திராவிடம் தமிழ் தேசியம் lion Raja Ganesan
திராவிடர் என்பது மக்கள் வழக்குச் சொல்.
பாகவத
புராணம் எனும்
சமஸ்கிருத நூலில்,
ஆரியர்களை எதிர்க்கும் சத்தியவீரன் எனப்படும் அரசனை
“திராவிடபதி” என்று
குறிப்பிடுகிறது. அதைப்
போலவே,
பெரியபுராணத்தை ஆரியர்கள் “திராவிட சாஸ்திரம்” என்று
குறிப்பிடுகின்றனர். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தையும் “திராவிட வேதம்”
என்றே
அழைக்கின்றனர்.
18ஆம் நூற்றாண்டில் தாயுமானவர் பாடல்களில் “தமிழ்”
என்பதற்கு “திராவிடம்” என்ற
சொல்லைப் பயன்படுத்தியிருப்பதை காணலாம். அதேபோல், சிவஞான
முனிவரின் மெய்கண்டான் நூல்
விளக்க
உரையில் “திராவிட மாபாடியம்” என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,
சபாபதி
எழுதிய
தமிழ்
இலக்கிய வரலாற்றில் “திராவிடப் பிரகாசிகை” என்ற
பெயர்
இடம்பெற்றுள்ளது. இவை
அனைத்தும் “திராவிடம்” என்ற
சொல்
மக்கள்
புழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் ஆகும்.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் குமரில
பட்டர்,
தெலுங்கு மொழியை
“ஆந்திர
திராவிட பாஷை”
என்று
குறிப்பிடுகிறார். இவை
சில
உதாரணங்கள் மட்டுமே. இதுபோன்ற திராவிடம் குறித்த குறிப்புகள் ஏராளமாக உள்ளன.
இவை
பெரும்பாலும் சமயச்
சார்புடையவை. காரணம்,
தமிழில் உள்ள
பக்தி
இலக்கியங்களை சிலர்
நகைச்சுவையுடனும் ஏளனத்துடனும் “திராவிட இலக்கியம்” என்று
குறிப்பிடியுள்ளனர். இதன்மூலம் “ஆரிய
பாசுரம்”, “திராவிட பாசுரம்” என்று
பிரித்துக் காட்டும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும்,
கி.பி. 470ஆம் ஆண்டில் களப்பிரர் ஆட்சிக்காலத்தில், வஜ்ரநந்தி என்ற
சமண
முனிவர், பார்ப்பனப் பண்பாட்டிற்கும் வேத,
சாஸ்திர, புராண
மரபுகளுக்கும் எதிராக,
மதுரையைத் தலைநகராகக் கொண்டு,
தமிழ்நாடு முழுவதும் “திராவிடச் சங்கம்”
ஒன்றை
நிறுவியதாக கூறப்படுகிறது.
இதனால்,
ஆரிய
பார்ப்பன மரபுக்கு எதிரான
ஒரு
பண்பாட்டு நிலைப்பாடு தமிழர்களிடையே வரலாற்று தொடர்ச்சியாக இருந்ததை அறிய
முடிகிறது.
இதையும் விட
முக்கியமாக, கி.மு. 2ஆம் நூற்றாண்டில் ஒரிசா
மாநிலம் உதயகிரி அருகே
உள்ள
ஹத்திகும்பா (Hathigumpha) கல்வெட்டில், கலிங்க
மன்னன்
காரவேலன் “திரமிள
சங்கம்”
குறித்துக் குறிப்பிடுகிறார். வடக்கிலிருந்து வரும்
படையெடுப்புகளைத் தடுக்க,
தமிழ்நாட்டிலுள்ள சிற்றரசர்கள் ஒன்றிணைந்து அமைத்த
கூட்டமைப்பை “திரமிள
சங்கம்”
என்று
குறிப்பிடுகிறது. இதனை
சிலர்
“திராவிடர் சங்கம்”
என
விளக்குகின்றனர்.
காலப்போக்கில் சொற்களின் பொருள்
மாறிக்கொண்டே இருக்கும். ஆரிய
பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரானவர்களை “திராவிடர்” என்று
குறிப்பிடும் வழக்கம் இருந்ததை பல
ஆதாரங்களின் மூலம்
புரிந்துகொள்ளலாம். இது
மக்கள்
வழக்காற்றுச் சொல்லாகவும் இருந்துள்ளது.
ஆனால்,
“திராவிடம்” என்ற
சொல்லை
நிலம்,
இனம்,
மொழி
என்று
குழப்பமாக விளக்குவதால், அது
விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. இதனை
அறிவியல் அடிப்படையில் இனம்
எனவும்
வகைப்படுத்த முடியாது; மரபணு
ஆய்வுகளிலும் “திராவிட” எனும்
தனிப்பட்ட மரபினம் இல்லை.
வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, ஜாதி–மத சாஸ்திர, புராண
ஆரிய
பண்பாட்டிற்கு மாற்றான வாழ்வியலைக் கொண்டவர்களே “திராவிடர்கள்” எனக்
குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் வாழும்
பகுதி
“திராவிடம்”; அவர்கள் பேசும்
மொழி
“தமிழ்”
எனப்
புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
இந்த
கருத்தை வரலாற்றுத் தொடர்ச்சியுடன் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது தான்
அதன்
பொருள்
தெளிவாகப் புரியும். இல்லையெனில், காலமாற்றத்திற்கேற்ப கருத்துக்களைப் புதுப்பிக்காமல் அதே
பாணியில் விளக்கிக் கொண்டிருப்பது சமூக
அரசியல் வளர்ச்சிக்கும் சிந்தனை வளர்ச்சிக்கும் தடையாக
இருக்கும்.
காலம்
மாறுகிறது; சிந்தனைகள் மாறுகின்றன. பல
தத்துவங்களே தங்களை
நவீனப்படுத்திக் கொள்ளும் போது,
“திராவிடம்” என்ற
சொல்லின் பொருளும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது.
இன்றைய
சூழலில், இந்த
விவாதங்களை மீண்டும் சிந்தித்து, காலத்திற்கேற்ற விளக்கங்களை வழங்க
வேண்டிய அவசியம் உள்ளது.
தமிழ்த் தேச விடுதலை – எளிய விளக்கம்
“தேய்” என்ற
சொல்
நெருக்கம் என்று
பொருள்
தருகிறது. மக்கள்
நெருக்கமாக வாழும்
இடத்தைத் தான்
தமிழில் தேயம்
என்று
சொன்னார்கள்.
ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள் வாழும்
நிலமும், அந்த
நிலத்தில் வாழும்
மக்களும் சேர்ந்ததுதான் தேயம்.
சமஸ்கிருதத்தில் இதற்கு
சரியான
சொல்
இல்லாததால், தமிழின் “தேயம்”
என்ற
சொல்லை
எடுத்துக் கொண்டு
தேசம்,
தேஷம்,
தேஷியம் என்று
மாற்றிக் கொண்டார்கள்.
அதனால்தான் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற
பெயர்கள் வந்தன.
தமிழுக்கு இது
ஒரு
பெரிய
பிரச்சனையாகத் தோன்றவில்லை. ஏனென்றால், நாடு,
நாட்டு
மக்கள்
என்ற
சொற்கள் தமிழில் ஏற்கனவே இருந்தன.
“தேசியம்” எப்படி
வந்தது?
தந்தை
பெரியார் சொல்வார்:
“பால் தயிராகி விட்ட
பிறகு,
தயிரிலிருந்து மீண்டும் பாலை
எடுக்க
முயல்வது தேவையா?”
அதுபோல,
தமிழில் இருந்த
தேயம்
என்ற
சொலை
விட்டுவிட்டு, சமஸ்கிருதத்தில் இருந்து வந்த
தேசியம் என்ற
சொல்லை
நாம்
மீண்டும் இறக்குமதி செய்தோம்.
இது
தமிழ்
மீது
கொண்ட
பற்று
அல்ல.
சட்ட
சிக்கல்களிலிருந்து தப்பிக்க செய்த
அரசியல் ஏற்பாடு தான்.
தமிழ்த் தேச
விடுதலை என்றால் என்ன?
தேச
விடுதலை என்றால்,
ஒரு
நிலத்தை ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பது.
அதனால்,
தமிழ்த் தேச
விடுதலை என்றால்
தமிழர்களின் தாய்நாட்டை அடக்குமுறைகளிலிருந்து மீட்டெடுப்பது.
முதலில் தேசமா?
அல்லது
தேசியமா?
பலர்
“தேசம்
முதலில் வந்தது”
என்பார்கள்.
ஆனால்
பேரறிஞர் அண்ணா
சொன்னது வேறு:
“முதலில் தேசியம். பிறகுதான் தேசம்.”
இதுதான் அறிவியல் உண்மை.
மக்கள்
ஒன்றாக
வாழும்போது,
“நாம்
ஒரு
குழு”
என்ற
உணர்வு
உருவாகிறது.
அந்த
உணர்வு
மொழி,
பொருளாதாரம், பண்பாடு வழியாக
வலுப்பெறுகிறது.
அதுவே
தேசியம்.
அந்த
தேசியத்தின் அடிப்படையில்தான்
ஒரு
நில
எல்லை
வரையறுக்கப்படுகிறது.
அதுதான் தேசம்.
எளிமையாகச் சொன்னால்:
தேசியம் = ஒரு
இனத்துக்கான அரசியல்.
