கலைஞர் கருணாநிதி #Father Of Modern Tamil Nadu
மாமனிதன் – கலைஞர் கலைஞரை நேசிக்கும் நமக்கு , அவரின் ஆரம்ப வாழ்க்கை முதல் இறுதிக் கால அரசியல் வரை எல்லாமே தெரிந்தவை . காவேரி மருத்துவமனையிலிருந்து கலைஞரின் உடல் ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டபோது , பல்லாயிரக்கணக்கான மக்கள் அதைச் சூழ்ந்தனர் . ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே பல மணி நேரம் ஆனது . கலைஞரைப் பார்க்க வந்திருந்த மம்தா பானர்ஜிக்கு அவரது மறைவு செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது . உடனே இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர் , கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார் . இசட் பிரிவு பாதுகாப்பு இருந்ததால் அவர் தப்பினார் . ஆனால் ரஜினிகாந்த் கடும் நெரிசலுக்கு உள்ளானார் . அதுவும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை . கூட்டம் கட்டுப்பாட்டுடன்தான் இருந்தது . ஆனால் அதே பாதுகாப்பு இருந்தும் , மறுநாள் ராகுல் காந்திக்கு கலைஞரின் உடலை எளிதில் பார்க்க முடியவில்லை . ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக உடல் வைக்கப்பட்டிருந்தும் , சரியான ஏற்பாடுகள் இல்லாததால் அவர் படிக்கட்டின் கைப்பிடியில் பிடித்துக்கொண்டு மேலேற வேண்டிய நிலை ...