கிருஷ்ணன் திராவிடன்
கிருஷ்ணன் : கடவுள் அல்ல – உள்வாங்கப்பட்ட ஒரு திராவிடப் போராளி
கிருஷ்ணன் என்பது வானத்திலிருந்து இறங்கிய கடவுள் அல்ல.
அவன் ஒரு காலத்தில் வாழ்ந்த
மனிதன்.
அவன் கருப்பு.
கருப்பு என்பதே இங்கே அரசியல்.
“கிருஷ்ணன்”
என்றால்
“கருப்பன்”.
இந்த மண்ணில் கருப்பன் என்றால் – அவன் ஆரியன் அல்ல;
அவன் திராவிடன்.
ஆரியர்கள் ஆடு–மாடுகளை ஓட்டிக்கொண்டு
இந்த மண்ணுக்குள் நுழைந்தபோது,
ஏற்கனவே இங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவன்
ஒருவன் இருந்தான்.
அவன் இயற்கையோடு வாழ்ந்தவன்.
அவன் நிலத்தோடு ஒட்டியவன்.
அவன் அதிகாரத்துக்கு தலை வணங்காதவன்.
அந்த எதிர்ப்பே கிருஷ்ணன்.
அவனை வெல்ல முடியவில்லை.
அழிக்க முடியவில்லை.
அதனால் உள்வாங்கினார்கள்.
உள்வாங்கல்
: சனாதனத்தின்
பழைய
ஆயுதம்
திராவிட எதிர்ப்பை ஆரியம் அழித்ததில்லை.
அதை செரித்திருக்கிறது.
புத்தன் – உள்வாங்கப்பட்டான்.
சிவன் – உள்வாங்கப்பட்டான்.
கிருஷ்ணன் – அதில் மிகப் பெரிய உதாரணம்.
ஒரு காலத்தில் சமூக மரபுகளுக்கு எதிராக
நின்றவன்,
பின்னால்
“நாலு
வர்ணத்தையும்
நானே படைத்தேன்”
என்று பேச வைக்கப்பட்டான்.
இது கிருஷ்ணனின் குரல் அல்ல.
இது அவன் வாயில் திணிக்கப்பட்ட
பார்ப்பனிய வசனம்.
எழுதத் தெரிந்த ஒரு சதவீதம் இருந்த
காலத்தில்,
படிக்கத் தெரியாத 99 சதவீத மக்களுக்குள்
எவ்வளவு பொய்,
எவ்வளவு சூழ்ச்சி
நுழைத்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
பெண்கள், விதவைகள், ‘பல மனைவிகள்’ கதை
ஆரிய நுழைவுக்குப் பிறகு
இங்கே நடந்த மிகப்பெரிய கொடுமை
பெண்ணின் உடல் மீது நடந்த அரசியல்.
குழந்தை விதவைகள்.
வீட்டிலிருந்து துரத்தப்பட்ட பெண்கள்.
உரிமை மறுக்கப்பட்ட வாழ்க்கைகள்.
“இவர்கள் என் மனைவிகள்”
என்று ஒரு சமூகப் பாதுகாப்பை
அறிவித்த ஒருவனை,
பிறகு
“பெண்களோடு
அலைந்தவன் , திரிந்தவன்”
என்று வரலாறு எழுதிவிட்டது.
இது ஒழுக்கம் அல்ல –
இது அதிகாரத்தின் பழிவாங்கல்.
மகாபாரதம்
: தர்மம்
அல்ல,
அரசியல்
கிருஷ்ணன் – நேர்மையானவன் அல்ல.
ஆனால் அதிகாரத்திற்கு நேர்மையாகவும் இல்லை.
அவன்
நடுநிலையாளர் அல்ல.
யார் பாதிக்கப்பட்டார்களோ,
யாருக்கு நீதி தேவையோ,
அவன் அந்தப் பக்கம் நின்றான்.
அதற்காக
சூழ்ச்சி செய்தான்.
பொய் சொன்னான்.
ராஜதந்திரம் செய்தான்.
அரசியலில்
நேர்மை என்பது ஒரு ஆடம்பரம்.
நீதி என்பது ஒரு தேர்வு.
அதை அவன் தெரிந்திருந்தான்.
கண்ணன்
: பெரியாரிய
வாசிப்பு
பெரியார் கண்ணனை கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால்
கண்ணனை முற்றிலும் நிராகரிக்கவும் இல்லை.
அவன் ஒரு அழகான கதாபாத்திரம்.
மனித முரண்களின் உருவம்.
அவன் தவறுகள் செய்தான்.
ஆனால்
அவற்றை வேதம் காட்டி நியாயப்படுத்தவில்லை.
