும் சஞ்சய்க்கு ஆதரவாக
இருந்தார். அதற்காக இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு பல
சலுகைகள் கிடைத்தன. பறிமுதல் செய்யப்பட்ட விமானமும் திருப்பி அளிக்கப்பட்டது.
பிரம்மச்சாரி முதலில் யோகா
ஆசிரியராக இந்திரா வீட்டிற்கு வந்தார். ஆனால்
பின்னர் குடும்பத்தின் நெருங்கியவராக மாறினார். சஞ்சயுடன் அவர்
விமானம் ஓட்டுவதிலும் ஆர்வம்
கொண்டார். சஞ்சயின் மாருதி
நிறுவனத்தில் பணமும்
முதலீடு செய்திருந்தார்.
மேனகா
காந்தியை வீட்டிலிருந்து வெளியேற்றிய சம்பவத்தில் கூட
பிரம்மச்சாரி இருந்தார். சஞ்சய்
இறந்தபிறகு, இந்திரா காந்தி
அவரை
மேலும்
நம்பத்
தொடங்கினார். தனிப்பட்ட விஷயங்களிலும் அவரை
நெருங்கியவராக வைத்திருந்தார்.
அவரது
யோகா
ஆசிரமத்திற்கு அமைச்சர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் வரிசையில் வந்து
அவரை
சந்திப்பது வழக்கமாக இருந்தது.
ஆனால்
ராஜீவ்
காந்தி
முன்னேறியபோது, பிரம்மச்சாரியின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. ராஜீவ்
அவரை
விரும்பவில்லை. ஒரு
கட்டத்தில் அவர்
பிரதமர் இல்லத்திற்குள் வரவே
அனுமதி
மறுக்கப்பட்டது. தூர்தர்ஷனில் வந்த
அவரது
யோகா
நிகழ்ச்சியும் திடீரென நிறுத்தப்பட்டது.
இவ்வாறு, இந்திரா காந்தி
காலத்தில் மிகுந்த செல்வாக்கு கொண்டிருந்த தீரேந்திர பிரம்மச்சாரி, ராஜீவ்
காந்தி
காலத்தில் புறக்கணிக்கப்பட்டார்.
செய்ததாக எங்கும் செய்தி பரவியது. பிரம்மச்சாரி காரணமாக இந்திரா காந்திக்கு அவப்பெயர் ஏற்படக்கூடாது என்று ராஜீவ் கருதினார்," என இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறான 'இந்திரா எ பொலிட்டிகல் அண்ட் பெர்சனல் பயக்ராஃபி' என்ற புத்தகத்தில் இந்தர் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு அவரிடம் செல்ல சுவாமி கடைசி முயற்சியை மேற்கொண்டார். இந்திரா காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டபோது, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தார்.
ராஜீவின் அறிவுறுத்தலின் பேரில், தீரேந்திர பிரம்மச்சாரி அங்கிருந்து அமைதியாக இறக்கிவிடப்பட்டதாகவும், இந்திரா காந்தியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்தில் அவர் மீண்டும் வர அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
வெளிநாட்டு ஆயுதங்களை வைத்திருந்தது மற்றும் விற்றது தொடர்பாக தீரேந்திர பிரம்மச்சாரி மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதற்குப் பிறகு, டெல்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம், அதை இலவசமாகப் பயன்படுத்தி வந்த பிரம்மச்சாரியிடம் கேட்கப்பட்டது.
அவருடைய பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே சென்றன. சம்பள உயர்வுக்காக அவரது ஆசிரம ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
சஞ்சய் காந்தியைப் போலவே தீரேந்திர பிரம்மச்சாரியும் ஜூன் மாதத்தில் விமான விபத்தில் இறந்தார். தனது ஆசிரமத்தை விரிவுபடுத்துவதற்காக சில காலத்திற்கு முன்பு வாங்கிய நூறு ஏக்கர் நிலத்தை அப்போது அவர் வான்வழியே ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
மோசமான வானிலை நிலவுவதால்புறப்பட வேண்டாம் என்று அவரது விமானி அறிவுறுத்தினார். ஆனால் பிரம்மச்சாரி அவருடைய அறிவுரையைக் கேட்கவில்லை. மாந்தலாயில் தரையிறங்க முயன்ற போது, அவரது விமானம் முட்புதரில் விழுந்து நொறுங்கியது. அவர் இறந்த பிறகு நியூயார்க் டைம்ஸ் அவரைப் பற்றி மூன்று பத்திகள் கொண்ட கட்டுரையை வெளியிட்டது. ஆன்மிகத்தின் பலத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்ட முதல் நபர் தீரேந்திர பிரம்மச்சாரி அல்ல. ஆனால் அவருக்கு முன் எந்த ஒரு துறவியும் இவ்வளவு காலம் மற்றும் இவ்வளவு தன்னம்பிக்கையுடன் அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தவில்லை.
Lion Raja Ganesan









Comments
Post a Comment