இன்றைய “தமிழ்த் தேசியம்” உண்மையா?
இன்று
தமிழ்த் தேசியம் பேசுவோர்,
உண்மையில் தமிழின
அரசியலைப் பேசுகிறார்களா?
அல்லது
வேறு
அரசியலை மறைத்து பேசுகிறார்களா?
இதுதான் இன்றைய
சர்ச்சை.
ஒரு வரலாற்றுப் பிழை
ஒரு
காலத்தில்,
“திராவிட இயக்கத்திற்கு தமிழ்த் தேசியம் இல்லை”
“திராவிடம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது”
என்று
தீவிரமாகப் பரப்பப்பட்டது.
ஈழப்
போர்,
பிரபாகரன் ஆகியவை
இதற்குப் பயன்படுத்தப்பட்டன.
இதனால்
இளைஞர்கள் குழப்பத்தில் சிக்கினார்கள்.
அதன்
விளைவாக,
பெரியாரும்
திராவிட இயக்கமும்
தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன.
பராசக்தி – புரிதல் இழந்த
படம்
இந்த
போலித்
தமிழ்த் தேசியத்தின் தாக்கத்தால்தான்
பராசக்தி போன்ற
படங்களின் உண்மையான அரசியல்
புதிய
தலைமுறைக்கு சென்று
சேரவில்லை.
விளம்பரம் போதவில்லை.
ஏனென்றால்,
“குதிரை போன
பிறகு,
லாயத்தைப் பூட்டிய கதை”
அதுவாகிவிட்டது.
பெரியார் என்ன
சொன்னார்?
1955-ல் பெரியார் எழுதியது தெளிவானது:தெலுங்கர், மலையாளி, கன்னடர் – இன உணர்வும் சுயமரியாதையும் பகுத்தறிவும் இல்லாதவர்கள் வட இந்திய ஆதிக்கத்துக்கு அடிமையாக இருப்பதில் அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை
அதனால், அவர்கள் பிரிந்தது தமிழருக்கு நல்லதே
என்று
பெரியார் சொன்னார்.
பெரியாரின் நேரடி
அழைப்பு
பெரியார் ஒளிந்து பேசவில்லை.
இந்திய
தேசியத்துக்குள் மறையவில்லை.
அவர்
இடியாய் சொன்னார்:
“தமிழர்களின் இழிவு
நீங்க
தனி
நாடுதான் தீர்வு!”
“தமிழ்நாடு தமிழருக்கே!”
என்று
கத்துங்கள்!
எழுதுங்கள்!
போராடுங்கள்!
“நம் வீட்டுக்குள் அந்நியன் எஜமானாக இருந்தால்,
அதைவிட
மானக்கேடு வேறு
என்ன?”
ஒரு இனத்திற்கான அரசியல்
இந்த
உலகம் நீண்ட காலமாக ரத்தம் இல்லாத, வன்முறை இல்லாத, கொலை இல்லாத, ஏற்றத்
தாழ்வு இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க
வேண்டும் என்ற கனவை கண்டு
வருகிறது. அந்தக் கனவை நனவாக்க ஒரு
வழிமுறையை கண்டுபிடித்தவர் காரல் மார்க்ஸ்.
மார்க்ஸ்
தனது சிந்தனைகளுக்கு “மார்க்சியம்” என்று பெயர் வைக்கலாம். ஆனால் அவர் அதை “கம்யூனிசம்”
என்று அழைத்தார். “கம்யூனிசம்” என்பது “கம்யூன் + இசம்” எனப் பொருள் பெறுகிறது.
அதாவது, கம்யூன்களுக்கு உரிய அரசியல்.
இதை
எளிமையாகப் புரிந்துகொண்டால், “கம்யூன்” என்பது ஒரு இனக்குழுவைக் குறிக்கும்.
“இசம்” என்பது அரசியல். எனவே, ஒவ்வொரு இனக்குழுவிற்கும் உரிய அரசியல் தான்
கம்யூனிசம் என்று மார்க்ஸ் குறிப்பிட்டார்.
அனைத்து
இனங்களுக்கும் ஒரே மாதிரியான அரசியல்
பொருந்துமா? இல்லை. கம்யூனிசத்தை எந்த ஒரு இனத்தின்
மேல் வறட்டுத்தனமாகப் பொருத்திவிட முடியாது.
சே
குவேரா மற்றும் பொலிவியா
பொலிவியாவில்
புரட்சியை முன்னெடுக்க கியூபாவிலிருந்து சே குவேரா சென்றார்.
அங்கு உள்ளூர் தலைவர் மோஞ்சேவை சந்தித்தார். இருவருக்கும் நடந்த உரையாடல் புகழ்பெற்றது.
