அரசியலில், இலக்கியத்தில், மருத்துவத்தில், பெண்கள்-Lion Raja Ganesan
பெண்கள் பாரதியும், தந்தை பெரியாரும் கற்பு என்று வரும்பொழுது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநிலை வைப்போம் என்றார் பாரதி . கற்பு என்பதே முட்டாள்தனம் என்று சொன்னவர் பெரியார் திரௌபதியை தெய்வமாக கருதி பாஞ்சாலி சபதம் என்று காவியம் எழுதியவர் பாரதி . காவிய நாயகி கண்ணகியை கிண்டலடித்து பெண்களை தெய்வமாக்குவது புனிதம் ஆக்குவது இந்த புண்ணாக்கு எல்லாம் தேவையில்லை என்று போட்டு உடைத்தார் பெரியார் பாரதியாருக்கு திருமணம் நடந்த போது அவரது மனைவி செல்லம்மாளுக்கு வெறும் ஏழு வயது பெரியார் தனது 70 வது வயதில்1948 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி மறுமணம் செய்து கொள்கிறார், பெரியார் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மணியம்மையாருக்கு 32 வயது இவர் சொத்தை பாதுகாப்பதற்காக திருமணம் செய்து கொண்டார் அப்போது பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது மனைவிக்கி இருந்தது அதனால் தான் அந்த திருமணம் முதல் மனைவி இறந்து 15 ஆண்டுகளுக்கு மேல் மறுமணம் செய்து கொள்ளாமல் இருந்த பெரியார் திராவிடர் கழகத்தின் தனக்...