பெண் ஏன் அடிமையானாள் ( Lion Raja Ganesan pmjf )
பெண்கள் உரிமைகள் : தமிழ்நாடு காட்டிய முன்னோடி பாதை உலகிலேயே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு . பின்னர் கர்நாடகா , ஆந்திரா போன்ற மாநிலங்களும் இதே திட்டத்தை கொண்டுவந்தன . ஆனால் அங்கு அந்த மாநில ஆதார் இருந்தால் மட்டுமே இலவசம் . தமிழ்நாடு மட்டும் , பெண்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் , மனிதர் என்ற அடிப்படையில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கிறது . பெண்கள் உரிமைகளில் தமிழ்நாடு இன்று அல்ல , பல ஆண்டுகளுக்கு முன்பே முன்னேறியது . அமெரிக்கா போன்ற உலகின் “ பெரும் ஜனநாயக நாடு ” கூட பெண்களுக்கு முழுமையான வாக்குரிமையை 1965 - ல் தான் வழங்கியது . ஆனால் 1920- லேயே , தமிழ்நாட்டில் நீதிக் கட்சி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது . அதற்கு பிறகுதான் இங்கிலாந்தில் பெண்களுக்கு அந்த உரிமை கிடைத்தது . ஒரு காலத்தில் இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கே பல்கலைக்கழக பட்டம் வழங்கப்படவில்லை . பெண்கள் போராடிய பிறகே அந்த உரிமை கிடைத்தது . தமிழ் கலாச்சாரம் இயற்க...