“நீங்கள்
எங்களுக்கு துணைநில்க, நான் புரட்சியை முன்னெடுக்கிறேன்”
என்றார் சே.
“நீங்கள் எங்களுக்கு வழிகாட்டுங்கள், புரட்சியை நாங்களே முன்னெடுக்கிறோம்” என்றார் மோஞ்சே.
இது
வாக்குவாதமாக மாறியது. முடிவில் மோஞ்சே விலகினார். அந்தப் புரட்சி தோல்வியில் முடிந்தது. சே குவேரா பிடிபட்டு
கொல்லப்பட்டார்.
பின்னர்
ஒரு பேட்டியில் மோஞ்சே கூறினார்:
சேவின் நோக்கம் தூய்மையானது. ஆனால் அவர் தலைமையேற்க வேண்டும்
என்ற பிடிவாதம் தான் தோல்விக்குக் காரணம்.
பொலிவியாவைப் பொருத்தவரை சே அன்னியர். மக்களின்
நம்பிக்கையைப் பெற, இந்த மண்ணைச்
சேர்ந்தவரே தலைமை ஏற்க வேண்டும்.
இதுவே
ஒரு முக்கியமான சமூக உண்மை.
புரட்சி மற்றும் தேசிய இனம்
எந்த
தேசிய இனத்தின் விடுதலையையும், அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்
தான் முன்னெடுக்க வேண்டும். இதுவே மக்களின் நம்பிக்கையை உருவாக்கும். மாற்று இனத்தவர்களும் வழிகாட்டலாம், பங்கேற்கலாம். ஆனால் தலைமை ஏற்க முடியாது.
லெனின்
கூறியது போல, “புரட்சியை இறக்குமதி செய்ய முடியாது”.
தேசிய
இனம் என்றால் என்ன?
நாம்
இரண்டு வகை இனங்களைப் பார்க்கலாம்:
மரபினம் – அறிவியல் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட நிலையான இனக்குழு.
தேசிய இனம் – சமூக மாற்றங்களின் அடிப்படையில்
உருவாகும், மாறிக்கொண்டே இருக்கும் அமைப்பு.
1913-ல்
வெளியான “மார்க்சியம் மற்றும் தேசிய இனப் பிரச்சினை” என்ற
கட்டுரையில், மொழி, பிரதேசம், பொருளாதார வாழ்க்கை, கலாச்சார மனோபாவம் ஆகியவை சேரும்போது தான் ஒரு தேசம்
உருவாகும் என்று கூறப்படுகிறது.
ஆனால்
இன்றைய உலகில் இந்த அளவுகோல் மட்டும்
போதாது.
மொழி
மட்டுமல்ல தேசியம்
இன்றைய
உலகில் மத அடையாளத்தையும் கொண்டு
தேசியங்கள் உருவாகின்றன.
பெல்ஜியம் உதாரணம்
பெல்ஜியம் ஒரு தனி நாடு.
அங்கே டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகள்
பேசப்படுகின்றன. இருந்தாலும், கத்தோலிக்க மத அடையாளம் மக்களை
ஒன்றிணைத்தது. புரட்டஸ்டன்ட்–கத்தோலிக்க முரண்பாடு காரணமாக, நெதர்லாந்திலிருந்து பிரிந்து தனி நாடாக உருவானது.
இதனால்,
ஒரு தேசத்திற்குப் பொதுமொழி அவசியம் என்ற கருத்து சரியானதல்ல.
யூதர்கள் பல மொழிகளைப் பேசியவர்கள்.
யிடிஷ், ரஷ்யன், ஜெர்மன், அரபு போன்ற மொழிகள்
இருந்தன. பின்னர் அனைவரும் ஹீப்ரூ மொழியை கற்றுக்கொண்டனர். இங்கே முதலில் மத அடையாளம்; பின்னர்
மொழி.
இஸ்ரேல்
இன்று ஒரு தேசியமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
பாகிஸ்தான்
உதாரணம்
பாகிஸ்தான் முஸ்லிம் மத அடையாளத்தின் அடிப்படையில்
உருவானது. அங்கே பஞ்சாபி, சிந்தி, பலூசி, பஷ்டூன் போன்ற பல மொழிகள் உள்ளன.
உருது பொதுமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இங்கேயும்
மத அடையாளம் தேசியத்தை உருவாக்கியது.
மொழி
பேசுபவர்கள் = ஒரே தேசியமா?
ஆங்கிலம்
பேசும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மக்கள் ஒரே தேசியமா? இல்லை.
அவர்கள் தனித்தனியாக தேசியங்களாக உள்ளனர்.
எனவே, மொழி மட்டும் தேசியத்தை நிர்ணயிக்காது.
