அரசியலில், இலக்கியத்தில், மருத்துவத்தில் பெண்கள்-Lion Raja Ganesan pmjf


 பெண்கள்    பாரதியும், தந்தை பெரியாரும்

கற்பு என்று  வரும்பொழுது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநிலை வைப்போம் என்றார் பாரதி

கற்பு என்பதே முட்டாள்தனம் என்று சொன்னவர் பெரியார் 

திரௌபதியை தெய்வமாக கருதி பாஞ்சாலி சபதம் என்று காவியம் எழுதியவர் பாரதி. காவிய நாயகி கண்ணகியை கிண்டலடித்து பெண்களை தெய்வமாக்குவது புனிதம் ஆக்குவது இந்த புண்ணாக்கு எல்லாம் தேவையில்லை என்று போட்டு உடைத்தார் பெரியார்

பாரதியாருக்கு திருமணம் நடந்த போது அவரது மனைவி செல்லம்மாளுக்கு வெறும் ஏழு வயது

பெரியார் தனது 70 வது வயதில்1948 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி  மறுமணம் செய்து கொள்கிறார்,  பெரியார் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மணியம்மையாருக்கு 32 வயது இவர் சொத்தை பாதுகாப்பதற்காக திருமணம் செய்து கொண்டார் அப்போது பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது மனைவிக்கி இருந்தது அதனால் தான் அந்த திருமணம்

முதல் மனைவி இறந்து 15 ஆண்டுகளுக்கு மேல் மறுமணம் செய்து கொள்ளாமல் இருந்த பெரியார் திராவிடர் கழகத்தின் தனக்கு உதவியாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்து கொண்டிருந்த காந்திமதி

என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அதுவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் இந்த சொத்து அனைத்தும் இரத்த சம்பந்தமான உறவுகளுக்கு போய் சேரும் அதை தடுப்பதற்கான இந்த திருமணம்

பாரதியின் மனைவி செல்லம்மாள் தனது 32 வது வயதில் விதவையாக ஒரு பாட்டியாக இருந்தார் அதே வயதில் மணி அம்மையார் மாபெரும் நிறுவனத்தின் தலைவராக இருந்தார் இங்கு தான் இருவரும் பெண்ணுரிமை பேசினார்கள் நுட்பமாக பெரியார் ஒரு படி மேலே நிற்கிறார்,



1)பதியிலார் அல்லது வரைவின் மகளிர் எனப்படும் திருமணம் இல்லாப் பெண்டிர் குறித்த செய்திகள் சங்க இலக்கியம் தொடங்கி இன்று வரை தொடர்ச்சியாக நமது இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. விறலியர், கணிகையர், வேசையர், காமக் கிழத்தியர், விலைமகள், கொண்டி மகளிர் எனப் பலவாறான பெயர்களில் அழைக்கப்படும் இவர் களுக்குள் நுண்மையான வேறுபாடுகள் இருப்பினும் மூன்று வகைப்பாட்டிற்குள் இவர்களை அடக்கலாம்.



குறிப்பிட்ட எவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆடல், பாடல் இவற்றில் வல்லவராகி அதன் மூலம் ஓரளவு சமூக மரியாதையுடன் இருந்தவர்கள் ( விறலியர், கணிகையர்).


திருமணம் இல்லாமல் குறிப்பிட்ட ஒருவனிடம் வைப்பாக வாழ்ந்தவர்கள் ( காமக் கிழத்தியர்).


பலரிடமும் உறவு கொண்டு வாழ்ந்தவர்கள் (விலைமகளிர்).


2)"பரத்தையராவார் யாரென் அவர் ஆடலும் பாடலும் வல்லவராகி அழகும் இளமையும் காட்டி, இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டும் தங்காதவர்"" 

என வரையறுப்பார் இளம்பூரணர் (தொல்-பொருள் கற்பியல். சிவலிங்கனார் பதிப்பு, பக்கம் : 179)

3). சங்க இலக்கியம் தொடங்கி இன்றுவரை உள்ள பதியிலார் குறித்த பதிவுகள் எள்ளளவும் மாற்றமின்றி ஒரே மாதிரியாக இருப்பது வியப்பிற்குரிய ஒன்று. தொல்காப்பியர் முதல் திருவாரூர் தங்கராசு வரை பதியிலார் குறித்த ஒரே பார்வையை திருப்பித் திருப்பி எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது. தங்கராசுவின் "இரத்தக் கண்ணீர் கதை ''நாலடியாரி'லேயே பதிவாகியுள்ளது கவனிக்கத்தக்கது."ஆமா போல் நக்கி அவர் கைப்பொருள் கொண்டு சேமா போல் குப்புறூ உம் சில்லைக்கண் அன்பினை ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே நாமாம் பலரால் நகை' (நாலடியார்: 38-8)

எளிதில் பொருள் விளங்கக் கூடியதுதான். காட்டுப் பசுபோல நக்கிச் சுகமளித்துக் கைப்பொருளைக் கவர்ந்து கொள்ளும் கணிகை, எல்லாம் கவர்ந்தபின் காட்டு எருது போலப் பாய்ந்து விலகி(வேற்றாளிடம்) சென்று விடுவாள். அவளது இந்த அற்ப அன்பை உண்மை என நம்பி ஏமாறுகின்றவரது வாழ்க்கை பிறரால் நகைக்கக் கூடியதாய் இழிவுறும் என்பதே அப்பொருள்.

4). பதியிலார் பற்றிய ஆண் நோக்கிலான பார்வைகள் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றன என்பதையே இவை காட்டு கின்றன. தலைவி அல்லது கற்புடை மகளிர் எனப்படும் குடும்பப் பெண்ணின் "மாற்றாக"ப் (other) பதியிலார்கள் நிறுத்தப்படு கின்றனர்.

''தம்மேனி நோக்கார் தலையுணரார் கைந்நொடியார் எம்மேனி யாயினும் நோக்கார் தலைமகன் தன்மேனி அல்லாற் பிற'

என்பது ஆசாரக்கோவை (பாட்டு 88) தலைவிக்கு விதிக்கும் இலக்கணம். தலைவனின் மேனியைத் தவிர தன் மேனியைக்  நோக்கக்கூடாது  எனவும் (நீதி வெண்பா பாட்டு 31), வீதியில் செல்லக் கூடாது,பள்ளிக்கு செல்லக்கூடாது என்றெல்லாம் வரையறை செய்யப்பட்டு இருந்த சூழலில்  நுண்கலைகள் கைவரப்பெற்ற  (skilled) பெற்றவர்களும் குடும்ப நிறுவனத்தை தன் பிழைப்புக்கு சார்ந்து இருக்காமல் இருந்தவரை பதியிலார் என ஆணினம் அச்சத்துடன் நோக்கியது, மாயப்பரத்தையர் என்று இலக்கியங்கள் கூறுகிறது தொல்காப்பியர் மாய மகளிர் என்பார் திருவள்ளுவர் மாயப் பொய் கூட்டி மயக்கம் விளைக்கணிகை என்பார் பரிபாடல் ஆசிரியர் மேலைய பகுத்தறிவு சூனியக்காரிகளை பார்ப்பது போல தமிழ் மரபு ஆனிய சமூகத்தின் சுரண்டல் கருவியாக ஆக்கப்பட்டிருந்த பரிதாபத்திற்குரிய பதிலார் மாயம் செய்து குடும்பத்தை அளிப்பவர்களாக காட்டப்பட்டு இருக்கிறது

5). பதியிலார் மாயம் செய்பவராகவும், பொருளைக் கவருகிறவராகவும், ஆணின் வாழ்வை நகைப்புக் கிடமாக்குபவர் போலவும் சித்தரிக்கப்படுவது ஒரு புறம். இந்தச் சித்தரிப்புகளில் பயன்படுத்தப்படும் தமிழ்ச் சொற்கள் குடும்பப் பெண்களை சித்தரிக்கப் பயன்படும் சொற்களி லிருந்து வேறுபட்டு நிற்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் நோக்கில் கறைபட்ட தமிழ் நமது ஆண் புலவர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கிறது. ஏறுதல், விரித்தல், பன்னாடை, சேட்டை போன்ற சொற்கள் பரத்தையர் குறித்த பாடல்களில் அதிகம் இடம் பெறுவது கவனிக்கத்தக்கது. அதிகம் விளக்கம் தேவையிராத- காளமேகப் புலவரின்-சில சிலேடைப் பாடல்கள் 

வருமாறு.பனைமரம் - வேசி

"கட்டித் தழுவுதலால் கால் சோர ஏறுதலால் ,எட்டிப் பன்னாடை இழுத்தலால் - முட்டப் போய் ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும் வேசை எனலாமே விரைந்து'

(பாடல் 227) 


தென்னை - வேசி

''பாரந் தலைவிரிக்கும் பன்னாடை மேல்சுற்றும் சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரே மேல் ஏறி இறங்கவே இன்பமாம்; தென்ன மரம் கூறும் கணிகை என்றே கொள்".

வெற்றிலை - வேசி

"கொள்ளுகையால் நீரில் குளிக்கையால் மேல் ஏறி கிள்ளுகையால், கட்டிக் கிடக்கையால், தெள்ளு புகழ்ச் செற்றலரை வென்ற திருமலைராயன் வரையில் வெற்றிலையும் வேசையாமே".

(பாடல் 279) 

கூத்தாடும் பெண்கள் - குரங்கு 

''ஓட்டம் கடியதால் உள்ளவரை மேவுதலால் சேட்டை எவரிடத்தும் செய்தலால்- நாட்டமுடன் காத்திரத்திற் குட்டியுறக் கட்டுதலால், தெட்டுதலால் கூத்தியர்க்கு நேராம் குரங்கு". 

(பாடல் 231)


காளமேகம் போன்ற பிற்காலப் புலவர்கள் மற்றும் தனிப்பாடல் ஆசிரியர்களின் குறும்பு என இவற்றை ஒதுக்கிவிட முடியாது. நமது புனித இலக்கியத் தொகுப்பில் வேறு பல இடங்களிலும் பாலியல் உருவகம் சார்ந்த சொல்லாட்சிகளுடன் ஆணியல் நோக்கில் பதியிலாரின் பெண் உறுப்புகள் இழிவு செய்யப்படுவதற்கு பரி பாடலிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு: 

"மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தை துற்றுவதுற்றும் துணையிதழ் வாய்த் தொட்டிமுற்றா நறுநறு மொய்புனலட்டிக் காரிகை நீரேர் வயல் காமக்களி நாஞ்சில் மூரி தவிர முடுக்கு முதுசாடி"

(பாடல் 20, வரிகள் 49-54) 

பொருள்: காமத்தைப் பொய்யோடும் கூட்டி விற்கும்

கணிகையே, ஒருத்தனுக்கே உரிமையின்றி பலர்க்கும் பொதுமையுடையாய்! ஐம்புல நுகர்ச்சியைப் பெறும் காமுகராகிய பன்றிகள் நுகர்கின்ற தொட்டியேகள்ளாகிய நீரைவிட்டு காமமாகிய கலப்பையால் எம்முடைய எருது சோம்பக் கிடவாமல் உழுகின்ற பழைய சாலே!

பன்றிமேயும் தொட்டி, முதுசாடி, கலப்பையால் உழுதல் போன்ற பாலியல் உருவகம் சார்ந்த சொற்கள் பயன்படுத்துவது

இங்கு கவனிக்கப்படத்தக்கது நமது போற்றுதலுக்குரிய வள்ளுவர் கூட சாக்கடை என்னும் பொருளில் அளரு போன்ற சொற்களை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது இருமன பெண்டிர் பொதுநலத்தார் போன்ற சொற்களையும் பொய்யா மொழி யார் கையாளுவது கவனிக்கத்தக்கது இனக்குழு இணைந்த பொது என்னும் இனிய அழகிய சொல் மரபுத்தமிழில் சற்றே தெளிவாக குறிப்பிடப்படுவது மனம் கொள்ளத் தக்கது கல்வெட்டுகளில் பொது நீக்கி என்கிற குறிப்பிட படுவதும் பொது நீக்கி அரசு ஆளுதல் மூவேந்தரின் சிறப்பாக சொல்லப்படுவதும் கவனிக்கத்தக்கது

6).பதியிலார் குறித்த கோட்பாட்டு ரீதியான பார்வைகள் இத்தகையதாக (மாயப்பரத்தையர்) இருப்பினும், இலக்கியப் பிரதிகளில் இடம் பெறும் பரத்தையர், பதியிலார், காமக் கிழத்தியர் முதலியோர் இந்தப் பிரதிகள் ஆண்களால் உருவாக்கப்பட்டவையாயினுங்கூட- பண்புமிக்கவர்களாகவும் அன்பு நிறைந்தவர்களாகவும் காட்சியளிக்கின்றனர்.இவர்களை வையும் குலமகளிரோ கொடுஞ்சொல் பேசுபவர்களாகவும் வன்னெறியாளர்களாகவும் இருப்பதற்கு மேற்குறித்த பரிபாடல் முதல் இன்றைய தி.ஜானகிராமன் (மோகமுள்) வரை சான்றுகளாகின்றனர். நல்லந்துவனாரின் இப்பரிபாடல் (பாட்டு 20) முழுவதிலும் தலைவியும் அவளது கூட்டத்தாரும் பேசுகிற வசவுகளையும் (வைது உரைத்தல்கள்) அதற்குப் பரத்தையின் பதிலுரையையும் காண்க. ஒரு எடுத்துக் காட்டு: தன் தந்தை தனக்கு ஈந்த இடுவளை, ஆரப்பூண் முதலியவை பரத்தையிடம்இருந்ததைக் கண்ட தலைவி அவளை மாயக் கள்வி என ஏசுவதையும் அதற்கு அந்தப் பரத்தை,"நின் அன்பன் எனக்கும் அன்பன்; அவன் கள்வன், நானல்ல எனப் பொறுமையாய்ப் பதிலிறுப்பதையும் அறிக.

தலைவி கூற்று

'..சொல் நல்லவை நாணாமல்

தந்து முழவின் வருவாய்! நீ வாய் வாளா;

எந்தை எனக்கு ஈத்த இடுவளை, ஆரப்பூண்

வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,

தந்தனை தந்தே தருக்கு'

பரத்தையின் மறுமொழி

'மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின் கால் சிலம்பும் கழற்றுவான்; சால,அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்: கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்'

7). பதியிலாரை எழுதுவதில் வைதீக மரபிலான நூற்களிலிருந்து அவைதீக மரபிலான நூற்கள் வேறுபட்டு நிற்பது குறிப்பிடத்தக்கது. இவையும் ஆண்களால் எழுதப்பட்ட பிரதிகளேயாயினும், ஆணியல் பார்வைகளே இவற்றில் ஊடாடி நிற்பினும் மணிமேகலை, சிலம்பு, நீவகேசி. குண்டலகேசி முதலாய சமண, பவுத்த மரபிலான நூற்கள் பதியிலாரின் இருப்பிற்கு அனுதாபத்துடன் கூடிய இடமளிக் கின்றன. கணவனுக்குத் துரோகமிழைத்த சாலியின் மகன் ஆபுத்திரனும், கணிகையின் மகள்மணிமேகலையும் தான் பசிப்பிணி அகற்றும் பேரறத்தை மேற்கொள்ளுகின்றனர். மாதவி, மணிமேகலை முதலான கணிகையர் குலத் தோன்றல்கள் கவுரவமாகச் சித்திரிக்கப்படுவதும் இம்மரபில் தான். பிக்குணிகளாக இவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது நினைக்கத்தக்கது.

8).தமிழ் இலக்கிய மரபில் பெண்களின் குரல் அதிகம் பதிவாகவில்லை என்பதை நாம் அறிவோம். அப்படிப் பதிவான குரல்கள் அனைத்தும் பதியிலாதார் அல்லது பதியை உதறியவர்களின் குரலாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. காட்டாக, ஆண்டாள், காரைக்காலம்மையார், காளிமுத்து முதலானோரைச் சொல்லலாம். அவ்வை, காக்கை பாடினி, நச்சென்னை, வெள்ளிவீதி முதலானோர் கூட பதியுடையவர் களாகப் பதிவுகள் இல்லை. பாணர்,விறலியர் மரபில் வந்திருக்க வேண்டும். குடும்ப நிறுவனத்திற்கு வெளியே இருக்கும் மகளிரே அறிவாளிகளாக (intellectuals) முடியும். இதற்குத் தமிழ் மண்ணில் இரு முக்கிய எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டத்தக்கன. 

  காளமேகப் புலவரின் காலத்தில் நாகையில் வாழ்ந்த கணிகை. பெருஞ்செல்வனும் வள்ளலு மாகிய வருணகுல ஆதித்தன் காத்தான் என்பவன் மீது "வருணகுலாதித்தன் மடல்" எனும் இலக்கிய நயமிக்க உலா மடலை எழுதியவர் இவ்வம்மை. மு.அருணாசலம் பிள்ளை போன்ற பழமை நேயமிக்க தமிழறிஞர்களால்  தமிழிலக்கிய வரலாற்றில் மிகுந்த சிறப்புடைய நூல் எனப் போற்றப்படும் இந்நூல் பெருமையுடையது பள்ளுக்குமுக்கூடல், குறவஞ்சிக்குக் குற்றாலம் என்பதுபோல மடலுக்குவருணகுலாதித்தன் எனபள் பெயர் பெற்றது. இந்நூல், வருணகுவடல் விவரணங்கள் காம உணர்வுகள் முதலிய  காம விளையாட்டில் பெண்ணுக்குச் சிசப்பிரக்கமற்ற இடம் என்பது மாற்றப்பட்டு புரட்டப்படுவது வியப்புக்குரிய ஒன்று. “மடல் ஊர்வேன் என்று ஒரு பெண்பாற் புலவர் பாடுவது அபூர்வம்" என மயிர்க் கூச்செறிகிறார் அருணாசலம். 

 முத்துப்பழனி : பெண்ணின் உணர்வுகளை முதன்மைப்படுத்திப் பாடிய  பெண்பாற் புலவர் தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்மன் அவையில் புலவராகவும் கணிகையாகவும்  வீற்றிருந்த முத்துப் பழனி. பேரழகி, பெரும்புலவர். "ராதா சாந்தவனம்' என்கிற இனிய தெலுங்குக் காதல் பிரபந்தத்தை எழுதியவர். இலக்கிய அழகிலும் காதற் சுவையிலும் விஞ்சி நிற்கும் இச்சிறு காவியத்தில் ராதை காதலிக்கப்படுபவளாக மட்டுமின்றி காதலிப்பவளாகவும் காதல் விளையாட்டில் முன்கை எடுப்பவளாகவும் சித்திரிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்நூலைப் பதிப்பித்தவர் இன்னொரு கணிகை. பெங்களூர் புட்டலஷ்மி அம்மாள் மகள் வித்யா சுந்தரி நாகரெத்தினம்மாள். திருவையாற்றில் தியாகையருக்கு சமாதி எடுத்த இவ்வம்மை இந்நூலின் பதிப்புரையில் கணிகையர் குலத்தில் பிறந்த ஒரு பெண்மணியால் அக்காவியம் பாடப்பட்டது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து முன்னுரை எழுதியுள்ளார். ஒரு கணிகை எழுதிய காமரசப் பாடல் எனக் கண்டித்து அந்நூலைத் தடை செய்வதிலும் வெற்றி பெற்றவர் தெலுங்குச் சீர்திருத்தவாதியும் நாவலாசிரியருமான கந்துகூரி வீரேசலிங்கம். 

