தமிழ் திரைப்படப் பாடல்களில் இடதுசாரி சிந்தனை



இலக்கியங்களில் நகைச்சுவை காட்சிகள் உண்டு அதுபோல தமிழ் திரை உலகில் பாடல்கள் அதிலும் காதல் பாடல்கள் இடதுசாரி சிந்தனையை அங்கங்கே சொருகி இருப்பார்கள் ,1,கண்ணதாசன் 

நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே என்று தொடங்கும் பாடலில் சரணத்தில் ஜெயலலிதாவை பார்த்து இப்படி பாடுவார் ஆலயம் செய்தோம் அங்கே அனுமதியில்லை நீ அந்தக் கூட்டமே அதில் அதிசயம் இல்லை என்று பாடியிருப்பார் கண்ணதாசன் சொருகிய வரிகள் அந்த நேரத்தில் அவர் திமுகவில் இருந்தார் என்று நினைக்கிறேன்



https://www.youtube.com/watch?v=cVHn0re55m4

2 ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 

என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே என்ற பாடலில் பட்டுக்கோட்டை இதேபோல சரணத்தில்

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே நீ கேட்காமல் பறித்து விடு அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே இது அவள் தந்த பாடம் அடி என்றுஅவளையும் கோர்த்து விட்டிருப்பார் ,இருக்கிறவன் கொடுக்க மாட்டான் பசித்தவன் விடமாட்டான் என்பதை காதல் பாட்டில் சொருகி இருப்பார் 

https://www.youtube.com/watch?v=eerkWvGpHDY


3,மருதகாசி 

அடுத்தது மருதகாசி எல்லாமே கல்வெட்டு தான் ஆட வந்த தெய்வம் படத்தில், மழை பெய்கிறது அது இங்கே மெதுவாகவும் அங்கே வேகமாகவும் பெய்கிறது இதை கவிஞன் தன் இடதுசாரி பார்வையில்

இவர் பல்லவியிலேயே மழை குறித்து மழை சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே எப்படி என்றால் கஷ்டப்படும்

ஏழை சிந்தும் நெற்றி வியர்வை போல அவன் கஞ்சிக்காக கதறி அழும் கண்ணீர் துளியை போலே என்று சொல்லிவிட்டு ,

அங்கே பெண் குரல், முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே  துட்டு ப் படைச்ச சீமான் அள்ளி கொட்டுற வார்த்தை போல கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே  


https://www.youtube.com/watch?v=phwFPxtWFsE  

4.புலமைப்பித்தன்

அடுத்து புலவர் புலமைப்பித்தன் இவர்கள் எம்ஜிஆர்  திமுகவில் இருந்தபோது நல்ல பாடல்களை இடது சாரி சிந்தனையோடு எழுதி இருக்கிறார் , அதிலும் நேற்று இன்று நாளை படத்தில் பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று அருமையான பல்லவி அதில்" எல்லைகள் இல்லா உலகம் என் இதயமும் அதுபோல் நிலவும் புதுமை உலகம் புலரும் யாரும் வாழ பாடும் காற்றும்நானும் ஒன்றுதானே என்று சரணத்தில் எழுதியிருப்பார்



https://www.youtube.com/watch?v=LO9Z3RY7HDY

5,வைரமுத்து 

 வெட்டி வேறு வாசம் வெடலப்புள்ள நேசம் அந்தப் பாடலில் மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு அருமையான வர்ணனை அங்கே ஒரு சரணத்தில் குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது என்று எழுதி இருப்பார் அந்த சரணத்தில் சாதி மத பேதம் எல்லாம் முன்னவர்கள் செய்த மோசம் என்று எழுதி வைத்திருக்கிறார்

https://www.youtube.com/watch?v=F0lYy2cdZrA



6.மு, மேத்தா 

வேலைக்காரன் படத்தில் ஒரு காதல் பாட்டு வா வா கண்ணா வா கவிதை தா இந்தப் பாடலின் சரணத்தில் தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம் மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்        மு மேத்தா ஒரு இஸ்லாமியர் என்பது தான் சிறப்பு  

https://www.youtube.com/watch?v=4HH_KW0GD80   

நன்றி ஆலங்குடி வெள்ளைச்சாமி 

Comments

Popular posts from this blog

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

தேர்தல் வரலாறு

சமூகவியல், சாதிய கட்டமைப்பு , Lion Raja Ganesan