ஆம்,
“தேசிய இன உரிமை” என்ற பெயரில் நடைப்பெற்ற பாசிச
நடவடிக்கைகளே, பல
லட்சம்
மக்களைப் பலியெடுத்த உலகப்
போர்களுக்குக் காரணமானது என்பது
உலகின்
கறைபடிந்த வரலாறு.
19-ஆம்
நூற்றாண்டில் ஐரோப்பியக் கண்டத்தில் உருவான
தேசியவாதம் என்ற
அரசியல் சித்தாந்தமே, இரண்டு
உலகப்
போர்களுக்கும் வழிவகுத்தது.
அதன்
விளைவாக, இந்த
உலகம்
சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தது. ஒரு
கட்டத்தில் “தேசியவாதம்” என்ற சொல்லையே உச்சரிக்க அஞ்சும் சூழல்
உருவானது.
சிறிதாண்டுகளுக்குப் பிறகு,
பெர்லின் சுவரின் வீழ்ச்சி, சோவியத் யூனியனின் சிதைவு ஆகியவை
மீண்டும் தேசியவாத சக்திகளின் எழுச்சிக்கு வழி
வகுத்தன. அதன்
விளைவாக, மீண்டும் போர்
மேகங்கள் சூழ்ந்தன.
முன்னாள் சோவியத் யூனியனில் ஆர்மேனியா – அசர்பைஜான் போராகத் தொடங்கிய தேசியவாத மூர்க்கம், முன்னாள் யூகோஸ்லேவியாவில் நடைபெற்ற கொசோவோப் போரில் உச்சத்தை அடைந்தது.
இந்தப்
போரின்
முடிவில்தான் நேட்டோ எனும்
உலகின்
சக்திவாய்ந்த ராணுவக் கூட்டமைப்பு உறுதியாக உருவெடுத்தது. அதன்
பின்னர், மடை
திறந்த
வெள்ளம் போல
உலக
மூலதன
முதலீடுகள் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் ஊடுருவின.
எதற்காக தேசியவாதத்தைத் தூண்டி
நாடுகளை ரத்தக்களரியாக்கினார்களோ, எதற்காக பல
லட்சம்
உயிர்களைப் பலியாக்கினார்களோ — அந்த
நோக்கம் இப்போது இனிதே
நிறைவேறியது.
சுருக்கமாகச் சொன்னால், ஒவ்வொரு தேசிய
இன
எழுச்சிக்கும் பின்னாலும் முதலாளித்துவத்தின் வியாபார, வர்த்தக நலன்கள் மறைந்திருந்தன.
பலமிக்க நாடுகளின் முதலீடுகளே, அந்தந்த தேசிய
இன
அரசியலையும் அரசுகளையும் தீர்மானித்தன. நேற்றுவரை தங்கள்
இன
எதிரிகள் என்று
சுட்டிக்காட்டியவர்களுடன், இன்று
கட்டித் தழுவிக் கிடப்பதை நாம்
பார்க்கிறோம்.
இதில்
உணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆளான
மக்கள்தான் உண்மையான ஏமாளிகள்.
இதற்காக உயிரிழந்த மனிதர்களின் முகத்தில், அவர்கள் கறியைப் பூசினார்கள்.
இப்போது கேள்வி ஒன்று எழுகிறது:
தேசியவாதப் போருக்கு முன் இருந்த மக்களின் வாழ்க்கை, புதிய
தேசிய அரசில் மாற்றமடைந்ததா?
அவர்கள் உண்மையில் சுதந்திரம் பெற்றார்களா?
மதம்,
பொருளாதாரம், சமூக
ஒடுக்குமுறைகள் — இவைகளிலிருந்து அவர்கள் முற்றாக விடுதலை பெற்றார்களா?
உதாரணமாக, செக்கோஸ்லாவியா செக்
மற்றும் ஸ்லோவாக் என
இரண்டாகப் பிரிந்தது.
ஆர்மேனியா விடுதலை பெற்றது.
அங்கே
எல்லாம் சரியாகிவிட்டதா?
சமத்துவம் மலர்ந்ததா?
அப்படியானால், இந்த தேசியவாதம் எதற்காக?
ஒவ்வொரு உணர்ச்சிகரமான தேசியவாத எழுச்சிக்கும் பின்னாலும், வெளியே
தெரியாத ஒரு
சுயநல அறிவுஜீவி கூட்டம் இயங்கி
வருகிறது என்பதை
நாம்
எப்போது உணரப்போகிறோம்?
இன்று
களத்தில் நின்று
தேசிய
வெறியை
விதைப்பவர்கள், அந்தக்
கட்சிகளின் உண்மையான தலைவர்கள் அல்ல.
அவர்கள் வெறும் கூலிப்படைகளே.