அறிவு வெளியில் மட்டு மல்ல புவிவெளியிலும் கூட உரிமையாய், சுதந்திரமாய் உணர்ந்த பெண்கள் தெரு வணிகர்களாக உள்ளவர்களும் பரத்தையரும்தான். இதற்கும் தமிழ் மரபில் எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும். தெரு/வீதி என்னும் பொது இடம் (public space) ஆணுக்குரியது. இதில் ஒருகுடும்பப் பெண் உரிமையோடு நடை பயில முடியாது. கூனிக் குறுகி, இழுத்துப் போர்த்தி விரைந்து கடக்க வேண்டும். இவ்வீதிகளில் சுதந்திரமாக கைவீசி ஆட்டி நடந்து செல்லக் கூடியவர்களாக () கணிகையரையும் () வணிக மகளிரையும்தான் தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டு கின்றன. அகநாரைற்றில் ஆலங்குடி வங்கனார் எழுதிய மருதத்திணைப் பாடலொன்றில் (எண் 106) தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, தோழி கேட்பச் சொல்லிய கூற்றாக அமையும் 
"செறிதொடி தெளிர்ப்ப விசி. சிறிது அவண் உலமந்து வருகம் சென்மோ தோழி!"  

என்னும் வரிகளும், மதுரைக் காஞ்சியில்  

"ஆய்கோல் அவிர் தொடி விளங்க வீசிப் போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ."  கே (563, 564)  

எனச் செல்லும் வரிகளும் மேற்குறித்த கூற்றுக்குச் சான்றுகளாய் அமையும்.

தமிழ் சினிமாக்கள் பெண்களை இப்படி சித்தரித்தது புகழ்பெற்ற பெரியாரிஸ்ட் ரத்தக்கண்ணீர் கதாசிரியர் நடிகர் ஆனால் அந்தக் கதை பேசும் அரசியல்

திருவாரூர் தங்கராசு பற்றிச் சொன்னேன். அவரது புகழ்பெற்ற நாடகம்ரத்தக் கண்ணீர்இப்பிரதி வேசையைத் தமிழ் மரபு வழி நின்று இழிவு செய்கின்றது. எல்லாவற்றிலும் மரபை மீறிய பெரியாரின் வழிவந்தவர்களிடம் அடிநாதமாய்க் குடிகொண்டுள்ள ஆணியல் ஒழுக்கவாதப் பார்வைக்கு இது ஒரு சான்று. தேவதாசி முறையை ஒழிப்பதற்கான இயக்கம் நடத்தியவரும், தமிழின் தொடக்க நாவலாசிரியர்களில் ஒருவரும் பொட்டுக் கட்டும் குலத்தில் தோன்றியவருமான மூவலூர் இராமமிர்தம் அம்மையும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. பொட்டுக்கட்ட மறுக்கும் உரிமைக்காகப் போராடிய பெருமைக்குரிய இவ்வம்மை ஒரு பெண்ணின் இலட்சியம் குடும்பப் பெண்ணாக இருப்பதுதான் என்கிற நோக்கில் தன் நாவலைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. "தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்" என்கிற நாவலின் தலைப்பே இதற்கொரு சான்று. ஒழுக்கவாதப் பார்வைகளில் ஆர்.எஸ்.எஸ். காங்கிரஸ், பொதுவுடைமை,  தமிழ்த் தேசிய இயக்கங்களிடையே எந்தப் பெரிய, ஏன் சிறிய வேறுபாடுகளும் கூட இல்லை என நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிற கருத்து பலருக்கு உவப்பாக இல்லாத போதிலும் அதுவே உண்மை 

பதியிலாத பெண்டி ரைச் சற்றே அனுதாபத்துடன் பார்த்த நோக்கென்பது இந்த நூற்றாண்டின் தற்கால இலக்கியங்களில்தான் காணக் கிடைக்கின்றது. விரிவாகப் பேச சாத்தியமில்லை என்பதால் இரு முக்கிய பிரதிகளை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இரண்டும் இடதுசாரி நிலைபாடுகளைத் தமது தொடக்க நிலையில் கொண்டிருந்த இரண்டு எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டவை. ஒருவர் ஜெயகாந்தன் ("இலக்கணம் மீறிய கவிதை”); மற்றவர் ஜி.நாகராஜன் (“குறத்தி முடுக்கு") மற்றும் "நாளை மற்றுமொருநாளே )

இரு பிரதிகளிலும் வேசியரின் இருப்பு அங்கீகரிக்கப் படுகிறது. தமிழ் மரபிலிருந்து விலகி பருஞ்சமாகக் காட்டாமல் அன்பு கூர்ந்த மனிதப் பிறவிகளாகப் படைக்கின்றனர். எனினும் இவ்விரு பிரதிகளுக்குள்ளுமுள்ள ஒரு நுணுக்கமான வேறுபாடு இங்கே கருதத்தக்கது." 

ஜெயகாந்தனின் நாயகி ஒரு வேசியாயினும் அவளின் சிறப்பு அவளிடம் குடும்பப் பெண்ணின் பாங்குகளிரும். பணிவிடைகளும் நிறைந்திருப்பதே. எனவே அவளில் "நம்மை" அடையாளம் காண்பதே ஜெயகாந்தனின் பூரிப்பின் அடிப்படையாக இருக்கிறது. அந்த வகையில் அவளது வேசி என்னும் இருப்பு கேவலமாக உணர்த்தப்படுகிறது. ஆக மீண்டும் குடும்பப் பெண்ணே இலட்சிய மாதிரியாக உணர்த்தப்படுகிறாள். ஜி. நாகராஜனின் நாயகிகள் மட்டுமே வேறு எந்தப் புனிதங்களுமின்றி வேசிகளாகவே படைக்கப் படுகின்றனர். வேறு எந்த இலட்சிய மாதிரிகளும் அவர்கள் மீது ஏற்றப்படுவதில்லை. வேசிகளின் இருப்பில் நம்முடைய தன்னிலை, ஆணாதிக்க மதிப்பீடுகள் என்பன அதிர்வுக் குள்ளாகின்றன. 

 சமகாலப் பெண்ணியப் பிரதிகள் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டியவை. குடும்ப நிறுவனம், ஆணாதிக்க ஒழுக்க மதிப்பீடுகள் முதலிய ஆணியல் பார்வைகளை உள்வாங்கிக் கொண்டவர்களால் எழுதப்படும் பிரதிகள் - அவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் - அவை பெண்ணிலை நோக்கிற்கு எதிரானவைகளாகவே உள்ளன.

பின் குறிப்புகள் : 

1. தூதுத்திரட்டில் (1957 பதிப்பு, பக்: 106,107) காணப்படும் வேசியர் பற்றிய ஒரு விவரணம் :

"கங்க மங்கலத்திலே கட்ட பொம்மு மாணிக்கம் கொங்கை வயிற்றில் விழுந்து கூத்தாட - அங்கதையும் காட்டாது இளைஞர்கள் கட்டியணை நற்காமக் கோட்டாலை கொண்டு பணம் கூட்டுகிறாள் - நாட்டமாய் மிக்க தென் திருப்பேரை மின்வயிரமுத்து பெரும் செக்கது போல் ஆகியும் பொன் தேடுகிறாள் - செவ்வாணன் இரட்டைத் திருப்பதி ஊரிலிருக்கும் குப்பியின்மை வெட்டை கொடுத்தேனு நிதி வேண்டுகிறாள்''

வயதான பின்பும், மேகநோய் பீடித்த பின்பும் பணம் பறிக்கும்ம், காழி குவசியர் சித்தரிக்கப்படுவதும். மாணிக்கம், வயிரமுத்து, குப்பி, சிலம்பி, வல்லி, கூத்தாள், கலைச்சி, திம்பி, தஞ்சி, கமலாட்சி, ஆவுடை, மனோன்மணி என்றெல்லாம் பெயர் சொல்லி இழிவுபடுத்தப்படுதலும் குறிப்பிடத்தக்கன. 

அவைதீக மரபின் வேறுபட்ட பார்வைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு புத்தர் - அம்பபாலிகை கதை  

 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வெங்கட்ராமையாவின் "மராட்டியர் கால சமூக வாழ்க்கை" பற்றிய நூலில் தென்படும் சில செய்திகள். 

() 5-8-1825 : 'அங்கு' என்பவளின் மகள் 'நாகு' ரெசிடென்ட் துரைக்கு மரியாதை தராததற்காக 2 பணம் அபராதம் விதிக்கப்படுகிறாள்.

() 17-2-1846 : தஞ்சை மேலவீதி கொங்கணேசுவரர் கோவிலுக்கு அடுத்த சந்தில் இருந்த ராவ் சாகிபு சிதம்பரம் பிள்ளை, அலிகாணா சந்தில் இருக்கும் வெள்ளாளர் அப்புபிள்ளை பெண்சாதியின் பெண் காவேரியை கிரயத்திற்கு வாங்குகிறார் 

() அப்புராவ் காடிகேயின் வைப்பாட்டி பெண் சீதாபாய் (வயது 10), நாடகசாலை கிருஷ்ணாவின் பெண் செல்லம் (வயது 10) ஆகியோரை சர்க்கார் கிரயத்திற்கு வாங்கிக் கொள்கிறது

தேசீய அரசியலில் பெண்கள் பிரச்சினை

தமிழ்நாட்டில் தோன்றிய காலனீயத்திற்கெதிரான தேசீய இயக்கத்தின் (ஆண்கள் மயமான) தலைமையின் "பெண்கள் பிரச்சினை " தலைமையின் பார்வைகளை விளக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸின் இரு முக்கிய தலைவர்களான எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் திரு.வி.. ஆகியோரது பார்வைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம். தமிழ்நாட்டுத் தேசீய அரசியலில் மேலாதிக்கம் செலுத்திய கருத்தியல் போக்குகளின் வகை மாதிரிகளாக இவை அமைந்துள்ளன. ஒரு சனாதனப் பார்ப்பனர் என்கிற வகையில் தமிழக காங்கிரசில் மேலாதிக்கம் செலுத்திய தலைமையின் மாதிரியாகவும் பிரதிநிதியாகவும் விளங்குகிற சத்தியமூர்த்தி, தாம் செயலூக்கத்துடன் விளங்கிய அரசியல் வாழ்க்கை முழுவதிலும் பெண்கள் பிரச்சினைகளில் வெளிப்படையாகக் கவனம் செலுத்தினர். இதேபோல திரு.வி.கவும் பெண்கள் பற்றி அதிகம் எழுதியவர். அறிவுபுகட்டும் நோக்கில் எழுதப்பட்டவை அவை. காங்கிரசில் இருந்த பார்ப்பனரல்லாததலைவர் என்கிற வகையில் திரு.வி.கவின் அரசியலுக்கு ஒரு மாறுபட்ட ஏற்புச் சூழல் இருந்தது.

பெண்கள் பிரச்சினையில் சத்தியமூர்த்தி

1941ம் ஆண்டில், தான் சிறையிலிருந்த காலத்தில், தனது பதினாறு வயதான மகள் லட்சுமிக்கு எழுதிய தொடர் கடிதங்களில் பெண்கள் குறித்த தனது கருத்துக்களை சத்தியமூர்த்தி (.மூ) வெளிப்படுத்தியுள்ளார். அடிப்படையில் பெண்கள் என்போர் தாய்மார்கள், மனைவியர் மட்டுமே என்கிற கருத்து இக்கடிதங்களில் விரவிக் கிடக்கிறது. பெண்களுக்குத் தமது பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணரச் செய்வது ஆண்களின் கடமை;தாய்மையே பெண்களின் தலையாய பணி என்கிற வகையில் திருமணம் அவர்களுக்கு அவசியமானது. தமது விடுதலைக்குத் திருமணம் தடையாக இருக்கும் எனப் பெண்கள் கருதக்கூடாது என்கிறார் .மூ. இவ்வாறு "காலனீயத்தின் மற்றவருக்கு' (அதாவது காலனீயம் கட்டமைத்த நவீன பெண் -மொ.பெ) எதிராக நிற்கக் கூடியவர்களாக "மரபுவழிப் பெண்ணைக்" கட்டமைக்கிறார் .மூ. பதிவிரதா தர்மத்தையும் கற்பையும் (மரபுவழிப்) பெண்களுக்கு வற்புறுத்துவதன் மூலம் குடும்பத்தின் நன்மைக் காக மட்டு மின்றி நாட்டின் நன்மைக்காகவும் பெண்களின் பாலியல் கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என வரையறுக்கிறார் .மூ.அவரைப் பொறுத்தவரை இராமாயண சீதையே இந்தியப் பெண்ணின் இலட்சிய மாதிரி. ஏனெனில் இராமனின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்வதே சீதையின் ஒரே விருப்பமாக இருந்தது; சீதை தைரியமானவள்; கற்புடையவள்; தியாக மனப்பான்மை கொண்டவள்.

 பெண்களின் நியாயப்பூர்வமான இடம் வீடு என எல்லைகள் வகுத்த   .மூ. அதன் தொடர்ச்சியாக சடங்காசாரங்கள் கொண்ட திருமணமே அவர்களின் விதி எனக் கருதினார். எனினும் அவர் பெண் கல்வியை மறுக்கவில்லை. ஆனால் பெண் கல்வி என்பது மரபின் எல்லைகளைத் தாண்டக்கூடாது என்று கருதினார்.வீட்டைப்பராமரிப்பதற்குப் பெண்களைப் பொறுப்பாக்கிய .மூ.பெண்கல்வி என்பது முறைசார்ந்த கல்வியாக இருக்கக் கூடாது என வலியுறுத்தினார். தங்களின் அனுபவங்கள் மற்றும் சுற்றியுள்ள சூழல்களின் மூலமாகக் கற்கும் விதமாக பெண் கல்வி அமைய வேண்டும் என்பது அவர் கருத்து. ஆனால்   ஆண்கள் சம்பாதிக்க வேண்டியவர்கள்; எனவே அவர்கள்

தொழில்நுட்பக் கல்வி பெறுவது அவசியம் என்றார்'

 ஹிந்தி ஆங்கிலம் சமஸ்கிருதம் தமிழ் சிறிது உலக வரலாறு புவியியல் குடும்ப சுகாதார முறைகள் இசை ஓவியம் போன்றவற்றை பெண்கள் கற்கலாம் என அவர் பரிந்துரைத்தார். .மூ. பரிந்துரைத்த பெண் கல்வி பாடத்திட்டம் அவர்களை வீட்டோடு கட்டிப் போடுவதைத் தான் நோக்கமாகக் கொண்டதேயொழிய வேலை என்கிற பொதுவெளியில் அவர்கள் இயங்குவதை அல்ல உலக இலட்சியப் பெண்ணை அடையாளம் காட்ட .மூ வால் பயன்படுத்தப்பட்ட வீடு  வெளி உலகம் என்னும் இருமை மற்றும் அவர் கட்டமைத்த தாய்/ மனைவி என்கிற இலட்சிய மாதிரிகள் என்பன வீட்டுக்குள்ளேயே தமது செயற்பாடுகளை முடித்துக் கொள்ளாத ஒரு பெரும் பெண்கள் பகுதியை ஒதுக்கியது. சாதி அடுக்கில் கீழ் மட்டத்தில் உள்ள பெண்கள், வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டை விட்டு வெளியே சென்று உழைக்க வேண்டிய பெண்கள் ஆகியோரை .மூ வின் வரையறை விலக்கி விளிம்புக்குத் தள்ளியது 

பெண்களுக்கு உரிய இடம் வீடுதான் எனக் கருதிய .மூ பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதை அச்சத்துடனேயே எதிர் கொண்டார். சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பொது அரசியல் அமைப்புகளில் பெண்கள் பங்களிக்கும் சாத்தியக் கூற்றை அவர் மறுத்தார். ஆண்களைப் போலன்றி பெண்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்களால் குறிப்பிட்டுச் சொல்லும்படி சாதிக்க இயலாது; பொதுவாழ்க்கைக்குரிய போதிய திறமை அவர்களுக்குக் கிடையாது என்றார் .மூ. பொதுவாழ்வில் தீவிரமாகச் செயற்பட்ட பெண்களுக்கு அவர் எச்சரிக்கையும் விடுத்தார். அவர்கள் தாம் பெண் என்பதை மறந்துவிடக் கூடாது. தமது உரிமையையும் ஆண்களுடனானசமத்துவத்தையும் கோருவதற் காகப் பொதுமேடைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றார்.' 

பார்ப்பனீய தந்தை வழி சார்ந்த இந்தக் கட்டமைப்பே .மூ பொதுவாழ்வில் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கை களின் அடிப்படையாக இருந்தது. பெண்மை குறித்த அவரது இந்தக் கட்டு மானம் ஒருவனுக்கு ஒருத்தி (monogamous sexual- ity) என்பதாகப் பாலியலை வரையறுத்துப் போற்றியது. 

1929ம் ஆண்டு சென்னை சட்டமன்றத்தில்குழந்தைத் திருமணத்                   தடைச் சட்டம்அறிமுகம் செய்யப்பட்டது. காங்கிரஸில் அன்று தீவிரமாய்ச் செயற்பட்டுக் கொண்டிருந்த .மூ இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்காகக் காங்கிரஸ் கட்சி மீதும், அரசின் மீதும், பெண்கள் அமைப்புகள் மீதும் கடும் தாக்குதல் தொடுத்தார். இந்த சட்டத்தை எதிர்ப்பதற் கெனவே "சனாதன தர்ம மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்து அதில் கலந்தும் கொண்டார். " காங்கிரஸ் கட்சியே இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டபோது கட்சியிலிருந்து தான் விலகப் போவதாக எச்சரித்த .மூ. அப்படி விலகாவிட்டாலும் கட்சிக்குள் இந்த சட்டத்திற்கு எதிராக அபிப்பிராயத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தார். இந்த சட்டத்தை திரும்பப் பெறுவதற்காக அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் நீண்ட சத்தியாக்கிரகத்தை நடத்துவது, அல்லது குழந்தைத்திருமணங் களை வெளிப்படையாக நடத்துவதன் மூலம் சட்டத்தை மீறுவது என்கிற செயற்திட்டங்களை முன்வைத்தார்.

தனிப்பட்டவரின் அந்தரங்க வாழ்விலிருந்து (Private Life) மேற்கத்தியக் காலனீயத் தலையீட்டை விலக்கி வைக்க வேண்டும் என்பது அவர் கருத்தாக இருந்தது. அதாவது அந்தரங்க வாழ்வு காலனீயப்படுத்தப்படாத "வெளி" (space) யாகப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் "மரபு" என்பதன் மூலமாகச் செயற்படும் இந்திய ஆண்களின் அதிகாரத்துக்குக் கீழ் இந்த வெளி அமைய வேண்டும். .மூ. வைப் பொருத்த வரை இந்து,பார்ப்பனீய, சனாதன மரபே சுதேசிய இந்தியக் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் குடும்பம் என்கிற "அந்தரங்க வெளியில்" (Private space) பாலியலை நெறிப்படுத்துகிறது; திருமணம் இத்தகைய நெறிப்படுத்தலின் ஒரு அங்கம். இதில் பொது நிறுவனங்களான (Public Institutions) நீதிமன்றங்களோ, சட்டமன்றங்களோ தலையிடக் கூடாது. தவிரவும் இந்த நிறுவனங்கள் மேற்கத்தியப் பண்பாட்டின் உருவாக்கங்கள். "இந்து திருமண முறிவுச் சட்டம்" என்ற விவாகரத்துச் சட்டம் குறித்த .மூ வின் நிலைபாடும் சுதேசி x மேற்கத்திய என்கிற இருமையை வலியுறுத்தியது. விவாகரத்து என்பது அருவருக்கத் தக்கது, இந்துக்களுக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கித் தள்ளினார் .மூ 

காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட மக்களின்  

பாலியலை நெறிப்படுத்தும் அதிகாரத்தை காலனீய அரசுக்கு  

மறுப்பதற்காகவே மணஉறவு தொடர்பான சட்டங்களில் .மூ

மேற்குறித்த நிலைபாடுகளை மேற்கொண்டார். ஆனால்.