அவனுக்கு
குற்ற உணர்வும் இல்லை,
வெற்றி அகங்காரமும் இல்லை.
அவன்
ஆண் மேன்மையை உடைத்தவன்.
புல்லாங்குழலால் பெண்மையைத் திறந்தவன்.
கடந்த கால–எதிர்கால கடவுள்களுக்கிடையில்,
நிகழ்காலத்தை நம்பிய ஒரே கடவுள்
– கண்ணன்.
ஆண்டாள், பாரதி, ஓஷோ : வேறு கண்ணன்
ஆண்டாள் பாடிய கண்ணன் –
பார்ப்பனிய கண்ணன் அல்ல.
அவன் காமமும் கருணையும் ஒன்றாக வாழும் கண்ணன்.
பாரதி சொன்னான்:
பிறந்தது மறக்குலத்தில்
வளர்ந்தது இடைக்குலத்தில்
இது சாதி உயர்வு அல்ல
–
சாதி உடைப்பு.
ஓஷோ சொன்ன கண்ணன் –
பக்தியின் பெயரில் அடிமைத்தனம் போதிக்காதவன்.
அந்தக் கண்ணனை பார்த்தால்
கோயிலுக்கு போகத் தேவையில்லை.
மனம் தான் பிருந்தாவனம்.
எருமை,
பசு,
அரசியல்
கண்ணன் எருமை மேய்த்தவன்.
பசு – ஆரிய அடையாளம்.
இன்றைக்கு
பசு அரசியலாகிறது.
எருமை வெட்டுப் பண்டிகையாகிறது.
ஒரே ஒரு “இந்துநாடு” என்ற
பெயரில்
ஒரு நாட்டை நாசமாக்கியது யார்?
இதுவும் கிருஷ்ணன் அல்ல.
இது அவன் பெயரில் நடக்கும் பார்ப்பனிய வன்முறை.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நேபாளத்தில் வெட்டி வீணாக்கப்படும் எருமைமாடுகள்
கிருஷ்ணன் குறித்த பரப்புரைகள்
அவன் ஒரு ஸ்திரீலோலன்.. புரியறது மாதிரி சொல்லனும்னா பொம்பளப்பொறுக்கி..
கேடுகெட்ட அறிவுகெட்ட, ஒரு பெண்ணை ஐந்து பேர் மனைவியாக பாவித்த முட்டாள் பாண்டவர் கூட்டத்தை காப்பாற்றுவதற்காக துரியோதனன் கூட்டத்தை வஞ்சகத்தால் சாய்க்க உதவிய நேர்மையற்றவன்..
ஒரு குடும்பத்துக்காக ஒருவரையும், ஊருக்காக ஒரு குடும்பத்தையும், நாட்டுக்காக ஒரு ஊரையும் அழிப்பது தவறில்லை என்று படுபாதகன்..
துரியோதனின் கூட்டத்தினரிடம் சூதாடி, பொண்டாட்டியையும் தோற்ற முட்டாள் தர்மனை நியாயப்படுத்த முயன்ற கபோதி..
சாதி பாராமல், கர்ணனை ஒரு நாட்டுக்கே அரசனாக்கிய, எந்த நிலையிலும் நட்பை உயிரென மதித்த துரியோதனனை கெட்டவனாக்கி, போரில் அவனை கொன்றொழிக்க சதித்திட்டம் தீட்டிய கயவன்.
அர்ச்சுனன் யார்?
அவனும் ஒரு பெண் பித்தன்தான். இதுக்கும் பொம்பளப் பொறுக்கினுதான் அர்த்தம்.
உலகில் சிறந்த வில்வித்தை வீரனாக இருப்பதற்காக ஏகலைவன் என்ற வீரனை காவுவாங்கிய களவாணிப்பயல்..
போற இடத்தில் எல்லாம் பெண்களை சுற்றி அலைந்தவன்..
கலையைக் கற்றுக்கொடுத்த குருவையே கொல்லத் துணிந்த கொலைகாரன்.
தனது கூட்டம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சொந்த மக்களையே போரில் கொல்லத் தயங்காதவன்.
மொத்தத்தில் ரெண்டுபேருமே நியாயம் தர்மத்துக்கு கட்டுப்படாத களவாணிப்பயலுக. களவாணித்தனத்துக்கு ராஜதந்திரம்னு பேர்வச்ச பொறுக்கிப் பயலுக..
இப்போ யோசிச்சு பாருங்க அமித் ஷாவும் மோடியும் கிருஷ்ணரும் அர்ச்சுனனும் போல என்று முட்டாள் ரஜினி சொல்லியிருப்பது சரிதானே.