இங்குதான் தந்தை பெரியாரை நினைவுகூர வேண்டிய அவசியம் வருகிறது.
பெரியார் கேட்கிறார்:
இந்திய
சுதந்திரப் போராட்டம் என்ற
பெயரில் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி,
தபால்
அலுவலகங்களுக்கு தீ
வைத்தார்கள்,
ரயில்தண்டவாளங்களைப் பெயர்த்தார்கள்,
தடியடி
வாங்கினார்கள்,
மண்டை
உடைந்தார்கள்,
துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்,
கொடுஞ்சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.
இவர்கள் யார்?
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, உழைக்கும் மக்கள்.
இவர்களைத் தூண்டியது யார்?
பார்ப்பனர்கள்.
இவ்வளவு செய்த
பிறகு,
சுதந்திரம் கிடைத்ததும் அந்தச்
சுதந்திரத்தை அனுபவிப்பது யார்?
அதே பார்ப்பனர்களும் பணக்காரர்களுமே.
இதுதான் பெரியார் நம்மிடம் கேட்கும் அடிப்படையான கேள்வி.
அதேபோல,
ஐரோப்பாவையே எடுத்துக்கொள்வோம்.
1789 முதல்
1871 வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பாவில் தேசிய
உணர்வுகள் உருவாகத் தொடங்கின.
1871-இல்
14 தேசங்கள்,
1924-இல்
26 தேசங்கள்,
உலகப்
போர்
காலத்தில் 35 தேசங்கள் என
எண்ணிக்கை உயர்ந்தது.
இன்று,
ஐரோப்பா கண்டத்தில் பெரும்பாலான தேசிய
இனங்கள் தனித்
தனி
அரசுகளாக உருவாகிவிட்டன.
இப்போது நாம்
நிதானமாகக் கேட்க
வேண்டிய கேள்வி
இதுதான்:
விடுதலைக்கு முன் இருந்த மக்களின் வாழ்க்கையும், விடுதலைக்குப் பின் உள்ள வாழ்க்கையும் உண்மையில் மாறியதா?
அதே
வறுமை,
அதே
உத்திரவாதமற்ற வாழ்க்கை,
அதே
சுரண்டல்,
அதே
மதம்,
அதே
சடங்குகள்,
அதே
கடவுள்கள் —
இவை
அனைத்தும் தொடர்ந்தால்,
நான் ஏன் உன் தேசியத்திற்காக உயிர் தியாகம் செய்ய வேண்டும்?
பெரியார் சொன்னதுபோல,
“உன்
சுதந்திர நாட்டில் நான்
அடிமையாக இருப்பதைவிட,
பிரிட்டீஷ் ஆட்சியில் அடிமையாக இருந்தாலே போதும்.
அவர்கள் என்னை
மனிதனாகவேனும் மதித்தார்கள்.
நீ
என்னைத் தொட்டாலே தீட்டு
என்கிறாய்”
என்று
பெரியார் கேட்ட
கேள்வி,
இன்றைய
புதிய
தேசிய
அரசுகளுக்கும் பொருந்தாததா?
வேண்டுமானால், புதிய
தேசிய
அரசுகளில் ராணுவ
வலிமையும், அந்நிய
மூலதனமும் பெருகியதாகச் சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால்
மக்களின் வாழ்க்கை மாற்றமடைந்ததா?
இல்லை.
ஒடுக்குமுறைகள் மட்டும் நவீன வடிவத்தில் பெருகியுள்ளன.
இவ்வாறாக, ஐரோப்பிய தேசிய
விடுதலையின் லட்சணம் இப்படியே இருந்தால்,
தமிழ்த் தேசிய விடுதலிக்குப் பிறகு தமிழர்களின் நிலை என்னவாக இருக்கும்?
அதைப்
பற்றி
பேசுவதற்கு முன்,
1932 நவம்பர் 20-ஆம்
தேதி
குடியரசு இதழில்
வெளியான,
தந்தை
பெரியார் இலங்கைப் பேருரையில் கூறிய
வார்த்தைகளை நினைவுகூர்வோம்.
அவரே
கேட்கிறார்:
“தேசம் என்றால் என்ன?
உலகம்
ஐந்து
கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கண்டத்திற்கும் பல
தேசங்கள்,
ஒவ்வொரு தேசத்திற்கும் பல
மாகாணங்கள்,
ஒவ்வொரு மாகாணத்திற்கும் பல
ஜில்லாக்கள் உள்ளன.
இதைத்தவிர,
பல
ஜாதிகள்,
பல
மொழிகள்,
பல
மதங்கள்,
பல
பழக்க
வழக்கங்கள் இருக்கின்றன.