காலனீயர்களின்/மேற்கத்தியர்களின் சாராம்சமான பண்பாக

சத்திய மூர்த்தியால் அடையாளம் காணப்படும் பூப்புக்குப்

பிந்திய திருமணம், திருமண முறிவு உரிமை போன்றவை

தமிழகத்தின் அடித்தளச் சாதியினரின் சமூக உறவுகள் ஒன்றோடொன்று கலந்தவையாக இருந்தன. ஆனால் சத்தியமூர்த்தியின் (.மூ) பெண்கள் குறித்த பார்வை, மேற்கத்தியப் பெண்களையும் அடித்தளச் சாதிப் பெண்களையும் ஒரே மாதிரியான அடையாளத்தில் பார்த்தது. இந்த இரு பிரிவினரையும் அவர் தேசீயத்தின்இலட்சியப் பெண்என்ற வரையறையிலிருந்து விலக்கினார்.

ஒருதாரக் குடும்பமே இந்தியாவின் அடையாளம் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் அந்த குடும்ப அமைப்புக்கு வெளியே இருந்த தேவதாசி முறையை ஒழிக்க முயன்றவர்களை அவர் எதிர்த்தார். தேவதாசி முறை சுதேசிய இந்து கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே அவரது வாதம். இதை ஒழித்தால், பின்னர் கோயில் அர்ச்சகர்களையும் நீக்க வேண்டும் என்ற பார்ப்பனர் அல்லாதோரின் கோரிக்கைக்கு வழிவிடும் என்று அவர் எச்சரித்தார்.

தேவதாசி முறையை நியாயப்படுத்துவதற்காக, அவர்களின் பாலியல் நிலையையே .மூ மறுத்தார். பார்ப்பனீய உரிமைகளை பாதுகாக்கும் வகையில், தேவதாசிகளை பாலியல் அற்றவர்களாகக் காட்டினார். அவர்கள் கிறிஸ்தவ கன்னியர்களைப் போலவே வாழ்கிறார்கள் என்றும், கன்னியர் முறையை யாரும் ஒழிக்கச் சொல்லவில்லையே என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பெண்கள் தொடர்பாக சத்தியமூர்த்தி ஆதரித்த ஒரே சட்டம், பாலியல் தொழிலைத் தடைசெய்யும் சட்டம்தான். அது குடும்ப வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று அவர் நம்பினார். அதற்காக புதிய சட்டம் தேவையில்லை என்றும், ஏற்கனவே இருந்த மாநகர காவல்துறைச் சட்டப் பிரிவுகள் போதுமானவை என்றும் சட்டமன்றத்தில் வாதிட்டார்.

மொத்தத்தில், குடும்பமே பெண்களின் இயல்பான இடம் என்பதே அவரது மையக் கருத்தாக இருந்தது. இந்திய தேசத்தின்இலட்சியப் பெண்என அவர் வரையறுத்தது வீட்டுக்குள் வாழும், உயர் சாதியைச் சேர்ந்த இந்துப் பெண்ணையே. பொருளாதார காரணங்களுக்காக வெளியில் வேலை செய்யும் அடித்தளப் பெண்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் இந்த இலட்சியத்திலிருந்து விலக்கப்பட்டனர். ஆனால் தேவதாசியர்கள் மட்டும் விதிவிலக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். காரணம், அவர்கள் பார்ப்பனீய இந்து சடங்கு அமைப்புக்குள் இருந்ததுதான்.

இவ்வாறு, பெண்களின் பாலியல் நிலையை நேரடியாக எதிர்கொள்ளாமல், அதை மறுப்பதன் மூலம் சத்தியமூர்த்தி தேவதாசி முறையை நியாயப்படுத்தினார்.

பெண்கள் பிரச்சினையில்திரு.வி. கலியாணசுந்தர முதலியார்


 

முன்பே குறிப்பிட்டது போல பார்ப்பன மேலாதிக்கம் நிலவிய தமிழக காங்கிரசில் திரு.வி.. பார்ப்பனரல்லாத தேசீயவாதியாக இருந்தார். அவரது அரசியல் .மூவுடன் ஒப்பிடுகையில் சற்றே குறைந்த சனாதனப் பண்பைக் கொண்டிருந்தது. பொறுமை, சகிப்புத்தன்மை, தியாகம் தன்னலமின்மை, அழகு, அன்பு போன்ற பண்புகளைத் தன்னகத்தே கொண்டதுதான் பெண்மை எனவும் அடிப்படை யில் அது தாய்மைதான் எனவும் தனது புகழ்பெற்ற தொடக்க கால நூலான "பெண்ணின் பெருமை" யில் திரு.வி.. வரையறை செய்திருந்தார்.
 பெண்மை என்பது ஒரு தனது சொல்லாடலில் தாய்மையை யை மையப்படுத்திய திரு.வி. திருமணம் என்பதைப் பெண்களின் வாழ்க்கையில் பழந்தமிழர் முறையில் நடைபெற வேண்டும்." இதே போல விவாகரத்தையும் திரு.வி.. கண்டித்தார். குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு என்கிற தாய்மைப் பண்புகளே பெண்களின் சாராம்சம் என அவர் கருதியதின் விளைவாக மேற்குலகின் கருத்தடை முறைகளை அவர் கடுமையாகக் கண்டித்தார். அவரைப் பொருத்தமட்டில் திருமணம் என்பது குழந்தை பெறுவதற்காக வேயன்றி வெறும் "உடற் கிளர்ச்சிக்காக" அல்ல.

பெண்களின் மரபு சார்ந்த பாத்திரங்களுக்காக வாதாடிய திரு.வி.. கற்பிற்கு கண்ணகியையும், சிந்தனைத் திறனில் மணிமேகலையையும் பக்திக்கு ஆண்டாளையும் இலட்சியமாகத் தொடர்ந்து சித்தரித்து வந்தார். எனினும் திரவுபதியைப் (பாஞ்சாலி) பெண்களுக்கு ஆதர்சமாகக் காட்டியபோது திரு.வி. சமணர்களின் மகாபாரதத்திலிருந்து திரவுபதியைக் கட்டமைத்தது குறிப்பிடத்தக்கது.வியாசரின் திரவுபதி அய்வருக்கு மனைவி. ஆனால் சமண மரபுத் திரவுபதியோ அர்ஜூனனை மட்டுமே திருமணம் செய்து கொண்ட கற்புடை நங்கை என்பதே இதற்குக் காரணம்! ஆக திரு.வி.கவிற்கும் கூட சத்திய மூர்த்தியைப் போலவே ஒருவரை மணந்து வாழும் பாலியல் நியதி கொண்ட உயர் சாதிப் பெண்களே மரபை உணர்த்தினர்.

தேசிய இயக்கம் சார்ந்த பெண் கதாசிரியர்களும் இதே போன்ற கருத்தியல் நோக்கைப் பரப்பினார்கள். இருப்தே ஆண்டுகளில் 115 நாவல்களையும் பல கவிதைகளையும் எழுதிய வை.மு.கோதைநாயகி அம்மாள் (வை.மு.கோ) இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, தேசீய இயக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில் தேசீயவாதக் கருத்துக்களைப் பரப்பிய ஜெகன் மோகினி என்ற தமிழ் சஞ்சிகைக்கு ஆசிரியராகவும் விளங்கிய வர் வை.மு.கோ. அவரது நாவலானவீர வசந்தாவில் பெண் விடுதலை என்கிற கருத்தாக்கம் பெண்களுக்கு எந்தவிதமான பொருளைத் தந்தது, மேற்கத்திய மயமாதலுடன் இணைந்த நவீனத்துவம் எவ்வாறு பெண்களின் வாழ்வைக் குலைக்க முடியும் என்பவை குறித்து விவாதிக்கிறார். இந்த நாவலின் கதாநாயகி மேற்கத்தியப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையான ஒரு தமிழ்ப் பார்ப்பனி. ஒரு கிறிஸ்தவரிடம் காதல் கொண்டு கர்ப்பமடைகிறாள். ஆனால் கட்டாயத்தின் விளைவாக ஒரு இந்துப் பையனை மணக்க நேரிடுகிறது. நாயகியின் பழைய உறவும், கருவுற்ற செய்தியும் கணவனுக்குத் தெரியவரும்போது தற்கொலை செய்து கொள்கிறாள். கடைசியாக அவள் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் ஒரு கிறிஸ்துவனுடனான் பழக்கத்தினால் தனக்கு இந்த 'நாசம்' விளைந்ததாக அதில் அவள் கூறுகிறாள். இந்து தர்மத்தை நேர்மையாகக் கடைபிடித் திருந்தால், சாதீயநியதிகளையும் பெண்களுக்கான மரபு சார்ந்த பணிகளையும் மேற்கொண்டிருந்தால் தனது தூய்மையும் கன்னித் தன்மையும் காப்பாற்றப்பட்டிருக்கும் என்கிறாள். பூப்பெய்துவதற்கு முன்பு பெண்களுக்குத் திருமணம் செய்வது போன்ற மரபுசார்ந்த பழக்க வழக்கங்களைக் கைவிட்டு மேற்கத்திய பழக்கவழக் கங்களைக் கடைபிடித்ததற்காகத் தனது தந்தையைக் குற்றம்சாட்டும் நாயகி, இவைதான் தன் வாழ்வு நாசமானதற்குக் காரணம் எனக் கூறுகிறாள். (பெண்) விடுதலை பெண்களுக்கு எதிரானது என்று கூறி கடிதத்தை முடிக்கிறாள்.சுருக்கமாகச் சொல்வதானால் இந்த நாவலில் மரபு சார்ந்த பெண்மை தேசீயக் கலாச்சாரத்தின் அடையாளமாக நிறுத்தப்படுகிறது; ஒழுக்கமின்மை, கீழ்ப் படியாமை. கண்மூடித்தனம் ஆகியவை மேற்கத்திய மயமாதலின் அடையாளம்! பெண்களின் வாழ்வை அழிக்கும் மேற்கத்திய காலனியாதிக்க மனிதன் குறித்த வை.மு.கோ. வின் கற்பித படிமமே நாவலில் வரும் கிறிஸ்தவ பையன். அதே சமயத்தில் மரபுசார்ந்த பார்ப்பன ஆண் இப்படி குடும்பத்தை உடைக்கும் காரியங்களைச் செய்ய மாட்டான்.  வை.மு.கோ. வைப் பொருத்தவரை  ஒரு உண்மையான மரபுசார்ந்த இந்தியப் பெண்,  விடுதலை உட்பட்ட எல்லாவிதமான மேற்கத்தியமயமாதலையும் எதிர்க்க வேண்டும். பெண் விடுதலை என்பது குடும்பங்களுக்கு ஊறுவிளை விக்காத தாகவும் பெண்மைப் பண்புகளான கற்பு, சகிப்புத்தன்மை, பொறுமை போன்ற பெண்மை சார்ந்த நியதிகளை அடையும் நோக்கத்துடனும் அமைய வேண்டும் என்பது வை.மு.கோ. வின் கருத்து.

பெண் கல்வி என்பதுங்கூட அவரைப் பொறுத்தமட்டில் மரபு சார்ந்த பெண்மைப் பண்புகளையும் கடமைகளையும் அவர்களுக்கு அறிவுறுத்தும் நோக்கத்திற்காகத்தான்."ரோஜாமலர்" என்ற நாவலில் பெண்கள் பள்ளிகளில் பெண்களுக்குக் கல்வி கற்பித்தால்தான் "ஸ்திரீ தர்மத்தை"ப் பாதுகாக்க முடியும் என்கிறார். திருமணத்தைப் பொருத்த மட்டில் சத்தியமூர்த்தி போலவே வை.மு.கோவும் குழந்தை மணத்தை ஏற்றுக் கொள்கிறார். அவரே குழந்தையாக இருந்தபோதே மணம் செய்விக்கப்பட்டவர். இது ஒரு அடிப்படையான பார்ப்பனச் சடங்கு எனக் கூறி ஏற்றுக் கொண்டவர். குழந்தைத் திருமணம் என்பது குடும்பத்தில் அமைதி நிலவச் செய்வதோடு அனைத்து வகையான "உணர்வுப்பூர்வமான வேதனைகளிலிருந்தும்" பெண்களை விடுவிக்கிறது என்பது அவர் கருத்து 

இவ்வாறு வை.மு.கோ. வின் நாவல்கள் தேசீய ஆண் தலைவர்களின் பெண்கள் குறித்த சிந்தனையை வழிமொழி கிறது. இந்து பார்ப்பனக் கலாச்சாரமே இவர்களுக்குத் தேசீய கலாச்சாரம்: இந்தக் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் பதிலியாகவும் மரபுவழிப்பட்ட பாத்திரங்களில் பெண்கள் சிறப்புறுகின்றனர். வை.மு.கோ.வும் இதர தேசீயப் பெண் இயக்கவாதிகளும் சுயேச்சையாகச் செயல்படவில்லை. தேசீய இயக்கத்தின் ஆணியத் தலைமைக்குக் கட்டுப்பட்டவர் களாகவே உள்ளனர்.


 காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் நடவடிக்கைகளில், குறிப்பாக காந்தீய நிர்மாணத் திட்டங்களில் பங்கெடுத்த பெரும்பாலான பெண்கள் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களேமரியாதைக்குரியவர்களாக"க் கருதப்பட்ட போதிலும்மற்றவர்களும்தேசீய இயக்கத்தில் இருந்தனர். உண்மையில் மத்தியதர வர்க்க ஆண்கள்  மற்றும் பெண்களின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் மிகப் பெரும் எண்ணிக்கையில் பாலியல் தொழிலாளரும் தேவதாசிகளும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒத்துழையாமை இயக்கத்தில் (1921) பாலியல் தொழிலாளிகள் பெருந்திரளில் கலந்து கொண்டனர்; பொதுக் கூட்டங்களில் பங்கு பெற்றதோடு மேடைகளில் தேசீய கீதங்களையும் பாடினர்." காந்தி, மாயவரம் (மயிலாடுதுறை) நகரத்திற்கு வந்தபோது (1927) தேவதாசிகள் வரவேற்புக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து அவருக்குப் பணமுடிப்பையும் தங்க வளையல்களையும் அளித்தனர். தேசீய இயக்கத்தில் தொடர்ந்து பங்கேற்பதாகவும் காந்தியிடம் உறுதியளித்தனர்." பொது அரங்கில் இவர்களோடு பங்கேற்பதன் விளைவாக தாமும் "வழுக்கி விழுந்தவர் களோடு" குழப்பிக் கொள்ளப்படுவோமோ எனப் பல மத்திய தர வர்க்கப் பெண்கள் அச்சமுற்றனர். " அந்தரங்க வெளி/ பொதுவெளி ஆகியவற்றில் பெண்களின் பங்கு பற்றிய காங்கிரஸ், காந்தி ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படை யில் தேவதாசிகள் ஓரங்கட்டப்பட்டனர்." மாயவரத்தில் தேவதாசிகளுடனான காந்தியின் உரையாடலே இதற்கொரு சான்று. தேவதாசியர் அளித்த நகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பு காந்தி ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டார். அவர்கள் தமது தேவதாசித் தொழிலை விட்டு விட்டு "மரியாதைக்குரிய மண வாழ்வை" நடத்துகின்றார்களா என்பதே காந்தி அறிந்து கொள்ள விரும்பியது. காந்தியால் நிந்திக்கப்படுவோம் என்கிற அச்சத்தில் பல தேவதாசிகள் தாம் கணவன்மார்களுடனும், குழந்தைகளுடனும் குடும்ப வாழ்க்கை நடத்துவதாகத் தெரிவித்தனர். தமது சாதி நியதியின்படி அவர்கள் தாலி அணியாது இருந்ததை கண்ட காந்தி இந்து  என்பதன் அடையாள மாகிய தாலியை அணிந்து கொள்ளச் சொல்லி அறிவுரை பகன்றார்ஒழுக்கம் கேட்ட தேவதாசி தொழில் செய்வதை விட்டு விட்டு மரியாதை ஆனா ராட்டை நூல் நூற்கலாமே அதன்  மூலம் உயிர் வாழ்வதற்குப் போதுமான வருமானம்  பெற முடியாதே என்பதைச் சில தேவதாசிப் பெண்டிர் சுட்டிக் காட்டியபோது காந்தியிடம் பதிலில்லை



காலனீய அரசு சிறைகளில் தேவதாசியரையும் பாலியல் தொழிலாளிகளையும் மற்ற பெண்களிடமிருந்து பிரித்து இழிவு செய்தபோதும் காங்கிரசும் அதன் நடுத்தர வர்க்கப் பெண் இயக்கவாதிகளும் தங்களின் "மரியாதைக்குரிய அரசியலைவெளிப்படுத்தினர். காந்திமதி அம்மாள், பெரியநாச்சி அம்மாள் என்ற இரு ("மரியாதையற்ற) பெண்களுக்கு சிறையில் 'சி' பிரிவு ஒதுக்கித் தீர்ப்பு வழங்கிய திருநெல்வேலி மாவட்ட  நீதிபதி,

"இந்த இரண்டு பெண்களும் மலிவான வகையில் தியாகிப் பட்டம் பெற முயற்சிக்கின்றனர். அவர்கள் முரட்டுத்தனமானவர்களாகவும் கெட்டவர்களாகவும் தெரிகிறார்கள். வீதிகளில் அலையக்கூடிய வகைகளாகத் தோன்றுகிறது. இவர்களைப் பற்றிப் பொதுமக்கள் அக்கறைப்படுவார்கள் என நான் கருதவில்லை" என்றார்." இதே போல வேறு இரண்டு முன்னணி அரசியல் இயக்கப் பெண்களாகிய தாயாரம்மாள் மற்றும் சீதாலட்சுமி குறித்துக் கூறிய மதுரை மாவட்ட நீதிபதி "முதலாமவர் ஒரு நாட்டுக் கோட்டைச் செட்டியாரின் வைப்பாட்டி மற்றவர் ஒரு சாதாரண விபச்சாரி." என்றார்." காங்கிரஸ் கட்சியோ இல்லை இதரப் பெண் போராளிகளோ இத்தகைய பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் சிறைச் சாலைக்குள் "மரியாதைக்குரிய" இந்துப் பெண்களின் தாலி, குங்குமம் முதலிய மங்கலச் சின்னங்களை அகற்றிவிட்டதாகக் கூறப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் பெண்கள் அமைப்பினரும் பெரும் சச்சரவை ஏற்படுத்தினர். தலைச்சேரி நீதிபதி ஒரு பெண் கைதியின் தாலியை அகற்றச் சொன்னார் எனக் கூறப்பட்ட செய்தியைக் கண்டித்த தமிழகம் என்ற உள்ளூர்த் தினசரி, " இந்தியப் பெண்களுக்குத் தங்களது உயிரைவிட் தாலியே மதிப்பு வாய்ந்தது. தங்களின் புனிதச் சங்கிலி பறிக்கப்படுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" எனப் பெருமைப்பட்டுக் கொண்டதுசிறைச்சாலைக்குள் மணமான பெண்களின் நெற்றிக் குங்குமம் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது பற்றி  (சட்ட அமைச்சர்) உடனடியாக விளக்கம் தரவேண்டுமெனச் சென்னை சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் குரல் கொடுத்தனர்  திருமணமான இந்து பெண்களின் மங்கள சின்னம் அகற்றப்பட்டதற்கு  இந்து பெண்கள் அமைப்பும் போராட்டம் நடத்தியது 


சைவத்தைப் பரப்புவதற்குப் பாடுபட்டவர்கள் நாயன்மார்கள் இவர்கள் 63 பேர்வைணவத்தைப் பரப்புவதற்காகப் பாடுபட்டவர்கள் ஆழ்வார்கள்இவர்கள் 12 பேர்இதில் ஆண்டாள் என்பவரும் ஒருவராவார்


ஆண்டாள் கி.பிஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக வரலாற்றில் எழுதியுள்ளனர்கி.பிஏழாம் நூற்றாண்டு என்பது தமிழகத்தில் களப்பிரர் களை எடுத்துவிட்டு பல்லவர்கள் கோலோச்சிய காலம்அது சமணத்தையும்பௌத்தத்தையும் அழித்து சைவவைணவ சமயங்கள் புதுப்பிக்கத் தொடங்கிய காலம்


களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்களுக்கு இருந்த உரிமைகள்  நீக்கப்பட்டனஅவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக் கப்பட்டு உழு குடிகளுக்குக் கொடுக்கப்பட்டனஎனவே வரலாற்றில் அதை இருண்ட   காலம் என்று எழுதிவிட்டனர்,

குப்தர்கள் ஆட்சி பொற்காலம் என்று படிக்கிறோம்என்ன காரணம்பார்ப்பனர்களுக்குப் பணமும்பொருளும் வாரிவாரி மன்னரால் வழங்கப்பட்டன.   இதிகாசங்களில் இடம் பெற்றிருந்த பெயர் களெல்லாம் ஊர்ப் பெயர்களாக  மாற்றப்பட்டனஆகவே அது பொற் காலம் என அழைக்கப்படுகிறது.   சுருக்கமாகச் சொன்னால்பார்ப்பனர்கள் சுகமாக இருந்தால் அது   பொற்காலம்பார்ப்பனர்களுக்குத் தொல்லைகள் இருந்தால் அது இருண்ட   காலம் என்று எழுதி விடுகிறார்கள்

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMdl0My&tag=%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D#book1/



களப்பிரர் ஆட்சியில் ஆட்சியில் தமிழகம்என்ற நூலை மயிலை சீனி.     வேங்கடசாமி சான்றுகளுடன் எழுதியுள்ளார்நல்ல நீதி நூல்க ளெல்லாம்   அந்தக் காலத்தில் தான் எழுதப்பட்டுள்ளன

ஆண்டாளுக்கு முந்தைய நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார்   என்பவர்நாகப்பட்டிணத்தில் இருந்த பொன்னால் செய்யப் பட்டிருந்த   மிகப்பெரிய புத்தர் சிலையைத் திருடி வந்து அதை விற்று அதனால் கிடைத்த பணத்தால் திருவரங்கம் கோயிலுக்குக் கோபுரம் கட்டினார் என்று அவருடைய வரலாறு கூறுகிறது.

