Posts

Showing posts from January, 2026

இலங்கையின் அரசியல் வரலாறு Lion Raja Ganesan

Image
  இலங்கை   ஒரு   தீவு     இயற்கையின்   கொடை   நிறைய   நீர்   நிலைகள்   அருவிகள்   கொண்ட   நாடு   வடக்கு   தெற்கு   ஆக  432  கிலோமீட்டர்,   கிழக்கு   மேற்காக     224  கிலோமீட்டர்   மொத்த   பரப்பளவு  65 610    சதுர   கிலோமீட்டர்,  2014  ஆம்   ஆண்டு   கணக்குப்படி  2  கோடியே  18  லட்சம்     மக்கள்   வாழும்   தீவு. லெஸ்லி   குணவர்த்தனா   என்ற   அறிஞர்   சிங்கள   என்னும்   சொல்   மௌரியர்,     குப்தர்,   பல்லவர்,   சோழர்,   போன்ற   அரச   வம்ச   சொல்   என்று   நிறுவுகிறார்,     அனுதாதபுரத்தை   தலைமையாகக்   கொண்டு   ஆண்டு   வந்த   மன்னர்   பரம்பரை   சிங்கள   என்று   அழைக்கப்படுகிறது. ஈழம்   எனும்   சொல்   கிமு   ஒன்றாம்     நூற...