இவற்றையெல்லாம் தெய்வ
கட்டளை
என்றும்,
மத
கட்டளை
என்றும்,
தேசிய
கொள்கை
என்றும் சொல்லி
உயிர்
விட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று
கருதுகிறார்கள்.
இதன்
பயனாக,
மக்கள்
ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சியோடு வாழ்கிறார்கள்.
உயர்ந்த ஜாதி
– தாழ்ந்த ஜாதி,
ஏழை
– பணக்காரன்,
ஒடுக்குபவன் – ஒடுக்கப்படுபவன்
என்ற
கொடுமைகள் இருக்கும்போது,
எப்படிப்பட்ட கொள்கையின் பெயரில்
தனித்த
தேசம்,
தேசியம் என்று
பிரித்துக் கொள்வது என்று
எனக்கு
புரியவில்லை.”
இதுதான் பெரியார் —
தேசியவாதத்தின் யோக்கியதையை நிர்வாணமாக்கிய தீர்க்கதரிசி.
ஏற்கனவே நாம்
பார்த்ததுபோல், தேசிய
உணர்ச்சி தூண்டப்பட்டு பிரிந்து உருவான
நாடுகளில் பொதுமக்களின் வாழ்க்கையில் பெரிய
மாற்றம் ஏற்பட்டதா என்றால், இல்லை
என்பதே
உண்மை.
ஆனால்
புதிய
தேசிய
அரசுகளில் பணக்காரர்களும் அந்நிய
மூலதனமும் அதிகரித்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், சுதந்திரம் பெற்ற
பிறகும் மக்கள்மீது போலீஸ்
மற்றும் ராணுவ
அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன. இதையே
தந்தை
பெரியார் 1931-இலேயே
தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.
“நமது தேசம்”
என்று
நாம்
பேசும்போது, அந்த
தேசத்தில் உள்ள
மக்களின் வாழ்க்கை நிலை
என்னவோ,
அதே
நிலை
மற்ற
நாடுகளிலும் உள்ளது.
நமது
தேசத்தில் ஏழைகள்
எவ்வளவு துன்பப்படுகிறார்களோ, அதேபோலவே மற்ற
தேசங்களிலும் ஏழைகள்
துன்பப்படுகிறார்கள்.
நமது
தேசத்தில் சிலர்
செல்வம் சேர்த்து, அதிகாரம் பெற்று,
ஏழைகளை
அடக்கி
ஆட்சி
செய்கிறார்களே, அதே
நிலை
அன்னிய
தேசங்களிலும் உள்ளது.
இந்நிலையில், ஒரு
பகுதியை மட்டும் பிரித்து “தேசாபிமானம்” காட்டுவது ஏன்?
ஒரு
தேசத்தின் பணக்காரர்கள், மற்றொரு தேசத்தின் பணக்காரர்களுடன் சண்டை
போட்டுக் கொள்ளும்போது, ஏழை
மக்கள்
தான்
பலியாகிறார்கள். இரு
தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள்
உயிரிழக்கிறார்கள். ஆனால்
இறுதியில் செல்வம் சேர்ப்பவர்கள் முதலாளிகள் மட்டுமே.
அமெரிக்கா போன்ற
நாடுகளிலும் சுதந்திரம் கிடைத்த பிறகும், ஏழைகளின் துயரம்
குறையவில்லை. செல்வந்தர்கள் அதிகரித்தனர்; ஏழைகள்
இன்னும் ஏழைகளாகவே உள்ளனர்.
இலங்கையில் இருந்து கொண்டு
இந்திய
தேசியம் பேசுபவர்கள் கூட,
அந்நாட்டின் வளங்களை சுரண்டுபவர்களாகவே உள்ளனர். வெள்ளையன் வட்டி
வாங்கினான் என்றால், கருப்பனும் அதையே
செய்கிறான். நிறம்
மாறினாலும் சுரண்டல் மாறவில்லை.
ஆகவே,
கடவுள்,
மதம்,
தேசம்
போன்ற
வார்த்தைகள், ஏழைகளை
ஏமாற்றி, பணக்காரர்களுக்கு பயன்
அளிக்க
பயன்படுத்தப்படும் கருவிகள் என
பெரியார் கூறுகிறார்.
உலகில் எங்கும் உழைக்கும் மக்கள் தான் துன்பப்படுகிறார்கள். பணக்காரர்களும் சோம்பேறிகளும் அவர்களை சுரண்டி வாழ்கிறார்கள். இதை மாற்ற வேண்டும் என்றால், ஜாதி, மதம், தேசம்
என்ற
எல்லைகளைத் தாண்டி,
உலகில்
உள்ள
உழைக்கும் மக்கள்
ஒன்றிணைய வேண்டும்.
கடவுள்,
மதம்,
தேசம்
இல்லாத
இடங்களில் தான்
உண்மையான சமத்துவம் காணப்படுகிறது. அங்கு
பணக்காரன், ஏழை
என்ற
வேறுபாடு இல்லை.