ஆண்டாள் ஒரு துளசிச்செடியின் அடியில் அநாதைக் குழந்தை யாகக்   கிடந்தவள் என்றும்திருவில்லிப்புத்தூரில் வாழ்ந்து வந்த பெரியாடு வார்   என்னும்   வைணவப் பார்ப்பனர்அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார் என்றும் அவருடைய வரலாற்றில் கூறப்பட்டுள்ளது

ஆண்டாள் சிறு வயது முதலே கண்ணனையே காதலனாக ஏற்றுக்கொண்டு கோயிலில் எந்த நேரமும் வழிபாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.   ஆண்டாள் எழுதியது திருப்பாவை : முப்பது பாடல்கள் இப்பாடல்கள் இன்றும் மார்கழி மாதத்தில் பசனைப் பாடல்களாகப் பாடப்படுகின்றனஇவர் எழுதிய மற்றுமொரு தொகுப்பு நாச்சியார் திருவாய்மொழி ஆகும்இது 143 பாடல்கள்,  கண்ணன் மீது காதல் இரசம் சொட்டச் சொட்ட பாடப்பட்ட பாடல்கள் ஆகும்.   இப்பாடல்கள் நாலா யிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதல் ஆயிரம் பாடல்களில் சேர்க்கப் பட்டுள்ளனஇவருடைய கொள்கையை திருப்பாவை இரண்டாவது பாடலிலேயே விளக்கியுள்ளார்அதாவது "தீக்குறளை சென்றோதோம்   என்பதாகும்திருக்குறளை முதன்முதலாகத் தீக்குறளாகக் கூறியவர்    ஆண்டாள் தான்.

(அப்படித்தான்  சங்கராச்சாரி பொருள் கூறினார்)

இவர் 15 வயது அடைந்தவுடன் பெரியாழ்வாரின் கனவில் கண்ணன் தோன்றி ஆண்டாளை திருவில்லிப்புத்தூரிலிருந்து அழைத்து வந்து திருவரங்கக்   கோயிலில் விடும்படி கூறினாராம்மணமகள் கோலத்துடன் திருவரங்கம்  கோயிலுக்குள் அனுப்பப் பட்டவள் வெளியில் வரவே இல்லைஇறைவனோடு அய்க்கியமாகி விட்டாள் என்று அவர்கள் கூறுகின்றனர்

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்என்ற நூலில் கே.கே.பிள் ளையும் இதை உறுதி செய்திருக்கிறார்


ஆண்டாள் நாச்சியார் இளம் வயதிலேயே திருவரங்கத்துக் கண்ணன் மேல்   ஆறாதக் காதல் கொண்டு பல அகத்துறைப் பாடல்கள் பாடியுள்ளார்.   அக்காதல் முதிர்ந்து திருவரங்கம் கோயில் கருவறைக்குள் மணப்பெண்   கோலத்துடன் நுழைந்து கண்ண பெருமானுடன் கலந்து விட்டாள் எனக்   கூறுவர்.

 

நந்தனாருக்கு நடந்ததைப் போலவே, வள்ளலாருக்கும், ஆண்டாளுக்கும் ஒரு வகையான துயரமான நிலை ஏற்பட்டுள்ளது என்பது புரிகிறது.

நந்தனார் ஒரு ஆதிதிராவிட விவசாயக் கூலி. அவர் ஒரு பார்ப்பானிடம் கூலி வேலை செய்தார். சிதம்பரத்தில் இருக்கும் நடராசனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. ஆனால் அந்த காலத்தில் ஆதிதிராவிடர்கள் சிதம்பரம் நகரத்தின் ராஜவீதிகளில் கூட நடக்க அனுமதி இல்லை. அதனால் நந்தனார் நகர எல்லையில் நின்று சுற்றி சுற்றி வந்தார்.

கதைப்படி, நடராசன் நந்தனாருக்கு முன்தோன்றி, “நீ  தீ வேள்வியில் புகுந்தால் இந்த உடலை விட்டு, பொன் உடல் பெற்று என்னை அடைவாய்என்று சொன்னதாக கூறப்படுகிறது. தீ மூட்டப்பட்டு, அதில் நந்தனார் புகுந்தார். அதன் விளைவு என்னவென்று அனைவருக்கும் தெரியும். பின்னர் அவர் அந்தணக் கோலம் பெற்றுத் திருவடிகளை அடைந்தார் என்று எழுதப்பட்டுள்ளது.

உண்மையில், இந்தக் கதை சொல்வது என்னவென்றால்
ஆதிதிராவிடர்கள் சிவன் கோயிலுக்குள் நுழைய ஆசைப்படக்கூடாது. அப்படி ஆசைப்பட்டால் எரித்து விடுவோம் என்ற எச்சரிக்கையே நந்தனார் கதை.

இந்தத் தடையை உடைத்தவர்கள் சுயமரியாதை இயக்கத்தினரும், நீதிக் கட்சியினரும்தான். 1930ஆம் ஆண்டுநந்தன் விழாஎன்ற பெயரில் சிதம்பரம் ராஜவீதிகளில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றனர்.

இதேபோல், குத்தூசி குருசாமியும், ஈரோடு ஈஸ்வரனும், ஈரோடு சிவன் கோயிலுக்குள் நான்கு ஆதிதிராவிட தோழர்களை அழைத்துச் சென்றனர். இதற்காக அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு ஈரோட்டில் ஒரு வருடம் நடந்தது.

விசாரணையின் போது, நீதிபதி ஆகமம் தெரிந்த ஒருவரை அழைத்து வரச் சொன்னார். அவர் ஆகமத்தைப் பார்த்து,
ஆகமப்படி ஆதிதிராவிடர்கள் சிவன் கோயிலின் உச்சிக் கோபுரக் கலசத்தைப் பார்த்து வணங்கினாலே, மூலவரை வணங்கியதற்கு சமம். அவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாதுஎன்று கூறினார்.

கீழமை நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. ஆனால் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

  


தமிழ்ச் சமூகத்தில் பரத்தையர் ஆதிகாலம் முதலே இருந்துள்ளனர்.
பரத்தை என்ற சொல் தொல்காப்பியத்தில் எட்டு நூற்பாக்களில் இடம்பெறுகிறது.
மேலும், கற்பு என்பது ஆணுக்கு அல்ல; பெண்ணுக்கு மட்டுமே வலியுறுத்தப்பட்டதாக
முனைவர் நர்மதா தமது தமிழகத்தில் தேவரடியார் மரபுபன்முக நோக்கு என்ற ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார்.

பரத்தையர் மற்றும் தேவதாசிகள் இருவரும் ஒன்றல்ல.
பரத்தையர் என்பது பணத்திற்காக ஆண்களுடன் உறவு கொள்ளும் பெண்களை குறிக்கும் சொல்.
ஆனால் தேவதாசிகள் கோயிலில் சேவை செய்யும் பெண்கள்.

சங்க காலத்தில் தேவதாசி முறை இல்லை.
ஏனெனில் அக்காலத்தில் பெருங்கோயில்கள் உருவாகவில்லை.

பல்லவர் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் கற்கோயில்களும் பெருங்கோயில்களும் உருவானது.
அந்தக் காலத்திலேயே தேவரடியார் முறை தோன்றியதாக,
பல்லவர் வரலாற்றை எழுதிய டாக்டர் மா. இராசமாணிக்கனார் சான்றுகளுடன் பதிவு செய்துள்ளார்.

பல்லவர் காலக் கோயில்களில் இசையும் நடனமும் வளர்க்கப்பட்டன.
இவை சமயத்தின் முக்கிய பகுதிகளாகக் கருதப்பட்டன.
அதனால் பல கோயில்களில் இசை, நடனங்களை வளர்க்க பெண்கள் இருந்தனர்.
அவர்கள் அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.

முத்தீச்சரா கோயிலில் மட்டும் 42 அடிகள்மார் இருந்தனர்.
திருவொற்றியூர், குடந்தை உள்ளிட்ட பல கோயில்களிலும் அடிகள்மார் இருந்தனர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகக் கோயில்களில் அடிகள்மார் இருந்து,
இசையும் கலைகளையும் வளர்த்தனர்.

வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் மனித சமூகத்தில் பெண்கள்தான் தலைமையிலிருந்தனர்.
அந்த காலம் தினமும் உயிரிழப்புகள் நடந்த கொடூரமான காலம்.
அப்போது பலம் வாய்ந்த ஆண்களுடன் சேர்ந்து இனத்தைத் தொடர வேண்டும் என்பதே
பெண் தலைவியின் கடமையாக இருந்தது.
அதனால், அவள் விரும்பிய ஆணைத் தான் அவள் தேர்ந்தெடுத்தாள்.

பின்னர் நில உடமை தோன்றியதும், மதத்தின் பெயரால் பெண்கள் அடக்கப்பட்டனர்.
இஸ்லாமிய ஆட்சியின் வாரிசான ஒட்டோமன் பேரரசில் பெண்கள் விற்பனை செய்யப்பட்டனர்.


பல்லவர் காலமும் ஆரிய ஆதிக்கமும்

பல்லவர் காலத்திலிருந்தே தமிழகத்தில் ஆரிய பார்ப்பனர்கள் வேகமாகப் பரவினர்.
அவர்கள் அரசர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
அசுவமேத யாகம் தமிழகத்தில் பல்லவர் காலத்திலேயே நடைபெற்றுள்ளது.

முற்காலப் பல்லவ மன்னன் சிவஸ்கந்த வர்மன்
தன்னை அக்நிஷ்டோமவாஜபேயஅசுவமேத ராஜா
என்று பட்டயங்களில் குறிப்பிடுகிறான்.

பார்ப்பனர்களுக்கு தேவதானம் என்ற பெயரில் பெருமளவு நிலங்கள் வழங்கப்பட்டன.
பாரதக் கதைகள் ஊர் ஊராக நடத்தப்பட்டன.
ஆரியக்கூத்து என்ற பெயரில் நாடகங்கள் நடத்தவும்
நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டன.

புத்த சமயத்தின் அழிவு

பல்லவர் காலத்தில்தான்
புத்தர் திருமாலின் அவதாரம்என்ற கற்பனை உருவாக்கப்பட்டது.
அதன் விளைவாக பௌத்த சமயம் மெதுவாக அழிந்து மறைந்தது.
புத்தரும் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டார்.

சோழர் காலம்பார்ப்பன ஆதிக்கம்

பல்லவர் காலத்துக்குப் பிறகு வந்த சோழர் ஆட்சியில்
பார்ப்பன ஆதிக்கம் மேலும் அதிகரித்தது.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில்
திருப்பணிக்காக இராசராச சோழன்
நானூறு தேவரடியார்களை நியமித்தான்.
அவர்களுக்கு தனித் தனி வீதிகளும் வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டதாக
கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன.

மார்கழி மாதம் தோறும்
திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருவாய்மொழி
தேவாரம் போன்ற பாடல்கள்
கோயில்களில் ஓதப்பட்டன.
இதற்காகவே தேவரடியார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தேவரடியார்கள் மீது உடல் அடையாளம்

சோழர் காலத்தில் தேவரடியார்களின் உடலில்
சூலம் பொறிக்கும் வழக்கம் இருந்தது.
அவர்கள் கோயிலுக்குச் சொந்தமானவர்கள் என்பதற்கான
அடையாளமாக இது செய்யப்பட்டதாக
ஆய்வாளர் நர்மதா கல்வெட்டுச் சான்றுகளுடன் குறிப்பிடுகிறார்.

“திருவல்லம் உடையார் திருப்பாதத்தில்
உதகம் செய்து, திரிசூலம் சாட்டி
தேவரடியாரானேன்”
என்ற வாசகம் திருவல்லம் கல்வெட்டில் காணப்படுகிறது.

உடன்கட்டை ஏறும் வழக்கம்

முதல் இராசராச சோழனின் தாய் வானவன் மாதேவியார்,
தம் கணவர் சுந்தர சோழன் இறந்தபோது
உயிர் வாழ விரும்பாமல் உடன்கட்டை ஏறினார்.

இந்த நிகழ்வு
திருக்கோவிலூரில் உள்ள கல்வெட்டில்
உருக்கமான பாடலாகப் பதிவாகியுள்ளது.

சில சோழ அரசிகளும் இதேபோல்
உடன்கட்டை ஏறியுள்ளனர்.

ஆரிய பார்ப்பனர்களின் பழக்கவழக்கங்களை
தமிழகத்தில் திணித்தவர்கள்

சோழ அரசர்களே.
இவர்களையே இன்று சில புதிய தமிழ்த் தேசியவாதிகள்
புகழ்ந்து பேசுகின்றனர்.

சங்கர மடங்களும் வர்ண தர்மமும்

சங்கர மடங்கள் என்றாலே
வர்ண தர்மத்தைக் காப்பாற்றும் அமைப்புகள்தான்.
பௌத்த, சமண மதங்களை அழித்து
இந்துத் தர்மத்தை நிலைநாட்டவே
இந்த மடங்கள் உருவாக்கப்பட்டன.

ஆதிசங்கரன் நிறுவிய மடங்களில்
காஞ்சி மடம் இல்லை என்பது வரலாற்று உண்மை.

தமிழ் பேசினால் தீட்டு?

தமிழ் பேசினால் தீட்டுஎன்று
சங்கராச்சாரியர் கூறியதாக
இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலில்
அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் குறிப்பிடுகிறார்.

தமிழில் பேசினால்
குளிக்க வேண்டிய நிலை வரும் என்பதால்
சங்கராச்சாரியர்
தமிழில் பேச மறுத்ததாகவும்
அவர் கூறுகிறார்.

அப்படிப்பட்டவர்
தமிழ்நாட்டில் மடம் வைத்திருக்கலாமா?

பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பு

பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்கக் கூடாது
என்பதே சங்கராச்சாரியர்களின் நிலைப்பாடு.

பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்தால்
அவர்கள் இஷ்டம்போல் ஓடிப் போய்விடுவார்கள்
என்று மகா பெரியவர் பேசியதாக
இராமானுஜ தாத்தாச்சாரியார் பதிவு செய்துள்ளார்.

இதனால்
தமிழையும்,
தமிழ்ப் பெண்களையும்
சங்கராச்சாரியர்கள்
மதிக்கவில்லை என்பதே தெளிவாகிறது.

 

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சூனியக்காரிஎளிய விளக்கம்

சூனியக்காரி என்பது மேற்குலகம் பெண்களை இழிவுபடுத்த உருவாக்கிய ஒரு வசைச்சொல்.

1971 வங்கதேசப் போரின் போது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை, அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், தனது அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கருடன் பேசும்போது வெறுப்புடன்சூனியக்காரிஎன்று அழைத்தான். இது பெண்களை அவமதிக்கும் மனநிலையின் ஒரு உதாரணம்.

மேற்குலகக் கதைகளில் சூனியக்காரி என்றால்

  • அருவருப்பான தோற்றம்
  • மந்திரவாதம் செய்பவர்
  • சாத்தானுடன் தொடர்புடையவர்
  • விலங்குகளை பலியிடுபவர்
  • காமத்தில் ஈடுபடுபவர்
  • கருப்பு உடை அணிந்து துடைப்பக்குச்சியில் பறப்பவர்

என்று ஒரு பயங்கரமான உருவமாகவே காட்டப்படுகிறது.
கார்ட்டூன், திரைப்படம், ஊடகம்—all இதையே நமக்கு சொல்லிக் கொடுத்தன.

ஆனால் சூனியக்காரி என்பது தமிழ்ப் பண்பாட்டுக்குச் சேர்ந்த சொல் அல்ல.
தமிழிலும் இதற்குச் சரியான பொருள் இல்லை.

வடமொழியில்சூனியம்என்றால் இன்மை என்று பொருள்.
அதனால்சூனியக்காரிஎன்றால்அறிவில்லாதவள்என்றே பொருள் வரும்.

ஆனால் ஆங்கிலத்தில் உள்ள “Witch” என்ற சொல்லின் உண்மையான பொருள் வேறு.

👉 Witch = அறிவுள்ள பெண்

அதாவது

  • மூலிகைகளை அறிந்தவர்
  • நோய்களுக்கு மருந்து தருபவர்
    • மக்களுக்கும் விலங்குகளுக்கும் சிகிச்சை செய்தவர்

    இவர்கள் அனைவரும் நாட்டு மருத்துவராக இருந்த பெண்கள்தான்.

    பழங்குடி சமூகங்களில் இப்படிப் பட்ட மருத்துவ அறிவுள்ளவர்களை
    சாமன் என்று அழைப்பார்கள்.
    அதில் பெரும்பாலும் பெண்கள்தான் இருந்தனர்.

    ஆண்கள் சிலர் பெண் உடை அணிந்து மருத்துவம் பார்த்ததிலிருந்தே,
    இந்த அறிவு முதலில் பெண்களிடமே இருந்தது என்பது தெரிய வருகிறது.

    பழைய காலங்களில்
    அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற பல இடங்களில்
    பெண்களே மருத்துவம் செய்தவர்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

    அப்படியானால்ஏன் அவர்கள் சூனியக்காரிகள் ஆனார்கள்?

    இதற்கு பதில் இடைக்கால ஐரோப்பிய வரலாற்றில் இருக்கிறது.

    அப்போது மருத்துவம் செய்த பெண்கள்மீது மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

    முதலாவது குற்றம்:
    பெண்ணாகப் பிறந்ததே ஒரு குற்றம் என்று அன்றைய சமூகம் நினைத்தது.

    காமம் ஆண்பெண் இருவருக்கும் பொதுவானது என்றாலும்,
    அதற்கான பொறுப்பு முழுவதும் பெண்கள்மீதே சுமத்தப்பட்டது.

    கத்தோலிக்க திருச்சபை

    • காமத்தை
    • உடலுறவை

    பாவம் என்று கருதியது.
    அந்தப் பாவங்களுக்கு காரணம் பெண்கள்தான் என்ற நம்பிக்கை இருந்தது.