ஆனால் என்னைப் பொறுத்தவரை கிருஷ்ணன் அழகான கதாபாத்திரம். மனதின் முரண்களை அழகாக வெளிப்படுத்தியவன் . சமநிலையோடு சகல உணர்வுகளையும் முன்னிறுத்தியவன் . மிக முக்கியமாக நல்லியல்புகளை ஒரு சுமையாக்கி அதற்குள் கூட சிக்கிக் கொள்ளாதவன் . தான் கடவுள்; தனக்கு கெட்ட பெயர் வரக் கூடாது போன்ற பொய்யான இமேஜ்கள் பற்றி கவலைப்படாத ஒரே கடவுள் கிருஷ்ணன் மட்டும்தான் . பெண்களை ஆசை தீரக் காதலித்தவன் . ஆனால் காதல் கருணையின் கண்களை மறைக்காமல் பார்த்துக் கொண்டவன் . போரைத் தூண்டிக் கொண்டே ஆத்மா குறித்துப் பேசியவன் . தன் தங்கையைக் காதலிப்பவனுக்கே கடத்தல் ஐடியா கொடுக்கிற அபூர்வமான அண்ணன் . பெற்றவளை விட வளர்த்தவளுக்கே பெயர் வாங்கிக் கொடுத்த பேரன்பின் பிள்ளை . வெண்ணெய் மீதும் , பெண் மீதும் ஆசைப்பட்டுக் கொண்டே புலனறுக்கச் சொன்னவன் . மனிதன் சூழல்களால் எய்யப்படுகிற பலவீனமான அம்பு என்பதைப் புரிந்து கொண்ட யோகி . அவன் நிறைய தவறுகளை செய்திருக்கிறான் . அவற்றில் இரண்டு அம்சங்களைப் பார்க்கலாம் .
கீதையில் அவன் பேசுகிற வர்ணாசிரமத்தை நிராகரித்து விட்டு இந்தக் கண்ணனைக் கொண்டாட வேண்டியதுதான் . பிராமணப் பெண் ஆண்டாள் பால் வாடை வீச , இடைக்குலப் பெண்ணாகி வருகிற போதுதான் கண்ணன் கரம் பற்றுகிறான் என்கிறார் அப்துல் ரகுமான் . சாதி அடுக்கைக் கலைத்து சுயசாதிப் பெருமிதம் உதறி கீழிறங்கி வருவோரை கடவுள் கரம் பற்றிக் கொள்வார் என்பதாகவும் இதனைப் புரிந்து கொள்ளலாம் . அவர்களின் கண்ணன் வேறு . நம் கண்ணன் வேறு .
பூதகியை வேறொன்றும் செய்யவில்லை . பாலருந்தினான் . அந்த சுகத்திலே செத்துப் போனாள் என்கிறார் ஓஷோ . உலகத்தின் சிறந்த மரணம் அதுதான் . இப்படிப்பட்ட கல்யாணச் சாவிற்குத்தான் மனிதர்கள் கிடைக்காமல் கிளியோபாட்ரா பாம்பை பிடித்து வந்தாள் போலிருக்கிறது
கண்ணனை பாகவதர்கள் வழியாகவோ கீதை வழியாகவோ கண்டறிவதை விட ஓஷோவின் வழியாகக் கண்டடைய முயற்சி செய்யுங்கள் . அவர்தான் கண்ணனைக் கையும், களவுமாய் பிடித்து வைத்திருக்கிறார் . அந்தக் கண்ணனைப் பார்த்து விட்டால் நீங்கள் எந்தக் கண்ணன் கோவிலுக்கும் போக மாட்டீர்கள் . உங்கள் மனமே பிருந்தாவனமாகி விடும் .
கண்ணனிடம் எனக்கு பிடித்த அம்சம் அவன் நடுநிலையில் இருக்கவில்லை .
(ஆயுதங்களை அந்தப் பக்கம் தந்ததெல்லாம் ஏமாற்று வேலை )
எந்தத் தரப்பு பாதிக்கப்பட்டதோ ,
யார் பக்கம் நீதி தேவையோ அவர்களின் பக்கமே அவன் நிற்கிறான் .
அதற்காக பல சூழ்ச்சிகளை செய்கிறான் .
அவன் மிகப்பெரிய அரசியல் ஆசானும் கூட .
//ஆனால் கண்ணனின் சூழ்ச்சிகளைப் பாராட்டிக் கொண்டு கலைஞரின் சூழ்ச்சிகளுக்காக கரித்துக் கொட்டுகிறவர்கள் மேலே போகிற போது…
//கண்ணன் அர்ஜூனனிடம் சமூகநீதி பற்றிய பெரியாரின் எழுத்தை வாசித்துக் காட்டி போட்டுத் தள்ள ஆணையிடுவான் .



.jpg)

.jpg)
Comments
Post a Comment