அனைவருக்கும் வேலை,
உணவு,
வாழ்வாதாரம் சமமாக
உள்ளது.
இந்த
நிலை
உலகெங்கும் உருவாக
வேண்டும் என்பதே
பெரியாரின் கருத்து.
புரட்சி வாழ்க!
பொதுவுடமை ஓங்குக!
&&&&
ம.பொ.சி. போன்ற நூறு பேரை பார்த்தாச்சு தமிழகம் இன்றைக்கு சீமான் வரைக்கும் இரையை கௌவி கொண்டு கொண்டு வரும் வேட்டை நாயைப் போல், அவங்க எல்லாரையும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்னர், அமைச்சரவை அமைப்பது பற்றிய விவரம் அறிய சட்டமன்றத் தி.மு.க. தலைவர் அண்ணா அவர்களைச் செய்தி நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது ம.பொ.சி பற்றி நிருபர்கள் எழுப்பிய வினாக்களும், அவர் அளித்த விடைகளும் வருமாறு:
நிருபர்: ம.பொ.சி. அவர்களைச் சட்டப்பேரவைத் தலைவராக்கப் போவதாகச் சொல்லப்படுகிறதே, அது உண்மையா?
அண்ணா: பேச்சாளர்களிலே சிறந்தவரான அவரைச் சொந்தக் கருத்தைப் பேசுவதற்கே உரிமையில்லாத சபாநாயகராக அமர்த்துவதால் ஜனநாயகத்திற்கு நஷ்டமாகும்.
நிருபர்:ம.பொ.சி .தி.மு.க.வுக்குரிய உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாராதலால், அவர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா?
அண்ணா: ம.பொ.சி. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலுலூர் அவர் தன் சொந்தக் கட்சியிலேதான் இருந்து வருகிறார். அதவாது, அவர் தி.மு.க அல்ல. ம.பொ.சியின் தமிழரசுக் கழகம் அளவில் சிறியதானாலும் நல்ல கட்டுக்கோப்புடன் விளங்கும் கட்சி.
''தமிழரசுக் கழகத் தலைவர் பேசுகிற பேச்சுகளில் கலந்து கொள்ளுகிற கூட்டங்களில், "திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவையை ஆதரிக்கிறேன். ஆனால், அந்த அமைச்சரவை, ஏதாவது காரியத்தைச் செய்யத் தவறினால் அதைக் கவனப்படுத்துவேன். ஏதாவது தவறான காரியத்தைச் செய்தால், தடுத்து நிறுத்துவேன். என்று சொல்லியிருக்கிறார்கள்.
ம.பொ.சி 1967 "நான் அதிகாரப் பதவி எதிலும் இல்லாமலே தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் தொண்டாற்ற விரும்புகிறேன். இந்த உறுதியுடன்தான் ஆட்சியைக் கைப்பற்றும் குறிக்கோளில்லாத ஒரு கலாச்சார அமைப்பாகத் தமிழரசுக் கழகத்தைப் படைத்து, அதனை இயக்கி வருகிறேன். ஆங்கில ஆதிக்கத்தை அகற்றுவதோ, மாநிலச் சுயாட்சி கோரிக்கைக்கு வெற்றி தேடுவதோ, கிளர்ச்சியும் போராட்டமும் இல்லாமல் நடக்கக்கூடியவை யென்று நான் கருதவில்லை. அந்தக் கிளர்ச்சியையும் போராட்டத்தையும் நடத்தத் தமிழரசுக் கழகம் இனியும் தேவைப்படுகிறது. இந்த நிலைமையில் கழகத்தைக் கலைப்பதோ, அதிலிருந்து நான் விலகுவதோ சாத்தியமில்லை.
1967 திமுக கூட்டணியில் மாபோசியின் கட்சி இணைந்தது அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது இரண்டு தொகுதி ஒன்று சென்னையில் டி நகர் இன்னொன்று எல்லை போராட்டத்தில் நல்ல பெயர் எடுத்த மாபோசிக்கு திருத்தணி தொகுதி ஒதுக்கப்பட்டது இரண்டிலும் வெற்றி
அடுத்த தேர்தலில் மாபோசிக்கு மயிலாப்பூர் ஒதுக்கப்பட்டது இங்கு ராஜாஜி மற்றும் பார்ப்பன குழுக்கள் ஒன்று சேர்ந்து அவரை தோற்கடித்ததாக அவரே அவருடைய போராட்ட வாழ்க்கையில் பதிவு செய்திருக்கிறார் அதற்கான காரணத்தையும் சொல்கிறார்







.jpeg)


Comments
Post a Comment