    இயற்கையை மதித்ததும்,
    மனிதனும் மற்ற உயிரினங்களும் சமம் என்று நம்பியதும்
    இந்தப் பெண்களுக்குப் பெரும் குற்றமாக மாறியது.

    கடவுளுக்கு கீழ்ப்படையாமல்
    இயற்கையை மையமாக வைத்த சிந்தனை
    திருச்சபைக்கு பிடிக்கவில்லை.

    அதனால்
    👉 அறிவுள்ள பெண்கள்
    👉 மருத்துவம் செய்த பெண்கள்
    👉 இயற்கையை மதித்த பெண்கள்

    மெல்ல மெல்ல சூனியக்காரிகள் ஆக்கப்பட்டனர்.




மூலிகைச் சிகிச்சை அளிப்பவர்கள் அனைவரும் பிசாசுடன் தொடர்புடையவர்கள்என்று தேவாலயம் அக்காலத்தில் விளக்கமளித்தது. நோய்களை குணப்படுத்தும் அதிகாரம் குருமார்களிடமே இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அந்த அதிகார எல்லைக்குள் நுழைந்தவர்களாக மருத்துவச்சிகள் பார்க்கப்பட்டனர்.
அதனால், கடவுளின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்ட குருமார்கள், இந்தப் பெண்களை சாத்தானுடன் தொடர்புடையவர்கள் என்று கூறிசூனியக்காரிகள்எனப் பெயரிட்டனர். தண்டனையாக, பொதுவிடங்களில் தூணில் கட்டி, உயிருடன் எரித்தனர்.

எடுத்துக்காட்டாக, 1590ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் வடக்கு பெர்விக் நகரில் புனித ஆண்ட்ரூஸ் நோயுற்றார். ஆண் மருத்துவர்களாலும், அவருடைய சொந்த சுவிசேஷப் பிரார்த்தனைகளாலும் நோய் குணமாகவில்லை. இறுதியாக, பையர்ஹில் பகுதியைச் சேர்ந்த அலிசன் பெய்ர்சோன் என்ற மருத்துவச்சி அழைக்கப்பட்டார். அவர் வைத்தியம் செய்த பிறகு, புனித ஆண்ட்ரூஸ் முழுமையாக குணமடைந்தார்.
ஆனால், அவர் மருத்துவக் கட்டணம் கேட்டபோது, பணம் தர மறுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவர் கைது செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார். கடவுளின் அருளால் குணமடையாத நோயை, சாத்தானின் சூனிய வித்தையால் குணப்படுத்தினார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம்.

சூனியக்காரிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் அழகான இளம் பெண்களாக இருந்தனர். இன்றும் கிடைக்கும் ஓவியங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், மக்களிடையே பயமும் வெறுப்பும் ஏற்படுத்துவதற்காக, அவர்களின் உருவம் திட்டமிட்டு பயங்கரமாக மாற்றப்பட்டது.
பச்சை நிறத் தோல், கருப்பு உடை, ஒல்லியான உடல், கூர்மையான கருந்தொப்பி, ஒட்டிய கன்னங்கள், நீண்ட முகம், கூர்மையான மூக்குஇவற்றுடன் வளைந்த வால் கொண்ட கரும்பூனை. துடைப்புக்
குச்சியில் அமர்ந்து பறக்கும் பயங்கர உருவமே அவர்களுக்காக உருவாக்கப்பட்டது.

அதேபோல், பழைய தமிழ்நாட்டில் நாவீதர்களிடமே மருத்துவ அறிவு இருந்தது. “மருத்துவர்என்பதே அவர்களின் உண்மையான பெயர். ஆனால், நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அவர்கள் மெதுவாக புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டனர்.
ஒரு காலத்தில், பார்ப்பனர்களுக்கு வைத்தியம் பார்க்க வந்த நாவீதர்களை பட்டுத் துணி போர்த்தி, நாடி பார்க்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இது, இந்திரா காந்தியை கிணற்றைத் தாண்டி நிற்க வைத்த சங்கராச்சாரியாரின் நிகழ்வை நினைவூட்டுகிறது.

இன்றுபோல் இலத்தீன் மொழியில் பொதுவான தாவரவியல் பெயர்கள் அக்காலத்தில் இல்லை. சில தாவரங்கள் நச்சுத்தன்மை கொண்டதால், மக்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, உவமைப் பெயர்கள் சூட்டப்பட்டன. இந்த வழக்கம் நமது சித்த மருத்துவத்திலும் இன்று வரை பின்பற்றப்படுகிறது.



ஐரோப்பிய மருத்துவச்சிகள் தாவரங்களின் இலை, காய், பூ போன்ற பகுதிகளை விலங்குகளின் உடல் உறுப்புகளின் தோற்றத்துடன் ஒப்பிட்டு பெயரிட்டனர்.

உதாரணமாக, “வௌவால் இறக்கைஎன்று அழைக்கப்பட்ட ஒன்று, அதேபோல் தோற்றமளித்தஹோலிஎன்ற தாவரத்தின் இலையைக் குறிக்கும்.
ஸ்நாப்டிராகன்என்ற தாவரத்தின் பூக்கள் கன்றுக்குட்டியின் முகவாய் போல இருப்பதால் அந்தப் பெயர் பெற்றது.
நாட்வீட்தாவரத்தின் இலை, சிட்டுக்குருவியின் நாக்கைப் போல இருப்பதாக உவமிக்கப்பட்டது.
கொப்பரையில் கொதிக்கும் வாத்து ரத்தம்என்று சொல்லப்பட்டதும் உண்மையில்மல்பெரிமரத்தின் சாறே ஆகும்.

ஜோன் ஆஃப் ஆர்க்என்ற பெண்ணும்சூனியக்காரிஎன்று குற்றம் சாட்டப்பட்டு எரிக்கப்பட்டார்.

பழமையான கிறித்தவக் கருத்தியலின்படி, குழந்தைப் பிறப்பு ஒரு தீட்டான நிகழ்வாகக் கருதப்பட்டது.
அது தாயையும் சேயையும் தீட்டுக்குள் ஆழ்த்தும் என நம்பப்பட்டது.
அந்த காலத்தில், அவர்கள் சில நாட்கள் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டனர்.
ஆண் குழந்தை பிறந்தால் 40 நாட்களும், பெண் குழந்தை பிறந்தால் 80 நாட்களும் தீட்டு காலமாகக் கணிக்கப்பட்டது.
அந்த நாட்களில் அவர்கள் கிறித்தவ சமயத்துக்கு

வெளியானவர்களாகவே கருதப்பட்டனர்.
அந்த நேரத்தில் தாய் இறந்துவிட்டால், கிறித்தவ முறையில் அடக்கம் செய்யும் உரிமையும் அவருக்கு மறுக்கப்பட்டது.

குழந்தைப் பேறே தீட்டாகக் கருதப்பட்ட நிலையில், அந்தப் பேற்றைக் கவனித்த மருத்துவச்சிகளின் தொழிலும் மதிப்பில்லாததாகப் பார்க்கப்பட்டது.
பிற்காலத்தில் உருவானமிட்-வைஃப்எனும் தாதிகளின் நிலையும் இதேபோலத்தான் இருந்தது.
பேறுகாலத்தில் பெண்கள் இறப்பது ஆணாதிக்கச் சமூகத்தில் பெரிய பிரச்சினையாகக் கருதப்படவில்லை.
சீர்திருத்த கிறித்தவத் தலைவராகக் கருதப்பட்ட மார்டின் லூதர் கூட,
பெண்கள் பேறுகாலத்தில் இறப்பது ஒரு பொருட்டல்ல; அது அவர்களுக்கு விதிக்கப்பட்டதுதான்என்று கூறியுள்ளார்.
அவரே இப்படிச் சொன்னால், மற்ற ஆண்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.

ஆனால் பெண்களாக இருந்த மருத்துவச்சிகள், பேறுகாலப் பெண்களின் வேதனையைப் பொறுக்க முடியாமல் மாற்றுவழி தேடினர்.
தங்களுக்கிருந்த மூலிகை அறிவை பயன்படுத்தி, ஆண்களுக்குத் தெரியாமல் உதவி செய்தனர்.
பேறுகால வலியைக் குறைக்க, பெண்களை அரை மயக்க நிலைக்கு கொண்டு செல்லும் மூலிகைகள் பயன்படுத்தப்பட்டன.
குறிப்பாக, ‘பெல்லடோனா’, ‘வூல்ஃப்பேன்போன்ற தாவரங்கள் வலி நிவாரணியாகப் பயன்பட்டன.

ஆனால் மதக் குருமார்களின் பார்வையில், இது பெண்களை ஏமாற்றும் சாத்தானின் செயல் எனக் கருதப்பட்டது.
பேறுகால வலியை குறைப்பது பைபிளின் கருத்துக்கு எதிரானதாக பார்க்கப்பட்டது.
ஏவாளுக்கு கடவுள் விதித்த தண்டனை எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும் என்ற நம்பிக்கை அந்தக் காலத்தில் வலுவாக இருந்தது.

 




மேற்குலக வரலாற்றை எடுத்துப் பாருங்கள். நெடுங்காலமாகவே மருத்துவம் பார்த்தவர்கள் யார்? பெண்கள்தான். பட்டம் வாங்காத மருத்துவர்கள். இல்லம்தோறும் போனார்கள், ஊர்தோறும் போனார்கள். பணத்துக்காக அல்ல; மனிதனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக.

ஆண் மருத்துவர்களும் இருந்தார்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் யாருக்கு மருத்துவம் பார்த்தார்கள்? பணக்காரனுக்கு, உயர் வகுப்புக்குத்தான். உழைக்கிற மக்கள், விவசாயிகள், ஏழைகள்இவர்களிடம் யார் போனார்கள்? இந்தப் பெண்கள்தான்.

இப்போ அவர்களுடைய மருத்துவ முறையைப் பாருங்கள். ஆண்கள் என்ன பண்ணினார்கள்? அட்டையைக் கடிக்க விட்டார்கள். நரம்பை அறுத்தார்கள். “கெட்ட ரத்தம் போகணும்ன்னு ரத்தத்தை வடித்தார்கள். இதுதான் அறிவியல் மருத்துவமா?

பெண்கள் என்ன செய்தார்கள்? செடி, கொடி, மூலிகை. காட்டுக்குள்ள போய் தேடினார்கள். வயல்வெளியில திரிந்தார்கள். இயற்கையோடு சேர்ந்து மருத்துவம் செய்தார்கள். இந்த அறிவு ஆண்களுக்கு எங்கிருந்து வரும்? வரவில்லை. வர முடியவும் இல்லை. அதனால்தான் பொறாமை வந்தது.

அந்தப் பொறாமை என்ன ஆனது தெரியுமா?
மருத்துவம் ஆண்களின் சொத்து ஆகணும்ன்னு முடிவு செய்தார்கள்.
பெண்களை ஒடுக்கினால்தான், பெண்களை அழித்தால்தான், நமக்கு வளர்ச்சி என்று நினைத்தார்கள்.

அதுக்கு யார் துணை நின்றது?
மதம்.
இடைக்காலக் கத்தோலிக்க மதம்.

ஏற்கனவே பெண்களைச் சந்தேகக் கண்களால பார்த்த மதம், “இவங்க சூனியம் செய்றவங்கன்னு சொன்னது. அதிகாரம் யார் கையில் இருந்ததோ, அந்த அதிகாரம் மதத்தோடு சேர்ந்தது. மருத்துவக் கல்வி, மருத்துவத் தொழில்அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

ஆண்கள் மருத்துவம் பார்த்து நோயாளி செத்தா என்ன சொன்னார்கள்?
விதி.”

பெண் மருத்துவச்சி பார்த்து நோயாளி செத்தா?
கொலை!”

இது நீதியா?
இது அறிவியலா?
இது மனிதத்தன்மையா?

பெண்களின் அறிவையே மருத்துவமாக வைத்திருந்த இந்த மருத்துவச்சிகளை, “சூனியக்காரிகள்ன்னு பெயர் வைத்தார்கள். ஏன்? அவங்க அறிவு ஆண்களுக்கு சவாலா இருந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் அலோபதி வளர்ந்தபோது, இந்த சூனியக்காரி கதைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. பெண்கள் கையிலிருந்த மருத்துவத்தை முழுசா பறிக்கணும்னு.
நம்ம ஊரு பாட்டி வைத்தியம் மாதிரி, ஐரோப்பாவிலும் மகப்பேறு, மாதவிடாய், பெண்களின் உடல் பிரச்சினைகள் எல்லாம் பெண்களாலதான் கையாளப்பட்டிருந்தது.

அது எப்போ மாறிச்சு?
பணம் வந்தப்போ.
வியாபாரம் வந்தப்போ.

அப்போ ஆண்கள் உள்ளே வந்தார்கள்.
பெண்களை வெளியே தள்ளினார்கள்.
அதற்குப் பெயர்தான்சூனியக்காரி”.

@@@@@@

இப்போ நம்ம இலக்கியத்துக்கு வருவோம்.

தொல்காப்பியம் என்ன சொல்கிறது?

அச்சமும் நாணும் மடனும்

இதெல்லாம் யாருக்குன்னாபெண்ணுக்காம்.

அச்சம் பெண்ணுக்கு,
நாணம் பெண்ணுக்கு,
மடம் பெண்ணுக்கு.

அப்போ ஆணுக்கு என்ன?
அடக்குமுறை.

ஒரு பெண் தன்னைப் பற்றி பெருமையாக பேசக்கூடாதாம்.
அவளுக்கு ஆசை இருந்தாலும் கேட்கக்கூடாதாம்.
காதலனிடம் கூட சொல்லக்கூடாதாம்.
பரத்தையரைச் சகிச்சுக்கிட்டு வாழணுமாம்.

இதுதான் நியாயமா?

தொல்காப்பியமே இப்படின்னா, மனுதர்மம் எப்படி இருக்கும்?
மனுதர்மம் பெண்ணை மனிதனா கூட எடுத்துக்கொள்ளவில்லை.
அவளுக்கு தன்மனம்போல வாழும் உரிமையே இல்லை.

ஏன் இவ்வளவு கட்டுப்பாடு தெரியுமா?
கற்பு இயல்பானது இல்லைன்னு அவனுக்கே தெரியும்.

அதனால்தான் குழந்தை மணம்.
நாலு வயசு.
ஐந்து வயசு.

குழந்தைக்கு ஏன் கல்யாணம்?
அவள் பெரியவளான பிறகு, அவளுக்கு உணர்ச்சி வந்த பிறகு, அவளை கட்டுப்படுத்த முடியாது என்ற பயம்.

இந்த மத சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?

பத்துப் பணத்துக்கு மிஞ்சி பத்தினி இல்லை

இதன் அர்த்தம் என்ன?
பெண்ணை பதிவிரதையா வைத்திருக்க ரொம்ப கஷ்டம்.
அதனால கட்டுப்பாடு வேணும்.
பயம் வேணும்.
சிறை வேணும்.

இன்றைக்கும் பாருங்கள்.
பிராமணர் கல்யாணத்தில், மணப்பெண்ணை தந்தையின் மடியில் உட்கார வச்சு தாலி கட்டுவாங்க.
அவள் இன்னும் சொத்து.
அவள் இன்னும் உரிமை அல்ல.

நான் என்ன சொல்றேன்னா
ஒரு விஷயம் இயல்பானது என்றால், கட்டுப்பாடு தேவையில்லை.

கடவுள் உணர்ச்சி இயல்பானதுன்னா,
பசி, வலி போலவே அது வரணும்.

பதிவிரதை இயல்பானதுன்னா,
குழந்தை மணம் தேவையில்லை.

இந்தக் குழந்தை மணம் எதுக்குன்னா
உன் சாதி அமைப்பு சிதறிப் போயிடும் என்ற பயம்.
உன் அதிகாரம் போயிடும் என்ற பயம்.

அந்த பயத்தில்தான், இந்த மதம், இந்த சமூகம்,
பெண்ணின் வாழ்க்கையைச் சிறைபடுத்தியது.

தாது வருடமும் குஞ்சரத் தாயும்

ஒரு தமிழ்ப் பெண்ணின் அதிகாரக் கதை

தாது வருடப் பஞ்சம்
1875 முதல் 1880 வரை தமிழ்நாட்டை நரகமாக மாற்றிய காலம்.
மழை இல்லை. விளைச்சல் இல்லை.
வயல் வரப்புகளில் எறும்புகள் சேமித்த புற்று அரிசியையும் தோண்டி எடுத்துத் தின்ற மக்கள்,
முருங்கைக் கீரையைக் கொதிக்க வைத்து மூன்று வேளையும் குடித்தபடி உயிர் பிடித்துக் கொண்டிருந்த காலம்.

கணவன்மனைவி இருவரும்
ஒட்டிய வயிற்றோடு
யார் முதலில் சாவோம்?”
என்று சொல்ல முடியாத கேள்வியோடு
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு படுத்துக் கிடந்த காலம் அது.

அந்தப் பஞ்சம் பல பாடங்களைச் சொல்லியது.
ஆனால் ஒரு பெண்ணின் பாடம்
இன்றும் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.

அவள்குஞ்சரம்.

தாசி குலத்தைச் சேர்ந்த பெண்.
அந்தச் சொல்லே சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அடையாளம்.
ஆனால் மதுரையில்
அழகிலும் அறிவிலும்
செல்வச் செழிப்பிலும்
கொடி கட்டிப் பறந்தவள்.

வடக்கு ஆவணி மூல வீதியில்
சந்தில் இருந்த
இரண்டு பெரிய கல் வீடுகள்அவளுடையவை.
செல்வந்தர்கள் அவள் அழகை விரும்பினார்கள்;
ஆனால் அவள் மனம் மனிதர்களை நேசித்தது.

தாது வருடம் தொடங்கிய
இரண்டாவது வாரம்,
அவள் ஒரு முடிவு எடுத்தாள்.

அரசல்ல.
ஆண் அதிகாரமல்ல.
மத நிறுவனமல்ல.

ஒரு பெண். தனியாக.

பசியால் மக்கள் கணக்கின்றிச் சாவதைப் பார்த்து
தினமும் கஞ்சி காய்ச்சத் தொடங்கினாள்.

விசாலமான திண்ணையில்
பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சி.
குஞ்சரம் கஞ்சி ஊற்றுகிறாள்
என்ற செய்தி
காட்டுத் தீ போலப் பரவியது.

வடக்கு ஆவணி வீதியை நோக்கி
மக்கள் சாரை சாரையாக வந்தனர்.

பரட்டைத் தலை.
எலும்பும் தோலும் மட்டுமே மிஞ்சிய உடல்.
இடுப்பில் துணியென்று சொல்ல முடியாத ஒன்று.
குழந்தைகளைத் தூக்கியபடி
வரிசை, வரிசையாக நின்றனர்.

ஒரு வட்டையில் தொடங்கியது.
மூன்று வட்டையானது.
அதற்கு மேல் முடியவில்லை.

தினமும் ஒரு வேளை.
ஆனால் அது உயிரைக் காப்பாற்றியது.

ஆறாவது வாரத்தில் தான்
கலெக்டர் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தார்.
ஒரு வகையில்
அதற்குக் காரணம்
குஞ்சரத்தின் அடுப்பே.

அரசு வந்தது.
ஆனால்
தாது வருடம் முழுவதும்
குஞ்சரத்தின் அடுப்பு அணையவில்லை.

பதிமூன்று மாதங்கள்
அந்த அடுப்பு எரிந்தது.

அவளுடைய நகைகள்
கல் பதித்த தங்கம்,
வெள்ளி,

முத்து,
காசுமாலை,
மோதிரம்,
ஒட்டியாணம்,
தோடு, ஜிமிக்கி

அவை அனைத்தும்
கஞ்சியாக மாறி
பசியை அணைத்தன.

புகை படிந்த
அந்த இரண்டு பெரிய வீடுகளும்
விற்கப்பட்டன.
அவையும்
கஞ்சியாக மாறின.

தாது கழிந்த
இரண்டாவது மாதம்,
அவள் அடுப்பு அணைந்தது.

ஒரு சின்ன ஓட்டு வீட்டில்
படுக்கையாய் கிடந்தாள்.

அந்தக் கொடும் பஞ்சத்தில் கூட
மக்கள் பேசினார்கள்.

குஞ்சரம்மா…”

அவள் முகம் மலர்ந்திருந்தது.
ஒரு தாய்
தன் பிள்ளைகளை
பசியிலிருந்து காப்பாற்றிய
நிறைவு அது.

ஒரு நாள்
மலர்ந்த முகத்தோடு
விடை பெற்றாள்
அந்தத் தெய்வத்தாய்.

அவள் இறப்பை
நகரவாசிகள்
தங்கள் வீட்டுச் சாவாகவே பார்த்தார்கள்.

சின்ன ஓட்டு வீட்டிலிருந்து
அவளை வெளியில் எடுத்தபோது
வடக்கு ஆவணி வீதி
மக்களைத் தாங்கவில்லை.

கோவில் திருவிழாக்களைத் தவிர
மதுரையில்
அவ்வளவு பெரிய கூட்டம்
கூடியதில்லை
என்று
கலெக்டர் தனது குறிப்பில்
எழுதி வைத்தார்.  

இதுவே பெண்கள் அதிகாரமூட்டல்

அவள் அரசியல்வாதி அல்ல.
அவள் ராணி அல்ல.
அவள் தெய்வமாகப் பிறக்கவில்லை.

ஆனால்
ஒரு பெண்
தன் உடலைச் சமூகத்தால் தீர்மானிக்க விடாமல்
தன் மனதை மனிதத்தால் தீர்மானித்தாள்.

குஞ்சரம்
ஒரு தாசி அல்ல.
அவள் ஒரு சமூகத் தாய்.

பெண் அதிகாரம்
அரியணையில் அமர்வது அல்ல.
பசியை எதிர்த்து
மனிதத்தை நிறுத்துவது தான்.

 


அழகுஆடம்பரம்அரச மரியாதைஇவை எல்லாம் மனிதனை உயர்த்துவதில்லை!
ஒரு காலத்தில் உலகமே வியந்த காயத்ரிதேவி
அழகின் உச்சம் என்று சொல்லப்பட்டவள்,
செல்வத்தின் மேல் செல்வம் குவித்தவள்,
வானில் பறந்தவள், குதிரை மீது பாய்ந்தவள்,
துப்பாக்கி எடுத்துக் கொண்டே வேட்டைக்குப் போனவள்!

ஆனால் சொல்லுங்கள்
அந்த அழகு இன்று எங்கே?
அந்த இளமை இன்று எங்கே?
அந்த அரச மரபின் பெருமை இன்று எங்கே?

காலம் வந்ததும்,
தோலில் சுருக்கமும்,
உடலில் தளர்ச்சியும்,
அழகில் சரிவும்
அரசிக்கும் சாதாரண மனிதனுக்கும் ஒரே மாதிரிதான்!

ஆனால் காயத்ரிதேவியை காலம் அழிக்க முடியவில்லை.
ஏன் தெரியுமா?

அழகால் அல்ல
அரச பதவியால் அல்ல
செல்வத்தால் அல்ல!

அவசர காலக் கொடுமைக்கு எதிராக நின்ற துணிச்சலால்!
சிறைக்குள் அடைக்கப்பட்டாலும் தலையைக் குனியாத குணத்தால்!
கொள்கையை விற்க மறுத்த சுயமரியாதையால்!
ஆதரவற்ற மனிதர்களுக்காக திறந்த இதயத்தால்!

உடல் அழகென்றது
காயமே!
அது பொய்யானது!
அது காலத்தின் அடிமை!

ஆனால் மனிதனின் காரியம்
அவனுடைய செயல்,
அவனுடைய போராட்டம்,
அவனுடைய மனிதநேயம்
அவை மட்டும் தான் மெய்!
மெய்!!
மெய்யே!!!

இதுதான் காயத்ரிதேவி சொல்லாமல் சொல்லிச் சென்ற பாடம்.



மனிதம் கற்றுத் தந்த பெண்கள்ராயபுர ரெய்னி மருத்துவமனை

இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வடசென்னையின் ராயபுரம் பகுதி மிகுந்த வறுமையில் இருந்தது. நோய்கள் பரவி, மக்கள் சிகிச்சை இல்லாமல் உயிரிழந்தனர். குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. பிரசவ நேரங்களில் பெண்களை தனியாக ஒரு அறையில் அடைத்து விடுவார்கள். உயிர் தப்பினால் வாழ்வு; இல்லை என்றால் மரணம். சிறுவர்கள், பெண்கள் பலர் இளவயதிலேயே இறந்தனர்.

இந்த துயரமான நிலையைப் பார்த்து மனம் உருகியவர்கள் இரு அந்நிய நாட்டு பெண்கள். அவர்கள் அயர்லாந்தைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரினா மெக்பைல் மற்றும் கிறிஸ்டினா ரெய்னி.
அலெக்ஸாண்ட்ரினா மருத்துவர். கிறிஸ்டினா மருத்துவ நிர்வாகத்தை கவனித்தவர். இருவரும் மதம் பரப்ப வந்திருந்தாலும், முதலில் மனித உயிரைக் காப்பதே முக்கியம் என்று நினைத்தனர்.

1890ஆம் ஆண்டு, ராயபுரத்தில் தாங்கள் தங்கியிருந்த சிறிய பங்களாவில் 12 படுக்கைகள் கொண்ட ஒரு இலவச மருத்துவமனையை தொடங்கினர். ஏழை பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் அனைவரும் அங்கு சிகிச்சை பெற்றனர். அந்த மருத்துவமனைக்கு கிறிஸ்டினா ரெய்னி பெயர் சூட்டப்பட்டது.

பின்னர் அந்த மருத்துவமனை விரிவடைந்து,

பிரசவப் பிரிவு, பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு ,தொழுநோய் பிரிவு

என தனித்தனி பிரிவுகளுடன் பெரிய மருத்துவமனையாக வளர்ந்தது. ஏழைகளுக்கு இலவசமாகவும், வசதி உள்ளவர்களிடம் கட்டணம் பெற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.

1950ஆம் ஆண்டுக்குப் பிறகும் இந்த மருத்துவமனை ராயபுர மக்களுக்கு உயிர் காக்கும் இடமாகவே இருந்து வருகிறது. இன்று கூட, அந்தப் பகுதியில் பிறந்த பலர் இந்த மருத்துவமனையுடன் நினைவுகளைப் பகிர்கிறார்கள்.

வேறு நாடு, வேறு மொழி, வேறு கலாச்சாரம் என்ற எல்லாவற்றையும் கடந்து, பெண்களின் வேதனையை உணர்ந்து, அவர்களுக்காக

வாழ்நாள் முழுவதும் உழைத்த இந்த இரு பெண்கள் உண்மையான பெண்கள் அதிகாரமூட்டலின் எடுத்துக்காட்டு.

ரெய்னி மருத்துவமனை
👉 ஒரு கட்டிடம் மட்டும் அல்ல
👉 மனிதநேயத்தின் சின்னம்
👉 பெண்கள் வாழ்க்கையை மாற்றிய வரலாறு


இந்த மண் தன் மக்களை கைவிட்ட ஆண்டு. பஞ்சம். பட்டினி.
ஐம்பது லட்சம் உயிர்கள்எண்களாக மாறிய மனிதர்கள்.
எலும்பும் தோலுமாய் குழந்தைகள்.
ஒரு வேளை உணவுக்கே வழியில்லாத தேசம். அந்தச் சூழலில்,
அமெரிக்காவிலிருந்து சில கிறிஸ்தவ அமைப்புகள்
மதப் பிரச்சாரம்அல்ல,மனிதப் பிரச்சனை என்று நினைத்து
இந்தியாவுக்கு வந்தன.மருத்துவம். உணவு. உயிர்காப்பு.

ராணிப்பேட்டைக்கு வந்தார் டாக்டர் ஜான்.
அவருடைய மகள்ஐடா ஸ்கடர்.

ஒரு நள்ளிரவு.கதவு தட்டப்படுகிறது.14 வயது ஐடா கதவைத் திறக்கிறாள்.

ஒரு பிராமணர். “அம்மாஎன் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள். உடனே வாங்கஎன்று உயிர் பயத்தில் சொல்கிறார்.

நான் டாக்டரல்லஎன் அப்பா தான். அவரை எழுப்பறேன்என்கிறாள் ஐடா.அந்த மனிதன் தலையை குனித்துக் கொள்கிறான்.“வேண்டாம்
என் மனைவிக்கு 14 வயசுதான்.
நாங்க பிராமணாளுங்க.பெண்ணை ஒரு ஆண் தொடக்கூடாது.”

சில நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்படுகிறது.
இந்த முறைஒரு முஸ்லிம்.

மனைவிக்கு பிரசவ வலிஉடனே வரணும்
ஐடா தந்தையைப் பற்றிச் சொல்கிறாள்.

வேண்டாம்.நாங்கள் இஸ்லாமியர்கள்.
எங்க வீட்டு பெண்ணை ஆண் பார்க்கக் கூடாது.”

இரண்டு மதங்கள்.
இரண்டு கதவுகள்.
ஒரே முடிவுமரணம்.

மறுநாள் காலை
அந்த இரண்டு கர்ப்பிணிப் பெண்களின்
சடலங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

அந்தச் சடலங்கள் தான்
இந்த நாட்டின்
பெண் விரோத பண்பாட்டின் சாட்சி.

ஐடா உடைந்து அழுகிறாள்.
அவள் கேட்கிறாள்:

பெண்களைப் படிக்க வைக்க மாட்டீர்கள்.
ஆனால் பெண்ணுக்கு பெண்ணே மருத்துவம் பார்க்க வேண்டும் என்பீர்கள்.இது தேசமா? இல்ல கல்லறையா?”

அந்தக் கணத்தில் ஒரு சபதம் பிறக்கிறது.

இந்த நாட்டில் பெண்களை படிக்க விடவில்லை என்றால் என்ன?
நான் படிப்பேன். திரும்பி வந்து இந்தப் பெண்களை காப்பாற்றுவேன்.”

அமெரிக்கா செல்கிறாள்.மருத்துவம் படிக்கிறாள்.அழகும் அறிவும் கொண்ட அந்த இளம்பெண்ணை
திருமணம் செய்ய முன்வருகிறார்கள்.அவள் மறுக்கிறாள்.

வேலை வாய்ப்புகள்.பணம்.பாதுகாப்பான வாழ்க்கை.

அவையெல்லாம் அவளுக்குஅந்த இரண்டு சடலங்களை
மறக்க வைக்கவில்லை.

வெறும் டிகிரி போதாது. ஒரு மருத்துவமனை வேண்டும்.”

உலகம் முழுவதும் சுற்றி இந்த நாட்டின்சாதிமதபெண்ஒடுக்குமுறையை
உலகுக்கு சொல்லி நிதி திரட்டுகிறாள்.1900

20-ஆம் நூற்றாண்டின் முதல் நாள்.
ஒரு பெண் இந்த மண்ணில் கால்வைக்கிறாள் ஒரே உறுதியுடன்:

இனி ஒரு கர்ப்பிணி கூட மருத்துவமனை இல்லாமல்
சாகக் கூடாது.”

லேப் இல்லை. கருவிகள் இல்லை. ஆனால் மனம் உறுதி.

காடுகள். மேடுகள். குடிசைகள். கூடாரங்கள்.ஊர் ஊராக ஓடி
மருத்துவம் பார்க்கிறாள்.

இறுதியில் 40 படுக்கைகள். இலவச வசதி. பெண்களுக்கான பாதுகாப்பு.

பெண்ணுரிமை என்ற சொல்லே இல்லாத காலத்தில்
பெண்களுக்கென ஒரு மருத்துவமனை!

அதுதான் ஆசியாவின் பெருமை. நூற்றாண்டைக் கடந்தும்
உலகத் தரத்துடன் இன்றும் நின்று கொண்டிருக்கும்
வேலூர் CMC.

இந்த பெண் யார்? ஏன் நமக்காக அழுதார்?ஏன் நமக்காக வாழ்ந்தார்?

எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து இந்த நாட்டின்
பெண்களின் உயிரை தன் வாழ்வாக எடுத்துக் கொண்டவர்.

ஐடா தான் அன்னை தெரசாவுக்கே வழிகாட்டிஎன்றால்
அது மிகைப்படுத்தல் அல்ல.

ஒருபுறம்
ஆண்டவன் கொடுத்த உடம்பில்  கிறிஸ்தவன் கத்தி வைக்கக்கூடாது
என்று மருத்துவத்தை மறுத்து சாகும் மூடநம்பிக்கை.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு குண்டியில் கட்டி வந்தது அதை ஆபரேஷன் செய்ய வேண்டும் அதற்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டது அதை அவர் நிராகரித்தார் ஆண்டவன் கொடுத்த உடம்புல கிறிஸ்தவன் கத்தி வைக்க கூடாது அப்படின்னு சொல்லி செத்துப் போயிட்டான், 



https://www.youtube.com/watch?v=SDefwugUT4I 

858 ஆம் ஆண்டு கர்நாடகாவில்

ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து,

பிராமணீயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துசூத்திரன் என்று சொல்லப்பட்ட ஓர் இளைஞனைக் கைப்பிடித்துவடநாடு முழுவதும் சுற்றித் திரிந்துபெண்   கல்விபெண் விடுதலை எனத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக்          கொண்டவர் ரமா பாய்.

20 ஆவது வயதில் தன் பெற்றோரையும், 25 ஆவது வயதில் தன் கணவரையும் இழந்த பின்னும்நெஞ்சில் துணிவை   இழக்காமல்அதற்குப் பிறகு 40 ஆண்டுகள் தன் இலட்சியத்திற்காகப் போராடி மறைந்தவர் அவர்.

ரிப்பன் பிரபுவுக்கு முன்பே பெண் கல்வி குறித்து அவர் ஆற்றிய உரையால்   ஈர்க்கப்பட்டுஇங்கிலாந்தும் அமெரிக்காவும் அவரை அரவணைத்தன.   ஆனால் அவர் இந்தியாவில் கணவனை இழந்து வாழும் இளம்   பெண்களுக்காக ஓர் இல்லம் நிறுவிஅவர்களுக்குக் கல்வி கொடுத்துஊக்கம் கொடுத்துஅவர்களைச் சுய மரியாதையோடு வாழ வழி செய்தார்ஆனால்   இவையெல்லாம் இந்து மதத்திற்கு எதிரானவை என்று கூறி திலகர் அவரைக்  கண்டித்தார்.

நமக்கெல்லாம் திலகரைத்தான் தெரியும்.

ரமா பாயைத் தெரியாது.






இந்தப் பெண்மணிகள் எல்லோரும் தமிழகத்தின் மருத்துவதோடு  தொடர்புடையவர்கள்எதோ ஒரு வகையில் நம் வாழ்க்கையை இவர்களது   பணி தொட்டிருக்கிறதுபெருமைப்படுத்தி இருக்கிறது.

மேல் வரிசை:

1. டாக்டர் மேரி ஸ்கார்லீப் - மாகாணத்தின் முதல் பெண்களுக்கான கோஷா மருத்துவமனையை  அரும்பாடு பட்டுத் திறந்தவர்.

2. கிருபாபாய் சத்தியநாதன் - மருத்துவப் படிப்பு முடிக்க முடியாமலேயே காசநோயால் இறந்து போனவர்.   இவரது சகுணாகமலா நாவல்கள் பெண்களின் அன்றைய நிலையின்   கண்ணாடி.

3. டாக்டர் மெட்டில்டா மக்ஃபெயில் - வடசென்னையில் முதல் பெண்களுக்கான மருத்துவமனைரெயினி மருத்துவமனையை தோற்றுவித்தவர்.

4. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் - செவிலியரான நைட்டிங்கேல் இந்தியாவைக் கண்ணால் காணாமலே கறுப்பர் நகருக்கான சுகாதார வசதிகள் கேட்டு 40 ஆண்டுகள் போராடியவர்மதராஸ் மாகாணத்தின் சுகாதாரக் கட்டமைப்பு இவரது நெடுநாள் கனவு. (கடிதங்கள் மூலம்)

கீழ் வரிசை:

1. டாக்டர் ஐடா ஸ்கட்டர் - புகழ்பெற்ற வேலூர் சிஎம்.சிமருத்துவமனையை நிறுவியவர்பெண்களுக்காக மருத்துவப் பணியாற்றிய மிஷனரிகளில் முதன்மையானவர்

2. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் நிறுவனர்பள்ளிகளில் பெண்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை தொடங்கி மகளிர் காவலர் வரை மதராஸ் மாகாணத்தின் முக்கிய சமூகப் பணிகளில் அக்கறை   செலுத்தியவர்.

3. டாக்டர் ஹில்டா மேரி லாசரஸ் - வேலூர் சி.எம்.சி.யின் முதல் இந்திய இயக்குனர்தென்னிந்தியாவின் முதல்   கிறிஸ்துவப் பெண் மருத்துவர்வேலூர் கல்லூரியை இந்த நிலைக்கு   வளர்த்தெடுத்தவர்.

4. டாக்டர் அபுஷா பீபி மரைக்காயர் - நாட்டின் முதல் இஸ்லாமியப் பெண் மருத்துவர்இந்திய மருத்துவப்   பணிகளின் முதல் பெண் இயக்குனர், 40 ஆண்டுகாலம் மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை திட்டமிட்டு   வழிநடத்திய பெண்.

பதிவு 11

உடன்கட்டை ஏறுதலும் இந்துமதமும்!!

ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை கெதிராக போராடினார் என்பது   எட்டாப்பு பாடப்புத்தகத்தில் இருக்கு ஆனா அவரை தூக்கி வளர்த்த   அண்ணனின் மனைவி அண்ணன் இறந்ததால் உயிரோடு எரிக்க முற்படும்போது அவரால் தடுக்க முடியவில்லை .

—————

இந்துமதம் மூடத்தனத்தின் மொத்த உருவம் என்பது சாதாரண அறிவுள்ள   எவருக்கும் புரிந்துவிடும்ஆனால் சில மடையர்கள் அதில் விஞ்ஞானம்   இருக்குது அது இருக்குது இது இருக்குது என்று கூறிதிரிகிறார்கள்.

இந்துமதத்தவர்கள் கணவன் இறந்தால் மனைவியையும் நெருப்பில்   கணவனோடு எரிப்பது வழக்கமாக இருந்ததுஅது மனிதாபிமானத்திற்கு   எதிரானது என்பதால் பிரித்தானியர் அதை தடைசெய்தார்கள்.

இது பற்றி புராணங்களில் என்ன உள்ளது என பார்ப்போம்:

இந்துமத புராணங்களில் நிகழ்ந்த உடன்கட்டை ஏறுதல்கள் சில:

1.கிருஷ்ணனின் பிணத்தோடு அவனது 8 மனைவிகள்மற்றும் யாதவர்களது   மனைவிகள்பாலராமனுடைய மனைவி முதலியோர்:

கிருஷ்ணன் வேடனின் அம்பு குத்திப்பட்டு இறந்துபோனான்அதன்பின்     நடந்ததை விஷ்ணுபுராணம் இவ்வாறு சொல்கிறது,

கேளும் மயித்ரேயரேஅங்கு வந்த அர்ஜுணன் கிருஷ்ணனுடைய உடலை   தேடியெடுத்து இறுதிகிரியைகளை செய்வித்தான்அப்போது ருக்மினி   உள்ளிட்ட எட்டு மனைவிகளும் கிருஷ்ணனின் உடலோடு நெருப்பினுள்   பிரவேசித்தார்கள்ரேவதியும் நெருப்பினுள் நுழைந்தாள்இச்செய்திகளை   உக்கிரசேனனும்வாசுதேவனும்தேவகிரோஹினியும் கேட்டவுடனே   அக்கினியில் பிரவேசித்துவிட்டார்கள்பின்பு அர்ஜுணன் அனைவருக்கும்    ஈமகிரியைகளை நடத்திவிட்டு துவாரகையிலிருந்து வச்சிரனையும்   கிருஷ்ணனின் பல மனைவிகளையும் (16000 பேர்) , மற்றுமுள்ளவர்களையும் அழைத்துகொண்டு இப்புறம் வந்துவிட்டான்

தன் கணவனோடு உடன்கட்டை ஏறுபவள் சுவர்க்கம் போகிறாளாம்!:


சுயகட்டுப்பாட்டையும் தவங்களையும் தன் கணவனின் மரணத்திற்கு பின்  மேற்கொள்ளும் விதவைபெண் சுவர்க்கம் போகிறாள்…. இறந்த தன்   கணவனோடு உடன்கட்டை ஏறும் விதவை பெண்ணும் சுவர்க்கம் போகிறாள்தன் கணவனோடு உடன்கட்டை ஏறுபவள் சுவர்க்கம் போகிறாளாம்!:



அழகிப்_போட்டிகள்_வாஸ்_கிளியோபாட்ரா

அழகிப் போட்டிகள் : முதலாளித்துவத்தின் சந்தைப் பொருள்

கிளியோபாட்ரா கி.மு. 50-களில் வாழ்ந்த ஒரு மகாராணி.
அவள் கருப்பு நிற அழகி.
அழகு மட்டுமல்ல, அறிவாற்றலும் அரசியல் திறமையும் கொண்ட பெண் என்று வரலாறு சொல்கிறது.
அவள் தன் காலத்தின் ஆணாதிக்கத்தையும், அரசியல் சதிகளையும் எதிர்கொண்டு வாழ்ந்தாள்.

ஆனால் இன்றைய உலகில் அழகு என்ற ஒன்று எப்படி பார்க்கப்படுகிறது?

இன்று முதலாளித்துவ நாடுகள்,
தங்கள் உபரி உற்பத்தியை விற்க
அழகிப் போட்டிகளை ஒரு வியாபாரமாக மாற்றியுள்ளன.

எந்த நாட்டுப் பெண்அழகிஆக வேண்டும் என்பதை
அழகு சாதனங்கள் தயாரிக்கும் பெரிய கம்பெனிகளே தீர்மானிக்கின்றன.
அறிவு, சமூகப் பார்வை, பெண் சுயமரியாதை பற்றிய கேள்விகள்
வெறும் நாடகமே.

நிறம் வெளுக்க, உடலை மாற்ற,முடி, தோல், முகம் என்று
பெண்ணின் உடல் முழுவதும் சந்தைப் பொருளாக மாற்றப்படுகிறது.

1990-களுக்குப் பிறகு உலகமயமாக்கம் வந்தபோது,
இந்தியா போன்ற நாடுகளில்
அழகிப் போட்டிகள் தீவிரமாகத் திணிக்கப்பட்டன.
அது “பெண்முன்னேற்றம்” அல்ல.
அது முதலாளிகளின் லாபத் திட்டம்.


கிரிக்கெட் மைதானத்தில் cheer girls என பெயர் வைத்து

பெண்களை ஆடவைத்ததும் அதே முதலாளித்துவ சிந்தனையே.

பெரியார் சொன்னது தெளிவு:
பெண் ஒரு மனிதன். அவள் விளம்பரப் பொருள் அல்ல.

அழகு என்பது,நிறத்தில் இல்லை.உடல் வடிவத்தில் இல்லை.
அது சிந்தனையிலும் சுயமரியாதையிலும் இருக்கிறது.

பெண்ணைஅழகிஎன்று அளப்பது ஆணாதிக்கமும்
முதலாளித்துவமும் கூட்டாக செய்த ஒரு வஞ்சகம்.

அதை புரிந்துகொள்ளாமல் அழகிப் போட்டிகளை கொண்டாடுவது
பெண்ணையே விற்க உதவுவதுதான்.



மகளிர்_தினம்_பதிவு-

தந்தை பெரியார் கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்பே

1920களில் எத்தனை பெண் ஆளுமைகளை இது போன்ற தலைப்புகளில்   தன்னுடைய குடியரசு பத்திரிகையில் எழுத வைத்திருக்கிறார்

எவ்வளவு முற்போக்கு சிந்தனை பெண்களை தலையங்கங்கள் தீட்டி வைத்த   தலைவன் எங்கள் பெரியார்

பெண்களைக் குறைசொல்லல் ஆண்களுக்கு அழகோ

#பினாங்கு_திருமதி_ஜானகியம்மாள்

இந்தியாவில் "பர்தாகோஷாமுறை ஒழிக்க வேண்டியது

#லாயிலாபானோபீகம்

தேவதாசி மசோதா

#டாக்டர்_முத்துலட்சுமி அம்மாள்

சடங்குகளினால் ஏற்படும் தீமைகள்

சாந்திமுகூர்த்தத்திற்குப் பார்ப்பனன் கதவடைத்தல் ஏன்

சாமிக்கு மயிர் வேண்டுமா

சுயமரியாதைத் திருமணத்தின் அவசியம்

இந்துமத வீழ்ச்சிக்கும் இதர மத வளர்ச்சிக்கும் உதவி புரிவது பாழும்   தீண்டாமையும் - விதவைகளின் துயரமுமே!

#திருச்சி_மிஸ்_நீலாவதி

தேவதாசி அர்ப்பணமும் திருவிதாங்கூர் சமத்தானமும்

பெண்மக்களேஎழுங்கள்

வைதீகக் கோட்டையைத் தகர்த்தெறிவோம்

அணைகடந்த வெள்ளம்

#மிஸ்_ராதா

20.5.34 ல் கூடிய திருச்செங்கோடு தாலுகா

ஆதிதிராவிட மகாநாடு

தோழர் ஆர்#அன்னபூரணி

அன்னை #நாகம்மையார்

எஸ்.சி#சிவகாமி -

சங்கீதத்தாலும்நாட்டியத்தாலும் ஏற்படும் தீமை

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்

தமிழர்களுக்குக் கற்பில்லையா?

தோழர் முஇராகவையங்கார் தவறு -

பண்டிதை #ஞானாம்பாள்

சென்னை 5-வது சுயமரியாதை மாநாடு

தோழர் #கனகம்மையார்

சென்னையில் பெரியார் தினத்தில் புதிய திராவிட கழகம் தோழர்

#எம்_சத்தியவாணி_அம்மையார்

தராசு புரட்சிச் சின்னமல்ல அடைவோம் திராவிட நாடு

இன்றேல் சுடுகாடு

தோழர் மிராண்டா கஜேந்திரன்

அம்மையாரைப் பற்றி

மூதாட்டி #இராமாமிர்தம்_அம்மையார்

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்

#சாவித்திரிபாய்_புலே

 கடந்த காலங்களில் பெண் சமூகம் கடந்து வந்த பாதை   கரடுமுரடானது அதிலும் இந்திய வரலாற்றில் நிறைய இருட்டடிப்பு

ஆசிரியர் பயிற்சி பெரும் மாணவர்களுக்கு கூட சாவித்திரிபாய் பூலே குறித்த பாடங்கள் இல்லை ஜோதிராவ் புலே இவரை அவரது ஒன்பதாவது வயதில்   திருமணம் செய்து கொண்டார் அன்றைய நடைமுறை அப்படி

பெண் கல்வி சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக பிற்படுத்தப்பட்டவர் ஆன   ஜோதிராவ் புலே போராடினார் அதில் துணைவியாரையும்    இணைத்துக்கொண்டார் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை அதற்காக   அவர்கள் கவலைப்படவில்லை

ஒரு பிராமண விதவைப் பெண்ணின் மகனை தத்தெடுத்து யஸ்வந்த் ராவ்   என்ற பெயரிட்டு வளர்த்தார்

தவித்த வாய்க்குதீண்டத்தகாதவர் எனச் சொல்லி தண்ணீர் மறுத்த   கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும்   தண்ணீர் எடுக்க அனுமதித்தார்.

பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய    நடைமுறை அமலில் இருந்ததுஅந்த மழிக்கும் பணியைச் செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்கச் செய்தார்விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார்.

1852ல் இவர் தொடங்கி வைத்த 'மஹிளா சேவா மண்டல்' (பெண்கள் சேவை மையம்மனித உரிமைகள்சமூக அங்கீகாரம் போன்ற   சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.



1876–1878 பஞ்ச காலச் சேவை

1876–1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட கடும் நெருக்கடிகளைப் போக்குவதற்காக, சாவித்திரிபாய் புலே தமது கணவர் ஜோதிபாய் புலேயுடன் இணைந்து கடுமையாக உழைத்தார். மக்களின் துயரங்கள் தீர்வதற்காகப் பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார். ஜாதி வேற்றுமையை முன்வைத்து பல இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி மறுக்கப்பட்ட நிலையில், இருவரும் பல மையங்களில் இலவச உணவு பரிமாறினர்.

கைவிடப்பட்ட பெண்ணின் மீட்பு

ஒரு பெண் ஆணின் பாலியல் வன்புணர்வுக்கும் வன்முறைக்கும் ஆளாகி கர்ப்பவதியான நிலையில், தற்கொலை செய்ய முயன்றாள். அவளை ஜோதிபாய் புலே மீட்டு அழைத்து வந்தார். அந்தப் பெண்ணைத் தங்கள் வீட்டில் அனுமதிப்பதற்கு சாவித்திரிபாய் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மேலும், அவளுக்குப் பிறந்த குழந்தையைத் தன் மகனாகவே வளர்த்து, மருத்துவராக உருவாக்கினார்.

பெண்களுக்கான பாதுகாப்பு இல்லம்

இவ்வாறு கைவிடப்பட்ட பெண்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பிரசவத்தைக் கவனிப்பதற்குமானபால்ஹத்திய பிரதிபந்தக் கிருஹாஎனும் இல்லத்தை சாவித்திரிபாய் தொடங்கினார். இது பெண்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய ஒரு மனிதநேய முயற்சியாக விளங்கியது.

முக்தாபாயின் குரல்

1855ஆம் ஆண்டு, சாவித்திரிபாயின் பதினொரு வயது மாணவி முக்தாபாய், தியானோதயா இதழில் எழுதிய மங்குகள், மகர்களின் துக்கம் என்ற கட்டுரை, சாவித்திரிபாய் ஏற்படுத்திய அறிவுத் தாக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அந்தக் கட்டுரையில் முக்தாபாய் எழுதியது:

! இறைவனே, எது எங்களின் மதம் என்று சொல்!
! இறைவனே, எங்களின் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வழிகாட்டும் மதத்தைக் கற்பி.
ஒருவருக்கு எல்லா வசதிகளும், மற்றையோர் ஒடுக்கப்படுவதும் நிகழும் இப்போதைய மதம் பூமியை விட்டு கெட்டு ஒழியட்டும்.
இப்படிப்பட்ட இழிந்த மதம் எங்களின் மனதிற்குள் எப்போதும்

நுழையாமல் இருக்கட்டும்.
மங்குகள், மகர்கள், ஏன் பிராமணர்கள் என்று அனைவரையும் படைத்தவன் ஒருவனே!
அவனே என்னை அறிவால் நிறைத்து எழுத வைக்கின்றான்.
! மகர்களே! மங்குகளே! நீங்கள் ஏழ்மையிலும் நோயிலும் வாடுகிறீர்கள்.
அறிவெனும் மருந்து மட்டுமே உங்களை குணப்படுத்தவும், ஆற்றவும் முடியும்.”

ப்ளேக் நோய்க்காலத் தியாகம்

மகாராஷ்ட்ராவில் ப்ளேக் நோய் பரவியபோது, ஆங்கிலேய அரசு நோய்த் தொற்றை கட்டுப்படுத்த கடுமையான ப்ளேக் சட்டங்களை அமல்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துவைத்தது. அந்தக் காலத்தில் மருத்துவம் படித்து ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சாவித்திரிபாயின் மகன் யஸ்வந்த், தென் ஆப்பிரிக்காவிலிருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரையும் சாவித்திரிபாய் ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே தனிமைப்படுத்தி வைத்தார்.

தானே நோயாளிகளைத் தூக்கிக்கொண்டு வந்து சிகிச்சை அளித்தார். அறுபத்தாறு வயதிலும் உயிரைக் காக்கப் போராடினார். அப்படிப் பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காப்பாற்ற தூக்கிக்கொண்டு வந்தபோது, ப்ளேக் நோய்த் தொற்று அவருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக சாவித்திரிபாய் உயிரிழந்தார். ஆனால் அந்தச் சிறுவன் உயிர்தப்பினான்.

மரபு

வாழ்க்கையையே சேவையாக அர்ப்பணித்த சாவித்திரிபாய் புலே, இன்று இந்தியக் கல்வியின் தாய் என்று போற்றப்படுகிறார்.

 

_____________________________________________

#சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த தீர்ப்பு மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப் போகிறாராம் நடிகை ரஞ்சனி.

#வரலாற்றில்பெண்ணுரிமை,பெண் விடுதலை குறித்த போராட்டங்களை புரட்டினால் காலந்தோறும் ஏதேனும் ஒரு #ரஞ்சனி பெண்களுக்கு எதிராக களமிறங்கியிருப்பார்.

1930 ல் #தேவதாசி முறையை ஒழிக்க டாக்டர் #முத்துலட்சுமி,மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் தீவிரமாகப் போராடிய போது தேவதாசி முறை பாதுகாக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்து தேவதாசிப் பெண்களைத் திரட்டி போராடியவர் #பெங்களூர்நாகரத்தினம்மா எனும் தேவதாசி.


பெண்களுக்குச் #சொத்துரிமை தரும் சட்டத்தினை அன்றைய பிரதமர் #நேரு முடிவெடுத்த போது இங்கே #சங்கராச்சாரியாரின் தூண்டுதலின் பேரில்   எங்களுக்கு சொத்து வேண்டாம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில்   பெண்கள் கூட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் மனு ஒன்றைத் தயாரித்துகையெழுத்திட்டு நேருவுக்கு அனுப்பினர்.

டெல்லியில் #கமலாதேவிசட்டோபாத்யாய என்பவர் எங்களுக்கு சொத்து   வேண்டாம் என்று பெண்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இத்தனைக்கும் பெண்களுக்கு பாத்யமோ,சம்பாத்யமோ கூடாது,   #ஆண்களுக்குஅடிமையாக இருப்பதே பெண்களுக்கு அழகு என்று கூறிய   சங்கராச்சாரியின் பேச்சை கேட்டு கொஞ்சம் கூட சுரணையில்லாமல்   செயல்பட்டனர் அந்த பெண்கள் கூட்டத்தினர்.

#ராஜாராம் மோகன்ராயின் கடும் முயற்சிக்குப் பின் 1829 ல் சதி எனும்   #உடன்கட்டை ஏறும் கொடுமைக்கு முடிவு கட்டினார் பெண்டிங் பிரபு.

இது நிகழ்ந்து 150 ஆண்டுகள் கடந்த நிலையில் 1987ம் ஆண்டு செப்டம்பர்  4ம் தேதி ராஜஸ்தானில் தியோலாரா கிராமத்தில் #ரூப்கன்வர் எனும் பெண்   கணவனின் உடலுடன் சேர்த்து எரிக்கப்பட்டாள்.

இந்த கொடூரத்தால் நாடே #கொந்தளிக்கிறது,சதி எனும் கொடுமைக்கு  எதிராக நாடாளுமன்றம் சட்டமியற்ற முடிவு செய்த நிலையில் அன்றைய   பாரதீய ஜனதாக் கட்சியின் துணைத்தலைவர் #விஜயராஜேசிந்தியா   பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்துகிறார்.


அந்த பேரணியில் பேசிய அவர் உமிழ்ந்த நச்சுக் கருத்துக்கள் இவை.

#உடன்கட்டை ஏறுதல் இந்து மதத்தின்,இந்து மரபின் பெருமை.ஒவ்வொரு   பெண்ணுக்கும் தம் கணவருடன் உடன்கட்டை ஏற #உரிமையுண்டு.

ஆனால் மேற்படி நச்சினை உமிழ்ந்த அம்மையார் தம் கணவர் இறந்த போது உடன்கட்டை ஏறாமல் பல காலம் உயிர் வாழ்ந்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகை ரஞ்சனி,பெங்களூர் நாகரத்தினம்மா,சங்கராச்சாரியின் பேச்சைக்   கேட்டு செயல்பட்ட பெண்கள் எல்லாம் #சுயபுத்தி இல்லாதவர்கள்,அவர்கள்  தெளிவும் புரிவும் அவ்வளவுதான் என்று கடந்து விடலாம்.

சதியை ஆதரித்துப் பேரணி நடத்திய விஜயராஜேசிந்தியாவின் செயல்   முற்றிலும் அரசியல் சுயநலம் என்று கடந்து விடலாம்.

ஆனால் நீதித்துறைக்கு உச்ச அமைப்பாகத் திகழும் #உச்சநீதிமன்றத்தின் நீதிபதி இந்து #மல்ஹோத்ரா கூறியிருக்கும் கருத்துதான் அச்சத்தை தருகிறது.மத நம்பிக்கை தொடர்பான பிரச்சினைகளில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

எதிர்காலத்தில் #காவிகள் வலுவாகக் காலூன்றி #இந்துத்துவதலிபான்களாக மாற முயற்சிக்கும் வேளையில் #இந்துமல்ஹோத்ரா போன்று         பிற்போக்குச்    சிந்தை கொண்டவர்கள் நீதி சொல்லும் இடத்தில் இருந்தால் காலங்காலமாக கட்டிக்காத்து வந்த ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும்.

எது எப்படியோ#மகரஜோதி என்பது #இயற்கையாகத் தோன்றுவதில்லை   மனிதர்களால் உருவாக்கப்படுவது என என்று அரசாங்கம் கோர்ட்டில்   தெரிவித்ததோ அன்றே இந்த சாஸ்தா,சம்பிரதாயம் எல்லாம் அடிபட்டு   போய் விட்டது.உடனடியாக #பெண்களை அனுமதிக்கும் பணியை முடுக்கி   விட வேண்டும்.

**********

Petticoats of queens

இந்தியாவில் பெரிதாகப் பேசப்படும் மகாராணிகளின்  நாடாவை கொஞ்சம் உருவி பாப்போம்

சித்தூர் ராணி சென்னம்மா 1778 ல் லிங்காயத்து சமூகத்தில் பிறந்தார் தனது 15 வயதில் பார்ப்பன ராஜாவான மல்ல சர்ஜா என்பவரை திருமணம் செய்தார்

1816 இல் கணவர் இறந்தார் அவருக்கு ஒரு மகன் இருந்தார் அவரும் 1824 இல்   இறந்தார் அதற்குப் பிறகு சிவலிங்கப்பா என்னும் லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவரை தத்தெடுத்தார் அதை ஆங்கிலேய அரசு அனுமதிக்கவில்லை   பார்ப்பன மன்னரின் மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை என்றதால்   மனுநீதிபடி அங்கியேயர் மறுத்தநர்

கவர்னர் ஜெனரல் டல்கோசி பிரபுவால் 1848 இல் கொண்டுவரப்பட்டது வாரிசு இழப்புக் கொள்கை doctrine of lapse policy

அதற்கு முன்னோடியாக கர்நாடகத்தில் அந்த வாரிசு சட்டப்படி    ஏற்றுக்கொள்ளவில்லை என்று மாவட்ட கலெக்டர் அறிவித்தார்

1853 இல் கங்காதர ராவ் தனது 56 வது வயதில் 24 வயதான மணிகர்ணிகா என்ற பெண்ணை திருமணம் செய்தார் பின்னாடி அவர் ஜான்சி ராணி லட்சுமி பாய் என்று அழைக்கப்பட்டார்

அவர் இறக்கும் தருவாயில் அவர் அண்ணன் மகன் ஆனந்தராவ் என்பவரை   தத்தெடுக்க உயிரோடு இருக்கும்போது முயற்சி செய்தார் ஆனால் ஆங்கிலேயர் ஒத்துழைக்கவில்லை அவர் இறந்த பின்பு ஜான்சி ராணி ஆங்கிலேயரிடம் போராடினார் ஆனால் 1848 இல் வாரிசு சட்டம் அமலில் வந்ததால் பார்ப்பனர்   தத்தெடுக்கும் உரிமையை இழந்துவிட்டார் இது மனுநீதி படி நாங்கள்   உங்களுக்கு இதை அறிவுறுத்துகிறோம் என்று தீர்க்கமாக ஆங்கிலேயர்   சொல்லிவிட்டார்கள்

அந்தம்மா சண்டை போட்டு செத்துப் போனது தான் மிச்சம் எதுக்காக சண்டை போட்டாங்கன்னா பென்சனுக்காகத்தான் அதுவும் கிடைக்கல,

----------------------------

இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் 24. மே 1847இல் தனது வாரிசாக   முத்துராமலிங்க சேதுபதியை ஏற்றிருந்தார்ஐந்து வயது பாலகரான   முத்துராமலிங்கத்தை இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் தனது மகனாகவும்இராமநாதபுரம் சீமை மன்னராகவும் ஏற்றுக்கொண்ட பொழுதிலும்இராணியாரது உறவினர்களும்ஆங்கிலக் கம்பெனியாரும்அவரது நியமனத்தை   அங்கீகரிக்கவில்லைதங்களது ஒப்புதல் இல்லாமல் இந்தச் சிறுவனது   சுவீகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதால் அதனை அவர்கள் ஆட்சேபணை செய்து பல வழக்குகளை மதுரைசென்னை வழக்கு மன்றங்களில் தாக்கல் செய்தனர்இறுதியாக மன்னரது சார்பாக இங்கிலாந்து நாட்டு லண்டன்   மாநகரப் பிரிவி கவுன்சில் எங்களுக்கு அந்த பார்ப்பனர்களுக்கான   மனுநீதிச் சட்டம் செல்லாது நாங்கள் திராவிடர்கள் என்று வாதாடி

அவர்கள் அளித்த சாதகமான தீர்ப்பினைக் கொண்டு இளைஞர் முத்துராமலிங்கம் சேது நாட்டின் மன்னராக அங்கீகரிக்கப்பட்டார்.

_____

மதுரையை ஆட்சி புரிந்த சொக்கநாத நாயக்கரிடம் தளபதியாக இருந்த   தப்பகுள லிங்கம நாயக்கரின் புதல்வி தான் இந்த வீர செல்வி இராணி    மங்கம்மாள்சொக்கநாத நாயக்கர் தஞ்சாவூரை ஆண்ட விஜயராகவ   நாயக்கரின் மகளை திருமணம் செய்ய நினைத்தார்எனினும் அவர் எண்ணம் நிறைவேறவில்லைஎனவே சொக்கநாத நாயக்கர் மங்கம்மாவை திருமணம் செய்து கொண்டார்இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான்எனினும் சொக்கநாதர் 1682 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்அப்போது அவரது மகன்   அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாத குழந்தைராணி   மங்கம்மாவின் காலத்தில் கணவன் இறந்தால் மனைவியும் உடன் கட்டை   ஏறும் வழக்கம் இருந்ததுஆனால் ராணி மங்கம்மா தன் மகனின் நலுனுக்காக உடன் கட்டை ஏறாமல் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.

தனது மகனின் 15 வது வயதில் மகனுக்கு முடி சூட்டி வைத்தார் ராணி   மங்கம்மாள்அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கருக்கு சின்னமுத்தம்மாள் என்பவரை மணம் புரிந்து வைத்தார்தனது தாயின் உதவியாலும் அறிவுரை யாலும்சிறப்பாகவும் திறமையாகவு ஆட்சி செய்தார்  வீரப்ப நாயக்கர்தனது தந்தை இழந்த பகுதிகள் சிலதை போரின் மூலம்   மீட்டார் அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர்ஏழாண்டு காலம்   செங்கோல் தவறாது நல்வழியில் ஆட்சி செய்தார்இருப்பினும் 1688 ஆம்   ஆண்டு பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு இப்புவியை விட்டு இன்னுயிர் பிரிந்தார்அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் இறந்த சிறிது நாளிலேயே அவரது மனைவி ஆண் மகனை பெற்றெடுத்தார்தனது கணவரின் பிரிவை   தாங்காத முத்தம்மாள் குளிக்க பயன்படுத்தும் பன்னீர் கலந்த நீரை  அளவுக்கு அதிகமாக குடித்து ஜன்னி வந்து இறந்தார்பின் அவரின் மகன் விஜயரங்க  சொக்கநாதருக்கு பெயரளவில் மட்டும் முடி சூடப்பட்டதுஅவரின் பாட்டியும் சொக்கநாத நாயக்கரின் மனைவியுமான மங்கம்மாள் அவரின் சார்ப்பில்   காப்பாட்சியாளராக பதவி ஏற்றுக் கொண்டார்இராணி மங்கம்மாள்   பேரில் 1706 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார்.

ராணி மங்கம்மாவின் ஆட்சி திறமையும் மற்றும் சமுதாய பணிகளும்

ஒரு பெண் நாட்டை ஆள்வதை முதலில் மக்கள் விரும்பவில்லைஆனால்    காலப்போக்கில் மக்கள் இவரின் ஆட்சி திறமையும் போர் யுக்தியையும்   கண்டு வியந்து இவரை தலைவராக ஏற்றுக் கொண்டனர்இவரின் நிர்வாக   திறமையும் சிறப்பாகவே இருந்ததுஇவர் ஆட்சி செய்த நாட்டை மிக அழகான முறையிலேயே நிர்வாகித்தர்பல சாலைகள் கோயில்கள் பாசன நீர்   தேக்கங்கள் என்று மக்களுக்கு பயன்படும் அனைத்தையும் அமைத்துக்   கொடுத்தார்இவர் கோயில் கட்டுவது மட்டுமின்றி சாலை மற்றும் நகரம்   அமைத்தல்குடிநீர் தொட்டி அமைத்தல்கம்மாய் ஏரி குளம் அமைத்தல்   போன்றவற்றையும் நிறைவேற்றி உள்ளார்ராணி மங்கம்மாள் இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும் பிற மதங்களையும் மதித்தார்இவரது   ஆட்சி காலத்தில் கிருஸ்தவர்கள் தங்கள் படைப்புகளை சுதந்திரமாக   வெளிபடுத்த முடிந்ததுநல்ல பல திட்டங்களை செய்து மதுரையை சிறந்த   முறையில் ஆட்சி செய்த பெண்மணி இவர்இவரின் ஆட்சி காலத்தில்   பொருமளவு போர்கள் நடைபெறவில்லைமேலும் இவர் மற்ற அருகாமை   அரசிடம் நட்புறவையே விரும்பினார்எனினும் தஞ்சை மராத்தியர்களாலும்  முகலாயர்கள் மற்றும் திருவாங்கூர் அரசாலும் பல இன்னல்களை சந்திக்க   வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதுரை நாயக்க அரசுக்கு கீழ் இருந்த திருவிதாங்கூர் சிற்றரசு இருந்தது.   திருவிதாங்கூர் மன்னர் இரவி வர்மா மதுரை அரசுக்கு திரைப்பொருள்களைச் செலுத்தவில்லைகல்குளம் பகுதியில் இருந்த நாயக்கர் படையையும் தாக்கி  திருவிதாங்கூர் மன்னர் அழித்தார்இதனால் ராணி மங்கம்மாள் தன்   இராஜதந்திர யுக்தியால் தளவாய் நரசப்பையா என்பவரின் தலைமையில்   மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையை விழ்த்தியதுபின்   இராணி மங்கம்மாவுக்கு செலுத்த வேண்டிய திறைப்பொருளாக பொன்,   பீரங்கி முதலிய பொருள்களையும் பெற்றுத் திரும்பியது.

ராணி மங்கம்மாவும் கிளியோபட்டரோவை போல் தான் சில சர்ச்சைக்குரிய   கருத்துகளில் இருந்த போதிலும் அழகானவராகவும் சிறந்த ஆட்சியாளராகவும் பிரபலமானவராக இருந்தார்மதுரை பகுதியின் வீட்டு பெயர் தான் ராணி   மங்கம்மாள் பெயர்திருச்சி மற்றும் மதுரை மக்களுக்காக பல   தர்மசாலைக்களும் அரண்மனைகளும் கட்டினார்ராணி மங்கம்மாவின்   அரண்மனை மதுரை காந்தி அருங்காட்சியகம் என்று தற்போது பெயர்    மாற்றப்பட்டுள்ளதுமேலும் ராணி மங்கம்மாள் பிராமணர்களுக்கும் நிறைய நன்கொடை அளித்துள்ளார்வறண்ட மாவட்டங்களான மதுரை   இராமநாதபுரம் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கும் ஏரி குளம் கம்மாய்  என்று அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு விவசாய செய்ய வழிவகை   செய்தார்மங்கம்மாள் சத்திரம் என்று பல சத்திரங்கள் அமைத்துக் கொடுத்து வழிப்போக்கர்களுக்கும் பாதசாரிகளுக்கும் உண்ண உணவு மற்றும் தங்கும்   வசதியை ஏற்படுத்தி கொடுத்தார்இன்று கூட அவற்றை தெற்கு சீமையில்   காண முடியும்திருடர்களை கூட திருத்தி திருட்டு தொழில் விடுத்து மறு   வாழ்வு அமைய வழி செய்தவர் ராணி மங்கம்மாள்அன்றே மக்கள் கல்வி   கற்க வேண்டும் என்ற நோக்கில் கல்வி நிலையம் அமைத்துள்ளார்தன்    மக்களுக்காக பல சாதனைகளை செய்து உள்ளார்உண்மையில் சமுதாய   பணிகளை செய்வதில் இவர் மகாராணியேஇவரை போல் யாரும் இதற்கு   முன் இருந்தவர்கள் சமுதாய பணிகளை செய்தது இல்லை.

தக்காணம் வரை தன் பேரரசை விரிவு செய்ய முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் எண்ணினார்இராணி மங்கம்மாள் முகலாயர் படை வலிமையை நன்கு   அறிந்ததால் முகலாயரிடம் பணிந்து போக முடிவு செய்தார்போரை தவிர்க்க விலையுயர்ந்த பொருட்களை தளபதி சல்பீகார் அலிகானுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்மராத்தியர்களிடம் இழந்த பகுதிகளை மீண்டும் முகலாயர்களின் உதவியால் மீட்டார்முகலாயர்களின் உதவியால் உடையார்பாளையச் சிற்றரசர் கைப்பற்றிய மதுரை பகுதிகளையும் ராணி மங்கம்மா மீட்டார்.   முகலாய அரசு தன் ஆட்சியின் கீழ் தக்கணாத்தை கொண்டு வர நினைத்த   அதே சமயம் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தன் ஆட்சியை விரிவு படுத்த எண்ணி மதுரையின் ஆட்சிக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயம்புத்தூரை   கைப்பற்றினான்திருச்சிராப்பள்ளி கோட்டையையும் 1695 ஆம் ஆண்டு முற்றுகையிட்டான்ஆனால் இராணி மங்கம்மாவின் படையால் அந்த முற்றுகை   தவிடு பொடியாக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி செய்த பெண்கள் மிகச் சிலரே எனினும் சரித்திரத்தில்   இடம் பெற்ற பெண் இவர் தான். 17 ஆம் நூற்றாண்டில் இவர் கட்டிய கட்டிடங்கள் இன்றும் பல இடங்களில்   நிற்கின்றனஎனினும் மிகத் திறமையான இராணி மங்கம்மாள் தன் பேரன்   விஜயரங்க சொக்கநாத நாயக்கருடன் நேரம் செலவிட முடியாமல் போனதால் தவறான வழிக்காட்டுதலின் பேரில் தன் பேரனே தன்னை எதிரியாக எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டார்தனது பேரனாலேயே சிறையில் இடப்பட்டு தன்   இறுதி நாளை சிறையில் கழித்தார். 17ஆம் ஆண்டு திறம்பட ஆட்சி புரிந்த வீர மங்கை இந்த பூவுலகை விட்டு   மறைந்தார்.


ஜான் எலியட் ட்ரிங்க்வாட்டர் பெத்துன் (John Elliot Drinkwater Bethune, 1801–1851)

இந்தியாவில் முதல் உயர்கல்வி பெண்களுக்கானது உருவாக்கப்பட்டது கொல்கட்டாவில் அதை உருவாக்கியவர்

இந்த வாரிசு இல்லாத உரிமை சட்டத்தை கொண்டு வந்த லார்ட் மெக்கலே தன்நண்பர் ஜான் இலியட் பெத்தூன் துணையுடன்

1873 மகாத்மா ஜோதிராவ் பூலே பெண்களுக்கு சிறப்பு பள்ளி ஆரம்பிப்பதற்கு 25ஆண்டுகளுக்கு முன்பே கல்வி அறக்கட்டளை ஆரம்பித்தவர் இறந்து   போய்விட்டார் ஆனாலும் லார்டு மெக்காலே தன் சொந்த வருமானத்திலிருந்து ஆறாண்டுகள் அந்தப் பெண்கள் கல்லூரியை நடத்தினார்








இன்று கவிஞர்களாக அறியப்பட்டிருக்கும் சில பெண் கவிஞர்களின் கவிதைகளை எடுத்துக் காட்டியிருக்கிறேன். அதில்,சில

தமிழச்சி தங்கபாண்டியன்

திறந்திருக்கும்பொழுது
தீர்மானங்களின்றியும்
மூடப்பட்டிருக்கையில் மௌனமாயும்

அனுமதிக்கப்படாதனவற்றிற்குத்
தாழ்ப்பாளிட்டும்
இருக்குமாறு கதவுகள்
அறிவுறுத்தப்படுகின்றன
ஆயினும் ஆவை
இல்லத்திற்கு மிக
இன்றியமையாதவை


பந்தக்கால் தேவையில்லை
சொந்தக்கால் போதுமடா!

என்னும் வைகைச் செல்வியின் பாடல் அடிகளும்


என்னும் சுகிர்தராணியின் பாடல் அடிகளும்,

“வந்தவுடன்
ஆடை தளர்த்திக்கொள்ளல்
அழுது விட்டு
முகம் கழுவிக் கொள்ளல்
தலைவலிக்குத்
தைலமிட்டுக் கொள்ளல்
வேலைகளை முடிக்கும் வரை
உறங்கி
குழந்தை தந்த நிம்மதி
இவற்றினூடே உன்னை...
அறியாமல் அல்ல...
உன் கபடங்களோடு சேர்த்தே
அணைத்துக் கொள்கிறேன்..!”
                  

என்னும் இளம்பிறையின் பாடல் அடிகளும், திருமண வாழ்க்கையில் ஒருவித வெறுப்புணர்வையும் சலிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன.

இன்னைய சராசரிகளாய்
வாழ்ந்துவிட்டுப் போகிறோம்

என்னும் கரசூர் பத்மபாரதியின் பாடல் அடிகளும்,

பத்தினியார் வரிசையில் இடமின்றிப்
போகுமோ? என நிதம் பொறுத்துக் கொள்வாள்

என்னும் கனிமொழியின் பாடல் அடிகளும்,

நான்குபேர் சுமக்கும்
நாளில்தான் சுதந்திரமாய்
வீதிகளுக்கு வந்தாள்

என்னும் பொன்மணி வைரமுத்துவின் பாடல் அடிகளும் இந்தக் குமுகத்தின்பால் பெண்கள் கொண்டிருக்கும் அச்ச உணர்வை வெளிப்படுத்துகின்றன.ஏற்றி வைக்கப்பட்டதென்னவோ

உச்சாணிக் கொம்பில்
உள்ளதென்னவோ துணைமந்திரியாய்

என்னும் கனிமொழியின் பாடல் அடிகள் பெண்கள் ஏய்க்கப்படுதலை வெளிப்படுத்துகின்றன.

வாசலில் ஓடி விளையாடும்
ஒரு குழந்தை மனம்
வேண்டும் எனக்கு!

என்னும் சுகந்தி சுப்பிரமணியனின் பாடல் அடிகளும்,

உள்ளமும் விருப்பமும்
பெண்களுக்கு உண்டு என்ற
எண்ணமே இருவருக்கும் இல்லை

என்னும் பூரணியின் பாடல் அடிகளும்,

சேலையைத் தெரியும்
யாருக்கும் தெரிவதில்லை
உசுரு + மனசு ஸ்ரீ பெண்

என்னும் கு.தேன்மொழியின் பாடல் அடிகளும்,

வருடிப் பார்த்திருக்கிறாயா
என் காமத்தை?

என்னும் குட்டி ரேவதியின் பாடல் அடிகளும் பெண்களின் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

அனுமதிக்கப்படாதனவற்றிற்குத்
தாழ்ப்பாளிட்டும்
இருக்குமாறு கதவுகள்
அறிவுறுத்தப்படுகின்றன

என்னும் தமிழச்சியின் பாடல் அடிகளும்,

கற்றுக்கொள்கிறது குழந்தை
யாரும் கற்றுத் தராமலேயே!
என்னும் வெண்ணிலாவின் பாடல் அடிகளும்,
நீ
குருடாய், செவிடாய், ஊமையாய்
முடமாய், மூடமாய்
நின்றால் போதும்

என்னும் வத்சலாவின் பாடல் அடிகளும்

தாவணி போட்டது என்
கலைகளுக்குத் தடை
கால்களுக்குத் தடை
விரல்களுக்குத் தடை
எண்ணங்களுக்குத் தடை
படிப்புக்குத் தடை

என்னும் பாடல் அடிகளும் பெண்கள் அடிமைத்தனத்தைச் சகித்துக் கொண்டு வாழ்வதை எடுத்துக் காட்டுகின்றன.

எதிராளியின் போலியில் மயங்கி
இழந்து விடாதே! வரி வடிவங்களை
எஃகிலேயே எழுது!

என்னும் இரா.மீனாட்சியின் பாடல் அடிகளும்,

நீ வள்ளுவன் இல்லை
நான் வாசுகி இல்லை
உயிர்கள்

என்னும் கு.தேன்மொழியின் பாடல் அடிகளும் பெண் உரிமைக் குரலை எழுப்புகின்றன.

********************

அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப (தொல். கள. 96)

கற்பும், காமமும், நற்பால் ஒழுக்கமும்,
மெல்இயல் பொறையும், நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்,
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம்புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட்கு உரிய. (தொல் கற். 150)

என்று தொல்காப்பியர் பாடியதையும்,

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

என்ற புறநானூற்றுப் பாடலையும்,

வினையே ஆடவர்க்கு உயிரேமனைஉறை
மகளிர்க்கு ஆடவர் உயிரே

என்னும் குறுந்தொகைப் பாடலையும்,

தற்காத்து, தற்கொண்டான் பேணி, தகைசான்ற
சொற்காத்து சோர்வுஇலாள் பெண். (குறள். 56)

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

போன்ற குறட்பாக்களையும், இன்னபிற பாடல்களையும் பெண்களுக்கு எதிரான பாடல்கள் என்று கருத்துரைப்பதை விடுத்து, அற்றைக் காலத்தில், நடைமுறையில் இருந்த வாழ்வியல் நடப்புகளை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் முதலானோர் பெண்ணியல்புகளையும் ஆணியல்புகளையும் வகுத்துப் பாடல்களை இயற்றியிருக்கலாம்.


தொகுப்பு இரா,கணேசன் 

































































Comments

Popular posts from this blog

Language, Communication, and the Story of Migration

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் ( The Hidden Chapters of Gandhi’s Journey )